• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

10.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



தாத்தா, “ வண்டியை நிறுத்துங்க…

என்னாச்சு வர்மா..?

இதென்ன கேள்வி என்ன பிரச்சினை எதுக்கு மாலினி அத்தையும் ,பல்லவி அம்மாவையும் பிடிச்சு வச்சு இருக்காங்க என்று வர்மன் கேட்க..

போனா தான் தெரியும் வர்மா எதோ காலேஜ் ல பிரச்சினை ன்னு போலீஸ் ஸ்டேஷன் போய் இருக்கா என்று சொல்லவும்

டிரைவர் வண்டியை நிறுத்துங்க என்று வர்மன் சொல்ல டிரைவரோௐ ராமைய்யா வை பார்க்க..

நான் தான் சொல்லுறேனே நிறுத்துங்க என்று கத்த வண்டியை ஓரம் கட்டி இருந்தார் டிரைவர்..நீங்க கொஞ்சம் வெளியே இருங்கண்ணா என்றவன் டிரைவரை அனுப்பி விட்டு என்ன பிரச்சினை தாத்தா சிபிஐ வர அளவுக்கு உங்களுக்கு தகவல் வரலையா?

ராமைய்யா, “ வரல அதான் இப்ப உடனே கிளம்பி போகலாம் ன்னு, கிளம்பலாம் வர்மா அங்க இருக்கிற இரண்டு பேரும் நம்ம வீட்டு மகாலட்சுமி.

ம்ம்ம் வண்டியை எடுக்க சொல்லிவிட்டு என்ன ஏதுன்னு விசாரிக்க வர்மன் அமர்ந்து விட..ராமைய்யா படபடப்புடன் என்ன செய்வது என்று குழம்பி கொண்டு இருந்தார் . எல்லாமே கை மீறி சென்று கொண்டு இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து தான் இருந்தார்.ஆனாலும் அவர் ஆட்டத்தை கைவிட எண்ணவில்லை,… எவ்வளவோ விஷயங்களை கடந்த அவருக்கு இதையும் கடந்த வரத்தான் யோசனையே தவிர இதெல்லாம் தவறு என்ற எண்ணம் வரவே இல்லை.

வர்மன், “ என்ன செக்க்ஷன் க்கு கீழ் என்கொய்ரி என்று பிஏ வை கேட்க..அவன் சொன்னதை வைத்து புருவங்கள் சுருங்க …ஸ்டேட்டஸ் என்ன? இப்போதைக்கு ஜாமீன் வாங்க முடியாதுன்னு தான் தோணுது இதுல சென்ட்ரல் கவர்மெண்ட் இன்வால்வ் ஆகி இருக்கு என்று சொன்னதும் புருவமுடிச்சுடன் யாருன்னு தெரிஞ்சதா?

இன்னும் இல்ல

சரி என போனை வைத்து விட்டவன் சாய்ந்து அமர ராமைய்யா தீவிர யோசனையில் இருந்தார் அடுத்த அடுத்த விஷயங்களை செயல்படுத்த திட்டம் ஒன்று தயாராகி இருந்தது அவர் மூளையில்.

வர்மா…

சொல்லுங்க தாத்தா..

பகலவனுக்கு போனை போடு.

மாமா பிளைட் ஏறி இருப்பாங்க இப்ப பேசமுடியாது என்று வர்மன் சொல்ல..

ப்ச் எப்ப வருவான் ..

இன்னும் நாலு மணிநேரத்தில் தாத்தா…

ம்ம்…

அடுத்த கால் மணிநேரத்தில் ஸ்டேஷன் வந்துவிட..அவசரமாக இறங்கி உள்ளே நுழைந்து இருந்தான் வர்மன்.

பல்லவி அனலை கக்குவது போல் அமர்ந்து இருக்க.. மாலினியோ புலம்பி கொண்டு இருந்தாள் ஒரு வேலையை கூட ஒழுங்கா முடிக்க தெரியல என்னத்த இத்தனை வருஷம் அரசியல் பண்ணாங்களோ என்று முணுமுணுக்க..வாயை மூடு மாலினி அதை எங்களுக்கு யாரும் சொல்லி தரத் தேவையில்லை என்றவள் நிமிர வர்மன் வந்து கொண்டு இருந்தான்.


இவ்வளவு நேரமா வர என்று பல்லவி கேட்க..

என்ன பிரச்சினை ம்மா எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்து இருக்காங்க..

ப்ச் எதுவும் தெரியல நம்ம காலேஜ் ல படிச்ச பொண்ணுங்க மிஸ்ஸிங் கேஸ் விஷயமான்னு சொன்னானுங்க ஆனா அதுக்கும் நமக்கு சம்பந்தம் இல்ல இவனுங்க எதுக்கு இந்த வேலை பார்க்கிறாங்க ன்னு தெரியல.

எப்ப காணாம போனாங்க அம்மா…

டேய் இது பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் என்று சொல்ல..

அது தான் சரியா எத்தனை வருஷம் என்று கேட்க..

மாலினி, “ இருபத்தி நாலு வருஷம் முன்னாடி என்று சொல்ல..

வாட் என்று அதிர்ந்தான் வர்மன்.

ஆமா நீ பத்து வயசு பையன் என்று மாலினி பல்லை கடிக்க..

விருட்டென எழுந்தவன் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று விசாரிக்க செல்ல..

வாங்க வர்மன் நீங்களும் என்கொய்ரி வர வேண்டியதா இருக்கும் ன்னு சொல்லலாம் ன்னு இருந்தேன் என்ற டிஜிபி யை பார்த்து என்ன சார் இது எப்பவோ நடந்ததுக்கு இப்ப கேட்டுக்கிட்டு…

ஹாஹாஹா அதோட தொடர்ச்சி இன்னும் இருக்கே வர்மன் என்றவர் இந்தாங்க நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே நானே தரேன் என்று சில ஆதாரங்களை தர அந்த ஆதாரங்களை தன் கைப்பட எழுதி அதில் அன்றைய சப்கலெக்டர் கையெழுத்து போட்டு இருக்க யோசனையோடு பார்த்தான் வர்மன்.

உங்க மாமா பகலவன் மனைவி அதாவது இறந்து போன மனைவி தந்த ஆதாரங்கள் என்று சொன்னதும் ..


ரிஷி அத்தையா…

ஆமா என்று சொன்னவர் சாரை உள்ள வர வேண்டாம் ன்னு சொல்லுங்க ஏற்கனவே ஆட்சி முடியும் நேரம் இந்த நேரத்தில் இங்க வந்து நின்னா நல்லா இருக்காது அதான் வெளியேவே ஆளை வச்சு கார்லயே உட்கார வச்சு இருக்கேன்.


ஓஓஓ…

அப்ப இந்த என்கொய்ரி..

சார் சாயந்திரம் வந்துடுவாங்க நீங்க கிளம்புங்க சார் கேஸ் இப்போதைக்கு நாம் எதுவும் பண்ண முடியாது இப்ப தானே ஆரம்பிச்சு இருக்கு இது தான் டீடெயில்ஸ் உங்க வக்கீல் அப்பவே வந்து வாங்கிட்டு கிளம்பிட்டாரு நீங்க போங்க ஈவினிங் வாங்க என்று சொல்ல

சரி என தலையசைத்து கிளம்பிவிட்டான் வர்மன்.

ராமைய்யா, “ என்ன வர்மா நீ மட்டும் வர எங்க பொண்ணுங்க..

சாயந்திரம் வருவாங்க தாத்தா நீங்க வாங்க என்று வண்டியை எடுக்க சொல்லி வீட்டிற்கு வர..அங்கே வக்கீல் அமர்ந்து இருந்தார்.

இங்க என்னைய்யா பண்ணுற அங்க என் பொண்ணு மருமக உள்ள இருக்காங்க என்று எரிந்து விழுந்தார் ராமைய்யா..


சார் இந்தாங்க இந்த ஆதாரத்தை பாருங்க இதுல என்ன பண்ண இருக்கு இன்னைக்கு என்கொய்ரி முடிஞ்சா தான் எதையும் யோசிக்க முடியும் இதுல மாலினி மேடத்துக்கு பிரச்சினை இல்ல பிரச்சினை உங்க பொண்ணு பல்லவி மேம் க்கு தான் அவங்க அப்ப இருந்தே இந்த காலேஜ் க்கு முக்கிய ஆள் இவங்களுக்கு கீழ் தான் எல்லாமே இப்ப இதுல வேற என்னென்ன இருக்குன்னு நாம் தான் தேடனும் அவங்க முதல் தகவல் அறிக்கை தான் தந்து இருக்காங்க . அவங்க கிட்ட வேற என்னென்ன ஆதாரம் இருக்குன்னு தெரியல என்று வக்கீல் சொல்லிக்கொண்டே போக..

வேகமாக உள்ளே நுழைந்து இருந்தார்கள் அகத்தியன் குடும்பம்.

அகத்தியன், “ ராமு…

அந்த குரலில் கடுப்பான ராமைய்யா பல்லை கடித்தவர் உள்ள வா அகத்தி ..

என்ன பண்ணலாம் ன்னு இருக்க என் பொண்ணு வீட்டுக்கு வரனும் இதுக்கு மேல அவ அங்க இருக்க கூடாது.

எனக்கு மட்டும் என்ன ஆசையா பிள்ளைங்களை அங்க வைக்க என்று எகிற…

உங்க கொடுக்கல் வாங்கல் ல எங்க பொண்ணு எதுக்கு உள்ள இருக்கனும் என்று மீண்டும் அகத்தியன் பேச..

போதும் நிறுத்துங்க அகத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க..ஏன் பேசக்கூடாதா ராமு எதையும் சரியா செய்யாம இதோ இத்தனை வருஷம் போய் இப்படி ஒரு பிரச்சினை என்று அற்பமாக பார்க்க..

என்ன மட்டம் தட்டுறியா என்னம்மோ எனக்காக மட்டுமே பண்ண மாதிரி என்றவர் வர்மன் இருவரையும் மாறி மாறி பார்ப்பதை உணர்ந்து ப்ச் சரி உட்காருங்க எதுக்கு தேவையில்லாம நமக்குள்ள மனஸ்தாபம் என்று ராமைய்யா நிறுத்த மூத்த மகனும் அவன் மனைவியும் அப்பா மாமா என்று அகத்தியனை அழைக்க..

அகத்தியன், “ என்ன மாப்ள உங்க அப்பா எது சொன்னாலும் சரின்னு ஆகிடுமா..

மாமா இப்ப அதுவா முக்கியம் உள்ள இருக்கிறது என் தம்பி பொண்டாட்டி,உங்க மகனோட பொண்ணு அப்புறம் எதுக்கு இவ்வளவு பேச்சு நாம் இதை எப்படி சரி பண்ணுறது ன்னு தான் பார்க்கனும் என்றவன் வர்மா என்ன சொல்லுறாங்க..

சற்றே தயக்கத்துடன் மாமா அது டாக்குமெண்ட் எல்லாம் நம்ம காலேஜ் க்கு சாதகமா இல்ல என்றவன் இதுல அம்மா தான் முதல் குற்றவாளினு அந்த ஆதாரம் சொல்லுது…

என்ன சொல்லுற வர்மா பல்லவி என்ன பண்ணா அந்த பொண்ணு காணாம போனதுக்கு இவ என்ன பண்ணுவா…என்று மூத்தவன் கத்த..

ஒரு பெருமூச்சுடன் நீங்க எல்லாம் இங்க இருங்க நான் வரேன் என்றவன் கிளம்பி இருந்தான்.


ரிஷி, “ எத்தனை நாளைக்கு இங்க இருக்கனும் வாகி…

ஏன் மா இங்க என்ன பிரச்சினை?

இல்ல பிரச்சினை வெளியே இருக்கே நாம் ஏன் இங்க இருக்கனும் என்று கேட்க…

உங்களை உலகத்துக்கு காட்டிட்டேனே அப்ப கொஞ்ச நாள் இங்க தான் என்று சிரிக்க..

வாகி…

என்னம்மா..

அங்க நாராயணன் மாட்டி இருக்கார் இப்ப அந்த ஆதாரம் எல்லாம் என்று பார்க்க..

போக வேண்டிய இடத்துக்கு போய் இருக்கும் நடக்க வேண்டியது நடக்கும் அது மொத்தமா முடியும் போது நாம போகலாம் அதுவரை நமக்கு ரெஸ்ட்.

ரிஷி ஒரு பெருமூச்சுடன் விது எங்க வாகி?

அவளை சென்னை அனுப்பி இருக்கேன் அவனை காலி பண்ணி நேரா கோவை அனுப்புறேன்..
வாகி என்று அதிர்வாய் ரிஷி அழைக்க..

நாமளும் கொஞ்ச நாள்ல கோவை போறோம் இனி அங்க தான் எல்லாம் என்று சொல்ல

வேண்டாம் வாகி அங்க எனக்கு விருப்பம் இல்ல…

உன்னோட விருப்பத்தை கேட்கல மா..

வாகி என்று அதட்ட..

போதும் இதுவரை தப்பே செய்யாம எங்கேயோ வாழ்ந்தது இனி உன் இடத்தில் நீ இருக்கனும் அது தான் உனக்கு மரியாதை என்றவள் நேர் கொண்டு தாயை பார்க்க..

என்ன உரிமை வாகி…

என்ன இல்லன்னு சொல்லுற

எதுவுமே இல்ல வாகி இப்படி தான் நடக்கும் ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சே நடந்ததை இப்ப எதுக்கு உரிமை கேட்டு என்று தழுதழுக்க…



அம்மா நாம நம்ம வீட்டுக்கு போறோம் எங்கேயும் ஒண்ட போகல என்றவள் அந்த போட்டோக்களை எடுத்து போட..

அந்த அழகிய தோட்டத்தில் அவ்வளவு மழலை மொட்டுக்கள் இருக்க. அந்த இடத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தார் மதர்.அதை பார்த்ததும் கண்கலங்க மதர் எப்படி இருக்காங்க வாகி..

நல்லா இருக்காங்க நான் போபோ எல்லாரும் பேசினோம் உங்களை தேடுது அவங்களுக்கு என்றவளை பார்த்தவர் ம்ம் அம்மா இல்ல என்றார் ரிஷி…அவர் எண்ணங்கள் எல்லாம் அந்த நினைவுகளுக்குள் சென்றுவிட இங்கே வாகி விதுவை அழைத்து இருந்தாள்..

சொல்லு வாகி

அங்க என்ன நிலமை..

சிபிஐ தானே அவங்க டைம் எடுப்பாங்க..

எடுக்க கூடாது சீக்கிரம் முடிக்கனும் மேல வேற யாரும் உதவுறாங்களான்னு பாரு அவங்களையும் மொத்தமா தட்டிடலாம்.

போதும் வாகி இதுவரை அவங்களுக்கு வச்சே அப்பே என்று விது சொல்ல ..

முடியாது இது தானே ஆரம்பம் என்றாள் வாகி..


தொடரும்













 
  • Love
Reactions: shasri