• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
அதன்பிறகு சைலுவின் சொற்படியே துஷா வர்மனோடே வீடு வந்தாள்.

அன்று இரவு எதையோ சிந்தித்தபடி கட்டிலில் படுத்திருந்து விட்டத்தை, வெறித்து பார்த்தவாறு இருக்க.

அவள் அருகில் வந்தமர்ந்த சைலு "அங்கு என்ன தெரிகிறது?" வடிவேல் பாணியில் அவனைப்போலவே செய்து கேட்க,

"ஏய்....! ச்ச்சீ தள்ளிப்போ!" என அவளை தள்ளி விட்டவள்,

"ரெண்டு நாளாவே இந்த சிரிக்க தெரியாதன் முகம், நல்லாவே இல்லடி! எனக்கென்னவோ தப்பா படுது.

முன்னம் எல்லாம் சூப்பர் மார்கேட்டே கதி என்டு அதுக்குள்ளயே கிடப்பான். நாங்கள் எலாம் எப்படா இந்த விறுமாண்டி வெளிய போகும், அப்ப தான் மூச்சே வரும் என்டு நினைக்கிற அளவுக்கு அதையே சுத்தி வருவான்.

ஆனா இந்த ரெண்டு நாளா, ஆளையே காணக் கிடைக்கேல...
அப்பிடியே வந்தாலும், அவன்ர போன் சிணுங்கினா சரி,... அதை காதில வைக்கிறது தான் தெரியும், இதோ வந்திர்றன் என்டு தான் சொல்லுவான், அடுத்த நிமிஷம் ஆள காணக் கிடைக்காது.


முன்ன இல்லாத யோசனை முகத்தில.... ஏதான் பிரச்சினையா இருக்குமோ?" அவளுக்கு ஏதோ விடை தெரியும் போல் அவளை கேட்டாள்.

"அதானே பாத்தன்... எலி ஏன் அம்மணமா ஓடுதென்டு!
மேடத்துக்கு அவங்க ஆளை பற்றித்தான் யோசினையாே? இப்பவே இப்பிடி அக்கறையா இருக்காதடி! பிறகு சின்ன விசயத்துக்கும், அக்கறை படேல என்டு, தொட்டதுக்கெல்லாம் சண்டை வரும். பாத்து நடந்துக்கோ!" சீனியராக எச்சரித்தாள்.

"மச்சி உன்னை நான் ஒன்று கேக்கவா?" தீவிரமான அவள் பார்வையில்,

"என்ன கேள்! அதுக்கு தான் நான் இருக்கனே!" சீனியராக மீண்டும் அவளுக்கு அறிவுரை வழங்க தயாரானாள்.

"இல்ல மச்சி! உனக்கு மூளை என்டு ஏதாவது இருக்கா? இல்லையா?

அந்த சிடு மூஞ்சில நான் அக்கறை படுறன் என்டா இதெல்லாம் நீ என்னட்ட சொல்லுற.? அவன்ல எனக்கென்னடி அக்கறை....?

அவன் எப்பிடி என்டாலும் போகட்டும், என்ர பயம் என்னன்டா, எனக்கு எதிரா எதாச்சும் சதி பண்றானோ என்டு தான்." என்றாள் கவலையாக..

"மேடம் பெரிய ஆளும் கட்சி தலைவி! அவர் எதிர்கட்சி தலைவர். இவங்களுக்கு எதிரா அவர் சதி பின்னுறார்." நக்கலே தொறித்தது.

"உனக்கு அவனை பற்றி தெரியாது சைலு! அவனை பார்த்த நாள்ல இருந்து, இன்டைக்கு வரைக்கும், தொல்லை பண்ணிட்டு தான் இருப்பான்.. திடீர் என்டு மந்திரிச்சு விட்டா மாதிரி திரிஞ்சா.... ஏதோ இருக்கென்டு தானே அர்த்தம்."


"அத தான் நானும் சொல்லுறன் துஷா! ஏதோ இருக்கு... அந்த ஏதோ எதன்டு தெரியுமாே? சாருக்கு உன்னில இது ..." விட்ட இடத்திலேயே மீண்டும் வந்து நின்றாள்.

"சைலு ப்ளீஸ்.... இத மாதிரி இனி பேசாதா! உனக்கொன்டு தெரியுமா? அப்பா எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்கிறாராம். வாசன் அங்கிள் தான் சொன்னார்." கூறும்போதே கண்கள் கலங்கியது.

எங்கே சைலு அதை பார்த்து விடுவாளோ என்று அதை மறைத்தவள்,

"இனிமேல் தேவையில்லாம கதைக்காத... அப்பா ஆசை படி, அவர் பாத்த மாப்பிள்ளையே கல்யாணம் செய்யோணும். இது நீ சொல்லுற மாதிரி, ரதனே என்னட்ட வந்து, தன்ர காதல சொன்னாலும், என்ர முடிவு இது தான்" உறுதியாக சொன்னவள்,


"நான் யோசிக்கிறது அது இல்லடி! எனக்கு என்னமோ... இவனா போய் பிரச்சினையில மாட்டியிருப்பானோ என்டது தான்" என்றாள் கவலையாக..

"உனக்கு தான் அவன்ல எந்த எண்ணமும் இல்லையே! பிறகென்ன அவனை பற்றி யோசனை! ஒன்டும் இல்லாத எங்களுக்கே, ஆயிரம் பிரச்சினை இருக்கேக்க, அவ்ளோ பெரிய தொழில் செய்யிற அவனுக்கு, எவ்வளவு பிரச்சினை இருக்கும்....

நீ ஏன் அவன பற்றி யோசிக்கிற? ப்றீயா விடு!" என்றவள் போர்வையை இழுத்துப்போர்த்து கண்களை மூடிக்காண்டாள்.
துஷாவுக்கு தான் மனம் ஏனோ நெருடலாகவே இருந்தது.



அடுத்த நாள் அவள் வேலையில் கவனமாக இருந்தவளை தேடிவந்தான் வர்மன்.

"துஷா....! ரதன் சார் வர சொன்னார் என்னன்டு போய் கேள்!" என்று விட்டு சென்றான்.


அவன் அறை கதவை தட்டி உள்ளே சென்றவள், அந்த அறையினில் புதிதாக மேசை ஒன்று வைக்கபட்டு, சில குறிப்பு கோப்புகள் அடுக்க பட்டிருப்பதை கண்டவள் இமைகள், கேள்வியாய் சுருங்கிய மறுநொடியே,

'அவன் அறை... என்னமோ பண்ணுறான். எனக்கென்ன....?'



அவளது முக மாற்றத்தை பார்த்தவன்,

எப்பிடித்தான் அவ்வளவு உணர்வையும் இந்த முகத்துக்கு பின்னாடி மறைக்கிறாளோ! எல்லாத்தையும் சாதாரணமா மறைச்சுட்டு, ஏதார்த்தமா நிக்கிறமாதிரி நடிக்கறத பாரு...


இருடி.... உன்னை உனக்கே படம் போட்டு காட்டுறன். அப்ப தெரியும் ரதன் என்டா யார் என்டு." என நினைத்தவன்.

"என்ன யோசனை...? ஏன் கூப்பிட்டு அனுப்பினன் என்டு கேக்க மாட்டியோ..?" புருவங்களை வளைத்து வினவியவன் கேள்வியில்,

'நான் ஏன் விருமாண்டி கேக்க போறன்.? கூப்பிட்டு அனுப்பின நீயே சொல்லு.... என்ன கேக்க சொல்லீட்டு, என் வாயாலையே எனக்கு சங்கூதப்பாக்கிறியா?' மனதுக்குள் தான் நினைத்துக்காண்டாள்.

"சரி நானே சொல்லுறன்." என்றவன்,

"இனி உனக்கு இந்த அறையில் தான் வேலை" என்றான் சாதாரணமாக.

"என்னது....! அதிர்ந்தாலும்,

இதுக்குள்ள என்ன வேலை இருக்க போகுது? இவனிட்ட திட்டு வாங்கி, சண்டை போடுறத தவிர.'


"இதுக்குள்ள என்ன வேலை இருக்க போகுது என்டு தானே யோசிக்கிற....?
நிறைய வேலை செய்யலாமே..... வெளியில இருக்கிறவயால எங்களை பார்க்க முடியாது.

அதோட நல்ல அண்டஸ்ராண்டிங் வரும்... எப்பிடி என் ஐடியா ?" என்றவன் அவளை ஒரு மாதிரி பார்க்கவும், அவன் பார்வையின் பொருள் புரிந்த துஷா, அவனை முறைத்தாள்.

"ஏன் முறைக்கிற? நான் பாஸ் நினைவிருக்கட்டும். என்ன சொல்லுறனோ, அதை தான் நீ செய்யயோணும்." என்றான் மார்க்கமாக பார்வையுடன்.


"அதுக்கு வேற யாரையாச்சும் பாக்கோணும்" என்றாள் கோபமாக.

"இதென்னடா புதுசா இருக்கு... திறமைக்கு பதவி உயர்வு குடுத்தா... வேண்டாம்
என்டுறாங்களே.!"


"இது பதவி உயர்வா? அசிங்கமான விஷயத்துக்கு உடன் படுறது தான் உங்கட ஊரில பதவி உயர்வா? அப்படியான பதவி எனக்கு வேண்டாம்" என்றார் உதாசீனமாக.


"எது அசிங்கம்....? அப்பிடி என்ன கேட்டுட்டன்? எல்லா பிராஞ்ச்சோட வரவு செலவ பாக்க ஏற்கனவே ஒருதரை நியமிக்கோணும் என்டு நினைச்சுக்கொண்டிருந்தன்.

அந்தந்த கிளையோட கணக்கு பாத்து தர ஆக்களும் இருக்கினம் தான். ஆனா அதை கண்ண மூடிக்கொண்டு நம்ப ஏலாது தானே! உண்மைய சொல்லோணும் என்டா, எனக்கு யாரிலயும் நம்பிக்கையல்ல.... அதுவுமில்லாம எனக்கும் ஒரு அசிஸ்டன் வேணும். அதான் உன்னை இந்த வேலைக்கு போட்டன்.


இது கவனமான வேலை, அதுவுமில்லாம அவங்கள்ல நம்பிக்கை இல்லாம, உன்னை இந்த வேலைய நான் செய்ய சொன்னது மற்ற கிளையாளுங்களுக்கு தெரியக்கூடாது.

தெரிஞ்சா அலேட் ஆகிடுவினம்... அதான் என்ர அறையிலயே உன்னை போட்டுட்டன்." என்றவனை துஷா ஒருமாதிரி பார்த்து,


"இத தான் அப்பிடி சொன்னீங்களா?" என்றான் தான் தான் தவறாக நினைத்ததாய் எண்ணி.

"அப்ப நீ என்ன நினைச்சா?" என வேண்டும் என்றே அவனை சீண்டுவதற்காய், புருவ உயர்வில் நாக்கை சுழற்றி வினவனான்.

அவன் சொன்ன விதத்தில் யாராக இருந்தாலும் தவறாகத்தான் நினைப்பார்கள். ஆனால் நினைத்ததை எல்லாம் இவன் கேட்கின்றான் என்று கூறிட முடியுமா...?
அமைதியாக தலை குனிந்து கொண்டாள்.

"என்ன கேட்டாலும் வாயே திறக்க கூடாது என்டு வரேக்கயே நினைச்சுக் கொண்டு வந்திருக்கிற போல...

சரி விடு! எப்பிடியும் என்னை நல்லதா நினைச்சிருக்க மாட்டா என்டு மட்டும் விளங்குது..
சரி விஷயத்துக்கு வருவம்.... இந்த வேலை செய்ய சம்மதம் தானே" என்றான்.

"அது... எனக்கு அக்கவுண்டிங்க் தெரியாது...
நான் அந்த சப்ஜெக்ட் எடுக்கலையே! " என்றாள் தடுமாற்றமாய்..

"அது அவ்ளோ பெரிய வேலை எல்லாம் இல்ல... அந்தந்த கிளையோட கணக்கை சரி பாக்கிறது மட்டும் தான்... தப்பா கணக்கு வந்தா சொல்லு....
இதை சாதாரணமானவயே செய்யலாம். நீ படிச்ச படிப்புக்கு இது சாதாரணம். அப்பிடியும் சந்தேகம் என்டா என்னை கேள்! நான் தான் உனக்காகவே இருக்கனே!" என்றவன் பேச்சில் அவள் முறைக்கவும்,

"ஆட திரும்பவுமா...? சந்தேகத்த கிளியர் பண்ணம்மா... எப்ப பாரு சந்தேகமாவே பாக்கிற" என்றவாறு தன் இருக்கையிலிருந்து எழுந்து, அவளை நெருங்கியவன், அவள் உயரத்திற்கு குனிந்து காதினில்,


"இதுவும் நல்லா தான் இருக்கு. இந்த லவ் வந்திட்டாலே, காதலியோட ஒற்றை பார்வைக்கு அடங்கி போறதும் ஒரு சுகம் தான்...

எனக்கு தான் அப்பிடி என்டா, நீயும் இப்ப பார்வையாலையே அடக்க வெளிக்கிட்டியே! உனக்கும் என்னில அந்த எண்ணம் இருக்கா?" என்றான் ரகசியம் போல்.


தனக்கு நிகராக குனிந்து நின்றவனை விட்டு சட்டென விலகி நின்றவள்,

"இப்பிடி தேவையில்லாத கதைக்காதிங்கோ சார்..
அதோட தெரியாத வேலைக்கும் நான் சம்மதிக்க மாட்டன்.' என்றாள் கோபமாக.

"நல்லா யோசி துஷா! எல்லாரும் வந்து போற இடம் அது... அங்கயே வேல பாத்தா, கட்டாயம் எல்லார் கண்ணிலயும் பட வேண்டி வரும், அது நல்லாவா இருக்கும்?

அதுவும் வடிவான பிள்ளை... யாராச்சும் கொத்திக் கொண்டு போயிடுவினம்." என்றான் கேலியுடன் அவளை எதையோ நினைவு படுத்தி எச்சரிப்பது போல.

'ஏன் இங்க வேலை செய்யிற மிச்ச பேரு வடிவில்லையா என்ன? அவயல தாண்டி என்னை தான் கொத்த போறானுங்க..' என நினைத்தவளுக்கு அவனுடைய அழுத்தமான பேச்சில் தான் அதுவும் நினைவில் வந்தது.

' அந்த மூர்த்தியால எனக்கு ஆபத்து என்டாரே..... இதுக்குள்ளயே இருந்தா வெளிய தெரிய வாய்பில்லை.' சிந்தித்து முடிக்கவில்லை..

"முடிவெடுத்தாச்சு போல.... கண்டிப்பா வெளிய தெரியாது" என்றான், அவள் மனதினை படித்தவனபோல் கூறியதில் விழித்தவள் எண்ணங்களோ,

'நான் நினைச்சது எப்பிடி இவனுக்கு தெரியும்...? நான் தான் மனதுக்குள்ள கதைக்கிறன் என்டு உளறீட்டனாே....?'
அவளையே பார்த்து கொண்டிருந்தவன், மென்னகை ஒன்றினை உதிர்த்து விட்டு,


"சத்தியமா உனக்கு அக்கவுண்டிங்க் தெரியாது என்டு வெளிய தெரிய வராது. நானும் சொல்ல மாட்டேன்" என்றான்.

திருத்தமான அடன் பதிலில் ஆழ்ந்து மூச்சொன்றை எடுத்து விட்டவளை நோக்கி,


"அப்ப இந்த வேலைய செய்ய சம்மதம் தானே!
திரும்ப திரும்ப கேக்கிறன் என்டு நினைக்காத,
நானும் சும்மா ஒரு மரியாதைக்கு தான் உன்னட்ட இதை சொன்னன்.. உனக்கு விருப்பம் இல்ல என்டாலும், இந்த வேலைய தான் நீ செய்யோணும்." என்றான் அழுத்தமாக.



துஷாவுக்கு தான் இவன் என்ன ரகம் என்றிருந்தது.

'உனக்கு ஒரு நாள் இருக்குடா!' என நினைத்தவள்.


"பிறகேன் சார் என்ன வரசொல்லி கூப்பிட்டீங்கள்? இனி உன்ர வேலை மாத்தியாச்சு என்டு நேர சொல்லியிருக்கலாமே!
அத விட்டுட்டு என்னட்ட விருப்பம் கேக்கிற மாதிரி சீன் போட வேண்டி என்ன வந்திச்சு?" ஆதங்கம் தான்..

"ஓம்ல... எனக்கு இந்த ஐடியா ஏன் வரேல.... இதுக்கு தான் பிஏ வேணும் என்டுறது.
அதுக்கு தான் நீ கூடயே இருக்க போறியே! ஒன்டு ஒன்டா சொல்லித்தா! மேடத்துக்கு நானும் தெரிஞ்சதை சொல்லித்தாறன்." என்றவன்
அவள் அருகில் வந்து,


"என்ன நல்லா நீயும் சொல்லி தருவா தானே" என்றான்.
அவள் அவனை முறைக்கவும்.

"இப்பிடி எப்பவும் முறைச்சுக்கொண்டே இருந்திடாதா, எப்பவுமே பயப்பிட மாட்டன்... சில வேளை உரிமை கூடிப்போய் வேற ஏதாவது செய்திட்டப்போறன்.. பிறகு நான் பொறுப்பில்லை" என்று உதட்டை குவித்து செய்கை செய்தவனை, உதைக்கவா குத்தவா என்றிருந்தது அவளுக்கு.

'உந்த மூஞ்சிக்கு ரொமான்ஸ் கேக்குதா தடிமாடு...!' மனதில் திட்டியவள், எங்கு மீண்டும் முறைத்தால், சொன்னது போல் செய்து விடுவான் என்று பயந்து,

"என்ர வேலையை பாக்கலாமா?" என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.

அவள் வெளிறிய முகமே சொன்னது அவள் எண்ண ஓட்டத்தை. குறும்பாக நகைத்தவன்..

"நல்ல சந்தர்பம் கை நழுவீட்டுது." பெரு மூச்சாய் வெளியேறியது.


அவளுக்கான மேசையில் இருந்த கோப்புகளில் இரண்டை எடுத்து கொடுத்தவன்,


"இதை முதல்ல பாரு...!
ஏதன் சந்தேசம் வந்தா தாரலமாக கேள்" என்றான்.


"இடையிடை வெளிய போயிடுவன், அப்ப சந்தேகம் வந்தா, லேன்லைன் கூப்பிடு!" என்றவன் தனது வேலை முடிந்து என்று, தன் வேலையை கவனிக்கலானான்.


வேலையில் சிரத்தையாக இருந்தவர்கள் கதவு தட்டும் ஓசையில் நிமிர்ந்தவன், அங்கு வந்தவனை கண்டதும்,

"வாடா மச்சான்..." என்றான் உற்சாகமாக.

வழமைக்கு மாறான அவனது சந்தோஷ அழைப்பில்,


'வரவேற்பு பலமா இருக்கு.... என்னை தான் கூப்பிர்றானா...? இல்லை வேறையாரையுமா?' பின்னால் ஆராய திரும்பியவன், அப்போது தான் பக்கவாட்டில் இருந்தவளை கண்டு அதிர்ந்து நின்றான்.

"என்னடா... அப்பிடி பாக்கிற? எல்லாம் உன்ர சிஸ்டர் தான்.... யோசிக்காம உள்ள வா!" என்றான் வாயெல்லாம் புன்னகையாக.

அவள் முன்னான் மாற்றாய் எதுவும் கூற முடியாதவனோ,

'நேரம்டா...' உள்ளே தான் அர்சித்தான்.

"எனக்கு தான் தங்கச்சி இல்லையே!" என்றான் அவனை அவள் முன் வாரிவிட நினைத்து.

"என்னடா இப்பிடி சொல்லிட்ட? கூடிப் பிறந்தா தான் தங்கச்சியா? பெரியப்பா மகளோ, சித்தப்பா மகளோ, அவ்வளவு ஏன்.... என்னை கட்டிக்க போறவள் கூட உனக்கு தங்கச்சி தானேடா..." என்றவனது ஓரப்பார்வை துஷாவிடம் இருந்தது.

"எங்க சுத்தி எங்கடா வாற...? எதை என்டாலும் நேர சொல்லுடா குழம்புது எனக்கு." இம்முறை ரவியின் பார்வையும் அவளிடம்.

அவர்கள் பேச்சில் நிமிர்ந்தவள், இருவரது பார்வையும் தன்மேல் இருப்பதை உணர்ந்தாள்.


'இந்த லூசுதான் உளறுது என்டா, இந்த பாண்டா கரடியும் என்னை ஏன் பாக்குது?
மூஞ்சய பார்... நல்லா மெழுகில செய்த கரடி மாதிரி... இந்த நெட்டாங்கு என்னை பற்றி ஏற்கனவே ஏதோ சொல்லி இருக்கு போல... அதான் அவன் தட்டி வைக்க, இதுகும் பத்தீட்டுது.


இதுகளின்ர கதைய காதிலயும் வாங்கிக்காம, உன்ர வேலைய பார். என்ன என்டாலும் சொல்லீட்டு போகட்டும்' என தன்னை தானே எச்சரித்தவள், அவர்களது பார்வையை அலட்சியம் செய்து, கோப்பில் கவனமானாள்.

"என்னடா! இன்டைக்கு இவ்ளோ சந்தோஷம்? ஏதும் ஸ்பெஷல்...?"


"இனிமே தினம் தினம் ஸ்பெஷல் தான் மச்சான்" என்றான் மீண்டும் அவளை ஓரக்கண்ணால் பார்த்து.

"அது தான் இந்த புதுப் புது மாற்றங்களுக்கு காரணமா?"


"இருக்கலாம் மச்சான்"

"என்னடா...! நீ என்னை மச்சான் என்டே கூப்பிட மாட்டியே! இன்டைக்கு மச்சான் மழை பொழியுது."

ஆம் .... ரவி மாத்திரம் தான் அவனை அப்படி அழைப்பான். ரதன் அழைத்ததே இல்லை. இன்று எல்லாமே மாறிப்போயிருக்க, சந்தேகமாக வினவினான்.

"தப்பு மச்சான்....! முன்னம் நீ எனக்கு நண்பன் மட்டும் தான்.... இப்ப அப்பிடி இல்லையே!

வடிவான பொண்ணுக்கு அண்ணன்டா.... மச்சான் என்டு கூப்பிட்டா தானே, உன்ர தங்கைச்சிய கட்டி வைப்ப.." என்றிட,

"ரொம்ப ஓவரா ஆடாதடா! ஒரு பேச்சுக்கு தான் தங்கை.... நீ பண்ற அலப்பறை, கூடிப்பிறந்தவளையே கட்டி வை என்டு கேக்கிற மாதிரி இருக்கு..


அம்மாவுக்கும் வயசாகிட்டுதுடா! இனி எந்த பிரியோசனம் இல்ல.... அதால என்னை தாஜா பண்றது நிப்பாட்டு" என்றான் அவனுக்கு மட்டும் கேட்பது போல் கிசுகிசுப்பாய்.

"மச்சான்.......... உனக்கு இதல்லாம் இப்ப விளங்காது. விளங்கிறப்போ என்ர தாஜா விளங்கும்" என்றான் அவனை போலவே கிசுகிசுத்து.

"போடாங்க்..... சும்மாவே உன்ர கதை விளங்காது. இப்ப அந்த பிள்ளைவேற மந்திரிச்சு வைச்சிட்டா... சொல்லவா வேணும்....? ஆடுடா ஆடு! எவ்ளோ தூரமோ பாக்கிறன்.

அத விடு! இது என்ன புதுசா?" என்று அவளையும் அவள் மேசையையும் சுட்டிக் காட்டினான்.


"அதுவா...? ஒரே கொசு தொல்லை மச்சான்! அதான் ஒரு பாது காப்புக்கு...." முடிக்காமல் இழுத்தான்.


"உனக்கு இவ பாதுகாப்பு....? ஓகே விடு!
அப்ப அவளுக்கு பாதுகாப்பு.?"

"அது தான், அவ அண்ணன் நீ இருக்கிறியே!".

"அய்யோ சாமி! நீ என்ன சொல்ல வாரா என்டு தெரியுது... நான் போறன், நீ விளையாடு!" என்றவன் எழப்போக.

"இரு மச்சான்! எதுக்கு இப்ப பொசுக்கு பொசுக்கென்டு கோவ படுற.? எல்லாம் ஒரு காரணமா தான். நேரம் வரேக்க நானே சொல்லுறன்" என்றவன்,

"பிறகு சொல்லு!" என்று நண்பர்களாக தங்கள் பேச்சில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் இருந்துவிட்டு ரவி சென்று விட்டான்