• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17. ஷக்தியின் ஊடல்

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
மஹா மிகவும் வாடிய முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள்.

சுரேஷின் அம்மா, "மஹா என்னடா உடம்பு ஏதாவது சரி இல்லையா முகம் ரொம்ப டல்லா இருக்கு?"

மஹாவிற்கு கண்ணீர் விழிகளின் விளிம்பில் முட்டிக்கொண்டு நிற்க, சுற்றி இருக்கும் சூழல் தன்னால் கெட கூடாது என்று எண்ணி, "அம்மா எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு."

"சரி டா. நீ போய் கொஞ்சம் டேப்லெட் போட்டுட்டு ரெஸ்ட் எடு சரியாகிடும்." என்றார் அக்கறையாக தலையை கோதியபடி.

"இல்லம்மா. அண்ணா நிச்சயம் நடக்கும் போது நா இல்லனா வருத்தப்படுவாங்க. தட்டு மாத்திற வரைக்கும் இருந்துட்டு அப்புறம் போய் ரெஸ்ட் எடுக்கறேன்." என்றாள்.

"சரி மா. சுபாகிட்ட டேப்லெட் வாங்கி போட்டுட்டு அமைதியா இப்டி என் பக்கத்துல வந்து உக்காரு சரியா?" என்றார்.

தன் மேல யாரும் இதுவரை காட்டாத அக்கறை புதிதாக இருக்க எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முடியாமல கண்ணீர் வர அதை வெளிக்காட்டாமல், " சரிம்மா இதோ வரேன்." என்று வேகமாக கண்களை துடைத்தபடி தன் அறைக்கு ஓடினாள்.

அவளின் ஒவ்வொரு சின்ன அசைவையும் ஷக்தி அவளுக்கு தெரியாமல் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

மஹாவின் மனது திடீர அன்பால் பலவீனமாகிறது என்பதை அறிந்ததால் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவன் மனம் எண்ணினாலும், "அவள் என்னை அவளுடைய கணவன் என்று உரிமையாய் எப்பொழுது நினைக்கிறாளோ அது வரை நான் அமைதியாய் தான் இருக்கனும்." என்று முடிவோடு இருந்தான்.

ஆனாலும் தன்னவள் விழி நீர் கசிய தானும் ஒரு காரணம் என்று நினைக்கும் பொழுது மனம் தவித்தாலும், "சுபா "என்று தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த சுபாவை கூப்பிட்டான்.

"என்ன அண்ணா?"

"சுபா மஹா தலை வலிக்குதுன்னு உள்ளே போயிருக்கா கொஞ்சம் போய் பாருடா." என்றான்.

அவன் முகத்தை சிறிது நேரம் உற்று பார்த்தவள். "அண்ணா அண்ணியை ஏதாவது திட்டினீங்களா?"

"அது சுபா..." என்று தயங்கியவன் பின், "எனக்கு மஹா மேல ஒரு சின்ன வருத்தம். எல்லாம் சரி ஆகிடும். இப்போ நான் போனா சரியா இருக்காது. நீ போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்து உன்கூட வச்சுக்கோடா." என்று கெஞ்சும் குரலில் கேட்கும் அண்ணனை பார்த்து, "இந்த ஆம்பள பசங்க எல்லாம் ரொம்ப மோசம் யோசிக்காம எல்லாம் செஞ்சிட்டு பின்னாடி கைய பெசஞ்சிட்டு நிக்க வேண்டியது." என்று பொய் கோபத்தோடு திட்டினாள்.

"ஏய்! எல்லாம் எனக்கு தெரியும். உனக்கு சொன்ன வேலையை மட்டும் போய் பார்." என்று சிரித்து கொண்டே சுபாவின் காதை திருகினான்.

"ஆஹ் வலிக்குது அண்ணா. நான் போறேன் விடுங்க." என்று மஹாவின் அரை நோக்கி ஓடினாள்.

கதவை திறந்து உள்ளே சென்ற சுபா மகா கட்டில மேல் முழங்கால்களுக்குள் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருக்க அருகில் சென்று, "அண்ணி" என்று மஹாவின் தலையை வருடினாள்.

"சுபா" என்று அழுதபடி அவளை கட்டி அணைத்துக் கொண்டாள்.

"அண்ணி அழாதீங்க. அண்ணன் கோவமெல்லாம் கொஞ்ச நேரம் தான். அவர் அவ்ளோ சீக்ரம் யார் மேலயும் கோவப்படமாட்டார். நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நீங்க இங்க தனியா இருக்கறத சொல்லி என்ன உங்ககிட்ட அனுப்பனதே அண்ணன் தான்."

சுபாவிடம் இருந்து விலகி, "நிஜமாவா சுபா?" என்று விழிகள் விரிய கேட்டவளை பார்த்து சிரித்தவள்.

"சரி வாங்க. உங்கள என் கூடயே வச்சுக்கணும்னு அண்ணனோட ஆர்டர். முகத்தை துடைச்சிட்டு வாங்க போலாம்." என்றாள் சுபா.

"சரி" முகத்தை துடைத்து சரி செய்த பின் வெளியே வந்தார்கள்.

சுபா உள்ளே போய் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் ஷக்தி தவித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் வெளியே வருவதை பார்த்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

வேகமாக சுபாவின் பின்னே நடந்தாலும் ஒரு நொடி ஷக்தியை தேடி துறுதுறுவென அலைந்த கருவிழிகள் தன்னவனை படம்பிடித்து தலை தாழ்த்தி நடந்து சென்றது.

அவளை வெகு தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷக்தி அவளின் மான்விழிகள் தன்னை தான் தேடுகின்றன என்பதை அறிந்து வேறு எங்கோ பார்வையை திருப்பினான்.

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த சுரேஷ் ஷக்தியடம், "டே , அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவர். அண்ணி இப்ப தான கிராமத்துலேர்ந்து வந்துருக்காங்க. உன்ன விட்டா அவங்களுக்கு யார் இருக்கா? உன்ன பத்தி முழுசா புரிஞ்சிக்க கொஞ்ச நாள் ஆகும். கோவிச்சிக்காதடா பாவம் போய் பேசு." என்றவன் ஜனனியை பார்த்து,

"ரொம்ப வருஷம் கூட இருந்தவர்களே உண்மையான அன்ப புரிஞ்சிக்கிறதில்ல. போடா போய் சமாதான படுத்து." என்றான்.

ஷக்தி ஏதோ சொல்ல வாய் எடுக்க, "வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா? நிலா குட்டி எப்படி டா இருக்க?" என்று குரல் கேட்ட திசையை திரும்பி பார்த்தான். சக்தியின் அம்மா அப்பா தங்கை எல்லோரும் வந்து கொண்டிருந்தனர்.

'போச்சுடா இப்ப நா எப்படி அவளை சமாதான படுத்துறது. ரொம்ப கஷ்டம் இவங்க எல்லாரும் வந்துட்டாங்க.' என்று மனதிற்குள் நினைத்தான்.

தன் தங்கை நிலாவிற்கு மட்டும் எதையும் மறைக்காமல் ஏற்கனவே கூறிவிட்டான் ஷக்தி.

தன் அண்ணியை பார்க்கும் ஆர்வத்தில் அண்ணனிடம் ஓடி வந்து கொண்டிருந்தாள்.

"அண்ணா அண்ணி எங்க? நான் பார்க்கணும் ப்ளீஸ். எனக்கு காட்டுடா. ஆசையா இருக்கு." என்று சக்தியின் காதில் ஓதி கொண்டிருந்தாள்.

சுற்றி முற்றி பார்த்தவன், "அவளுக்கு நீ என் தங்கச்சின்னு சொல்லாம சுபாவோட பிரெண்டுனு அறிமுகப்படுத்திகிட்டு பேசு. அங்க சுபா கூட இருக்கா பாரு." என்று மெதுவாக கூறினான்.

"சரி அண்ணா. நான் பார்த்துகிறேன்." என்று சுபாவிடம் சென்றாள்.

"ஹாய் சுபா! எப்படிடி இருக்க?" நிலா.

"ஹாய் நிலா! நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?" சுபா.

"நான் நல்லா இருக்கேன்." என்று மஹாவை பார்த்து, "யாரடி இது?" என்று கேட்டாள்.

"ஐயையோ சுபா மஹாகிட்ட சொல்லுவாளோ?" என்று ஒரு நொடி பதட்டமானான் ஷக்தி.