• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
எவ்வளவு நேரம் தூங்கினாளோ?
அங்கு வேலை செய்யும் பெண் அவளை எழுப்பியதும் தான் எழுந்தாள்.

"நேரம் ரெண்டை தாண்டிட்டுது... சாப்பிட போகேலயா..?" என்றாள்.

ஆச்சரியம் தான்.. அங்கு வேலை செய்பவர்களுக்கு யார் எப்போது சாப்பிடச் சொல்வார்கள் என்றெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இருக்காது.


இவள் எப்படி தன்னை கவனித்தாள் என்றே தோன்றியது.
அவளுக்கும் பசி தான் இருந்தாலும் சாப்பிடும் மனநிலை தான் அவளிடம் இல்லை.
போகவேண்டும் என பதிலுரைத்து விட்டு, கன்டீன் சென்றாள்.

டீ வாங்கி கொண்டு ஒரு இடம் பார்த்த அமர்ந்தவள், டீயை ஒருமிடர் வாயில் சரித்தவளால் அதை விழுங்க முடியவில்லை.

அவ்வளவு வலி எடுக்கும் போது எப்படி அருந்த முடியும் என்று முன்னரே யோசித்திருக்க வேண்டும்.
அதே இடத்தில் அதை வைத்து விட்டு வந்து விட்டாள்.

ரவி சென்றது பல எண்ணங்களில் மிதந்தடனுக்கு, தன் ஆத்திர புத்தியால், அவளை தண்ணீர் கூட குடிக்க முடியாமல் செய்து விட்டோமே என்ற குற்றவுணர்வு குடைய, எழுந்து அவளை பார்க்க விரைந்தான்.



அங்கு எங்கும் அவளை காணாது தேடியவன், யோசனையுடனே அவ்விடத்தை வலம் வந்தவன் பார்வையில் அகப்பட்டாள், கசங்கிய மலராய் மூலையின் ஓரத்தில் மூட்டையோடு மூட்டையாய் தூங்கிக்கொண்டிருந்தவள்.

அவனுக்கு தெரியும்... தான் தான் அவளது இந்த நிலைக்கு காரணம் என்று. காரணுமே அற்று தன்மேலே கோபம் உண்டானது.



'சரி கொஞ்சம் தூங்கட்டும், எழுந்தால் சரியாகிடுவாள்.' என நினைத்துத் திரும்பிவிட்டான்.

சில மணிநேரம் கடந்திருக்க, மீண்டும் வந்தவன், இன்னமும் அவள் எழாமல் அதே நிலையில் இருப்பதை கண்டது, சாப்பாட்டு நேரமும் கடந்து அவள் எழாமல் இருக்கவே,


அங்கு வேலை பார்க்கும் பெண்ணிடம், அவளை சாப்பிட எழுப்பி விடும்படி கூறினான்.
கன்டீன் சென்றவள் பின்னே, அவளுக்கு தெரியாமலே அவளை பின் தொடர்ந்தான்.

டீயை வாங்கியவள் முழுங்க முடியாமல் அதை அங்கேயே விட்டு விட்டு வந்ததை பார்த்தவன், ஏதோ போல் இருக்க, வந்த வழியே திரும்பி விட்டான்.


அன்றைய பொழுதினை நெட்டித் தள்ளியவளுக்கு, மணி ஆறென்றானதும் பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.


பஸ்சுக்காக காத்திருந்தவள் முன் பைக்கை கொண்டு வந்து நிறுத்திய ரவி,

"போலாம் துஷி ஏறுங்க.." என்க.

"இல்லண்ணா... நான் இங்கயே நின்டு ஏறுறன் நீங்க போங்காே." என்றாள் அவனை தவிராக்கும் விதமாய்.

"என்ன புதுசா...? வா ஏறு!" என்றான் ஒரு வித கண்டிப்போடு.


"இல்லண்ணா இண்டைக்கு அசதியா இல்ல. நின்டுட்டே போறன்.."

"ஏன் நீ இப்பிடி பண்றா என்டு தெரியுது துஷா." என்றான் ஏதோ அறிந்தவன் போல்.

அவன் பேச்சில் அதிர்ந்தவளாய் அவனை ஏறிட,



"இன்டைக்கு சார் ஒரு மாதிரி பேசினதால தானே! அவர் பிழையா எதுவும் சொல்லிருக்க மாட்டார் துஷா.
அதுவுமில்லாம யார் பர்சனல் விசயத்திலையும் சார் தலையிர்றது இல்லை.


வேலை நடக்கேல என்டதால அப்படி சொல்லி இருக்கலாம். அத விட்டுட்டு நீ ஏறு" என்றான்.

அவள் அமைதியாக நிற்கவும்


"உனக்கு என்மேல அந்த மாதிரி ஐடியா இருக்கா?" என்றான் வர்மன் அவளை கூரிய பார்வை பார்த்து.
இன்னும் அதிர்ந்து விழித்தவள் கண்கள் கலங்கியது.


"இதை கேட்டதும் கஷ்டமா இருக்கா... எங்களுக்குள்ள அப்பிடி இல்லை.. பிறகு ஏன் அவர் பேச்சு உன்னை பாதிக்குது? அவர் அதே அர்தத்தோடயே சொல்லி இருக்கட்டும்... நீ கருத்திலயே வாங்காத..


நீ ரிஜாக் பண்ணா தான், உன்மேல பிழை இருக்கிறதா நினைக்க தோன்டும்.
கண்டத யோசிச்சு மண்டையை குழப்பிக்காம ஏறு!" என்றான் சிறு பிள்ளைக்கு சொல்வதை போல.

அவளுக்கும் அவன் சொல்வது சரி என்று தேன்ற, அவனுடனே சென்றாள்.


இதையும் கண்ணாடி வழியே பார்த்தவன், அவர்கள் பேச்சு விளங்காததால்,

'அவ்வளவு சொல்லியும் அவனோட போறியா?' தனக்குள் கருவிக்கொண்டான்.

வீட்டுக்கு வந்தவள், வழக்கம் போல் குளியலறை புகுந்தவள், முடிந்த அளவிற்கு முகத்தை சாதரணமாக வைத்து வெளியே வந்தவள்.

"சைலு இண்டைக்கு ஒரு நாள் நீ சமைச்சு சாப்பிடிறியா? அவ்ளோ அலுப்பா இருக்குடி! நான் கொஞ்சம் தூங்க போறன்." என்க.

"சமைக்கிறது பிரச்சினை இல்லடி.
ஆன்டிகிட்ட சொல்லிடலாம்... ஆனா நீ சாப்பிட்டு படுத்துக்கோ" என்க.

"இல்லடி இண்டைக்கு என்னோட ஒர்க் பண்ற பெண்ணோட பர்த்டே! வரேக்க தான் ட்ரீட் வைச்சா... வயிறு புல்லா சாப்பாடு." என்று தனது கட்டிலில் படுத்து கொண்டாள்.

அவள் எவ்வளவு தான் சாதரணமாக இருப்பது போல் காட்டி கொண்டாலும், அவள் செயற்பாடுகள் வித்தியாசமாக இருக்கவே, சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள்.


கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தாலும், தைரியமாணவள்.
இன்று முற்றிலும் எதிர் மறையாகவே தெரிநனதாள். தான் அறியா ஒன்று நடந்திருப்பதாகவே தோன்றியது.
அவளாக சொல்வாள்.. அப்போதே தெரிந்து கொள்ளலாம் என நினைத்தவள் தனது வேலையில் முழ்கினாள்.






வழமைக்கு மாறாக தாமதமாகவே வீடு வந்தான் ரதன்.



அவனுக்காக காத்திருந்த வசந்த சோபாவிலேயே தூங்கி விட்டிருக்க,

அவரை எழுப்பியவன்,


"நித்திரை வந்தா அறைலே போய் படுக்க வேண்டியது தானே!" என்றான்.

"நீ வருவ என்டு இருந்தன்.. அப்பிடியே நித்திரையாகிட்டன் போல.
அது இருக்கட்டும்... நீ ஏன் லேட்....?" என்றாள்.

அதை எப்படி அன்னையிடம் அவன் கூறுவான்.
தன்னால் ஒரு பெண் காயப்பட்டதையும், அவள் துடித்ததை விட இரண்டு மடங்கு தான் துடித்ததையும்.


அதனால் தான் என்ன செய்வது என்று அறியாமல், வேலையிலும் கவனம் ஓடாமல் அவளின் நினைவால் வருந்தி, அதே யோசனையில் வீட்டையும் மறந்து அங்கேயே இருந்தும் விட்டான்.
திடீர் என்று காவலாளி தான் வந்து சிந்தை கலைத்தான்.

"அது .......... கொஞ்சம் வேலைம்மா. அது தான் நேரம் போச்சு.


நான் தான் லேட் என்டா, நீங்களும் ஏன் இருந்தனீங்கள்?
நான் சின்ன பிள்ளை இல்லம்மா.... இரவு ஒரு மணி ஆனாலும் எனக்கு வரத்தெரியும்" என தாயை கடிந்து.

"நான் படுத்தா.. யாரு சாப்பாடு போடுறது...?


"பசிச்சா நானே சாம்பிடுடன்." என்றான் தர்கம் புரிவதைப்போல்.

"அது தான் தெரியுமே! ஒரு நாள் தான் உடம்பு சரியில்ல என்டு, வேலுட்ட உனக்கு சாப்பாட்ட போட்டுட்டு தான் படுக்க விடோணும் என்டு சொல்லிட்டு படுத்தன்..


நீ என்ன பண்ண? சாப்பாடு வேண்டாம்... பால் மட்டும் குடுங்க என்டு சொல்லிட்டு, அத கூட குடிக்காம படுத்தட்டியாமே! அடுத்த நாள் வேலு செல்லித்தான் தெரிஞ்சுது.

இதுக்கு தான் நான் இல்ல என்டா...." என்று கூறவந்தவர்,

" வேண்டாம் உனக்கு தான் அந்த பேச்சு எடுத்தாலே பிடிக்காதே. சரி குளிச்சிட்டு வா! சாப்பாடு எடுத்து வைக்கிறன்." என்றவரை தடுத்தவன்.


"வேண்டாம்மா.. எனக்கு பசி எல்லாம் இல்லை. வர்ற வழியில சரியா பசிச்சிது. வெளியவே சாப்பிட்டு வந்திட்டன்." என பொய் கூறியவன்,


"பால் மட்டும் எடுத்து வைய்ங்காே.... நான் வாறேன்."

"எடுத்து வைக்க சொல்லிட்டு நித்திரையாகிடாத... வந்து குடிச்சிட்டு படு!" என்று கிச்சன் சென்றவர்,

பாலை சூடாக்கி, ஒரு டம்ளரில் ஊற்றி, அதை சாப்பாட்டு மேசை மீது வைத்து விட்டு, அவனுக்காக காத்திருந்தார்.

குளித்து விட்டு படி இறங்கி வந்து, அவரருகிலிருந்த இருக்கையில் ஒன்றை இழுத்து அமர்ந்து, பாலை அமைதியாகப் பருகியவன், தன் வேலை முடிந்ததென்று மாடி ஏறிச் சென்று விட்டான்.

இவை எல்லாமே புதிது தான் வசந்தாவுக்கு.



வாடிய முகத்துடன் வந்தவனை ஏற்கனவே கண்டு காெண்டார் தான். வேலை களைப்பில் தான் அவன் அப்படி நடந்து காெள்கிறான்.

குளித்தால் சரியாகி விடும் என நினைத்தால், குளித்து வந்தவன் முகத்திலும் தெளிவில்லை.


பாலினை அருந்தும் போதும் அமைதியே உருவாய் இருந்தவன் சிந்தை இங்கில்லை. நீண்ட நேரம் தனக்காக வசந்தா விழித்திருந்தால், அவரை தூங்குவதற்கு அனுப்பிய பின்னர் தான், எப்போதுமே அவன் தூங்கச் செல்வான்.



இன்றோ அனைத்துமே தலைகீழாக இருக்க, குழம்பிப்போனார்.


"என்னாச்சு இவனுக்கு? எதுவுமே என்னட்ட ஒழிக்க மாட்டானே..!
என்ன பிரச்சினை என்டாலும், இப்பிடி செய்தா சரியாகுமா? அப்பிடி செய்தா பிழையாகுமா என்டு, என்னட்ட தானே ஐடியா கேட்பான்.

நானே எத்தனையோ தடவை, உனக்கு சரி என்டு படுறத செய்! என்டு சாென்னாலும்,
உங்கட அனுபவத்துக்கு எதை செய்தா சரியா இருக்கும் என்று சொன்னா போதும் என்டு என்கிட்டையும் கருத்து கேப்பான்.

இன்டைக்கு இப்பிடி இருக்க என்ன காரணம இருக்கும்?" என சிந்தித்தவர்,

"சரி அவனாவே சொல்லுவான். அது வரைக்கும் எதுவும் கேக்க வேண்டாம்." என்று ஒரு முடிவுக்கு வந்தவர் தனதறைக்குள் சென்றார்.





பனி புகாரை போர்வையாக்கி இருந்த இராமகள், சூரியக் கயவனின் துயிருரியும் பார்வையில், அந்தப் போர்வையோ சிறுது சிறிதாக விலக்கி, அவனுள் தன்னை தொலைத்து கொண்டிருந்த ரம்மியமான காலை பொழுதது.


கட்டிலில் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருந்தாள் துஷா.

எழுந்ததும் நேரத்தை அளந்து விட்டு துஷாவை பார்த்தாள் சைலு. அவள் இன்னும் எழும்பாமல் இருக்கவும்.

'நேரத்த மறந்து இப்பிடி நித்திர காெள்ள மாட்டாளே! சரி ஏற்கனவே நேரம் போச்சு... இவ எழும்பினா, பாத்ரூமுக்கு துண்டு போட்டுடுவா..
அதுக்குள்ள நாம போயி, என் வேலைய முடிப்பாம்: என நினைத்தவள்,


எங்கே அவள் எழுந்து விட்டால், தன்னால் நேரத்தோடு தயாராக முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில், வேகமாக உள்ளே நுழைந்தாள்.



தன் வேலைகளோடு, குளித்து தயாராகி வந்தும் அவள் எழாமல் இருக்கவே, யோசனையோடு,

போர்வையை விலக்கி, நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.

எந்த அறிகுறியுமே தென்படவில்லை.

"ஏய் எழும்பு..." என்றவள். அவள் எழவில்லை என்றதும்.


"துஷா.." என்றவளது பெருத்த அலறலில் கண் வழித்தவள்.

"எரும..." என சினந்தவள்,


"எதுக்கு பன்னி காதுக்க வந்து கத்தின?" என்றாள் அவள் கத்தலில் அடைத்த காதை குடைந்த படி.

"ஆ... முகூர்த்த நேரம் நெருங்கீட்டுதாம்., பொண்ண கூட்டிட்டு வரச்சொல்லி, ஐயர் சத்தம் போடுறாராம்.


எழும்பி தயாராகு..... மாப்பிள்ளை ஏங்கிட்டு இருக்காரு.." என்றாள் நக்கலாக.

"காலங்காத்தால உயிர எடுக்காம அங்கால போ.." என கோபமானவளை புரியாது பார்த்த சைலு,

"என்னடி..! இப்பிடி சொல்லுற? நேரத்தை பாத்தியா...? என்றாள் ஆச்சரியம் காட்டி.
கடந்த ஒருவார காலமாக, பரபரப்பாக இயங்கியவள், இன்று அலட்டிக் காெள்ளாது இருந்தால் ஆச்சரியப்படாமல், என்ன செய்வது.

அவளுமே அறிவாள் காலதாமதம் என்று.

சைலுவே எழுந்து விட்டால் என்றால், என்ன நேரம் என்று கூடவா துஷா அறிய மாட்டாள்.

வழமை போலவே அந்த நேரத்திற்கு எழுந்து விட்டாள்.

ஆனால் வேலைக்கு செல்லத்தான் பிடிக்க வில்லை.
எழுந்தவள் கழுத்தினைத்தான் முதலில் ஆராய்ந்தாள்.

வலியில்லை.... நேற்றைய ரதனின் செயலை நினைத்தவளுக்கு, வேலையை விட்டு நின்றால் என்ன என்றே தேன்றியது.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லையே!



'நானாவே நின்டா தானே நஷ்ட ஈடு தரவேணும்..
அவனாவே நிப்பாட்டிட்டா....
நல்ல ஐடியா என தனக்குத்தானே சபாஷ் போட்டவள், அதை இன்றே செயற்படுத்த நினைத்தாள்.

என்ன தான் தலை கீழாக நின்றாலும், அது மட்டும் நடக்காது என்பதை, பாவம் அவள் அறிய வாய்ப்பில்லை.

"ஏய்! உன்னை தான்! எழும்பி ரெடியாகு... எனக்கு நேரமாகுது." என்றாள் சைலு அவசரப்படுத்துவதை போல்.


'கொஞ்ச நேரத்தில ரெடியாவம்டி." என்றாள் கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்தவளை படுத்திருந்து பார்த்தவாறு.

"என்னா மேடம்! ஆற, அமர இருந்து பாக்கிறீங்க. வேலைக்கு போகேல போலயே?"

"போகாேணும்டி.... போவம்." என்றாள் சலிப்பாக.

"அப்ப இண்டைக்கு அந்த நெட்டாங்கு வாய்க்கு உன் சுய மரியாதை தாண்டவம் ஆடபோகுது என்டுற...
நீ என்னமாே செய்! எனக்கு நேரம் போகுது.... நான் வாறன்." என்று அவள் கிளம்பிவிட.

துஷாவோ முடிந்த அளவு கால தாமதமாகவே வேலைக்குச் சென்றாள்.

வரவேட்டில் தன் குறிப்பை பதித்து விட்டு, தனது பகுதிக்குள் நுழைந்ததும் தான்

"மேடம்.. சார் உங்கள நிறைய தடவ வந்து தேடினார்" என்றாள் அங்கு நின்ற பெண்ணொருத்தி.


இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா! என்றிருந்தது அவளுக்கு.


இருந்தாலும் எங்கு எல்லோர் முன்பும் திட்டி விடுவானோ என்ற பயமும் இல்லாமல் இல்லை.


'பேசாம அவன் அறைக்கே போயி, பேச்சை வாங்குவோமா?' என நினைத்தவள்,

'வேண்டாம்... அவன் தேடினதா தானே தகவல். தேவை என்டா வரட்டும்.' என நினைத்தவள், தனது வேலையில் இறங்க.
சிறிது நேரத்தில் வர்மன் அவளை அழைத்ததும்.

"என்னண்ணா? சொல்லுங்க." என்றாள்.

"ஏன் லேட்?" என்றான் எடுத்ததும் குரலில் அழுத்தத்தை கூட்டி.

அவள் பதில் கூறாமல் அமைதி காக்க.

"அண்ணனா ஒன்டும் நான் கேக்கேல. மேனேஜர் என்ற முறையில் கேக்கிறன். தகுந்த காரணம் வேணும்.. சொல்லு" என்றான் வார்த்தையை கடுமையாக்கி.

இதை சிறிதும் எதிர் பார்க்கவில்லை அவள்.
தாமதமாக வந்தால் ரதன் தான் காரணம் கேப்பான்,
அதற்கு நான் இப்படித்தான்,

விருப்பமில்லை என்றால் வேலையால் நிறுத்தி விடுங்கள் என்றும், இது பலிக்க வில்லை என்றால், இன்னும் சில திட்டங்கள் தீட்டலாம். என நினைத்திருக்க,


முதல் திட்டமே தவுடு பொடியானது போல் இருந்தது துஷாவிறகு.

"அண்ணா அது ... வந்து..... உடம்பு சரியில்ல... அதால தான்." என்று ஏதோ இழுத்தடித்து சொல்லி விட்டாள்..

"உடம்பு சரியில்ல என்டா... லேட்டாகும் என்டு அறிவிக்கோணும்...


பார்க்..., ப்பீச்சுக்கு போறா மாதிரி, நினைச்ச நேரத்துக்கெல்லாம் ரெடியாகி வரமுடியாது. இது முதல் தரம் என்டுறதா சும்மா விடுறன்.

மறந்துட்டன்..... குறிப்பிட்ட நேரம் வரை வேலை பாக்கோணும்.... இப்ப உடம்புக்கு சரியாச்சு தானே?"

அவனது கோபத்தை பார்த்தறியாதவள், சொல்வதியாது ஆமென அவள் தலையசைக்க,

"குட்...! நீங்கள பிந்தி வந்ததால, அதுவும் எங்களுக்கு அறிவிக்காமல்." என்று அறிவிக்காமலில் அழுத்தி கூறியவன்,

"லேட்டா வந்ததால, அந்த நேரத்த கவர் பண்றது போல, ஈவ்னிங்க் நின்டு வேலை செய்து குடுதனதுத் தான் போகோணும்." என்றவன், தனது வேலை முடிந்ததென்று சென்று விட்டான்.

துஷாவுக்கோ ஐயோ என்றானது.

பிள்ளையார் பிடிக்க போனா, ஏதோ வந்தது போல...


'பேசாம சைலு சொல்லேக்கயே வெளிக்கிட்டிருக்கலாம்...

தேவையில்லாம அண்ணாவையும் கோவபடுத்திட்டன். ச்சே....

'அவர் நெட்டாங்கு பக்தன் என்டு தெரிஞ்சும், இதை யோசிக்காம விட்டுடமே!


எப்பவும் வேலையில சரியா இருக்கோணும் என்டுறவர், சரியா இல்லாட்டி, நான் தான் திட்டுவன் என்டு ஒரு வாட்டி சொல்லி இருக்கலாம்..

இப்ப பின்நேரம் வேற ரண்டு மணித்தியாலம், கூட வேலை பாக்காேணுமா? ஐயோ!!." என்று அலுத்துக்கொண்டவளுக்கு, எங்கே முட்டிக் காெள்வதென்றிருந்தது.



இரவு தூக்கம் தொலைத்தவன், காலையில் வேக வேகமாக எழுந்து, எல்லோருக்கும் முன்பு வந்து தனதறையில் புகுந்து காெண்டான்.

நேரம் ஆக ஆக ஒவ்வொருவரின் வருகையினையும் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு,
நேரம் கடந்தும் அவள் வரவில்லை என்றதும் பயம் தொற்றிக் கொண்டது.

'அவளைப் பற்றி யாரிடம் விசாரிப்பது?' எனத் திணறியவன், ரவிக்கு போன் செய்து விசாரித்தான்.

அவன் தனக்கு எதுவும் சொல்ல படவில்லை என்றதும்.


"ஏன் உன்னோட வேலை என்ன என்டுறது மறந்துட்டுதா வர்மன்?
ஒருதர் வரேல என்டா... ஏன் எதுக்கு என்ட காரணம் இவ்வளவு நேரத்துக்குள்ள அறிவிச்சிருக்கோணும் என்டுறத நான் சொல்லித்தான் தெரியோணுமோ...? என்றான் கோபமாக.


"சார் இது முதல் தரம் தானே! நாளைக்மு துஷா வந்ததும் அதை திருத்த சொல்கிறன்." என்றதும் ஆத்தரம் உண்டாக..

"என்ன நீங்க...? எந்த பொறுப்பில இருக்கிறீர்கள் என்டுறது நினைவு வைச்சு நடக்கிறீங்களா...?
எல்லாம் நான் தான் சொல்லி தரோணும் என்டில்ல என்டு நினைக்கிறேன்." என்று போனை வைத்தவன்,

அவனுக்கு போபமெல்லாம், இவ்வளவு நேரமாகியும் அவளை இன்னமும் காணவில்லை.

நேற்றைய நிகழ்வுகளின் தாக்கத்தால் உடம்புக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டதோ....! அதை ஆராயும் பொறுப்பில் இருப்பவன் பொறுப்பற்று நடந்து கொள்வது தான்..

பல தடவைகள் அவளது பொறுப்பில் இருக்கும் பகுதிக்கு சென்று வந்தான்.

அப்படி வரும் போது தான் அவளை இடையில் கண்டான்.
அவள் முகத்தின் தெளிவை கண்டதும் தான் நின்மதியே வந்தது.

போய் பேசலாமா? என்றிருந்த மனதை அடக்கியவன்,

வேண்டாம்.... இப்ப தான் வாறாள்..., என்னை கண்டா, இருக்கிற மனநிலை குழம்பாடும்' என்று ஒதுங்கிக் கொண்டான்.

வர்மனின் இயலாமை ஆத்திரமாம துஷாவிடம் திரும்பியது. பின்னே இன்னொருவரால் காரணமே இன்றி, அவன் பாதிக்கப் படுகிறான் என்றால், அந்த கோபம் நிச்சயம் அதற்குரியவரிடம் பிரதிபலிக்கத் தானே செய்யும்

சைலுவிற்கு போன் செய்தவன், துஷா என்கென கேட்டான்.


"அவள் நான் வர்ற வரைக்குமே படுத்திருந்தாள். காரணம் தெரியேல...
ஆனால் வேலைக்கு போகோணும் என்டு மட்டும் சொன்னாள்" என்ற பதில் வரவும்,

"சரி... நான் பிறகு கதைக்கிறன்." என்று வைத்தவன்,
சிறிது நேரம் கடந்து அவள் பகுதிக்கு செல்லும் போது அவள் நிற்கவும், இருந்த கோபத்தில் அவளை ஏசி விட்டான்.

வேலையும் அதிகமாக இருக்கவே, கடமை சாப்பாடு என்று நேரம் போனதே தெரியவில்லை.


மாலை ஆறு மணியளவில் அனைத்து பெண்களும் சென்று விட, துஷா மட்டுமே அங்கு ஒருவளாகடும், மற்றையவர்கள் ஆண்களாகவும் நின்றனர்.

இரவானதும் நடுக்கம் தொற்றிக் கொண்டது. இரவில் வெளியில் திரிந்து பழக்கமில்லாதவள், அதுவும் புது ஊர் வேறு. வர்மனும் சென்று விட்டான்.


இதையே நினைத்து கொண்டிருந்தால் வேலையில் ஈடுபட முடியாது.
ஆண்டு இறுதி நெருங்குவதால் ஸ்டாக் எடுக்கவேண்டும்.

பழைய மேற்பார்வையாளர் கோப்பும் அவள் தலையில் வந்து விழ, அதிலே எட்டு மணியை கடந்து ஒன்பது மணியானதை அவள் கவனிக்கவில்லை.

மணியை பார்த்தவள்,

"ஐயோ!!.... எனக்கு எட்டுக்கே வேலை முடிஞ்சுதே!" எல்லாவற்றையும் அவசரமாக அடிக்கியவள்,


கைபையுடன் வரவேட்டில் பதிந்து விட்டு, விறு விறு என நடந்து கடையின் முன் நின்றவள், பஸ் வராமல் போகவே,


'இங்க நின்டா இரவில இந்த வழியா பஸ் வராதோ!' என நினைத்து.
மெயின் பஸ் தரிப்பிடம் நடக்கலானாள்.

இடையில் ஆண்குரல் கேட்ககவே திரும்பி பார்த்தவள், இரண்டு பேர் இவளை பின் தொடர்ந்து, கேவலமாக ஏதோ கேட்டபடி அவளை நெருங்கவும்,

அவர்களை கண்டு பயந்தவள், ஓடலாம் என்று ஓட ஆரம்பிக்கவும், அவள் கைப்பையை ஒருவன் பிடித்திழுத்தான்.