15.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
அன்று சென்றவள் தான் அதன் பிறகு டார்ஜீலிங் வைத்து தான் வாகியை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு தேடல், எவ்வளவு தவிப்பு ஆனால் அவளை காண முடியாமல் போனது மட்டுமே நிதர்சனம். ஒவ்வொரு முறையும் ரவியிடம் புலம்பும் போது தன்னை மீறி ரவி உளறி விட்டால் என்று எப்போதும் வேந்தன் கூடவே இருக்க பரத் அவள் எங்கேயும் உடைந்து போய் விடக்கூடாது என்று வளையமாய் நின்றான்.
வர்மன் அமைதியாக நிற்க..,வேந்தனோ சொல்லுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் நாம தான் அவ தங்கி இருந்த டியூப்ளக்ஸ் வீட்டில போய் தங்கினோம் ஆனா உங்க அத்த வந்த அன்னைக்கு நைட்டே அவளை குத்தி கிளறிட்டாங்க அவங்க விட்ட வார்த்தையை எப்பவும் வாகி மறக்க மாட்ட அதெல்லாம் கூட அவ கடந்துட்டா அவளால கடக்க முடியாம இருந்தது பகலவன் சாரை தான் . உனக்கு இப்ப தானே தெரியும் உங்க அத்த பொண்ணு ன்னு ஆனா வாகி அன்னைக்கு அவரை பார்த்ததும் உன்னைய யாரு ன்னு தெரிஞ்சுக்கிட்டா அதான் அவ விலகி இருக்கா அது தான் எல்லாருக்கும் நல்லது பார்த்துக்க, அப்புறம் உங்க தாத்தா ஒரு ப்ரபோசல் வச்சு இருந்தார் உனக்கும் தெரியும் .அது சரி வராது வர்மா நீயே அதை ஸ்டாப் பண்ணிடு என்றவன், போகலாம் பரத் வா என்றவன், ரவியை பார்த்து நீ இருந்துட்டு வாடா என்று நகர்ந்து விட..
நானும் கிளம்புறேன் டா பார்த்துக்க அப்புறம் நடக்கிறது என்னனு கொஞ்சம் சரியா பாரு என்று வர்மனை தோள் தட்டி சென்று விட்டான் ரவி.
அனைவரும் போவதை தான் பார்த்து கொண்டு இருந்தார் பகலவன் இனி எந்த காலத்திலும் ரிஷி தன்னை நினைப்பது போல இல்லை என்று உணர்ந்தவன் அப்படியே அமர்ந்து இருக்க…
என்ன உங்க பழைய கனவுகளா? இவங்க தான் உங்க மனைவியா உங்க பொண்ணா என்று தாரா கேட்க..
தாராம்மா என்றார் பகலவன் .
போதும் இதுவரை நீங்க நடிச்சது எனக்கு அப்பா இல்லன்னு நினைச்சுக்கிறேன் என்றவள் எப்பவும் எதுக்கும் எங்களை தேடி வராதீங்க என்று சொல்லிவிட அதிர்ந்து விட்டார் பகலவன்
என்னடா பேசுற..
உண்மையை தான், இங்க என் அம்மா குற்றவாளியா நிக்குறாங்க அதை என்ன ஏதுன்னு பார்க்க மனசு இல்ல ஆனா அந்த லேடியை நீங்க பார்த்துட்டு இருக்கீங்க, கண்ணீர் விடுவீங்க, உருகுறீங்க என்றவள் படக்கென எழுந்து வெளியேற சோர்ந்து போய்விட்டார் பகலவன்.
தன் மனைவி பிள்ளைகளை நினைக்கவோ பார்க்கவோ கூட முடியாத இடத்தில் அல்லவா காலம் அமர்த்தி விட்டது ஒரு பெருமூச்சுடன் எழுந்து செல்ல அடுத்த இரண்டு நாட்களில் மாலினியை மட்டும் ஜாமினில் எடுத்து இருந்தனர் அதுவும் தற்போதைய கேஸில் மாலினி ஒரு பொறுப்பாளராய் கூட இதில் இல்லை என்று வாதிட்டு வாங்கி இருந்தனர்.மொத்த பழியும் பல்லவி மீது விழ,ராமைய்யா துடித்து போய் இருந்தார்.
ஊடகங்கள் அனைத்திலும் முதல்வரின் குடும்பமே பெண் பிள்ளைகளின் வாழ்வில் விளையாட எப்படி இவர்கள் நாட்டை காப்பாற்ற என்று எதிர்த்து நிற்க மொத்த அரசியல் வாழ்க்கைக்கும் முடிவு நெருங்கி கொண்டு இருந்தது. சென்னையில் விதுரிஷி தங்கி இருந்த அபார்ட்மெண்டில் தான் இப்போது ஆதி, ரிஷி, வாகி என்று அனைவரும் இருக்க அந்த இடமே மொத்த பாதுகாப்பு வளையத்தில் வந்து இருந்தது.
சாமியப்பனை அன்று ஆஜர் செய்ததோடு அவரை எங்கே அழைத்து சென்றாள் என்று யாருக்கும் இதுவரை தெரியாது .ராமைய்யா அலசி எடுத்து விட்டார் ஆனால் ஒரு பலனும் இல்லை இதோ இந்த நடுஇரவில் வந்து காத்து கொண்டு இருக்கிறார் தன் மகளுக்காக மட்டுமல்ல தன் மொத்த அரசியல் வாழ்வையும் காப்பாற்றி கொள்ள.
ராமைய்யா வந்து ஒரு மணிநேரம் தாண்டி இருந்தது ஆனால் வரவேண்டியவர்களோ வந்து சேரவில்லை மொத்த எரிச்சலையும் காரில் உள்ள பொருட்களின் மீது காட்டி கொண்டு இருந்தார் . எதிரில் மெதுவாக வந்து நின்றது அந்த வண்டி…
பயம் இல்லாம போச்சு ப்ச் எப்ப வரா பாரு அநாதை கழுதை என்று முணுமுணுக்க..
வண்டியிலிருந்து எவரும் இறங்கவில்லை.
என்னையா இன்னும் வராம என்னனு போய் பாரு என்று தன் பிஏ வை அனுப்ப அவனோ அடித்து பிடித்து ஓடி வந்தவன் சார் என்று தயங்க..
என்னையா..
உங்களை அவங்க காருக்கு வரச் சொல்லுறாங்க என்றதும் கடுப்பானவர் டேய் நான் யாரு என்று ஆரம்பிக்கவும் அவர் பிஏ வோ சார் உங்களுக்கு தேவைன்னா நீங்க தான் வரனும் ன்னு சொல்லுறாங்க என்று சொல்ல
ப்ச் ச்சே எல்லாம் என்று தலையில் அடித்து கொண்டு இறங்கி காரை நோக்கி சென்றவர் உள்ளே செல்ல பார்க்க தலையை நீட்டி சொல்லுங்க என்று சொன்னவளை பார்த்து கொதித்தவர் என்ன திமிரா எங்க உன்னோட அம்மா…
அம்மா பேசமாட்டாங்க ராமைய்யா சார் நான் தான் பேசுவேன் என்னனு சொல்லுங்க ?
உன் அடாவடி தனத்துக்கு அளவில்லையா வாகி…
லுக் மிஸ்டர் ராமைய்யா இப்ப எதுக்கு வரச் சொன்னீங்க என்று வாகி கேட்க..
இந்த கேஸை திரும்ப வாங்கனும் என்று சொல்ல..
முடியாது வேற ..
வாகி..
வேற எதுவுமா இருந்தாலும் எங்க அம்மா பண்ண மாட்டாங்க உங்களால் ஆனதை பார்த்துக்கோங்க ..
வாகி…
உங்க பக்கம் தப்பு இல்லன்னா நேரா கோர்ட்டில் மோதுங்க முடியலையா வேற வழி பாருங்க என்றவள் கதவை சாற்றி விட..
ஹேய் என்றார் ராமைய்யா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வண்டியை கிளப்பிவிட வண்டி கிளம்பிட பின்னே அந்த வண்டி நகர்ந்த இடத்தில் நின்று இருந்தான் வர்மன்.
வர்மா என்று ராமைய்யா பதற..
என்ன தாத்தா இது அப்ப அம்மு சொன்னது எல்லாம் உண்மையா..
என்ன உண்மை…
நம்ம காலேஜ் வெளிய சுத்தில் நடக்கிறது என்று வர்மன் தழுதழுக்க..
வர்மா பிசினஸ் ன்னு வந்துட்டா சிலது நடக்கத்தான் செய்யும் ஆனா நாம எந்த தப்பும் பண்ணல என்று ராமைய்யா சொல்ல..
என்ன தப்பு பண்ணல தாத்தா என்றான் வர்மன்
எந்த தப்புமே பண்ணல வர்மா இதெல்லாம் இடையில் இருக்கிறவங்க பண்ணுறது நாம இதுக்கு பொறுப்பாக முடியாது என்று சொல்ல ச்சை என்று இருந்தது வர்மனுக்கு அதற்கு மேல் அவரிடம் பேச பிடிக்காமல் வர்மன் கிளம்பிவிட..
ராமைய்யா தன் பிஏ வை பார்த்தவர் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க நான் வரது வர்மனுக்கு தெரிய கூடாதுன்னு சொன்னேன் இல்ல என்று எகிற..
சார் அவர் ஆபிஸ் விசயமா பேசிட்டு இருக்கிறதை பசங்க சொன்னதும் தான் சார் நாம் டைம் பிக்ஸ் பண்ணி கிளம்பியது ஆனா அவர் இங்க என்று பிஏ உளற…
ப்ச் கிளம்பு என்றவர் வண்டி ஏறி விட..
ரவி, “ சாரி மச்சான் நீ குழம்ப கூடாது மன உளைச்சலுக்கு ஆளாக கூடாதுன்னு தான் இங்க அழைச்சிட்டு வந்தேன். அதோட எந்த பிரச்சனையிலும் நீ மாட்டிக்கிட்டு.... எனக்கு பிடிக்காது அதான் என்று சொல்ல..
தேங்க்ஸ் ஆனா என்னோட குடும்பம் அவங்களை எப்படி விட்டு தரமுடியும் என்றவன் போனை வைத்து விட..
அவர் அப்படி தான் பேசுவார் அண்ணா அது தான் ஏற்கனவே தெரிஞ்ச விஷயமாச்சே விடுங்க அவங்க அம்மாவை அத்தையை காப்பாத்துறது அவரோட பிரச்சினை என்று வாகி முடிக்க…இங்கே அபார்ட்மெண்ட் வீட்டு வாசலில் பகலவன் நின்று இருந்தார்.
அம்பிகை கதவை திற உன்னையே பார்க்காம போக மாட்டேன் என்று வாசலில் நிற்க, கேட்டின் உள்ளே என்ன செய்வது என்று விது அமைதியாக நின்று இருந்தான்.
ஆதி, “ சார் நீங்க வாகி பர்மிஷன் இல்லாம உள்ள வரமுடியாது ப்ளீஸ் கிளம்புங்க என்றதும்.
என் பொண்டாட்டியை பார்க்க அனுமதி வேணுமா என்னடா பேசுறீங்க என்று பகலவன் எகிற..
ப்ளீஸ் நீங்க போய்டுங்க அக்கா வந்தா பிரச்சினை ஆகிடும் என்று விது சொன்னதும் டேய் நீ அந்த ஆசிரமத்தில் என்று பகலவன் தடுமாற..
அதுவரை பாவமாக நினைத்து கொண்டு நின்றவன் விரைப்பாக நான் விதுரிஷி ரிஷிபாலா மகன் வேற என்ன தெரியனும் உங்களுக்கு என்று கத்தி விட.. உறைந்து போய் நின்றார் பகலவன் அப்ப உன்னோட ரிஷி அம்மா இன்னொரு கல்யாணம் என்று கேட்க..
ச்சே வாயை மூடுங்க உங்களை மாதிரி எதையும் எடுத்தோம் கவுத்தோம் ன்னு செய்யுறவங்க எங்க அம்மா இல்ல என்றவன் அதுவரை திறந்து வைத்து இருந்த கதவையும் அடைத்து விட்டு வந்து சோபாவில் அமர…
ஆதி, “ என்னடா பொங்கிட்ட உங்க அப்பா தானே?
அண்ணா பேசாம போய்டுங்க என்று சாய்ந்து அமர சரி சரி கூல் டா
அம்மாவை நினைச்சு தான் கஷ்டமா இருக்கு என்று விது கண்கலங்க..விடுடா..
எப்படி அண்ணா அம்மா என்னைய வந்து கூட்டிட்டு போறது கூட அவருக்கு தகவல் போகாம இருந்து இருக்காது அப்ப கூட அவருக்கு அம்மாவை தேட தோணல..
ஆதி, “ விது முடிஞ்சது அதை தோண்ட வேணாம் விடு என்று சமாதானம் சொல்ல கதவை திறந்து கொண்டு ரிஷி வர தன்னை சரிபடுத்தி கொண்டு ம்மா என்று விது அழைக்க அப்பா கிளம்பிட்டாரா விது..ம்ம்ம் என்னடா இப்படி இருக்க..
கிளம்பிட்டாரு உன் வீட்டுக்காரர்
ஏன் தங்கம் இவ்வளவு கோபம்
பின்ன அவரை அப்பான்னு கூப்பிட எனக்கு விருப்பம் இல்லம்மா என்று சொல்ல..
விது அவர் சூழ்நிலை அப்படி நாங்க சேர்ந்து இருந்தா எப்பவும் சந்தோஷம் இல்ல அதான் அம்மா அவரை தேடி போகல இருக்கிற சந்தோஷம் போதும் ன்னு முடிவு பண்ணது நான் தான் அவருக்கு என்ன தெரியும் நான் இறந்துட்டேன்னு அவர் நினைச்சு தானே…
அதுக்காக …
அவருக்கு ஏற்கனவே பேசின பொண்ணு தான் மாலினி நான் தான் இடையில் வந்தேன் விது என்று ரிஷி சொல்ல..
ம்மா வேண்டாம் அவரு தானே உங்களைத் தான் கட்டுவேன்னு கட்டினது அப்புறம் எப்படி என்று முகத்தை தூக்கி கொள்ள
உனக்கு புரியாது டா நாங்க எவ்வளவு தூரமா இருந்தாலும் எங்க அன்பு நிரந்தரமானது ஆன அந்த அன்பு எங்களுக்கே ஆபத்துன்னு தெரிஞ்சும் நான் ஒதுங்கிட்டேன் என் பிள்ளைங்க வேணுமே என்னை நம்பி இருக்க நீங்க தானே எனக்கு ….
தொடரும்