16.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
அதற்கு மேல் தாமதிக்க விரும்பவில்லை வர்மன் என்ன நடந்தது எதற்காக நடந்தது எப்படியான விஷயங்கள் என்று ஆராய முனைய எந்த இடத்திலும் அவனுக்கு துப்பு கிடைக்கவில்லை எதற்காக நடந்தது என்று சம்பந்தப்பட்ட நபர்களை தவிர வேறு எவரும் சொன்னாலும் புரியாது கடைசி முயற்சியாய் வாகிக்கு அழைத்தான் வர்மன்.
என்ன விஷயம்.?
அம்மு..
நிமாவாகினி என்றாள் நிமிர்வாக..
ப்ச் அது ஊருக்கு டி எனக்கு என் அம்மு டி அதை விடு எனக்கு இந்த விஷயம் என்ன ஏதுன்னு தெரியனும் சொல்லுவியா..?
தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க.?
அப்ப நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?
தெரிஞ்சு எந்த பலனும் இல்லை இப்ப நடக்கிற கேஸ் எல்லாம் முடிவுக்கே வராதது அதாவது கடந்துபோன விஷயங்கள் அதை தேடினா எந்த பலனும் இல்லை ஆனா தண்டனை வாங்கி தரனுமே அதுக்கு தான் இந்த கேஸ்.
என் பக்கத்தில் இருந்து உனக்கு எதாவது உதவி என்று தயங்கி கேட்க…
சந்தோஷம் எல்லாம் தகவலும் என்கிட்டேயே இருக்கு சாரி டூ சே திஸ் உங்க அம்மா க்கு எது நடந்தாலும் அதுக்கு நானோ எங்க அம்மாவோ பொறுப்பு இல்ல என்றவள் போனை அணைத்து விட..
இந்த பக்கம் இருந்தவனுக்கு அடுத்த கட்ட அதிர்வும், மன உளைச்சலும் அதிகமாகி இருந்தது .இருந்த பிரச்சினையில் இதுவரை தாயை போய் பார்க்கவே இல்லை.தாய்க்கு ராமைய்யா தன்னை தவிர வேற எதுவும் உலகம் இல்லை பரபரப்பாக வக்கீலை அழைத்து தாயை பார்க்க அந்த நேரத்தில் கிளம்ப..
சார் இப்ப பார்க்க முடியாது . நீங்க நாளைக்கு மதியம் போல் வாங்க என்று சொல்ல அந்த விடியற்காலை அவனுக்கு எப்போது மதியம் ஆகும் என்று இருந்தது. விடியற்காலையில் வீட்டிற்குள் வந்து மகளை பார்த்த ரிஷி..
என்ன வாகி நைட் வீட்டுக்கு வரவே இல்ல…
இல்லம்மா கொஞ்சம் வேலை…
போதும் வாகி நமக்காக கொஞ்சம் வாழனும் …ஓஓஓ வாழலாமே நான் எப்ப வேண்டாம் ன்னு சொன்னேன் என்றவள் டேய் விது என்னைய தொந்தரவு பண்ணாத கொஞ்சம் ரெஸ்ட் என்றவள் அவன் அறைக்குள் நுழைந்து படுத்துவிட்டாள்…
இங்கே உறக்கமே இல்லாமல் இருந்தவன் சரியாக மதியம் பனிரெண்டு நெருங்கியே நேரம் தாயை பார்க்க வர..
வக்கீல்… சார் உங்களை பார்க்க விரும்பலன்னு சொல்லுறாங்க என்று சொல்ல..
ஏன் என்னாச்சு அம்மாக்கு..
நல்லா தான் இருக்காங்க சார் ஆனா பார்க்கவேண்டாம் ன்னு பிடிவாதமா இருக்காங்க என்று சொல்ல…தாத்தா வந்து இருக்காங்கன்னு சொல்லுங்க சார் என்று வர்மன் எடுத்து தர..அடுத்த அரைமணிநேரத்தில் பார்க்க வந்து இருந்தார் பல்லவி…
என்னமா கோவம் உங்களுக்கு…
அவனை பார்த்ததும் அந்த அநாதையோட பொண்ணை உனக்கு தெரியுமா? என்று பல்லவி கேட்க..
பகலவன் மாமா பொண்ணை எனக்கு தெரியும் மா என்று வர்மனும் விடாமல் பேச..
ஓஓஓ அந்த அளவுக்கு என்றவர் நீ கிளம்பலாம் வர்மா..
அம்மா…
அந்த நியாபகம் இருக்கா உனக்கு..
என்னம்மா இது என்ன பிரச்சினை இதை எப்படி முடிக்கலாம் ன்னு நான் மண்ட காஞ்சுட்டு இருக்கேன் நீங்க இப்படி பேசுறீங்க
உள்ள வந்த எனக்கு எப்படி வெளியே வரனும் ன்னு தெரியும் வர்மா நீ போகலாம் என்று சொல்ல வர்மன் அமைதியாக எழ…
சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளே நுழைந்து இருந்தார்..
என்ன வர்மன் இங்க இருக்கீங்க என்றவன் அம்மாவ பார்க்கவா என்றவர் பல்லவி மா…
நீ போகலாம் வர்மா…
அம்மா…
போகலாம் ன்னு சொல்லிட்டேன் என்று சொல்ல.
விருட்டென வெளியேறிய வர்மன் கையோடு ஒரு ஆளை வைத்து அமைச்சர் எதுக்கு வந்து இருக்கிறார் என்று விசாரிக்க சொல்லிவிட்டு கிளம்பி இருந்தான்.
இன்னும் எத்தனை நாளைக்கு நான் இங்க இருக்கனும் என்று பல்லவி ஆரம்பிக்க என்ன பல்லவி இது இப்படி கேட்டா எப்படி ஏற்கனவே ஒரு ப்ரோஜெக்ட் பாதியில நிக்குது இப்ப இந்த பிரச்சினை வேற… நீ வேற நேர்ல வரச் சொல்லி டார்ச்சர் பண்ணுற இப்ப என்னையும் தானே விசாரிப்பாங்க என்று வந்தவர் சொல்ல…
ஓஓஓ அப்படியா அப்ப நான் மட்டும் உள்ள இருந்து பிரச்சினையை சமாளிக்கனும் நீங்க சுதந்திரமா இருக்கனுமா…?
அப்படி சொல்ல வரல பல்லவி இதெல்லாம் பிசினஸ் ல சாதாரணம் ஆனா இப்ப மாட்டிக்கிட்டு அதுல இருந்து வெளியே வர நாம யாராவது வெளியே இருக்க வேண்டாமா என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே செய்தி வெளியாகி இருந்தது ராமைய்யா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று.
அமைச்சரின் போனுக்கு அழைப்பு வர செய்தியில் சொல்லப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்டு ஓஓஓ சரி நான் பார்க்கிறேன் என்றவர் நான் கிளம்புறேன் பல்லவி உங்க அப்பா ராஜினாமா பண்ணிட்டார் ..
ப்ச் எதுக்கு அவசரப்படனும் என்று அமைச்சர் கேட்க..
அப்பா ஏதோ ஃப்ளான் பண்ணிட்டாங்க அதான் என்றவள் சாமியப்பன் எங்க ?
தெரியல கண்டுபிடிக்க முடியல நாம் ஒரு அடி எடுத்து வைக்கிறதுக்குள்ள ரிஷி பொண்ணு பதினாறு அடி பாஞ்சுடுறா.
ரிஷி யா? ரிஷியோட பொண்ணா…?
சென்ட்ரல் மினிஸ்டர் நிமாவாகினி என்றார் அவர்..
ப்ச் அவளை முடிக்க ஆளை இறக்க வேண்டியது தானே…?
பல்லவி அவளுக்கு பாதுகாப்புக்கு ஆள் இருக்கிறது மட்டும் இல்ல தனி பாதுகாப்பு இருக்கு…
அப்படி என்ன பெரிய பாதுகாப்பு…
வர்மன் ஆட்கள் என்று அவர் சொல்ல படக்கென எழுந்தவள் இது எப்ப இருந்து?
இது பல வருஷமா இருக்கும் போல என்றவர் ஆனா இப்ப தான் டைட் பண்ணி இருக்கு தம்பி பார்த்துக்க நமக்கு எதிராக எதுவும் பண்ணாம இருந்தா சரி என்றவர் கிளம்பிவிட
வர்மன் வீட்டிற்கு வந்தவன் விசாரணை இடத்தில் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு அறைக்குள் நுழைய உள்ளே அமர்ந்து இருந்தார் பகலவன்.
என்ன மாமா ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க என்னாச்சு…
ஒன்னும் இல்ல வர்மா இதை தரத்தான் வந்தேன் என்று சில புகைப்படங்களும் ஒரு பென்டிரைவ் தர…
என்ன மாமா என்றான் புருவம் உயர்த்தி..
இது சில எவிடென்ஸ் இதை ரிஷி தான் என்கிட்ட தந்தா கடைசியில் அவளை அதுக்கு அப்புறம் பார்க்க மாட்டேன் ன்னு தெரியல எனக்கு என்றவர் கண்மூடி அமர்ந்து விட…
இது நம்ம காலேஜ் சம்பந்தபட்டதா?
இல்ல சில பிசினஸ் க்கு யூஸ் பண்ணி இருக்காங்க என்றவர் அமைதியாக இருக்க..
எதை யூஸ் பண்ணாங்க மாமா என்றான் வர்மன்.
….
ப்ச் சொல்லுங்க மாமா…
சிலர் பணம், சிலர் ப்ராப்ர்டி, சிலர் பணத்தோடு ஒரு நாளைக்கு என்று நிறுத்தி விட..
மாமா …
என்னால சொல்ல முடியலடா நீயே அதை பார்த்து தெரிஞ்சுக்க என்று சொன்னதும் …என் கண்ணால் நான் அதை பார்க்கணுமா மாமா…
வர்மா என்று அவர் தடுமாற…
நீங்க ஏன் மாமா இதை தடுக்கல…
என்னால முடியல வர்மா..
அப்ப அத்தையால மட்டும் எப்படி முடிஞ்சது..
……
ஏன் மாமா அமைதியா இருக்கீங்க…
என் குடும்பம் ன்னு சுயநலம் தான்..
ஓஓஓ அப்ப உங்க பொண்ணை இப்படி…
வர்மா என்று எழுந்து விட..
சபாஷ் அப்ப அடுத்த வீட்டு பொண்ணு கற்பு சாதாரணம் எல்லாருக்குமே அப்படித்தானே என்றவன் உடனே ரவிக்கு அழைக்க…
சொல்லுடா…
உன்னையே பார்க்கனும் ..
எங்க வரனும்..
நீ வராத நான் வரேன் அம்மு எங்க இருக்கா..
டேய்…
சொல்லி தொலைடா…
வீட்டில் தான் இப்ப தான் தூங்குறா…
அவளுக்கு நிம்மதி இருக்கு இங்க நிம்மதியை தொலைச்சிட்டேன் என்றவன் ஒரு மணிநேரத்துல வரேன் வை என்றவன் கிளம்பிவிட்டான்.
ரவி, “ அம்மா வர்மா வரான்.
ஏன் எதுக்கு இங்க என்னாச்சு ரவி.
ப்ச் அம்மா எதுக்கு பதட்டம் அதான் நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல…
அது இல்ல அவனுக்கு…
அவன் நல்லா தான் இருக்கான் என்று சொன்னவன் அவனுக்காக காத்து இருக்க சொன்னது போல் வந்தவன் யாரையும் பார்க்காமல் ஒரு கவரை நீட்டி இது உதவியா இருக்கும் பகலவன் மாமா தந்தாங்க இதை அத்த தான் அவர்கிட்ட தந்து இருக்காங்க என்று சொன்னவன் நிமிர்ந்து கூட பார்க்காமல் கிளம்பிவிட…
செய்தித்தாள்களில் குடும்பத்தை பற்றி நார் நாராக கிழித்து கொண்டு இருந்தனர்.
எதையுமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ராமைய்யா அவருடைய கவனம் எல்லாம் இதிலிருந்து விடுபடுவதிலேயே இருக்க அவரை மொத்தமாக முடக்குவதில் இருந்தாள் நிமாவாகினி…
எந்த இடத்திலும் நழுவி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க அடுத்த அடுத்த ஆதாரங்கள் வெளியே வர காத்து இருந்தது. இதில் பெரிய ஆட்களின் தலையீடு இருக்க எதைப்பற்றியும் கவலை கொள்ளவில்லை வாகி… அன்றே தனி பாதுகாப்பு ஏற்படுத்தி இருக்க அதிலும் நால்வர் தங்கள் உயிரை இழந்து இருந்தனர்.
ராமைய்யா அவர் வேலையை ஆரம்பித்து இருந்தார். அவர் கை வைத்தது வெளியே இருக்கும் பாதுகாவலர்களை தான் என்றாலும் ரிஷி சற்றே கலங்கி இருந்தார்..
வேணாம் வாகி இதோட விடுவோம் நாம பாதுகாப்பா இருக்க இதோ இந்த நாலுபேர் இறந்துட்டாங்க என்று கலங்கிவிட…
அம்மா….என்றாள் தூக்க கலக்கத்தில்..
போதும் வாகி நீ முழிச்சுக்கோ அங்க நாலு உயிர் போய்டுச்சு என்று அரற்ற.நன்கு முழித்தவள் எழுந்து அமர்ந்து அம்மா அவங்க எல்லாம் உயிரோட தான் இருக்காங்க நீ எதுக்கு இவ்வளவு பயப்படுற என்று போனை எடுத்து விசாரிக்க எல்லாரும் சேப் மேடம் நீங்க சொன்ன ட்ரிக் சக்ஸஸ் என்றதும் ஓகே சார் டேக் கேர் என்றவள் போனை போட்டு விட்டு யாருக்கும் எதுவும் இல்ல இப்ப தெரிஞ்சது கூட உலகத்துக்காக தான் நீ எதுக்கும் பயப்படாத என்றவள் முகம் கழுவி வர..
இந்தா வாகி என்றான் ரவி..
என்ன அண்ணா..
வர்மா வந்தான் என்று சொல்ல அவள் மொபைலுக்கு ஏற்கனவே அவன் வந்து சென்றது பற்றிய தகவல் வந்து இருந்தது.
ம்ம்ம்…
அவனை நம்பு வாகி அவன் தப்பானவன் இல்ல…
நான் தப்பானவங்கன்னு சொல்லலையே அண்ணா…
வாகி…
ப்ச் விடுங்க இருக்கிற விஷயத்தை பார்ப்போம் என்றவள் அதை எடுத்து கொண்டு அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.
அந்த பென்ட்ரைவ் தந்த ஒவ்வொரு விஷயங்களும் நெஞ்சை உலுக்கி கொண்டு இருந்தது….
தொடரும்