• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
834
95
93
Jaffna
"அந்த கிழவி கையால எங்களை பலி குடுக்க முடிவெடுத்துட்ட." என்றவளும் சென்றுவிட்டாள்.

கடைக்கு வந்தவள் விழிகள் அவனை தேடலானது.
அவள் வந்தது அறியாதவன் போல, சாதாரணமாக வெளியே வந்தவன்,
"என்ன வேணும்" என்றான் இயல்பாக,
அவள் தான் வேண்ட வேண்டியது எதுவுமில்லையே! தோழியிடம் பொய் அல்லவா கூறி வந்தாள்.


நாக்கு அன்னாக்கில் ஒட்டிக் கொண்டது போல் அவனையே பார்த்தவாறு நின்றாள்.
அவனும் இறங்கி வருவதாக இல்லை.. "சொல்லுங்குா என்ன வேணும்"
அவளுக்கு தேவை அவன் தானே!
"அது... அது..." மாறியவள் முன்னால் இருந்த தண்ணீர் போத்தலை கண்டு விட்டு,

"இது தான் வேணும்" என்றாள்..

அந்தோ பரிதாபம்... அன்றை நாளின் பின், அவளுடன் இருக்கும் பொருட்களில் அதுவும் ஒன்று. ஏனோ தடுமாற்றத்தில் அதை மறந்து போனாள்.

புருவங்கள் முடிச்சிட்டாலும், சிறிதாக இதழ் இதழ் பிரித்து புன்னகைத்தவன்,

"தண்ணி எதுக்கு?" என்றான்.
குடிக்கத்தான்" புத்திசாலி தனமாக சொல்லி விட்டாளாம்.

"ஓஓ..... அப்ப கையில இருக்குறது....?" அப்போது தான் தன் அசட்டு தனம் உணர்ந்து நாக்கை கடித்து அசடு வழிந்தாள்.

அவள் திருட்டு உணர்ந்தவனோ ஒற்றை புருவம் உயர்த்தி, புன்னகைக்க, அதில் வெட்கம் கொண்டவளோ, அந்த இடத்தை விட்டு ஓடினாள்.

"என்னடா! ஏன் அந்த புள்ளை அப்படி ஓடுறா.?" குரல் வந்த திசை திரும்பினான்.

அண்ணன் சுந்தரம் தான்.
தன்னுடைய கடையில் பொருள் ஒன்று தீர்ந்து போகவே, தந்தை கடையில் அவசரததுக்கு எடுத்து கொடுக்கலாம் என்று வந்தவன், அவள் வெட்கப்பட்டு ஓடுவதை பார்த்ததும், எதுவோ ஒன்று புரிந்து போக, தம்பியாரை கேட்டான்.

முதலில் விழித்தவனும், எப்படியும் தெரிந்து தான் ஆகவேண்டும் என நினைத்து, "அவள் தாண்ணா நான் கல்யாணம் செய்யப் போற பொண்ணு"

அவனை விட ஐந்து வயதி சிறியவன் தான் சுதாகரன். சாதாரணமாக ஆண்களுக்கு உடன் பிறப்பு என்றாலே, பெற்றவர்களை விட, அவர்கள் மேல் தான் பாசம் கொள்வார்கள்.

அதுவும் சிறியவன் என்றால் தனி பாசம் தான். சுந்தரமும் அவ்வாறே, தம்பி சுதாகரன் என்றால் எப்போதும் தனி இடம் தான் அவன் மனதில்.

"ஓ.. அவ்வளவு தூரம் போட்டுதா? உனக்கும் வயசு வந்துட்டுது என்டு சொல்லாம சொல்லுற"

"அப்படி எல்லாம் இல்லண்ணா... பக்கத்து காலேஜ் தான்" என்று முதல் சந்திப்பில் இருந்து சொன்னவன்.

"முதல்ல படிப்ப முடிக்கட்டும், பிறகு பார்ப்பம்.."

" எந்த ஊரு ..... யாரோட மகள்? முன்னமே பேசி வச்சா.. உன்னை நினைச்சுக்கொண்டிருக்காற அந்த புள்ளையின்ர படிப்பும் கெடாது." என்றான்.

"அது அண்ணா.... எனக்கு அவளை பற்றி எதுவுமே தெரியாதே....!" தயங்கியவாறு சொன்னவன் முகத்தில் வெட்கத்தின் சாயல்,

"படிக்குற புள்ளைய எதுக்கு கெடுபான் என்டு எதுவுமே கேட்கேல... ஆனா பக்கத்து கிராமம் என்டு மட்டும் தெரியும்" என்றான்.


"சரியான நல்லவன்டா நீ....." நக்கல் தான். "பெயராவது தெரியுமா?"
அவனுக்கெங்கே தெரிய போகிறது.? தூரத்தில் நின்றே பார்ப்பாள். அப்படி அவனை காணவில்லை என்றால் மாத்திரம், கடையில் பொருள் வாங்குவது போல் வந்து, மறுநொடி சிட்டாக பறந்து விடுவாள்.
இதில் எப்படி பெயரை அறிவான்?

தலையை சொறிந்த படியே இல்லை என தலையாட்டினான்.

"நல்ல காதல்டா உன்ர காதல்.... சரி அதை நான் பாக்குறன்.
அம்மான்ரயும் அப்பான்ரயும் சம்மதம் வாங்கி தாறது என்ர பொறுப்பு." என்றவன் அறியவில்லை. தம்பி தன்னை விட்டு வெகுதூரம் செல்வதற்கு தானே காரணமாக அமையப் போகிறோம் என்று..









சுதாகரின் திருமணப்பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்த சுந்தரம், மனைவியை கொண்டு பேச வைத்தால் தகப்பனார் சம்மதித்து விடுவார் என நினைத்தவன்,

மனைவியை தேடி சென்றான்.

உள்ளே வந்ததும் கதவடைத்தவனை ஒருமாதிரி பார்த்தவள்,
"என்ன இந்த நேரத்தி கதவை பூட்டுறிங்கள்?"

"கொஞ்சம் கதைக்கோணும் கலா"

"இந்த நேரத்தில என்ன கதை.. சாப்புட்டு கடைக்கு வெளிக்கிடுங்கோ" என்றாள் அதிகாரமாக

"வந்தவன துரத்தாம, என்னன்டு தான் காது குடுத்து கேளன்!

"பின்ன என்ன சொல்லட்டும்... நீங்கள் இங்க நில்லுங்கோ, உங்கட நண்பன்... தான் தான் முதலாளி என்டு நினைச்சுக்காெண்டு, வாற காசை சுத்தி கொண்டு போகட்டும்" என்றாள் சூடாக.

"நீ ஒருத்தி...! அவன் ஏன் அப்பிடி செய்யிறான்.. தேவையில்லாம அவன்ல சந்தேக படாத.... எல்லா கணக்கு காட்டுறான்.." என்றார்.


"இப்பிடியே கண்டவனை எல்லாம் நம்புங்கோ.. நான் சொன்னத மட்டும் நம்பிடாதங்கோ. சரி அப்பிடி என்ன விஷயம்.. வேளைக்கு சொல்லிட்டு வெளிக்கிடுங்கோ... எனக்கு நிறைய வேலை இருக்கு"

"சுதாகருக்கு கல்யாணம் பண்ணலாம் என்டு இருக்கிறன்"

அவனுக்கு கல்யாணமா? உங்களுக்கு ஏன் உந்த சம்பளம் இல்லாத உத்தியோகம்... பேசாம உங்கட வேலைய மட்டும் பாருங்கோ." கோபமாக இரைந்தாள்.

"என்ன கலா சொல்லுற அவன் என்ர தம்பிடி! அவனுக்கு நான் செய்யாம வேற யார் செய்வினம்?"

"அவனுக்கு கல்யாணம் கட்டி வைச்சிட்டு நீங்க திருவோடு ஏந்த போறீங்களாே"

"அவன் கல்யாணம் செய்யிறதுக்கும், நான் திருவோடு ஏந்துறதுக்கும் என்ன சம்மந்தம்னு சொல்லுற."

"பின்ன இல்லையா? இத பாருங்கோ.. உங்கட தம்பி கட்டிக்கிட்டா.... உங்களுக்கு எப்பிடியங்க முழு சொத்தும் வரும்?.
எறும்பு சேற்கிற மாதிரி கொஞ்ச கொஞ்சமா சேர்க்கிற உங்கட பணத்தால, பிள்ளை எப்பிடி வசதியா இருப்பான்.! இப்பவே அவனுக்கு ரெண்டு வயசாகுது... அவன்ர படிப்புக்கு தான், நீங்க உழைச்சு போடுறது போதும். பிறகு வசதியா வாழலாம் என்வு கனவு வேறை இருக்கா?

சுதாகர் காலம் பூராவும் ஒண்டிக் கட்டையா இருக்கிறது தான் நல்லம்.
நீங்க உங்கட வேலையை பாருங்கோ" என்றாள்.

" எப்ப பார்.. சொத்து சொத்து என்டு. அப்பா தான் கடை வச்சு தந்திருக்கிறாரே! அதோட என்ர பிள்ளைக்கு சம்பாதிக்க தெரியும்... தம்பி வாழ்க்கையை வீணாக்கிடாத.
அவனும் யாரோ ஒரு புள்ளைய விரும்பிறான்... யாரென்று விசாரிச்சு சொல்லுறன்... அப்பா அம்மாட்ட சம்மதம் வாங்கி குடு! அதவிட்டுட்டு தேவையில்லாததை கதைச்ஙு என்ன கோபப்படுத்தாத." கோபமானர்.

"எனக்கென்ன வந்தது.. ஏதோ உங்கட நன்மைக்கு சொன்னன். ஒரு கடைய மட்டும் போட்டு தந்து உங்களை ஏமாத்திட்டினம்.. அவன் கடைசி பையன்..

செல்லம் வேற... முழு சொத்தையும் அவனே உருவி எடுத்துட்டு, துண்டை மட்டும் உங்களுக்கு தருவான்... கட்டிக்காெண்டு, அந்த கடையில நில்லுங்கா" என்றவள் துணியை உதறி மடிக்க தொடங்கினாள்.

'எனக்கு என் வேலை தெரியும். நீ புலம்புறத நிப்பாட்டு." என்றவர் வெளியேற

"இவன் கெட்ட கேட்டுக்கு... காதல் கேக்குதாே? என்னை கலியாணம் பண்ணிடுவியா? இல்ல நான் தான் விட்டுடுவேனா? சம்மதம் தானே.. உங்கட அப்பன் அத்தாட்ட வாங்கி தரோணும்..." கணவன் சென்ற திசையையே வெறிக்கலானாள்.

மறு நாளே அவளை பற்றிய தகவலை திரட்டிய சுந்தரம், பெற்றவர்களிடம் சம்மதம் வாங்க மனைவியை அனுப்பியவன் சென்று விட்டான்.




"மாமா.. கொஞ்சம் பேசோணுமே" என்றாள்.
"சொல்லுமா.. என்ன விஷயம்? ஏதாச்சம் வேணுமா?

'அப்பிடியே கேட்ட உடனம், இந்தா வைச்சிரு என்டு தாராமாதிரி தான்.'


"எனக்கென்னா தேவை வந்திட போகுது.? அது தான் நான் கேங்கிறதுக்கு முன்னமே நீங்கள் அதை கொண்டு வந்து வைச்சிடுவீங்களே..." தாயாவே தான்.

"வேற என்னம்மா?. புதிர் போடாம விஷயத்துக்கு வா"

"மாமா..! உங்கட ரெண்டாவது புள்ளை நம்ம குடும்பத்துக்கு கெட்ட பெயர் எடுத்து தாரா மாதிரி காரியம் பண்றாரு மாமா."
"என்னம்மாசொல்லுற.. அவன் அப்படில்லம் செய்ய மாட்டானே! விபயஞரமானவனே!

' நல்ல விபரந்தான்" என்று இவ்வளவு நேரமும் மாமனாருக்கு பயந்தவள் போல இழுத்து இழுந்து பேசியவள், நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

"எது மாமா விபரம் என்டுறீங்கள்? கடைக்கு வியாபாரம் பாக்க போனா, அதை மட்டும் பாக்க வேண்டியது தானே!.
அத விட்டுட்டு பக்கதில காலேஜ் படிக்கிற பொண்ணை விரும்புறன்.. அது இது என்டுட்டு..." எரிச்சலாக பாெழிந்தாள்
தன் செல்ல மகனை தவறாக கூறியதை பொறுக்காத கணபதி
"கலா......." என்று அடிக்குரலில் சீற.

"சும்மா என்னோட கத்தாதிங்க மாமா" என்று அதே சத்தத்தோடு அவளும் பதில் கொடுத்தாள்.
இவர்கள் பேசும் சத்தம் கேட்டு,
என்ன என்று பார்க்க வந்த விஜயலஷ்மி, அருகில் இருந்த தூணோடு ஒட்டிக்கொண்டார்.

"நான் ஒன்டும் உங்கட பிள்ளை செய்யாதத சொல்லேல... உங்கட மூத்த புள்ளை தான் எனக்கே சொல்லி, உங்களிட்வ சம்மதம் வாங்கி தர சொன்னாரு.
நல்ல இடத்து பொண்ணை விரும்பியிருந்த பரவாயில்லை. குடும்ப கௌரவத்தை மனசில வச்சு, பணக்காற பொண்ணா லவ் பண்ணி இருந்தா செய்து குடுக்கலாம்.


எங்கையோ காட்டுவாசி பொண்ணு மாமா. கிரமத்தாளாம்..... அதுவும் எங்கட வசதிக்கு அவலெல்லாம், வீட்டு நாயை கட்டி வைக்கவே யோசிக்கோணும்.
அனா உங்கட சின்ன மகன்... அவளை சாமி அறையிலே வைச்சு பூஜிக்க நினைக்கிறான். இதுக்கு பிறகு நீங்கள் எப்பிடி மாமா வெளியால தலை நிமிந்து நடக்க போறீங்கள்?

இந்த கல்யாணம் மட்டும் நடந்துது.. நான் என்ர பிள்ளை ரவியை தூக்கிகொண்டு, அப்பா வீட்டுக்கே போயிடுவன்.
என்னால இந்த அசிங்கம் எல்லாம் தாங்கிக்கொண்டு இருக்க ஏலாது.

கேவலம் ஒரு தோட்டக்காரன் பொண்ணு எனக்கு சமமா, இந்த வீட்டில.... நினைச்சு பாக்க கூட முடியேல.
இதில உங்கட மூத்தவரும், என்னையே சம்மதம் வாங்கி தா என்டு கேக்கிறார்." மழை பொழிந்ததை போல், தன் நாரதர் வேலை முடிந்து விட்டது என்று மாமானாரின் நடவடிக்கைகளை ஆராய்ந்தாள்..



"அவன் விரும்பிட்டானே! என்ன தான் செய்யேலும்?"
"என்ன மாமா நீங்க? அப்ப அவளையே இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர போறிங்களா?
சபையில எப்பவும் முன்னுக்கே நிக்கிறனீங்கள், அவள் இங்க வந்தாள் என்டா, அந்த சபைக்கு கூட அடுக்காயினம் பறவாயால்லையா?
உங்கட மரியாதையை நீங்களே கெடுக்க போறீங்களா?" என்று வஞ்சகமாகவே பேசினாள்.
அவள் பேச்சில் தன் மானம் எவ்வளவு பாதிக்க படும் என்பதை நினைத்து பயந்த கணபதி,

"இப்ப என்னம்மா செய்ய சொல்லுற?"
"அந்த பொண்ணோட வீட்டுக்கு போய், அவளை கண்டிச்சு வைக்க சொல்லி சொல்லுங்கோ, எல்லாமே சரியாகிடும்"
எப்பிடிமா? என்ர புள்ளைய கண்டிக்கிறதுக்கு தானே எனக்கு உரிமை.. அடுத்தவன் புள்ளைய கண்டிக்க நான் யாரு?"

"நீங்கள் பழைய காலத்து ஆக்கள் மாதிரியே சிந்திக்கிறீங்க மாமா!
பொட்டச்சு பேசாம இருந்தா... பையன் ஏன் தப்பு பண்ண போறான்... அதிலயும் சுதாகர் எந்த பொண்ணையும் நிமிந்து கூட பாக்க மாட்டான். இவள் தான் ஏதோ செய்து மயக்கி இருக்கிறாள்" என்றாள் வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல்.


"சரிமா நான் கவனிக்கிறன் நீயும் என்னோட வாறீயா?" என்றார்.
"ஐயோ மாமா! என்னால ஏலாது.. உங்கட புள்ளேட்ட சம்மதம் வாங்கி தாறேன்னு வேற சொல்லிட்டன்.... உங்க கௌரவம் கெட்டு போக கூடாது என்டு தான், ஏதோ எனக்கு மனசில பட்டதை சொன்னன்.

சம்மதிக்கிறதும் விடுறதும் உங்கட இஷ்டம் மாமா.
பெரியவ எது செய்தாலும் சரியா தான் இருக்கும்" என பத்த வைத்து விட்டு, தன் வேலை முடிந்தது என்று சென்று விட,

"என்னங்க... பிள்ளை எதை விரும்புறானோ அதை செய்யுங்க.. அவன் கஷ்டப்பட்ட பொண்ணா இருந்தாலும், நம்ம கௌரவத்துக்கு எந்த பாதிப்பும் வராதவளாய் தான் பாத்திருப்பான்" என்க.

"நீ பேசாம இரு விஜயா! உனக்கு எதுவும் தெரியாது" என்று மருமகள் போட்டு விட்ட சாம்பிராணி, இப்போது புகை எழும்ப தொடங்கியது.

இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து அந்த கிராமத்து மண்ணை தூசி கிளப்பியபடி வந்து ராசா வீட்டு முன்னாள் நின்றது.
கார் கதவுகளை வேகமாக திறந்தவாறு வெள்ளை சட்டை வேட்டியோடு பத்துக்கு மேற்பட்டவர்கள் இறங்கினார்கள்.

தங்கம்மாவும் காந்தியும் வெயிலில் குரக்கன் பரப்பியவர்கள், வீட்டில் முன் காரில் வந்து இறங்குபவர்கள் யாரென ஆராய்ந்தனர்.

தோட்டத்திற்கு மருந்தடிக்கவென மருந்தை எடுக்க வந்த மணிவண்ணன் அவர்களை கண்டு.

" யாரு வேணும்.." என்றான்.


"ராசரட்ணம்...." சந்தேகமாக இழுத்தார்.

"எங்கட அப்பா தான்.. இருங்கே கூட்டிக்கொண்டு வாறன்" என திரும்பிய நேரம் அவரும் வந்துவிட, கூடவே பொண்வண்ணனும் வந்திருந்தான்.


ஆண்கள் மூவரையும் அலட்சியமாக பார்த்த கணபதி,
"நீங்கள் தான் இந்த வீட்டு பெரிய மனுசங்களோ!" என்றார் ஏழனமாக.

அவர்கள் பேச்சிலும் பார்வையிலும் தெரிந்த அலச்சியத்தில் மணிவண்ணனே தொடர்ந்தான்.
"நாங்கள் பெரிய மனிசங்கள் இருக்கட்டும்.... வந்திருக்கிற பெரிய மனுசர் யாரு.. எதுக்கு வந்தீர்கள் என்டு சொல்லுறீங்களா?" என்றான் அவனும் அவர்களுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல்

"உங்கட கதையிலயே தெரியுது.. எப்படி பட்ட குடும்பம் என்டு. வந்தவேட்ட எப்படி கதைக்கிறது என்டு கூட தெரியாத கேவல ஜென்மங்கள்" என்றார் கணபதி.

"வார்தையை அளந்து விட்டா நல்லது.. கௌரம் தெரிஞ்சவரே... நீங்கள் மரியதை தந்திருந்தா, நாங்களும் தந்திருப்பம்... அதை விட்டுட்டு எகத்தாளமாக பாங்கினா... இது தான் எங்கட பதில்" என்றான் பொன்வண்ணன்.

"ஓ..... உங்களுக்கு மரியாதை ஒன்டு தான் கேடு!
பொண்ண பெத்து எங்க வசதியான இடத்து பையனை வழைச்சு போடு என்டு, ஊர் மேய விட வேண்டியது, நியாயம் கேட்க வந்தா, கேவலமாக பேச வேண்டியது" என்றார் சத்தமாக.

"ஐயா பெரியவரே! நாங்கள் ஒன்டும் எங்கட பொண்ணை அப்படி வளக்கேல... வீடு மாறி வந்துட்டீங்கள் போல, சரியான விலாசத்தை தேடிப்போங்கோ" என்றார் ராசா.
"நாங்கள் சரியான வீடுதான் வந்திருக்கம். உங்கட புள்ள பெயர் சாந்தினிதேவி தானே!
ஒழுக்கமில்லாத வளப்புக்கே இந்த கதை என்டா. ஒழுங்காக வளத்திருந்தா.. என்ன அலப்பறை செய்திருப்பினமோ..." மீண்டும் எகத்தாளம் பேச்சில்.

"வந்த வேலை முடிஞ்சா, நீங்கள் போகலாம் எங்கட பொண்ணை நாங்கள் பாக்கிறம்" என்றவன்
"எங்கட வளர்பை குறை சொல்லுறதுக்கு முன்னம், உங்கட சரியா கவனியுங்கோ" என்றவன்.

"வாங்கோப்பா நிறைய வேலை இருக்கு, இவயோட சும்மா நேரத்தை சிலவழிச்சா, நாளைக்கே சாப்பாட்டிற்கு இவயா தரப்போினம்" மற்ற ஆண்களையும் அழைத்தான்.

கணபதிக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
தன் மகனின் தேர்வு என்றும் பிழையாகாது என்று தெரிந்தும் அறிவு கெட்ட தனத்தை எண்ணி வருந்தினார்.
'எவ்வளவு பெரிய பழி அவர்கள் மகள் மீது போடுகின்றேன். அதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
அவ்வளவு நம்பிக்கை அவள் மீது என்றால், அவள் எவ்வளவு பொறுப்பான பெண்ணாக இருக்க வேண்டும்.'
மருமகளின் சொல்லை கேட்டது தவறோ என்றாகி விட்டது.
ஆம் அவர் எதிர் பார்த்தது போல் அவர்கள் ஒன்றும் ஏழைகள் இல்லை.
பழங்கால வீடாக இருந்தாலும் தென்னம் தோப்போடும், மாட்டு தொழுவத்தோடும் நல்ல நிலையில் உள்ள பெரிய நிலப்பரப்புடன் கூடிய வீடு.

அங்கே வேலைக்கென ஆறுக்கு மேற்பட்டவர்கள் நிற்பதையும் கண்டார்.

அந்த வீட்டு ஆண்களும் பார்ப்பதற்கு கம்பீரமாக, கௌரவத்தோடு சொந்த உழைப்பில் வாழ்பவர்கள் போல தோன்றியது..

முன்னரே விசாரித்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

அவசர பட்டு செய்த காரியத்தால், மகனுக்காக மீண்டும் அங்கு வரமுடியாது என்று அப்போது தான் உறைத்தது. விதியின் மீது பழியை போட்டு விட்டு புறப்பட்டு விட்டார்.

வீடு வந்தவர், சோர்ந்த முகத்துடன் இருப்பதை பார்த்த அவர் மனைவி விஜயா,

"ஏன் ஒரு மாதிரி வந்திருக்கிறீங்கள்? ஏதும் பெரிய சண்டை ஆகிட்டுதோ!" என்றார் கவலையாய்.
"அப்படி ஒன்டுமில்ல விஜயா! நான் கொஞ்சம் அவசர பட்டுட்டன்" அங்கு நடந்ததை கூற.
"எவ்வளவு பெருந்தன்மையான மனிசர போய், ஊர் முன்னுக்கு அவமானபடுத்திட்டீங்கள் ..
பேசாம மன்னிப்ப கேட்டு, பொண்ணையுமன கேட்பமா?" என்க.


"எதுவும் நடக்காதத போல இருப்பம்... என்ன நடக்கிறதோ கண்டுப்பம்." என்றார்
இவர்கள் பேச்சை ஜன்னல் வழியே ஒட்டு கேட்ட கலாவிற்கு பெரும் மகிழ்ச்சியே!

கல்லூரி முடிந்து வீடு வந்தவள், வீடே அமைதியாக இருக்க, காரணம் கேட்டவளை அழைத்து அருகே அமர்த்தினார் பேத்தியார்.


"அம்மாடி...! இந்த அப்பம்மா உனக்கு ஏதாவது கூடாதது என்டு சொல்லி தந்திருக்கேனா?" என்றார்.

"இல்லையே! ஏன் இந்த கேள்வி?" உண்மையில் அன்னம்மாவிற்கும் தேவி என்றால் அளவு கடந்த நேசம். எங்கு ஒரே பெண் என்று கொடுக்கும் செல்லத்தால், அவள் கெட்டு விடுவாளோ என்று தான், தானாவது அவளை கண்டிப்போம் என்று, கண்டித்தாலும் .மற்றவர்கள் போல் தான் அவளும் பேத்தி மீது அன்பானவர்.

அவள் தலையை ஆதரவாக வருடியவர்,
"இன்டைக்கு கொஞ்ச பேர் வந்தாங்கள்...
யாரென்டே தெரியேல... நீ காலேச்சு போன இடத்தில யாரையோ காதலிக்கிறியாம் என்டு, வாசல்ல நின்டு கத்தீட்டு போயினம்...
ஆனா எங்கட புள்ளைய பற்றி எங்களுக்கு தெரியாதா? என்ன தான் அப்பம்மாவோட என் பேத்தி வாயாடிச்சாலும், நாங்கள் யாருமே அதை நம்பேலம்மா.
நீயும் இனி யார் கூட கதைக்கறதா இருந்தாலும், பாத்து பழகு..." என்றவர் எழுந்து கொள்ள,

அருகே வந்த மணிவண்ணணோ!
'இனி நீ காலேஜ்கு போக வேண்டாம்... நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்ய்ணம் கட்டி வைக்க முடிவெடுத்திருக்கிறம்" என்றான்.
அன்னம்மா கத்தவே தொடங்கினார்.
"என்னடா...! யாரோ ஒருதன் கத்தினான் என்டு... எங்கட பிள்ளேல தண்டிப்பியோ...? படிப்பை கெடுத்து ஒரு கலியாணம் இப்ப தேவையா?"

"அதுகில்ல அப்பம்மா... எங்கட தங்கைச்சில எங்களுக்கு நம்பிக்கை இல்ல என்டு இல்ல. கண்டவன் எல்லாம் சத்தம் போடுவான்... அவனுக்கு பதில் சொல்லோணுமோ...

இதே அவளுக்கு கல்யாணம் பண்ணீட்டோம் என்டா, எவன் வருவான்? இந்த மாதிரர நாலு பேர் வந்து சத்தம் போட்டா, நாளைக்கு இவளையும் யாரு கட்டிப்பாங்க?
அவன் சொல்வது சரி தானே! அமைதியானார் அன்னம்மா...

இப்போது தான் தேவிக்கு தன் தவறு புரிந்தது. எந்தகைய நம்பிக்கை கெடுத்து விட்டோம் என்று.

இனி என்ன ஆனாலும் அவர்கள் சொல்லை தான் மீறக்கூடாது என்று தனக்குள் முடிவெடுத்தவளாய்,

"அண்ணா என்ன சொய்தாலும், எனக்கு சம்மதம்" உணர்வுகள் அற்று கூறியவள், தனது அறையிலே முடங்கினாள்.