• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (6)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

6

சித்து தன்னால் தான் மயூரிக்கு அடிப்பட்டுவிட்டது என்னும் குற்றவுணர்வுடன் “சாரி சாரி ” எனப் பல முறை மன்னிப்பு கோரினான்.

மயூரி “விடுடா சின்ன காயம்தான்” என அவனை ஆஸ்வாசப் படுத்தினாள்.

ஆனால் சித்து மனம் கேளாமல் முதலுதவி பெட்டியைக் கொண்டு வர ஓடினான். எங்கு இருக்கிறது எனத் தெரியாமல் துருவிடம் “அண்ணா மயூரி கையில் அடிப்பட்டிருக்கு .. ப்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்க இருக்கு?”

“அங்க ஹால்ல இருக்கும் கொண்டு வா ..” என்ற துருவ் .. நொடிப் பொழுதில் “இல்ல வேண்டாம் அதெல்லாம் பழசா இருக்கும் நீ பார்மசில வாங்கிட்டு வா.. இதையும் சேர்த்து வாங்கிட்டு வா” சட்டென ஒரு காகிதத்தில் காட்டன் டின்சர் என எழுதி அனுப்பி வைத்தான்.

துருவ், மயூரி இருந்த இடத்திற்குச் சென்றான். அவளை அவளுடைய அறைக்கு நிதானமாக அழைத்துச் சென்று விரலை பரிசோதித்தான். சின்ன காயம் தான்.

துருவ் அற்புதமான சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி உள்ளூர மகிழ்ந்தான். நல்லவேளையாகத் தாத்தா சொத்து பிரிப்பதைத் தள்ளி வைத்தார். இல்லையேல் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக மாற்ற அவகாசம் கிடைத்திருக்காது.

மயூரி தன் விரல் காயத்தினால் ஏற்பட்ட வலியின் காரணமாகக் கண்களை மூடியிருந்தாள்.

“நாளைக்கு ஹாஸ்பிட்டல் போயி ஊசி போட்டுக்கோ இன்பெக்ஷன் ஆகாம இருக்கும்” அக்கறையாய் துருவ் சொல்ல

“அதெல்லாம் தேவை இல்ல” என மயூரி மறுத்தாள்

“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு மயூரி .. எப்ப பார் வேலை செய்திட்டு பாக்கவே சோர்வா இருக்க ” என்றான் துருவ். அவன் குரலில் ஒலித்த ஆதங்கத்தைக் கண்டு நெகிழ்ந்தாள்.

மயூரி “என்னால நிம்மதியா தூங்கவே முடியலை”

“நீ இங்க ரிலாக்சா உட்கார்” என அவளை அமர வைத்து “ரெண்டு செகண்ட்ல தூக்கம் வரும் பார்” என்றான்.

“வாய்ப்பே இல்ல ராஜா. நிறைய வேலை இருக்கு” என எழ முனைந்தவளை மீண்டும் அமர்த்தினான். பின் தன்னிடமிருந்து மெல்லிய சங்கிலி போன்ற ஒன்றினை எடுத்தான். அதன் முனையில் சின்ன வட்டவடிவக் கடிகாரம் கோர்த்திருந்தது. அதை அவள் முன் மெல்ல ஆட்டினான்.

“என்னடா இது?” அதை அதிசயமாய்ப் பார்த்தாள்.

“ பேசாம இதையே பார்” என்றான் சன்னமான குரலில்

“இதைப் பார்த்தா தூக்கம் வருமா?” சிரித்தபடி கேட்டாள்

“பாறேன்” அழுத்தமாக அவன் சொல்ல

அவளும் உற்று நோக்கினாள். அவன் 1.. 2 ..3.. என மிக மெல்லிய குரலில் எண்ணத் தொடங்கினான் 8 .. 9.. 10 என முடிக்கும் போது அவள் பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது.

அவள் கண்கள் திறந்தபடி இருந்தது. ஆனால் தூங்கும் நிலையில் இருந்தாள். அப்படியே செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பினான். அதைக் கவனிக்கும் நிலையில் மயூரி இல்லை.

“மயூரி” அவன் அழைக்க

“ம்ம்?” எனப் பதில் .. குரலிலும் மாற்றம்

“நான் பேசறத கேட்குதா?”

“ம்ம்”

தன் செல்போன் மூலம் “கிக்.. கிக் .. கிக்” என்று வினோதமான சத்தத்தை அவளைக் கேட்க வைத்தான் . நான்கைந்து முறை அந்த சத்தம் மட்டுமே அவள் காதில் விழும்படி செய்தான்.

“சத்தம் கேட்குதா மயூரி?” அவன் கேட்க

“கேட்குது” எந்திரத்தனமாக பதிலளித்தாள்.

“இந்த சத்தம் கேட்கும் போதெல்லாம் .. நீ இந்த மருந்தைத் தாத்தா குடிக்கும் தண்ணில கலந்துக் கொடுக்கணும். யாருக்குமே தெரியக் கூடாது .. சரியா?”

“சரி”

“நான் சொன்னதைத் திரும்ப சொல்லு”

அவளும் இயந்தரதனமான குரலில் அவன் செய்யச் சொன்னதைக் கூறினாள்.

அவள் அறையின் ஓரிடத்தில் மருந்தை வைத்தான். உண்மையில் அவன் எதையும் வைக்கவில்லை. பாவனை மட்டுமே செய்தான். அந்த இடத்தையும் அவளுக்குச் சொன்னான்.

“இப்போ நீ உன் பெட்ல போய் படு” என்றான்

அவள் கட்டளையை நிறைவேற்றினாள்.

“நான் இங்கிருந்து போன பத்தாவது நிமிஷம் நீ தூக்கத்தில் இருந்து எழந்து வெளில வா” என்றான்.

அதற்குள் சித்து தான் வாங்கிய மருந்து பொருட்களை கொண்டு வந்துக் கொடுத்தான். சித்து அறையினுள் நுழையாமல் திலீப் அவனுக்கு சில வேலைகளை சொல்லி அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

துருவ் மயூரி விரலிலிருந்த ரத்தத்தை சுத்தம் செய்து மருந்திட்டான். பின்பு சென்றுவிட்டான்.

அவள் பத்தாவது நிமிடம் கண் விழித்தாள்.

மயூரி உறக்கத்திலிருந்து விழித்ததை போல உணர்ந்தாள். துருவ்ச் செய்த சொன்ன செயல்கள் எதுவும் அவள் நினைவில் இல்லை. ஆனால் அவள் ஆழ்மனதில் அது பதிந்திருந்தது. பாவம் அவளுக்கே அது தெரியாது.



கணபதியும் பாலுவும் முத்துவின் காரில் சென்னையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

காரில் ஏறும்போதே பாலு முன்னிருக்கையில் அமர்ந்து கணபதியை பின்னே அமர வைத்தான்.

கார் கிளம்பிய முதல் ஒரு மணி நேரத்திற்கு அவர்களுக்குள் சாதாரணமாக வைரவன் தாத்தா, இறந்துப்போன பாட்டி, அந்த வீடு எனப் பேச்சு ஓடியது.

அதன் பின்னர் அரசியல் விளையாட்டு என்னும் ரீதியில் சென்றது.

இறுதியாக பாலு தன் மனதை நெருடிய கேள்வியை கேட்டான்.

“மயூரிக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை?”

எப்போதும் ஒரு வீட்டைச் சார்ந்த வேலையாள் மற்றும் கார் ஓட்டுநருக்கு பெரும்பாலும் அந்த வீட்டைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கும். அதனால் தான் பாலு முத்துவை கேட்டான். மேலும் குடும்ப உறுப்பினரிடம் இந்த கேள்வி சங்கடத்தை ஏற்படுத்தும்.

கணபதியும் முத்துவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

முத்து “பாவம் தம்பி அந்தப் பொண்ணு ஏழெட்டு வருஷம் முன்ன கல்யாணம் நிச்சயம் ஆச்சு. கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடும் நடந்தது” எனத் தொடர்ந்தார்.

“கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்ன அந்த மாப்பிள்ளை தன்னோட நண்பர்களோட பார்ட்டிக்கு போயி நல்லா தண்ணி அடிச்சி ஒரே கூத்து, ராத்திரி கார்ல வீடு திரும்பும் போது விபத்து நடந்து ஸ்பாட் அவுட். புள் மப்புல இருந்ததனால் வண்டியோட்ட முடியாம விபத்து ஆகிடுச்சி”

“பாவம் மயூரி பொண்ணு உடைஞ்சிப் போச்சி .. இந்த சம்பவத்துக்கு அப்புறம் எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தாங்க. ஆனா எல்லாரும் பொண்ணு ஜாதகம் சரியில்ல நிராகரிச்சிட்டாங்க .. பிறக்கும் போதே அம்மா அப்பா போயிட்டாங்க .. தாலி ஏறினா புருஷன் என்னாவானு கதைகட்டி விட்டாங்க”

“ஒரு கட்டத்தில் கல்யாணமே வேண்டாம்னு .. மேல படிச்சி .. இன்றைக்கு நல்ல வேலையில் இருக்கு. தாத்தா பாட்டிய கண்ணு கருத்துமா பார்த்துக்கும்”

இதைக் கேட்டதும் பாலுவிற்கு தன் அண்ணனுக்கும் ஏதேனும் ஆபத்து வருமோ? என அச்சம் எழுந்தது.

கணபதி மயூரி நிலை குறித்து மனம் வருந்தினான். அவள் மேல் இனம்புரிய உணர்வு ஏற்பட்டது.

மயூரியின் அழகு படிப்பு அந்தஸ்துக்கு தான் சமமானவன் இல்லை என்பதால் கணபதி தன் உணர்வுகளை இத்தனை நாள் மறைத்து வைத்திருந்தான்.

ஆனால் முத்துச் சொன்னதைக் கேட்டதும் கண்டிப்பாக மயூரி சம்மதித்தாள் அவளைத் திருமணம் முடிப்பது என்னும் முடிவெடுத்தான்.

இரவு வீட்டை அடைந்ததும் சுந்தரி முறைப்போடு தன் மகன்களை வரவேற்றார். இருவரும் குனிந்த தலை நிமிராமல் நல்லா பிள்ளைகளாய் குளித்து உணவு உண்டனர்.

“அண்ணன் தம்பிக்கு சிறப்புப் பூஜை இருக்கு. தயாரா இருங்க” என பாலு மனைவி சூசகமாக இருவருக்கும் சொல்லிவிட்டாள்.

சுந்தரி மகன்களின் முகம் பார்த்தே இருவருக்கும் சரியான உணவு உறக்கம் இல்லையெனத் தெரிந்தது. ஆதலால் மறுநாள் காலை கச்சேரி வைத்து கொள்ளலாம் எனத் தூங்கச் சென்றுவிட்டார்.

முன்தினமே பாலு தன் வாட்சப் மூலம் தாங்கள் தாத்தா வீட்டில் இருப்பதை மனைவிக்குச் சொல்லியிருந்தான். அதோடு அம்மாவிடம் தற்பொழுது சொல்ல வேண்டாம் எனவும் அனுப்பியிருந்தான்.

அந்த நொடியே பதட்டமான தன் மருமகளின் முகத்தைக் கண்ட சுந்தரி நயமாகப் பேசி விஷயத்தை கறந்துவிட்டார்.

அதே போல மறுநாள் காலை சுந்தரி “என்ன இரண்டு பேருக்கும் பலமான வரவேற்பா?” என நக்கலாக ஆரம்பித்தார்.

ஆனால் கணபதி முன்னமே இதை எப்படி எதிர்கொள்வது எனத் தயாராக இருந்தான்.“அதைவிடுமா, அப்பா அருமையா கிரிக்கெட் விளையாடுவாராம். நீயும் அப்பாவும் சொன்னதேயில்லை?” ஆச்சரியமும் குறையுமாய் அவன் கேட்டு, அம்மாவின் மனப்போக்கை மடைமாற்றினான்.

நொடியில் அன்னையின் முகம் மாறுதல் அடைந்தது ”ஆமாடா பிரமாதமா விளையாடுவார்.” என்றவருக்குக் கடந்தகால இனிய நிகழ்வுகள் மனதில் ஊஞ்சலாடியது.

சிவநேசன் இருபது வயது துடிப்பான இளைஞன். இளமையான கட்டுக் கோபான உடல்வாகு. அதற்கேற்ப சிரித்த முகம். அனைவரிடமும் இனிமையாய் பழகும் விதம்.

சிறுவயதிலிருந்து கிரிக்கெட்டின் நுணுக்கங்களை அறிந்து புரிந்து விளையாடுவான். தன்னை போலச் சுற்றியிருந்த ஜமீன் மற்றும்பெரிய இடத்துப் பிள்ளைகளுடன் கிரிக்கெட் விளையாடினான். அனைவரையும் ஒன்றிணைத்து கிரிக்கெட் அணியை உருவாக்கினான்.

அங்கிருந்த ஜமீன்தார்கள் கிரிக்கெட் விளையாடுவது தங்களின் அந்தஸ்து மற்றும் கௌரவமாக நினைத்தனர். காரணம் அங்கு முன்பிருந்த வெள்ளைக்கார துரைகளின் பழக்கம்.

அவர்களைப் போல அருகிலிருந்த ஊர்களிலும் கிரிக்கெட் அணிகள் இருந்தன. மதுரை, மெட்ராஸ் மாகாணம் போன்ற இடங்களுக்கு சென்று சிவநேசன் அணி விளையாடும். அதே போல அவர்களும் மற்ற இடங்களுக்குச் செல்வதுண்டு.

ஒருமுறை மெட்ராஸ் மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட தன் அணியுடன் சென்றான். மூன்று மாதம் அங்கே இருந்து விளையாட வேண்டும். எல்லாரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதால் சமையல் முதல் அனைத்திற்கும் வேலை ஆட்களை உடன் அழைத்துப் போவது வழக்கம்.

அந்த முறை வேலை ஆட்களுடன் சுந்தரி சென்றிருந்தாள். பதினெட்டு வயதுப் பருவ மங்கை. லட்சணமான முகம். அடர்த்தியான கூந்தல். மீண்டும் ஒருமுறை பார்க்கத் துண்டும் அழகு.

சிவநேசன் மனம் சுந்தரியிடம் அடைக்கலம் பெற்றது. உடன் தாய் தந்தை என்னும் கட்டுப்பாடு விசை இல்லை. ஆதலால் தன் காதலைச் சுந்தரியிடம் சொன்னான்.

முதலில் நடுநடுங்கிப் போனாள் பேதை. அவன் ஆடை அலங்காரம் அழகு எல்லாம் எட்டத்திலிருந்து பார்த்து ரசிக்க மட்டுமே தனக்கு உரிமை உள்ளதை நன்கு உணர்ந்திருந்தாள். ஆதலால் அவன் காதலை உடனே ஏற்கவில்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளும் அவன் மேல் காதல் வயப்பட்டாள். இதற்கிடையில் அவன் கிரிக்கெட்டிலும் அபாரமான ரன்களை குவித்து தன் அணிக்குப் பல வெற்றிகளைத் தேடித் தந்தான்.

அதன் காரணமாக அவன் அணி நண்பர்கள் சேர்ந்து அவனுக்குச் சிறப்புப் பரிசை அளித்தனர்.

விளையாட்டு முடிந்து மீண்டும் தங்கள் மாளிகைக்குத் திரும்பினார்கள். யாரும் அறியாமல் தன் காதலியுடன் இன்பமாய் சில நேரங்களைக் கழித்தான்.

அப்போது காந்தவள்ளி பெரிய இடத்தில் சிவநேசனுக்குப் பெண் பார்த்து திருமணம் முடிவு செய்தார். அடுத்த நொடியே தான் சுந்தரியைக் காதலிப்பதாகவும் அவளைத் தவிர வேறொரு பெண்ணை திருமணம் முடிக்க முடியாது என சிவநேசன் சொல்லிவிட்டான்.

வீட்டில் பூகம்பம் வெடித்தது. சொத்தில் பங்கில்லை வீட்டை விட்டு வெளியேற காந்தவள்ளி உத்தரவிட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் காதலியை அழைத்து வந்து கோயிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்கினான்.

சுந்தரி அனைத்தையும் கூறி முடிக்கையில் அவர் கண்கள் குளமாயின.“என்னை காதலிக்காம இருந்திருந்தால் உங்க அப்பா கிரிக்கெட்ல பெரிய இடத்துக்குப் போயிருப்பார்” எனச் சுந்தரி அழுகையுடன் கூற

“இல்லமா அப்பாக்கு கிரிக்கெட் விட உங்களைத்தான் பிடிச்சிருக்கு” எனக் கணபதி தன் அன்னையை அமைதிப்படுத்தினான்.

அங்கு எத்தனை பணமிருந்தும் இன்னும் வேண்டும் வேண்டும் எனக் கழுகைப் போல வட்டமிடும் மனிதர்கள் மத்தியில் ஒரு ரூபாய் கூட வேண்டாமென தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் தங்கள் குடும்பத்தை எண்ணி கணபதி பெருமிதம் கொண்டான். இதுதான் தன் தந்தையின் உண்மையான வெற்றி என்று நினைத்தான்.



தொடரும் ….

















 

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
8
8
3
Bangalore
Ippo ivan ethuku Hypnotise pandran🤔🤔 Bala back adichalum ganapathy Mayuri wedding nadakum👍
Amma va nalla samalichitaru Raja 👍 but Mayuri ena pana poranga? Waiting for next update. Interesting epi 👏👏👏
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
Ippo ivan ethuku Hypnotise pandran🤔🤔 Bala back adichalum ganapathy Mayuri wedding nadakum👍
Amma va nalla samalichitaru Raja 👍 but Mayuri ena pana poranga? Waiting for next update. Interesting epi 👏👏👏
Next episodeil teriyavarum
Thank you so much friend 😍
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
மயூரியை வச்சு என்ன வேலை செய்ய ப்ளான் பண்றாங்க? 🤔

அவளோட கல்யாணம் நின்னதுக்கு காரணம்கூடசொத்துக்காக இவங்க பண்ணின வேலையா இருக்குமோ? 🧐
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
மயூரியை வச்சு என்ன வேலை செய்ய ப்ளான் பண்றாங்க? 🤔

அவளோட கல்யாணம் நின்னதுக்கு காரணம்கூடசொத்துக்காக இவங்க பண்ணின வேலையா இருக்குமோ? 🧐
Thank you so much sis 🙏