12.நவிலனின் கோதையானாள்
அடுத்த கால் மணிநேரத்தில் வந்த ராணி,கார்த்தி கார்த்தி என்று ஏலம் போட ..
வாக்கா உட்காரு என்றார்..
அம்சா, “வாங்க அண்ணி வினி வாவா என்று அழைக்க..
நாங்க வரது இருக்கட்டும் உன் பொண்ணு சீர் செனத்தி எல்லாம் எதுல பண்ண..?
என்ன விஷயம் க்கா என்றான் கார்த்திகேயன்..
ஏன்னு சொன்னா தான் சொல்லுவியா என்று ராணி கேட்க..
அப்படி எல்லாம் இல்லக்கா இதுவரை சீர்வரிசை எதுவும் செய்யலக்கா அதான் திடுதிப்பெனு கல்யாணம் ஆகிட்டு மாப்ளையும் எதையும் வாங்காதீங்கன்னு சொல்லிட்டாரு..
ஓஓஓ அப்படியா அப்ப அந்த ஸ்கூல் என்று ஆரம்பிக்கும் நேரம் மச்சான் என்று சாம்பசிவம் உள்ளே வர வாங்க மாமா என்று கார்த்திகேயன் அழைக்க..
ராணி, “ என்ன மச்சானுக்கு கொடி தூக்க வந்துட்டீங்களா?
ராணி என்றவர் இந்த மச்சான், நான் ஒரு அவசரம் ன்னு கேட்டு நீ தந்தியே அந்த பத்து லட்சம் என்று எடுத்து வைக்க..
அச்சோ மாமா என்ன இது நான் செய்ய வேண்டிய கடமை இருக்கு இதெல்லாம் நீங்க என்று தயங்க..
என்ன இப்ப உங்களுக்கு அவசரம் என்று அந்த பத்து லட்சத்தை பற்றி ஆய்வில் ராணி தாவ..
அதுவா இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு இடம் ஒன்னு உன் பையனுக்கு என்று அவர் ஆரம்பிக்கவும் என்னங்க என்று குறுக்கே வந்த ராணி இப்ப தம்பி கிட்ட பத்து லட்சம் வாங்கி நீங்க எந்த பிசினஸ் பண்ண வேண்டாம் ன்னு சொன்னேன் இல்ல என்று மாற்ற
கார்த்திகேயனும் சாம்பசிவமும் உதட்டிற்குள் சிரித்து கொண்டவர்கள்., சரி சரி நீயும் வந்துட்ட மச்சான் இன்னும் நம்ம அம்முக்கு எந்த சீர் வரிசையும் வாங்கல அதை எல்லாம் என்ன ஏதுன்னு பார்த்து செய்யனும் நீ தானே அவளுக்கு அத்த அப்ப அவளுக்கு எப்படி எல்லாம் நம்ம சீர் செஞ்சு அருமை பெருமையா அனுப்பனும், அந்த தம்பி வேணாம் ன்னு சொன்னாலும் நாம செய்யனும் இல்லையா?
ராணி, “செய்யனும் செய்யனும் இல்லன்னு சொல்லல அதுக்கு ஏன் இப்படி அலப்பறை பண்ணுறீங்க..ஏன் அம்சா அவளுக்கு நகை எல்லாம் ஏற்கனவே எடுத்தது இருக்கும் இல்ல
அம்சா, “இருக்கு அண்ணி..
எவ்வளவு வச்சு இருக்க…
அது வந்து அண்ணி என்று கார்த்திகேயனை பார்க்க..
என்ன அவனை பார்க்கிற போய் எடுத்துட்டு வா எப்படி என்ன பண்ணலாம் ன்னு பார்க்கலாம் என்று அம்சாவை அனுப்பி விட அவரும் பூம்பனிக்கு வாங்கிய நகைகளை எடுத்து வந்து வைத்தார்.
ராணி, “இது எவ்வளவு பவுன் வருது அம்சா?
அண்ணி இது எல்லாம் சேர்த்து எழுபத்தி ஏழு வருது என்று அம்சா சொல்ல..
அடி ஆத்தி எனக்கு தெரிஞ்சு உன் நகையோட நாற்பது தானே இருந்தது மத்தது எல்லாம் எப்ப வாங்கினது..
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா
என்ன கார்த்தி என்கிட்டே ஒரு வார்த்தை கேட்கல என்ன பழக்கம் இதெல்லாம் என்றார் ராணி..
அக்கா ஐஞ்சு வருஷமா பனி வாங்கிய சம்பளத்தில் வாங்கினது அக்கா என் பங்கு குறைச்சு தான், இது எல்லாம் அவ சம்பாத்தியம்?
என்ன அவ சம்பாத்தியமா?
ஆமா அக்கா..
ஓஓஓ அப்ப படிக்க வச்ச செலவு எல்லாத்தையும் எதுல சேர்க்க..
அக்கா இது என்ன பேச்சு என் பொண்ணுக்கு நான் செய்யாம யார் செய்யுவா?
எல்லாம் செய்யலாம் டா ஆனா ஓர் அளவு தான் இதோட முடியுதா அடுத்த அடுத்த நிறைய செய்ய வேண்டியது வரும் இல்ல..
அதெல்லாம் சரி தான் அக்கா நான் சம்பாதிக்கிறது அவளுக்கு தான் நாங்க வேற யாருக்கு செய்யப்போகிறோம்.
உதட்டை சுழித்தவர் இப்போதைக்கு சும்மா ஒரு முப்பது பவுன் மட்டும் போட்டு விடு அப்புறம் வீட்டு சாமான் எல்லாம் பேக்கேஜ் ல வரும் அதை வாங்கி குடுத்துடு என்று செலவுகளை குறைத்தவர் அப்புறம் அவ பேர்ல என்ன காசு போட்டு வச்சு இருக்க?
அக்கா என் சொத்தே அவளுக்கு தான் அக்கா..
அதென்ன டா உன் சொத்து அதுல எனக்கு பங்கு இருக்கு அதெல்லாம் நெனப்பு இருக்கா இல்லையா?
இருக்கு அக்கா இல்லாமையா என்ன?
அப்புறம் அவளுக்கு ன்னு சொல்லுற..
பின்ன வேற என்னக்கா சொல்லனும் அவளுக்காக தானே சம்பாதிக்கிறேன்.
அட என்ன கார்த்தி சொல்லுற அவ பொம்பளை பிள்ளை காம்ப்ளக்ஸ் வேலை எல்லாம் என்னத்த பார்க்க போற அதை விக்னேஷ் இனி பார்த்துப்பான் உனக்கு என்ன பையனா என்ன அவளுக்கு தேவையானதை தான் வாங்கி கொடுக்க போறோம் இல்ல என்றதும் அம்சா திடுக்கிட்டு பார்க்க கார்த்திகேயன் துடைத்து வைத்தது போல் முகத்தில் எந்த வித மாற்றத்தையும் காட்டவில்லை..
சாம்பசிவம், “என்ன பேச்சு பேசிட்டு இருக்க ராணி?
நானா சரியா தானே சொல்லிட்டு இருக்கேன் அவளுக்கு தான் சீர் என்ன செய்யலாம் ன்னு பேசியாச்சு இல்ல இனி இந்த சொத்து பத்தெல்லாம் எதுக்கு அதை அவ கவனிக்க முடியுமா அதான் அந்த பையன் கம்பெனி வச்சு நடத்துவான் அவனுக்கு அதுவே சரியான இருக்கும் இங்க என்னத்த வந்து பார்க்க போறாங்க அதுவும் இல்லாம இது ஏற்கனவே பேசினது தானே என்று ராணி பேச பேச கார்த்திகேயன் ச்சே இவ்வளவு யோசிச்சு இருக்கா அக்கா என்று உடைந்து தான் போனார்.
என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே பேசாம இருக்க..
என்ன சொல்லனும் அக்கா..
என்ன சொல்லனும் ன்னா விக்னேஷ் வேற வேலைக்கு கூட போகாம காம்ப்ளக்ஸ் வேலையை தானே பார்த்துக்கிறான் அப்ப அவன் பேருக்கு மாத்தி குடுத்துடு..
கார்த்திகேயன் சாம்பசிவம் முகத்தை பார்க்க..
அம்சா, “அதெப்படி அண்ணி என் பொண்ணுக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயம்..
கார்த்திகேயன், “அம்சா…
பேசாம போங்க என்னைய பேசவிடாம தடுக்காதீங்க இந்த விஷயத்தில்..
ராணி, “என்ன அம்சா பேச்சு வேற மாதிரி இருக்கு..
ஆமா அண்ணி என் பொண்ணுக்கு நாங்க சம்பாதிச்சதை குடுக்க போறோம் அதுல ஆண் பெண் பிள்ளை ன்னு என்ன வேறுபாடு
ஆமா,! இல்லையா பின்ன என்றார் ராணி…ஆம்பிளை பிள்ளை கடைசி வரை நம்ம கூட இருந்து பார்த்துக்க போறான் பொம்பள பிள்ளை ஆ பார்க்க போவுது…
அப்ப வினி உங்களுக்கு எதாவதுன்னா பார்க்க மாட்டாளா அண்ணி..
ஏன் என் பொண்ணுக்கு என்ன அவ பார்ப்பா..
அம்சா, “அப்ப பூவு மட்டும் பார்க்க மாட்டாளா..?
அவளை பார்க்கவே ஒரு ஆள் வேணும் இதுல அவ எங்க உங்களை பார்க்கிறது நாங்க தான் கடைசி வரை பார்க்கனும்..
அண்ணி …
கத்தாத அம்சா நான் சொன்னது தான் உண்மை ஏதோ கல்யாணம் ஆகிடுச்சு ன்னு பேசாத இது எதுவரை நிலைக்குமோ என்று முணுங்க .
மாமா என்றார் கார்த்திகேயன் அடக்கப்பட்ட கோவத்துடன்..
சொல்லு மச்சான் ..
சொத்தை பிரிச்சிடலாம் மாமா இதுக்கு மேல பேச்சை வளர்த்தி அதை பெரிசாக்கி விரும்பல..
என்னடா அவர்கிட்டே பேச்சு என்ன சொத்தை பிரிக்க போற..
ஆமா அக்கா சொத்தை எழுதும் போது மாமா தான் கூட இருந்தார் அப்பா சொல்லிட்டு தான் போய் இருக்கார் மாமா கிட்ட..
ராணி, “என்னங்க இது என்கிட்டே சொல்லவே இல்ல”..
உன்கிட்டே எதுக்கு சொல்லனும் ராணி இந்த வீட்டு ஆம்பிளை பிள்ளை கார்த்தி தான் அவனுக்கு தெரிஞ்சா போதாதா
ஏன் நான் இந்த வீட்டு பொண்ணு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..
அம்சா, “அப்ப என் பொண்ணுக்கும் எல்லா உரிமையும் இருக்கு தானே?
அம்சா எதை எதோட முடிச்சு போடுற
பின்ன இல்லையா இப்ப இந்த பேச்சே என் பொண்ணை வச்சு தானே அப்புறம் பேசாம என்ன பண்ண
என்ன கார்த்தி அவளை பேசிவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க
நீ பேசும் போதும் அதைதானே பண்ணுறேன் அக்கா…
மாமா இதுல ஷேர் தான் கடைசி வரை அப்பா குடுக்க சொன்னார் ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்ல ஏன்னா அந்த சொத்தில் சமபங்கு அக்காக்கு இருக்கு அதனால் தான் இத்தனை வருஷமா வர பணத்தில் முப்பது பர்சன்ட் ஷேர் தான் அக்கவுண்ட் ல போட்டேன் மீதி இருபது பர்சன்ட் விக்னேஷ் வினி பேர்ல போட்டு வச்சு இருக்கேன் இப்ப அக்கா பேசவும் இதுக்கு மேல இதை வளர விட வேண்டாம் அப்புறம் அக்கா அங்க நடக்கிற எல்லா வேலையையும் வர லாபத்தில் தான் பெரிசா டெவலப் பண்ணது உன் ஷேர் ல நான் எந்த காசும் எடுக்கல அது மாமாக்கு தெரியும் இப்ப ஐஞ்சு வருஷமா விக்னேஷ் கிட்ட கணக்கு இருக்கு..
மாமா ..
சொல்லு கார்த்தி
எனக்கு ஒரு உதவி
என்ன கார்த்தி..அந்த காம்ப்ளக்ஸ் விக்னேஷ் பார்த்துக்கிறானா என்னனு என்று முடிக்கும் முன்பே..
இல்ல மாமா நான் ஃபாரின் கிளம்புறேன் விசாக்கு வெயிட்டிங் எனக்கு பிடிச்ச வேலை வந்து இருக்கு இதை ஏற்கனவே உங்கிட்ட பேசி இருக்கேன் என்று உள்ளே நுழைய..
ராணி, “டேய் என்னடா பேசுற இங்க இவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ் இருக்கும் போது ..
அம்மா இருங்க, நீங்க சொன்னீங்க ன்னு நான் மாமாக்கு ஒரு உதவியாக கூட இருந்தேன் மாமா கூட தான் பேங்க்ல வேலை பார்த்துட்டே இந்த இடத்தை ரன் பண்ணாங்க கொஞ்சம் சூழ்நிலை சரியில்ல மாமா கவனிக்க உதவி தேவைப்பட்டது இனி அப்படி இல்ல அதே நேரம் இந்த வேலை எனக்கு விருப்பம் இல்ல நான் படிச்சதுக்கு ஏத்த வேலையை கொஞ்ச வருஷம் பார்த்துட்டு பிசினஸ் பண்ண ஆசைப்படுறேன் இதுக்கு மேல இதுல பேச ஒன்னும் இல்ல அப்பா நான் சொல்லுறது உங்களுக்கு புரியுது தானே..
சாம்பசிவம் ஆம் என மகனுக்கு தலையாட்டியவர், மச்சான் அதுல எங்களுக்கு எந்த உரிமையும் வேணாம் என்ன பண்ணலாம் ன்னு நீ முடிவு பண்ணு..
அந்த இடத்தோட இன்னைக்கு மதிப்பு என்னவோ அதுல பாதி நான் குடுத்துடுறேன் மாமா விக்னேஷ் முடியாதுன்னு சொல்லிட்டான் என்று முடிக்கும் முன்பே..
அவன் முடியாதுன்னு சொன்னா நான் பணம் வாங்கிட்டு ஒதுங்கனுமா என்று ராணி கத்த…
அப்புறம் என்னக்கா பண்ணனும் சொல்லு…
அது வந்து என்று ராணி பார்க்க..
அக்கா நேராகவே சொல்லுறேனே விக்னேஷ் வேணாம் ன்னு சொல்லிட்டான்.நம்ம வினிக்கு நீ மாப்ள பார்க்க ஆரம்பிச்சு அதை முடிவும் பண்ணிட்டன்னு எனக்கு தெரியும் அந்த பையன் கனடா ல இருக்கார் ன்னு தெரியும்,இது அப்பா உருவாக்கின தொழில் அதை விட எனக்கு மனசு வரல என் பொண்ணு பார்க்க தயாரா தான் இருக்கா இடையில் கொஞ்சம் பிரச்சினை இனி அவ பார்த்தப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு உனக்கு அதுக்கு உண்டான பணத்தை தந்துடுறேன் இல்ல நீயும் பார்ட்னரா பார்க்கிறதா இருந்தா..
இல்ல மச்சான் நான் ஊர் பக்கம் போகலாம் ன்னு இருக்கேன் பிள்ளைங்க படிப்பு அது இதுன்னு இங்கேயே இருந்தாச்சு இதோ இந்த வருஷம் ரிடையர்டு ஆக போறேன் அதான் ஊர்ல இருக்க நிலத்தை பார்க்கலாம் ன்னு என்று சாம்பசிவம் சொல்ல
ராணி , “என்ன ஆள் ஆளுக்கு அவங்க அவங்க முடிவை சொல்லிட்டு இருக்கீங்க ஏன்டா கார்த்தி அதான் உன் பொண்ணுக்கு அந்த ஸ்கூல் வாங்கி குடுத்து இருக்கே அது யார் பணம் ..அதுல உன் பங்கு எதுவும் இல்லாமலா இருக்கும் அது போதாதா உன் பொண்ணுக்கு இந்த இடமும் அவளுக்கே தரனுமா இன்னும் என்ன என்ன இழுத்துட்டு வராவாளோ படிக்கும் போதே அப்படி இப்ப ஆயிரம் பேர் வர இடத்தில் அவ வேலை பார்க்கணுமா என்ன என்று கேட்க
அக்கா..
ஆமாடா அடங்காதவளை வீட்டில் இருக்க வச்சா தான் நல்லது என்ன வளர்த்தியோ பொண்ண போதும் போதும் அவளுக்கு பண்ணது எதுவும் என் ஷேர் எடுத்து அந்த ஸ்கூல் க்கு குடுத்துட்டியா என்றதும் ,பல பத்திரங்களும் பாஸ்புக்கும் டேபிளில் வீசி எறிந்து இருந்தாள் அம்சா…
தொடரும்