• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
"அம்மா அப்பா நான்.. நான் கொலைப் பண்ணிட்டேன்.. நான் கெட்டவன்.. அவர்.. அந்த அங்கிள் துடிச்சாரும்மா.. பாவம்.. நான் தப்பு பண்ணிட்டேன்.. என்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கம்மா" கண் மூடி அலறிக் கொண்டிருந்தான் பிரதியுமன்.

"காம் டவுன் பிரதி.. காம் டவுன்.. உங்கள யாரும் பிடிச்சிட்டு போகல.." சமாதானம் செய்து கொண்டிருந்தார் மருத்துவர்.

வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயனுக்கு மனது கணக்க ஆரம்பித்தது.. அம்புத்ராவின் கண்களோ ரத்தச் சிவப்பாக மாறியிருந்தது சினத்தால்.

கோபத்தில் அருகில் இருந்த மேசையில் குத்த அதிலிருந்த பொருட்கள் கீழே விழுந்த சத்தத்தில் மருத்துவர் எதுவும் செய்யாதே என்பது போல் செய்கை செய்தார்.. அவரின் செய்கையை புரிந்து கொண்ட மைத்ரேயன் "அம்மு ப்ளீஸ் அவனோட மனசுல என்ன இருக்குன்னு முழுசா நமக்கு தெரியணும்..அமைதியா இரு"
அவன் சொன்னதும் கோபத்தை தணிக்க குளிர்ந்த நீரை முகத்தில் வாரி அடித்துக் கொண்டாள்.

அவன் அமைதியை உறுதி செய்துக் கொண்டு "சொல்லுங்க பிரதி நீங்க குத்தின பிறகு என்ன ஆச்சு?"

"நா.. நான் என்னை அப்படி.. கிட்ட வந்த அந்த போலீஸ்காரன்.. போலீஸ்.. அவரை நான் பக்கத்துல இருந்த பாட்டிலால வயித்துல குத்தினேன்.." அன்றைய தினத்தில் நடந்ததை எண்ணி அவனின் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.

"அதுக்கு அப்பறம் அவருக்கு என்ன ஆச்சு? நீ எப்படி தப்பிச்சு வந்த?"

"எனக்குத் தெரியாது.. நான் கண்ண திறந்து பார்க்கும் போது ஹாஸ்பிடல இருந்தேன்"

"அதுக்கு அப்பறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு யாரும் சொல்லையா?"

"ஹான்.. சொன்னாங்க.. நான் குத்தினவர் போலீஸ் இல்ல.. வேஷம் போட்டுட்டு இருந்தாருன்னு சொன்னாங்க.. அதுவும் இல்லாம அவர் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்னும் என்னைப் போல இருந்தவங்கள வெளி மாநிலத்துக்கு கூட்டிட்டு போக அந்த டிரஸ போட்டுட்டு வந்து இருந்தாருன்னு சொன்னாங்க"

"அவர் உயிரோட இருக்காரா?"

"இல்ல.. ரொம்ப நாள் ட்ரீட்மெண்ட்ல இருந்த அப்பறம் இறந்து போனதா அப்பா சொன்னார்"

"சரி அதுதான் உங்களுக்கு எல்லாம் தெரியுதே அப்பறம் ஏன் பயம்?"

"இல்ல..அந்த டிரஸ் பார்க்கும் போது எல்லாம் எனக்கு.. எனக்கு அதுதான் நியாபகம் வருது.. என்னால..அது.. உண்மை" என்றவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.

அவன் உறக்கத்திற்கு சென்றதும் அவ்வறையை விட்டு வெளியே வந்த மருத்துவர் மைத்ரேயனையும் அம்புத்ராவையும் வர சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார்.

அவர்கள் வந்ததும்" ப்ளீஸ் சிட் டவுன்.." என்றார் புன்னகை முகமாய்.

"சர் பிரதிக்கு என்ன பிரச்சனை?அவன் என்ன சொன்னான்?" மைத்ரேயன் தான் கேட்டிருந்தான்.

"சர் அவரோட ஆழ்மனசு அந்த சம்பவத்தை மறக்கல.. அதுவும் இல்லாம உங்க வீட்ல சொன்ன அந்த தீவரவாதி இறந்த விசயத்தை அவரோட மனசு ஏத்துக்கல.. அவன் இன்னும் உயிரோட இருந்து அவர தேடி வருவான்னு நம்புறார்.."

"இல்ல அவன் நிஜமாவே இறந்துட்டான்.. மாமா ஒரு நியூஸ் பேப்பர்ல காமிச்சார்"

"அது ஏன் பொய்யா இருக்கக் கூடாது மைத்து?"என்றது அம்புத்ரா தான்.

"யுமனோட பயத்தைப் போக்க மாமா அப்படி சொல்லி இருந்தா?எனக்கு தெரிஞ்சி அவங்களோட கேங்ல நீங்க சொன்ன அந்த பீரியட்ல யாரும் இறந்தா மாதிரி எந்த எவிடென்ஸ்ம் இல்ல"

அதைக் கேட்டு அதிர்ந்த அவர்களோ "வாட் டூ யூ மீன்?"

"எஸ்.. மாமா பிரதிக்காக பொய் சொல்லி இருக்கார்.. அவரோட பயத்தை போக்க அப்படி சொல்லி இருப்பாங்க.. நாளடைவில அவர் நடந்ததை மறந்தா மாதிரி நடிச்சாலும் அந்த சம்பவத்தை மறக்க முடியாம இருந்து இருக்கார்.. இதை ரொம்ப கிளோஸா இருந்த உங்க கிட்ட கூட சொல்லாம இருந்தது தான் பிரச்சனை.. இப்ப நாம செய்ய வேண்டியது அவரோட மனசுல இந்த விசயத்தை அழிக்கணும் அவர அப்படி செஞ்வன் இன்னும் உயிரோட இருந்தா அவனுக்கான தண்டனை பிரதி கையால நடக்கணும்.. அண்ட் மோஸ்ட் இப்பார்ட்டெண்ட்(important)அந்த தீவரவாதி போலீஸ் இல்லன்னு புரிய வைக்கணும் நான் சொல்றது சரியா டாக்டர்? "
அவள் பேசுவதையே ஆவென பார்த்துக் கொண்டு இருந்த மருத்தவர்" எஸ் யூ ஆர் அப்ஸலூட்லி(absolutely) கரெக்ட் மேடம்.. நீங்க சொல்றா மாதிரி அவருக்கு உண்மை தெரிஞ்சி மனசுல இருக்க கோபமோ தூக்கமோ அது வெளிய வரணும்..அப்ப தான் அவரோட பயம் தெளியும்"

மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரதியுமனை கவலை தோய்ந்த முகத்தோடு பாரத்திருந்தனர் இருவரும்.

"அம்மு இப்ப என்ன செய்ய போற..வீட்ல இருந்து கால் பண்ணிட்டே இருக்காங்க.. நானும் என்னென்னவோ பேசி சாமாளிச்சிட்டு இருக்கேன்"

அவள் எதுவும் பேசாமல் பிரதியை பார்த்திருக்கவும் "அம்மு உன்னைத் தான் கேட்கறேன்" என்றான் அவள் தோளை உலுக்கியவாறு.

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. யுமன அப்படி செஞ்சவன் உயிரோட இருக்கானா இல்லையான்னு நாளைக்கு சொல்றேன்.. அதுவரை அவரை பத்திரமா பார்த்துக்கோங்க" விறு விறுவென மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதையோ தனக்கு நேர்ந்த எதையும் அறியாது துயில் கொண்டிருந்தான் அவளின் பிரதியுமன்.

அன்று முழுவதும் மருந்தின் வீரியத்தால் உறங்கி கொண்டிருக்க இவளோ வெறி கொண்ட வேங்கையென மான்ஸ்டர் கேங்கை பற்றி மறுபடியும் ஆதி முதல் அந்தம் வரை ஆராய தொடங்கினாள்.

"மேடம் எனீ ப்ராப்ளம்?" தானாக கதிர் வந்து பேசியிருந்தான் இத்தனை நாட்களில் இவளிடம்.

அதில் நிமிர்ந்து நோக்கியவளின் உதடுகளிலிருந்து வெளிவந்தது சின்ன சிரப்பொன்று "இல்ல.. ஆனா சீக்கிரமே மும்பை போகணும்"

"மும்பை எதுக்கு?"

"மான்ஸ்டர பார்க்க தான்.. நீங்க ரெடியா இருங்க இது ஒரு சீக்ரெட் மிஷன்.."

"அப்ப கேரளா போலீஸ்க்கு நாம வர விசயத்தை சொல்லிடலாமா?"

"ஐ செட் இட் இஸ் சீக்ரெட் மிஷன்" அவளது குரலில் அடக்கப்பட்ட கோபம்.

இத்தனை வருடத்தில் அவள் எதற்காகவும் தன் கோபத்தை அடக்கியதில்லை ஆனால் இன்று ஏன் இந்த சினம் என அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.

வேறெதுவும் பேசாது" ஓகே மேம்" என நகர போனவனை" மும்பை போக ரெடியா இருங்க அண்ட் நம்ம கூட பிரதி அண்ட் மைத்ரேயன் வருவாங்க"

அவர்கள் பெயரைக் கேட்டதும் "மேடம் சீக்ரெட் மிஷன்ல உங்க பேமலி மேம்பர் மட்டும் இங்குலூட்(include) ஆனா தப்பு இல்லை போல?" அவன் கேள்வியில் அத்தனை கேலி.

"என்னோட பேமலி மேம்பரா வந்தா தானே.. அவங்க டிபார்ட்மென்ட் மூலமா வர போறாங்க"

அங்கே..

"அம்மு ஆர் யூ ஜோக்கிங்? வீ காண்ட் அதுவும் பிரதி இப்ப உன்மேல கோபமா இருக்கான்..இப்ப போய் அதுவும்.. ஏன் இப்படி யோச்சிச்ச?"

" காரணம் இருக்கு மைத்து..அப்பறம் என் மேல அவர் கோபமா இருக்கலாம்.. அந்தக் கோபம் அம்புத்ரா ஐபிஎஸ் மேல தான் அவரோட அம்பு மேல இல்ல.. சோ நீங்க ரெடியா இருங்க"

"அப்பறம் அம்மு நம்ம கூட நிர்குணா வருவால்ல?" என்றான் நெளிந்தவாறு.

அவன் கேட்டதில் சிரித்தவள்" உங்களுக்கு அவ நம்ம கூட வரணும்னு ஆசையா?"

ஈஈஈ

"பட் வீ டொண்ட் நீட் எ டாக்டர்"

"போற இடத்துல காயம் பட்டா என்ன செய்றது?"

"ஓகே பட் கதிர் வரார் நம்ம கூட"

" ஓ அப்ப விஷாலிய கூப்பிட்டுக்கலாம் எல்லாரும் ஒன்னா போகலாம்"

"மைத்து நாம போறது டிபார்ட்மென்ட் வேலைக்காக.. அதுவும் கமிஷனர் கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு.. என்னவோ ஹனிமூன் டிரிப் போறா மாதிரி ஜோடியா போகலாம்னு சொல்றீங்க?" முறைத்தப்படி கேட்டாள் அவள்.

" சரி சரி வேண்டாம்.. உன்னோட வருங்கால புருஷனை எப்படி சம்மதிக்க வைக்க போற?" பேச்சை திசை திருப்பினான் மைத்ரேயன்.

" நான் ஏன் கஷ்டப்படணும் அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே" என்றவளின் மீது அதிர்ந்த பார்வையை வீசி இருந்தான்.

தொடரும்.
 
Top