• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

1. எதிர்பாரா திருமணம்

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
“நீ யாரென்று

நான் அறியும் முன்னரே

உன் விரல்களின் தீண்டல்

என் மேனியில்...

நீ கட்டிய

தாலியின் மூலம் புலப்பட

அந்த நொடி

உணர்ந்துவிட்டேன்

என்னை காக்க

தெய்வம் தந்த தூதன் என்று...”


“என்ன நடக்கிறது?" என்று தன் மான்விழியால் மிரண்டபடி அவன் கண்களையே நேருக்கு நேராக பார்த்து கொண்டேயிருந்தாள்.

அவளின் விழிகளையே உற்று நோக்கியபடி மூன்றாவது முடிச்சியையும் போட்டு முடித்தான்.

‘யார் இவன்? என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறானா? பிறந்ததிலிருந்தே அன்பெனும் சொல்லை கனவிலும் கேட்காத துர்பாக்கியசாலி ஆயிற்றே நான்’ அவளின் மனதில் தோன்ற விழிமூடாது அவனை நோக்கினாள்.

‘நான் மஹாலக்ஷ்மி பெயரில் மட்டும் தான். ஆனால், எல்லோர் கண்களுக்கும் அம்மாவை விழுங்கிவிட்டு வந்தவள்’ என்று தன்னை பற்றி சிந்திக்கையில்… அதனை களைத்தது அவனின் கணீரென்ற குரல்.

அவளின் கரம் பற்றி ”இந்த நிமிஷத்துலேர்ந்து இவங்க என் மனைவி" என்றவன் திரும்பி அவர்கள் இருவரையும் எரித்துவிடுவது போல் பார்த்தான்.

"இனிமேல் இவளை திட்றதுக்ககோ அடிக்கறதுக்கோ யாருக்குமே உரிமை கிடையாது… என்னை தவிர. என்னையும் மீறி அவளை கஷ்டப்படுத்தணும்னு நினைச்சிங்க...!!! அப்புறம் இருந்த இடம் தெரியாம போயிருவீங்க!!" என்று ஆட்காட்டி விரலை உயாத்தி எச்சரித்துவிட்டு அவளின் கரத்தை பற்றி மணவறையை விட்டு கீழே கூட்டிச்சென்றான்.

மஹாவோ, தன் திருமணம் யாரென்று தெரியாத ஒரு ஆடவனுடன் நடந்தது என்ற அதிர்ச்சியில் ஒருபுறம் இருக்க, நான்கு விழிகள் தன்னை கொலைவெறியுடன் பார்ப்பதை தன் விழிகளால் மிரட்சியுடன் பார்த்து கொண்டே வருபவளின் விரல்விடுத்து அவளை அணைத்தபடி கூட்டிச்சென்றான் அவளின் கணவன்.

உன்னை

காணும் நிமிடம் வரை

என் சிந்தையாலும்

ஒரு பெண்ணை

நினையேன் அன்பே!

என் விழித்திரையில்

உன்

பூமுகம் பதிந்த நொடி

என்

இதயத்தின் கதவையும்

மூடிகொண்டாய் உள்ளே சென்று...

நான் என் செய்வேன்?”


மண்டபத்தை விட்டு வெளியே வந்தவன் காரின் கதவை திறந்து, “உள்ள உக்காரு மஹா!” என்றான். அவன் கூறிய பின்னரும் அமைதியாக அவள் சிலைபோல் நிற்பதை பார்த்து மறுபடியும்.

“மஹா உள்ள போ!” என்று அவளின் கரம்பற்றி உள்ளே உட்கார வைத்தான்.

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள். ஷக்தி கரம் பட்டதும் நடுங்கி போனாள்.

அவளின் நிலை புரிந்தாலும் முதலில் அந்த இடத்தை விட்டு பிரச்சனை ஏதும் வருவதற்கு முன் கிளம்பவேண்டும் என்று காரை வேகமாக ஸ்டார்ட் செய்து, தான் அந்த ஊரில் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி செலுத்தினான்.

ஏதோ பலத்த யோசனையில் இருந்தவன் திடீரென்று, “உன்னோட சர்ட்டிபிகேட் எல்லாம் எங்க இருக்கு மஹா?” என்றான் அவளிடம் திரும்பாமல் காரை ஒட்டியபடி.

மஹாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் அவள்புறம் திரும்பி பார்க்க, அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதை உணர்ந்து அவள் முகத்தின் முன் தன் கரத்தை காற்றில் அசைத்தான்.

அப்பொழுதும் அசைவில்லாமல் இருக்க அவள் தோளை மென்மையாக தொட, அந்த ஸ்பரிசத்தில் பதறிப்போய் பயத்தில் பின்னே ஒடுங்கினாள் மஹா.

‘ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனேன் சே! என்ன மனிதர்கள் இவர்கள்? என்ன கொடுமை செய்திருந்தால் இப்படி பயந்து நடுங்குகிறாள் இவள்? இவளிடம் எப்படி பேசுவது தெரியவில்லையே?’ என்று யோசித்தான்.

பட்டென்று வேகமாக காரின் பிரேக்கை போட, கார் குலுங்கி நின்றதில் சுயஉணர்வுக்கு வந்த மஹா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அவன் தன்னையே இமைக்காமல் பார்ப்பதை பார்த்து தலைகவிழ்ந்து கொண்டாள்.

மஹாவின் செயல் அவனுக்குள் சிரிப்பை வரவழைக்க மெல்ல தன் இதழை கடித்து சிரிப்பை அடக்கியவன்.

“இங்க பாரு நம்மளுக்கு டைம் இல்ல, உன்னோட சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் எங்க இருக்கு?” என்றான்.

“எல்லாம் எங்க வீட்ல தான் இருக்கு” என்றாள் மஹா மெதுவாக.

“சரி. வீட்டுக்கு வழி சொல்” என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான்.

வீட்டிற்குள் நுழைந்து மஹாவின் சர்ட்டிபிகேட்ஸ் அவளின் சொத்து டாக்குமெண்ட்ஸ் என்று முக்கியமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு, “உனக்கு ஏதாவது ரொம்ப முக்கியமா எடுக்கணும்னா எடுத்துட்டு வா!” என்றான்.

அவள் வேகமாக ஓடிச்சென்று, பின் ஒரு சின்ன பெட்டியுடன் வந்தாள். சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டவன் பின் “வா போகலாம்” என்று அவள் கையை பற்றி வேகமாக வெளியேறி காருக்குள் உட்கார வைத்து ஸ்டார்ட் செய்தான்.

தன் போன் அடிப்பதை உணர்ந்து சுரேஷ் ஞாபகம் வர வேகமாக எடுத்து “ஹலோ!” என்றான்.

“சாரி டா! இருந்த டென்ஷன்ல உன்னை கூப்பிடல. சரி நீ வீட்டுக்கு வந்துடு. நாம இப்பவே சென்னைக்கு கிளம்பறோம்” என்று போனை கட் செய்தான்.

அவன் கார் ஓடுவதில் கவனமாய் இருந்தான்.

‘யார் இவன்? என்னை எங்கே கூட்டி செல்கிறான்?’என்று அவனை பார்த்துகொண்டே இருந்தாள் மஹா.

“நீ... நீ...ங்...க யா...ரு...? எ..ன்..ன எ..து..க்..கு கல்யாணம் பண்ணீங்க?” என்று மஹா திக்கித்திணறி கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் அவள் கண்களையே உற்று பார்த்தவன்.

பின்னர் அவளை பார்த்தபடியே “ஏன் உன்னை அவங்ககிட்டேர்ந்து காப்பாத்துனது பிடிக்கலையா? அவங்ககிட்டயே கொண்டு போய் விடட்டுமா அங்கேயே போறியா?” என்றான் சற்று கோவம் கலந்த குரலில்.

வேகமாக ‘வேண்டாம்’ என்று தலையாட்டும் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே, “உன்னோட வேண்டுதலை கேட்டு அந்த கடவுள் தான் உனக்காக என்னை இங்க அனுப்பி வைத்தார் போதுமா? எதை பத்தியும் யோசிக்காம அமைதியா பயப்படாம வா” என்றான்.

இன்னமும் அவள் மாந்தளிர் உடல் நடுங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து, ‘இவளிடம் இப்போதைக்கு பேச்சு கொடுக்ககூடாது. முதல்ல அவளாக நிதானத்துக்கு வரட்டும்’ என்று நினைத்தவன் அதற்குபிறகு அவளிடம் எதுவுமே பேசவில்லை.

திடிரென்று “ப்ளீஸ் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பன்றிங்களா?" என்று மஹா கேட்க.

தாங்கள் இருக்கும் நிலைமையிலும் அவளின் இந்த கொஞ்சலான கெஞ்சலில் சொக்கி தான் போனான் ஷக்தி.

“என்ன?" என்று ஆச்சர்யமாக மஹாவை பார்த்தான்.

“இங்க இருந்து போறதுக்கு முன்னாடி எனக்கு ஒருத்தங்களை பார்க்கணும். ப்ளீஸ்! கூட்டிட்டு போறிங்களா?” என்று பயந்த விழிகளுடன் கேட்கும் அவளை பார்த்து லேசாக சிரித்து தலையசைத்தான்.

“இங்க பாரு இந்த நிமிஷத்துலேர்ந்து உனக்கு எது வேணும்னாலும் என்கிட்டே பயப்படாம கேளு மஹா. இனி உனக்கு எல்லாமே நான் மட்டும் தான்" என்று கனிவாய் மஹாவை பார்த்தான் .

அவனை காணாமல் ‘சரி’ என்று தலையை மட்டும் அசைத்தாள் மஹா.

இன்றில் இருந்து தன் வாழ்க்கையை வசந்தமாக்க வந்தவன் என்று அறியாமல் வழக்கம் போல் பயந்து கொண்டிருந்தாள் மஹா
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
ஆஹா மஹாவுக்கு யாரோ தீங்கு செய்திருக்காங்க அதுதான் அவ ரெம்ப பயப்படுறா எல்லாத்துக்கும், பெயருக்கு ஏற்றமாதிரி ஆபத்பாண்டவனா வந்துருக்கான் ஹீரோ சக்தி சூப்பர் 😍😍😍😍😍😍😍😍
 

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
ஆஹா மஹாவுக்கு யாரோ தீங்கு செய்திருக்காங்க அதுதான் அவ ரெம்ப பயப்படுறா எல்லாத்துக்கும், பெயருக்கு ஏற்றமாதிரி ஆபத்பாண்டவனா வந்துருக்கான் ஹீரோ சக்தி சூப்பர் 😍😍😍😍😍😍😍😍

அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
ஆஹா மஹாவுக்கு யாரோ தீங்கு செய்திருக்காங்க அதுதான் அவ ரெம்ப பயப்படுறா எல்லாத்துக்கும், பெயருக்கு ஏற்றமாதிரி ஆபத்பாண்டவனா வந்துருக்கான் ஹீரோ சக்தி சூப்பர் 😍😍😍😍😍😍😍😍
மிக்க நன்றி