• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
124
88
28
Salem

18.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​


வர்மன், “ என்ன தாத்தா பண்ணனும் ன்னு சொல்லுறீங்க?

வர்மா அது உன்னோட அம்மா டா.. அதுக்காக தப்பை சரின்னு சொல்லவா.?

அவ எதையும் பண்ணல வர்மா பிசினஸ் ல இந்த மாதிரி எதாவது நடக்கிறது தான் நாங்க இதுக்காக இருக்கிற பொண்ணுங்களை தான் அனுப்புவோம் . இதுல எப்படி காலேஜ் பிள்ளைங்க வந்தாங்கன்னு தெரியாது.

சரி ஆரம்பத்துல தெரியாது இப்பவும் இரண்டு கேஸ் இருக்கே நாராயணன் பிடிபட்டதே அதுக்கு தானே அதுவும் உங்களுடைய தலையீடு இல்லாமலா இருக்கும் என்று கேட்க..

நிச்சயமா இல்ல வர்மா என்று ராமைய்யா சொல்ல..

போதும் தாத்தா இவ்வளவு மோசமா நடந்துக்க வேணாம்.

உண்மையை தான் சொல்லுறேன் வர்மா என்று ராமைய்யா சொல்ல…

உங்க உண்மையை தான் பார்க்கிறேனே என்றவன் அறையை விட்டு வெளியேற,வர்மா நில்லு ..

திரும்பாமல் நின்றவனின் அருகில் வந்தவர் பல்லவி..

அவங்க உள்ளயே இருக்கட்டும் தாத்தா பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிக்க வேண்டாம்.

அவ எந்த தப்பும் பண்ணல வர்மா..

எப்படி தாத்தா இவ்வளவு நடந்த பிறகு கூட நீங்க இப்படி சொல்லிட்டு இருக்கீங்க? உண்மையை தானே சொல்லுறேன் அவளுக்கு தகவல் மட்டும் தான் போகும் அதை செயல்படுத்துறது தான் அவ வேலை அதைத்தாண்டி அவளுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல..

ராமைய்யா வை இமைக்காமல் பார்த்தவன் அப்ப அந்த குற்றவாளி யாரு?

அது வந்து என்று தடுமாற..

சொல்லுங்க யாரு யாருக்காக இவ்வளவு வேலை பார்க்குறீங்க?


ராமைய்யா அமைதியாக இருக்க..

உங்களுக்கு தானே நீங்க தானே இது எல்லாத்துக்கும் காரணம் அப்படி என்ன ஆசை தீராம இருக்கு உங்களுக்கு?

ஆமா தீராது எப்பவும் தீராது நான் சாகுறவரை தீராது என்று ராமைய்யா கத்த…

இரண்டடி நகர்ந்து வந்தான் வர்மன்..

…….

ப்ச் இங்க பாரு வர்மா இது காலங்காலமா இருக்க கௌரவம் நாம் சாதாரண தொழிலதிபர்கள் இல்ல பரம்பரையா ராஜவாழ்க்கை வாழ்ந்தவங்க என்னோட மூத்தோர்கள் கிட்ட அடிமையா வாழ்ந்த மக்களை தான் தொழிலுக்கு பணயமாக வச்சோம் இப்பவும் பணயமாக வைக்க சிலபல மக்களை தேர்ந்தெடுக்கிறேன் இங்க தவறு எதுவுமே இல்ல என்று கூச்சமே இல்லாமல் சொல்ல..

அதிர்ந்து தான் போனான் வர்மன் எப்படி கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாமல் பேசுறீங்க?

இதுல என்ன உறுத்தல் இருக்கு அதுக்காகவே படைக்கப்பட்ட உயிரினங்கள் இங்க நிறைய …ச்சே என்றவன் விறுவிறுவென வெளியேற பார்க்க…

நில்லு வர்மா எப்படின்னாலும் உங்க அம்மாவை வெளியே கொண்டு வந்துடுவேன் ஆனா அதுக்கு முன்ன நீ அந்த அநாதை கூட எந்த தொடர்பும் வச்சுக்க கூடாது என்று மாடி ஏறி விட..


ஒரு பெருமூச்சுடன் அம்மு அம்மு… எப்ப என் கைக்கு வருவேன்னு காத்து இருந்தேன் ஆனா இப்படி எல்லாம் ஒரு திருப்பம் இருக்கும் ன்னு நினைக்கல உன்னையே பாதுகாக்க நினைச்சனே தவிர உன்னோட கடந்த காலத்தை தேடாம போய்ட்டேன் இப்ப அதுவே பெரிய தடுப்பா நிக்குதே என்று நினைத்து கொண்டவன் ரவிக்கு அழைக்க…

சொல்லு வர்மா…

அம்மு அத்த என்ன பண்ணுறாங்க டா…

அம்மா ரெஸ்ட் அவங்களுக்கு மனசு சரியில்லை டா

ம்ம்ம்

அம்மு…

அவ வேற ஏதோ வேலையா வேந்தன் பரத் கிட்ட பேசிட்டு இருக்கா..

ஏன் உனக்கு தெரியாதா… தெரிஞ்சாலும் நீ எனக்கு சொல்லப் போறது இல்ல..

இல்ல மச்சான் அவ வேலையில் என்னைக்கும் நான் தலையிட மாட்டேன் அவளா சொல்லாம நானு கேட்க மாட்டேன் என்று ரவி சொல்ல…


சரி சந்திரா வைக்கிறேன்.

வர்மா என்று ரவி குரல் தர..

என்னடா…

வேந்தன் சொன்னதை யோசிச்சியா…

சாகுறவரை எனக்கு அம்மு மட்டும் தான் அம்மு க்கு நான் தான் அதுல யார் குறுக்க வந்தாலும் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது…

உன்னோட அம்முவே குறுக்க நின்னா…

சிரித்தவன் அம்மு வை எப்படி ஹான்டில் பண்ணனும் எனக்கு தெரியும் சந்திரா..

இப்ப உன்னோட செக்கியூரிட்டை டைட் பண்ணி இருக்க போல..

ஆமா எந்த இடத்திலும் நான் அத்தை அம்மு வை இழக்க விரும்பல..

உங்க அத்தையே உன்னையே வேண்டாம் ன்னு தான் பேச்சு டா…

தெரியும் டா எல்லாத்துக்கும் முடிவுன்னு ஒன்னு இருக்கும் இல்ல என்றவன் பார்த்துக்க என்று வைத்து விட்டு பகலவனுக்கு அழைக்க அழைப்பு ஏற்காமல் அணைந்து போனது..

இங்கே பகலவன் மாலினி தூக்கி எறிந்த பேப்பரை பார்த்து கொண்டு என்ன பேசுற மாலினி..


என்ன பேசனும் இன்னும் என்ன இருக்கு? அதான் வந்துட்டாளே அப்புறம் என்ன?

மாலினி…

எதுக்கு கத்துறீங்க நீங்க என்னோட வாழ்ந்த வரை போதும்..

போதும் நிறுத்து மாலினி..

எதுக்கு நிறுத்தனும் ஏன் நிறுத்தனும் ஊருக்கே நான் வப்பாட்டி மாதிரி இருக்க விரும்பல…

நிறுத்து மாலினி உன்னையே நான் முறையா கல்யாணம் பண்ணி இருக்கேன் என்று பகலவன் கத்த..

பண்ணி என்ன புண்ணியம் அதுக்கு உரிமை கொண்டாட ஒருத்தி வந்து இருக்காளே…?

புரியாம பேசாத அம்பிகை இப்ப என்னோட வரப்போறான்னு யாரு சொன்னா..?


யாரு சொல்லனும் பொழுது விடிஞ்சு முடிஞ்சா எல்லா பேப்பர் டிவி ன்னு அவளையும் அவ பழையதையும் உங்களையும் உங்க குடும்பத்தையும் தானே போட்டுட்டு இருக்காங்க என்று மாலினி சத்தமிட


இல்லன்னு சொல்லுவியா அவ தான் என் முதல் மனைவி, அவ வந்தாலும் இல்ல செத்தே போய் இருந்தாலும் நீ இரண்டாவது தான் அது ஒன்னும் புதுசு இல்லையே என்று பகலவன் எரிந்து விழ..

மாப்ள என்று அகத்தியன் சத்தமாய் அழைக்க..


ப்ச்… நீங்க என்ன நினைச்சாலும் அது உண்மை தானே உங்க பொண்ணு ஏன் புதுசா பிரச்சினை பண்ணிட்டு,நான் கல்யாணம் வேணாம் ன்னு சொல்லியும் தொடர்ந்து பேசி கட்டியது நீங்க எல்லாரும் தானே ? என்று பார்க்க அகத்தியன் முகம் கசங்கி விட்டது.

மாலினி, “ போதுமா என்று தகப்பனை பார்க்க..

என்ன பேசுறீங்க பகலவன் ..

உண்மையை தான் அப்பவே மாலினி உன்கிட்ட பேசினேன் எத்தனை வருஷம் ஆனாலும் உன்னையே மனைவியா பார்க்க முடியாதுன்னு அப்ப என்ன சொன்ன என்று கேட்க..

இப்ப அதுக்கு என்ன?அப்பவும் நான் பேசினேன் இப்பவும் பேசுறேன் எனக்கு இந்த பந்தம் வேண்டாம் முடிச்சுக்கலாம் என்று சொல்ல..

நிறுத்து மாலினி அப்ப வேற இப்ப அப்படி இல்ல ஏன் ஏன் இல்ல



தாரா க்கு என்ன பதில் தருவ

அவ என் பொண்ணு அதைத்தான் கேட்கிறேன் அவ உன்னோட பொண்ணு நாளைக்கு அவ வாழ்க்கையை யோசிக்காம இப்படி முடிவு பண்ணாத என்று பகலவன் கத்த…

என்ன பேசுறீங்க என்று அகத்தியன் கேட்க..

அதுவரை ஆக்ரோசமாக பேசிக்கொண்டு இருந்த மாலினி திடுக்கிட்டு தகப்பனை பார்த்தவள் பகலவனை முறைக்க..


அகத்தியன், “மாலினி என்ன பேசுறீங்க என்ன விஷயம் தாரா என்று தடதடக்க கேட்க…

மாலினி , “ தாரா என்னோட பொண்ணு..

அப்படின்னா…

அப்படித்தான் என்னோட பொண்ணு என்று அழுத்தி சொல்ல..பகலவன் அமைதியாக இருக்க என்ன பகலவன் சொல்லுறா மாலினி..

உண்மை தான் தாரா மாலினி பொண்ணு.. அப்ப உங்களுக்கு ..

எனக்கும் பொண்ணு தான் என்று தடுமாற..

இல்ல இல்ல இல்ல என்று கத்திய மாலினி அவ என் பொண்ணு இதுல கையெழுத்து போட்டு குடுத்துட்டு கிளம்பலாம் நீங்க என்று பேச..ஓங்கி அறைந்து இருந்தார் அகத்தியன்.

அப்பா…அகத்தியன் சார்..என்று பகலவன் அழைக்க..

போதுமா இது தான் இந்த உறவுக்கு உள்ள அர்த்தம் என்று மாலினி சொல்ல..

அப்ப தாரா…என்று அகத்தியன் மீண்டும் கேட்க.



அவ என் பொண்ணு என்றவள் பகலவனை பார்த்து இதுல கையெழுத்து போட்டு குடுத்துட்டா நான் நிம்மதியா இருப்பேன் என்று சொல்ல பகலவன் வேகமாக எடுத்தவன் கிழித்து போட்டு விட்டு தாரா எப்படி வேணும் ன்னாலும் பிறந்து இருக்கலாம் ஆனா அவளுக்கு அப்பா நான் தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போல என் பொண்ணு வாழ்க்கை செட்டில் ஆகுற வரை இருந்துட்டு போகலாம் என்று சொல்லவும்…,அதுக்கு நீ இருக்கனும் ன்னு அவசியம் இல்ல அவளோட அப்பன் உயிரோட தான் இருக்கான் அவளுக்கு செய்ய என்று சொன்ன நொடி நொறுங்கி விட்டான் பகலவன்.

அகத்தியன், “ மாலினி…

ஆமா ப்பா தயவு செய்து இதை அறுத்து விடுங்க என்னால் முடியல என்று பேச…

இங்கே தாரா பப்பில் அவள் நண்பர்களோடு இருக்க…என்ன தாரா உங்க அப்பாவோட முதல் மனைவி அவர் பொண்ணு எல்லாம் வந்துட்டாங்க இனி உங்க வாழ்க்கை எப்படி என்று கேட்க…

ஹேய் தேவையில்லாம பேசாத என்று தாரா எகிற..

நாங்க பேசுறது உனக்கு கசக்குதா நாடே பேசுதே உங்க கதையை என்று சொல்லி சிரிக்க அதுவரை அமைதியாக இருந்தவள் அங்கிருந்த போதை வஸ்துவை கையிலெடுக்க..

ஹேய் வேணாம் என்று சிலர் தடுக்க..,சிலரோ விடு மச்சி இப்ப தான் அவ இந்த இடத்துக்கு ஏத்தவளா நடந்துக்க பார்க்கிறா என்று அவளுக்கு தூபம் ஏத்த..


போதை தலைக்கேற தாரா தனி உலகத்தில் இருந்தவள் நண்பர்களுடன் கிளம்பி பாதி தூரத்திலேயே அவளுடன் வந்தவர்கள் அவளை இடம் மாற்றி இருந்தனர் வேறு ஆளுக்கு…

என்ன டா பண்ணுற அவளை எதுக்கு வேற ஒருத்தவங்களோட அனுப்புற?

டேய் சும்மா இரு ஒரு நாள் போய்ட்டு வரட்டும் அவங்க குடும்பம் எத்தனை பேரை அனுப்பி இருப்பாங்க இப்பவும் அவ சரி ன்னு சொல்லி தான் அனுப்புறேன் என்று மற்றொருவன் சொல்ல … தப்பு டா அவளுக்கு சுயமே இல்ல…வெகுநாள் ஆசை நிறைவேறிய எண்ணத்தில் அவன் இருக்க கூட இருந்தவனோ தேடிப்பிடித்து வர்மன் ஆபிஸ் நம்பருக்கு அழைத்து விட..

விஷயம் அறிந்து வர்மன் வந்து சேர்வதற்குள் தாராவை காணவில்லை..


தாரா வை தேட ஆளை அனுப்பி வைத்து தாரா நண்பர்களை பிடித்து வாட்டி விட்டான் வர்மன்..

சார் சார் நாங்க அழைச்சிட்டு போனது உண்மை தான் ஆனா இடையில் வேற ஒரு வண்டி வந்து அந்த பொண்ணை அழைச்சிட்டு போய்ட்டாங்க என்று சொன்னதும் வர்மன் தள்ளாடி அமர்ந்து விட்டான். எவ்வளவு விஷயங்களை பகலவன் தாங்குவார் என்று அவனின் எண்ணங்கள் அனைத்தும் அவரையே சுற்றி வர..,

வடக்கு சென்னை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைப்பு வந்து இருந்தது வர்மனுக்கு…


தொடரும்