• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

09. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
பிறரை போலொரு
கற்பனை காதலை
பிரசவிக்க தெரியாதடி எனக்கு!
ஆனென்ற கர்வம் நீக்க....
என்னுள் தரித்த
முதல் மா மழலை நீ.......


வேகமாக அறைக்கு வந்தவன், அறையையே சுற்றி சுற்றி அளந்து கொண்டிருந்தான்.


அவன் பின்னால் வந்தவனும், அவனது செய்கைகளை சிறுது நேரம் அமைதியாக பார்த்திருந்து விட்டு,

"என்னடா..! சரியா வலிக்குதாே?

எத்தனை குட்டி? சுகமாக பிறந்துதா? இல்ல ரொம்பவே கஷ்டப்பட்டியா? என்றான் சம்மந்தமே அற்று.
ஏற்கனவே தீயாய் இருந்தவன், இவனது புலம்பலில் ஆத்திரம் மேலிட,

"என்ன விசரனாட்டம் அலம்புற விசரா!" என்றான் கோபமாக.

"இல்லடா...! குட்டி போட்ட பூனையும் இப்பிடித்தான் சுத்துமாம்... அது தான் நீயும் குட்டி போட்டிருப்பியோ ஊண்டு நினைச்சன்." என கேலி பேசிட,

"ஓ...... நீங்கள் காமடி பண்ணினீங்களோ!. இப்ப சிரிக்கோணுமோ? இல்ல வீட்ட போட்டு சிரிக்கவோ?" எரிச்சல் தான்.. நண்பனாயிற்றே.. பொறுமையை இழுத்து பிடித்தே வினவினான்.

" நீ சிரிச்சிட்டாலும்...... நீ சிரிச்சா ஆயூசு இத்தோட முடிஞ்சிடும் எண்டு பறங்கி முனிவர் சாபம் நந்திருக்கிறாரே..!
நீ வேண்டாம். ஏன் இப்ப சிடுசிடுக்கிற? அதை சொல்லு" என்றான்.

அவன் கேட்ட கேள்விக்கு ரதனிடம் இருந்து பதில் வராமல் போகவே,

"இப்பிடிலாம் நீ அமைதியா மாட்டியே!
என்னடா எல்லாத்திலயும் வித்தியாசமா நடக்கிற...!


நீ கோபபடுறது புதுசில்ல.. ஆனா எதுக்கு கோபப்படுற எண்டுறது தான் புதுசா இருக்கு
அவள் கைய கிழிச்சா உனக்கென்னடா?
அவளே அத பெருசா எடுக்கேல... உன்ர கை கிழிச்சா மாதிரி நீ துடிக்கிற.


சரி இங்க வேலை செய்யேக்க தான் அடிபட்டது எண்டாலும், வேற யாரையாவது கொண்டு மருந்து போட்டு விட வேண்டியது தானே!
அவளின்ட கைய புடிச்சு, உன் தகுதிய ஏன்டா நீயே குறைக்கிற...?

இதுவரைக்கும் எத்தனை பேருக்கு இத மாதிரி நடந்திருக்கு, அப்ப ஏதாவது கேட்டனியா...?
இத்தனைக்கும் இவள் வேண்டபட்டவள் கூட இல்லை.


உன்னை றோட்டு எண்டு பார்க்காம, அசிங்க படுதினாள் எண்டு நீ தானேட சொன்ன.." என்றான் வாயில் வந்ததை கூறி ரதன் வாயல் உண்மை வர வைப்பதற்கு.

ஏற்கனவே அவள் அடிபட்டதை கூறாது. தன்னை வேற்று மனிதனாக பார்ப்பதில் அவதிப்பட்டு கொண்டிருப்பவனிடம், இவனும் இப்படி பேசவும், ஆத்திரம் கொண்டவன்,

அவன் சட்டையை இரு கைகளாலும் இறுகப் பற்றி,

"யாருடா எனக்கு வேண்டப்படாதவள்? நான் சொன்னனா உனக்கு?" என்றான் அந்த வினாடி உயிர் நண்பன் என்றும் உணராது ஆதங்கமாக.


அவனை புன்னகையோடு ஏறிட்டவனோ, அவனது கையை சட்டையில் இருந்து மெதுவாக எடுத்து விட்டு,


"ரொம்பவே மாறிட்டடா! இந்த மாற்றம் சந்தோஷமானது தான்.
நேற்றே எனக்கு தெரியும்.. உன்ர இயல்பு இதில்ல எண்டு யோசிச்சன்...
இயல்புக்கு மாறாக இன்டைக்கு சந்தோஷமா நீ வரேக்கரேக்கயே தெரிஞ்சுது.
அய்யா பெரிய பள்ளத்தில விழுந்துட்டார் எண்டு.

ஒன்டு மட்டும் விளங்கேல டா.... கூட படிச்ச காலத்தில இருந்து, இப்ப வரைக்கும் எந்த பொண்ணையும், எல்லைக்குள்ள வர்றதுக்கு அனுமதிக்காதவன், ஒரே நாள்ல, அந்த சின்ன பொண்ணிட்ட விழுந்துட்ட...

இது மட்டும் அம்மாக்கு தெரியோணும்..., அவங்களை விட சந்தோஷ படுறது வேற யாருமே இருக்க மாட்டினம்.
முதல்ல அம்மாட்ட சொல்லுடா!" என்று அவன் போனை எடு்த்து அவனிடம் நீட்ட, அதை வாங்கி மேசையில் வைத்தவன்.


தன் நண்பனை பெருமையுடன் பார்த்து,

"சாரிடா... நான் உன்னை புரிஞ்சு வைச்சிருக்கிறானா எண்டு கேட்டா... சத்தியாமா எனக்கு தெரியாது... ஆனா என்ர ஒவ்வொரு அசைவையும் நீ நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிற... தாங்ஸ்டா..." என்றான் உருக்கமாய்.

"ஏன்டா....? உன்ட அன்புக்கு என்னடா குறை? என்னை தவிர நண்பன் எண்டு உனக்கு யாராவது இருக்கிறாங்களா...?
உனக்கு பக்கத்தில வரவே யாருக்கும் தைரியம் இல்லாதப்ப, உன்னோடயே இருந்து, உன்னை வாரி, நட்பு பாரட்டுற உரிமையையும், பெருமையையும் எனக்கு மட்டும் தானே தந்திருக்கிற" என்றான் ரவியும் அவனை விட்டு கொடாது.


அவன் அன்பில் சிலிர்த்தவன், அவனை கட்டிக்கொண்டு நன்றி கூறினான்.

"என்னை கட்டி பிடிச்சது இருக்கட்டும்... அம்மாக்கு போனை போடு!" என்றான் ரவி.

"இல்லடா..! எனக்கே அவளை பற்றி நிறைய கேள்விகள் இருக்கு.
அதை சரி பண்ணிட்டு, அம்மாவுக்கு சொல்லுவம்." என்றான் மறுப்பா.

"என்னடா.... அப்ப நீ அவளை விரும்பேலயா?."


"அதில்ல ரவி..... எனக்கு அவள் வேணும்.
ஆனா அதில தான் ஒரு பிரச்சினை இருக்குடா!" என்றான் ரவியையும் குழப்புவது போல்.

"என்னடா...! என்ன பிரச்சினை?"


"முதல்ல அவள் யார் எண்டுறதே பிரச்சினை தானேடா...!
நாலு நாளைக்கு முன்னம் தான், இந்த பஸ் டாப்பில பெட்டியோட பார்த்தன்." என்று கண்ணாடி வழியாக வீதியை காட்டினான்.

எனக்கு தந்திருக்கிற அட்றேஸ் கூட, இப்ப எங்க தங்கி இருக்கிறாளோ அந்த விலாசம் தான்.

அவளின்ர சொந்த விலாசம் தரவே இல்லை.
அவளுக்கு ஏதோ பிரச்சினை போல இருக்கு ரவி.


நீயோ யோசிச்சு பார்..! எதுக்காக இங்க வந்து..... தனியா இருக்கோணும்..?
எது அவளோட ஊரோ அங்கயே இருந்து, படிப்ப முடிச்சிருக்கலாமே...!
யாராவது டாெக்டர் படிப்பை பாதியில விட்டுட்டு வருவினமா?

இவள் இங்க வந்து தன்னந்தனியா, கஷ்டப்படுறாள் எண்டா, ஏதோ காரணமா தான் இங்கும் ரவி.

இங்க வேலைக்கு வாறதுக்கு முன்னம் ரெண்டு தடவை அவளை பார்த்திருக்கிறன். அந்த ரெண்டு தடவையும் அவளின்ர முகம் தெளிவாயில்லை.
எதையோ மனசில வைச்சு மருவீட்டு இறக்கிறாள் போல..


அதே சமயம் கஷ்டப்பட்ட குடும்பத்தில இருந்து வந்தவள் போலவும் தெரியேல...
படிப்பை விட்டு மாத சம்பளத்துக்கு வேலை செய்யிறாள் எண்டா... எல்லாமே குழப்பமாக இருக்கு.


அவளின்ர பின்புலத்த அறியிறதுக்கு எந்த ஆதாரமும் இல்ல ரவி!

அவளை தான் விடுவம், இந்த வர்மன்...? ஊஸ்... என பெருமூச்சினை எடுத்து விட்டவன்,


"அவனே பெரிய குழப்பம் காட்சி.....
வந்து நாலு நாள்ல இவனை எப்பிடி தெரியும் எண்டுறதே பெரிய கேள்வி..


ஒரு வேளை ஏற்கனவே அவனை தெரிஞ்சு.. ஏன் காதலிச்சு கூட இங்க வந்திருக்கலாம்...

எப்ப பார்த்தாலும் ஒன்டா தான் இருக்குதுகள்...
முதல்ல இதுங்க உறவ என்னண்டு கண்டு பிடிக்கோணும்...

இவ்ளோ பிரச்சன இருக்கேக்க... அம்மாட்ட சொல்லி, அங்கட மனசிலயும் ஆசைய வளக்க கூடாது.
அதுக்காக அவள யாருக்கும் விட்டும் குடுக்க மாட்டன்.


முதல் பார்வையிலயே எனக்கானவள் எண்டு உணர வைச்சது அவளன தான்.
எனக்கு அவள் வேணும்.. பார்க்கலாம்." என்றான்.

அவனுக்கு தான் தெரியுமே நண்பனின் குணம்.
எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அனைத்து கோணங்களிலும் யோசித்து செயற்படுபவன் என்று .

"சரிடா...! நேர போய் வர்மனை கேட்க வேண்டியது தானே."

"கேட்க்கலாம் தான்.... நானா கேட்க போய். எதுக்கு நீ அத கேட்கிற எண்டா என்ன பதில் சொல்லுறது...?
அதை விட இல்லாத ஒரு உறவ, நானே தொடங்கி வைச்சதா போகக்கூடாது..


இதை நாசுக்காக தான் டீல் பண்ணோணும்...
இன்டைக்கு தானே ரெண்டாம் நாள். போக போக எல்லாம் தெளிவா தெரிஞ்சிடும்.

அதை விடு! நீ சாப்பிட்டியா?
வேலை எல்லாம் எப்படி போகுது?" வேறு பேச்சுக்கு தாவினான்.



மாலை ஐந்து முப்பதை தாண்டவும், பெண்கள் ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்திருந்தனர்,
அந்த பகுதிக்கு அவள் தான் பொறுப்பு என்பதால் அனைத்து பெண்களையும் அனுப்பிய பின்புதான் அவள் செல்லலாம்.


இரவு பத்து மணி வரை ஆண்கள் கவனித்து கொள்வார்கள்.

வர்மனின் வீடு பதினைந்து கிலோ மீற்றர் தூரமாகையால், அவனும் ஆறு மணியுடனே கிளம்பி விடுவான்.


அனைத்து பெண்களையும் அனுப்பி விட்டு, இல்லாத பொருட்களை ஒரு காகிதத்தில் குறித்து, முன் கவுண்டரில் குடுத்தவள், பதிவேட்டில் கையெப்பம் இட்டு வெளியேற, வர்மனும் வர சரியாக இருந்தது.


"வெளிக்கிட்டாச்சா துஷா?"

"ம்.. கடைசி பஸ் எத்தனை மணி வரை இருக்கு இருக்கண்ணா." அவளுடைய பிரச்சினை அவளுக்கு.

"தனியார் பஸ்னா எட்டுமணியோட சரிமா! சீடீபி பத்து மணி வரைக்கும், ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்டு எண்டு விரும்." என்றான்.

"ஓஓ....... சரியண்ணா. பஸ் பிடிக்கோணும், நான் வாறேன்.' என்றிட,



"என்னாேட வா தூஷா! நான் பஸ் ஏத்தி விடுறன்." என்றான் வர்மன்.

"ஏன் இங்க நின்டாலே பஸ் வருமே! எங்க வர சொல்லுறீங்கள்?" என்றாள் புரியாது.

"இங்க நின்டா இந்த நேரம் வேலை முடிந்து நிறைய பேர் வருவினம்... நெரிசலும் ஓவரா இருக்கும். கொஞ்சம் தள்ளி போனா, மெயின் பஸ் ஸ்டாப் வரும்.. அங்க போன ப்றீயா இருந்து போகலாம்." என்றான்.


அவள் இருந்த களைப்பிற்கு நெரிசலில் நின்று போவது முடியாது. "சரி" என்று நடக்க ஆரம்பிக்க..


"ஏய் எங்க நடந்து போற..? பக்கம் தானே! யாரும் எதுவும் நினைக்க மாட்டார்க பைக்ல ஏறு" என்றான்.
அவளுக்கும் அது தவறாக படாததால் ஏறினாள்.
அவளை பஸ்ஸில் ஏற்றி விட்டவன், "சரி துஷா. நான் வாறேன்." என்று சென்று விட்டான்.

வீடு வந்தவள் களைப்பில் தொம் என கட்டிலில் இருந்து விட,


"என்ன துஷா! சரியா களைச்சிட்டியா..? இரு...." என்றவள், தேனீர் கப்புடன் வந்து அவளிடம் நீட்டினாள்.

நம்ப முடியவில்லை தான்... இருந்து நம்பி வாயில் சரித்தவள், முகத்தை சுழித்தாள்.

"கறுமம் புடிச்சவளே! டீயை கூட ஒழுங்கா போட தெரியாதா.? இதுக்கு சுடுதண்ணியே நல்லா இருந்திருக்கும்." என்றவள் அதை குடித்து முடித்து விட்டே வைத்தாள்.

"சரி சொல்லு..... அந்த நெட்டாங்கோ தேவாங்கோ... ஏதும் வம்பு பண்ணினானா?." என்றாள் அக்கறையாய்..
வலித்த தலையினை நீவி விட்டபடி,

"அப்பிடி எதுவுமே இல்லடி!" என்றாள்.

அவள் நீவிவிட்ட கையில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை பார்த்தவள்,

"என்னடி இது? அவன் பண்ண வேலையா?" என்றாள் கோபமாக.

"இல்லடி!" என்றவள் நடந்ததக கூற,


"நான் பயந்திட்டன். சரி குளிச்சிட்டு வா! சமைக்கலாம். உனக்கு கை பிரச்சினை இல்ல தானே.?

நானே சமைச்சிடுவன், செய்திடுவேன். நீ தான் சாப்பிட மாட்ட" என வருத்தப்பட்டவளுக்கு.
தலைமீது இரு கை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டவள் ,

"வேண்டாம் தாயே! நானே வாறன்." தயாராகி வர, சைலுவும் கிச்சனில் இருந்த சின்ன சின்ன வேலைகளை செய்து, துஷாவின் வேலையை இலகுவாக்கினாள்..

சமையலை முடித்து உண்டவர்கள்,
"நான் தூங்குறேன்டி! அலுப்பா இருக்கு." என்று படுத்தவளுக்கு தூக்கம் எங்கே வந்தது.?



சைலு தூங்கும் வரை கண் மூடிப் படுத்திருந்தவள், அவள் படுத்ததும் தாய் தந்தை நினைவில் உலன்றாள்.

"துஷி துஷி" என்று கண்ணுக்குள் வைத்து பாது காத்த பெற்றோரை மறந்தால் தான் ஆச்சரியம்.


'அவன் கூட இன்டைக்கு அவங்கள போல உரிமையா கூப்டானே!' இன்றைய நினைவில் இருந்தவளுக்கு தான் ஏணியில் இருந்து விழுந்தது நினைவு வந்தது.


'அவன்ர காளரையா அவ்வளவு பாதுகாப்பா பிடிச்சிருந்தன்.?
ஏதாவது நினைச்சிருப்பானோ? இல்லை அப்பிடி எண்டா திட்டி இருப்பானே!


இன்னைடக்கு வித்தியாசமா நடந்தான்... பார்வையிலயுமே வித்தியாசம் தெரிஞ்சுது...
சும்மா சொல்லக்கூடாது சரிக்கேக்க நெட்டாங்கு வடிவா தான் இருந்தான்.

எப்பவும் சிரிக்கிறவய விட, எப்பவாவது சிரிக்கிறவய பாக்கேக்க வடிவாத்தான் இருப்பினம் போல...'. என எண்ணப் போக்கை திசை திருப்பியவளுக்கு,


அத்தனை பேர் முன்பும் கையினை பிடித்து மருந்திட்டது தான் இப்போதும் நெருடலாக இருந்தது. கூடவே அவளது இடை உரசிய அவனது கரங்களும்.


'தெரியாம கூட பட்டிருக்கும் தானே! நான் ஏன் இதை பிழையான பார்வையில பாக்கோணும்..' ஏனோ மனம் அவன் மேல் சந்தேகம் கொள்ள மறுத்தது.

'தெரியாம பட்டா... அழுத்தமாவ படும்...? இது வேணும் எண்டு பண்ணியிருக்கிறான்.' மூளை எச்சரித்தது.


'ஆக... நல்லவன் போல வெளியால சீன் போடுறது. உள்ளுக்குள்ள மன்மதன் வேலை காட்டிட்டு இருக்கான்.
என்ன தைரியம் இருந்தா என்னட்ட இந்த மாதிரி நடப்பான்...?
அண்ணா மட்டும் இல்லாம இருந்திருந்தா, அவனை..." பற்களை கடித்துக்கொண்டவள்,


'இனி இத போல நடக்கட்டும்..... யாரு நிக்கிறாங்க எண்டு பாக்கிறதில்ல.. கையில கிடைக்கிறதாலயே அடிச்சிடுறன்.' சிறிது நேரம் அவனை வாயினால் வறுத்தெடுக்காமல் தூக்கம் வர மறுத்தது.



தான் உறங்க சென்றதும், துஷாவின் செய்கைகளை சைலு கவனிக்க தவறவில்லை. அதற்கு காரணம் ரதன் என்று தான் எண்ணிவிட்டாள்.





எந்தவித தொந்தரவுமின்றி அவளது வேலையில் கவனமாக செய்தாள் துஷா.
இப்போதெல்லாம் ரதனது ரோந்து பயணம் மூன்று வேளையானது.


அடிக்கடி அப்பகுதிக்கு அவன் வருவதை யாரும் தவறாக நினைக்க வாய்ப்பில்லை.


புதிதாக வந்த மேற்பார்வையாளர் சரியாக வேலை செய்கிறாளா? என்பதை பார்கிறான் என்றே நினைத்து கொண்டார்கள்.


வர்மனும் தனது வேலையில் பிஸியாகிவிட, மாலை நேரத்தில் அவளை பஸ் தரிப்பிடத்தில் இறக்கி விடுவதை தவிர, பெரிதாக வர்மனுடன் பேசிக்கொள்வதில்லை.

இன்றோடு துஷாவின் ஒரு வார காலம் முடிவுறும் நிலையில், அங்கு வேலை பார்க்கும் பெண்களில் ஒருத்தி,

"உங்கள சார் போகேக்க சந்திக்க சொன்னார்." என்றாள்.
அவளுக்குத் தான் தெரியுமே எதற்காக என்று
அவளும் ஒரு முடிவோடு தானே இன்று வந்தாள்.







முதல் சந்திப்பில் தவாறான
சிந்தனையை
இரண்டாம் சாந்திப்பில் தவாறான
எண்ணத்தை
கொண்ட என் எண்ணப்போக்கை,
உன் அடுத்த சந்திப்புக்காக
ஏங்க வைத்து,
தெளிவில்லாத என்
மன ஓட்டத்தை
உன் காயம் கொண்டு
காதல் என உணர்த்தி
உன்னை என் வரமாக
அடைய ஆசைகொள்ளும்
தீவிர பக்தனடி இவன்..........




மாலை ஆறு மாணிக்கு பத்து நிமிடங்கள் இருக்கவே, தனது தினசரி பணியை முடித்தவள். ரதனுடைய அறை கதவை தட்டினாள்.


ஏதோ முக்கிய பணியாக இருந்தவன், அவள் வரவை உணர்ந்து.

"உள்ள வா துஷா" என்றான்.

அவள் வந்ததும், அவள் விழிகளையே பார்த்தவன்,


"நீ என்ன முடிவெடுத்திருக்கிற என்றது எனக்கு தெரியாது." என்றவாறு அருகில் இருந்த கோப்பை திறந்து, அதில் இருந்து கவரையும், பத்திரத்தையும் அவள் முன் வைத்தவன்.


"அந்த கவரில் நீ ஒரு கிழமை வேலை செய்ததுக்கான சம்பளம், இது நீ சைன் வைச்ச பேப்பர்.
நீ தொடர்ந்து வேலை செய்ய போறா எண்டா... அதை ரெண்டையும் என்னட்ட தந்துட்டு, வேலைய தொடரலாம்..


அப்படி உனக்கு இங்க வேலை செய்ய விருப்பம் இல்லை எண்டா, பத்திரத்தை கிழிச்சு போட்டுட்டு, உனக்கு சேரவேண்டிய கவரை எடுத்துட்டு போ!" என்றான் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாது சாதரணமாக.


அவள் முடிவு என்னவோ என அவளையே பார்த்திருந்தவன், அவள் கைகள் கவரை எடுக்கவும் அதிர்ந்தான்.


முகத்தில் அதன் பிரதிபலிப்பு வெளிக்காட்டாது, கையிலிருந்த போனில் கவனைத்தை செலுத்துவது போல பாசங்கு செய்தவன் முன் அந்த கவரை நீட்டிய துஷாந்தினி.


"இதை மாத சம்பளத்தோடயே தாங்காே" என கூறியவள், அந்த பத்திரத்தையும் அவனிடம் கொடுத்து விட்டு,

"எனக்கு இங்க வேலை செய்யிறதில எந்த பிரச்சனையும் இல்லை" என்றாள்.

எங்கே கவரை எடுத்ததும், அவள் வேலையை விட்டு நின்று விடுவாளோ!


அவள் தன்னை விரும்ப வைக்க இருந்த ஒரே வளியும் இல்லாமல் போம் விடுமோ!' என்று பயந்தவன்,

அவளது இறுதி வார்த்தையில் உயிர் வந்தது போல், பெரும் மூச்சொன்றை வெளியேற்றிப் புன்னகைத்தான்.

பதிலுக்கு புன்னகைத்தவளும்,

"நான் வாறன் சார்." என்றவள் வெளியேற, அவளுக்காக வாசலில் காத்திருந்தாவன் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.


இதை அறையிலிருந்த கண்ணாடிச் சுவற்றின் வழியாே பார்ப்பது, ரதனின் அன்றாட வழக்கமாகிப் போயிருந்தது.

முதல் நாள் வேலை முடிந்தது வந்தவளை வர்மன் பைக்கில் ஏற்றுவதை கண்டவன்,
எங்கே செல்கிறார்கள் என நோட்டமிடுவதற்காகவே, அங்கு வேலை செய்யும் ஒருவரின் பைக்கை வாங்கியவன், அவர்களை பின் தொடர்ந்து சென்றால், அவள் இறங்கிய இடமோ பஸ் தரிப்பிடம்.


'இதுக்கா இவ்வளவு அலப்பறை?' என மனதில் நினைத்தவன், வண்டியை திருப்பி வந்து, உரியவனிடம் ஒப்படைத்து விட்டு, மீண்டும் அறைக்குள் முடிங்கியவனுக்கு இருப்பு கொள்ள வில்லை.


வாசல நின்டாலே பஸ் வருமே! அங்க போய் தான் ஏறோணுமோ...?
அவனுக்கு பின்னால இருந்து போக காரணம் தேவை! அது சொஞ்ச தூரம் எண்டாலும், அவனோட தனிய இருக்கோணும் எண்டு நினைச்சிருப்பாள்.' என தனக்குள்ளே தவறாக கணித்தவன்,


அவர்கள் தினமும் இவ்வாறு செல்வதை கண்ணாடி வளியே பார்த்து புகைந்து கொள்வான்.