• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (10)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

10

மயூரி தன் தாய் தந்தை முகம் கூட கண்டதில்லை. அவளுக்கு அனைத்துமே தாத்தவும் பாட்டியும் தான்.

தாத்தா பாட்டியைத் தவிர குடும்பத்தில் யாருக்கும் மயூரி மேல் உண்மையான அன்பும் அக்கறையும் இல்லை. அதனால் தான் திருமணத்திற்குப் பிறகு தாத்தாவை விட்டுப் பிரிய அவளுக்கு மனம் வரவில்லை. சுந்தரியிடம் திருமணம் முடிந்தபின் தாத்தாவும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று மயூரி வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.

வீட்டில் மயூரி பிறந்த பின்னர் தான் விக்கிரமன் விஜயன் மற்றும் பார்த்திபனுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன . இம்மூவரின் பிள்ளைகளும் மயூரியை அக்கா ஸ்தானத்தில்தான் வைத்திருக்கிறார்கள். மயூரியும் மூவரின் பிள்ளைகளை தன் தங்கை தம்பி போலவே பாவித்தாள்.

கணபதி மட்டுமே மயூரியை விட வயதில் மூத்தவன்.

வீட்டில் அவளைவிட வயதில் சிறியவர்களுக்கு வரன் பார்த்து திருமணம் நடந்தது. ஆனால் மயூரி விஷயத்தில் குடும்பத்தில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாத்தா மட்டுமே முனைந்தார். ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை.

படிப்பு, வேலை, தாத்தா பாட்டி இதுவே அவள் உலகம் என்றானது.

கையில் பத்திரங்கள் கிடைத்ததும் துருவ் மற்றும் திலீப் வழக்கறிஞரைக் காணச் சென்றனர். மனம் முழுவதும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. தாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்ட இறுமாப்பு என இருவருக்கும் வானில் பறக்காத குறைதான்.

இவை அனைத்தும் சில மணி நேரங்களில் தவிடு பொடியாயின. வழக்கறிஞர் கூறிய வார்த்தைகளை கேட்க அவர்கள் இதயம் சுக்கு நூறாய்ப் பிளந்தது.

ஆவேசத்துடன் மாளிகைக்குத் திரும்பியவர்களுக்கு தாங்கள் கேட்டவற்றை அப்படியே மற்றவரிடம் கூறினர்.

மற்றவருக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

சிவநேசன் அறையில் கணபதி மயூரி திருமணம் பற்றிப் பேசிவிட்டு தாத்தா மயூரி மற்றும் சுந்தரி குடும்பத்தினர் மாடி அறையிலிருந்து கீழே வரவேற்பு அறைக்கு வந்தனர்.

வருகையில் தாத்தா “சிவநேசன் பத்திரத்தை மறைச்சி வெச்சுக” எனச் சுந்தரியிடம் சொல்லி கொண்டே கீழே வந்தார்.

“ என்ன தாத்தா இதெல்லாம்?” என திலீப் தன்னையும் மறந்து ஆவேசத்துடன் கத்தினான்.

“பத்து பைசா இல்ல … எல்லா இடத்திலும் கடன் தான் இருக்கு” என அவர் கொடுத்த பத்திரங்களை முன்னிருந்த மேசையில் வீசினான். “இது எல்லாம் கலர் செராக்ஸ் உண்மையான பத்திரம் சேட்டு கடையில் அடமானத்துக்கு இருக்கு” அவனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியாவில்லை. துருவும் அதே மனநிலையில்தான் இருந்தான்.

தாத்தா பொறுமையாக அசைந்து கொடுக்காமல் அவருக்கே உரியக் கம்பீர தோரணையில் அமர்ந்தார்.

“நீங்கப் பாட்டி மயூரி மூணு பேருக்கு எதுக்கு இத்தனை பணம்? இத்தனை செலவு?” திலீப் கேட்க

“அப்பாடா உங்க அப்பா கேட்க வேண்டிய கேள்வியை நீயாவது கேட்டியே பேராண்டி” எனத் தாத்தா தன் மகன்களைப் பார்த்தார்.

“அப்பா என்ன இது?“ எனக்கு புரியலை என விக்ரமன் நிதானமாகக் கேட்டார்.

தாத்தா குரலை செருமியபடி “நீங்க மூணு பேரும் படிப்பு வேலை கல்யாணம் குழந்தை .. இதை எல்லாம் நம்ம இடத்தில இல்லாம வெளி மாநிலம் .. வெளிநாடுலனு செடில் ஆனீங்க .. அதுல தப்பே இல்ல”

“ஆனா என்னிக்காவது உங்க அப்பா எப்படி வாழ்க்கை நடத்துறார்? அவருக்குப் பணம் இருக்கா? இதை யோசிச்சிங்களா? வயசான காலத்துல அவருக்கு உதவி வேணுமானு கேட்டிங்களா?”

விக்ரமன் விஜயன் பார்த்திபனுக்கும் ஏதோ புரிவது போலவும் இருந்தது. ஆனால் புரியவில்லை.

“நமக்குச் சொத்து இருக்கேனு…” என விஜயன் சொல்ல

“இருந்தது” எனத் தாத்தா மாற்றினார்.

“இப்ப முன்ன மாதிரி விவசாயம் இல்ல விஜயா .. விவசாய நிலத்துல வேலை செய்ய ஆள் இல்லை. வெளிலிருந்து ஆளை கூடிட்டு வந்து வேலை வாங்குறது முன்ன செய்தேன். நிலத்தைக் கண்ணும் கருத்துமா குழந்தையை போல பாத்துகிட்டேன். ஆனா இப்ப வயசான காலத்துல என்னால முடியலை டா. குத்தகைக்கு விட்டாலும் லாபம் இல்ல”

“ஒரு காலத்துல சம்பளமா நெல் அரிசி காய்கறி இப்படிக் கொடுத்தோம். இப்ப அந்த மாதிரி கொடுக்க முடியுமா? சம்பளமா காசு கொடுத்தா தானே அவங்க வீட்டுல அடுப்பு எரியும். அவங்க பாவம் இல்லையா? ஸ்கூல் பீசா ஒரு மூட்டை நெல்லையா கொடுப்பாங்க?”

“அடுத்தது 1000 sq.ft உள்ள வீட்டு வேலைக்கு பெருக்கி துடைச்சி பாத்திரம் கழுவித் துணி துவைக்க எத்தனை தருவீங்க? ..அப்ப இங்க இவ்வளவு பெரிய இடத்துக்கு … சம்பளம் எப்படி? அதுவும் பத்து பேருக்கு எத்தனை ஆகும்? கணக்கு பண்ணுங்கள்”

“எனக்கும் உங்க அம்மாக்கும் வைத்திய செலவு .. இன்னும் நிறைய இப்படி சொல்லலாம் … ஒரு நாளாவது நீங்க யாராவது கேட்டு இருப்பீங்களா? எனக்கு என்ன பென்ஷனா வருது? ..”

“இதுல ஜமீன்தார் வீட்டுக் கல்யாணம் தடபுடலா நடத்தனும் அப்படினு திலீப் கல்யாணம் அவன் தங்கக் கல்யாணம். அதுக்கு லட்ச லட்சமா பணம் நகைனு கொடுத்தேன். அது எங்க இருந்து வந்தது?”

“பாவம் மயூரி அத்தனையும் ஒத்த ஆளா நின்னு பாத்துக்கிறா … வயலுக்குக் கூடப் போனா தெரியுமா? இத்தனை வருஷத்துல நீங்க யாராவது இதைப் பத்தி கேட்டிருப்பீங்களா?”

“என்னைப் பத்தி கவலைப்பட உங்களுக்கு நேரம் இல்லை. அதனால நானும் உங்களைப் பத்தி கவலைப் படல .. என் செலவுக்கு எங்க தேவைக்கு சொத்தை அடமானம் வெச்சேன் … அவ்வளோ தான்” அனல் பறந்தன வார்த்தைகள்.

“இப்பவரை இருபது லட்சம் கடன் சரியா?” துருவைப் பார்த்துக் கேட்டார்.

“ஆம்” எனத் தலையசைத்தான்.

“அப்பா அம்மா சொத்தில் தான் பிள்ளைகளுக்கு பங்கு உண்டா? ஏன் கடனில் இல்லையா?” அனைவரையும் கோபமாகப் பார்த்தார்.

“உங்களுக்குச் சொத்து வேணும்னா .. நீங்களே மீட்டெடுக்கலாம். உங்க விருப்பம். செத்தும் கூட இதையெல்லாம் வள்ளிதான் தினம் தினம் வந்து சொல்ல சொன்னா.. கடன் பத்தி கேட்க நினைச்சேன். அதுக்குள்ள அவ போயிட்டா. ”

“என்னோட பேங்க் பேலன்ஸ் பணத்தை எனக்கு அப்புறமா மயூரிக்கு தான் போகணும். உயில் எழுதியிருக்கேன்”

சற்றே நிறுத்தியவர் “பேசி பேசி சோர்வா இருக்கு … மயூரி எனக்கு ஆப்பிள் ஜீீஸ் கொண்டுவரச் சொல்லு” எனத் தாத்தா சாய்ந்து அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டார்.

“தாத்தா சூப்பர் தாத்தா” என பாலு கணபதி காதில் கிசுகிசுத்தான். கணபதி சும்மாயிரு எனத் தம்பியை அடக்க முயன்றாலும் பாலுவால் சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட வேண்டி இருந்தது.

மயூரி ஆப்பிள் பழரசத்தை கொண்டு கொடுத்தாள்.

அதைப் பெற்றுக் கொண்ட தாத்தா “அப்படியே முந்திரிப் பருப்பை நெய்ல லேசா வருத்து கொஞ்சமா உப்பு காரம் போட்டு எடுத்து வைக்கச் சொல்லுமா .. அப்புறமா சாப்பிடறேன் .. என் பல் செட் ரூம்ல இருக்கா? முந்திரி சாப்பிடணும்ல” என்று கால் மேல் காலை போட்டு ஆட்டியபடி சொன்னார்.

வெறுப்பேற்றவே இது அத்தனையும் என அனைவருக்கும் புரிந்தது.

திலீப் இதைக் காணச் சகிக்காமல் அங்கிருந்து வெறுப்புடன் வெளியேற அவனை துருவ் பின் தொடர்ந்தான்.

அவர்கள் எப்பொழுதும் தங்கள் திட்டத்தை வகுக்கும் துருவ் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தனர். இனி பேச எதுவுமில்லை. தங்கள் கனவு கோட்டை தகர்ந்துவிட்டதை நம்ப முடியவில்லை. தாத்தா இப்படிச் செய்வார் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

மயூரி இரண்டு கோப்பை காபியுடன் அங்கு வந்தாள். அந்த நேரத்திற்கு அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.

“தேங்க்ஸ்” என இருவரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துப் பருகினர்.

“ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தூங்குங்க” என்றாள் அக்கறை கலந்த தொனியில்

“இனிமே எங்க தூக்கம்” எனத் திலீப் புலம்ப

“இதோ இதைப் பார்த்தா தூக்கம் வரும்டா” என துருவ் ஹிப்னடிஸ் செய்ய பயன்படுத்திய சங்கிலி போன்ற ஒன்றை இருவர் முன்னும் ஆட்டினாள்.

அவர்களின் கண்கள் தெரித்து விழுந்துவிடும் போல நிலைக்குத்தி நின்றது.

“ஆன்லைன்ல வாங்கினேன் ..இது கூட இலவசமா வேற ஒன்னு கொடுத்தான்.. அது என்னத் தெரியுமா? இங்கதான் எங்கேயோ வெச்சேன்” எனத் தேடியவள்

“ஆங் இதோ இருக்கு” எனக் கட்டில் அருகில் பொருத்தியிருந்த ஸ்பைக் கேமராவை எடுத்தாள்.

“இங்க நீங்கப் போட்ட திட்டமெல்லாம் என் ரூம்ல லைவ் டெலகேஸ்ட் ஆகுது தெரியுமா?” அவள் உடல் மொழியில் எள்ளலும் கோபமும் சரிசமமாகக் கண்டனர்.

“இந்தா கெமிக்கல் மாத்திரை .. இது என்ன கன்றாவி தீபாவளிக்கு விடும் பாம்பு மாத்திரை மாதிரி இருக்கு. தாத்தாக்கு தினமும் வீசிங் மாத்திரை கலந்து கொடுக்கணும். நீ பார்க்கும் போது அதைத் தான் கலந்து கொடுத்தேன். நீயும் நம்பிட்ட” எனக் கட்டிலில் நன்றாக அமர்ந்து இரண்டு கைகளையும் இருபக்கம் ஊன்றி காலாட்டியபடி ஜாலியாகப் பேசினாள்.

மிகப் பெரிய அணுக்குண்டைத் தலையில் போடுவதற்கான அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட்டன.

“சொத்துக்காகத் தாத்தாவைக் கொலையே செய்ற அளவு ….”துருவை ஆக்ரோஷமாகப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லை இல்லை ”இதுனால எதுவும் ஆகாது என துருவப் பதட்டமாகப் பேசினான்.

“அந்த நாதாரி மாப்பிள்ளை குடிச்சிட்டு வண்டியை மோதி செத்துருக்கான். இதில் என் தப்பு எதுவுமே இல்லை. ஆனா இத்தனை வருஷமா ராசியில்லாதவனு பழியை சுமந்திட்டு இருக்கேன். மனிதாபிமானமே இல்லாம என் சூழ்நிலையை யூஸ் பண்ற அப்படிதான?” கண்ணீர் ததும்ப கேட்டாள். அவனிடம் எந்த பதிலும் இல்லை.

“நான் அப்ப அந்த சூழ்நிலையில் அதிர்ச்சியில் இருந்தேன். உண்மைதான். ஆனா இன்னமும் அப்படியேவா இருப்பேன்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?”

“என் கையில் கண்ணாடி தாக்கி அடிப்பட்ட அன்னைக்கு நான் ஹிப்னடிஸ் ஆகலை .. நீங்க எந்த அளவு போறீங்கனு பார்க்கத்தான் நானும் நடிச்சேன். என் பெர்மான்ஸ் எப்படி?” எனப் புருவத்தை உயர்த்தினாள்.

“அடுத்த நாள் இதே மாதிரி இங்க காபி கொடுக்க வந்துதான் ஸ்பை கேமராவை வெச்சேன்.”

“தாத்தாக்கு ஏற்கனவே நியூரோ பிரச்சனை இருக்கு. அதிலும் தனிமை ரொம்ப வாட்டுது. அவருக்கு ஹேலோசினேஷன் பிரச்சனை முன்னமே இருக்கு ”

“ இதுல நீங்க வேற ஹேலோசினேட் ஆக கெமிகல்ஸ் ??” என்று முறைத்தாள். என்னச் சொல்லி திட்டுவது என்றேத் தெரியவில்லை.

“சரி நேரம் ஆச்சு எல்லாருக்கும் உங்க ரெண்டு பேர் குறும்படம் காட்டணும் பை ” என எழ முயன்றவள் காலில் இருவரும் விழுந்துவிட்டனர்.

“நீங்கக் கால் வாருவீங்களா? கால் பிடிக்கிறிங்களா?” நையாண்டி கலந்த சந்தேகத்துடன் வினவினாள்.

“ப்ளீஸ் எங்களைப் பத்தி யார்கிட்டயும் சொல்லிடாத” எனத் தொண்டை அடைக்க இருவரும் கேட்க

பதில் பேசாமல் நின்றாள்.

“தயவுசெய்து நீ என்னசொன்னாலும் செய்றோம் மயூரி ஆனா உண்மையை வெளியேச் சொல்லிடாத” என மன்றாடினர்.

“அடுத்த தடவையும் இப்படிதான் செய்வ”

“சத்தியமா மாட்டோம்” அவள் தலையில் சத்தியம் செய்ய துருவ் முயல

“டேய் என் மேல ஏண்டா சத்தியம் பண்ற?” பின்னே நகர்ந்தாள்.

“மன்னிச்சிடு மயூரி” திலீப் கெஞ்சினான்.

“மன்னிக்கலாம் ஆனா மறக்க முடியாது. சைன்டிபிக் டெக்னாலஜி இவங்களுக்கு எங்க தெரியப் போகுதுனு எகத்தாளம் ”

இல்லை என இருவரும் மண்டையை ஆட்டினார்கள்.

“ தாத்தா கடனை அடைக்கணும் .. ஓகே வா” கன்டிஷனாக மயூரி கேட்க

“அத்தனை பணம்?” இருவரும் வாயைப் பிளக்க

“சரி மத்தவங்க்கிட்டயும் கேளுங்க .. எல்லாரும் வெல் செட்டில்ட் தானே?”

“எங்களால் முடிஞ்சதை நாங்க தரோம் .. அப்ப மத்தவங்களும் தருவாங்க” என ஒரு டீலிங்கிற்கு வந்தனர்.

“அடப்பாவிகளா?” என்றொரு குரல் அறைக்கு வெளியே கேட்டது. அது தாத்தாவின் தங்கை முறை உறவுப்பெண் லட்சுமி.

எல்லா குடும்பத்திலும் ஒரு நபர் இருப்பார். அவரிடம் ஒரு விஷயத்தை சொன்னால் போதும் அதற்குக் கொஞ்சம் காமெடி மசாலா பைட்சீன் என ஒரு படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் சேர்த்து புத்தம் புது படமாக ரிலீஸ் செய்துவிடுவார்கள்.

அவர்களை குடும்பத்தில் செல்லமாக ஆல் இந்தியா ரேடியோ என அழைப்பது வழக்கம். அப்படியான ஒரு நபர் தான் லட்சுமி.

துருவ் மற்றும் திலீப் செய்ததை மயூரி வெளியே சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலிருந்தாள்.

இதற்குக் காரணம் குற்றத்தை மறைத்தால் அது மேலும் அவர்களைக் குற்றம் புரிய வைக்கும். அதனால் சொல்லாமல் இருப்பதும் தவறு.

நேரடியாக தன் மாமாவிடம் “உங்கள் மகனின் செயல்” எனச் சொன்னால் அவர் மனம் வேதனைப்படும். அதனால் மயூரி இப்படி இதைக் கையாளுவது என்ற குழப்பத்திலிருந்தாள்.

ஆனால் இனி அனைத்தையும் லட்சுமி பார்த்து கொள்வார். அவரிடம் “இந்த விஷயத்தைச் சொல்லாதே” எனத் தடுத்தாள். அதையும் சேர்த்து என் காலில் விழுந்து உருண்டு பிரண்டு கெஞ்சினார்கள் எனக் கூறுவார்.

அனைத்தும் கைமீறிப் போய்விட்டது இனி துருவ் மற்றும் திலீப் கடனை தீர்க்க பணம் கொடுத்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அடுத்த நொடி துருவ் மற்றும் திலீப் தாத்தாவிடம் வந்து “ தாத்தா நாங்க ஆளுக்கு ஐந்து லட்சம் தரோம் .. இந்த கடன் அடைக்க .. மயூரி பேங்க் அகௌண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணியாச்சி” என்றனர்.

மயூரி செல்போனில் தன் அகௌண்டைப் பார்த்து பணம் வந்ததை உறுதி செய்தாள்.

பின்னர் அவர்களை கண்டு மற்றவரும் தங்களால் முடிந்த பணத்தை கொடுக்க தேவைக்கு மேல் பணம் சேர்ந்தது.

“அப்பா இனிமே உங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்கக் கஷ்டப்பட வேண்டாம் .. ஆறு மாசத்தில் என் எல்லா வேலையும் முடிச்சிட்டு. இங்கேயே உங்க கூட நிரந்தரமா நானும் என் மனைவியும் இருக்கப் போறோம்” என விக்ரமன் சொன்னதும்

“நானும் அதே முடிவை எடுத்திருக்கேன்” என விஜயனும் சொன்னார்

“சித்து படிப்பு முடிஞ்சி வேலைக்குப் போனதும் நானும் வந்திடறேன்” எனப் பார்த்திபன் கூறினார்.

தாத்தா மகிழ்ச்சியுடன் “ஆறு மாசம் ஆனதும் உங்க அம்மாக்கு சில பரிகாரம் செய்யணும் .. அது முடித்தவுடனே .. மயூரி கணபதி கல்யாணம் வைத்துக்கொள்ளலாம்” என்றார்.

அனைவரும் சந்தோஷமாக சம்மத்தினர்.

தாத்தாவிற்குப் பிறகு மூத்த மருமகள் சுந்தரிதான் அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டனர். சுந்தரிக்கு எதையுமே நம்ப முடியவில்லை.

லட்சுமி மூலம் துருவ திலகம் படம் வெளி வந்தது. தனியே அவர்களை அழைத்து அவரவர் பெற்றோர் கடிந்து கொண்டனர்.

சுந்தரி அன்றே கிளம்பிவிட வேண்டும் என நினைத்தார். ஆனால் இத்தனை பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக உருவெடுத்து இறுதியில் அனைவரும் மகிழ்ச்சியாக இரவு உணவு சேர்ந்து உண்டனர்.

இரவு வெகு நேரம் ஆனதால் அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இருந்துவிட்டு மறுநாள் சுந்தரி தன் மகன்களுடன் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்தனர்.

கணபதி வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க கூட இல்லை “ நான் வெளியில் போயிட்டு வரேன் மா” எனக் கிளம்ப எத்தனித்தான்.

“அதுக்குள்ள வேலைக்கு போகணுமா?” சுந்தரி அங்கலாய்க்க

“இல்லமா ஜோசியரைப் பார்க்க போயிட்டு வரேன்” எனக் கிளம்பினான்.

அவன் சைக்கிளின் கொயி கொயி என்ற சத்தம் அவன் மயூரியுடன் டூயட் பாட அனிருத் போட்ட டியூன் போலத் தோன்றியது.

தான் இன்னமும் மயூரியுடன் ரொமன்ஸ் செய்யவில்லை என்ற வருத்தம் அவனிடம் இருந்தது. சரி கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம். நமக்கும் ரொமன்சுக்கும் எப்பவுமே தூரம் தான்.

ஆறு மாதத்திற்குப் பிறகு ராஜகணபதி மயூரி திருமணம் இனிதே நடந்தது. திருமணத்திற்கு சீப் கெஸ்ட் ஜோதிடர் தான்.

சுந்தரியின் இலவச விளம்பரத்தால் ஜோதிடருக்கு நிறைய வாடிக்கையாளர் கிடைத்தனர்.

அவர் புது அலுவலக கிளை தொடங்கிவிட்டார்.



சுபம்.

 

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
8
8
3
Bangalore
Cool!! Semma climax ma'am 👏👏👏 hats off suspense azhaga carry panninga.
Yes, sothula pangu venum kadan la venama 😡😡
Thathat ku cashew roast venumame 😂😂😂😂 Indha Rendu dummy ps vachittu 🤣🤣🤣haiyoo haiyoo. Ivangalodu arivai nalla muraiil use seithu iniyavudhi ozhachi munnerattum. 👍
Ini ellarum sernthu ottrumaiya sandhosham vazhattum 🙏
Appadi ye andha astrologer number sollunga ji 😍😍

Thank you.
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
Cool!! Semma climax ma'am 👏👏👏 hats off suspense azhaga carry panninga.
Yes, sothula pangu venum kadan la venama 😡😡
Thathat ku cashew roast venumame 😂😂😂😂 Indha Rendu dummy ps vachittu 🤣🤣🤣haiyoo haiyoo. Ivangalodu arivai nalla muraiil use seithu iniyavudhi ozhachi munnerattum. 👍
Ini ellarum sernthu ottrumaiya sandhosham vazhattum 🙏
Appadi ye andha astrologer number sollunga ji 😍😍

Thank you.
Thank you so much for your beautiful comment. Very very happy ADC 😍.
Thanks for your continuous support 🙏
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
நிச்சயமா எல்லா குடும்பத்திலும் ரேடியோ பெட்டி இருக்கு... வித விதமான பெயர்களில 🤣

ஜோசியர் சொன்னது பலிச்சு அவருக்கு இவங்க குடும்பமே இலவச மார்க்கெட்டிங் 🤣🤣

👌👌👌
 
  • Like
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
நிச்சயமா எல்லா குடும்பத்திலும் ரேடியோ பெட்டி இருக்கு... வித விதமான பெயர்களில 🤣

ஜோசியர் சொன்னது பலிச்சு அவருக்கு இவங்க குடும்பமே இலவச மார்க்கெட்டிங் 🤣🤣

👌👌👌
Thank you so much sis for your continuous support 🙏