"இவங்க மஹா என் பிரென்ட்." என்று நிலாவிடமும், "இவ நிலா என் பிரென்ட்." என்று மஹாவிடம் கூறிக்கொண்டு சக்தியை நோக்கினாள்.
டென்சனில் இருந்தவன் சுபாவின் பதிலை கேட்டு கண்களாலேயே நன்றி உரைத்தான்.
"ஹாய்! ஐ ஆம் நிலா." என்று கை கொடுக்க மஹாவும் தயங்கியபடி, "நான் மஹாலக்ஷ்மி" என்றாள் புன்னகையுடன்.
மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
"நிலா இங்க வாம்மா." சக்தியின் அம்மா குரல் கொடுக்க,
"மஹா வாங்க எங்க அம்மாகிட்ட உங்கள இண்ட்ரோடியுஸ் பண்றேன்." என்று மஹாவின் கரம் பற்றி இழுத்து சென்றாள்.
"இவ ஏன் மஹாவை கூட்டிட்டு போறா? வாலு அடங்கவே மாட்டா, ஏதாவது சொதப்பிடுவாளோ? நம்மள டென்ஷனாவே வெச்சுருக்குங்க இந்த பக்கிங்க." என்று மனதிற்குள் திட்டியபடி மனதில் ஒருவித பயத்தோடு பார்த்து கொண்டிருந்தான்.
"அம்மா! இவங்க என் புது பிரென்ட் மஹா." என்று அறிமுகம் செய்தாள்.
"வணக்கம் அம்மா." என்ற மஹாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்
"உன் பேர் மாதிரி நீயும் மகாலக்ஷ்மி மாதிரி தான்மா இருக்க?" என்றார்.
"நன்றி அம்மா" என்று வெட்கத்தில் தலைகுனித்தாள்.
"படிக்கிறியம்மா?" என்றவரை பார்த்து.
"இல்லம்மா பி.இ முடிச்சிட்டேன்."
"நான் உன்ன பார்த்ததே இல்லையே யார் வீட்டுக்கு வந்துருக்க?" என்றார்.
மஹா பதில் சொல்வதற்குள்,
"ஆண்ட்டி ப்ளீஸ் காப்பாத்துங்க." என்று ஷக்தி பார்வையால் கெஞ்ச.
"என் தூரத்து உறவுக்கார பொண்ணு அவங்க அப்பா அம்மா ரெண்டு பெரும் தவறிட்டாங்க அதான் எங்க கூடயே இருக்கட்டுமனு கூட்டிட்டு வந்துட்டேன் அக்கா." என்றபடி வந்து அமர்ந்தார் சுரேஷின் அம்மா.
"அப்பா உயிர் போய் உயிர் வருது இந்த வாலு என் கிட்ட மாட்டட்டும்." என்று திட்டிக்கொண்டிருந்தான்.
"அப்டியா பொண்ணு ரொம்ப அழகா அடக்கமா இருக்கா அதான் கேட்டேன்." என்றார்.
"மாப்ள ஏதாவது பாக்கறீங்களா இல்ல வேலைக்கு போறாளா?" என்றார்.
"இல்ல அக்கா புது இடம். அதான் வேலைக்கு இப்ப வேணாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருக்கேன்.
நல்ல வரனா வந்தா முடிக்கலாம்ன்னு பார்க்கிறேன்" என்றவரை ஒன்றும் புரியாமல் முழித்தாள் மஹா.
'அய்யய்யோ இந்த பொண்ணு ஏதாவது உளரிட போறா.' என்று நினைத்த சுரேஷின அம்மா,
"மஹா! சுபா உன்னை தேடிட்டு இருக்கா பாரு போம்மா." என்று அனுப்பி வைத்தவர்.
சக்தியின் அம்மாவிடம் திரும்பி "அக்கா உங்களுக்கு ஏதாவது நல்ல வரனா இருந்தா சொல்லுங்க. சொத்து பத்துக்கெல்லாம் எந்த கொறச்சலும் இல்ல. நம்ம அளவுக்கு சமமா அவங்களும் பணக்காரங்க தான். இவ பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்கு. வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன அம்மா அப்பா இல்ல. அதான் ஊர்ல இருந்தா யார் வேணா ஏமாத்திடுவாங்கன்னு தான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்." என்றாள் சக்தியை ஓரக்கண்ணால் பார்த்தபடி
தன் கட்டை விரலை உயர்த்தி உதட்டை பிதுக்கி சக்சஸ் என்று சைகை காட்டினான் ஷக்தி.
ஏதோ யோசனையில் மஹாவின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தார். அவளின் அழகு அமைதி அடக்கம் எல்லாமே அவரை வெகுவாய் கவர்ந்தது.
"சரிக்கா! தட்டு மாத்தப்போறாங்க வாங்க கூப்பிட்றாங்க." என்று எழுந்து போனார்.
"நீ போ நான் அப்புறம் வரேன்." என்றவர் யோசனையில் ஆழ்ந்தார்.
"நிலா இங்க வா டா" என்றவரிடம்.
"என்னம்மா?"
"இங்க வாயேன் உன் பிரென்ட்ன்னு கூட்டிட்டு வந்தல்ல எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சக்திக்கு பொருத்தமா இருப்பா இல்ல?" என்றார்.
"என்னது?" என்றாள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும்.
"நிச்சயமா வாலு இந்த தடவை சொதப்ப போறா நாமளே விசிட் அடிச்சிடலாம்." என்று யோசித்தவன் வேகமாக அவர்களை நெருங்கி, "என்னம்மா சிரியஸ் டிஸ்கசன்?" என்றான் ஒன்றும் தெரியாதவனாய் .
"வாடா நல்லவனே. கரெக்ட்டா டைம்க்கு வந்துட்ட?" என்று நினைத்தபடி அண்ணனை பார்த்து சிரித்தாள்.
"அது ஒண்ணுமில்ல ஷக்தி. எனக்கு ஒரு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நான் காட்றேன் உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரேன்." என்று மஹாவை காட்டினார்.
"நல்லா தான் இருக்கா. ஆனா, பார்க்க வில்லேஜ் மாதிரி தெரியுதே?" என்றான்.
"வில்லேஜ்னா என்னடா? பொண்ணு பி.இ புடிச்சிருக்கா பார்க்க ரொம்ப அழகா இருக்கா ரொம்ப அமைதியா பேசறா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."
"அம்மா உனக்கு பிடிச்சா எனக்கு ஓகே தான் மா. ஆனா, உன் புருஷன் அதான் எங்கப்பா ஹிட்லர் ஓகே சொல்லணுமே? அவர் நிச்சயம் வேணாம்னு தான் சொல்ல போறார். எதுக்கு இதெல்லாம் வேணாம் விட்ரும்மா." என்றான்.
"டே ! அத நா பார்த்துக்கறேன். நம்ம வீட்டுக்கு மருமகள தேடறேன். நான் அவர் ஆபீஸ்க்கு வேல செய்ய இல்ல. நான் முடிவு பண்ணிட்டேன் இவ தான் என் மருமக." என்று எழுந்து முன்னே சென்றார்.
ஷக்தியையே பார்த்து கொண்டிருந்த நிலா, "டே அண்ணா! நீ அவ்ளோ நல்லவனாடா உன்ன போய் நல்லவன்னு நம்புது இந்த உலகம் கேடி." என்று சிரித்தாள்.
"அட நீ வேற? உங்க அண்ணியை ரெடி பண்றதுக்குள்ள நான் இல்ல படாத பாடு பட்டேன்." என்றான்.
"என்னடா சொல்ற?" நிலா.
"ஆமா. ஆன்ட்டிகிட்ட சொல்லி நெத்தில குங்குமம் வெக்க வேணாம்னும் அப்புறம் தாலி மெட்டி எதுவும் வெளியே தெரியாம பார்த்துக்க சொல்லுங்கன்னு சொன்னேன். நான் பிளான் பண்ண படி எல்லாம் கரெக்ட்டா போகுது பார்க்கலாம்." என்று கண்ணடித்தான்.