• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
124
88
28
Salem

19.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​


இந்த நைட்ல எங்கம்மா வாக்கிங் போகனும் ன்னு சொல்லுறீங்க ?

வாகி மனசே சரியில்லை இப்படியே எங்கயாவது போகலாம் அங்க இருந்தவரை அப்படியே வண்டி எடுத்துட்டு காடு மலைன்னு போவேன் இங்க அப்படி இல்லையே என்று ரிஷி சொல்ல..அவரை பார்த்து புன்னகைத்தவள் வண்டியில் போகலாமா அம்மா..

ம்ம்ம் …

வண்டியை எடுக்க சொல்லியவள் ரிஷியை அழைத்து கொண்டு கிளம்ப நானும் என்று விதுரிஷி வர..மூவரும் கிளம்பி இருந்தனர். வண்டி அதன் போக்கில் போக ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வந்தார் ரிஷி… இதோ இந்த இந்த இடம் தான், இந்த நேரம், ஒரு நொடி என்று ஒவ்வொன்றும் ரிஷியின் மனதில் வந்து நிற்க..இங்க நிறுத்த சொல்லு வாகி என்று வண்டியை சாந்தோம் சர்ச் முன்னே நிறுத்தி இருந்தாள் ரிஷி பாலா‌..


இறங்கிய தாயை பார்த்து மென்னகை புரிந்த வாகி தாயின் பின்னே இறங்கிய விதுரிஷியை தடுத்தவள் அம்மா போய்ட்டு வரட்டும் டா..

ஏன் கா இந்த நேரத்தில் தனியா…

அவங்களுக்கு பழக்கமான இடம் தான் எந்த பக்கம் இருந்து அசைவு வந்தாலும் கண்டுபிடிச்சுடுவாங்க இங்கேயே இரு என்று இறுக்கி கொண்டவள் தாயை தான் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்..

கடைசியாக பணியாற்றியது சென்னையில் தான் இருபது வருடத்திற்கு முன்பு..அதுவும் பதவி உயர்வோடு…

பகலவன் தன் விருப்பத்தை ஈரோட்டில் வைத்து சொல்லிய பிறகு அவன் மாற்றல் ஆகி சென்று விட ரிஷி க்கு இரண்டு வருட இடைவெளி இருந்தது பகலவனை மீண்டும் சந்திக்க இருவரும் பெரிதாய் பார்த்து கொண்டு தங்களை நினைத்து கொண்டு என்று பொழுதை போக்கியது இல்லை . பகலவனுக்கு ரிஷி செய்யும் ஒவ்வொரு வேலையின் நேர்த்தியும் அவ்வளவு பிடிக்கும். அதேநேரம் பகலவனின் நேர்மையும் சில இடத்தில் பிரச்சினை வராமல் விட்டு கொடுத்து மக்களுக்கு பெரிய பாதகம் வராமல் செய்யும் செயலை நினைத்து ரிஷி க்கு அவ்வளவு ஆச்சரியம். இந்த பிடிப்பும் ஆச்சரியம் இணைந்தது தான் புதிய காதல் பயணம் அதுவும் பகலவன் மனதில் மட்டும் . ரிஷி எந்த இடத்திலும் தடுமாற தயாராக இல்லை.


இதோ அதோவென மாற்றலாகி வந்து நின்றாள் சென்னையில் .. ஒன்றும் அறியாதவள் அல்ல ஆனால் ஒற்றையாய் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அநாதை பெண், மதர் நிறைய விஷயங்களை சொல்லித்தான் வெளி உலகத்திற்கு அனுப்பி வைத்தார். இதோ பகலவன் விஷயம் கூட மதருக்கு தான் முதலில் தெரியும். மதரும் இதில் பெரிதாக விருப்பம் காட்டவில்லை . காரணம் அவர்களின் உயரம். எப்படி வேண்டுமானலும் வாழ்க்கை தடம் புரளும் என்று மதர் அமைதியாக இருந்துவிட்டார்.

கன்கிராட்ஸ் அம்பிகை..

சார் என்று அன்று ஜாயின் செய்யும் போது பகலவனை பார்த்து அதிர..

என்ன நான் இங்க இருக்கேன்னு உனக்கு தான் தெரியுமே அப்புறம் என்ன?

தெரியும் ஆனா இங்க இன்னைக்கு வருவீங்கன்னு என்று இழுக்க… இரண்டு வருஷமா நான் உன்னோட தான் உன்னோட நிழலாக என்று சொல்லவும் சற்றே சிலிர்ப்பு ஆனால் அந்த சிலிர்ப்பு ம்ம் அடக்கப்படதாகவே இருக்க தேங்க்ஸ்..

ம்ம்ம் இனி அடிக்கடி பார்க்கலாம் என்று சொல்லி அடுத்த ஒரு மாதத்தில் மீண்டும் சந்திப்போம் என்று நினைக்கவே இல்லை ரிஷி. அதுவும் எப்படியான சூழலில் என்று அதை நினைக்க நினைக்க ஒரு பக்கம் இனிமை என்றாலும், மறுபக்கம் நெஞ்சு தடதடக்க தான் செய்து இருந்தது. அதையெல்லாம் யோசித்தது இந்த இடத்தில் இதோ இன்றைய இருட்டிய இந்த நேரத்தில் தான் அப்போதும் என்று நினைத்து மெல்ல புன்னகைத்தவள் எழுந்து கொள்ள பார்க்க அந்த பக்கத்தில் ஏதோ அசைவது போல் இருக்க பட்டென நகர்ந்து அங்கே சென்றவள் ,மறு நொடி விறுவிறுவென நடக்க நில்லு அம்பிகை நில்லுடி இப்படி ஓடினா மட்டும் எதுவும் இல்லன்னு ஆகிடாது என்றவர் வேகமாக வந்து ரிஷி கையை பற்ற வண்டியிலிருந்து இறங்கி ஓடி வந்து இருந்தான் விதுரிஷி.


அம்மாவை விடுங்க என்று விது சத்தமாக சொல்ல..

டேய் அவ எனக்கு பொண்டாட்டி டா..

இருக்கலாம் அது கடந்தகாலம்..

டேய் வெறுப்பேத்தாத ஏற்கனவே கடுப்புல இருக்கேன் என்று சொல்ல

நீங்க அடுப்புலயே இருந்தாலும் பரவாயில்லை அம்மாவை விடுங்க என்று கர்ஜிக்க..

என்னடி இது எனக்கு எதிரியை வளர்த்தி வச்சு இருக்க என்று சொன்ன அடுத்த நொடி துப்பாக்கியை பகலவனை நோக்கி நீட்டி இருந்தான் விதுரிஷி..

ப்ச்… டேய் என்று பல்லை கடிக்க ..

நிதானமாக இறங்கி வந்த வாகி அம்மா போகலாமா..?

போகலாம் வாகி என்றவள் பகலவன் கையிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள பார்க்க இறுக்கி பிடித்து இருந்தார் பகலவன்.

போதும் இதுவரை பிடிக்காம விட்டது விட்டதாகவே இருக்கட்டும் புதுசா ஒரு குழப்பம் வேண்டாம் சொன்னா கேளுங்க என்றவள் கையை உருவிக்கொண்டு நடக்க விதுரிஷி பின்னோடே செல்ல வண்டி கிளம்பி இருந்தது.

வண்டி கிளம்பியதும் பகலவன் அங்கேயே மடங்கி அமர்ந்து விட…அடுத்த கால் மணிநேரத்தில் வந்து இருந்தான் வர்மன்.மாமா என்ன இது என்று பகலவனை தூக்க..

முடியல டா தப்பே பண்ணாம தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கேன் என்று சொல்லிய வரை பார்த்து ஒரு வறுத்த முறுவல் தந்தவன் கிளம்பலாம் மாமா தாராவை காணோம் அந்த வேலை இருக்கு என்றதும் என்ன சொல்லுற வர்மா எங்க தாரா என்ன விஷயம் என்று கேட்க..

பப் விஷயத்தை சொல்ல, இருந்த கவலைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தாரா வை தேடி செல்ல ஆரம்பித்து இருந்தனர் பகலவனும் வர்மனும்…

நான் இங்க இருக்கேன்னு யாரு சொன்னா வர்மா…

சந்திரன் மாமா..


அது யாரு…

நீங்க அத்தையை பார்க்க போனப்ப ஒரு நம்பர் தந்தேனே அவன் தான்..

ஓஓஓ அந்த தம்பி இங்க எங்க?

அவன் அத்த அம்மு கூட தான் இருக்கான் மாமா..

ம்ம் ம்ம் என்றவர் அமைதியாகிவிட்டவர் தாரா அம்மாக்கு சொன்னியா வர்மா..


இல்ல மாமா எதுக்கு இன்னும் பிரச்சனையை பெரிசாக்கிட்டு அதான் முதல்ல நம்ம பார்த்துட்டு என்று சொல்ல அப்ப ஸ்டேஷன் ல இருக்கலா வர்மா..

தெரியல மாமா வரச் சொல்லி மட்டும் என்று நிறுத்த உடனே போனை போட்டு இருந்தார் பகலவன் விஷயத்தை கேட்க சொல்லி போனை வைக்க அதற்குள் ஃப்ளாஷ் நியூஸ் வந்து இருந்தது ..ராமைய்யா வீட்டு பெண் வாரிசு முன்னாள் கலெக்டர் பகலவனின் மகள் தாரா போதை பழக்கம், போதையுடன் ஆண் நண்பர்களுடன் பிடிபட்டார் என்று வந்துவிட தொடர்ந்து வேறு வேறே போன்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.போனை எடுக்கும் முன்பு வர்மன் ஸ்டேஷனில் நிறுத்த அங்க ஊடகத்தை சேர்ந்த பெரிய கூட்டம் நிற்க எதையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார் பகலவன்.

சார் என்று சல்யூட் வைத்தவரை பார்த்து என்ன சார் இவ்வளவு கூட்டம்.

சார் நாங்க எதுவுமே பண்ணல வரும் போதே மீடியா வந்துட்டு இங்க, இவங்களை இறக்கி விட்டு ஒரு கார் போச்சு என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ள மீடியா என்று சொல்ல …

ம்ம் இப்ப எப்ஐஆர் போட்டாச்சா..

போடனுமே சார் இல்லன்னா இப்ப மீடியா நம்மளை கிழிச்சு தொங்க விட்டுடுவாங்க…

சரி ஓகே நான் ஜாமின் ல எடுத்துட்டு போகலாம் இல்லையா சொந்த ஜாமின் ல என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வர்மன் வக்கீலுடன் வந்தவன் சிறப்பு பிரிவில் ஜாமினும் வாங்கி தாராவை அழைத்து கொண்டு வீடு வந்து சேர…

அந்த நடுஇரவில் மாலினி ராமைய்யா வீட்டில் கத்தி கொண்டு இருந்தார்..

ராமைய்யா, “எதுக்கு மாலினி இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க?

வேற என்ன பண்ணனும் ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்சனையை தானே நீங்க கொண்டு வரீங்க இப்ப அதுல என் பொண்ணும் அடக்கம் அவளை இப்படி அநியாயமா உங்க பிரச்சினையில் ஸ்டேஷன் ல உட்கார வச்சு அவ போட்டோ போட்டு அசிங்கப்படுத்திட்டீங்களே என்று மாலினி சத்தம் போட அகத்தியன் குடும்பத்தினர் அனைவைரும் வர்மனுக்கு அழைத்து விஷயத்தை தெரிந்து கொண்டு ஒவ்வொருவராய் வந்து சேர்ந்து இருந்தனர்.

வர்மன் வண்டி வீடு வரவும் மற்றவர்களும் வந்து இருந்தனர்.

வர்மன் வண்டி நின்ற வேகத்தில் அகத்தியன் குடும்பத்தினர் வண்டியை சூழ தாரா பகலவன் மடியில் உறங்கி இருந்தாள். வண்டியை திறந்து தாரா வை தூக்கி கொண்டு உள்ளே பகலவன் வர…

ச்சீ என் பொண்ணை தொட உனக்கு வெட்கமா இல்ல என்று மாலினி கத்த…
தாரா வை கீழ் உள்ள அறையில் படுக்க வைத்து விட்டு பகலவன் வெளியே வருவதற்குள் எப்படி அந்த அநாதையையும் அவ பெத்தையும் கொல்ல திட்டம் போட்டீங்களே அப்படி என் பொண்ணை கொல்ல முயற்சி பண்ணுறீங்களா என்று ஓங்கி ஒலித்து இருந்தது மாலினி குரல்.

அந்த வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் வர்மன்.

வர்மன், “என்ன சொல்லுறீங்க?

என்ன சொல்லனும் அவளை டார்ஜீலிங் அனுப்பி கொல்ல ஃப்ளான் பண்ணாதே உன் தாத்தாவும் உங்க அம்மாவும் தானே என்று மீண்டும் சொல்ல‌‌.

வர்மன் ராமைய்யா வை ஒரு பார்வை பார்க்க..

போதும் மாலினி இதுக்கு மேல பேசாத தேவையில்லாத வேலை பார்த்துட்டு இருக்க என்று எகிற..

என்கிட்டே என்ன எகிறிட்டு வரீங்க என்று மாலினி மீண்டும் பேச..போதும் நிறுத்துறீங்களா என்ற வர்மன் திரும்பி அகத்தியனை பார்த்தவன் தாராவை அழைச்சிட்டு வந்துட்டேன் இனி அவளை பத்திரமா பார்த்துக்கோங்க …

அகத்தியன் என்ன என்பது போல் பார்க்க இத்தனை வருஷமா உங்க வீட்டில் தான் இருந்தா அப்ப உங்களுக்கு தான் அவளோட நடவடிக்கை பழக்கவழக்கங்கள் தெரியும் நான் சொல்லுறது சரிதானே என்று கேட்டவன் இந்த வீட்டில் எதுக்கும் நாங்க பேச முடியாது அது நல்லாவும் இருக்காது என்றவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,உங்ககிட்ட பேசனும் தாத்தா என்றான் ராமைய்யா வை பார்த்து..

என்ன என்ன பேசனும் என்று அவர் பதற…


நிறைய பேசனும் தாத்தா என்றவன் திரும்பி நடக்க அங்கே அந்த அறை வாசலில் அசையாமல் நின்று இருந்தார் பகலவன்.


தொடரும்