• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
10.கடல்



"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்கல்ல?" என்று அவனை பார்க்காமல் கேட்டாள்.

அவளின் அந்த பெண்மை கலந்த கூச்சம் ஷக்திக்கு பிடித்திருந்தது அவளை அப்படி காணும் போது அவனுக்குள் இருக்கும் ஆண்மையும் அவனை ஏதோ செய்தது.

அவளிடம் மேலும் நெருங்க சொல்லி அவனை பாடாய் படுத்தியது.

‘இன்னும் அவள் கடந்த கால வாழ்க்கையில் இருந்து வெளியே வரவேண்டும் அவளாக தன்னை ஏற்கும் வரை அவளை கட்டாய படுத்தாமல் காதலிக்க போகிறேன்’ என்று தன் மனதிற்கு கடிவாளம் ஒன்றை கட்டிவிட்டால் நல்லது என்று நினைத்து கொண்டான்.

‘முதலில் இவளை நிறைய மாற்ற வேண்டி இருக்கிறது ஷக்திக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டா இருக்கா இந்த மஹா’ என்று நினைத்து சிரித்தான்.

"சரி வா! கிழ இறங்கு” என்றவுடன் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தாள்.

இருட்டிவிட்ட நேரம் அவளின் கையை பிடித்து கடலுக்கு கூட்டி சென்றான்.

"நாம பீச்சிக்கு வர போறோம்னு சொல்லி இருந்தா சுடிதார் போட்ருப்பேன்ல?" என்றவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

"இந்த புடவையும் உனக்கு அழகா தான் இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு. புதுசா கல்யாணமான பொண்ணுங்க புடவைல தான் ரொம்ப அழகா இருப்பாங்க. அதுக்குன்னு எனக்கு பிடிச்சிருக்கு நீ இந்த மாதிரி தான் இருக்கணும்னு என்னைக்கும் சொல்லமாட்டேன் உனக்கு எப்படி இருக்கனும்னு ஆசையோ அப்டியே இருக்கலாம் எல்லா விஷயத்துலயும்” என்றான் அழுத்தமாக.

ஒரு நொடி அவனை ஏறெடுத்து பார்த்தவள் பார்வையிலேயே நன்றியும் உறைத்தாள்.

“என்னங்க எனக்கு கடல்னா பயம். நான் வரல, நீங்க போங்க" என்ற மஹாவின் கையை இறுக்கமாக பிடித்தான்.

"நீ என்னை நம்பரையா? இல்ல..." என்று கேள்வியோடு அவளை நோக்கினான்.

"கண்டிப்பா இதுக்கு முன்னாடி எப்படியோ? ஆனா, இனி உங்கள தவற எனக்கு யாரும் இல்ல, நான் என்னைவிட உங்கள அதிகமா நம்பறேன்" என்றாள் கீழே பார்த்தபடி.

"ரொம்ப தேங்க்ஸ்!" என்றான் அவளிடம் நெருங்கியபடி.

ஷக்தியின் நெருக்கம் அவளை தடுமாற செய்தது கண்களை இறுகமூடி அவன் அருகாமையை ரசித்தாள்.

"நீ என்னை நம்பறன்னா?..." என்று தன் இரு கைகளையும் விரித்தபடி நின்றான்.

மணலையே நோக்கி கொண்டிருந்தவள் அவன் பேச்சு நின்றுவிட்டதால் நிமிர்ந்து அவனை நோக்கினாள். ‘எதுக்கு கையை நீட்டுகின்றார் என்ன? நான அவரை கட்டி பிடிக்கணுமா? என்னால முடியாது’ என்று நினைத்தவள் அவனின் சொற்கள் காதில் ரியங்காரமிட்டன. ‘நீ என்னை நம்பறன்னா? என்ன இப்படி சொல்லிட்டாரே? நான் இதுவரைக்கும் யாரையுமே அன்பாய் கூட கட்டிப்பிடித்தது இல்லையே! அதுவும் ஒரு ஆணை எப்படி ...?’ என்று யோசிக்கையில்…

"பரவால்ல உனக்கு விருப்பம் இல்லனா விட்று" என்று கூறி முடிக்கும் முன் கண்களை இறுக மூடியபடி அவனை கட்டிக்கொண்டாள்.

அவளாக வரட்டும் என்று இருந்தான் ஷக்தி.

அவளின் தயக்கத்தை போக்க தன்னிடம் அவளின் விருப்பத்தோடு வரட்டும் என்று அமைதியாக நின்றபடி காத்திருந்தான்.

அவள் மிகவும் தயங்கவும் பாவம் அவளை தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணி, “உனக்கு விருப்பமில்லையன்றால் விட்று” என்று சொல்லி முடிப்பதற்குள் தன்னை கட்டிக்கொண்டதை நினைத்து சிரித்தபடி மென்மையாக வருடி கொடுத்தான்.

சில நிமிடங்கள் சிலையாக நின்றவர்கள் பின் ஷக்தி மஹாவின் முகத்தை நிமிர்த்தி “இதுக்கு முன்னாடி நீ பட்ட எல்லா கஷ்டத்தைம் மறந்துரு. இனி, உன் பெயர் முதல் உன் பாதம் வரை எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம்” என்று அவளின் நெற்றியில் மென்மையாய் தன் இதழ் பதித்தான்.

“பட்ட கஷ்டங்கள் எல்லாம்

கனவாய் மறந்திடு கண்ணே!

இனி!

உன் கருவிழி முதல் உன் பாதம் வரை

எனக்கு மட்டுமே சொந்தமாகும்!

அதுமட்டுமல்ல...

என் மரணம் வரை

என்

உயிரின் ஒவ்வொரு மூச்சும்

உனக்கு மட்டுமே சொந்தமாகும்!

நம் இருவரின் மூச்சும்

காற்றோடு கலக்கும் வரை

நீ என்பது நான் மட்டுமே!

அன்பே!

நான் என்பது நீ மட்டுமே!”


மஹா அவனுடைய மனைவி தான் என்றாலும் முதல்முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவனின் முதுகு தண்டு வரை சென்று சூடேற்றியது.

தன்னை அடக்க முடியாமல் அவனிடமே அவன் தோற்று கொண்டிருந்த வேளையில் மஹாவின் குரல் அவனை காப்பாற்றியது.

"ரொம்ப தேங்க்ஸ்! பிறந்தவுடனே அம்மா இறந்ததால் அம்மாவின் ஸ்பரிசமும், அப்பா என் மேல வெறுப்பா இருந்ததால அப்பாவோட ஸ்பரிசமும், கூடபிறந்தவங்க யாரும் இல்லாததால என்னை யாரும் இதுவரை கட்டி தழுவியதில்லை. நான் கண்டதெல்லாம் சித்தியின் அடியும் திட்டுகளும் தான். இவங்க எல்லோரோட அன்பையும நான் உங்க உருவத்துல பார்க்கிறேன்" என்று அழுதவளை தன்னிடம் இருந்து விலக்கி ”இது என்னோட கட்டளை நீ இனி எந்த காரணத்துக்காகவும் அழக்கூடாது” என்றான் அன்பு கட்டளையாக.

அவனிலிருந்து எழும்பும் உணர்ச்சியை அடக்கியவன்.

"வா” என்று அலையை நோக்கி அவள் கைகளை இழுத்தான்.

"இல்ல” என்று தலையாட்டியவளை விடாமல் இழுத்தான்.

அவனிடம் இருந்து விலகி கரையினில் ஓடினாள். அவளை விடாமல் துரத்திக்கொண்டு மூச்சு வாங்க ஓடிய ஷக்தி நிலைதடுமாறி விழப்போன மஹாவை பிடிக்க போய் அவனும் சேர்ந்து கீழே விழுந்தான். இருவரும் மணலில் விழுந்தனர். அவளின் நெருக்கத்தில் இருப்பது ஷக்திக்கு பிடித்திருந்தது. மஹாவின் கன்னத்தை லேசாக வருடியவன் அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.

“என்னை ஏதோ கேக்கணும்னு சொன்ன? என்ன அது?” என்று கேட்டான்.

"அது வந்து..." என்று இழுத்தாள்.

“என்ன என்னிடம் கேட்க தயக்கம்? உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள்" என்றான்.

“எனக்கு உங்க பேரே தெரியாது. உங்களை பத்தியும் தெரியாது?” என்று மெதுவாய் இழுத்தாள்.
 
Top