• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (5)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

5

வைரவன் தாத்தா “என்னை மன்னிச்சிடுபா” என்றபடி அங்கே நின்றிருந்தார். அவரை அழைத்து வந்த பணியாள் தலைவணங்கி விலகினார்.

பார்த்திபன் விரைவாக தன் தந்தை அருகில் சென்று ஆதரவாகக் கையை பிடித்துக் கொண்டார்.

மயூரி தாத்தாவிடம் “ உங்க ரூம்ல போய் பேசலாம் தாத்தா வாங்க .. இந்த தூசி உங்களுக்கு வீசிங் வந்திடும்” எனச் சொல்லியபடி அவரை நிதானமாக அழைத்துச் சென்றாள் “நீங்க ஏன் இங்க வந்தீங்க?” என உரிமையுடன் செல்லமாக கடிந்து கொண்டாள்.

அறைக் கதவைப் பூட்டி வைக்கவும் உத்தரவிட்டாள்.

“நான் வந்ததனால தானே உண்மை தெரிஞ்சது” எனத் தாத்தா முகம் சுணங்கிப் போனது.

தாத்தா தன் அறையில் கட்டிலில் அமர அவர் அருகில் பார்த்திபன் அமர்ந்தார். கணபதி, பாலு, மயூரி, சித்து சுற்றி நின்றனர்.

“என்னாலதான் உங்களுக்குப் பிரச்சனை” எனத் தாத்தா கணபதி மற்றும் பாலுவை நோக்கிச் சொன்னார்.

கணபதி “இல்லை தாத்தா” என்றபடி அவர் முன்னே மண்டியிட்டு அமர்ந்து அவர் கையை மிருதுவாகப் பிடித்தான். சுருக்கங்கள் அவரின் வாழ்க்கை அனுபவங்களைப் பறைசாற்றின. பஞ்சு போல அத்தனை மிருதுவாக இருந்தது கை. சற்று அழுத்தினாலும் கை என்னவாகும் எனச் சொல்ல முடியாது.

கணபதியின் உள்ளம் திலீப் செயலால் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் தன் சினத்தை மயூரி காணக் கூடாதென அடக்கினான். தற்பொழுது தாத்தாவைப் பார்த்ததும் மொத்தமாகக் கோபம் தணிந்து போனது.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல தாத்தா .. அவனுக்குத்தான் பிரச்சனை .. அவன் பேர் என்ன ஆங் திலீப் … மனசுல பணம் வராம போயிடுமோனு பயம். அவன் அவனை நம்பி இல்ல. பணத்தை நம்பி இருக்கான். தன்னம்பிக்கை இல்லாத பொடிப் பையன் விடுங்க” என்றான்.

“வாழ்க்கையில் பணம் வேணும்தான் ஆனா பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல .. அவனுக்குப் புரியக் கொஞ்சக் காலம் ஆகும்” என்று தாத்தாவை ஆறுதல் படுத்தி புன்னகைத்தான்.

இத்தனையும் சொல்லிமுடித்துவிட்டு “அது சரி அவன் யாரு?” என்றும் கேட்டான் கணபதி. அவனின் பெயர் மட்டுமே தெரிந்தது அதுவும் பார்த்திபன் “திலீப்” என அழைத்ததால்.

“என் மகன் விக்ரமனோட பையன் .. உனக்குத் தம்பி ஆகணும்” தாத்தா பதிலளித்தார்.

“ தாத்தா அவனே நாளைக்குப் பாட்டிக்கு நெய் பந்தம் பிடிக்கட்டும் .. தயவு செய்து என்னையும் பாலுவையும் இழுக்காதீங்க” உறுதியான குரலில் சொன்னதும்

“நீ இத்தனை சொன்ன பின்னும் நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன் டா” வாஞ்சையுடன் தலையைத் தடவிக் கொடுத்தார். கண்கள் பனித்தது.

பாலு “என்னையெல்லாம் கொஞ்ச மாட்டிங்களோ”என்றபடி கணபதி போலத் தாத்தா முன் அமர அவரும் புன்முறுவலுடன் பாசமாகத் தலையை வருடினார். பாலு அவர் மனம் வாடுவதை தவிர்க்கவே இப்படிச் செய்கிறான் என அனைவருக்கும்ப் புரிந்தது.

தாத்தா உடலாலும் மனதாலும் மிகவும் தளர்ந்துவிட்டார். இனியும் இவரைப் பேசவிட வேண்டாம் என மயூரி ஜாடை செய்ய மற்றவர்கள் அறையைவிட்டு நீங்கினார்கள்.

அவருக்கு அருந்த சத்துமாவு கஞ்சிக் கொடுத்து பின்னர் அவர் எப்பொழுதும் எடுக்கும் மாத்திரைகளைக் கொடுத்தாள் மயூரி. அவர் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். மயூரி அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.

தன் கட்டிலின் வெறுமை அவர் மனதைப் பிசைந்தது. அறை முழுவதும் தன் அருமை மனைவியின் பொருட்கள் கேட்பாரற்று அனாதையாய் கிடந்தன. அவற்றைக் காணக் காண வேதனை அதிகரித்தது.

இத்தனை காலம் தன் அருகில் மனைவி படுத்து உறங்குவாள். காமம் கடந்த காதலாய் நேற்றுவரை மிளிர்ந்தது. ஆனால் இப்போது பிணமாக கீழே உள்ள மண்டப அறையில் உள்ளாள். நாளை அதுவும் இல்லை.

இனி வாழ்நாள் முழுவதும் தனித்து உறங்க வேண்டும் என நினைக்கையில் துக்கம் பீரிட்டது. மனதில் அடக்கி வைத்த துயரம் அழுகையாய் வெடித்துச் சிதறியது.

காந்தவள்ளியை மணந்தது முதல் அனைத்து நிகழ்வுகளும் மனக்கண்ணில் நிழலாடியது. ‘வள்ளி“ என வாய்விட்டு அழைத்தார். இனி அவளை அழைக்க முடியாது. அழைத்தாலும் வர மாட்டாள்.

காரியம் முடிந்ததும் அவரவர் தங்கள் வேலையைக் கவனிக்கச் சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு மற்ற வேலைகள்
ஆக்கிரமிப்பதனால் தன் அன்னை பாட்டி என்பவரின் இழப்பு பெரியதாகத் தெரியாது. ஆனால் வைரவன் தாத்தாவால் அப்படி இருக்க முடியாது. ஊனிலும் உயிரிலும் கலந்தவர் அல்லவா வள்ளி?

கணவன் இல்லாமல் மனைவி நாட்களைக் கடத்துவது மிகக் கடினமான ஒன்று. ஆனாலும் பெண் என்பவள் சிறு வயதிலேயே பெற்றோர் உடன் பிறந்தவர் தன் உற்றார் உறவினரை விடுத்துப் புகுந்த வீட்டிற்குள் நுழைகிறாள். அதை மெல்ல மெல்ல தன் குடும்பமாக்குகிறாள். அதனால் பிரிவு என்பது அவளுக்குப் புதிதல்ல.

ஆனால் ஆண்களால் அப்படி எளிதாகக் கடந்து வர இயலாது. ஆண்கள் வெளித் தோற்றத்திற்கு கடுமையாகக் காணப்பட்டாலும். பெண்ணின் மனவுறுதியும் நெஞ்சுரமும் மகத்தானது. இது உளவியல் ரீதியான உண்மை.

வள்ளியின் பதினாறு நாள் காரியம் நல்லபடியாக முடிய வேண்டும். சொத்து பிரிப்பது பற்றிய பேச்சினை தள்ளி வைப்பது எனத் தாத்தா முடிவுச் செய்தார்.

கண்டிப்பாக திலீப் பிரச்சினை செய்வான். துருவப் பேசி சண்டையிட மாட்டான் ஆனால் திலீப்பை தூண்டிவிடுவான். கணபதியின் உரிமையைத் தட்டிப் பறிப்பார்கள். பிரச்சனை ஏற்படலாம். அதனால் வள்ளியின் காரியங்கள் அனைத்தும் முடிந்தபின் சொத்தைப் பற்றிப் பேசலாம் என்று முடிவு செய்துவிட்டார்.

அதே சமயம் கணபதி அறைக்கு வந்த விக்ரமன் “மன்னிச்சிடு கணபதி .. திலீப் எதோ தெரியாம செய்துட்டான்” என மன்னிப்பு கோரினார்.

“என்ன சித்தப்பா இப்படி எல்லாம் பேசறீங்க .. தம்பி தானே உரிமையோடு சண்டை போடுறான்” என அவரை தன்னருகே அமர்த்தி சமாதானம் செய்தான்.

“அவனுக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாச குழந்தை கூட இருக்கு. ஆனாலும் மெச்சூரிட்டி இல்ல. அவனுக்குப் பணம்தான் பிரதானம்” என வருத்தப்பட்டார்.

அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை பற்றிக் கூறி சுந்தரியை அழைத்து வரும்படி கூறினர். கணபதி சற்றே நிம்மதியாக உணர்ந்தான். இரவு யாரும் உறங்கக் கூடாது என்பதால் அனைவரும் அமைதியாக நேரத்தைக் கழித்தனர்.

மறுநாள் காலை தாத்தா மயூரி மூலம் சொத்து விவகார விஷயத்தைத் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

பாட்டியின் இறுதிச் சடங்கும் தகனமும் முறைப்படி நடந்தது. கணபதியும் பாலுவும் தள்ளியே நின்றனர்.

சிலர் கணபதி மற்றும் பாலுவை யார் இவர்கள் எனக் கேட்கத் தொடங்கினர். மயூரி சூழலை நன்கு சமாளித்தாள். தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் தம்பியுடன் இருந்துவிட்டான்.

தகனம் முடித்து இடுகாட்டிலிருந்து ஆண்கள் வந்ததும் கணபதி இன்னும் இங்கு இருப்பது சரியல்ல எனக் கிளம்ப முடிவு செய்தான்.

“தாத்தா உடம்ப பார்த்து கோங்க?“ எனக் கணபதி தான் கிளம்புவதை சூசகமாகச் சொல்ல அவரும் கண்ணீர் மல்கப் புரிந்து கொண்டு தலையாட்டினார்.

மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்து கொண்டவர் “பதினாறாம் நாள் காரியத்துக்கு என் மருமக சுந்தரியை கூடிட்டு எல்லாரும் வந்திடுங்க. காரியம் முடிந்ததும் நான் சொத்தைக் கொடுக்கப் போறேன். இனிமே என்னால எதையும் சமாளிக்க முடியாது” என்றார்.

“தாத்தா எங்களுக்கு ஒரு பைசா கூட வேண்டாம். திரும்ப இதைப்பத்தி பேசாதீங்க” வேண்டுகோள் வைத்தான்.

“நீ எதுவும் சொல்லாத .. உனக்கு சொந்தமானதை யாராலும் தடுக்க முடியாது.”

“ஐயோ தாத்தா ப்ளீஸ்“ பதறினான்.

தாத்தாவின் வார்த்தைகள் திலீப் மற்றும் துருவக் காதில் விழுந்தது. அத்தனை சொத்தும் கைநழுவிப் போனது போல் உணர்ந்தனர். திலீப் ஆத்திரம் அடைந்தான். துருவ் நிதானமாகத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்த வேண்டும் எனச் சிந்தித்தான்.

கணபதி தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் .. பாலு மயூரியை தேடிச் சென்றான். மயூரி போன் பேசிக் கொண்டிருந்தாள் “அவங்களுக்கு பிராஜெக்ட் கொடுத்திருக்கேன் … முடிச்சதும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க ” என கல்லூரி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தாள். பாலுவைக் கண்டதும் போன் பேசியபடி உள்ளே வந்து அமருமாறு செய்கை செய்தாள்.

மயூரியின் அறை சுத்தமாக அந்தந்த பொருள் அதன் இடத்திலிருந்தது. பெரும்பாலும் புத்தகங்கள்தான் இருந்தன. அவை தலையணை அளவு பெரியதாக இருந்தது.

“ஏன் இன்னும் மயூரிக்கு திருமணம் நடக்கவில்லை” என நினைத்துக் கொண்டான். அழகு, படிப்பு, அந்தஸ்து, பணம் எல்லாம் இருந்தும் ஏன் எனப் புரியவில்லை. எப்படியும் இருபத்தொன்பது அல்ல முப்பது வயதிருக்கும் எனத் தோன்றியது.

தன் அண்ணனுக்கு மயூரியை திருமணம் முடித்துவிட வேண்டும் என எண்ணியிருந்தவனுக்குப் படிப்பு அந்தஸ்து உள்ள பெண் சம்மதிப்பாளா? எனவும் சந்தேகமாக இருந்தது.

“ ம் …சொல்லுங்க பாலு ” என்ற மயூரியின் சொற்கள் அவன் சிந்தனையைக் கலைத்தது.

“நானும் அண்ணனும் கிளம்பறோம்”என்றான்

“அப்படியா .. பதினாறாம் நாளுக்குக் கண்டிப்பா வந்திடுங்க. சுந்தரி அத்தை உங்க மனைவி குழந்தை எல்லாரையும் கூடிட்டு வாங்க. தாத்தா பார்த்தா சந்தோஷப் படுவாறு” என்றதுக்குச்

சரியெனத் தலையசைத்தவன் “என் அண்ணன கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு இஷ்டமா?” கேட்டுவிட்டான்

பாலு சட்டெனக் கேட்டதால் அவள் முகம் சில நொடி அதிர்வை வெளிக்காட்டி அடங்கியது.

உடனே பாலு “சாரி நான் கேட்டது தப்பான இடம் நேரமா இருக்கலாம். ஆனா கணபதி ரொம்ப நல்லவன். எங்க குடும்பத்துக்காக அவன் கஷ்டப்பட்டான். அப்பா ஸ்தானத்துல அவன் இருந்து எங்களை காப்பாத்தினான்”

“உங்க அளவு அவனுக்குப் படிப்பு அந்தஸ்து இல்லை. ஆனா நல்ல உழைப்பாளி. அரிசி மண்டி வெச்சி நடத்துறான். தேவையான பணம் இருக்கு. தனக்குனு ஒண்ணும் வாங்கிக்க மாட்டான். எங்க மேல உயிரையே வெச்சிருக்கான். அவனுக்கு ஒரு நல்லது நடக்கணும்னு எங்க எல்லாருக்கும் ஆசை” என அண்ணனின் புகழை அனுஜன் பாடினான்.

மௌனமாக அனைத்தையும் கேட்ட மயூரி “எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்” முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை.

“தாராளமா நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க”

“எனக்கு சில வருஷம் முன்ன கல்யாணம் நிச்சயம் ஆகி நின்னு பேச்சி. ஏன்? எதனாலனு? நீங்க மத்தவங்கள கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதைக் கேட்டதும் உங்க மனநிலை மாற வாய்ப்பு இருக்கு” என்றதும்

குழப்பத்துடன் அவன் “எனக்கு புரியலை?” எனக் கேட்க வந்த நொடி கணபதி அங்கே வர … அதன் பிறகு பாலு எதுவும் பேசவில்லை.

பாலு இதைப் பற்றி கணபதியிடம் எதுவும் சொல்லவில்லை. கணபதியும் பார்வையால் மயூரியிடம் விடைப் பெற்றான். இருவரும் மற்றவரிடமும் முறையாக அல்லாமல் தலையசைப்புடன் விடை பெற்றுக் கிளம்பினார்கள்.

முத்து மீண்டும் எத்தனை மறுத்தும் அவர்களை தன் காரில் அழைத்துச் சென்றார்.

மயூரி தன்னைப் பற்றிய உண்மையை அறிந்தால் நிச்சயமாக பாலு இந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுவான் என்று நினைத்தபடி அடுத்த வேலைகளில் ஈடுபட்டாள். ஆனாலும் மனதோரமாக கணபதி நன்றாகவே அமர்ந்துவிட்டான். அவன் அங்கு இல்லை என்றாலும் அவனின் உருவம் மனதில் சிலையென வரிந்துவிட்டது.

அவளுக்கும் மற்றப் பெண்களைப் போல அன்பான கணவன் குழந்தை என வாழ ஆசைதான். ஆனால் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் கருகி கனவாகிப் போனது.

அவன் நினைவிலிருந்து விடுபட இரவு செய்ய வேண்டிய சமையல் பற்றி சமையல்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சரிங்க மா .. அப்படியே செய்திடுறேன்” என்றார் பணிவுடன்

அப்போது சித்து “மயூரி இது எதுக்கு?” எனச் சின்ன அழுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை எங்கிருந்தோ எடுத்துக் காட்ட

“ஐயோ இதை ஏன்டா இப்ப எடுக்கிற? கை அழுக்கு ஆகிடும் .. குடு இங்க” என அவனைத் திட்டியபடி வாங்க முயல

“டைம் பாஸ் ஆக வேண்டாமா” என நக்கலாகச் சிரித்தபடி கொடுத்தான் அப்போது கைத்தவறி கீழே விழுந்து கண்ணாடி உடைந்தது.

சித்து பதட்டத்துடன் உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுக்க முயன்றான்.

“தொடாத நான் பார்த்துக்கிறேன்” என மயூரி அவன் கையை தரையில் உடைந்த கண்ணாடியைத் தொடா வண்ணம் தடுக்கையில் அவள் கையில் லேசாகக் கண்ணாடி சில் கிழித்து ரத்தம் வந்தது.

பாலு மயூரிப் பற்றிய ரகசியத்தை டிரைவர் முத்துவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணமிட்டான்.



தொடரும் …




































 
  • Like
  • Love
Reactions: Kameswari and ADC

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
8
8
3
Bangalore
Muthu solluvara?? What is the secret 🤔🤔 etho onu indha uncle ku oru marriage panidunga....thambi Prabhu rombo feel panuraru 😕😕 sundari varuvangala?? Thatha oda plan yenavaga irukkum?? Waiting for next update.
 
  • Love
Reactions: MK12

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அப்படி என்ன ரகசியம் மயூரியை பத்தி? 🤔🧐
 
  • Love
Reactions: MK12