• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. மஹாவின் மனது

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
"அடப்பாவி நீ தான் இவ்வளவும் செஞ்சதா?" என்றாள் நிலா ஆச்சர்யமாக!

"நானே!" என்றான் காலரை தூக்கிவிட்டபடி.

ஷக்தி தன் அம்மாவிடமும் தங்கையிடமும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்ட மஹா, "அய்யய்யோ! இது அவருடைய அம்மாவா? ஏற்கனவே என்கிட்டே கோச்சிக்கிட்டு இருக்காரு. இதுக்கு வேற இப்ப வந்து என்ன சத்தம் போடுவாரோ?" என்று எணணி பயந்தவள் நேராக தன் அறை நோக்கி வேகமாக நடந்தாள்.

தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மஹாவை பார்வையால் கவனித்து கொண்டிருந்தவன் மஹா எங்கோ செலவதை பார்த்து பார்வையாலே நிலாவிடம், 'நீ அம்மாவை பார்த்துக்க நான் மஹாவிடம் சென்று வருகிறேன்.' என்று சைகை காட்டினான்.

'சரி' என்று தலை ஆட்டிய நிலா அவன் காதருகில், "நடத்து ராஜா நடத்து." என்று கண்ணடித்தாள்.

அவளை போலியாய் முறைத்துக் கொண்டு மஹாவின் அறை நோக்கி நடந்தான்.

அறையினுள் சென்ற மஹா பதட்டத்தோடு முழங்காலில் முகத்தை புதைத்தபடி அமர்ந்திருந்தாள்.

சத்தம் இல்லாமல் உள்ளே வந்த ஷக்தி மெதுவாக கதவை தாழிட்டான்.

அவளருகில் சென்று அமர்ந்தவன், " மஹா." என்று அழைக்க,

திடிரென்று சக்தியின் அழைப்பில் திடுக்கிட்டு பயத்தில் இறங்க முற்பட்டவளின் கரத்தை பற்றி நிறுத்தினான்.

"இங்க என்ன பாரு." என்றான் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "சாரி எனக்கு அவங்க தான் உங்க அம்மானு தெரியாது." என்றாள்.

"அதனால என்ன? உங்க அத்தைய பார்த்துட்டே இல்ல நீ யாருன்னு தெரியாத அப்பவே உன்ட்ட எவ்ளோ அன்பா பேசறாங்க."

"அப்போ உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா?" என்றாள் பாவமாய்.

"அடி பைத்தியம். நீ என் பொண்டாட்டி. உன் மேல இருக்க உரிமைல ஒரு ரெண்டு நிமிஷம கோச்சுப்பேன். அதுக்கு உன் கூட இருக்க மாட்டேன்னு அர்த்தமா? எனக்கு கோவமெல்லாம் போச்சு." என்றவனை ஒரு நொடி கூட தாமதியாமல் கட்டிக் கொண்டாள்.

"அப்புறம் இன்னொன்னும் சொல்லணும் நிச்சயமா இன்னொரு தடவ சீக்கிரமா உன் கழுத்துல தாலி கட்டுவேன். அப்போ நீ என்கூட நம்ம வீட்டுக்கு வந்துடுவ. அதுக்கப்புறம் இப்ப இருக்க மாதிரி எல்லாம் நான் சும்மா இருக்க மாட்டேன் உன்னோட பெர்மிஸ்ஷனும் தேவ இல்லை எனக்கு. அப்புறம் என்கிட்டேர்ந்து தப்பிக்கவும் முடியாது. அதனால எல்லாத்துக்கும் தயாரா இரு." என்று அவளின் காதருகில் கிசுகிசுத்தான்.

தன் முதுகின்புறம் சட்டையை இன்னும் அழுத்தமாக இறுக்கி கொள்ளும் மஹாவை நினைத்து சிரித்தான்.

"சாரி இனிமே அப்படி பண்ணமாட்டேன்."

"எப்டி பண்ண மாட்ட?"

"அது... அது..."

"சரி. யோசிச்சு சொல்லு. நான் வெளிய போயிட்டு வரேன்." என்று அவளை விலக்க முற்பட்டவனை விடாமல் இன்னும் இறுக்கினாள்.

"அது இனிமே நீங்க என்னை நெருங்கும் போது விலக மாட்டேன்." என்று மெதுவாக அவளுக்கே கேட்காத குரலில் கூறினாள்.

"இப்படி சொன்னா எனக்கு எப்படி புரியும்?"

"என்ன பண்ணனும்?"

"ஹ்ம் நல்லா படுத்து தூங்கு உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பண்ண போறேனோ?"

"அப்படியா?" என்றவளை பார்க்கும் கணவன் கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து,

"நான் போறேன்." என்று திரும்பினாள்.

"ஹ்ஹ்ம் எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு போ." என்று அவள் கை பிடித்து இழுக்க மஹாவின் கைகைளில் இருந்த வளையல்கள் உடைந்து கையில் இருந்து ரத்தம் வழிந்தது.

"ஆ..." அவள் என்று கூச்சலிட,

"சாரி சாரி டா தெரியாம பண்ணிட்டேன்." என்று கையில் கட்டு போட,

"ஆ... ரொம்ப வலிக்குது."

" கத்தாதடி. எல்லாம் இங்க வர போறாங்க." என்றாலும் அவள் கேட்காததால் அவளின் செவ்விதழை தன் பூ இதழால் மூடினான்.

செல்ல சிணுங்கலுடன் ஷக்தியிடம் இருந்து பிரிந்தவள், "நீங்க ரொம்ப மோசம் போங்க!" என்று தன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். அவளை அணைத்தபடி மெதுவாய் கிறங்கும் குரலில் தன்னையும் மறந்து, "ஐ லவ் யூ " என்றான்.

"ஹ்ம்" என்ற முனகல் மட்டும் அவளிடம் இருந்து வெளிப்பட, "ஹேய்! மஹா."

"ஹம்!"

"நான் கேக்கறதுக்கு உண்மையான பதில் சொல்லணும்?"

"ஹம்!"

"நான் உன்ன லவ் பண்றேன். உனக்கு தெரியும் பட் உனக்கு என்ன பிடிச்சிருக்கா?" என்றான் ஏக்கத்தோடு.

"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள்.

"அப்டின்னா ஐ லவ் யூ ன்னு சொல்லு?"

"ஹ்ஹ்ம் முடியாது. ஆனா உங்கள எனக்கு பிடிக்கும்."

"எவ்ளோ பிடிக்கும் எப்படி?"

"ஆமா! முதல்ல என்ன அவங்ககிட்டேர்ந்து காப்பாத்தனிங்க அதனால பிடிக்கும். பத்து நாளா என்னை கவனிச்சிட்டே இருந்தாலும் எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சி என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்திங்க இல்ல. அப்போ பிடிச்சது, அப்புறம் எனக்கு கல்யாணம் பிடிக்கலன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எப்டியோ ஒரு முடிவெடுத்து என் கழுத்துல தாலி கட்டினீங்கள்ல அப்போ பிடிச்சது, இன்னும் நிறைய எல்லாத்துக்கும் மேல என் விருப்பத்தோடு தான் நாம ஒன்னு சேரணும்னும் அப்பா அம்மாவை சம்மதிக்க வெக்கணும்னு எவ்ளோ பண்றிங்க அதனால ரொம்ப பிடிக்கும், ஐ லவ் யூ." என்றாள்.

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தவன் கடைசியாக அவள் தன்னை காதலிப்பதாக
கூறவும் திக்கு முக்காடி போனான.

"ஹேய் இப்ப கடைசியா என்ன சொன்ன?" என்று நம்பாமல் கேட்டான்.

"ஹ்ஹ்ம் நான் ஒன்னும் சொல்லல. எல்லாரும் தேடுவாங்க போலாம் "

"முடியாது. நீ இப்ப சொல்ற வரைக்கும் நான் உன்ன விடமாட்டேன். அப்புறம் எது நடந்தாலும் நான் பொறுப்பு இல்ல." என்று சிரித்தான்.

"இவன் சிரிக்கிற தோரணையே சரி இல்லையே? எதுக்கு நம்மளே சொல்லிடுவோம்." என்று அவனை பார்க்காமல் " ஐ லவ் யூ" என்று கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அவளை பார்க்க குனிந்தவன். கதவு தட்டு ஓசை கேட்கவே அவளிடம் இருந்து பிரிந்து நின்றான்.