• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
124
88
28
Salem

14.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​


பழனி ரிஷியை பார்க்காமலே ஊர் வந்து சேர்ந்துவிட,வர்மனோ அன்று மாலையே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி நேரடியாக நோட்டிஸ் அனுப்பி விட்டான் ரிஷிபாலாவிற்கு பகலவனின் முதல் மனைவி குடும்பத்தில் உள்ள சில கசப்புகளால் இப்படியான பழியை சொல்லி இருக்கிறார் அவரை நேராக கோர்ட் வர ஆர்டர் தர வேண்டும் என்று சொல்லி அன்றே பேக்ஸ் அனுப்பிவிட இரவெல்லாம் வந்து சேர்ந்து இருந்தது அந்த செய்தி. அதிலும் பிரஸ் அழைத்து அதற்கும் தகவலை தந்து இருந்தான் வர்மன்.

அனைத்தையும் பார்த்து விட்டு அனலுடன் நிமாவாகினி இருக்க..

ஆதி, “ சரி கிளம்பலாமா அங்க எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு பண்ணி இருக்கு என்று சிரிக்க..

அண்ணா சிரிக்காத என்று விது சொல்ல..

டேய் டேய் போதும் டா நடிப்ப நிறுத்துங்க ஏன் மா இந்த பையனை உனக்கு தெரியல என்று கேட்க..

ரிஷி, “ இந்த பையனா இவன் அன்னைக்கு வாகியை பார்க்க வந்தவங்க தானே…

ஓஓஓ அப்ப உனக்கு தெரியாது …தெரியல ஆதி… ஆதி உடனே வேறு ஒரு புகைப்படத்தை காட்ட..அதில் ராமைய்யா பல்லவி வர்மன் மூவரும் இருக்க இமைக்க மறந்து பார்த்து ரிஷி…சாகித்யா என்று முணுமுணுக்க..

அவனே தான் என்று சொன்ன ஆதி…உன் பொண்ணுக்கு அவனை ஏற்கனவே தெரியும் கேளு அவளை என்று சொல்ல ரிஷி மகளை தான் பார்த்து இருந்தார்.

வாகி….என்று ரிஷி அழைக்க..

ம்மா என்கிட்ட எதையும் கேட்காத அவன் உன் செல்லம் தான் எனக்கு ஏற்கனவே தெரியும் அவ்வளவு தான் என்று வெளியேறி விட…விதுவும் நகர பார்க்க…டேய் என்று அவன் கையை பிடித்தபடி இழுக்க..

அண்ணா விடு…

விடுறேன் இருடா…அவளுக்கும் அவனுக்கும் இடையில் என்ன நடக்குது என்று ஆதி கேட்க…

யாருக்கும் யாருக்கும் அண்ணா என்று பாவமாக கேட்க..

டேய் இதெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்க இப்ப சொல்ல போறியா இல்லையா என்று கேட்க…

அண்ணா என்று தாயை பார்க்க அவரோ இந்த இடத்திலேயே இல்லை என்பது போல் யோசனையில் இருக்க..
அம்மா என்று உலுக்கினான் ஆதி…

என்ன ஆதி…


உங்க சாகிக்கும் வாகிக்கும் என்ன சம்பந்தம் ன்னு இந்த சுண்டக்காய் கிட்ட கேளுங்க என்று சொல்ல..

என்னடா சொல்லுற… என்று பதட்டமாய் கேட்க..

ஆமா இப்படியே இரு மா இவனுங்க என்ன பண்ணுறாங்க ன்னு ஒன்னும் தெரிஞ்சுக்காத என்று ஆதி திட்ட…

விது என்ன விஷயம் ஏதும் பிரச்சினை இல்லையே…

பிரச்சினை தான் மா என்றான் விது…

என்னடா சொல்லுற என்று கேட்கவும்..வாகி வர்மன் இருவரும் ஒரே கல்லூரியில் பயின்றவர்கள் என்று விதுரிஷி சொல்ல ஆரம்பித்து இருந்தான்.

இது எப்ப என்று ரிஷி கேட்க..

லண்டன் ல மா என்றவனை என்ன சொல்லுற விது ..

ஆமா ம்மா ஒரே யுனிவர்சிட்டி அப்படி தான் ரவி அண்ணா வேந்தன் அண்ணா பரத் எல்லாம் பழக்கம் ரவி அண்ணா சாகி அத்தானுக்கு ரொம்ப குளோஸ் என்று உளறிவிட…

ஓஓஓ கதை அப்படி போகுது என்று ஆதி அவன் கழுத்தை பிடிக்க…

என்ன அண்ணா நான் எதுவும் என்று சொல்ல..அத்தான் எப்ப இருந்து இது….

அது பல வருஷமா என்று தாயை பார்க்க…

குழப்பத்தில் அமர்ந்து விட்டார் ரிஷி பாலா..

அம்மா என்று விது தாயின் கையை பிடிக்க…

இது நல்லதுக்கு இல்ல விது அந்த குடும்பம் நமக்கு வேண்டாம் டா இது உங்க அக்கா என்று தடுமாற… அக்காவுக்கு எல்லாம் தெரியும் மா விஷயம் தெரிஞ்சு அக்கா ஒதுங்கிட்டா இதுவரை அக்கா அவர் கிட்ட எதுவும் சொன்னது இல்ல அவர் தான் அக்காவை விரும்புறார் என்று அடுத்த வெடியை தூக்கி வைக்க…

என்னடா சொல்லுற அய்யோ… என்னடா இவ எல்லா பக்கமும் பிரச்சினை தானா என்று கண்கலங்க..

எதுக்கு ம்மா கண்கலங்குற அவ ஒன்னும் யோசிக்காம பண்ண மாட்டா பார்த்துக்கலாம் விடு என்று சொல்ல…

ஆதி, “ சரி ரிஷி மா கிளம்பலாம் நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல என்றவன் சமாதானம் செய்ய ரிஷி எந்த பாவனையும் காட்டாமல் கிளம்ப வாகி பின்னே வருவதாக சொல்லிவிட..

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கோர்ட்டில் ஆஜராகி இருந்தாள் ரிஷிபாலாம்பிகை…

பகலவன், “ உணர்ச்சி குவியலாய் ரிஷியை நெருங்க பார்க்க அவளோ தன் இரு மகன்களோடு நிற்க..அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்றாள் நிமாவாகினி அவளை பார்த்த அடுத்த நொடி சோர்ந்து அமர்ந்து விட்டார் பகலவன்.அச்சு அசலாய் தன்னையே கொண்டுள்ள மகளை பார்த்து ஆசையாய் நெருங்க நினைக்க அவள் பார்த்த பார்வையில் அமர்ந்தவர் தான் அடுத்த அடுத்த நிகழ்வு அனைத்தும் முடிய..

அப்ப இந்த ரெக்கார்ட்ஸ் எல்லாம் இத்தனை வருஷமா தராம ஏன் இப்ப தந்து இருக்கீங்க ரிஷி பாலா… என்று பழனி கேட்க..

யுவர் ஆனர் அதற்கான நேரம் வரல அதுவும் இல்லாம நான் இறந்துட்டதா பைல் பண்ணி இருபது வருஷம் ஆகுது இப்ப நாராயணனுக்கு எகைன்ஸ்டா கேஸ் பைல் ஆகவும் அந்த கேஸோட இதுவும் இருக்குன்னு காட்ட தான் வந்தேன் இதனால் முடிஞ்சு போன விஷயங்களுக்கு என்னால் நியாயம் வாங்கி தர முடியாது ஆனா இதுக்கு மேல தவறு நடக்காம இருக்கனும் ன்னு எதிர்பார்க்கிறேன்.

நீங்க தான் இறந்துட்டதா சொல்லிட்டாங்களே நீங்க தான் ரிஷிபாலான்னு சொல்ல என்ன ஆதாரம் இருக்கு என்று வக்கீல் கேட்க அதற்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தான் காணாமல் போய் இரண்டு வருடங்கள் கழித்து சிறப்பு அனுமதி வாங்கி தன் ஆதாரங்களையும் இருப்பையும் ஜனாதிபதி உதவியுடன் பணியில் அமர்த்தப்பட்டதையும் சமர்ப்பிக்க ..பழனி ஆர்வத்தோடு அதையெல்லாம் பார்த்தவர் சந்தோஷமாக ரிஷியை பார்க்க ஆனால் எந்த எதிர் வினையும் ஆற்றவில்லை ரிஷி பாலா…

நீங்க குடுத்த பழைய ரெக்கார்ட்ஸ் அந்த காலேஜ் தான் எப்படி நம்ப என்று கேட்டதும் நிமாவாகினி முன் வந்தவள் தான் பேச அனுமதி கேட்டு ஐவிட்னஸ் இருப்பதாக சொல்ல அதிர்ந்து பார்த்தாள் பல்லவி…


அனைவரையும் ஒரு பார்வை பார்க்க வாகி… சாமியப்பனை அழைத்து வர அனுமதி கேட்க..

சரி என்று ஜட்ஜ் பழனி அனுமதி தரவும் உள்ளே அழைத்து வந்து இருந்தனர் வேந்தனும் பரத்தும் கூடவே ரவியும் நிற்க வர்மன் தான் அடுத்து என்ன என்று பார்த்து கொண்டு இருந்தான்.

சாமியப்பனின் வாக்குமூலத்தை பெற்று கொண்டு காவல்துறைக்கு அடுத்த ஆணையை பிறப்பித்தது கோர்ட் பல்லவி மாலினி இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சொல்லி விட அன்றைய வாதம் முடிந்து வெளியே வர ரிஷியை மறைத்து நின்றான் வர்மன்.

அத்த…

ரிஷி சலனமில்லாமல் அவனை பார்க்க..

ஏன் அத்த நான் கூட உனக்கு வேண்டாமா? என்று தழுதழுப்பாய் கேட்க..

சாகி என்று அழுதுவிட்டவளை அணைத்து கொண்டு நின்றான் விதுரிஷி.

இப்ப கூட நீ உன் பிள்ளைங்களை தான் அணைச்சுட்டு நிக்குற இல்ல அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா ஆகிட்டேன் தானே..


விதுரிஷி, “ போதும் மிஸ்டர்.வர்மன் நீங்க பாட்டுக்கு அம்மாவை வதைக்க வேண்டாம் அம்மாக்கு உங்களை அடையாளம் தெரியல..

அது எனக்கு தெரியும் ஆபிசர் என்றான் வர்மன் .

அப்புறம் ஏன் என்பது போல் பார்க்க..

ஏன் அத்த நான் என்ன பாவம் பண்ணேன் ஏன் என்னைய மறந்துட்டீங்க என்று கேட்டதும் விலுக்கென நிமிர்ந்தவள் பதில் பேசும் முன்..

ஏன்னா பல்லவி மகனும் நாளைக்கு எங்களை எதாவது பண்ண துணிஞ்சுட்டா என்று வாகி வர.


அடிச்சு பல்லை கழட்டிடுவேன் வாகி என்ன நினைச்சுட்டு இருக்க என்று வர்மன் எகிற…

மைண்ட் யுவர் டங்க் மிஸ்டர் வர்மன் என்று வந்தார் சென்ட்ரல் மினிஸ்டர்..

பல்லை கடித்து கொண்டு சார் என்று இவன் அடுத்து பேசும் முன் நீங்க ரிலேட்டிவா இருக்கலாம் ஆனா இங்க அவங்க மினிஸ்டரா வந்து இருக்காங்க அதுக்கான மரியாதை தரனும் இல்லையா என்று அவர் கேட்க சரி என தலையசைத்தவன் அத்த வீட்டுக்கு போகலாம் என்றதும் விரக்தியாக சிரித்த ரிஷி எந்த வீட்டுக்கு சாகி என்றார்.

நம்ம வீட்டுக்கு அத்த…

சாரி சாகி அது உங்க அம்மா வீடு என்னோட வீடு ஊட்டில இருக்க ஆசிரமம் தான் என்றவர் சந்தோஷமா இரு என்று அவன் கன்னம் தொட்டு விட்டு செல்ல…

நாங்க கொஞ்சநாள் ஆரப்போட்டு செய்யலாம் ன்னு இருந்தோம் ஆனா எங்களுக்கு தண்டனை இப்பவே வேணும் வாங்கன்னு நீங்க எங்களை உடனே இங்க வரவச்சுட்டீங்க என்று வாகி சொல்லிவிட்டு நகர..

சாரி மச்சான் என்றான் ரவி…

எதாவது சொல்லிப் போறேன் வாயை மூடிட்டு போ எல்லாத்தையும் முடிச்சு விட்டுட்டு பேச்சை பாரு என்று வர்மன் எரிந்து விழ.

வேந்தன், “ போதும் டா அவளுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் ஒதுங்கிட்டா அவ பக்கத்துல எந்த தப்பும் இல்ல என்றதும் முறைத்தவன் என்ன டா நியாயம் பேசுறீங்களா?

உண்மையை தானே சொல்லுறேன் டேய் அவளை நான் என் அத்த பொண்ணா பார்க்கல என்னோட என்றவன் அதோடு நிறுத்தி விட..ஏன்டா சொல்லாம நிறுத்திட்ட.. இப்படி ஒரு காலம் வரும் ன்னு தான் நீ என்ன நினைக்கின்றது தெரிஞ்சு ஒதுங்கிட்டா…

டேய்…

ஆமா வர்மா அன்னைக்கு நம்ம காலேஜ் க்கு உங்க மாமா அவர் பேமிலியோட வந்து நின்னாரு இல்ல என்றதும் வர்மன் அதை நினைத்து பார்க்க ,....

ரவி , “ வர்மா இது யாரு ?

இது என்னோட மாமா பகலவன் இது அவர் மனைவி மாலினி பொண்ணு தாரா என்று சொல்ல…

ஓஓஓ என்றவன் அப்புறம் என்ன மச்சி உனக்கு தான் மாமா பொண்ணு இருக்கே அப்புறம் ஏன் இங்க நீ என்றதும் கண்டனுத்துடன் பார்க்க…எதுக்குடா இந்த பார்வை ..

ப்ளீஸ் டா அவ எனக்கு எவ்வளவு சேட்டையோ அந்த அளவுக்கு என் உள்ளே இருக்க துடிப்பு டா அவ என்ன தான் என்னைய பேசினாலும் அது வேற இது என் மனசுல இருக்கிற எண்ணம் வேற என்றவன் பின்னே பரத் உடன் சண்டை கட்டி கொண்டு இருந்தவளை தான் ஆராய்ந்தது.வாகி என்று வர்மன் அழைக்க இதோ வந்துட்டேன் ப்ளே பாய் என்ன விஷயம் என்று வர அடி வெளுக்க போறேன் உன்ன இதே மாதிரி பேசிட்டு இருக்காது என்றவன் அருகில் அழைத்து தன் மாமனை கை காட்டி என்னோட மாமா ,கை காட்டிய திசையில் பகலவனை பார்த்தவள் ஒரு முறை கண்மூடி திறந்தாள் யாரு வர்மன் என்றாள் திணறலுடன், அதோ வரார் பாரு பகலவன் ஐஏஎஸ் அவரு என்று சொன்ன அடுத்த நொடி ஓஓஓ என்றவள் நகர முடியாமல் அங்கே வர்மனின் பிடியில் நிற்க..,அருகில் வந்துவிட்டனர் பகலவன் தாரா மாலினி மூவரும் பகலவன் தாரா வை கைபிடித்து நிற்பதை பார்க்க பார்க்க கொதித்து கொண்டு இருக்க..

ஹாய் மாமா அத்தை என்றவன் தாரா எப்படி இருக்க..

பைன் மாமா என்றவள் அவன் கையில் படிய… மாலினி எரிச்சலில் பார்த்து கொண்டு இருந்தாள்.

இதெல்லாம் என்று மாலினி கேட்க..

நாங்க எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் அத்த..

அது சரி இந்த பொண்ணு..

வாகி மை பெஸ்டி என்றவன் அதோடு நிறுத்த..

மாலினிக்கு தான் அவளை பார்த்ததும் பொங்கி கொண்டு இருந்தது. சற்று நேரம் பேசிக்கொண்டு இருக்க மாலினி கையை விடும்மா இத்தனை பேரு இருக்க ஒரு பையனை இப்படி பிடிச்சுட்டு நிற்கலாமா…

வாகி வர்மனை முறைத்தாள் ஏதும் பேசாமல் கையை உருவிக்கொண்டு நீங்க பேசுங்க நான் வீட்டுக்கு போறேன் என்றவள் நகர்ந்து விட வீட்டிற்கு அழைத்து வந்தான் வர்மன் அன்று நடந்த சொல்லாடலில் அதன் பிறகு வர்மனை மொத்தமாக தவிர்த்து விட்டாள் வாகி. ஏற்கனவே பகலவனை பார்த்ததும் ஒதுங்க நினைத்தவள் நடந்த விஷயங்களில் மொத்தமாக ஒதுங்கி விட்டாள்..



தொடரும்