• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
768
148
93
Jaffna
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

அத்தியாயம் 15


தன்னை அடித்த மது வர்ஷனைப் பார்த்து அதிர்ச்சியான மாயா... அதன் பின்பே சுற்றி பார்த்தவள்.... அனைவரும் தன்னையே பார்ப்பது போல தோன்ற...

கடும் கோவத்திலும்... அடி வாங்கிய அதிர்ச்சியிலும்... அவமானமாய் உணர்ந்தவள்..
சுற்றி இருந்தவர்களை முறைத்து விட்டு... சட்டென்று தான் முக பாவனையை மாற்றியவள்... இவனிடம் கோவப்பட்டால் தன் எண்ணம் பலிக்காது என்பதால்,

"வர்ஷா..... நான் மாயா..." என்று எதோ கூற வந்தவளை கைகளை நீட்டி தடுத்தவன்...

"நீ எவளா வேணா இருந்துட்டுப் போ.... தப்பை உன் மேல வெச்சுட்டு என்னோட இனியை அடிக்க வர... இது ஹாஸ்பிடல்.. இங்க எப்டி நடந்துக்கணும் எண்டு அறிவு கூட இல்லாமல் ஃபோன் நோண்டிட்டு வார... அங்க ஒரு பெரியவரை இடிச்சுட்டு சாரி சொல்லாம வந்ததும் இல்லாம.. இங்க என்னோட இனிய வேற அடிக்கிற நீ..." என்று மீண்டும் அடிக்கப் பாய்ந்தவனை.. பாய்ந்து தடுத்த அமுதா...

"பிளீஸ் வர்ஷா கொஞ்சம் அமைதியா இருங்களேன்...." என்று எவ்வளவு சொல்லியும் அவன் கோவம் மட்டும் அடங்கிய பாடு இல்லை.....


இந்த கலவரத்தில் அவன் என் இனி என்று சொன்னதை அவன் உணரவும் இல்லை... அதை கேட்க வேண்டியவளும் அவன் கோபத்தில் மிரண்டு இருந்ததால் அதை உணரக் கூட இல்லை...

ஆனால் யார் இதைக் கேட்கக் கூடாதோ அவள் சரியாக கேட்டு விட்டாள்.....


இன்று அமுதாவிற்கு இறுதி செக்கப் ஆகையால் தான் உடன் இருந்து அவளைப் பார்க்க வேண்டும் என்ற அவாவில், ஆவலாக ஓடி வந்தவன்.

வைத்திய சாலையில் நுழைந்ததுமே அவளைத் தேட...அவளோ அவன் கண்களில் அகப்படாமல் எங்கோ ஒளிந்து கொண்டு அவனைத் தவிக்க விட்டுக் கொண்டிருந்தாள்.


அந்த நேரத்தில் அவன் பார்வைக்குள் விழுந்தவள் தான் மாயா... அந்த வைத்தியசாலை வளாகத்திற்குள்... கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத... முட்டிக்காலுக்கு மேலே குட்டியாய் ஒரு ஆடையும்... மேக்அப் அவள் போட்டு உள்ளாலா... இல்லை அவளை மேக்அப் போட்டு உள்ளதா என்று எண்ணும் அளவிற்கு, தன்னிடம் உள்ள அனைத்து வகை அழகு சாதனப் பொருட்களையும் பயன் படுத்தி..
மேல்நாட்டு பொம்மை ஒன்றை இங்கு இறக்கி வைத்தது போல இருந்தவளைப் பார்த்து முகம் சுளித்தவன், அடுத்து அவள் செய்த வேளையில் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடக் கூடாது என்று நினைப்பவன் எண்ணம் தான் அவனை அந்த இடத்தில் அமைதி அடையச் செய்ததோ என்னவோ.. அமைதியாக சென்று விட்டான்....

அங்கு நடந்தது..
எதோ காணாமல் கண்டதை பார்த்தது போல, தன் கவனம் மொத்தமும் ஃபோன் லயே வைத்து வந்தவள், எதிரில் வந்த பெரியவரை மோதி விட்டாள். அந்த பெரியவரும் கையில் மருந்தை எடுத்துக் கொண்டு வந்ததால் இவளைப் பார்க்கவில்லை.

இடித்த உடனே அவளிடம் அவர் மன்னிப்பும் கேட்டு விட்டார்...

"சாரிமா தெரியாமல் பட்டுட்டு" என்று ஆனால் அவள் அந்த மனிதரை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், அவரை எதோ திட்டி விட்டு... அடிக்க வேறு கையை ஓங்கி விட்டாள்.

ஆனால் அருகில் இருந்தவர் தான் எதோ சொல்லி அவளை அழைத்துச் சென்றார்..

இவன் அவர்களை விட்டு சற்றுத் தள்ளி இருந்ததால், அவர்கள் பேச்சு இவனுக்கு விளங்கவில்லை..


அவள் திமிர்த்தனத்தைப் பார்த்து எரிச்சலுடன் தன்னவளை தேடியவன்.. சிறிது நேரத்தில் அவளைக் கண்டு கொண்டு அவளிடம் வந்தவனைத் தடுத்தது... அதே அப்ராட் பொம்மை தான்.


அந்த பெரியவரை அவள் மதிக்காததிலை எரிச்சலில் இருந்தவன்... இங்கு தன்னவளிடமும் அவள் எகிறிக் கொண்டு வரவும் பொங்கி விட்டான்.... அதன் பின் நடந்தது தான் நாம் அறிந்ததே.....


திடீர் என்று தன்னிடம் கத்திக் கொண்டு இருந்தவனைப் பார்த்து, மாயா ஜர்க் ஆனது ஒரு நிமிடம் தான்.... சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவள்..


"ஹர்ஷா..." என்றாள் பெருங்குரலெுதது.

"நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு... ஆனா உங்களுக்கு என்னை விட யாரோ ஒருத்தி க்காக என்கிட்ட சண்டை போட வரிங்க..." என்று அவனை அலட்சியமாக கேட்டவளை.. இது என்ன புது புரளி என்று ஒரு நொடி திகைத்துப் பார்த்தவன், அதன் பின்பே தந்தை சொன்னது ஞாபகம் வர...


"ஹேய்.... உன்னை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்டு கனவுல கூட நினைச்சுடாதே... அடுத்தவங்க கிட்ட எப்டி நடந்துக்கணும் எண்டு கூட தெரியாத உன்னை, நான் கல்யாணம் பண்ணுவேன் என்டு நினைக்கிறதே முட்டாள் தனம்... சும்மா தேவை இல்லாம பேசுறதை விட்டுட்டு.. பப்ளிக் ல எப்டி நடந்துக்கணும் எண்டு தெரிஞ்சிக்க பாரு.." என்று அவளைக் கத்தி விட்டு, அருகில் இருந்த அமுதாவின் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றவன்,

ஒரு மூன்று எட்டு நடந்த பின் திரும்பி வந்தான்.

இவ்வளவு நேரமும் நடந்த கலவரத்தை, எதோ கொரியன் சீரியல் ரொமான்ஸ் சீனை பார்ப்பது போல பேவென பார்த்துக் கொண்டிருந்த அகரன் தலையில் தட்டியவன்,

"இங்க என்ன படமா ஓட்டுது." என்று அவனை முறைத்து விட்டு, கையோடே அவனையும் அழைத்துச் சென்று விட்டான்.


அவன் சென்ற திசையையே கண்களில் ஒரு விரோதத்துடன் பார்த்துக் கொண்டு நின்றவள்.. உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்களை செய்வதற்காக, தன் தந்தைக்கு அழைப்பை விடுத்து ஏதோ கூறியவள், ஒரு குரோத சிரிப்புடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.





அம்முவின் வைத்தியப் பரிசோதனை முடியும் வரை கூடவே இருந்தவன், அதன் பின் அகியை தனியே அழைத்து வந்து...

"அகரா... இன்னைக்கு அம்மு கிட்ட எதுவும் சொல்ல முடியாது டா... கொஞ்சம் நிலமை சரி இல்லை." என்று எதோ கூற வந்தவனை தடுத்த அகரன்,


"சார் பிளீஸ்... போதும் இதை இந்த நிமிஷத்தோட மறந்துடுங்க....
நல்ல வேளை நீங்க அம்முக்கிட்ட உங்க லவ் ஐ சொல்றதுக்கு முதல்ல இந்த விஷயம் தெரிஞ்சது.. பிளீஸ் சார்! எங்க அம்முவை விட்டுடுங்க.. அவளால எந்த ஏமாற்றத்தையும் தாங்க முடியாது.

ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இந்த விஷயம் தெரிஞ்சு, அவ ஒரு வேளை ஏத்துக்கிட்டா கூட நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்.... உங்க வீட்ல யாருக்கும் பிடிக்காமயா.. அந்த பெண்ணை உங்களுக்கு கட்டி வைக்க யோசிச்சாங்க." என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போக...

"போதும் நிறுத்து அகரா... ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்.. நீ வேற ஏன் டா...? அந்த பொண்ணு யாருன்னு கூட தெரியாது.. அப்பா இன்னைக்கு கூப்டு, எதேதோ பேசி என்னை குழப்பம் பண்ணி விட்டுட்டாரு...

இப்போ நீயும் இப்டி சொன்னா நான் எங்கே டா போவேன்?" என்று கவலையாய் சொன்னவன், அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு சட்டென்று வெளியேறினான்...

அகரனும் அமுதாவைக் கூட்டிக் கொண்டு வீட்டில் விட்டு விட்டு, ஆபீஸ் சென்று விட்டான்.

இடையில் அவள் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவே இல்லை... அவளும் கேட்டுப் பாத்து விட்டு, அவன் எதோ ஒரு சிந்தனையில் உள்ளான் சரியானதும் தன்னிடம் தானே வர வேண்டும் என்று விட்டு விட்டாள்,

.........


ஆபீஸில் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த அகரனின் சிந்தனை முழுவதும் வர்ஷா சொன்ன வார்த்தைகள் தான் வலம் வந்து கொண்டு இருந்தது. அந்த சிந்தனையிலே வேலை செய்து கொண்டிருந்தவனை, அனைவரும் எதோ போல பார்த்துச் சென்றது வேறு கதை.......



ஆபீஸ் முழுவதும் சட்டென்று அமைதியாக.. அதன் காரணம் என்ன என்று உணர்ந்து விட்டான் அகரன்.

ஆனால் அவனைப் பார்க்கத் தான் அவனுக்கு விருப்பம் இல்லை.... ஆனாலும் தினமும் தன் முதலாளியின் ஆளுமையினை பார்த்து வியக்கும் கண்கள், அவன் சொல் பேச்சு கேட்பதாக இல்லை போல.... அவன் வரும் திசையையே பார்த்து நின்றவன் அறிந்து விட்டான்.. வர்ஷா முகத்தில தெரியும் மாற்றத்தை...


கோவம் வெறுப்பு இயலாமை என்று பல வண்ணங்கள் காட்டிய அவன் முகத்தையே இவன் பார்த்து நிற்க,, அவன் அருகில் வந்து விட்டான் வர்ஷன்.

"அகரன் கொஞ்சம் என் ரூமுக்கு வாங்க" என்று யாரோ போல சொல்லிவிட்டு அவன் செல்ல,.
அவன் பெச்சில் எதோ அன்னியத் தன்மை உணர்ந்த அகரன் துணுக்குற்றான்,..

தினமும் தன்னை அகி அகி.. என்று செல்லமாக அழைக்கும் முதலாளி, இன்று முழுப் பெயர் சொல்லி அழைக்கவும் கண்களே கலங்கி விட்டது...


அவசரமாக வர்ஷனின் அறைக்குள் சென்றவன், அவனைப் பார்க்க..
இவன் வரும் வரை எதோ சிந்தனையில் மூழ்கி இருந்தவன், அவனைக் கண்டதும் பாய்ந்து சென்று அவனை அனைத்து விட்டான்....

அப்போது தான் மூச்சே வந்தது அகரனுக்கு
எங்கு தன் முதலாளி தன்னுடன் பேசாமல் போய் விடுவாரோ என்று அவன் பதறிய பதற்றம் எல்லாம் அவனது ஒற்றை அணைப்பில் காணாமல் போய் விட்டது....


"சார்...." என்று எதோ சொல்ல வந்தவனை தடுத்தவன்,,

"பிளீஸ் அகி நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் ரொம்ப டிஸ்டர்ப் பா இருக்கேன்... கொஞ்ச நேரம் இப்டியே நில்லேன்டா." என்று சொன்னவனின் அணைப்பு நொடிக்கு நொடி கூடிக் கொண்டே போனது.

ஒரு வேளை தான் செய்யப் போகும் செயலால், இதே போல இன்னொரு அணைப்பிற்காக அவன் பல நாட்கள் ஏங்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ......



ஒரு ஐந்து நிமிடங்கள் அவனை விடாமல் அணைத்தவாறே நின்றவன்,.. தன்னை சீர் படுத்திக் கொண்டு.. அவனை விட்டு விலகியவன்,

"அகி பிளீஸ்... என்னை எதுவும் கேக்காத, நீயும் அம்முவும் இன்னைக்கு ஐந்து மணிக்கு நாம வழக்கமா போற கோவிலுக்கு வந்துடுங்க.. நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்." என்றவனிடம்..

"அம்முவுமா...?" என்று அகரன் கேட்க,

"ஆமா! பிளீஸ் நீ நினைக்கிற மாதி நான் ஒண்ணும் கெட்டவன் இல்ல அகி" என்று சோகமாய் சொன்னவனைப் பற்றி அவன் விசுவாசியிற்கு தெரியாதா என்ன?

ஆனாலும் பணக்கார வீட்டு பழக்க வழக்கம் எதுவும் தெரியாமல் எவருமே ஏற்றுக் கொள்ளாத நிலையில் தன் தோழியை எவ்வாறு அங்கு அனுப்புவது என்கிற கவலை தான் அவனுக்கு... இந்து விரலும் ஒரு போல இல்லை தானே.......


அவன் கேட்டதும் சரி என்று தலையசைத்தவன்.. அந்த இடத்தை விட்டு அகன்று விட.. இவனும் இனி செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டும் என வெளியே சென்று விட்டான்...



நான்கு முப்பது மணி அளவில் வீடு வந்த அகரன்...

அமுதாவை அழைத்து
"அம்மு வர்ஷன் சார் எதோ பேசணும் எண்டு ஐந்து மணிக்கு கோவிலுக்கு வர சொன்னாங்க... போய் வருவோமா?" என்று கேட்டவனிடம்..

"சரி அகரா.. ஆனா நீ ஏன் ஒரு மாறி இருக்க...?"

"அது சொல்லத் தெரியல்லடா.. எதோ மனசு பாரமா இருக்கு... கோவில் போனா சரி ஆகும்னு நினைக்கிறன்... பாக்கலாம்..." என்றவனை பார்த்து கண் கலங்கியவள்...

"அகரா... என்ன ஆச்சுடா உனக்கு? இங்க பாரு நான் உன் கூட தானே இருக்கேன். எதுவும் இல்லை ஓகே வா.... நாம கோவில் போனா மனசு சரி ஆகும் வா போலாம்" என்று அவசரமாக ரெடி ஆனவள்.. அவனை அழைத்துக் கொண்டு கோவிலிற்கு உள்ளே செல்ல...

அந்த இடத்தில் இவர்களின் வருகைக்கு ஏற்க்கனவே காத்துக் கொண்டு இருந்தவன் போல அவசரமாக இவர்களிடம் வந்த வர்ஷன், இருவரையும் கையோடே அழைத்துச் சென்று..

"ரெண்டு பேரும் கண்ணை மூடி சாமி கும்பிடுங்க... எதுவா இருந்தாலும் அப்றம் பேசலாம்" என்று அவர்களை இறைவனை வணங்க வைத்தவன்... அவர்கள் கண்ணை மூடிய மரு கணமே அமுதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி விட்டான்....


தன் கழுத்தில் எதோ உறுத்துவது போல தோன்றவும் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்த அமுதா... அப்போது தான் தன் கழுத்தில் தொடங்கிய தாலியைப் பார்த்து அதிர்ச்சி ஆனாள்.

தன் முன்னே நிற்பவனை ஆதங்கமும் கோவமும் கலந்து பார்த்தவள் அதிர்ச்சியில் மயங்கியே விட்டாள்...

அதில் பதறிய மது அவளை தட்டி எழுப்ப, எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்தவளைப் பார்த்து பயந்தவன், அவளை அழைத்துக் கொண்டு இருக்கும் போதே..

தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று மனம் உருக வேண்டியவன், அருகில் கேட்ட சலசலப்பிலே கண் விழித்துப் பார்த்தான்.

தன் தோழி சுய நினைவு இன்றி வர்ஷன் கைகளில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டான்...

அவசரமாக அவன் கைகளில் இருந்த தன் தோழியைத் தட்டி எழுப்பியவன்.. அப்போது தான் கண்டான்... அவள் கழுத்தில் கிடந்த தாலியை..

ஒரு நொடி அதிர்ந்து விழித்தவன்.. வர்ஷனை கோபத்தோடும், தன் தோழியை பாவமாகவும் பார்த்து நின்றான்.

அவன் தான் அறிவானே.. தன் தோழிக்கு உள்ள கல்யாணக் கனவை.... எல்லாரும் போல சுற்றத்தார் படை சூல திருமணம் செய்ய வேண்டும் என்பது அவள் ஆசை...

இந்த நொடி அவள் கனவு கனவாகவே போய் விட்டது என்பதை எண்ணி அவனுக்கு கண்ணீரே வந்து விட்டது... அவனுக்கு பயமும் தான்... தன் தோழி இப்போது கண் விழித்ததும் என்ன மனநிலையில் இருப்பாள் என்பதும் தெரியாது....


தா‌ன் தான் அவளை இங்கு அழைத்து வந்தது... இந்த பாவ செயலில் தனக்கும் பங்கு உண்டு என்று தன் தோழி நினைத்து விடுவாளோ.. என்று அவள் கண் விழிப்பதற்காக அவளை தட்டிக் கொண்டே மனத்தில் ஆயிரம் எண்ணங்களை ஓட விட்டுக்கொண்டு......
அவனுக்கு வர்ஷாவை அடிக்க வேண்டும் என்ற அளவு கோவம் தான். ஆனால் எந்த ஒரு வார்த்தையும் கூட அவனிடம் பேச வில்லை...



அங்கு வர்ஷா விற்கும் திக் திக் நிமிடங்கள் தான்... இருவரும் அவனுக்கு வேணும்......

காலையில் இருந்து அவனுக்கு நடந்து கொண்டு இருப்பது அனைத்து கெட்டதாகவே இருந்தால்...... அவன் அவள் மீது கொண்டுள்ள காதலை புரிந்து கொள்ள, இந்த ஒரு நாளே போதுமானதாக இருந்தது.

இன்னும் ஒரு நொடி கூட அவளைப் பிரியக் கூடாது என்ற எண்ணத்திலே, அவர்களை அழைத்து எவரது அனுமதியும் கூட கேட்காது தாலியையும் கட்டி விட்டான்...
 
  • Like
Reactions: Durka Janani