• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (8)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

8

சிவநேசன் சிலசமயங்களில் சுந்தரியை “212 லவ்லி கேர்ள்” என்றேச் செல்லமாக அழைப்பார். அப்பொழுதெல்லாம் சுந்தரிக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. ஏதோ தன்னை ஆசையாக அழைக்கிறார் என்று மகிழ்ந்தார்.

பரிசாகக் கிடைத்த இந்த நிலத்தைப் பற்றி சிவநேசனுக்கு நினைவே இல்லை. சிவநேசன் சுந்தரியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பின் வைரவன் தாத்தா அந்த நிலத்தைக் கொடுத்துவிடப் பலமுறை முயன்றார். ஆனால் வள்ளி பாட்டி அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் அந்த பத்திரத்தைத் தாத்தா புகைப்படத்தில் மறைத்து வைத்தார்.

“உங்ககிட்ட உன் அப்பாவுடைய சொத்தை கொடுத்தது நிம்மதியா இருக்கு” என்றார் தாத்தா.“ஆனா இன்னும் ஒரு குறைதான் மனசை ” என முடிக்காமல் விழித்தார்

“என்ன தாத்தா?” கணபதி அன்பாகக் கேட்டான்

“எனக்கு அப்புறம் மயூரிக்கு ஆதரவா யாரும் இல்ல” எனச் சொல்லும் போதே முகத்தில் வேதனை.

“என் மகன் கணபதி மயூரியை ஆயுள் முழுக்க பார்த்துப்பான். மயூரிக்கு விருப்பம் இருந்தால்” எனச் சுந்தரி பொருள் புதைந்த பார்வையை மயூரி மேல் வீச

“ கல்யாண சீதனமா தாத்தா கூடவே வருவார். உங்களுக்குச் சம்மதமா? எனக்கு என் அம்மா அப்பா எப்படி இருப்பாங்கனு கூடத் தெரியாது. எல்லாமே எனக்குத் தாத்தா பாட்டி தான். அதனால நான் தாத்தாவை தனியாவிட முடியாது” மயூரி உறுதியாகக் கூறிவிட்டாள்.

எதுவும் சிந்திக்காமல் அடுத்த நொடி சுந்தரி “என் மாமனார் எங்க கூட இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லை” சொல்லிவிட்டார்.

ஆனால் தாத்தா “ இந்த மாளிகை மூணு தலைமுறையை பார்த்தது. என் உயிரும் இங்கதான் போகணும். என்னால இந்த இடத்தையும் மண்ணையும் விட்டு வர முடியாது. இங்கதான் இத்தனை வேலையாட்கள் இருக்காங்க அப்புறம் என்ன கவலை மயூரி?” என ஆதங்கத்துடன்க் கூறினார். எங்கே மயூரி சம்மதிக்காமல் போய்விடுவாளோ என்னும் அச்சம் காரணமாக.

கணபதி ஒரு உபாயத்தைக் கூற அனைவருக்கும் அது திருப்தி அளிப்பதாய் இருந்தது.

வீட்டில் துக்க நிகழ்வு நடந்துள்ளதால் ஆறு மாதத்துக்குப் பின்னர் சில பரிகாரங்கள் செய்தபின் திருமணம் நடத்தலாம் என முடிவுச் செய்தனர்.



இந்த உரையாடலுக்கு சில நாட்கள் முன் … திலப் மற்றும் துருவ்த் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.

திலீப் கெமிகல் இன்ஜினியர். துருவ் மனநல மருத்துவர். இருவரும் சமுதாயத்தில் பொறுப்பான வேலையில் உள்ளவர்கள்.

இருவருக்கும் பணத்தின் மேல் ஆசை அதிகம். மற்றவரைக் காட்டிலும் பணத்தின் மேல் அதீத ஆசை என்றே கூறலாம்.

மனிதனுள் இருக்கும் மனம் எந்த நிறம்? என்ன அளவு? உடலில் எங்கு உள்ளது?

காதல், காமம், நேசம், பாசம், அன்பு என மனிதன் பொழியும் நல்ல உணர்வுகள். அதுமட்டுமா கோபம் குரோதம் பழிவாங்கல் என மனிதன் உமிழும் தீய உணர்வுகள். இரண்டு நிலைப்பாடுகளும் ஒரே மனதிலிருந்து தான் வெளிப்படுகிறது. மனதைப் பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ச்சிகள் மேற் கொண்டு உள்ளனர்.

ஆனால் உண்மையில் மனம் ஒரு குழந்தையைப் போன்றது. எதைச் சொன்னாலும் அதை எளிதாக நம்பிவிடும். ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்தால் “உலகில் நான் மட்டுமா தோல்வி அடைந்தேன்? இந்த முறை மட்டும் தானே?“ என தனக்காக வாதாடும் பின்பு அது அப்படியே பழகிவிடும்.

சாராயம் குடிப்பது, புகைப் பிடிப்பது, போதை வஸ்துக்களுக்கு அடிமை ஆவது போன்ற தீய பழக்கங்கள் அனைத்தும் இப்படிதான் தொடங்குகிறது. பின்பு அந்த பழக்கத்தை விட முடியாது ஒரு சூழ்நிலை உருவாகிறது.

இதையே “உன்னால் நிச்சயம் வெல்ல முடியும் .. தீய பழக்கத்திலிருந்து வெளிவர முடியும். அவை இல்லாமல் உன்னால் இருக்க முடியும்” என மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினால் .. நிச்சயம் அதற்கான நல்வழிக் கிடைக்கும்.

இதைத்தான் நல்லதையே எப்பொழுதும் பேச வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அதுதான் ஆழ்மனத்தின் சக்தி. நோயாகவும் நோய்க்கு மருந்தாகவும் செயல்படுகிறது.

இந்த மனதைத் தான் திலீப் மற்றும் துருவப் பயன்படுத்த எண்ணினர்.

தாத்தாவின் அனைத்து சொத்தையும் தாங்கள் அடைந்துவிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இருவரின் சிற்றப்பா பார்த்திபனுக்கு இந்த சொத்தில் அத்தனை பிடித்தம் இல்லை.

அதை இருவரும் தெரிந்து கொண்டனர். ஆனால் அவருக்குப் பங்கு போகாமலிருந்தால் சந்தேகம் அல்லது பிரச்சனை எழக் கூடும். ஆதலால் அவருக்குச் சொற்பமான பங்கை அளிக்கலாம் என்பது திட்டம்.

கைக்கு எட்டும் தூரத்தில் சொத்துகள் இருந்தன. மூன்றாகப் பிரிக்கப்படும் என்றெல்லாம் கனவு காண்கையில் சிவநேசனின் மகன் கணபதி வந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது. அது மட்டும் அல்லாமல் தாத்தா உடனே அவர் பக்கம் சாய்ந்துவிட்டது இன்னும் எரிச்சலூட்டியது.

இந்த நிலைமையில் சொத்திற்காக கோர்ட் போலீஸ் எனச் சென்றால் பல வருடம் காத்திருக்க வேண்டும். தங்கள் பக்கம் தீர்ப்பாகும் என உறுதியாகச் சொல்லவும் முடியாது. அது மட்டும் அல்லாது இதற்காகப் பல லட்சங்கள் செவழிக்க வேண்டும்.

இருவரும் முதலில் குழம்பித்தான் போயினர். தாத்தாவே மனமுவந்து அனைவர் முன்னும் சொத்தை கொடுக்க வேண்டும். யாருக்கும் தங்கள் மேல் எந்த சந்தேகமும் வரக் கூடாது. அது எப்படி?

தாத்தாவை மிரட்டி உருட்டி வாங்கினால் அனைவர் முன்னும் தங்கள் முகத்திரை கிழிந்துவிடும். அப்படியும் ஒரு முறை தன்னை மறந்து திலீப் கணபதியிடம் சண்டை போட்டான்.

அன்றே துருவ் “ அறிவு இருக்கா உனக்கு? ரகசியமா சொத்தை வாங்பணும்னு பிளான் பண்ணா எல்லார் முன்னாடியும் சண்டை போட்டுடு வர” திலீப்பை கடிந்து கொண்டான்.

அதன் பிறகு துருவ் தன் திட்டத்தின் பகுதியாக ஒரு நொடி விடாமல் மயூரியை கண்காணித்தான். அவள் எப்போது உறங்குவது? விழிப்பது? உண்பது?. பாட்டி இறந்த காரணத்தால் அவள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள். சில சமயங்களில் ஆன்லைன் வகுப்பு எடுத்தாள். அது எந்த நேரம் என அனைத்தையும் கவனித்தான். அதோடு மயூரி தாத்தாவுடன் செலவிடும் நேரம். அதோடு தாத்தாவையும் ஊன்று கவனித்தான்.

வீட்டின் வேலையாட்கள் எப்போது எங்கு இருக்கிறார்கள்? தன் தாய் தந்தை மற்றும் சிற்றப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா அனைவரும் அதிகமாகப் புழங்கும் இடம் எது? என ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனத்தில் கொண்டான்.

இருவரும் துருவ் அறையில்தான் எப்போதும் திட்டம் தீட்டுவது வழக்கம். மாளிகைக்கு சற்றே பின்னால் அமைதியான இடம் அது.

அங்கு இருந்த திலீபால் அமைதியாய் இருக்க முடியவில்லை “தாத்தா உனக்கு உன் பாகம் கிடைக்கும்னு அந்த அனாதைபையன் கணபதிகிட்ட சொல்லிவிட்டு இருக்கார்” என்றான் ஆற்றாமையுடன்.

“சொன்னார் … ஆனா கொடுக்கலை இல்லையா?” என துருவ் ஒரு பென்சிலை தன் இரண்டு விரல்களுக்கு நடுவே வைத்து ஆட்டியபடிக் கேட்டான்.

“கண்டிப்பா அவர் கொடுத்துடுவார்” எனச் சோர்வாக திலீப் பதில் கூற

“எல்லா சொத்தும் நம்ம கைக்கு வரும்னு நம்புடா” அகலப் புன்னகைத்தபடி கூறினான் துருவ்

அப்போது தான் துருவை நன்றாகக் கவனித்தான் திலீப். துருவ்ச் சுழல் நாற்காலியில் சாய்ந்து தளர்வாக அமர்ந்திருந்தான். பென்சிலை விரல் இடுக்கில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கவலையோ பதட்டமோ இல்லை.

“என்னடா ரிலாக்சா சினிமா பாக்கற மாதிரி உட்கார்ந்திருக்க .. உனக்குச் சொத்து வேண்டாமா?” கடுப்புடன் திலீப் வினவ

“கண்டிப்பா சொத்து வேணும் .. நாம அதையே நினைக்கணும் நம்ம எண்ண அலைகள் …”

“நிறுத்து நிறுத்து .. நினைக்கிறது காயப்போடறது எல்லாம் எனக்கு வேண்டாம். சொத்து கைக்கு வர என்ன வழி?”

“அந்த பீரோல எல்லா சொத்துக்கான பத்திரமும் நகையும் இருக்கு இல்லையா?“

“ஆமா நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே”

“அதை அப்படியே தாத்தா உன் கையில் கொடுப்பார் .. கவலைப்படாத”

“கனவிலா?” எரிச்சலாகக் கேள்வி எழுந்தது.

பலமாகச் சிரித்த துருவ் “இல்ல உண்மையா…”

“விளையாடாத துருவ் .. ”பொறுமையிழந்து வெளியே செல்ல எத்தனித்தான் திலீப்

“மயூரிய ஹிப்னடிஸ் செய்யப் போறேன்” என துருவ் ஆரம்பிக்க

“அவகிட்ட பத்து பைசா இல்ல” தவற்றை கண்டுபிடித்த மெத்தனம் குரலில்

“பொறுமையா கேளு … மயூரி கல்யாணம் நின்னு போன சமயத்துல அவ மென்டலி டிஸ்டப்ர்டா இருந்தா .. நான் தான் அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அவ மென்டல் வேவ்லென்த் என்ன? எப்படி எனக்குச் சாதகமா டியூன் பண்ணனும்? எல்லாம் எனக்குத் தெரியும். அவளை ஹிப்னடிஸ் செய்யப் போறேன்.”

“மயூரிய பயன்படுத்தி தாத்தா தானா சொத்தை நமக்குத் தரும்படி செய்ய வைக்கணும். அதுக்கு உன்னோட உதவியும் வேணும். எனக்கு எல்.எஸ்.டி. அதோட கெடாமைன் இந்த ரெண்டு கெமிக்கல் வேணும் ” எனக் கூறத் தொடங்கினான்.

“இந்த கெமிகல் எதுக்கு?”திலீப் குழப்பத்துடன் கேட்க

“என்ன கெமிகல் இன்ஜினியரிங் படிச்ச நீ? .. இந்த ரெண்டு கெமிக்கல் மனுஷனுக்குள்ள போனா அவனுக்கு ஹேலோசினேஷன் ஏற்படும்”

“ஹேலோசினேஷனா?”

“ஆமாம். ஹேலோசினேஷன் அதாவது இல்லாத ஒன்று இருப்பது போல மாயத்தோற்றம் ஏற்படும். ஒருவருக்குக் கற்பனையான அனுபவங்களைக் கொடுக்கும். இதுல பலவகை இருக்கு பார்ப்பது கேட்பது நுகர்வது சுவைப்பது.

ஹிப்னோபாம்பிக் இது உறக்கத்திலிருந்து எழும்போது ஏற்படும்.

ஹிப்னாகோஜிக் இது உறங்கும் போது ஏற்படும்.

நாம தாத்தாக்கு ஹிப்னோபாம்பிக் அதாவது உறக்கத்திலிருந்து எழும்போது ஏற்படும் வகையைத் தான் செயல்படுத்தப் போறோம். நடுராத்திரியில் யாருக்கும் தெரியாம செய்யணும்.

பாட்டி இறந்து சில நாள்தான் ஆகியிருக்கு. இது தாத்துக்குள்ள மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால கண்டிப்பா இந்த கெமிக்கல் இன்னும் அவர் நிலையை மோசமாக்கும்.

“இந்த கெமிக்கல்னால தாத்தாக்கு எதாவது ஆபத்து?” அச்சம் மேலிட திலீப் கேட்டான்.

“இல்ல எதுவும் ஆகாது. அவர் வயசுக்கு குறைந்தளவு டோஸ் போதும். இதோட விடமின் சேர்த்து கொடுக்கப் போறோம். எல்.எஸ்.டி 2 பங்கு விட்டமின் 1 கெடாமைன் 2 அதாவது 212 ரேஷியோ. இதைச் சொல்லி மாத்திரையா கெமிஸ்ட் கிட்ட வாங்கு” என துருவ்த் திட்டத்தை விவரித்தான்.

எல்லையற்ற மகிழ்ச்சியில் திலீப் மண்டையை எல்லா பக்கமும் உருட்டினான்.

“என்கிட்ட இருக்கிற ஏஐ ஏப் மூலமா பாட்டி குரலைக் கொண்டு வர முடியும் .. பாட்டி அவங்களே சுயமா தாத்தா முன்ன வந்து சொத்தை நமக்கு கொடுனு சொல்ல வைக்கணும்”

“ அது சரி இதுக்கு மயூரி எதுக்கு நாம அவ இல்லாம நேரடியா தாத்தா வெச்சி செய்யலாமே” திலீப் கேட்க

“நம்ம திட்டத்தில் மயூரி சைட் ரோல், தாத்தா தான் முக்கியம். அவரை முழுக்க முழுக்க கவனிக்கறது மயூரி. அதாவது மாத்திரை மயூரி வழியா தாத்தாக்கு போகணும். நீயோ நானோ நேரா தாத்தா ரூம்க்கு போனா என்ன எதுக்குனு யாராவது கேட்பாங்க .. இல்ல ரெண்டு வேலை செய்றவங்களாவது வருவாங்க. தேவை இல்லாத சந்தேகம் ஏற்படும். ஆனா மயூரி போனா யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க”

“தாத்தாக்கு தனக்கு நடப்பது எல்லாமே தெரியணும் .. ஆனா மயூரிக்கு தனக்கு நடப்பது எதுவுமே தெரியாக் கூடாது … இதுல நாம இன்வால்வு ஆகி இருக்கோம்னு யாருக்குமே தெரியக் கூடாது”

அதைக் கேட்ட திலீப் “உனக்கு கெமிக்கல் மாத்திரை கொண்டு வந்து தர வேண்டியது என் பொறுப்பு” தீவிர நம்பிக்கையுடன் உறுதி அளித்தான்.

“திருச்சில டிரை பண்ணலாம் இல்லைனா சென்னைல இருந்து வரவைக்கிறேன். எனக்கு ஆளுங்க இருக்காங்க” என திலீப் சொல்ல

உடனே இருவரும் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை ஓட்டி அதற்குத் தேவையான பொருட்கள் சேகரிக்கத் தொடங்கினர்.

தாத்தா சொத்து பிரிப்பதைத் தள்ளி வைத்தார். அதனால் நிதானமாகத் திட்டத்தைச் செயல்படுத்தினர்.

திருச்சியில் கிட்டவில்லை. சென்னையில் இருப்பது தன் நண்பன் மூலம் திலீப். பணம் கொடுத்தவுடன் அத்தனையும் அற்புதமாய் தயாரானது.



தொடரும் …


















 
  • Like
  • Love
Reactions: Kameswari and ADC

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
8
8
3
Bangalore
Omg Rendu perum periya kiladigal dhan 😡😡 but konjame konjam thatha uyir mele akkarai irukko🤔🤔 dangerous fellows rendum nalla designation la irundum ippadi irukangale... Semma interesting update ma'am 👏 👏 👏 idhai ellam matravanga eppadi therinjipanga.

Waiting for next update.thank you.
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
Omg Rendu perum periya kiladigal dhan 😡😡 but konjame konjam thatha uyir mele akkarai irukko🤔🤔 dangerous fellows rendum nalla designation la irundum ippadi irukangale... Semma interesting update ma'am 👏 👏 👏 idhai ellam matravanga eppadi therinjipanga.

Waiting for next update.thank you.
Athaney epdila seithu parunga .. next enna nadakuthu parpom 😍😍
Thank you so much sis ❤️ 🙏
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சொத்துக்காக எவ்வளவு கேவலமா நடந்துக்கிறாங்க? 😠

எல்லாருக்கும் முன்னாடி இவங்க பண்ணின தப்பு தெரிய வருமா? 🧐
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
சொத்துக்காக எவ்வளவு கேவலமா நடந்துக்கிறாங்க? 😠

எல்லாருக்கும் முன்னாடி இவங்க பண்ணின தப்பு தெரிய வருமா? 🧐
Aama
Thanks a lot sis