• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

21.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
125
88
28
Salem

21.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



ராமைய்யா, “ என்னத்த பண்ணலாம் ன்னு ஆள் ஆளுக்கு இப்படி பந்தாடுறீங்க ? என்று எரிஞ்சு விழ..

அப்பா என்றான் மூத்தவன்…

வாப்பா உன்னால எதாவது அடுத்த பிரச்சனையை உருவாக்க முடியுமா சொல்லு..

அப்பா என்ன பேசுறீங்க…

பேச வச்சுட்டு இல்ல இருக்கான் உன் தம்பி அப்ப இருந்து இப்ப வரை இதோ இப்படி ஏதாவது ஒரு ஏழரை… என் கனவு மொத்தத்தையும் அழிச்சிட்டான் என்று பேச…


என்ன பேசுறீங்க அப்பா அவன் என்று மூத்தவன் பதில் தரும் முன்… நிறுத்து டா அவனுக்கு சப்போர்ட் பண்ணாத.. மொத்தமா சரியப் போகுது அதுக்கான ஆரம்பம் தான் இது என்றவர் உணரவில்லை தன் செய்கை தான் சரிய காரணம் என்று.. வீட்டை விட்டு வெளியேறிய பகலவன் சென்று நின்றது அந்த அபார்ட்மெண்ட் தான்..

சார் இங்க யாரும் அலவ்டு இல்ல..

இல்ல இங்க என் மகன் விதுரிஷி இந்த அபார்ட்மெண்ட் நம்பர் ல இருக்கான் என்று சொல்ல அவரோ அந்த அபார்ட்மெண்ட் செக்கிங் லிஸ்ட்டில் அவரின் பெயர் புகைப்படத்தை தேட அங்கே அப்படி எதுவும் இல்லை..

சார் நீங்க சொல்லுற மாதிரி எதுவும் இல்ல நீங்க அவருக்கு கெஸ்ட் ஆ அப்படின்னா கூட அவங்க இங்க ரிஸ்டர் பண்ணி இருப்பாங்க என்று அந்த செக்கியூரிட்டி சொல்ல…

நான் அவனோட அப்பா என்று பல்லை கடித்தான் பகலவன்.

அப்படியா…சாரி சார் இங்க ரிஷிஸ்டர் ஆனவங்களை மட்டும் தான் உள்ள அனுப்ப முடியும் என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்து விட… பகலவன் அடுத்த கட்டமாக தன் பதவியை பயன்படுத்த… விதுரிஷிக்கு அழைப்பை விடுத்தார் செக்யூரிட்டி..

சொல்லுங்க..

சார் உங்க அப்பான்னு இங்க ஒருத்தர் வந்து இருக்கார் பேர் பகலவன் என்று சொல்ல..சில நொடி அமைதிக்கு பிறகு நான் வரேன் என்று போனை வைத்தவன் வாகியை பார்க்க என்ன டா விது என்று நக்கலாக சிரிக்க..

சிரிக்காத வாகி அப்பா வந்து இருக்கார்…

ப்ச் யாரோட அப்பா…

நம்ம அப்பா தான்…

டேய் என்று பல்லை கடித்தவள் எனக்கு அப்பான்னு யாரும் இல்ல உனக்கு இருக்கா என்ன என்று வாகி பார்க்க…

எனக்கு தான் யாருமே இல்லையே…

டேய் பல்லை உடைச்சிடுவேன் எப்படி யாரும் இல்ல அம்மா அக்கா நாங்க இருக்கும் போது…

வாகி…

எனக்கு அப்பா இல்லன்னா உனக்கும் இல்லடா அது புரியுதா இல்லையா…

வாகி…

வேணாம் விது என்னைய டென்ஷன் பண்ணாத நான் அப்புறம் என்ன பண்ணுவேன்னு தெரியாது என்றவள் டீவியை ஆன் பண்ணி அமர்ந்து விட..


விதுரிஷி வெளியே வந்து செக்கியூர்டி இடத்தை தேடி வந்தான்.. அங்கே பகலவன் தளர்ந்து போய் காரில் சாய்ந்து நிற்க..

வந்தவன் நேராக வந்து அவருக்கு சல்யூட் வைக்க…

விது…

சொல்லுங்க சார் இங்க என்ன பண்ணுறீங்க நீங்க ஆபிஸ் க்கு இன்பார்ம் பண்ணி இருந்தா நானே வந்து இருப்பேனே.



டேய் போதும் என்னைய வாட்டாதீங்க என்று சொல்ல..

சொல்லுங்க சார் என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்…

விது… அம்மா எங்கடா…?

யாரோட அம்மா சார்…

விது என்று அதட்டியவர் ப்ச் ரிஷி எங்க இருக்கா நான் பார்க்கனும் இங்க அலவ் பண்ண மாட்டேங்குறாங்க என்று சொல்ல..

எங்க அம்மாவை நீங்க எதுக்கு பார்க்கனும் என்று நிற்க..

டேய் அவ உனக்கு அம்மா ஆகுறதுக்கு முன்ன நான் அவளுடைய புருஷன் டா என்று எரிந்து விழ..

அந்த உறவு முடிஞ்சு இருபது வருஷத்துக்கு மேல இருக்குமே என்று சொல்ல…

போதும் டா அவ எங்க நான் அவகிட்ட பேசிக்கிறேன் என்று முன்னே செல்ல… அம்மா இல்ல என்றான் விதுரிஷி..

எங்க இருக்கா என்றவர் நின்றுவிட…

அவங்க கிளம்பிட்டாங்க இனி இங்க இருக்க மாட்டாங்க என்று சொல்ல..

அதான் எங்க இருக்கான்னு கேட்டேன் என்று வெடித்து விட..

அது அக்காவுக்கு தான் தெரியும் ..வாகி எங்க இப்ப என்றார் பகலவன்..

இதோ இப்ப ஒரு கார் போனதே அது அக்காவுடையது தான் அவ கிளம்பிட்டா.


டேய் எதுக்குடா இவ்வளவு படுத்துறீங்க நான் என்ன தான் பண்ணட்டும் என்று அவர் தளர..இதுவரை எப்படி எதுவுமே செய்யாம இருந்தீங்களோ அப்படியே இருந்துட்டா நல்லது அதை தான் வாகி நினைப்பா வேற எதுவும் இல்ல என்று நாசுக்காக சொல்ல..

அப்ப நான் ஒன்னும் செய்யலன்னு சொல்லுறியா..

அது இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம் என்றானே விதுரிஷி..

விது நான் தேடத்தான் செஞ்சேன் டா..

அப்படியா என்றவன் நான்கு வருடங்கள் கழித்து தேடி வந்த தாயை தான் எண்ண முடிந்தது மனதிற்கு.. அன்று ஒரு திங்கள் கிழமை அந்த ஆதரவற்ற ஆசிரமத்தில் எட்டு வயது குழந்தையாக அன்றைய பள்ளி நேரத்திற்கு கிளம்பி கொண்டு இருக்க.. விது என்று அந்த ஆசிரம காப்பாளார் வந்து நிற்க..

சார்…

வா என்னோட என்று அழைத்து கொண்டு சென்றார் அவர்..மனது தடக் தடக் என்று இருந்தது இந்த நான்கு வருடத்தில் இது போல் பத்து முறை அழைத்து கொண்டு சென்று இருப்பார் அந்த பத்து முறையும் ராமைய்யா குடும்ப ஆட்கள் தான் அதுவும் பல்லவி அவளை சார்ந்தவர்கள் என்று வந்து சென்றது. இப்படி ஒரு குழந்தை பகலவனுக்கு தத்து தரப் படவில்லை என்பதை உறுதிபடுத்தியும் அவனை வேறு இடத்திற்கு மாற்றவும் என்று பல முயற்சி செய்தாள் ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை.இன்றும் அப்படி யார் வந்து இருப்பார்கள் என்று யோசித்து கொண்டு வர..,முழுவதுமாக முடி இல்லாமல் சற்றே வளர்ந்த நிலையில் இருந்த சிறிய அளவில் இருந்த குட்டை முடியுடைய யாரோ ஒரு பெண் அமர்ந்து இருக்க யோசனையோடே உள்ளே வந்தான் விது…

விது யார் வந்து இருக்கா ன்னு தெரியுதா என்று காப்பாளார் கேட்க..

இல்ல என்று தலையை ஆட்ட அவனை முன்னே சென்று நிறுத்த ஒரு பக்க முகத்தில் நிறைய காயங்கள் ஆறி சின்ன சின்ன தழும்பாய் அமர்ந்து இருந்தாள் ரிஷி பாலாம்பிகை

அம்மா என்று அலறியவன் வேக எட்டில் தாயை நெருங்க… விது மா என்று கைநீட்டி அணைத்து கொண்டாள் பாலாம்பிகை..

அம்மா அம்மா அம்மா என்று தேம்பினானே தவிர வேறு வார்த்தை வரவில்லை அவனிடம்…


சரி சரி அம்மா வந்துட்டேன் இல்ல அழாத என்று அணைத்து கொள்ள..

எங்க போன அப்பா வந்து இனி என்னைய பார்க்க மாட்டேன்னு, நீ இல்லன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க என்று விசும்ப..

அச்சோ அப்படி சொல்லிட்டாங்களா அப்பா சரி விடு அம்மா அப்பாவை அடிச்சிடுறேன் என்று தாஜா செய்ய…

போம்மா அப்பா அப்புறம் என்னைய பார்க்க வரவே இல்ல என்று மீண்டும் புகார் தர நெஞ்செல்லாம் எரிவதை போல இருந்தது ரிஷி பாலாம்பிகை க்கு தான் இல்லை என்று ஆனதும் இவனை கைவிட்டு விட்டாரே என்று எந்த இடத்திலும் சோர்ந்து விடாமல் மடமடவென விதுவை வேறு இடத்திற்கு மாற்றி அம்மா கொஞ்ச நாள் வேற இடத்தில் வேலையில் இருக்கனும் அதனால் உன்னையே இங்க சேர்த்துட்டு போறேன் அம்மா அடிக்கடி வருவேன் சரியா என்று கேட்க மீண்டும் உதடு பிதுக்க தொடங்கி இருந்தான் விதுரிஷி…

விதும்மா என்று கொஞ்ச…

அப்ப உனக்கும் நான் வேண்டாமா அம்மா என்று விது கேட்க துடித்து தான் போனார் பாலாம்பிகை..

யாரு டி தங்கம் அப்படி சொன்னா நீ தான் என் செல்ல பிள்ளை டி…

இல்லையே நீ வாகி அக்காவை கூட தானே வச்சு இருக்க நான் மட்டும் ஏன் ஹாஸ்டல் என்று கேட்க சுருக்கென தைத்தது மனது..

இல்ல தங்கம் அக்காவை தனியா விட முடியாது நீ ப்ரேவ் பாய் அதான் ஆனா அம்மா உன்னையே சீக்கிரம் கூட அழைச்சிட்டு போறேன் என்றவள் அங்க அவனை சேர்த்து விட்டு செல்ல அடுத்த நான்கு மாதத்தில் இந்த ஹாஸ்டலில் வந்து பல்லவி ஆட்கள் விசாரித்து விட்டு சென்று இருந்தனர்… சரியாக ஒரு வருடத்தில் விதுரிஷியை தன்னோடே அழைத்து கொண்டு சென்றுவிட்டார் பாலாம்பிகை ஒரே ஒருமுறை வந்து நீ இங்கேயே இரு உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொன்னவர் இன்றோ தாயை பார்க்க தன்னை தேடி வந்து நிற்கிறார் என்று அவரையே பழையதை நினைத்து கொண்டு பார்க்க அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவர்… சாரி டா அப்பா அப்படி பேசி இருக்க கூடாது ஆனா சூழ்நிலை அப்படி டா என்று சொல்ல விரக்தியாக சிரித்தவன்,இப்ப சூழ்நிலை சரியா இருக்கு போல என்று கேட்க…விது…

போதும் சார் பேச எதுவும் இல்ல இதுக்கு மேல என்னைய தேடி வர வேண்டாம் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல இனியும் அப்படி ஒரு சூழல் வராது அதனால் என்று கை நீட்ட… சட்டென அவன் கத்தரித்து விட்டதில் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்து விழ…அப்பா என்று தாங்கி பிடிக்க மயங்கி இருந்தார் பகலவன்..சட்டென வண்டியை எடுத்தவன் அவரை அழைத்தைகொண்டு மருத்துவமனை செல்ல…பகலவன் முழித்த பாடு இல்லை அடுத்த பத்து நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து விட்டு வர்மனுக்கு அழைக்க..

ஹலோ…


அத்தான் விது பேசேறேன்.. இந்த ஹாஸ்பிடல் வந்துடுங்க என்று பெயரை குறிப்பிட்டு விட்டு வாகிக்கு அழைக்க…

என்னடா உயிரோட இருக்காரா இல்லையா…

அக்கா என்று கதறியவனை டேய் விது என்னாச்சு எதுக்கு அழற என்று பதறி இருந்தாள் வாகி . பயமா இருக்கு நீ சீக்கிரம் வாக்கா என்று மீண்டும் அழ…வரேன் வரேன் பயப்படாத எதுக்கு டா நீ அழுதுட்டு இருக்க என்றவள் அவனை பார்த்துக்க சொல்லி கார்ட்ஸ் க்கு சொல்லிவிட்டு அந்த மருத்துவமனை வர இன்னுமே அழுது கொண்டு தான் இருந்தான் விதுரிஷி…

விது என்று அவன் தோள் தொட வாகியை அணைத்து கொண்டவன் அக்கா அவருக்கு இது மூணாவது அட்டாக் அம்மாக்கு நான் என்ன பதில் தர என்று அழ..

நீ எதுக்கு பதில் தரனும் வா கிளம்பு நான் அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ண சொல்லிட்டேன்…

நான் சொல்லிட்டேன் அக்கா வர்மன் அத்தான் வராங்க என்று சொல்ல..

என்ன என்று வாகி மூக்கு விடைக்க கேட்க..

அவள் கோவத்தை உணரும் நிலையில் விது இல்லை தாய் தனித்து இருந்தாலும் அவர் மனதில் பகலவன் எந்த நிலையில் இருக்கிறார் என்று உணராதவன் இல்லை..அவருக்கு எதாவது என்றால் தாய் துவண்டு விடுவார் அதுவே அவன் பதறி அழுது அற்ற காரணம் இங்கே இவன் இதை நினைத்து கொண்டு அழ, வாகியோ வர்மனை இவன் அத்தான் என்று சொல்லியதை நினைத்து பொறும அவனே அங்கே வந்து நின்றான்…விது மாமா..

அப்பா உள்ள அத்தான் என்று அழ..

சரி சரி நான் பார்க்கிறேன் பயப்படாத டா..என்று தேற்ற விதுவை முறைத்தவள் விருட்டென வெளியேறிய இருக்க யாரும் அறியாமல் வந்து நின்றாள் அவள்…


தொடரும்