10.நவிலனின் கோதையானாள்
கவிதா, “எல்லாம் என் தலையெழுத்து என்று பேச்சை முடிக்கும் முன்பே வசந்த் தரதரவென இழுக்க..
விடுங்க என்னைய பேசவிடாமா தடுத்தா எல்லாம் மறைஞ்சா போய்டும் ஏதோ பைத்தியத்தை கல்யாணம் பண்ணான்னு பார்த்தா என்று நிறுத்தியவள் பனியின் முகத்தை பார்த்து ஏற்கனவே எவன் கிட்டயோ முழுசா ஒன்னு இல்லாம ஆகிட்டு தானே வந்து நிற்குறா என்று அறுவறுப்பாய் பார்க்க கூனி குறுகி விட்டாள் பூம்பனி..
வசந்த் எவ்வளவு தடுத்தும் கவிதா வாய் மூடவில்லை பொறுத்து பொறுத்து கடைசியாய் அடித்தே இருந்தான் வசந்த்..
வசந்த்..
வாய் மூடு கவி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின நான் மனுசனா இருக்க மாட்டேன். என்ன தெரியும் உனக்கு பனி பத்தி, என்ன நினைச்சு பேசிட்டு இருக்க வாய் இருந்தா என்ன வேணா பேசுவியா…
போதும் நானா பேச என்ன பைத்தியமா அதான் உலகமே பேசுற அளவுக்கு பேப்பர் ல வந்து இருக்கே அப்புறம் என்ன?
கவி..
ஏன் இதுக்கு பதில் பேச வேண்டியது தானே…
ஆமா அது நான் தான் அண்ணி இல்லன்னு நான் சொல்லவே இல்ல என்றாள் பூம்பனி
ஓஓ இல்லன்னு சொல்ல வேற உனக்கு தகுதி இருக்கா…
பனி அடுத்து பேச வரும் முன் அவள் ஒரு அடி பின் நகர்ந்ததையே பார்த்து கொண்டு இருந்த நவிலன் ஒர் அடி எடுத்து அவள் அருகில் வந்தவன் அவளை அணைத்து கொண்டு இது என்னோட வாழ்க்கை அதுல எது நடந்தாலும் இனி நீ தலையிட தேவையில்லை அக்கா என்றவன் மடமடவென பூம் பனியை இழுத்து கொண்டு செல்ல..
டேய் நில்லு டா
ப்ளீஸ் இனி நீ என் விஷயத்தில் தலையிடாத உனக்கு அம்மாவை பார்க்கனும் ன்னா வந்து பார்த்துட்டு போ இப்படி எப்ப பேசினாலும் தேள் மாதிரி கொட்டுறதா இருந்தா சொல்லிடு நான் வேற இடத்துக்கு போய்டுறேன்.
என்னடா பேசுற அப்ப நான் எதுவும் கேட்க கூடாதா..
அக்கா உன்னையே கேட்க வேண்டாம் ன்னு சொல்லல அது அக்கறையில் இருந்தா பரவாயில்ல ஆனா நீ அப்படி கேட்கலையே..
ஓஓஓ அப்ப நான் ஓரண்ட இழுக்குறேன்னு சொல்லுற..
சொல்லுறது என்ன அது தானே உண்மை என்றான் நவிலன் ஒரு நொடி அதிர்ந்தாலும் தன்னை சமாளித்து கொண்ட கவிதா பின்ன நான் கேட்க கூடாதா அப்படி என்ன குறைன்னு இப்படிபட்டவளை நீ கட்டனும்
அக்கா ஒன்னு புரிஞ்சுக்க நான் அவளை ஆறு வருஷமா விரும்பிட்டு இருக்கேன்
நவி என்று அதிர்வாய் கவிதா பார்க்க..
ஆமா இது அப்பாக்கு தெரியும் நான் பனியை பாரிதாப்பத்துலயோ இல்ல எனக்கு குறை இருக்குன்னோ கட்டிக்கல எனக்கு அவளை பிடிச்சு தான் கட்டிக்கிட்டேன் இதுக்கு மேல இதை பத்தி பேசுறதா இருந்தா முன்னாடியே சொல்லிடு நாங்க வீட்டில் இருக்கமாட்டோம் நீ வந்து அம்மாகிட்ட பேசிட்டு போகலாம் அம்மா நாங்க ரூம் க்கு போறோம் என்று நவிலன் நகர்ந்து விட..
கிளம்புறோம் அத்த இதுக்கு மேல இருந்தா இந்த விஷயத்தை இவ பெரிசாக்கிட்டே போவா என்றவன் வா கவி என்று அவளை இழுத்து கொண்டு சென்றான்.
ச்சே நாம் கேட்க வந்தது வேற ஆனா நடந்ததே வேற என்று நினைத்து கொண்ட கவிதா விடமாட்டேன் அது எனக்கு கண்டிப்பா வேணும் என்று மனதில் உருபோட்டு கொண்டு கிளம்பி இருந்தாள்..
மங்கை, “என்னங்க இது இந்த பொண்ணு கல்யாணம் ஆகியும் மாறல பையன் காலேஜ் போகப் போறான் ஆனா இன்னமும் சண்டையை வளர்த்துட்டு இருக்கா என்று தன் கணவரின் போட்டோ முன் நின்று புலம்ப
இங்கே அறைக்குள் இதுக்கு தான் இந்த கல்யாணம் வேண்டாம் ன்னு சொன்னேன் என்றாள் பூம்பனி..
பனி இதெல்லாம் நடக்கிறது தான் அதுக்காக கல்யாணம் பண்ணாமலே இருக்க முடியுமா? எது நடந்தாலும் நீ என்னைய மட்டும் நினைச்சு பாரு வேற எதையும் யோசிக்காத ..
காயப்பட்டவங்களுக்கு தான் அதோட வலி தெரியும் நவி எவ்வளவு வேணும்னாலும் சமாதானம் அறிவுரை ன்னு சொல்லலாம் ஆனா அதை கடந்து வந்தவங்களுக்கும் அந்த தாக்கத்தோட வாழ்பவர்களுக்கும் தான் புரியும் இது எப்படியான வாழ்க்கை ன்னு..
புரியுது பனி ஆனா அங்கேயே தேங்கிட்டா அப்புறம் வாழ்க்கையோடு மற்ற பக்கங்களை எப்படி பார்க்கிறது என்றான் நவிலன்
சொல்ல எல்லாமே நல்லா இருக்கு ஆனா செயல்படுத்தும் போது தான் மேடும் பள்ளமாவே இருக்கு சமதளமா இல்ல..
அம்மு என்று அவளை அணைத்து கொண்டவன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே இருந்துட்டா நம்ம சர்வைவ் பண்ண முடியாதுடா அதுக்கு தான் இந்த கஷ்டம் எல்லாம் எல்லாத்தையும் தூக்கி தூர போடு நம்ம வாழ்க்கை நம்ம தான் வாழனும் பேசுறவன் ஆயிரம் சொல்லலாம் அதெல்லாம் என்று அவன் முடிக்கும் முன்பே
ஒரு பெருமூச்சுடன் நான் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று அவனை தன்னிலிருந்து பிரித்து ரெஸ்ட் ரூம் சென்று விட..
இப்ப தான் கொஞ்சம் வெளியே கொண்டு வந்து இருந்தேன் அதுக்குள்ள இந்த அக்கா வேற, முதல்ல அவகிட்ட பேசனும் என்று நினைத்து கொண்டவன் அப்படியே கட்டிலில் சாய்ந்து விட்டான்.
என்ன ராணிக்கா நீ சொன்னது தான் நான் என் தங்கச்சி மவ கிட்ட சொன்னேன் அவளும் தான் உன் தம்பி பொண்ணுக்கு நடந்ததை அரசல் புரசலாக பேசி இருக்கா ஆனா இதெல்லாம் நாளைக்கு அவ வேலைக்கு பிரச்சினை ஆகிடும் ன்னு பயப்படுறா..
ராணி, “நாம என்ன இல்லாத பொல்லாததையா சொன்னோம் நடந்ததை தானே சொன்னோம்..
எதுக்கு க்கா சொன்னோம் ன்னு சொல்லுற, சொன்னேன் ன்னு சொல்லு அது தான் சரி..
என்ன வனஜா இப்படி பேசுற
பின்ன என்ன ராணிக்கா நாங்களே என்னமோ சொன்ன மாதிரி நீ தானே சொல்ல சொன்ன
நீ ஒன்னும் சும்மா சொல்லலையே உன் பிள்ளைக்கு உடம்பு சரியில்ல ன்னு காசு வாங்கிட்டு தானே சொன்ன..
ப்ச் அது தான் நான் பண்ண தப்பு இந்தாக்கா உன் பணம் என்று எடுத்து நீட்டினாள் ராணி வாங்காமல் பார்த்து கொண்டே இருக்கே அங்கே இருந்த திட்டில் வைத்து விட்டு இதோட விடுக்கா அந்த புள்ள பேர்ல் தான் அந்த ஸ்கூல் இருக்காம் அந்த புள்ளையா கட்டிக்கிட்டவரு அந்த ஸ்கூல் ல ஒரு பார்ட்னர் ஆம் அதுவும் உன் தம்பி மவ பேர்ல் தான் வாங்கி இருக்காராம் எதுக்கு வம்பு ன்னு என் தங்கச்சி மவ ஒதுங்க சொல்லி சொல்லிட்டா என்று கிளம்பிவிட…
என்ன இது புது தகவலாக இருக்கு நான் கட்டினது எதுவும் சொல்லவே இல்ல..எல்லாம் நாம் வாங்கிட்டு வந்து வரம் ச்சே ஏய் வினி என்று மகளை அழைக்க
என்னம்மா ..
கிளம்பு டி உங்க மாமா வீட்டுக்கு போகலாம்
எதுக்கு மா
அவளை கட்டி குடுத்து இருக்காங்களே அவ வேலை செய்யுற அந்த ஸ்கூல் அவ பேர்ல வாங்கி இருக்காங்களாம் அது என்ன ஏதுன்னு பார்க்கனும் இங்க இருக்க அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ல எனக்கு முப்பது பர்சன்ட் ஷேர் இருக்கு அதுல அவன் வாங்கி குடுத்து இருந்தா நான் என்ன ஏமாளியா? வாடி போகலாம் என்று கிளம்ப அறைக்குள் இருந்த மகனோ இவங்க இரண்டு பேரையும் திருத்த முடியாது என்று நினைத்தவர் தந்தைக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல..
சாம்பசிவம், “சரி நான் பார்த்துக்கிறேன் என்றவர் கார்த்திகேயனுக்கு போனை போட்டு மச்சான் உங்க அக்கா அங்க வரா அவ எது பேசினாலும் பட்டுன்னு அவளுக்கு சாதகமா பேசிட போற நான் ஒரு அரைமணி நேரத்தில் வரேன்..
சரிங்க மாமா என்ன பிரச்சினை?
நான் நேர்ல வரேன் மச்சான் என்று போனை வைத்து விட..
இரண்டு நாள் இருந்த சந்தோஷம் வடிந்தது போல் வீட்டிற்கு சாப்பிட வந்தவர் அமர..
என்னாச்சுங்க..
ஒன்னு இல்லம்மா அக்கா வராளாம் என்னாச்சுங்க ..
ஒன்னு இல்ல வரட்டும் இரு பார்த்துக்கலாம் என்றவர் சோர்ந்து போய் படுத்து விட..
காலமோ அதெப்படி அதற்குள் சந்தோஷப்படலாம் என்று சிரிக்க…
வந்து சாப்பிடுங்க என்று அம்சா அழைத்தும் கார்த்திகேயன் காதில் வாங்கவே இல்லை..
ஏங்க..
வேண்டாம் ம்மா ..
ஏங்க நேரமாச்சு மதிய சாப்பாடே சாய்ந்திரம் வந்து இருக்கீங்க..
விடு ஓரே நேரமா நைட் சாப்பிடுறேன் என்று சொல்ல
இல்ல இல்ல இது சரிவராது என்றவர் அவருக்கு டிபன் போல செய்து தந்து சாப்பிட வைத்து இருந்தார்..
வருபவள் என்னென்ன பேசப் போகிறாள் என்று நினைக்க இங்கே பிரச்சினைகள் பெரிசாகி விடக்கூடாது என்று சாம்பசிவம் யோசித்து வர… பூம்பனியோ நம்மால் எத்தனை பேரிடம் பதில் தரவேண்டியது இருக்கிறது இப்படியான வாழ்வு தேவையா என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
நவிலன், “அம்மு ரொம்ப நேரமா ரெஸ்ட் ரூம் ல என்ன பண்ணுற என்றதும் தான் வெளியே வந்து நவிலனை பார்க்க..
நாம ஒரு வாரம் வெளியே போகலாம் பனி எனக்கு கொஞ்சம் ரெப்ரஷ் வேணும் என்றதும் வாய்விட்டு சிரித்து விட்டாள் பனி..
என்னடி சிரிப்பு..
அப்ப காலம் பூரா இப்படி அடிக்கடி போக வேண்டி இருக்கும்
ஏனாம்..
உங்ககிட்ட என்னைய பத்தி பேசி உங்களை சங்கடப்படுத்தவும் மன உளைச்சல் தரவும் நிறைய பேர் இருப்பாங்க நவி..
எனக்கு வெளி ஆட்களை பத்தி எந்த கவலையும் இல்லடா அக்காவை தான் ஒதுக்கவும் முடியாது அவ பேசுவதை கேட்கவும் முடியாது..
புரிஞ்சா சரி நவி..
எல்லாம் எனக்கு புரியும் போடி பேக் பண்ணி வை நாம நைட் கிளம்பலாம்..
என்ன நைட் ஆ..
ஆமா..
எனக்கு வேலை இருக்கு..
யாரோ வேலைக்கு போலன்னு சொன்னாங்க..
எனக்காக என் புருஷன் ஒரு விஷயத்தை செய்யும் போது அதை சரியாக கொண்டு போகனும் இல்ல என்றவளை விழி விரித்து பார்த்தவன் அம்மு என்று எழுந்து அவள் அருகில் வர..
என்ன என்ன வேணும் என்று பதறி இரண்டடி தள்ளி நிற்க..
என்னடி உனக்கு பிரச்சினை எப்ப பாரு நடுங்கி சாகுற..
அவள் சொன்ன வார்த்தையில் நொந்து தான் போய் இருந்தான்..
தொடரும்