• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12.மிஸ் மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மூளையோ வேணும் என்று அந்த வார்த்தையை ஞாபகப்படுத்தியிருந்தது.

“ஆமா பணம் தான் முக்கியம் உன் உடம்பை வித்து என் கூட வாழுறியா..” என்ற வார்த்தை சுழல முகம் இறுகி உதட்டில் இருந்த சிரிப்பு வாடிய பூவை போல் உதிர்ந்து விட்டது....

சாப்பிட மனம் இல்லாமல் எழுந்தவள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு கட்டிலில் வந்து விழுந்தவள் எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு உறங்கியும் போனாள்.

(ஆனால் இதை பார்த்த விதி சிரித்துக் கொண்டது)

தீராத காதலோடு பூமியை ஆட்சியை செய்ய பிரகாசத்தோடு தன் வருகையை அறிவித்து வந்தான் கம்பீரமாக கதிரவன்.

லேசாக கண் விழிக்கையில் ஏதோ தலை பாரமாக இருந்தது அதை கவனித்தவன் தலையை பிடித்துக் கொண்டு எழுந்தான் சுற்றி முற்றி பார்க்க தன் அருகில் அகிலன் உறங்கி கொண்டிருப்பதை கண்டவன் அவனை முறைத்து விட்டு எழுந்து தள்ளாடியபடி மெதுவாக பாத்ரூமிற்கு செல்ல அங்கு இருந்த கண்ணாடியில் பார்த்தவனுக்கு தலையில் கட்டு இருப்பது தெரிய அதை தடவி பார்த்தவனுக்கு எதுவும் ஞாபகம் இருப்பதாக தெரியவில்லை ஞாபகப்படுத்தி பார்க்க பார்க்க தலை விண் விண் என வலிக்க தொடங்கியது....

பின் முகத்தை மட்டும் லேசாக கழுவிட்டு வந்தவன் உடை மாற்றிக் தன் கோர்ட்டை கையில் எடுத்துக் கொண்டு வர அவனுக்கு நடக்க முடியவில்லை கால் அடிப்பட்டதில் வலிக்க மெதுவாக எத்தி எத்தி நடந்தவனை கண்டு எழுந்தவன் அவனருகே ஓடிப் போய் ‘இருடா மச்சான் உன்னே கீழே கூட்டிட்டு போறேன் விழுந்திடுவே....” என்ற அவன் கையை பிடிக்க தட்டி விட்டவன்

“இனிமே எனக்கு நான் மட்டும் தான் மத்தவங்களை எப்பவும் நான் நம்ப தயாரா இல்லை எப்போ என்ன பண்ணுறாங்கன்னு கூட தெரியலே…”. என்று குத்திக் காட்டி பேசி அவனை முறைக்க “டேய் என் மேல இருக்கிற கோவத்தை உன்னோட ஹெல்த்துலே காட்டாத உன்னை ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்கடா..” என்றவன் கத்தியது காற்றோடு தான் கலந்தது அதை கண்டுக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

ஆபிஸூக்கு வரும் போது டாக்டரிடம் சென்றே வந்தான்.

தனது அடுத்து ஏற்றுமதிக்கான வேலைகள் தொடங்கியிருக்க அதை எல்லாம் அவனே கவனித்தாக வேண்டும் என்பதால் அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் யுவாவின் அறைக்கு சம்யுக்தா ஒரு பைலில் சைன் வாங்குவதற்காக வந்தவள்...

அவன் தலையை பிடிப்பதையும் வலியில் முகத்தை சுளிப்பதையும் கண்டவளிற்கு ஏனோ மனம் வலித்தது.

பைல்லை அவனிடம் நீட்டி விட்டு அங்கு இருந்த காபி மேக்கரில் காபியை போட ஆரம்பித்தாள் அதை கவனித்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன் சைன் பண்ணி விட்டு மற்ற பைல்களை புரட்டினான்.

“சார் காபி..” என்று நீட்டியவளை ஒரு பார்வை பார்த்தவன் குனிந்து பைல்லை புரட்டினான்.

“இப்போ காபிக் குடிக்கிறீங்களா? அந்த பைல் எங்கயும் ஓடாது ம்ம் குடிங்க…” என்று நீட்டியவளிடம்,

“நான் இப்போ கேட்டேனா எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுற நீயே குடி குடிச்சிட்டு போ போய்
வேலையை பாரு…”

“அது சரி காபி எல்லாம் எங்க இறங்கும் ஐயாவுக்கு சரக்கு தானே இறங்கும்…”

“ஆங் என்று விழித்தவன் ஆமா உனக்கு எப்பிடி தெரியும் நான் குடிச்சது…” என்று புருவத்தை நீவி விட்டு கேட்க....

“அய்யோடா இதுக்கே இப்பிடின்னா அப்போ என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா சார் என்ன பேசுவாரோ தெரியவில்லையே..” என்று எப்போதும் இல்லாத மாற்றமாக இன்று உரிமையாக பழகுவது போல் இருந்தது அவளது பேச்சு...

“என்ன நடந்திச்சு எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்னன்னு சொல்லு உனக்கு தெரிஞ்சிருக்குன்னா நீ....” என புரியாமல் அவன் கேட்க.

“இப்போ எதுக்கு டென்சன் ஆகுறீங்க இங்க வாங்க தலையிலே இருந்த கட்டை பிரிச்சு திரும்ப மருந்து போடலாம்..”

“ஹேய் என்னடி உலறிட்டு இருக்க என்ன கடுப்பாக்காம சொல்லு உனக்கு எப்பிடி தெரியும்....” என அதிலே நின்று கொண்டிருந்தவனை “அது எல்லாம் சொல்லனுமா அப்போ காபி…”என்று கண்ணால் காட்ட
தெரிந்து கொள்ள வேண்டியதால் பின் அதை எடுத்துக் குடித்தவன் சரி இப்போ சொல்லு என்று மார்புக்கு இடையில் கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு நின்றான்.

“நீங்க குடிச்சிட்டு வண்டியை கொண்டுப் போய் மரத்துலே விட்டிட்டீங்க நான் அந்த வழியா வேலையை முடிச்சிட்டு வரும் போது தான் பார்த்தேன் தலையிலே வேற அடிப்பட்டு ரெத்தம் வந்திட்டு இருந்திச்சு அதான் பயத்துலே ரிஷி அண்ணாவோட ஹெல்ப்பாலே உங்க வீட்ட கூட்டிட்டு போனேன் அங்க வந்து உங்களுக்கு மருந்து போட்டுட்டு டாக்டர் வரும் வரைக்கும் வெயிட் பண்ணி என்ன ஏதுன்னு கேட்டிட்டு தான் வந்தேன் போதுமா தெரிஞ்சிடுச்சா இனி நான் போலாமா?…” என்று திரும்பி போக போனவளின் கையை பிடித்து நிறுத்தியவன் “என்ன புதுசா அக்கறை எல்லாம் வந்திருக்கு..” என்று குறும்போடு கேட்டான் யுவா.

“ஹலோ ஹலோ உடனே கனவு உலகத்துலே குதிக்க வேண்டாம் உங்க எடத்துலே யாராயிருந்தாலும் இதான் பண்ணிருப்பேன்..” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு “ஹா அப்பறம் கோவத்தை காட்டுறத்துக்கு குடிக்கனும்ன்னு அவசியம் இல்லை உரிமைப்பட்டவங்ககிட்ட கொஞ்சம் பொறுமையா பேசி புரியவைங்க புரிஞ்சுப்பாங்க அதே நேரம் உங்க கோவம் நியாயம் இல்லைன்னும் சொல்ல மாட்டேன் அதுக்காக அடுத்தவங்களுக்கும் ஒரு ரீஷன் இருக்கும்லே அதை விசாரிச்சிட்டு முடிவு எடுங்க..” என்று சொன்னவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு வெளியே வந்தாள்...

அதை கண்ட “அகி என்னம்மா சிரிச்சிக்கிட்டு வரே என்ன விஷயம்…”

“அது... ஹ் ஒ..ன்னும் இல்லைண்ணா…” என்றவளின் பேச்சு தடுமாறியது.

“நீ இப்பிடி பேசும் போதே என்னமோ இருக்குன்னு தெரியிது என்ன விஷயம்....”

“அண்ணா இது என்ன ஆராய்ச்சி போங்க போய் வேலையை பாருங்க எவ்வளவு வேலையிருக்கு நீங்க என்னடான்னா வெட்டியா நின்னு பேசிட்டு இருக்கீங்க…” என்றவள் அங்கிருந்து எஸ்கேப் ஆகிருந்தாள்.

“இது ஏதோ ஹிட்லர் பேத்தி மாதிரி வெரப்பா சுத்துமே ஆனா இன்னைக்கு என்னாச்சு இது நம்ம தங்கச்சி தானா?..” என்று யோசித்தவன் யுவா அறையை பார்த்து விட்டு தன்னறைக்கு சென்று விட்டான்.....

தன்னறைக்கு வந்தவளிற்கு எல்லாம் யோசனையாகவே இருந்தது “நாம தான் ஏற்பாடு பண்ணினதா சொல்லிடலாமா? அகிண்ணா சொல்லாம இருக்கலாம் ஆனா அவர் மேல கோவமா இருக்கும் போது எப்பிடி அவர் சொல்றதை கேப்பாரு சரியான டெரர் பீஸ் மூக்கு முட்ட கோவம் மட்டும் வந்திடும்…” என்றவள் அவனை போல் தன் முகத்தை கண்ணாடியில் வைத்து பார்த்து முறைத்தவள்.

“சரி சரி நாமலாவது முதல்ல பேசி பார்க்கலாம் அப்போ தான் என் ப்ரென்ட்டுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமே அவளோட கல்யாணம் நடக்கும்…” என்று யோசித்தவளின் உள் மனமோ ப்ரென்ட்க்காக தானா? என கேள்வியை எழுப்ப ப்பே என அதை ஒதுக்கிவிட்டு.... சன்முகவேலுக்கு போனை பண்ணியவள் ஒரே ரிங்கில் அதை எடுக்க.... “ஹலோ ப்ரெண்டு நான் வந்து பேசினது அகிண்ணாக்கு தெரியுமா?...”

“இல்லையே ப்ரென்டு இதை சொல்லனும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அதுக்குள்ளே ஏகப்பட்ட பிரச்சினை வந்திட்டு ஆமா ஏன் திடீர்ன்னு கேக்குற ப்ரென்டு ஏதாவது ப்ராப்ளமா?...” என்று கலங்கியபடி அவர் கேட்க,

“அய்யோ ப்ரென்ட் அது எல்லாம் ஒன்னுமில்லை நீங்க கவலைப்படாதீங்க நான் சொல்லி புரிய வெக்கிறேன் ஆமா சாப்புட்டீங்களா?...”

“இல்ல ப்ரென்டு அவன் வேற கோவிச்சிட்டு போய்ட்டான் சாப்பிடவும் இல்லை அகியும் அவன் சாப்பிடலேன்னு சாப்பிடாம போறான் அப்போ நான் மட்டும் எப்டி சாப்பிடுறது…” என்று சோகமாக சொன்னவரிடம்.

“அவங்க எல்லாரையும் சாப்பிட வைக்கிறேன் நீங்க போய் எதையும் யோசிக்காம சாப்பிட்டுங்க…” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டு அகியிடம் சென்றாள்...

“அண்ணா பிஷியா இருக்கீங்களா?..”

“இல்லமா என்ன விஷயம் சொல்லுமா....”

“அது..... அண்ணா உங்களோட லவ் விஷயத்தை நான் தான் அன்கிள்டே சொன்னேன் ஏன்னா நீங்க மத்தவங்களுக்கு பிடிக்கலைன்னு சொன்னா வேணாம் விட்டிடுங்கன்னு விலகிடுவீங்க கடைஷி வரைக்கு கல்யாணமே வேணாம்ன்னு ஒதுங்கி அவளை மட்டும் நினைச்சிட்டு வாழ்ந்திடுவீங்க ஆனா பொண்ணுங்க அப்பிடியில்லை அண்ணா கண்டிப்பா ஒரு இரண்டு மாசம் மூணு மாசத்துலே வேற பையனுக்கு கல்யாணம் பண்ணி கடமை முடிஞ்சதுன்னு அனுப்பி விட்டிடு வாங்க
பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்க முடியாம கல்யாணம் பண்ணவன் கூட வாழவும் முடியாம தவிக்கிற வாழ்க்கை ரொம்ப கஷ்டம் அதை என் அம்மா உருவத்திலே நான் பார்த்திட்டேன்.....” என்று பெருமூச்சு விட்டவள்.


“அதனாலே தான் அந்த நிலமை என் ப்ரென்ட்டுக்கு வரக்கூடாதுன்னு நானே இறங்கி என் லில்லிகாக இப்பிடி பண்ணினேன் அதுக்காக மன்னிச்சிடுங்க அண்ணா ஆனா சத்தியமா இந்த விஷயத்தாலே அவரு கோவிச்சு சண்ட போடுவாருன்னு எனக்கு சத்தியமா தெரியாது என்னை மன்னிச்சிடுங்க அண்ணா…” என்று கைகூப்பி மன்னிப்புக் கேட்டவளின் கையை பிடித்து “என்னம்மா பண்ணிட்டிருக்க மொதல்ல கையை கீழே இறக்கு இது எனக்கு காலையிலே லில்லி சொல்லித்தான் தெரியும் அப்போவே நான் புரிஞ்சிக்கிட்டேன் அதோட நீ சொல்றதும் ஒரு பக்கம் நியாயம் தான் லில்லிக்கும் எனக்கும் கல்யாண ஏற்ப்பாடு பண்ணாட்டி அதோட வலி எப்டியிருக்கும்னு இந்த கொஞ்ச நாளிலே உணர்ந்திட்டேன்... அதோட யுவாக்கு என் கல்யாணப் பேச்சு எடுத்ததாலே கோபம் இல்லை நான் காதலிச்சி அதை அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லயில்லைங்கிறது தான் கோபம் அதை நான் பார்த்திக்கிறேன் நீ கவலைப்படாத…” என்றவன் அவளுக்கு ஆறுதலாக சொல்லிக் கொண்டிருக்கும் போது‌…

இதோ கழுகுக்கு மூக்கு வேர்த்தது போல் வந்து நின்றான் யுவா “இங்க என்ன நடக்குது வேலை டைம்லே வேலையை மட்டும் பார்க்கனும் அதை விட்டிட்டு சும்மா ஊர்க்கதை பேச நான் ஒன்னும் கம்பெனி நடத்தலே…” என்று கர்ச்சித்தவனின் குரலில் பெண்ணவள் நடுங்கி தான் போனாள் “நான் போறேண்ணா…” என்றவள் அவசரமாக அவன் அறையை விட்டு வெளியே வர “என் கேபினுக்கு வா…” என்று அழைத்து விட்டு செல்ல அவளும் அதை மீற முடியாது அவனை பின்தொடர்ந்து சென்றாள்.

“நம்ம நிவ் காரோட ஸ்பெசல் அதோட பார்ட்ஸ் எல்லாம் விளங்கப்படுத்தி தெளிவா புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு வீடியோ ரெக்காட் பண்ணி எடுக்கனும் அதுக்கு ஏற்ப்பாடு பண்ணு…” என்று பைல்லை நீட்ட அதை வாங்கியவளின் கைகள் இன்னும் நடுக்கத்திலே இருக்க அதை பார்த்தவன்.

“சாரி ஏதோ டென்சன்லே கத்திட்டேன்…” என்றவன் அவள் அருகில் வந்து தண்ணீர் பாட்டிலை கொடுக்க அதை வாங்கி குடித்தவள் தன்னை நிதானப்படுத்திக் கொள்ளும் போது அவள் கையை பிடித்து “இப்போ நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே.... பிடிச்சவங்க கூட வாழவும் முடியாம கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கூட இருக்கவும் முடியாம இருக்கிறது எவளோ கஷ்டம்ன்னு அதே நிலமை தான் எனக்கும் என் நிலமையிலே இருந்து யோசிச்சு பாரு புரியும் உன்னை இன்னையோட ஆறு வருசமா காதலிக்கிறேன் மத்தவங்க காதலே சேர்த்து வைக்கிற உனக்கு உன்னையே நினைச்சிட்டு இருக்கிற நான் தெரியலே என்னோட பீலிங்ஸ் தெரியலயா…” என்றவனின் வலி நிறைந்த கேள்வி அவளை துளைத்தது.

“கொஞ்சம் யோசிச்சு முடிவு எடு அதுக்காக உன்னை நான் கம்பேல் பண்ணுறேன்னு நினைக்காதே நான் அவளோ பெரிய கொடுமைகாரன் இல்லை..” என்றவனின் வார்த்தைகள் உறுதியாக அதே சமயம் காதலோடு வெளி வர ஒரு நிமிடம் திகைத்தாள்......


"தமக்கானது தம்மை அடைய துடிக்கும் போது அதை உணராது குருடனாக செவிடனாக இருந்து எந்த பயனும் இல்லை நீ உன் கண்களை திறக்கும் போது அது நீ எட்டிப்பிடிக்காத தூரத்திற்கு சென்று விடலாம் இருக்கும் போதே கெட்டியாக பிடித்து விடுங்கள் தோழர் தோழியே அது கனவாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி"
 
Top