காதல் ஒரு போதை
பித்தனுக்கு சித்தம் தெளிய வைக்கும்..
சித்தம் தெளிந்தவனை பித்து போல் புலம்ப வைக்கும்.
காபி ஷாப்பில் மீட் பண்ணலாம் என்றவனுக்கு அதன் பிறகு இருப்பு கொள்ளவில்லை.. 'தன்னையும் ஒரு பெண் காதலிக்கிறாள் அதுவும் தைரியமாக கண் பார்த்து உரைக்கிறாள்.. அவளை எனக்கு பிடித்திருக்கிறதா? பார்க்க அழகாகத்தான் இருக்கிறாள்.. பேச்சில் துளியும் பயமில்லை.. தன் தந்தையின் சம்மதத்தை சுலபமாக வாங்கிவிட்டு இருக்கிறாளே காரியக்காரித் தான்' என எண்ணும்போதே அவன் உதடுகள் தானாய் விரிந்தன.
அவன் ஒவ்வொரு செய்கையையும் கவனித்துக்கொண்டிருந்த அம்புத்ரா ' விஷாலி பேசிட்டா போல இருக்கே!' அவளை அதற்கு மேல் யோசிக்க விடாமல் அழைத்தது அலைபேசி.. பிரதியுமன் தான் அழைத்திருந்தான்.
அவரின் அழைப்பை பார்த்த அவளது முகம் வெட்கச் சிவப்பை பூசிக்கொண்டது முந்தைய நாள் கொஞ்சல்களால்.." சொல்லுங்க யுமன்.. என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க?"
"நான் கால் பண்ண கூடாதா? எனக்கு இன்னிக்கு வேலை சீக்கிரமே முடிஞ்சு போச்சு அம்பு அதனால உன்னை எங்கயாவது வெளில கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன் நீ உன் அப்பா கிட்ட சொல்லிட்டு வெளியே வந்துடு நான் உங்க ஆபீஸ்ல கீழே வெயிட் பண்றேன்"
'என்ன ஆபிஸ் கீழேயா? ஐய்யயோ நான் இங்க இருக்கேன் அவர் அப்பா ஆபிஸ் கீழே.. என்ன பண்றது? யோசி அம்புத்ரா யோசி' .. சில நொடிகள் யோசித்தவள் உடனடியாக அழைப்பெடுத்தாள் விக்ரமனுக்கு" அப்பா பிக் அப் பிக் அப்" வெகு நேரம் அழைப்பு போனதே தவிர அதை அவர் எடுக்கவே இல்லை.. சிறிதும் தாமதிக்காது மைத்ரேயனுக்கு அழைத்தாள் அவன் உடனடியாக அழைப்பை ஏற்றான் "சொல்லு அம்மு என்ன விசியம்?"
"மைத்து எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு நம்ம ஆபிஸில் இருக்க பேக் டோர கொஞ்சம் திறந்து வையுங்க நான் அந்த பக்கமா வரேன்.. யுமன் வெயிட் பண்றாராம்" படப்படப்பாக வந்தது அவள் வார்த்தைகள்.
"சாரி அம்மு நான் வெளியே இருக்கேன்.. இப்ப என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது"
"ச்சே.. சரி ஓகே நீங்க வேலைய பாருங்க" என்பதோடு அழைப்பை துண்டித்தாள்.
வேறு எதுவும் யோசிக்காது" கதிர் நீங்க பார்த்துக்கோங்க நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.. வர லேட்டாகும் நீங்க பார்த்துக்கோங்க"
"மேடம் நானும் வெளியே போகணும்" எனக் கத்தியவனின் குரல் அவளுக்கு கேட்கவே இல்லை.
அவசர அவசரமாக சென்றவள் பிரதி கண்களுக்கு மாட்டாமல் எவ்வாறு உள்ளே செல்வது என யோசித்தபடி வண்டியை செலுத்தி கொண்டிருந்தாள்.. விக்ரமனின் தொலைக்காட்சி அலுவலகம் முன்னே வண்டியை நிறுத்தி திருட்டுதனமாய் எட்டி பார்த்தாள் அவன் இருந்தான்.. யாருக்கோ அழைப்பை விடுத்திருந்தான்.. மறுநொடி இவளின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
"அம்பு நான் ரொம்ப நேரமா வெயிட் பண்றேன்.. எப்ப வருவ?மாடியில் இருந்து கீழே வர இவ்வளவு நேரமா?"
"அது வந்து யுமன் நான் கொஞ்சம் வெளியே வந்தேனா அதான் இதோ வந்துட்டேன்"
"சரி சரி வா"
'அப்பாடா.. ஒரு வழியா சமாளிச்சாச்சு.. உள்ளே இந்த வழியாகவே போகலாம்' யோசித்தவள் வண்டியின் கண்ணாடியில் அப்பொழுது தான் கவனித்தாள் அவளது உடையை.. காக்கி உடையில் இருக்கிறாள்.
தன்னையே நொந்து கொண்டவள்.. பிரதிக்கு அழைத்து இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து விடுவேன் என்றவள் நேராக சென்றது ஒரு துணி கடைக்கு.. தனக்கு பொருத்தமான உடையை எடுத்தவள் அங்கேயே மாற்றி கொண்டு காக்கி உடையை தன் வண்டியில் வைத்து அவன் முன்னே சென்றாள் புதிதாய் பூத்த மலராய்.
வெள்ளை நிறத்தில் மெரூன் பூக்கள் அதில் சிறு சிறு கற்கள் பதிந்து இருந்தது.. தலையை விரித்து விட்டு இருந்தாள்.. எந்த வித ஒப்பனையும் அவள் முகத்தில் இல்லை ஆனாலும் அழகாக இருந்தாள்.. காதில் சிறிய வெள்ளை தோடு கடையில் வாங்கினாள் போலும்.. அவனை நெருங்க நெருங்க அவளுக்குள் சிறு நாணம் எட்டிப்பார்த்தது.. பார்வையால் துளைத்து கொண்டிருக்கிறானே!
"யுமன் சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன்"
"வெயிட் பண்றது கூட நல்லா தான் இருக்கு அம்பு.. நீ இவ்வளவு அழகா வருவேன்னா நான் காலம் முழுசும் காத்திருக்க தயார்"
சிரித்தவள்"சரி கிளம்பலாம்.."
"அப்பாக்கிட்ட சொல்ல வேண்டாமா?"
"நான் கால் பண்ணேன் பட் அட்டென்ட் பண்ணல நான் அப்பறம் பேசிக்கிறேன்.. டைம் ஆச்சு இல்லையா போகலாம்"
" சரி" என புன்முறுவலுடன் அவளுக்கு கார் கதவை திறந்து விட்டான்.
எதுவும் சொல்லாமல் ஏறி அமர்ந்தவள் "யுமன் உங்க கிட்ட பைக் இருக்கு அதை எடுத்துக்கிட்டு வந்து இருக்கலாம்ல"
"ஏன்டா வெயில் அடிக்குது அதுவும் உன்னை முதல் முறையா வெளியே கூட்டிக்கிட்டு போறேன் கார்ல போனா தானே கெத்தா இருக்கும்?"
"புண்ணாக்கு கெத்தாம் நான் கேட்டேனா? பைக்கா இருந்தா உங்கள உரசிக்கிட்டு ஜாலியா போயிருக்கலாம்.. அப்படி போன போற வழி கூட நீளாதானு தோணும்.. நமக்கே நமக்குன்னு தனி உலகம் இருக்க மாதிரி தோணும்.. உங்க இடுப்பை கட்டிப் பிடிச்சிட்டு உங்கள பார்க்குற பொண்ணுங்களுக்கு என்னோட அணைப்பே சொல்லும் நீங்க எனக்கு தான்னு.. இதெல்லாம் இந்த கார்ல போன கிடைக்குமா?" மூச்சு விடாமல் பேசியவளின் எதிரே தண்ணீர் பாட்டிலை நீட்டினான் பிரதி.
முறைத்தவள்" நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா தண்ணீய எடுத்து நீட்டுறீங்க?உங்களுக்கு அப்படி எதுவும் தோணலையா?"
அவன் சிரித்துக்கொண்டே" நிறைய லவ் பிலிம் பார்ப்பீயா அம்பு? இதெல்லாம் செஞ்சா தான் லவ் பண்றதா அர்த்தமா? நான் உன்ன லவ் பண்ணல" என்றதும் அவளுக்கு பேரதிர்ச்சி.
"எ..என்ன.. சொல்றீங்க நீங்க?" திக்கித் திணறி வந்தது அவளின் வார்த்தைகள்.
" உண்மையா தான் சொல்றேன்..நான் எப்போ உன்னை முதன் முதலாக பார்த்தேனோ அப்பவே என்னோட மனசுக்குள்ள உன்னை என்னோட மனைவியா கற்பனை பண்ணி வாழ ஆரம்பிச்சிடேன் தினமும் காலையிலே நீ கொண்டுவர காப்பிதான் என்னை எழுப்பும்..
நீ சொல்ற இந்த விஷயம் எல்லாம் இவன் எனக்குத்தான் அப்படின்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்காக செய்யுற ஒரு செயல் அதுல சில சில சந்தோஷம் இருந்தாலும் என் மனசு முழுக்க நீ என்னோட மனைவியா எப்பவோ குடியேறி ஆச்சு.. அதுக்காக நீயும் நானும் பைக்கில் போகவே மாட்டோம்னு நான் சொல்ல மாட்டேன்.. போகலாம் இப்ப இருக்க தனிமை அந்த பைக் பயணத்துல இருக்காது என்னை பொறுத்தவரை..
நமக்குள்ள பேச ஆயிரம் விஷயம் இருக்கும் அது சந்தோஷமாகவும் இருக்கலாம் சண்டையாவும் இருக்கலாம் அது நாலு பேரு எதிர்க்க நடக்கணும்னு நான் விருப்பப்பட மாட்டேன் எனக்கே எனக்காகவ என் கூட மட்டும் தான் இருக்கனும் என்கூட மட்டும் தான் பேசணும்.. மத்தவங்களோட காட்சிப் பொருளாக நாம மாற கூடாது என்பது என்னுடைய எண்ணம்.. ஒருவேளை என்னுடைய எண்ணம் தப்பா இருந்தா உனக்கு பிடிக்காமல் போனால் எந்த பிரச்சனையும் இல்லை கார் இங்கேயே விட்டுட்டு உன்னோட ஸ்கூட்டிய எடுத்துட்டு வா போகலாம்"
"ஐயோ யுமன் அப்படியெல்லாம் எதுவுமில்லை.. ஆக்சுவலி இதெல்லாம் நிர்குணா தான் சொன்னா.. அவ மைத்து கூட இந்த மாதிரி போகும்போது ஜாலியா இருக்கணும் சொன்னா அப்போ எனக்குள்ளேயும் சில கற்பனைகள் வர ஆரம்பிச்சது அதுதான் நான் இப்போ சொன்ன விஷயம்.. அது ஒரு சின்ன ஆசை நீங்க சொன்ன மாதிரி நாம எப்பவுமே இந்த மாதிரி இருக்கப் போறது இல்லையே! காரை ஸ்டார்ட் பண்ணுங்க போகலாம்"
அவன் சிரித்துக்கொண்டே" பொண்டாட்டி பேச்ச புருஷன் கேட்கிறது தப்பில்லையே!" எனக் கண் சிமிட்டி அவன் காரின் மறுபுறம் வந்து அவளை இறங்கச் சொன்னான்.
"முதல் தடவையா நீ என்னை ஒரு விஷயம் கேட்டிருக்க.. அதுவும் ரொம்ப ஆசைப்பட்டு.. ஆக்சுவலி நீ சொன்ன பிறகுதான் பைக்ல போனா எப்படி இருக்கும்னு தோண ஆரம்பிச்சது நீ என் மேல உரசும் போது எனக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்னனு நான் உணரனும்.. நீ என்னை கட்டி பிடிக்கனும் பிரேக் போடும்போது முத்தம் கொடுக்கணும்.. இதெல்லாம் ஓகேன்னா சொல்லு பைக்ல போலாம்"
"டபுள் ஓகே யுமன்" என்றால் தன் முத்துப் பற்கள் தெரிய.
தன் மகளும் மருமகனும் சந்தோஷமாக இருப்பதை வேலையை முடித்து ஜன்னலின் அருகே வந்த விக்ரமன் இருவரையும் கண்குளிர ரசித்துக்கொண்டிருந்தார்.. சந்தோஷம் சில மணி நேரங்களில் காணாமல் போக போகிறது என்று தெரிந்திருந்தால் அப்பொழுதே தடுத்து இருப்பாரோ என்னவோ! ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு தானே ஆக வேண்டும்! தன்னை உயிராய் நேசிப்பவனிடம் எவ்வளவு நாள் பொய்யாக ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்து விட முடியும் அவள் வாழ்நாள் முழுவதும் அந்த பொய்யை நிலைக்க விடப்போவதில்லை என்பது என்னவோ உண்மைதான் ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே!
சந்தோஷமாக கிளம்பி முதலில் சென்ற இடம் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல்.. பிரதி அவர்களுக்கென தனியாக ஒரு டேபிளை புக் செய்திருந்தான்.. மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாத வகையில் இருக்கும் அந்த இடம் தனித்தனியாக நான்கு சேர்கள் போடப்பட்டு இருக்கும்.. சொந்த விசயங்கள் பத்தி பேச விரும்புவோர் பிசினஸ் டீலிங் செய்ய விரும்புவோர் சண்டை சமாதானம் எதுவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பார்கள் அந்தவகையில் ஒரு டேபிளும் மற்றவர்களுக்கும் குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்கும்.. இவர்கள் வந்த டேபிள் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டு பார்க்கவே மிகவும் ரம்யமாக இருந்தது..
கண்ணெதிரே தன்னை கவர்ந்தவள் இத்தனை மாதகால தேடல்.. எனக்கே எனக்காக வந்த அமர்ந்திருக்கும் தேவதை அவள்.. அம்புத்ராவை தான் பார்த்திருந்தான்..அவளும் இவனுக்கு சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கும் பொருட்டு இவன் கண்களில் தவிர வேறு எதையும் காணவில்லை.. வெயிட்டர் வந்து நிற்பது கூட தெரியாமல் இருவரும் அவர்களுக்கென தனி உலகத்தில் மூழ்கியிருந்தனர்.. மற்ற காதலர்களைப் போல சீண்டல்கள் தீண்டல்கள் எதுவுமில்லை அவர்கள் பேசிக்கொள்ளவும் இல்லை.. கண்ணோடு கண் பார்த்து மனதால் அவர்கள் உருவத்தை நிறைத்து பேசுவது அனைத்தும் உள்ளம் கொண்டே இருந்தது..
பொறுத்துப் பார்த்த வெயிட்டர் பிரதியை தோள் தொட்டு உலுக்கினான்.. வெயிட்டரின் தீண்டலில் தன்னிலை அடைந்தவன் அம்புவையும் தன்னிலை அடையச் செய்தான் " ரெண்டு வெஜ் சூப் ஒரு நாண் பன்னீர் பட்டர் மசாலா", ஒரு நிமிஷம் அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டுக்குறேன்" அம்பு உனக்கு என்ன வேணுமோ சொல்லு"
"எனக்கு ஒரு பன்னீர் பிரைட் ரைஸ் கோபி மஞ்சூரியன் ட்ரை"
"எனிதிங் எல்ஸ் மேம்"
"நோ நத்திங்"
செல்லும் வெயிட்டரோ அவளிடம் ஒரு பயந்த பார்வையை வீசிக்கொண்டிருந்தான்.. அவனை கவனித்தவள்" என்ன ஆச்சு?"என்றாள்.
"மேடம் நீங்க நீங்க அசிஸ்.."அவனை முடிக்கக் கூட விடவில்லை அவள்.. நீங்க கிளம்புங்க ஆர்டர் எடுத்துட்டு வாங்க டைமாச்சு வார்த்தைகள் கடினமாக தான் வந்ததோ?.
அதன்பிறகும் வெயிட்டர் அங்கு நின்றால் தான் அதிசயம்.
இருவரும் தனக்குப் பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் நாட்டுநடப்பு என அனைத்தையும் சலிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர்.. அந்த நேரம் கதிர் அவளுக்கு அழைப்பு விடுக்கவும் என்னவென்று கேட்க ஏற்றாள் அவன் அழைப்பை.
"சொல்லுங்க கதிர் என்ன விஷயம்?"
"மேடம் நான் விஷாலிய மீட் பண்ண வரேன்னு சொல்லி இருக்கேன் அதனால அவள மீட் பண்ண போகணும் நான் கிளம்பவா?"
சின்ன சிரிப்புடன்" நீங்க இன்னும் கிளம்பலையா?"
கேட்டவனுக்கு அதிர்ச்சி" மேடம் என்ன சொல்றீங்க அப்போ உங்களுக்கு விஷயம் தெரியுமா?"
"தெரியும் தெரியும் விஷாலி எனக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டா ஆல் த பெஸ்ட் கதிர் விஷாலி ரொம்ப நல்ல பொண்ணு மிஸ் பண்ணாதீங்க" என்பதோடு அவன் அழைப்பை துண்டித்து விட்டு இருந்தாள்.
பிரதிக்கு என்ன நடக்கிறது என்பது சுத்தமாக விளங்கவில்லை கதிர் ஏன் இவளிடம் அனுமதி பெற வேண்டும்? என்ன நடக்கிறது! இவள் என்ன வேலை செய்கிறாள்? என்பதில் அவனுக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது.. அதேநேரம் பிரதியின் நண்பன் ஒருவன் அழைப்பு விடுத்திருந்தான்.. அவன் மறுபுறம் என்ன பேசினானோ இவளுக்குத் தெரியாது ஆனால் நொடிக்கு நொடி பிரதியின் முகம் இறுகுவதைப் அவளால் பார்க்க முடிந்தது.
அழைப்பை துண்டித்து விட்டு வந்தவன் தனது அலைபேசியில் எதையோ தேடியவனுக்கு பேரதிர்ச்சியே.
"என்ன ஆச்சி யுமன்? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? எனி ப்ராப்ளம்?"
"ஆமா அசிஸ்டன்ட் கமிஷனர் மேடம்" என்ற அவனது கண்களில் அப்படி ஒரு தீப்பொறி.. அவளை எரித்து விடும் நோக்கோடு பார்த்துக்கொண்டிருந்தான்.. காதல் பார்வைகள் காணாமல் போயிருந்தன.. பாவைக்கோ தனது உண்மை நிலவரம் தெரிய வந்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது வருத்தம் கொள்ளவா எனப் புரியாத நிலை மற்றவர்களுக்கு முன்னால் காட்சிப்பொருளாக கூடாது என்றவன் ருத்ரமூர்த்தியாய் நிற்பதை அங்கிருந்த அனைவருமே பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்..
"எதுக்காக என்னை ஏமாத்துற என்னுடைய பயம் என்னென்ன உனக்கு தெரியும் ஏன் இப்படி ஒரு பொய் சொன்ன? இது பொய் கூட இல்லை துரோகம் பச்சை துரோகம்.. என்னுடைய உண்மை உனக்குத் தெரியும்போது உன் வேலைய பத்தி என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா நான் என்னுடைய ஆசையை வளர்த்து இருக்க மாட்டேன்ல.. இனி இந்த கல்யாணம் நடக்காது குட் பாய்" என விருவிருவென அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்திருந்தான்.
செய்வதறியாது நின்றிருந்த அம்புத்ரா நிலை என்னவாகும் இவர்கள் திருமணம் எவ்வாறு நிகழும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.