• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. அம்புத நல்லாள்

Sahana Harish

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
49
8
8
Chennai
விக்ரமனின் வீடு, விழாக்கோலம் பூண்டிருந்தது சொந்தங்கள் பந்தங்கள் அதிகாலை முதலே வரத் துவங்கி இருந்தனர்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளை பரபரப்பாக செய்து கொண்டிருந்தனர் ஆனால் ஒருத்தி மட்டும் எதிலும் நாட்டமில்லாமல் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்..

அது வேறு யாராக இருக்கக்கூடும் அம்புத்ரா தான்..

விட்டத்தை வெறித்துப் பார்த்து அமர்ந்திருக்கும் தன் மகளை ஆதரவாக தலைக் கோதினார் விஜி..

"அம்மு இன்னைக்கு உனக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கா இல்லையா? ஏன் இந்த மாதிரி அமைதியா இருக்க வீட்டுக்கு சொந்தகாரங்க எல்லாரும் வந்து இருக்காங்க இத்தனை வருஷம் கழிச்சு இவங்க எல்லாரும் நம்மள பார்க்க வந்து இருக்காங்க அம்மு..இந்த மாதிரி உட்கார்ந்து இருக்கிறது யாராவது பார்த்தா நாங்க உனக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து வைக்கிறோம்னு நினைப்பாங்க..நீ உண்மைய சொன்ன அப்புறம் மாப்பிள்ளை தான் உன்னை எதுவுமே சொல்லவே இல்லையே அப்புறம் ஏன் இந்த மாதிரி அமைதியா இருக்க?"

அதில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளின் கண்களின் வழியே வரத்தொடங்கியது..சிறுவயதில் அவளை அழுதுப் பார்த்திருக்கிறார் தான் ஆனால் என்று இந்த போலீஸ் பதவியில் அவள் சேர்ந்தாலோ அவளின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வந்ததில்லை ஆனால் இன்று? எதற்காக இவ்வாறு அழுகிறாள் என்று புரியாமல் ஓடிச் சென்று தனது தோளோடு சாய்த்து கொண்டார் விஜி..

"அம்மு இங்க பாரு எதுக்காக இப்படி அழற?நீ எவ்வளவு தைரியமான பொண்ணு நீ தான் எனக்கு தைரியம் சொன்னது! ஏன் இந்த மாதிரி செஞ்சிட்டு இருக்க உன்னை பார்க்கவே இப்ப எனக்கு ரொம்ப கவலையா இருக்கு"

"அம்மா நான் பொய் சொன்னதற்கு என்னை அவர் அடிச்சு இருந்தாலும் எனக்கு இந்த அளவு வருத்தமா இருந்திருக்காது ஆனால் என் கிட்ட ஒரு வார்த்தைக் கூட இதுவரைக்கும் பேசவே இல்ல அம்மா என்கிட்ட மட்டும் இல்ல வீட்ல இருக்கவங்க யார்கிட்டயும் அவர் பேசலன்றது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..நான் விளையாட்டுக்காக செய்ய போனது இவ்வளவு விபரீதமாக முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை"

"அதுக்காக தான் ஆரம்பத்திலேயே சொன்னேன் இந்த மாதிரி விபரீத விளையாட்டு எல்லாம் வேண்டாம்னு..உன் மேல கோபமா இருக்கவர் இந்த நிச்சயத்தை நிறுத்தாமல் இருக்கிறார் அதை ஏன்னு யோசிச்சியா? அவருக்கு உன் மேல இருக்க காதல் கொஞ்சம் கூடக் குறையல அம்மு இந்த ஊடலெல்லாம் எல்லார் வாழ்க்கையிலும் வரத்தான் செய்யும் அதை நாம எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது தான் இதற்கான தீர்வு..என்னோட வாழ்க்கையில கோபத்தால் நான் நிறைய இழந்து விட்டேன் ஆனால் நீ அப்படி கிடையாது மாப்பிள்ளையும் அந்த மாதிரி கிடையாது ரெண்டு பேரும் நிதானமா யோசிச்சு ஒரு முடிவு எடுக்கறீங்க இப்பவும் நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசினீங்கனா கண்டிப்பா தீர்வு கிடைக்கும்"

"ஓகே மா நீ என்கிட்ட பேசதும் தான் தெளிவான மாதிரி ஒரு பீல்..இப்ப அம்மு எப்படி ரெடியாகுறேன்னு மட்டும் பாரு சும்மா தேவதை மாதிரி வந்து நிக்கறேன்" என்று சிரித்தபடி ஓடும் தனது மகளை ஆர்வமுடன் பார்த்தவர் பின் மற்ற வேலைகள் அவரை இழுக்க அதில் கவனமானார்.

அப்படி என்ன நடந்ததுன்னு உங்களுக்கெல்லாம் சொல்லனும் இல்லையா வாங்க அப்படியே ரெண்டு நாள் பின்னாடி போயிட்டு வருவோம்..

அன்று..
தானே சென்று அம்முவை பார்த்து வருகிறேன் என்று சொன்னவன் அவளிடம் எப்படி இந்த நிச்சயத்தை நிறுத்த சொல்வது? அதுவும் அவள் மனம் நோகாமல்! என தனக்குள் பலவாறு பேசி பழகி கொண்டான்.. நேரமும் அதன் போக்கில் செல்ல மாலை 4.30 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து யாரிடமும் சொல்லாமல் சென்றான்.. அவன் செல்வதைப் அனைவருமே பார்த்தனர் ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை மைத்ரேயன் மட்டும் கவலையாக நோக்கினான் ஆனால் அவன் பார்வை பிரதியுமனை தீண்டவே இல்லை என்பது தான் உண்மை.

தனது தந்தையிடம் தனது திட்டத்தை எடுத்துரைத்தவள் தாயிடம் சொல்ல திரும்பிய நேரம் அவரோ தோசை கரண்டியோடு அவளுக்காக காத்திருந்தார்.

"என்ன விஜி பலத்த ஆயுதத்தோட வெய்ட் பண்ற? என்ன விசியம்?" என்று அவரை செல்லம் கொஞ்சினாள்.

அவளின் கையை தட்டி விட்டவர் "அம்மு நீ பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.. மாப்பிள்ளைய ஏன் இப்படி படுத்துற? உண்மையா இருக்கவங்க கிட்ட நாமும் உண்மையா இருக்கணும் அம்மு நாளை பின்ன இரண்டும் ஓரே பொண்ணு தான்னு அவருக்கு தெரியும் போது நம்பினவங்க எல்லாரும் நாடகமாடினாங்கனு எவ்வளவு கஷ்டப்படுவாருன்னு நினைச்சு பாரு.. இதுக்கு மேலையும் நீ உண்மைய மறைக்கிறது எனக்கு சரியா படல.. என்னவோ செய்யுங்க" என்றவர் தான் பேச வந்தது அவ்வளவு தான் என்பது போல் சமையலறையில் தஞ்சம் புகுந்தார் விஜி.

செல்லும் அவரையே பார்த்தவள் தன் தந்தையிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள் அங்கு இருக்கும் சிறு வயது தோழியுடன்.

மாலை 5 மணி, பரப்பரப்பாக இயங்கி கொண்டு இருந்தது மெரீனா கடற்கரை.. அந்தி சாயும் நேரம் என்பதால் மஞ்சளும் ஆரஞ்சுமாய் வானம்.. பார்க்க பார்க்க அப்படி ஒரு அமைதி அவனுள்.. அங்காங்கே குடும்பம் குடும்பமாய் குதுகலாமாய் ஒருபுறம், சிறு குழந்தைகளின் விளையாட்டுகளும் காதலர்களும் முக்கியமாக தின்பண்ட கடைகளும் தனக்கான வேலைகளை செவ்வென செய்து கொண்டிருந்தனர்.. பிரதியுமன் வந்து கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்திருந்தது.. 'எங்க இந்த பொண்ண இன்னும் ஆளையே காணோம்? 5 மணிக்குனு நான் சொன்னத மாத்தி சொல்லிட்டாங்களா? கொடுமை இன்னும் எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது?' என்று யோசித்து கொண்டு இருந்தவனின் அலைபேசி சிணுங்கவும் யார் என்று பார்க்க தொடுதிரையில் புதிய எண்ணாக இருந்தது.. அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் யார் என்று கேட்க எதிர்புறம்" நான் அம்மு பேசறேன் நான் இங்க வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க?"

தான் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி அவன் அவள் வருகைக்காக சுற்றும் முற்றும் பார்த்தான்.. ஆனால் வந்தது சாட்சாத் அம்புத்ரா.

அவளைக் கண்ட நொடி உள்ளுக்குள் மகிழ்ந்தாலும்' இவ எப்படி இங்கே வந்தாள் என்ற கேள்வி?' மனதில் தோன்றாமல் இல்லை.

அவள் அருகே வர வர தான் எதற்காக வந்தோம் என்ற நினைவும் அறவே மறந்து போனது அவனுக்கு..

" அம்பு நீ இங்க என்ன பண்ற!" என்றான் ஆச்சரியம் மேலோங்க.

தனது தாய் சொன்ன வார்த்தைகள் அவள் மூளைக்குள் சுழன்றடிக்க இவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்தவாறு நின்றிருந்தாள்..

"ஹே உன்னைத்தான் கேட்கிறேன் ஏன் அமைதியா இருக்க?"

ஒருவழியாக சுதாரித்த அவளோ " நீங்கதானே இங்க என்னை வர சொன்னிங்க" என்றாள்.

குழப்பமடைந்த அவனோ" நான் எப்ப உன்ன இங்க வர சொன்னேன்? குழப்பாமல் தெளிவா பேசு அம்பு"

" எஸ் நீங்க தானே அஞ்சு மணிக்கு இங்க என்னை வர சொன்னிங்க"

அவள் சொன்ன பதில் ஒரு நொடி அதிர்ந்தாலும் தான் வர சொன்னது அம்முவை ஆனால் வந்திருப்பது இவள் அப்பொழுது இருவரும் ஒன்றா? என்ற கேள்வி மேலோங்க அதை தாமதிக்காமல் அவளிடமே கேட்டு விட்டான்.

"நான் வர சொன்னது அம்முவை ஆனா நீ வந்து இருக்க அப்ப..? என்று நிறுத்தியவன் அவள் முகத்தை கூறிய விழியால் துளைக்க ஆரம்பித்தான்..

அவன் முகத்தைப் பார்க்க திராணியற்றவள் " நான்தான் அம்மு உங்க வீட்டில பார்த்திருக்க பொண்ணு நான்தான்" என்றதும் அவன் கோபப்பட்டு எதாவது சொல்வான் என்று நினைத்தவள் ஆனால் அவளைக் கூர்ந்து நோக்கியவன் எதுவும் பேசாமல் அவ்விடத்தைவிட்டு விறுவிறு என்று நடக்க ஆரம்பித்தான்..

செல்லும் அவனை தடுக்க தோன்றாமல் நின்றது ஒரு நொடிதான்.. அதன்பின் அவனுடனே சென்று எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றாலும் அவன் அதைக் காது கொடுத்து கேட்பதாய் இல்லை..தனது வண்டியை எடுத்தவன் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான்..

எவ்வளவுதான் கம்பீரமா இருந்தாலும் தன்மனம் கவர்ந்தவனின் இந்த ஒதுக்கும் அவளைப் பாடாய்ப்படுத்தி எடுத்தது.. எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாள் என்பது அவளுக்கு நினைவில்லை விக்ரமன் அவளின் அலைபேசிக்கு அழைக்கும் வரையில்..

தனது தந்தை அழைத்தவுடன் வீட்டிற்குச் சென்றவள் அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்..

இதற்கிடையில் தனது வீட்டிற்குச் சென்ற பிரதியமன் ஒருவரிடமும் பேசாது தனது அறையை நோக்கி சென்றான் கதவில் தனது கோபத்தினை காட்டினான்..

அங்கு என்ன நடந்தது என்று தெரியாத அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் கதவை திறந்தான் இல்லை..

பிரதியுமன் ஏன் இவ்வாறு செய்கிறான் என்று தெரியாத அவர்களோ அழைத்தது அம்புத்ராவுக்கு தான்.. அவள் அழைப்பை ஏற்காமல் போகவே விக்ரமனுக்கு அழைத்தனர்..

தெய்வானை," அண்ணா அம்மு எங்க போனே எடுக்கல என்ன நடந்ததுன்னு ஏதாவது உங்ககிட்ட சொன்னாளா?" என்றார் பதட்டமாக.

அவரும் அங்கு நடந்ததை விவரித்தார்..அதை கேட்டவர்கள் அவனின் கோபத்திற்கான காரணத்தை தெளிவாக புரிந்து கொண்டனர்.. சிறு வயதில் இருந்தே கோபம் வந்து விட்டால் அவன் அது குறையும் வரை கோபம் கொள்ள செய்தவரிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான்.. இப்பொழுதும் அவன் அதையே தான் செய்து கொண்டிருந்தான்..

மைத்ரேயன் மனமோ, ' இதுக்கே இப்படின்னா அம்புத்ரா போலீஸ்னு தெரிஞ்சா இன்னும் என்ன நடக்குமோ' என்று யோசித்தவன் மறுநாள் கிளம்பி பெங்களூர் சென்றிருந்தான்.. அவனும் பிரதியுமனை தொடர்பு கொள்ளவில்லை.. மைத்ரேயனை பிரதியுமனும் அழைக்கவில்லை.

நிச்சய நாளும் வந்தது.. அதை தடுக்க அவன் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.. இவர்களும் இது தான் சாக்கு என்று நிச்சய வேலைகளை செவ்வென செய்து கொண்டிருந்தனர்.

நீல நிற சேர்வானியில் ராஜ தோரணையாக வந்தவனை கண்கொட்டாமல் பார்த்தனர் அனைவரும்.. அவன் வருவதை தனது அறையின் ஜன்னலிலிருந்து அம்புத்ராவும் பார்க்கத் தவறவில்லை.. தனது மன்னவனின் அந்த கம்பீரம் அவளின் மேலும் ஈர்த்தது..பல நாட்களாக பல வருடங்களாக அவனிடம் பழகவில்லை தான்..ஆனால் பார்த்த நொடியே பல யுகங்களாக அவனுடன் வாழ்ந்த உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.. பணி நிமித்தமாக கேரளா சென்றவள் கோழிக்கோடு பகுதியில் அவள் தேடும் நபர் இருப்பதாக தகவல் வரவே அங்கு சென்றாள் மப்டீயில் .. என்றும் இல்லாமல் அன்று தன்னை அலங்கரித்த தோன்றவே மிகவும் பிடித்த வெள்ளை நிற சுடிதாரில் தலையில் கொண்டை இடாமல் மூடியை லூஸாக விட்டு அது காற்றில் பறக்க வந்தவளை இமை கொட்டாமல் பார்த்தனர் உடன் வந்தவர்கள்..

"மேடம் நிங்களுடைய சுந்தரம் தேவலோகத்தில் உள்ள ஸ்ரீ கல் போல் உண்டு"என்றார் ஓர் அதிகாரி.(மேடம் நீங்க தேவலோக பெண் போல இருக்கீங்க)

அவர்களைப் பார்த்து சிரித்தவள்" ஹோ அதேயோ நிங்களுக்கு அவரை அறியுமோ? நிங்கள் அவரை கண்டிட்டு உண்டுனு பறயனு அல்லே?"(ஓ அப்படியா அப்ப நீங்க அவங்கள பார்த்து இருக்கீங்கனு சொல்லுங்க)

"ஐயோ மேடம் நான் வெறுத்தே பறஞ்சதா அங்க என்ன ஒன்னு மில்லா"(அய்யோ மேடம் நான் சும்மா சொன்னேன்)

அவர்களை ஒரு நொடி கூர்ந்து நோக்கியவள் "அப்போ சும்மா மிண்டதே போயிட்டு நமக்குண்ட பணியை நோக்காம்" (அப்ப வெட்டி கதை பேசாம நம்ம வேலையை பார்க்கலாம்) என்றாள்..

(மக்களே மலையாளம் வார்த்தைகள் தவறாக இருப்பின் இந்த பச்ச மண்ண மன்னிச்சு)

அவள் பேச்சுக்கு மறு பேச்சின்றி மற்ற படகுகளில் ஒவ்வொருவராக ஏற இவளும்
தனக்கிட்ட வேலைகளுக்காக ஒரு போர்ட் ஹவுசில் ஏறியவள் சுற்றும்முற்றும் பார்த்தாள் திடீரென்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கவே என்னவென்று பார்க்க குழந்தை கையில் வைத்திருந்த பந்தை கடல் நீரில் போட்டுவிட்டு இருந்தது..உடன் வந்திருப்பவர்கள் யாரும் அருகில் இல்லை போலும் அதனால் தண்ணீரில் இருந்து பந்தை எடுக்க கீழே குனிந்து கொண்டு இருந்தது நிலைமையின் விபரீதம் புரியவே நொடியும் தாமதிக்காமல் தண்ணீருக்குள் குதித்து விட்டாள் அவள்.. பந்தை கைக்கு எடுக்கப் போகும் சமயம் நீரின் வேகம் மற்ற படகுகளால் அதிகரிக்கவே சிறிது மூச்சு திணற ஆரம்பித்தது திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு கரம் அவளைத் தன்னுடன் சுற்றி வளைத்தது.. அந்த ஒரு நொடி அந்த ஒரு நொடி தான் அவனை அவள் பார்த்தது அவனும் அதே தான் யார் என்று தெரியாது ஊர் பெயர் என்னவென்று தெரியாது ஆனாலும் அவள் மீது காதல் கொண்டான்.. அன்று ஆரம்பித்த அந்த தேடுதல் ஒரு மாதம் முன்புதான் கிடைக்கப்பெற்றது..

இதோ நிச்சய நேரமும் வந்தது பெண்ணை அழைத்து வருவதற்காக அவளது தோழியும் அனன்யாவும் சென்றனர்.. நீல நிற டிசைனர் பட்டில் தேவதை என இருப்பவளை கண்டால் சத்தியம் செய்தாலும் இவள் ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி என்று யாரும் நம்பமாட்டார்கள்..

என்றுமில்லாமல் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கும் எண்ணம் அவளுக்கு ஏழவே இல்லை.. முக்கியமாக பிரதியுமனை பார்க்க முடியவில்லை அது நாணமா அல்லது அவனின் கோபத்தை குறைக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வா என்று அவள் அறியாள்..

நிச்சய நேரமும் வந்தது மற்றவர்களுக்காக பிரதி சிரித்தாலும் அது உண்மையான சிரிப்பாக அவன் குடும்பத்தாருக்கு தோன்றவில்லை மைத்ரேயன் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.. இத்தனை வருடமாக மற்றவர்களிடத்தில் அவன் கோபம் கொண்டு இருக்கிறான் தான் ஆனால் இவனிடம் ஒருபோதும் அவ்வாறு நடந்தது இல்லை இப்பொழுது தன்னிடமும் ஒரு வார்த்தை பேசாமல் ஏன் முகத்தைக் கூடப் பார்க்காமல் இருக்கிறான்.. அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதிலும் விக்ரமன் தான் அம்முவின் தந்தை என்று அறிந்த அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. அதைப் புறந்தள்ளியவன் நிச்சயம் முடிந்தவுடன் பிரதியிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஒரு முடிவில் இருந்தான்..

மாலை 5 மணி அளவில் இருவரும் மோதிரத்தை மாற்றி தங்கள் உறவை இணைத்துக்கொண்டனர்..ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி விட்டு செல்லும் வரை அவள் அருகில் இருந்தவன் அனைவரும் சாப்பிட செல்லும் நேரம் அவனுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று அமர்ந்தான்.. இதை கவனித்த அம்புத்ரா அவன் பின்னோடு சென்றாள்..

அவளை கண்டதும் எந்த ஒரு மலர்ச்சியும் முகத்தில் காட்டாமல் அமைதியாகவே இருந்தான்.. நீண்ட நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபம் துளிர் விட ஆரம்பித்தது அவளுக்கு.

"யுமன்" என்றாள் மென்மையாக.

அவள் அழைப்பிற்கு அவன் நிமிர்ந்து பார்த்தான் இல்லை..

கோபம்கொண்ட அவளோ" என் மேல இவ்வளவு கோபமா இருக்கறவர் எதுக்கு இந்த நிச்சயத்திற்கு சம்மதிச்சீங்க?"

அதுவரை அமைதி காத்தவன் அவள் கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக பதில் தந்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தான்" எனக்கு உன் மேல கோபமில்லை வருத்தம் தான் இருக்கு"என்றான் அவள் முகம் பாராமல்.

" அப்புறம் ஏன் என் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி நின்னுட்டு இருக்கீங்க?"

"அம்புத்ரா நம்பிக்கை வச்சவங்க ஏமாத்தினா அதனுடைய வலி ஏமாறவங்களுக்கு தான் தெரியும்.. ஏமாத்துறவங்களுக்கு இல்லை" என்றவனை மிரட்சியோடு பார்த்தாள் அம்மு.

விளையாட்டாய் சொன்ன இந்த பொய்கே இவன் இப்படி சொன்னால்! இன்னும் இவள் அவனுக்கு பிடிக்காத காவல் துறையில் பணி புரிகிறாள் என்ற உண்மை தெரிந்தால்.?என்று யோசிக்கும் போதே மலைப்பாய் இருந்தது அவளுக்கு.. இருந்தும் தன்னவன் அவன் மன சிக்கலிலிருந்து வெளி வர இந்த கோபத்தை எல்லாம் சமாளிக்கலாம் என்ற முடிவோடு அவனை நெருங்கினாள்..

அவளின் காலடி சத்தம் தன்னருகே வருவதை உணர்ந்ததும் திரும்பிப் பார்க்கலனான்..

அவன் எதற்காக தன்னருகே வருகிறாள் என்று குழம்பிய அவன் அதை முகத்தில் காட்டவும் தவறவில்லை..

அந்த மிரட்சி அவளுக்கு போதுமானதாக இருக்கவே அவனுக்கு மிக அருகில் சென்றவள் அவர் என் கையை பற்றி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு" யுமன் நாம பார்த்து கொஞ்சநாள் இருக்கலாம் ஆனா உங்கள பார்த்து அந்த நொடியே பல யுகங்கள் உங்ககூட உணர்வு எனக்கு.. இது காதலா னு எனக்கு தெரியாது உங்க கூட எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வாழனும்னு தோணுது.. கனவுல உங்க கூட வாழ்ந்துகிட்டு இருந்த எனக்கு ஒரு நாள் இவள் தான் உன்னோட மாப்பிள்ளைனு உங்க போட்டோ காமிச்சா எப்படி இருக்கும்? உங்ககிட்ட பேசணும்னு கிளம்புற நேரம் தான் அத்தை எனக்கு கால் பண்ணுங்க நீங்க வேற ஒரு பொண்ணு விரும்பறதா சொன்னாங்க..இந்த விஷயம் மைத்ரேயன் மூலமாக தான் அவங்களுக்கு தெரிந்திருக்கு ஆனாலும் உங்கள் கிட்ட இதைப்பத்தி பேசிக்காம இருந்திருக்காங்க.."

"நீங்க வேற பொண்ண விரும்பறத கேள்விபட்டதும் எனக்கு மனசு தூள் தூளாக உடைஞ்ச ஒரு ஃபீல்.. அதுக்கப்புறம் உங்கள பாலோ பண்ண ஆரம்பிச்சேன் உங்க கூட வேலை செய்யற அஸ்வின் இருக்கார் இல்லையா அவர் என்னோட ஃப்ரெண்டோட அண்ணன்.. சோ அவர் மூலமா நீங்க விரும்புற பொண்ணு யாருன்னு தெரிஞ்சுகிட்டேன்.. அந்த நொடி நான் எப்படி உணர்ந்தேன்னு தெரியுமா? மலையை கொடுத்தால்கூட உடைக்கிற வேகம் இருந்தது..கனவிலும் நனவிலும் உங்களை ஆட்டிப் படைக்கிற அந்த பொண்ணு நான் தான்னு தெரிஞ்சப்புறம் கூட உங்களை நெருங்குகறது எனக்கு கஷ்டமா இருந்தது"

"உங்களோட ஒவ்வொரு அசைவையும் நான் என்னுள் கிரகிச்சேன்.. எதேச்சையா நீங்க என்ன அன்னிக்கி பார்த்தீங்க உங்ககிட்ட உண்மைய சொல்லாம்னு வந்தபோதுதான் இந்தக் கிறுக்குத்தனமான எண்ணம் வந்தது.. ப்ளீஸ் யுமன் என்னை திட்டக் கூட செஞ்சுடுங்க ஆனா பேசாம இருக்காதிங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றவன் கண்களில் வந்தது கண்ணீரா?

அவன் பதறியபடி" அச்சச்சோ அம்பு நீ அழாத எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"என்று தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பு அவளுக்கு சகலமும் வென்றுவிட்ட திருப்தியை அளித்தது..

கூடவே அவள் மனமோ' அப்பாடா ஒரு வழியா எதை எதையோ சொல்லி இப்போதைக்கு சமாளிச்சு.. உஷாராய் இரு அம்புத்ரா' என்று வராத கண்ணீரைத் துடைத்து விட்டவள் அவன் கண்ணோடு கண் பார்த்து" ஐ லவ் யூ யுமன்" என்றால் மொத்த காதலையும் கண்களில் தேக்கி.

அவனும்" ஐ டூ லவ் யூ அம்பு" என்று அவளின் செவ்விதழை சிறை பிடிக்க ஆரம்பித்தான்.. நிமிடங்கள் கரைய இருவரும் அந்த மோனநிலை விட்டு வெளிவர விரும்பவில்லை என்பது அவர்களின் இதழ் யுத்தம் நீண்டதிலேயே இருவருக்கும் புரிந்தது..

அதேநேரம் இருவரும் இருந்த அறையின் கதவை தட்டப்படும் ஓசை கேட்கவே பிரிய விருப்பம் இல்லாமல் பிரிந்தனர்..

என்னவென்று பார்க்க அங்கே மைத்ரேயன் " என் வாழ்க்கையே கெடுத்துட்டு நீ இங்க ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கியா அம்புத்ரா" என்று அடிக்குரலில் சீறினான்..

தொடரும்..