• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஆனந்தன் ஒரு சராசரியான ஆண்மகன்! பிற ஆண்களைப் போலத்தான் அவனுக்கும் வீடு வரும்போது மனைவி வரவேற்று, அவனது தேவைகளை கவனிக்க வேண்டும் என்று ஆசை!

அவன் சாருவின் அழகில் மயங்கி பிடிவாதமாக அவளை திருமணம் செய்து கொண்டான்! அவளது வேலையைப் பற்றி தெரிந்து தான் கைப்பிடித்தான்! சொல்லப்போனால் ஆரம்பத்தில் அது பெரிய பிரச்சினையாக அவனுக்கு தோன்றவில்லை!

"வீட்டுல தங்காத பெண்டாட்டியை கட்டிக்கிட்டா, இப்படித்தான்டா அவஸ்தை படணும் என்று சில சமயங்களில் முணுமுணுக்கும் விசாலாட்சியிடம் விட்டுக் கொடுக்காமல், மனைவிக்கு பரிந்து பேசி வாயை அடைத்து விடுவான்! சாரு அவனுக்கு எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை! ஒரு மனைவியாக, வீட்டு மருமகளாக எல்லாம் செய்தாள்!

திருமணம் ஆகி இந்த நான்கு வருடத்தில் இருவருக்குள் சிறு சண்டை கூட வந்தது இல்லை! இருக்குள்ளும் பிரியம் இருந்தது! விட்டுக்கொடுத்து போனார்கள்! இரவில் மகனைப் பார்த்துக் கொள்ளும் சிரமத்தைக்கூட அவனுக்கு கொடுக்கவில்லை!

ஆனால்...

அனிதா வீட்டிற்கு வந்த இந்த ஆறு மாதங்களில் ஆனந்தனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கிவிட்டது!

மனைவியின் இரவு பணி எப்போது வரும் என்று ஆவல் கொள்ளும் அளவுக்கு மனம் மாற்றம் உண்டாகி விட்டது!

அவன் வரும் வேளைகளில் தலையில் பூ (அது சாருபாலாவின் உபயம், சின்ன பெண், குழந்தை முதல் வைத்து வந்த பூவையும் பொட்டையும் ஏன் விடவேண்டும் என்று அவள் தான் அவளது உடையையும் கூட மாற்றினாள்)
வைத்து சிரத்தையாக அலங்காரம் செய்து கொண்டு அனிதா அவனுக்காக காத்திருப்பதில் சுகம் கண்டுவிட்டான்!

சாருபாலாவும் அனிதாவும் அழகில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல! சாருபாலா அலங்காரம் என்று சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டாள்! ஆனால் அனிதா அலங்காரம் செய்து கொள்ள சிரத்தை எடுப்பாள்! இருவரில் அவள் தனித்து தெரிந்தாள் எனலாம்!

இருவருமாக மாலை வேளைகளில், கோவில், அல்லது சினிமாவிற்கு, அப்படியே ஹோட்டலுக்கு, சில சமயங்களில் கடற்கரைக்கு, என்று அடிக்கடி வெளியே போய் வருவது, நிகழ்ந்தது! ஆரம்பத்தில் எல்லாமும் மனைவியிடம் தெரிவித்த ஆனந்தன், பிறகு வந்த காலங்களில் பாதி சொல்வதும் பாதி சொல்லாமலும் விட்டான்!

அனிதா வந்த புதிதில், ஒரு எல்லைக்குள் நின்று தான் ஆனந்தனுடன் பழகினாள்! அவள் மனதில் சந்திரனின் நினைவு கொஞ்சம் இருந்தது! சாருவும் ஆனந்தனும் ஒன்றாக வெளியே கிளம்பும் சமயம் அவளது மனம், தன் வாழ்வை எண்ணி ஏங்கும்! விசாலாட்சி அவளுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கவும், ஆனந்தனும் இயல்பாக பழகவும், அவளது எல்லையை மீறி,மனதில் பழைய ஆசைகள் துளிர் விட ஆரம்பித்தது! தனிமையில் சிந்திக்கும் போது அது குற்றம் என்று உள்ளூர உறுத்தும்! ஆனால் அது எல்லாமும், ஆனந்தனை கண்டுவிட்டால் விலகிப் போய்விடும்! தனக்காக பார்க்கப்பட்ட மணவாளன்! சாரு மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்த பங்களாவும்,
இந்த குழந்தையும் அவளுடௌயதாக இருந்திருக்கும்"
என்ற எண்ணம் மேலோங்க, சாருபாலாவின் மீது வெறுப்பு தோன்றத் தொடங்கியது! ஆனால் அதை அவள் நேரடியாக காட்டிக் கொள்ளவில்லை! மறைமுகமாக ஆனந்தனிடம் பேச ஆரம்பித்தாள்!

"பாவம் அத்தான் நீங்க, வீட்டுக்கு வந்தால் ஒரு வாய் காபி பலகாரம் கொடுக்க கூட, இந்த வயசான காலத்தில் அத்தைதான் செய்ய வேண்டியிருக்கிறது! அக்காவை நான் குறை சொல்றதா நீங்க நினைக்க வேண்டாம்! அவங்களுக்கு ஒரு கிளினிக் வைத்து கொடுத்தால் காலையில் போய்விட்டு இரவில் வீடு வந்து விடுவார்கள் அல்லவா? நீங்கள் ஏன் அப்படி செய்யவில்லை?" என்றாள்!

ஏற்கனவே அது குறித்து அவள் சாருவிடம் பேசி, அவளது பதிலையும் அறிந்திருந்ததால் தைரியமாக கேட்டு வைத்தாள்! எதிர்பார்த்தது போல, ஆனந்தனும்,

"என்ன அனிதா, நான் இதை சொல்லாமல் இருப்பேன் என்றா நினைக்கிறாய்? அவளிடம் கேட்டபோது,சொந்தமாக கிளினிக் வைப்பதற்கு இன்னும் சில வருடங்கள் போகட்டும், அதுவரை அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்வது தான் இப்போதைக்கு சரியாக இருக்கும்! பல்வேறு நிபுணர்கள், அங்கே வருவார்கள், அதிக அளவில் தெரிந்து கொள்ளலாம்! அத்தோடு பணம் சம்பாதிக்க என்று நான் மருத்துவம் படிக்கவில்லை! மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று முடித்துவிட்டாள்! நானும் மேலே வற்புறுத்தவில்லை!"

"அக்கா,நோக்கம் அப்படின்னா கல்யாணம் பண்ணியிருக்க கூடாது அத்தான்!" என்ன நான் சொல்றது சரிதானே?"

சரி என்று ஆனந்தன் எப்படி ஒப்புக் கொள்வான்! "அனிதா, நடந்து முடிஞ்ச விசயத்தை பத்தி பேசுறதுல என்ன பயன் ? நாம இப்ப கோவிலுக்கு வந்திருக்கிறோம்!, இறங்கி வா, சாமி கும்பிட்டதும் அப்படியே கடற்கரைக்கு போகலாம்! நாளை ஞாயிறு, அடுத்த வாரம் சாருவுக்கு பகல் வேலை! இன்னும் ஒரு வாரம் கழிச்சுதான் நாம் இப்படி வெளியே வர முடியும்! என்று அந்த பேச்சை மாற்றிவிட்டான்!

விசாலாட்சியும் மகனை கண்டிக்காமல், ஊக்குவிக்கவே செய்தார்! அவர் நினைத்ததும் இதைத்தானே? அவர்கள் வெளியே செல்லும் போது பேரனை அவர் பார்த்துக் கொள்வார்! மடியில் ஓட முடியாத பேரக் குழந்தையை பார்த்துக் கொள்ள தன்னால் முடியாது என்றவர், இப்போது பேரனுடன் விளையாட, அவனுக்கு சோறு ஊட்ட என்று எல்லாம் செய்தார்! மூன்று வயது பாலகனுக்கு பசிக்கு உணவு கொடுப்பதும், அவனோடு விளையாடுவதும் யாராக இருந்தால் என்ன? கொண்டாடும் இடத்தில் அது ஒட்டிக் கொண்டது!

சாருபாலாவுக்கு அந்த வாரம் பகல் வேலை! பிற்பகல் வீடு வந்து விட்டாள்! அன்று அவளுக்கு மனது கொஞ்சமும் சரியில்லை! காரணம் ஒரு நோயாளி எந்த கணமும் உயிர் போகும் தருணத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தார்! அன்று காலையில் அவருக்கு மிகவும் சீரியஸாகிவிட்டது! தீவிர சிகிச்சை பிரிவில் கொண்டு சேர்த்தார்கள்! ஆனாலும் அன்று இரவு வரை தாங்குமா என்று சொல்ல முடியாத நிலை! அவருக்கு என்று சொந்தமும் யாரும் இல்லை! வக்கீல் ஒருவர் தான் அவ்வப்போது வந்து செல்வார்! அவருக்கு சாரு மீது மகள் போல மிகுந்த பாசம்! மகளே என்று தான் அழைப்பார்! அவர் கடந்த ஆறு மாதங்களாகத்தான் அவளுக்கு பழக்கம்! ஆயினும் அவரை நினைத்து மனது வேதனையில் வெகுவாக துடித்தது!

வீடு வந்து இயந்திர கதியில் உடை மாற்றி, அனிதாவின் வற்புறுத்தலில் பெயருக்கு உண்டுவிட்டு, "அனிதா எனக்கு கொஞ்சம் மனது சரியில்லை , தனிமையில் இருக்கணும்,மாலை காபி பலகாரம் வேண்டாம்! ஆனந்த் வந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ள!" என்றுவிட்டு அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்!

சாரு,மாலை விளக்கு வைக்கும் நேரத்தில்,எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்! இரவு உணவின் போது தான் எழுந்து சென்றாள்! இடையில் இரண்டு முறை மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு அந்த மனிதரைப் பற்றி விசாரிக்க தவறவில்லை, அவர் தூங்குவதாக பதில் வந்தது! ஆயினும் அவளால் சரியாக உண்ண முடியவில்லை! பால் மட்டுமாக அருந்திவிட்டு படுக்கச் சென்றாள்!

"மதியத்தில் இருந்து அக்கா சரியாக இல்லை அத்தான்! என்னானு கேளுங்க! என்று அனிதா தான் சாருவைப் பற்றி ஆனந்தனிடம் சொன்னாள்!

"என்ன சாரு? உடம்புக்கு என்ன பண்ணுது? கணவன் கேட்டதும்தான் தாமதம், விஷயத்தை சொல்லிவிட்டு பொங்கி அழ ஆரம்பித்தாள்!
ஆனந்தனுக்கு அது வெறும் செய்திதானே! மனைவியின் கண்ணீரைத் துடைத்து, ஆறுதலாக பேசி தூங்க வைத்து தானும் தூங்கிப் போனான்!

இரவு ஒரு மணியளவில், சாருவின் கைப்பேசி ஒலிக்க, தூக்கக் கலக்கத்தில் எடுத்து பேசினாள்!

"நான் டூட்டி டாக்டர் சரண்யா பேசுறேன் டாக்டர்! மிஸ்டர் . வாசன் உங்களை உடனே பார்க்கணும்னு சொல்றார்! கடைசி ஆசைன்னு கெஞ்சி கேட்டதால் தான் இந்த நேரத்தில தொந்தரவு செய்யும்படி ஆகிவிட்டது!கொஞ்சம் வர்றீங்களா டாக்டர்?"

"உடனே வர்றேன் சரண்யா!" என்றவள் கணவனுக்கு ஒரு காகிதத்தில் விஷயத்தை எழுதி வைத்துவிட்டு, கிளம்பிவிட்டாள் சாருபாலா!

அன்றுவரை அப்படி பாதி இரவில் சாரு வெளியே சென்றதில்லை!
இப்போது அவள் காரை கிளப்பும் சத்தம் கேட்டு, விழித்த விசாலாட்சி, வாயிற்காப்போனை அழைத்து விசாரித்தார்! அவன் விபரம் சொல்ல.. அந்த செய்தி அவருக்கு துருப்பு கிடைத்தார் போல, ஆயிற்று!

சாருபாலா, மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்தபோது அவர் கடைசி வினாடிகளில் இருந்தார்! அவளை பார்த்ததும் அவர் முகமே பிரகாசமாயிற்று! அங்கே அவரது வக்கீலும் இருந்தார்! அவர் அவளிடம் அந்த கடிதத்தை நீட்டினார்!

சாருபாலா கேள்வியாக பார்த்தவாறே அதைப் பிரித்தாள்! அதை படித்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது!!

 

Attachments

  • CYMERA_20240326_172924.jpg
    CYMERA_20240326_172924.jpg
    67.9 KB · Views: 14