212
3
வைரவன் தாத்தா எண்பத்தைந்து வயதிலும் தான் ஜமீன்தார் பரம்பரை என்பதை மறவாத வண்ணம் கம்பீரம் குறையாமல் அமர்ந்திருந்தார். அவர் மனைவி காந்தவள்ளி அனைத்தையும் தன் தோள் மீது சுமந்தவர். இனி என்னால் முடியாது என மீளா உறக்கத்தை அடைந்துவிட்டார்.
காந்தவள்ளி எண்பதின் தொடக்கத்திலிருந்தவர். எத்தனை வயது ஆனாலும் அனைவரையும் உருட்டி மிரட்டி வேலை வாங்குவார். இருதய நோயால் பாதிக்கப்பட்டுப் பல மாதங்களாக மருத்துவச் சிகிச்சையில் இருந்தார். எதுவும் முடியாமல் ஒருநாள் இதயம் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டது.
பல நாள் மருத்துவச் சிகிச்சை என்றிருந்து மடிந்ததால் எதிர்பார்த்த மரணம் எனத் தாத்தா மனதைத் தேற்றிக் கொண்டார். ஆனால் மனமோ மனைவியின் மேலுள்ள காதலும் பாசமும் இழப்பை நினைத்துத் திணறியது. அவற்றிலிருந்து மீள முடியவில்லை என்றாலும் மற்றவருக்காக வெளி வந்தது போல இருக்கவாவது சிறிது நேரம் தேவைப்பட்டது.
அடுத்து நடக்க வேண்டியவற்றை நடத்தத் தயாரானார். தன் மனதின் பாரத்தைத் தள்ளி வைத்தார். தன் மனைவிக்குச் சகல மரியாதையுடன் இறுதி காரியங்கள் செய்யத் தொடங்கினார்.
வைரவன் காந்தவள்ளி தம்பதிக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் என ஐந்து பிள்ளைகள் .
மூத்த மகன் சிவநேசன் ( கணபதியின் தந்தை) அடுத்து மகள் வைதேகி அடுத்து மகன்களான விக்ரமன், விஜயன் மற்றும் பார்த்திபன்.
மகள் வைதேகியை மற்றொரு ஜமீன் குடும்பத்தில் வரன் பார்த்துச் சிறப்பாகத் திருமணம் முடித்து அனுப்பி வைத்தார்.
ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வைதேகி கணவர் பாம்பு கடித்து இறந்து போனார். அதன் பிறகு வைரவன் காந்தவள்ளி தம்பதி தங்கள் மகளை தங்களுடனேயே வைத்துக் கொண்டார். அப்போது வைதேகி கர்ப்பவதியாக இருந்தாள். அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தில் பெண் குழந்தையை ஈன்று பரலோகம் அடைந்துவிட்டார்.
வைரவன் தம்பதி தன் மகள் வயிற்றுப் பெண் குழந்தைக்கு மயூரி எனப் பெயர் சூட்டி தாங்களே வளர்த்தனர். சிவநேசன் தன் தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
ஜமீன்தார் முறை இந்திய அரசாங்கத்தால் அழிக்கப்பட்டாலும் வைரவனின் பல தலைமுறைகளைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் இன்றுவரை பெரிய குடும்பம் என்றே அழைத்தனர்.
வைரவன் தம்பதியினர் தங்களை ஜமீன் குடும்பம் என்று மற்றவர் நினைக்கும் வண்ணமே நடந்து கொள்வர்.
சிவநேசன் சுந்தரியைக் காதலித்த காரணத்திற்காக அந்த குடும்பத்தை விட்டுத் துரத்தப்பட்டார். வைதேகி வாழ்க்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்று அதுவும் எப்படியோ போய்விட்டது.
மற்ற மூன்று மகன்களான விக்ரமன் விஜயன் பார்த்திபன் வெளியே படித்து பிறகு நல்ல வேலை என இருந்துவிட்டனர். நேரம் கிடைக்கையில் பெற்றோரைக் காண வருவார்கள். மூவரும் தங்கள் பெற்றோர் சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டனர்.
அதற்குக் காரணம் ஏராளமான சொத்துகள் வைரவனிடம் இருந்தது. அவை கிடைக்காமல் போய்விடும். தங்கள் அண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டு படும் பாட்டை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
கடைசி மகன் பார்த்திபன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வாசம். விக்ரமன் குடும்பத்துடன் டெல்லியிலும் விஜயன் குடும்பம் மலேசியாவிலும் உள்ளனர்.
தற்பொழுது அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தாயின் இறப்புக்கு வந்துள்ளனர். பாசம் என்பதையும் தாண்டி வைரவனின் முக்கியமான அறிவிப்பு என்னும் மந்திரச் சொல் அவர்களைக் கண்டங்களைத் தாண்டி இழுத்து வந்துள்ளது.
ஐந்து பங்காகப் பிரிக்க வேண்டிய சொத்து தற்பொழுது சிவநேசன் வைதேகியை நீக்கி மூன்றாக மட்டுமே பிரிப்பதில் அவர்களுக்கு அலாதி சந்தோஷம்.
வைரவனின் சில பேரப் பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர்களில் சிலர் தங்களை நவநாகரீக மனிதர்களாகப் பாவித்து “நான் அந்த கிராமத்துக்கெல்லாம் வர முடியாது” என்றுவிட்டனர்.
ஆனால் பெரிய குடும்பத்துச் சாவு என்பதால் பெண் கொடுத்து எடுத்தவர் தூரத்து உறவினர் என்னும் வகையில் கூட்டம் சேர்ந்துவிட்டது.
இப்போது மூத்த மருமகள் என்னும் வகையில் சுந்தரிதான் அத்தனை சடங்கையும் செய்ய வேண்டும். ஆனால் சுந்தரியை குடும்பம் ஏற்காததால் விக்ரமன் மனைவி ராதிகா அனைத்தையும் செய்ய முன் வந்தார். வீட்டு கொத்து சாவி தன்னிடம் அடைக்கலம் பெற எல்லா முயற்சியிலும் ஈடுபட்டார்.
வைரவன் தாத்தாவிற்கு தற்பொழுதாவது தன் குடும்பம் ஒன்றுபட்டதை எண்ணி ஒருபக்கம் நெகிழ்ந்து போனார். இதற்குக் காரணம் காந்தவள்ளி. ஆனால் அனைவரும் சில நாட்களில் பறந்துவிடுவார்கள் என்னும் எண்ணமும் மனதை வாட்டியது.
கணபதியை கண்டதும் அத்தனை வருடங்களாக மனதில் அடக்கி வைத்திருந்த பாசம் அணையை உடைத்து வெளி வந்தது.
“இத்தனை வருசமா உனக்கு இங்க வர மனசில்ல தானே?” அவன் கையைப் பற்றி பாசமாய் தாத்தா கேட்க .. மற்றொரு கையால் பாலுவை அணைத்துக் கொண்டார்.
“உங்களால தானே” என மனம் குற்றம் சாட்டினாலும் வெளியே கூறாமல் அவர் நிலை அறிந்து கணபதி “அப்படி இல்ல தாத்தா” என சமாதானமாய் சொன்னான்.
“சுந்தரி வரலையா?” ஆவலாக கேட்டார்.
அவன் இல்லையென தலையசைத்தான் சொல்ல மனம் வரவில்லை.
“வள்ளிக்கு .. அதான் காந்தவள்ளி .. நான் அவள அப்படிதான் கூப்பிடுவேன்” என கண்கலங்க சடலத்தைப் பார்த்தார் “வள்ளிக்கு உன் அப்பன் சிவா மேல அத்தனை உசுரு … மூத்த பிள்ளை இல்லையா? குடும்பத்தையே அவன் தான் தாங்கணும்னு எதிர்பார்த்தா .. ஆனா என்னெனமோ நடந்துப் போச்சு. அதை அவளால ஏற்க முடியல” என பெருமூச்சுவிட்டார்.
“மயூரி” என்று அழைத்து “இவங்கள உள்ள கூடிட்டு போ மா” என்றார்.
“இவ யாரு தெரியுதா?” கணபதியிடம் மயூரியை காண்பித்துக் கேட்டார்.
“தெரியல தாத்தா” என்றான்
“உன் அத்தை பொண்ணு மயூரி .. வைதேகி மகள்”
“இவங்க சிவநேசன் பசங்க மூத்தவன் கணபதி இளையவன் பாலு” என மயூரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“வாங்க” என அழைக்க முடியாத சூழல் தலையசைத்து அமர வைத்தாள். அவள் அழுது உள்ளாள் என்பதை நுனி மூக்கு சிவப்புக் காட்டியது.
அப்போது நான்கைந்து பெண்கள் குழுவாக வந்தனர். அவர்கள் ஒப்பாரி கலைஞர்கள். வைரவனுக்கு முறையாக வணக்கம் சொன்னபின் காந்தவள்ளி உடல் அருகே சென்று அழத் தொடங்கினர்.
வைரவன் ஜமீன் வம்சத்தில் மரணத்திற்கு ஒப்பாரி கலைஞர்கள் வந்து ஒப்பாரி வைப்பது வழக்கம். அதற்கு அவர்களுக்குச் சன்மானம் கொடுக்கப்படும்.
“யார் இவங்க?” பெண்கள் குழுவை காண்பித்து சித்து மயூரியிடம் கேட்டான்.
“ஒப்பாரி கலைஞர்கள்”
“வாட்? ஒப்பாரி …” ஆச்சரியமாய் வார்த்தைகளைக் கூட முடிக்காமல் அவளைப் பார்த்தான்.
மயூரி “ஆமாடா.. உலகத்துல யாருமே தனக்கான ஒப்பாரி பாட்டுக் கேட்க முடியாது … ஒப்பாரி வெறும் அழுகை கிடையாது . இறந்தவர்களைப் பற்றி நாலு நல்ல விஷயங்களை சொல்லுறது . . . எந்த நோயால் எப்படி இறந்தாங்க? . . . இறந்தவரின் அடுத்தடுத்த தலைமுறை அவரை நல்லா தெரிஞ்சிக்கணும் அவர் வழி பின்பற்றணும் . . .இறந்தவருக்கு வந்த நோயிலிருந்து எப்படி தன்னை பாதுகாத்துகணும். இதுதான் ஒப்பாரி. எதோ சாதாரணமா அழுதுட்டுப் போகிறது இல்ல” என்றாள்.
அவளின் அத்தனை வார்த்தைகளும் கணபதி காதில் விழுந்தது. அவனுக்கும் அவளின் சொற்கள் அதிசயமாய் இருந்தன.
“பொன்னான மேனியிலே ஒரு பொல்லாத நோய் வந்ததென்ன தங்கத் திருமேனி தீக் கொண்டு போவதென்ன” “தாலாட்டும், தூங்கவைக்கத் தானே ... நிரந்தரமா தூங்கினதும் பாடுவது ஒப்பாரி . இதுவும் ஒரு தாலாட்டுதான் உறங்கு தாயி” எனப் பாடத் தொடங்கினர்.
பொன்னுதாயி என்னும் பெண் கணீரென்ற குரலில் ஒப்பாரி பாடலைப் பாடினாள். வார்த்தையும் பாட்டும் கல் மனதையும் கரைத்துவிட்டது.
மரணம் எந்த நொடியும் யாருக்கும் நேரிடும். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. பொன்னுதாயின் பாடல் வரிகள் மெய்மறக்கச் செய்தது.
ஒப்பாரி வைத்த பின் பொன்னுதாயி வைரவனிடம் விடைபெற்றார் “எனக்கும் நீதான் பொன்னுதாயி ஒப்பாரி பாடணும்” எனத் தாத்தா நா தழுதழுக்கச் சொல்லச் சுற்றியிருந்தவர் பதறிப்போயினர்.
பொன்னுதாயி கண்கலங்கி நின்றார். வைரவனை இந்நிலையில் காணவே வருத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் பேசாமல் வணங்கி விடைபெற்றார்.
“அப்படி எல்லாம் பேசாதீங்க” என உரிமையுடன் கண்டித்தனர்.
நலிந்த நசிவடையும் ஒப்பாரி கலைஞர்களுக்கு கையும் மனமும் நிறையச் சன்மானம் வழங்கினார் வைரவன்.
கணபதிக்கு தன் தந்தையின் மரணத்தில் இப்படியெல்லாம் செய்யவில்லையென வருத்தமாக இருந்தது. மாளிகை என்னும் அந்த பெரிய வீட்டைக் கண்களால் அளந்தபடி கணபதி பார்க்க மயூரி அனைத்தையும் கவனித்துக் கொள்வதை பார்த்தான்.
ஏனோ கணபதியால் அவள் மேலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. நிச்சயமாய் இருபத்தெட்டு வயதிருக்கலாம் என எடை போட்டான். நேர்த்தியாக புடவை கட்டியிருந்தாள்.
“பொண்ணு பிடிச்சிருக்கா?” பாலு காதை கடிக்க
அதிர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி “டேய் வாய மூடு .. எங்க வந்து என்ன பேச்சு?” என அதட்டினான் கணபதி
“இல்ல வெச்ச கண்ணு வாங்காம பாத்தியே .. அதான் பேசி முடிச்சிடலாமா .. முறைப் பொண்ணு வேற.. இன்னும் கல்யாணம் ஆகலை” பாலு வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான்.
“ப்ரோ உங்களுக்கு ரூம் அரேஞ் செய்திருக்காங்க .. வசதியா இருக்கானு பாருங்க” எனப் பதின்ம வயதுடையவன் வந்து சொன்னான்.
பதிலுக்கு “இல்ல தம்பி நாங்க கிளம்பறோம்” என கணபதி எழக் கூடவே பாலுவும் எழுந்து கிளம்பத் தயாரானான்.
“மயூரி அக்கா .. சார் கிளம்பராங்க” என அவளிடம் குற்றம் சாட்டும் தொனியில் கூறினான்.
“டேய் சாரு மேருனு இவங்க உனக்கு அண்ணன் ஆகனும் .. சிவா பெரியப்பா மகன் .. கணபதி பாலு” என அவனுக்கு இருவரையும் அறிமுகம் செய்தாள்.
“இவன் சித்து .. கடைசி சித்தப்பா பார்த்திபன் இருக்கார்ல அவங்க பையன் .. இப்ப தான் காலேஜ் சேர்ந்திருக்கான்”
“அப்ப நான் கரெக்டாதான் ப்ரோனு சொன்னேன்” என மயூரியிடம் கலகலப்பாக பேசியவனை ஆச்சரியமாகப் பார்த்தான் கணபதி.
சித்து பதினெட்டு வயதிருக்கும் சுருள்முடி சிறுபிள்ளைத்தனமும் குறும்பும் கலந்திருந்தது.
“நேரம் ஆச்சு” என பாலு தாங்கள் கிளம்புவதைச் சூசகமாகச் சொல்ல
“தாத்தா எதோ முக்கியமான விஷயத்தை குடும்பத்துல பேசுனுனு சொல்லியிருக்கிறார்” என மயூரி நினைவூட்ட
“அது உங்க குடும்ப விஷயம் நாங்க எதுக்கு?” எனப் பட்டெனக் கணபதி கேட்டுவிட்டான். அவன் இன்னமும் அதை தன் குடும்பம் என ஏற்றுக் கொள்ளவில்லை எனப் புரிந்தது.
“அப்பச் சரி நீங்க கிளம்புங்க ..” என மயூரி சற்றே கோபத்துடன் சொல்ல இதைக் கணபதி எதிர்பார்க்கவில்லை. அவள் கோபம் அவனை நகரவிடாமல் செய்தது.
பாலுவிற்கு தன் அண்ணனின் பதட்டம் புரிந்தது. உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் “தாத்தா எப்ப முக்கியமான விஷயம் சொல்லுவார்?”
மயூரி “நாளைக்குத் தகனம் முடிஞ்சதும் சொல்லுவார் நினைக்கிறேன் .. எனக்குச் சரியாத் தெரியாது. தாத்தா இன்னிக்கு இருக்கிற நிலைமைல என்ன செய்வார்னு தெரியல ..” கணபதி பக்கம் திரும்பாமல் பாலுவிடம் சொல்லிவிட்டு தாத்தாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னாள்.
தாத்தா உடனே இருவரையும் அழைத்து “நீங்க இங்க இருந்தே ஆகணும்” என கராராகச் சொல்ல
“சரி தாத்தா” பாலு உடனே சொல்லிவிட
கணபதி இதற்கு மேல் முரண்டு செய்வது நன்றாக இருக்காது எனத் தலையாட்டி சம்மதித்தான்.
“தட்ஸ் இட் ப்ரோ” என முகம் மலர சித்து உரிமையாகக் கணபதி முதுகில் தட்டிக் கொடுத்தான்.
மயூரி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். பின் யாரோ அழைக்க “ஒரு நிமிஷம்” எனக் கேட்டு அவள் வேலையாக நகர்ந்துவிட
பாலு “என்ன அண்ணே டீவி சீரியல்ல மேக்அப் போட்ட மாதிரி நிறையபேர் இருக்காங்க? சாவு விழுந்த வீடு மாதிரியா இருக்கு? ஒருத்தரும் அழலை .. அதுலயும் சிலர்”
“வாய மூடு பாலு .. யார் காதுலயாவது விழப் போவுது” எனக் கண்டித்தான் கணபதி.
“ப்ரோ காபி” எனச் சித்து நீட்ட
இருவரும் களைப்பினால் மறுக்காமல் வாங்கிக் கொண்டனர்.
“சித்து உன் அப்பா ..அம்மா … சித்தப்பா இவங்களாம்?? ”எனக் கணபதி இழுக்க
“உங்களுக்கு அடையாளம் தெரியலையா? அவங்க விக்ரமன் பெரியப்பா ..அவர் விஜயன் பெரியப்பா .. அவங்க என் அப்பா பக்கத்துல அம்மா” என அனைவரையும் சுட்டிக்காட்டி அறிமுகப்படுத்தினான்.
அத்தனை பேரையும் மனதில் உடனே பதிய வைக்க முடியவில்லை இருப்பினும் முக்கியமானவர்கள் சட்டெனப் பதிந்துவிட்டனர்.
கணபதி மற்றும் பாலுவை இரு ஜோடி கண்கள் வன்மத்துடன் முறைத்தன. தங்கள் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்வதை அவர்கள் உணர்ந்தனர்.
தொடரும் ….