• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

08.மிஸ் மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
அவன் அணைத்த அதிர்ச்சியில் இருந்தவள் அவனிடம் இருந்து அவசரமாக விலகி திரும்பி நடக்கையில் அங்கு அவளை பெற்றவன் நின்று இவளை ஒரு மார்க்கமாக பார்த்து நிற்க புழுவாக துடித்தாள்.

வெந்த புண்னை நோகடிப்பது போல் அவருடைய வார்த்தைகள் ஏவுகணையாக வந்தது அவளிடம்.

"ஹேய் என்ன பண்ணிட்டு இருக்க அதுவும் யாருன்னு தெரியாத ஒருத்தன் கூட ஆமா எங்க உன்னோட அம்மா அவ தான் சொல்லிக் கொடுத்திருப்பா நல்ல வசதியானவனை பார்த்து மடக்கி போடுன்னு அப்போ தானே எந்த கஷ்டமும் இல்லாம ஓசிலே கொட்டிக்க முடியும்…" என்றவரை விஷ ஜந்துவை போல்
பார்த்தான் யுவா.

"கண்டவன் கூட ஊர் சுத்திட்டிருக்க ஆமா ஒருத்தன்கிட்ட எவளோ வாங்குறே…" என்று மிடுக்காக கேட்க அடுத்த நிமிடமே அவன் தரையில் கிடந்தான் யுவாவின் அடியில்....

"மவனே நானும் போனா போதும்ன்னு பார்த்திட்டு போனா என்னவோ பெ***** வாய் இவளோ நீளுது என் முன்னாடியே அவளை அசிங்கமா பேசுற…" என்று முன்னேற அவன் கோபத்திலும் அடியிலும் திகைத்தவராய் நின்றவனை காண கூட பிடிக்காது யுவாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள் சம்யுக்தா.

அவர்கள் போவதையே பார்த்தவன் "என்னையே அடிச்சிட்டல்லே உங்களை என்னைக்கும் சும்மா விட மாட்டேன்…" என்று மனதில் கருவிக் கொண்டான்.

காரில் அமைதியாக வந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் உணர்ச்சிகள் எதுவும் துடைத்து எரியப்பட்டிருப்பதை போல் இருக்க அதை பார்த்தவனிற்கு இன்னும் கோபம் அடங்கவில்லை காரை ஓரமாக நிறுத்தி வைத்தவன் அவள் புறம் திரும்பி "ஹேய் யாரு அவன் முன்னாடியே உன்னை தெரிஞ்ச மாதிரி பேசுறான் அவன் விஷத்தை கக்குற மாதிரி பேசும் போது நீ ஏன் அமைதியா இருந்தடி காலேஜ்லே உன்னை பார்த்ததுக்கும் இப்போ பார்க்கிறத்துக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்க உன் மனசு என்ன கல்லா மாறிடுச்சா? எதையும் உணர முடியாதவளாய் நிக்கிற…." என்றவனின் வார்த்தைகள் காதில் விழ மெளனமாக அவரு என்னோட அப்பா... என்றதும் அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது ஒரு தந்தை இப்பிடியும் இருப்பாரா? என்று நினைத்துக் கொண்டிருந்தவனிடம் "இதுக்கே அதிர்ச்சியாகிட்டீங்க.." என்றவள் பொறுமையாக அவன் புறம் திரும்பி…..

"நான், அக்கா, அம்மா இது தான் எங்க பேமிலி அவன் சொன்ன மாதிரி அடுத்தவன் சொத்துக்காக ஆசைப்படுறது நாங்க இல்லை எந்த கஷ்டத்திலேயும் நேர்மையா உழைச்சு தான் சாப்பிடுவோம் ஆனா இவரு எங்களுக்கு அப்பிடியே எதிர் திருப்பம் மது மாதுன்னு அழையிறவரு பத்து பதினைந்து கேஸ்ஸூ இவர் மேலே பதிவாகியிருக்கு அப்பவும் கூட அவர் தப்ப எப்பவும் உணர மாட்டாரு அதுக்கு பதிலா மத்தவங்களை ரொம்ப கேவலமாவும் அசிங்கமாவும் நடத்துவாரு இப்பிடி தான் என்னோட குடும்பம் இதுக்கு தான் அன்னைக்கே உங்ககிட்ட நான் சொன்னேன் என் பேக்ரவுன்ட் பத்தி தெரிஞ்சா பேச கூட என்ன பக்கத்துலே‌ கூட நிக்க மாட்டிங்கன்னு…"


"இப்ப கூட சொல்றேன் சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு இந்த லவ் ப்ளா ப்ளா இது எல்லாம் வேணாம் வேற நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.... அது மட்டும் இல்லை நீங்க முதல் முதலா உங்க காதலே என்கிட்ட சொன்னப்போவே நான் இங்க வேலை வேணாம்ன்னு போய்யிருப்பேன் ஆனா எனக்கு நிறைய கனவு இருக்கு சார் இந்த வேலை எனக்கு ரொம்ப இம்போர்டன் அதனாலே தான் இங்கே இருக்கேன் மத்தப்படி வேற எந்த நோக்கமும் இல்ல ப்ளீஸ் என் விஷயத்துலே கொஞ்சம் தள்ளியே இருங்க...." என தன் வாழ்க்கையே வெறுத்தவளாக பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களை நேராக பார்த்தவன்.

"ஒன்னு சொல்றேன் ஞாபகம் வெச்சிக்கோ உன் அப்பனை மாதிரி எல்லா ஆம்பளைங்களும் இருக்க மாட்டாங்க... அதோட நான் என்ன பண்ணனும்ன்னு நீ சொல்லாத எந்த உரிமையிலே நீ என்ன வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லுற…" என்றவனின் மனம் அதிகமாக காயப்பட்டு இருந்தது
அதற்கு மேல் இருவரும் பேசவில்லை நேராக தங்களது கம்பெனிக்கு வந்தனர்...

வாஸ் ரூம்மில் முகத்தை கழுவி விட்டு வந்து தன்னறையில் உட்கார்ந்தவள் வேலையில் மூழ்கினாள்.

ரிஷி வரவும் அவனுடன் செல்லும் போது அவளின் முக மாற்றத்தைக் கண்டு விட்டான் அதைப் பற்றி அவளிடம் கேட்க.... அவனிடம் எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாததால் ஏனோ அன்று யுவா தன்னை காதலிப்பதாக மட்டும் சொல்ல எழவில்லை மாறாக இன்று நடந்ததை ஒவ்வொன்றாக சொல்ல அவனிற்கு வெறி ஏறியது இருந்து அவனை தடுத்தது கனகாவின் சத்தியம் வீட்டுக்கு வந்தவள் எப்போதும் போல் அந்த இடத்தில் அமர்ந்து வானை வெறித்தாள்....

அவளின் பின் வந்து நின்ற கனகா அவளை அழைக்க திரும்பினாள் என்னம்மா சொல்லுங்க... என்று சுரத்தே இல்லாத குரலில்....
இந்தா இது நீ கேட்டது என்று வீட்டு பத்திரத்தை நீட்டினார் அதையும் அவரையும் மாறி மாறி புரியாமல் பார்க்க....

"என் பொண்ணு வாழ்க்கையிலே முன்னேற நினைக்கும் போது பெத்த தாயா நான் தானே மொத துணையா நிக்கனும் அதுக்காக தான் இது… உனக்கு ஞாபகம் இருக்கா சம்யுக்தா அன்னைக்கு உங்க அப்பாவோட குடும்ப பிரச்சினை ஒருபக்கம்னா இன்னொரு பக்கம் கடன் பிரச்சினை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை அடுத்த நாளை எப்படி கழிக்கனும்ன்னு கூட நமக்கு பயமா தான் இருந்திச்சு அதை எல்லாம் தாங்க முடியாம தான் நாம மூணு பேரும் தற்கொலை பண்ணிக்கலான்னு இருந்தப்போ நீ எங்களுக்கு ஆறுதலாயிருந்து சின்ன சின்ன வேலைகளை பார்க்கிறத்துக்கு உதவி பண்ணினே அன்னைலே இருந்து எப்பவும் தைரியமா தான் வலம் வருவே ஆனா இன்னைக்கு உன்னை பார்க்கவே பயமா இருக்குதுடி நீ இப்பிடி இருக்காதே உன்னை பார்த்தா நாங்களே உடைஞ்சிடுவோம் எப்பவும் நீ தைரியமா தானே இருப்ப அதே தைரியத்தோட இரு கண்டதையும் மனசுலே ஏத்திக்காதே…" என்றவர் அவளை அணைத்து கொள்ள அவர்களோடு வந்து நின்றாள் மோனிகா.

கண்டிப்பா அம்மா நீங்க கவலைப்படாதீங்க.... என்று ஆறுதல் கூறியவள் அன்று ஏனோ தூக்கத்தை தொலைத்தாள்.

அகியிற்கு கோல்ப்பண்ணி ஒரு நாள் லீவ் எடுத்தவள் நேராக சென்று நின்றது உதய் வீட்டில்....

"அட வாம்மா இன்னைக்கு நீ ஆபிஸ் போகலேயா...."

"இல்லப்பா...." என்றவள் பத்திரதை காட்ட புரிந்தவராய் சரி வா என்று அழைத்துக் கொண்டு சென்றார் ரிஷியும் உடன் வந்தான்.

ஏனோ அவர் வேலை செய்யும் வங்கியில் அவள் கேட்கும் பெரும் தொகை பணத்திற்கு அவளுக்கு லோன் கிடைக்கவில்லை....

"இது இல்லைன்னா என்ன சம்மூ வா வேற பேங்க் போலாம்...." என்று ஒவ்வொரு பேங்க்காக ஏறி இறங்கினர்....

பெரிய பணத்தொகை, வட்டி அதிகம், ஒழுங்கான ப்ராப்ர்டி இல்லைன்னு ரிஜெக்ட் பண்ண அவளுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்றே புரியவில்லை அப்போதும் அவள் இதை விடுவதாக இல்லை.

ரிஷியின் மொபைல் அலறியதும் எடுத்தவன் "ஹா சொல்லுங்க அப்பா…."

"சம்யுக்தா எங்கடா என்ன ஏதாவது கிடைச்சதா?..."

"அதை ஏன்ப்பா கேக்குறீங்க பத்து பதினைஞ்சு பேங்க் ஏறி இறங்கிட்டோம் ஒன்னுலேயும் பணம் கிடைக்கலே இப்போ அடுத்து என்ன பண்ணுறதுன்னே தெரியலேப்பா‌…" என்றவன் "சரி இந்தாங்க அவக்கிட்ட பேசுங்க…" என்று சம்யுக்தாவிடம் ஃபோன்யை நீட்ட சொல்லுங்க பெரியப்பா என்றவளின் குரல் சோர்ந்து இருந்தது.

"சம்யுக்தா கண்ணு எனக்கு ஒரு பையனை நல்லா தெரியும் அவனுக்கும் பேங்க் இருக்கு அது ப்ரைவெட் பேங்க் நீ ஏன் அதுலே ட்ரைப் பண்ணக்கூடாது நான் வேணா அந்த தம்பிக்கிட்ட பேசி பார்க்கவா அங்க வட்டிப் பணமும் குறைவா தான் இருக்கும்...." என்று இப்போது தான் அது யோசனை வந்ததாக இவளிடம் கேட்டார் உதய்.

"ஹ்ம்ம்... சரிப்பா எவ்வளவோ ட்ரை பண்ணியாச்சு கடைஷியா இதையும் ட்ரைப் பண்ணலாம்…" என்றவள் அந்த பேங்கின் நேம் அட்ரெஸ் வாங்கி கொண்டு அந்த இடத்திற்கு சென்றாள்.


"சார் கொஞ்சம் பிஷியா இருக்காரு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…" என்றதும் அங்கு சிறிது நேரம் காத்திருந்தனர் இருவரும்.

"சம்மூ எனக்கு என்னமோ இங்க கண்டிப்பா லோன் கிடைக்கும்ன்னு என் உள் மனசு சொல்லுது...." என்ற ரிஷியிடம்.

"அப்பிடி மட்டும் நடந்திச்சின்னா சந்தோஷம் தான் ரிஷிண்ணா ஆனா நாம நினைக்கிறது ஒன்னு நடக்கிறது ஒன்னால்லே இருக்கு…" எனும் போதே சார் உள்ள வர சொல்றாங்க…. என்று ஒரு பெண் வந்து சொல்ல எழுந்து உள்ளே போகும் போது அந்த அறையில் இருந்து வெளியே வந்தான் யுவா....

இவளை கண்டதும் கேள்வியாக இவள் இங்க என்ன பண்ணுறா?... என்ற யோசனையுடனே அங்கிருந்து போக இவளோ அவனை ஏறெடுத்துக் கூட பார்க்காமல் அவரை சந்திக்க சென்றாள்.

"ஹாய் மிஸ் சம்யுக்தா இப்போ தான் உதய் சார் சொன்னாரு உட்க்காருங்க...." என்றவனின் மரியாதை வெகுவாக கவர்ந்தது.

அவளுடையே டீடைல்ஸ் எல்லாம் பார்த்தவன் "இந்த கம்பெனியிலேயா வேலை பார்க்குறீங்க...."

"ஆஹ் சார் ஆமா ஏன் கேக்குறீங்க…"

"அட இப்போ தானே உங்க CEO வந்திட்டு போனாரு நீங்க பார்க்கலயா? அவன் என் ப்ரென்டு தான்ம்மா இது போதும் உனக்கு நான் லோன் தர…" என்றதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது இருவருக்கும்.

மற்றைய பார்மெலிட்டிச் எல்லாம் முடிய அவளிற்கு கேட்ட பணமும் கிடைத்தது.

அவள் தாங்க்ஸ் சொல்லி வெளியேரும் போது "ஆஹ் சம்யுக்தா ஆல் தே பெஸ்ட்
நீங்க நினைச்சது கண்டிப்பா நடக்கும்…" என்று வாழ்த்தையும் கூறியே அனுப்பினான் அஜய்.

சிறிது நேரம் கழித்து யுவா அஜய்க்கு ஃபோன் பண்ண ஓரே ரிங்கில் எடுத்தான்.

"சொல்லுடா மாப்பி ஏதாவது விட்டுட்டு போயிட்டியா?..."

"அது எல்லாம் ஒன்னும் இல்லை இப்போ ஒரு பொண்ணு வந்தாலே அவ எதுக்கு வந்தா?.."

"என்னடா இவளோ டீடைலா ஒரு பொண்ணை பத்தி கேக்குறே நீ இப்பிடி கேக்கமாட்டியே…" என்று அவன் யோசனையுடன் கேட்க.

"டேய் தேவையில்லாம கேட்க மாட்டேன் அவ சம்யுக்தா இன்னைக்கு ஆபிஸ் வரலே முக்கியமான வேலைன்னு சொன்னா அதான் அப்பிடி என்ன முக்கியமான வேலைன்னு
கேட்க தான்…"

சம்யுக்தா... என உச்சரித்தவன் ஏதோ நினைவு வந்தவனாக "அப்போ இவங்க தான் அவங்களா?.."

"ஆமா இது அவளே தான் சரி மேட்டரே சொல்லு.."

"அட உன் ஆள் ஏதோ கம்பெனி ஆரம்பிக்க போறாங்களாம்டா அதுக்காக தான் லோன் கேட்டு வந்திருந்தா...."

"என்ன கம்பெனியா???? அப்போ அதுக்கு தானா ஆறு மாசம் வொர்க் பண்ணுறேன்னு சொன்னாளா…" என்று யோசித்தவன்.

"சரிடா அஜி நான் அப்பறம் பேசுறேன்.." என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு பெருமூச்சை இழுத்து விட்டான்.

ரிஷியுடன் தன்னறையில் இருந்தவள் "அண்ணா செகன்ட் ஸ்டெப் பணம் அது சக்ஸஸ்…" என்று தான் குறித்து வைத்திருந்த நோட் பேட்யில் ரைட் மார்க் போட்டவளை பார்த்தவன் "நீ பெஸ்ட் வேலை தேடினே இப்போ பணம் ரெண்டும் சக்ஸஸ் நெக்ஸ்ட் நமக்கு ஒரு இடம் வேணும் அதுக்கு என்ன பண்ணுறது...."

"அண்ணா இவளோ யோசிச்ச எனக்கு அதை யோசிக்காமயா இருப்பேன்…"

"ஓஹ் அப்போ ஏற்பாடு பண்ணிட்டியா சம்மூ…" என ஆச்சிரியமாக கேட்டவனிடம் சிரிப்புடனே பதில் அளித்தாள்.......



"எனக்கு என்ன நடந்தது என்பது 10
சதவீதமும் அதை நான் எப்படி
எதிர்கொண்டேன் என்பது
90 சதவீதமும் கொண்டது தான்
வாழ்க்கை."

"சார்லஸ் சுவிண்டோல்"
 
Top