பெங்களூர்...
வசந்தி வந்தவனைப் பார்த்து ஒருகணம் பேச்சற்று நின்று போனாள்.
"இனிய திருமணநாள் வாழ்த்துகள் அக்கா" என்ற கண்ணனின் குரலில், ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, பார்வையை மறைத்த கண்ணீரை அவசரமாக தட்டிவிட்டவளாக,
"தேங்க்ஸ்டா கண்ணா, நல்லா இருக்கிறியா? இந்த அக்கா ஞாபகம் இப்பவாச்சும் வந்துச்சே" என்று தம்பியை வரவேற்றாள்.
"நான் வராமதான் இருந்தேன் அக்கா, மற்றபடி மறந்தால் எப்படி உனக்கு தவறாமல் பரிசு அனுப்புவேன், சொல்லு?"
"பரிசுப் பொருளைப் பார்த்தால் அது உன்னைப் பார்க்கிறது போலாகுமாடா? அப்படி நான் என்னடா தப்பு பண்ணிட்டேன்?"
ஒருகணம் மௌனமானவன், "அக்கா, ப்ளீஸ் நான் எதைப்பற்றியும் இப்ப பேச வரலை. உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோனுச்சு, அதுக்கு ஏத்தமாதிரி உங்க வெட்டிங் டே வரவும் கிளம்பி வந்துவிட்டேன், என்றவன் தொடர்ந்து, “ஆமா அத்தான் இன்னும் எழுந்துக்கலையா அக்கா " என்று கேட்டபடி சோபா ஒன்றில் அமர்ந்தான் கண்ணன்.
"பெங்களூர் குளுரில் இந்த நேரத்தில் யார் எழுந்துக்குவாங்க?" நீ வேணும்னா போய் கொஞ்சம் நேரம் தூங்குடா" என்றபோது
சீனு காப்பி கோப்பைகளுடன் வந்தான். வசந்தி ஒரு கோப்பை எடுத்து தம்பியிடம் கொடுத்தாள்.
"வேண்டாம் அக்கா, நான் இன்னும் பிரஷ் பண்ணலை. டிராவல்ல நல்லா தூங்கிட்டேன். நான் ஜாக்கிங் போய்விட்டு வந்து குடிக்கிறேன்" என்று அறையை நோக்கி நடந்தவனிடம்,
"நாலு நாள் தங்கிட்டுதானே போவே?? வினவினாள் வசந்தி
"நோ அக்கா நாளை நான் வேலையில் இருக்கணும். அதனால் ஈவ்னிங் கிளம்பிடுவேன்" என்றவாறு உள்ளே சென்று மறைய,
மனதில் தோன்றிய வருத்தத்தை அடக்கிக் கொண்டு தம்பிக்கு பிடித்தவற்றை சமைக்க எண்ணியவளாய் சமையலறைக்கு சென்றாள் வசந்தி.
☆☆☆
சென்னை
அதே நேரம்.. சத்யபாரதிக்கு அன்று நிறுவனத்திற்கு செல்லவே பிடிக்கவில்லை. படுக்கையைவிட்டு எழ மனமின்றி சிலகணங்கள் புரண்டவளுக்கு அவளை நம்பி கிருஷ்ணா வேலைகளை ஒப்படைத்திருந்ததால் வேறு வழியின்றி எழுந்து தயாரானாள்.
அவள் உடைமாற்றி வெளி வரவும் ரூபா சாப்பிட வருமாறு குரல் கொடுத்தாள். அதற்குள் அண்ணன் அண்ணிக்கு வாழ்த்து சொல்லிவிட எண்ணி, கைபேசியில் எண்களை அழுத்தினாள் சத்யபாரதி.
மறுமுனையில் அருணவ்தான் போனை எடுத்தான். "ஐ அத்த, எப்படி இருக்கீங்க?" என்றதும் சிரிப்பு வந்தது.
"ஏ... குட்டிப் பையா, நான் நல்லாயிருக்கேன். நீ என்ன இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலையா?? "
"ஸ்கூலுக்கு லீவு விட்டுட்ட அத்த" என்று கிளுக்கி சிரித்தான்.
அப்போது அருணவ் அருகில் வந்த கண்ணன் போனில் பெயரைப் பார்த்துவிட்டு ஸ்பீக்கரை ஆன் செய்து மருமகனை தூக்கிக் கொள்ள மறுமுனையில்..
சத்யபாரதி தன்னை மீறி சிரித்துவிட்டு, "அட வாலுப் பையா, சரி சொல்லு எதுக்கு லீவு விட்ட" என்றவளுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கியது.
கண்ணனின் முகத்தில் புன்னகை அரும்பியது. உதட்டில் விரல் வைத்து அக்கா மகனுக்கு, சொல்லாதே என்பதாய் சைகை செய்ய,
"ம்ம். .அத ..அத..சொல்லக்கூடாது, சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க" என்று மாமானை பார்த்தான் அருணவ்.
சத்யபாரதிக்கு சுவாரசியம் கூடி விட "அட , யாருடா அது என் மருமகனுக்கு ஆர்டர் எல்லாம் போடுறது??" சிரிப்புக் குரலில் சத்யபாரதி கேட்க, மாமனுக்கு பணிவதா அத்தையின் கேள்விக்கு பதில் சொல்வதா என்று குழம்பி பையன் முழிக்கையில். ..
அங்கே வந்த சித்தார்த் இருவரையும் பார்த்துவிட்டு, “டேய் போன்ல யாரு?" என்று மகனை அதட்டினான்.
தப்பித்தோம் என்பது போல,"அத்த" போன் பண்ணினாங்க அப்பா" என்று போனை தந்தையிடம் கொடுக்க...
சித்தார்த் மைத்துனனை கேள்வியாக பார்க்க, அவன் சைகையில், "தான் வந்திருப்பதாக சொல்ல வேண்டாம்" என்று கூறிவிட்டு அருணவ்வுடன் தோட்டத்திற்கு சென்றுவிட்டான்.
புரிந்தும் புரியாமலுமாக ஏதோ விளங்க, ஸ்பீக்கரை அனைத்து விட்டு கைப்பேசியில் காத்திருந்த தங்கையிடம் பேசலானான் சித்தார்த் "ஹலோ சொல்லுமா சத்யா", என்றதும்
" இனிய திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா, டிரஸ் பிடிச்சதா அண்ணா?
"பிடிச்சிருக்கு அதைத்தான் போட்டிருக்கிறேன். நல்லா செலக்ட் பண்ணிருக்கேம்மா. உன் அண்ணியை கையிலே பிடிக்க முடியலை. நீ கூட கிளம்பி வந்திருக்கலாமே மா? நல்லா இருந்திருக்கும். நீயும் போய் இரண்டு மாசமாகுதே" என்றான்.
"எங்க முதலாளி லீவுல போயிருக்கார் அண்ணா. என்கிட்டதான் முக்கியமான பொறுப்பை ஒப்படைச்சிருக்கார். இரண்டு மாசம்தானே அண்ணா அதுக்குள்ள லீவு எடுத்தா நல்லாயிருக்குமா? நாலு நாளாவது தங்கறாப்ல வந்தால் தானே குட்டிப்பையனோட விளையாட முடியும் " என்றாள்.
சித்தார்த்திற்கு இப்போது ஓரளவுக்கு விஷயம் புரிந்தது. " அதுவும் சரிதான்மா, நாலு நாள் கூட தங்கலைன்னா அவன் அழுவான்”என்று சொல்லவும்
நினைவு வந்தவளாக, "இன்னிக்கு, அவன் ஸ்கூலுக்கு ஏன் போகலை அண்ணா? என்றதும் மைத்துனனின் எச்சரிக்கை ஞாபகம் வர,"அவனுக்கு என்னம்மா இப்படித்தான் பிறந்தநாள் வந்தாலும் லீவு போட்டுறான். நல்லா படிக்கிறதால ஒன்னும் பண்ணமுடியலைம்மா, இரு அண்ணிக்கிட்ட கொடுக்கிறேன்” என்று சமையலறைக்கு சென்றான்.
வசந்தி சமையலில் மும்முரமாக இருந்தாள். கணவன் போனை கொடுக்கவும், "நன்றி சத்யா, நான் அப்புறமா பேசுறேன் மா." என்று போனை அனைத்துவிட..
சத்யபாரதிக்கு அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி காணாமல் போயிற்று.
தனது வாழ்த்தை தெரிவிக்கும் முன்பாக, அண்ணி அப்புறமாய் பேசுவதாக சொல்லி தொடர்பை துண்டித்துவிட்டதில், தோன்றிய வருத்தத்தில் அழுகை வந்துவிட குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
சத்யபாரதிக்கு அண்ணன் அண்ணி குடும்பத்தினரிடம் இருந்து விலகியிருக்க எண்ணியதெல்லாம் மறந்து போயிற்று. தன்னை அண்ணி தவிர்க்கவே அப்படி சொன்னதாக அவளுக்கு தோன்றியது. சிலகணங்கள் கண்ணீர் சிந்தியவள், ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, முகத்தை கழுவி அழுதது தெரியாதபடி ஒப்பனை செய்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள். ரூபாவிற்கு என்னவென்று புரியாதபோதும் ஒன்றும் கேளாது பறிமாறினாள். அறைகுறையாக சாப்பிட்டு எழப் போனவளை வற்புறுத்தி சாப்பிட வைத்து அலுவலகம் அனுப்பிவிட்டு ஒரு காரியம் செய்தாள் ரூபா.
☆☆☆
அலுவலகம் வந்தடைந்த போது அவளுக்கு அண்ணன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று அவளது கைப்பேசிக்கு வந்தது. அதைப் பார்த்ததும் அத்தனை நேரம் இருந்த வருத்தமெல்லாம் நீங்கி மனம் லேசாயிற்று. சிலகணங்களில் அண்ணியின் கைப்பேசி அழைப்பு வர,எடுத்து வாழ்த்து சொன்னாள்.
"தாங்க்ஸ்டா சத்யா. சாரிமா, எதிர்பாராத guest வந்துட்டதால விருந்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன். அதான் சரியா பேசமுடியவில்லைடா. போட்டோ பார்த்தியா? எப்படி இருக்கு சொல்லுமா"
" சூப்பர் அண்ணி" என்றவள் அருணவ் குட்டிக்கு சரியா இருக்குல்ல அந்த டிரஸ்? "
"ஆமாடா, அவனுக்கு ஒரே சந்தோஷம், சரிடா நான் அப்புறமா பேசுறேன். மதியத்துக்கு சமைக்கணும் சரியா? "வசந்தி கேட்கவும்
" சரி அண்ணி, எனக்கும் நிறைய வேலை இருக்கு. இப்பத்தான் நான் ஆபீஸ் வந்தேன். பை அண்ணி" என்று பேச்சை முடித்தபோது உற்சாகமாக உணர்ந்தாள். அதே மனநிலையோடு கிருஷ்ணா சொல்லிச் சென்றிருந்த பணிகளில் மூழ்கிப் போனாள்.
உணவு இடைவேளையில் கிருஷ்ணா தொலைபேசியில் அழைத்து சிறிது நேரம் வேலை பற்றி கேட்டுவிட்டு, கடைசியாக "ஆமா நீ சாப்பிட்டியா?" என்று விசாரித்தான்,
"இதோ, சாப்பிடத்தான் கிளம்பினேன் சார்" என்றாள் அவசரமாக
"ம்ம்ம்...நீ சாப்பிட்டிருக்க மாட்டேனு தெரியும் பாரதி. வேலையை சாப்பிட்டு வந்து பாரு"என்றவன், "நான் ஈவ்னிங் மறுபடியும் கால் பண்றேன் பாரதி" என்று அவன் இணைப்பை துண்டித்த பிறகுதான் சேலை பற்றி அவனிடம் கேட்காமல் விட்டது நினைவிற்கு வந்தது. மாலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று சாப்பிடப் போனாள்.
ஆனால்...வீட்டுக்கு கிளம்பும் வரையிலும் அவன் அழைக்கவேயில்லை. அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. வீடு வந்தபிறகும் அவன் அழைக்காமல் போனது ஏன் என்று மனம் அதிலேயே உழல, அவளை எண்ணி அவளுக்கே கோபம் உண்டாயிற்று. இதென்ன பைத்தியக்காரத்தனம்? அவன் ஒரு பேச்சுக்காக சொல்லியிருக்கலாம். அல்லது அங்கே சூழ்நிலை எப்படியோ? அல்லது அது ஒன்றும் முக்கிய விஷயமாக இல்லாததால் விட்டிருக்கலாம். அவன் அழைக்காமல் போனதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் என்று தனக்குள்ளாக ஒரு முடிவிற்கு வந்தவள், மாலை சிற்றுண்டி முடித்தபின் ரூபாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு கிளம்பினாள் சத்யபாரதி..
அங்கே பெங்களூரில்..
அதே நேரம்... கண்ணன் அக்கா குடும்பத்தினரோடு கோயிலுக்கு சென்றான். அங்கே நல்ல கூட்டம், அர்ச்சனை முடிந்ததும் வசந்தி பிரகாரம் சுற்ற மகனோடு செல்ல, ஆண்கள் இருவரும் ஓரமாக நின்றுகொண்டனர்.
"சொல்லு மாப்பிள்ளை, என்ன திடீர் விஜயம்? " என்று சித்தார்த் பேச்சு கொடுத்தான்.
"உங்கள் எல்லாரையும் பார்க்கத்தான் அத்தான்." என்று புன்னகைத்தான்.
"நம்பிட்டேன், நம்பிட்டேன். இரண்டு வருஷம் வராமல் இப்ப வந்திருக்கியே, ஏதாவது விசேஷமா மாப்பிள்ளை?
"நிஜம் அத்தான்,அப்படி ஏதும் இருந்தால் உங்களுக்கு சொல்லாமலா அத்தான்? "
"பொண்ணு எதுவும் பார்க்கச் சொல்லட்டுமா மாப்பிள்ளை? வயசு ஏறிட்டு போகுதுல்ல? காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்கனும்ல??" சித்தார்த்தின் குரலில் கேலி இருந்தது.
"பொண்ணு பார்க்கிற சிரமம் எல்லாம் வைக்க மாட்டேன் அத்தான்" என்றவன் தொடர்ந்து ‘’நான் கொஞ்சம் செட்டிலாகணும் அத்தான். அப்புறம்தான் கல்யாணம்".
"ஓ..ஓ.. அப்படியா சங்கதி? நடத்து நடத்து... என்று கேலி செய்தவன், ஆனால்... உனக்கு இங்கே இருக்கிற சொத்துக்களை கவனிக்கவே இப்ப ஆள் வேணும் மாப்பிள்ளை. உன் மாமா குடும்பத்தோடு சென்னைக்கு போய்விட்டார். அவர் இனிமேல் முன்போல ஓடியாடி வேலை செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிவிட்டார். என்னோட யோசனையை கேட்டால் நீ பெங்களூர் வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டால் நல்லது" சித்தார்த் சொல்லிக் கொண்டிருந்தபோது..
பின் பகுதியை கேட்டபடி அங்கே வந்த வசந்தி, "நல்லா சொல்லுங்க அத்தான், நான் எது சொன்னாலும் கேட்கக்கூடாதுன்னு முடிவுல இருக்கான்" என்றாள் ஆதங்கத்துடன்.
கண்ணன் இருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று விளங்காமல் நின்றான்.