212
4
விக்ரமன் மகன் திலீப் மற்றும் விஜயன் மகன் துருவ். இருவரின் முகத்திலும் ஒருவிதமான கசப்பு தெரிந்தது. கணபதி அவர்களை தற்செயலாகத்தான் கவனித்தான். தன்னை அவர்கள் பார்த்த பார்வையில் நிச்சயமாய் வெறுப்பு கலந்திருந்தது.
அவர்கள் யாரெனத் தெரியவில்லை. சித்து அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கணபதியும் கேட்கவில்லை. அவர்கள் மட்டும் அல்ல பெரும்பாலும் அங்கிருந்தவர்கள் இன்னாரெனத் தெரியாது.
இருவரின் வயதும் தன் தம்பி பாலுவின் வயதை ஒத்திருந்தது. அவர்களுக்குத் தன்னையும் தன் தம்பியின் வரவையும் ஏற்க முடியவில்லை என நன்றாகவே புரிந்தது.
மயூரி மற்றும் சித்து முன்னே நடந்தனர். அந்த காலத்துப் பங்களா என்று கூறுமளவு இருந்தது. தற்காலத்திற்கு தேவையான சில மாற்றங்களும் ஆங்காங்கே தென்பட்டன. முன்னே விருந்தினர் அமர்ந்து பேச வசதிகளுடன் பெரிய இடம்.
அடுத்ததாகப் பிரமாண்ட வரவேற்பறை அதன் அருகே பெரிய சமையலறை பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு என அழகாக இருந்தது. அருகில் இரண்டு அறைகள்.
அடுத்து மாடிப்படிகள் ஏறியதும் பெரிய வராண்டா அதில் கலைநயத்துடன் ஒரு பெரிய ஊஞ்சல். வராண்டாவை ஒட்டி பல அறைகள் இருந்தன. சில அறைகளில் பூட்டுத் தொங்கியது.
மயூரி மாடியில் ஓர் அறையைக் கணபதிக்கும் அவன் தம்பிக்கும் காட்டினாள்.
அந்த வீட்டின் அமைப்பும் அழகும் பாலுவை வெகுவாக கவர்ந்தது. கதவின் கைப்பிடி கூட அத்தனை கலைநயத்துடன் செய்திருந்தார்கள். பாலு வாயைப் பிளந்து பார்த்து கொண்டிருந்தான். எஜமானனின் வார்த்தைக்காகக் காத்திருக்கும் வேலை ஆட்கள் என அனைத்தும் பிரமிப்பாக இருந்தது.
கணபதி கருத்தில் எதுவும் பதியவில்லை.
“நீங்க இங்க ரெபிரஷ் செய்துக்கலாம்” என அறையைக் காட்டினாள். அறை மிகப் பெரியதாக இருந்தது. அறை உள்ளேயே குளியலறை மற்றும் கழிவறை இருந்தது.
பாலு அறையை நோட்டமிட்டபடி இருக்க அவனுடன் சித்து ஒட்டிக் கொண்டான்.
“மயூரி” எனக் கணபதி அழைக்க … அவளுக்கு ஒரு நொடி தன் பெயர் இத்தனை அழகா எனவும் தோன்றும் வண்ணம் சிலிர்ப்பாக இருந்தது.
கணபதி பக்கம் திரும்பினாள். அவனை அப்போதுதான் கூர்ந்து கவனித்தாள். அவன் தொளதொள சட்டை மூக்குக் கண்ணாடி ஆங்காங்கே ஒன்றிரண்டு நரைத்த முடிகள்.
“எனக்கு சில கண்டிஷன் இருக்கு. அதுக்கு சரினா இங்க இருக்கேன் .. இல்லனா இப்பவே கிளம்பிடறேன்” கணபதி தீவிரமாக முகத்தை வைத்தபடி சொல்ல
“என்ன உங்க மனைவிகிட்ட போன் செய்து பர்மிஷன் கேட்கணுமா?" மெல்லிய புன்னகையுடன் அவள் வினவ
“அய்யோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலங்க” என அவசரமாகப் பதிலளித்தான்.
“ப்ரோ அவங்க உங்களை கலாயிக்கிராங்க” என மீம்சில் வருவதைப் போல சித்து சொல்ல … கணபதியைத் தவிர மற்ற மூவரும் சிரித்துவிட்டனர்.
“என் அத்தை பொண்ணு மயூரிக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை .. திருச்சியில இருக்கிற காலேஜ்ல லக்சுரர்ரா வேலை பார்க்கிறாங்க” என கொசுறு தகவலைச் சித்து உதிர்த்தான்.
அவன் நோக்கம் மற்றவருக்குப் புரியாமல் இல்லை. பாலுவும் சித்துவும் ஒரு முடிவோடு தங்களுக்குள் ரகசிய புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.
“நான் சொல்ல வந்த விஷயமே வேற .. நாளைக்குப் பாட்டிக்கு இறுதி சடங்கு செய்யும் போது .. மூத்த பேரப்பிள்ளை நெய்ப் பந்தம் பிடிக்கணும்னு சொல்லுவாங்க.
தயவு செய்து என்னையும் பாலுவையும் இதுல இழுக்காதீங்க .. இதனால தேவை இல்லாத பிரச்சனை வரலாம். நாங்க இதுல இருந்து தள்ளி நிக்கணும்.” கணபதி உறுதியாகவும் அதே சமயம் கனிவாகவும் பேசினான்.
“யாராவது எதாவது சொன்னாங்களா?” மயூரி கவலையுடன் கேட்க
“அப்பக் கண்டிப்பா யாராவது எதாவது சொல்லுவாங்க .. அப்படிதானே?” கணபதி பதில் கேள்வியானது
மயூரிக்குக் கண்டிப்பாக இது பிரச்சனை ஆகும் என விளங்கியது.
“நீங்க இப்பவே தாத்தாகிட்ட இதை சொல்லிட்டு வந்திடுங்க .. நாளைக்கு எல்லார் முன்னாலும் பிரச்சனை வேண்டாம். சென்டிமெண்ட் எல்லாம் பாக்காதீங்க .. உண்மையா நாங்க பாட்டியை இதுவரை பார்த்துப் பேசினதே இல்ல .. அவங்களும் எங்களோடு பழகினது இல்ல .. பாட்டிக்கு நெருக்கமான பேரன் சடங்கைச் செய்யட்டும் ” உறுதியுடன் கணபதி சொல்ல
கணபதியின் ஒவ்வொரு சொல்லும் யதார்த்தமாக தெரிந்தால் உடனே மயூரி தாத்தாவிடம் சென்று விஷயத்தைக் கூறினாள். அவர் அரைமனதாகச் சம்மதித்தார். கணபதிக்கு நிம்மதியானது. மயூரி தன் வேலையைக் கவனிக்க கீழேச் சென்றுவிட்டாள்.
இறப்பிற்கு வந்த சிலர் துக்கம் விசாரித்துவிட்டு கிளம்பிவிட்டனர். நெருங்கிய உறவினர் பலர் அங்கேயே இருந்துவிட்டனர். சவம் உள்ள வீட்டில் சமையலறை அடுப்பு எரியக் கூடாது என்பதால் அனைவருக்கும் மயூரி வெளியிலிருந்து வேலை ஆட்கள் மூலம் உணவு வரவழைத்தாள்.
வேலை செய்யும் ஆட்களைத் திறம்பட மயூரி வேலை வாங்கினாள்.
தாத்தாவின் கடைசி மகன் பார்த்திபனும் அவர் மனைவி சந்தியாவும் கணபதியுடன் நன்கு பழகினார்கள். அவர்களின் நடை உடையிலேயே பெரும் பணக்காரர் என்று கணபதிக்குப் புரிந்தது. ஆனால் அவர் சகஜமாகப் பழகினார்.
“அண்ணி எப்படி இருக்காங்க?” எனப் பார்த்திபன் கேட்ட முதல் கேள்வி கணபதிக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது. தன் அம்மாவை வேலைக்காரி என்ற அடைமொழியில் தான் இந்த வீட்டு நபர்கள் அழைத்ததாக கேள்விப்பட்டுள்ளான். அதனாலேயே அவன் இந்த வீட்டு நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தான்.
தற்பொழுது இந்த வீட்டிலும் நல்ல உள்ளங்கள் உள்ளதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.
அதே சமயம் வேலையாயிருந்த மயூரி அருகில் வந்த விக்ரமன் மகன் திலீப் “என்ன மயூரி புதுசு புதுசா சொந்தம் வந்திருக்கு என்ன சேதி?” எனக் கேட்டான்.
மயூரி அருகில் நின்று பேசினாலும் அவன் கண்கள் கணபதி மற்றும் பாலு இருக்கும் அறையின் மேல் நிலையாக நின்றது.
“அவங்க பாட்டி இறப்புக்கு வந்திருக்காங்க .. நீ தப்பா யோசிக்காத திலீப்” கடுகடுப்பாகப் பதிலளித்தாள்.
“சொத்துக்காக இல்லைனு நீ நினைக்கறயா? எப்படியும் தெரியத்தானே போகுது .. பாட்டியா? பணமானு?” கிண்டலாகச் சொன்னான்.
இவனுக்கெல்லாம் பதில் சொல்லி பலனில்லை எனத் தன் வேலை பார்க்கச் சென்றுவிட்டாள். அவர்களும் நகர்ந்துவிட்டனர்.
மயூரிக்குச் சட்டென்ற திலீப் எதாவது கணபதிக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டுமே என மனம் பதைபதைத்தது. கணபதி இருக்கும் அறைக்குச் சென்று பார்த்துவிடலாம் எனச் சென்றாள்.
பார்த்திபன் மற்றும் சித்து .. கணபதி பாலுவுடன் பேசியபடி இருந்தனர். நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
மயூரியைக் கண்டதும் பார்த்திபன் “மயூரி சிவா அண்ணா போட்டோ எல்லா எங்க இருக்கு? கணபதிக்கும் பாலுக்கும் காட்டணும்”
“எதிர்பக்கம் கடைசி ரூம்ல இருக்கு .. வாங்க காட்றேன்” என்றாள்.
வேலை ஆளிடம் சாவி கொண்டுவரப் பணித்தாள். அவள் அறையை நோக்கி நகர சித்து குதித்தபடி உற்சாகமாக முன்னே ஓடினான். துருப் பிடித்த சாவி அதைவிட மோசமான நிலையிலிருந்த பூட்டுக்குள் அடம்பிடித்த பின்னரே திறந்தது.
அதிகம் பயன்படுத்தாத அறை எனத் திறந்த நொடியே புரிந்தது. உள்ளே இருந்து ராக்கெட் வேகத்தில் தூசி சித்து மூக்கை அடையத் தொண்டையும் மூக்கும் அடைத்து “ஹச்சு .. ஹச்சு” எனத் தும்மலாக வெளிவந்தது.
பார்த்திபன் சுவிட்சை ஆன் செய்ய உள்ளே கட்டில் அலமாரி என எல்லா அறைக்குமான இலக்கணம் அம்சமாகப் பொருந்தி இருந்தது. கணபதிக்கும் சந்தோஷமும் துக்கமும் தராசில் சமநிலையுடன் நெஞ்சுக்குழியை அடைத்தது.
பராமரிப்பு இல்லாத அறை என்பதால் ஒரு குண்டு பல்பு எந்த நொடியும் உயிரைவிடும் நிலையில் பளிச் பளிச்சென சிரமப்பட்டு எரிந்தது.
கணபதியின் அப்பா சிவநேசனின் புகைப்படம் நான்கடிக்கு குறைவிருக்காது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. வலக்கையில் கிரிக்கெட் பேட் மற்றொரு கையில் ஹெல்மெட் காலில் லெக் பேட் அணிந்திருந்தார்.
அவருக்குச் சற்றே பின்னால் ஸ்ட்ம்ப் (stump). இளமையான புன்னகை உதிர்க்கும் முகம். புஷ்டியான உணவின் பலனாக குண்டான கன்னங்கள் எனப் பார்க்க அத்தனை அழகாக இருந்தார்.
தன் அப்பா இத்தனை அழகா? எனக் கணபதியும் பாலுவும் மெய்மறந்து பார்த்தனர். அறையில் வெவ்வேறு படங்கள் இருந்தன. பெரும்பாலும் கிரிக்கெட் உடுப்பிலிருந்தார்.
“அப்பா கிரிக்கெட் ஆடுவாரா?” கணபதி கேட்க நினைத்ததை பாலு கேட்டான்.
“ஹே .. உங்க அப்பா நல்ல கிரேட் பிளேயர் .. சூப்பர் பேட்ஸ்மேன் .. இப்படி கேட்கிற?” பார்த்திபன் ஆச்சரியமாய் கேட்கக்
கணபதியும் பாலுவும் வளர்ந்த சூழலில் அவர்கள் அப்பா கிரிக்கெட்டைப் பற்றி நினைக்கக் கூட முடியாத ஒரு நிலை. ஆனால் தொலைக்காட்சியில் மட்டும் கிரிக்கெட்டை ஆவலாகக் கண்டு ரசிப்பார் அதன் காரணம் இன்றுதான் இருவருக்கும் புரிந்தது.
அவர்கள் மனநிலையை உணர்ந்த பார்த்திபன் இருவருக்கும் இடையே நின்று தோளைத் தட்டிக் கொடுத்தார். இருவருமே தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டனர்.
அப்போதுதான் இரண்டு புகைப்படங்களில் 212 என்னும் எண்ணை ஆங்காங்கே எழுதியிருந்ததைக் கண்டான் கணபதி.
“அதென்ன 212னு எழுதியிருக்கு?”
சித்து “உங்க அம்மா அப்பாவைச் சேர்த்து வைச்ச லக்கி லவ் நம்பர் 212” எனச் சொல்லிக் கண்ணடித்தான்.
அவன் சொல்வதை நம்ப முடியாமல் பார்த்திபனை பார்க்க அவரும் ஆமென புன்னகையுடன் தலையசைத்தார்.
பாலு “இதை அம்மாக்கு காட்டணும் போட்டோ எடுத்துக்கிறேன்” எனப் புகைப்படங்களை செல்போனில் கிளிக்க முயல
மயூரி “உங்க அப்பா போட்டோ உங்களுக்குத்தான். நீங்க எடுத்திட்டு போங்க” என்றாள்.
“இந்த போட்டோவெல்லா குடிசையில் மாட்டினா குடிசை விழுந்திடாதா?” என எகத்தாளமாகக் குரல் வர அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அறைக்கு வெளியே திலீப் மற்றும் துருவ் நின்றிருந்தனர். “என்ன சித்தப்பா இதை எல்லாம் குடிசையில் மாட்ட முடியுமா?” எனப் பார்த்திபனைக் கேட்டபடி உள்ளே வந்தான்.
“திலீப் .. மைண்ட் யுவர் வெர்ட்ஸ்” பார்த்திபன் அதட்டாத குறையாக ஆனாலும் குரல் அறையைவிட்டு வெளி போகா வண்ணம் பேசினார்.
பாலு பேச முயல அவன் கையை கணபதி பற்றி கண்களால் அடக்கினான்.
“இத்தனை வருஷம் இல்லாம இப்போ சொத்துக்காக வந்திருக்காங்க அதுப் புரியாம நீங்களும் …”என திலீப் பல்லைக்கடித்து பார்த்திபன் மற்றும் மயூரியை முறைத்தான்.
“சித்தப்பா ..”எனக் கணபதி அவரிடம் பேசினாலும் திலீப் முகத்தைப் பார்த்து “இந்த வீட்ல இருந்து ஒரு ரூபா கூட இதுவரை நாங்க வாங்கினது இல்ல .. இனிமேயும் தேவை இல்ல .. அப்படி எங்க அப்பாக்கு சொத்தில் பங்கு இருந்தால் அதை யாருக்கு வேணாலும் பிச்சையா போடுங்க” எனக் கடைசி வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தான்.
“டேய்” என ஆத்திரத்துடன் திலீப் கணபதியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான்.
இதைக் கண்டு மற்றவர்கள் திலீப் கையை எடுக்க முயன்றனர்.
“நான் தர லோக்கல் என்னோட அடி ஒண்ணொணும் இடி மாதிரி இருக்கும் போனா போகுது சாவு வீட்ல பிரச்சனை வேண்டானு விடறேன். கைய எடுடா” எனக் கணபதி திலீப் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னான். அவன் கைகள் இயல்பாக பேண்ட் பாக்கெட்டினுள் இருந்தன. வார்த்தையிலும் கோபம் இல்லை.
கணபதியின் நிதானம் அனைவரையும் வியக்க வைத்தது. திலீப் சட்டையை வேகமாக விட்டு ஆத்திரத்துடன் அறையைவிட்டு நீங்கினான்.
“இதுக்காகதான் நான் கிளம்புறேன்னு அப்பவே சொன்னேன்” எனக் கணபதி அதே நிதானத்துடன் மயூரியைக் கண்டான்.
அவள் கண்கலங்கி நின்றாள்.
“உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா திலீப்?” துருவக் கோபத்துடன் கேட்டான். இருவரும் படிகளில் இறங்கி வெளியே சென்றனர்.
திலீப்பினால் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் சுவரைக் குத்தினான். கைகள் வலித்தன. தனியே ஓரிடத்திற்குச் சென்றனர்.
“எல்லா சொத்தும் அவனுக்குப் போக போகுது .. இத்தனை வருஷமா நாம வெயிட் பண்ணது வேஸ்ட்” எனப் புலம்பினான் திலீப்.
துருவ் எதுவும் பேசாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி நின்றான். அறையைவிட்டு வெளியேறுகையில் மயூரி கணபதி கண்கள் சந்தித்ததைக் கண்டான். மயூரிக்கு அவன் மேல் ஈர்ப்பு உண்டாகியுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
கணபதி குடும்பத்திற்கு ஒரு ரூபாய் கூட செல்லக் கூடாது. அதற்கு மயூரியை பயன்படுத்த வேண்டும் என நொடிப் பொழுதில் அபாரமான திட்டம் உருவானது.
யாருக்கும் தங்கள் மேல் சந்தேகமும் வராது என நினைக்கையில் அவனையும் மீறி அவன் உதடுகள் புன்னகைத்தன.
தொடரும் …