• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. சுரேஷின் நிச்சயம்

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
"இங்க பாருங்க நீங்க சொல்றிங்கன்னு அந்த லூசு பயல என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்கு நான் இப்டியே காலம் முழுக்க உங்க பொண்ணா இங்கயே இருப்பேன். என்னை விட்ருங்க." என்றாள் ஜனனி.

"இந்தா பாருடி, உங்கிட்ட யாரும் அனுமதி கேக்கல. உன் புருஷன் சுரேஷ் தான். நாளைக்கு உனக்கும் சுரேஷுக்கும் நிச்சயதார்த்தம். வாய மூடிட்டு அமைதியா கல்யாண பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா வந்து சபைல நில்லு. அவ்ளோதான் சொல்லிட்டேன்." என்றார் ஜனனியின் அம்மா ஜானகி.

"முடியவே முடியாது. நான் அவனை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்."

"அப்ப சரி. நீ உன் விருப்பப்படி இரு. நாங்க யாரும் இனி இங்க இருக்க மாட்டோம். உன்ன தொந்தரவும் பண்ண மாட்டோம். என்னங்க கிளம்புங்க நாம எங்கயாவது போலாம். அவ மட்டும் தனியா இருந்துகட்டும். இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்ல." என்றார் கோவமாக.

"சும்மா இந்த பூச்சாண்டி காட்ற வேலெல்லாம் என்கிட்டே வேணாம். நான் நீங்க சொல்றதெல்லாம் கேட்டு பயப்பட மாட்டேன்." என்றாள் பதிலுக்கு.

ஜானகிக்கு கோவம் தலைக்கேற ஒரு பெட்டியில் துணிகளை மளமளவென எடுத்து வைத்தவர். கணவரிடம் திரும்பி, "வாங்கன்னு சொல்றன்ல?" என்று அவர் கை பிடித்து வேகமாக வாசலுக்கு கூட்டி சென்றார்.

"நான் ஏதோ சும்மா சொல்றாங்கன்னு நினைச்சா உண்மையாவே போயிருவாங்களா?" என்று நினைத்தவள் வேகமாக அவர்களின் முன் போய் நின்றாள்.

"எங்க போறீங்க?" என்றாள்.

"எங்கேயோ போறோம். நீ யாரு எங்களை கேக்கறதுக்கு?" என்று அவளை தள்ளி விட்டு முன்னேறினார்.

"அம்மா சும்மா சொன்னேன். நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்?" என்றாள் பாவமாய்.

"நீ என்ன வேணா பண்ணு. எங்க பேச்சுக்கு மரியாதை தாராதவக்கூட எங்களால இருக்க முடியாது." என்று வாசல் தாண்டி காலை வைத்தார்.

"நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று கத்தினாள்.

எதுவும்பேசாமல் உள்ளே செல்ல, " அம்மா நான் தான் சரினு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் பேசமாற்றிங்க?" என்றாள் ஜனனி.

"இப்ப சரின்னு சொல்லிட்டு நாளைக்கு எதுவும் பிரச்சனை பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்?"

தன் அம்மா தலை மேல் கை வைத்து, "உங்க மேல சத்தியமா நான் அவனை (அந்த டாக) கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று தன்னறைக்கு ஓடிவிட்டாள்.

'நீ என் வாழ்க்கைல இருக்க கூடாதுனு நினைச்சா எதுக்கு திரும்பி வரணும்னு பார்க்கற? நீ மட்டும் என் கழுத்துல தாலி கட்டின உனக்கு அன்னைலருந்து ஏழரை ஸ்டார்ட்டுடி.' என்று ஜனனியும் சுரேஷும் சிரித்த மாதிரி இருக்கும் அந்த போட்டோவை எடுத்து பார்த்து பேசிக் கொண்டிருந்தாள்.

"பாவம்மா ஜனனி. ரொம்ப போர்ஸ் பண்ண வேணாம். அவளுக்கு பிடிக்கலைன்னா விட்ருலாம்." என்றார் ஜனனியின் அப்பா குமார்.

"நீஙக வேற அவளுக்கு பிடிக்கறதால தான் இவ்ளோ போர்ஸ் பண்றேன். அவன் இல்லாம இவ சந்தோஷமா இருக்க மாட்டா. நீங்க நடுவுல புகுந்து எதுவும் கெடுக்காதிங்க." என்று முறைத்தார்.

நிச்சயதார்த்தம் சுரேஷின் வீட்டில் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

சுரேஷ் தான் மிகவும் கோவமாக இருந்தான்.

யார் பேசியும் சமாதானம் ஆகவில்லை.

"டே! எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. மூஞ்சிய இஞ்சி தின்ன குரங்கு மாதிரி் வச்சுக்காத. கொஞ்சம் கல்யாண மாப்ள மாதிரி சிரி." என்றார் சுரேஷின் அம்மா.

"ஆமா.. இவங்க என்னை பாழும் கிணத்துல புடிச்சி தள்ளறாங்க. அதுக்கு வேற நான் சிரிக்கணும்." என்று தனக்குள் முனக,

"என்னது?" என்றார் அவனின் அம்மா கோவமாக.

"ஒண்ணுமில்ல சரின்னு சொன்னேன்." என்று அங்கிருந்து நகர்ந்தான்.

மஹாவும் சுபாவும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். சற்று முன் நம்மாளு சக்தியும் வந்துட்டாரு. ஆனா பாரு. வேலை எதுவுமே செய்யாம பொண்டாட்டிய சைட் அடிச்சிட்டு இருக்கான்.

சக்தியின் கழுகு பார்வையில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தாள் மஹா.

"என்னடா பண்ற நீ? என் நிச்சயத்துக்கு வந்தியா? இல்ல எங்க அண்ணியை சைட் அடிக்க வந்தியா?" என்று முதுகில் பட்டென்று ஒரு அடி போட்டான் சுரேஷ்.

"உண்மையை சொல்லவா? உனக்கு நிச்சயம் நடந்தா என்ன? நடக்கலைன்னா என்ன? நான் என் பொண்டாட்டிய பார்க்க தான் வந்தேன்" என்று கண்ணடித்தான்.

"அடப்பாவி நீயெல்லாம் ஒரு பிரெண்டா?"

"ரொம்ப ஓவரா தான் பண்ணாத. அதான் எல்லா வேலையும் எனக்கு பதில் என் டார்லிங் முடிச்சிட்டாளே... அப்புறம் என்ன உனக்கு? போய் முதல்ல ரெடி ஆகு. டைம் ஆகிடுச்சு போ." என்று சுரேஷை அவன் ரூமிற்குள் துரத்திவிட்டு வந்து மஹாவை தேடினான். எங்கும் காணவில்லை.

"எங்கடா போனா அதுக்குள்ள? என் கண்ல மண்ணை தூவிட்டு போறதுனா அல்வா சாப்பிடற மாதிரி இருக்கு அவளுக்கு. இரு எப்படியும் என்கிட்டே தான வரணும். அப்ப வச்சுகிறேன்." என்று திட்டியபடி காரினில் இருந்த இரு கவர் எடுத்துக்கொண்டு சுரேஷின் அம்மாவிடம் சென்றான்." ஆண்ட்டி இதை மஹாக்கு கொடுத்துடுங்க." என்றவனை முறைத்தார்.

"இன்னும் எத்தனை நாள் என்ன கொடுக்க சொல்லுவ? அவ உன் பொண்டாட்டி. நீயே போய் கொடுடா. எனக்கு நிறைய வேலை இருக்கு. அப்டியே நீயும் ரெடி ஆகி ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க." என்று அங்கிருந்து சென்றார்.

சிரித்துக்கொண்டே மஹாவின் அறைக்கு சென்றான்.

அவன் எதிர் பார்க்காமல் மஹா அங்கு தான், தான் ரெடி ஆவதற்கு டிரஸ் எடுத்து கொண்டிருந்தாள்.

திடிரென்று கதவு திறக்கவும், "சுபா, இங்க பாரு. இந்த சாரீ நல்லாருக்கானு இத கட்டிக்கவா?" என்று திரும்பியவள் ஷக்தி கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொணடு அவளையே பார்த்துக் கொண்டிருக்க தடுமாறி போனாள்.

"எப்ப வந்திங்க?" என்று அவனை பார்க்காமலே கேட்டாள்.

"ஹ்ம் நீ சுபான்னு நினைச்சு புடவை கேக்கும் போதே வந்துட்டேன்." என்று அவளை நெருங்கவும் மஹா மெதுவாக பின் வாங்கினாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க?" ஷக்தி

"ஒன்னும்... இல்ல... எந்த... சாரீ... கட்டறதுன்னு... பார்த்துட்டு... இருக்கேன்." என்றாள் இழுவையாக.

"இந்தா இந்த டிரஸ் போட்டுக்கோ. உனக்கு பிடிச்சிருக்கா பாரு?" என்றான் கையில் இருந்த கவரை நீட்டி.

தயங்கியபடி பார்க்க அதில் குங்கும நிறத்தில் ஜொலிப்புடன் ஒரு பட்டு புடவை மின்னியது. அவளின் கண்கள் விரிவதை பார்த்து புன்சிரிப்புடன், "உனக்கு பிடிச்சிருக்கா?"

"ரொம்ப நல்லாருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தேங்க்ஸ்." என்றாள் மெதுவாக.

"தேக்ங்ஸ் கூட கிழ பார்த்து தான் சொல்லுவியா? என்னை பாரு?" என்றான் கோவமாக.

நிமிர்ந்து அவனை நோக்க, "உனக்கு நான் யார்?" என்று அவள் கையை பற்றினான்.

அமைதியாக இருந்தாள் மஹா.

"சொல்லு நான் யாரு?"

"என் கணவர்." என்றாள் மெதுவாக.

"முதல்லஎன் கண்களை நேருக்கு நேர் பார்." என்றான் கட்டளையாக.

அவள் விழிகளில் உள்ளே ஊடுருவி, "நான் எப்போ உனக்கு தாலி கட்டினேனோ அந்த நொடிலர்ந்து என் உயிர் உடல் என்னை சார்ந்த அத்தனையும் உனக்கும் சொந்தம். அப்படியிருக்க நான வேறு நீ வேறு இல்ல அப்பறம் ஏன் எனக்கு தேங்க்ஸ் சொல்ற?" என்றான் அதட்டலாக

Thanks For your support and share your valuable votes and comments and keep supporting bye