22.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
வீட்டிற்கு வந்த வாகி ஒரு நிலையில் இல்லை எங்கே தவறினோம். எப்படி இதை கவனிக்காமல் விட்டோம் என்று குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே இருக்க…
வாகி என்று வந்தான் பரத்..
வா பரத் …
என்ன யோசனை வாகி..
ஒன்னு இல்ல.
பரத், “உனக்கு ஒரு விஷயம் கொண்டு வந்து இருக்கேன் ..
என்ன விஷயம் பரத்..
அம்மா அங்க இருந்து கிளம்பி வந்து இருக்காங்க என்று சொல்ல..
வாட் இப்ப தான் அவங்களுக்கு ஃப்ளைட் அரேஞ்ச் பண்ணேன்..
அம்மா கிளம்பல வாகி அம்மா இப்ப என்று அவளை நிமிர்ந்து பார்க்க..எங்க இருக்காங்க என்று தடதடப்புடன் கேட்க..
ஹாஸ்பிடல் ல …
பொத்தென்று அமர்ந்தவள் அப்ப நான் தான் என்று சொல்ல முடியாமல் தவிக்க…
வாகி என்று வேந்தன் ரவி வர…
அழ கூட முடியாமல் நெஞ்சில் பாரமேற அமைதியாக அமர்ந்து இருக்க…
அம்மு என்று ரவி அருகில் அமர்ந்தவன் அவள் கையை பிடிக்க ரவியின் தோள் சாய்ந்தவள்… அப்ப அம்மாக்கு அவரு வேணுமா ரவிண்ணா எங்களை எங்களை என்று தேம்ப..
அம்மு அம்மா எப்ப உன்கிட்டே சொன்னாங்க அவர் வேணும் ன்னு? பார்க்க போய் இருக்காங்க அவ்வளவு தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு எமோஷன் உனக்கு..
இல்ல நான் தான் தப்பா என்று வாகி பேச வர..
வேந்தன், “ அம்மு அம்மா அவரை தாண்டி வேற ஒருத்தரை நினைக்க மாட்டாங்க அதேநேரம் பழைய படி அவரோட போய் இருக்கவும் மாட்டாங்க ஆனா அவர் மேல் அவங்களுக்கு அன்பு இருக்கு அதான் அவருக்கு முடியலன்னு பார்க்க போய் இருக்காங்க நீ ஏன் ஏதேதோ கற்பனை பண்ணிட்டு என்று சொல்ல…
இல்ல வேந்தன் அவங்க அவரை போய் பார்க்க இருக்கிறாங்க அப்படின்னா அவரு எந்த விதத்திலும் கஷ்டப்படுறது அவங்களுக்கு பிடிக்கல அதனால் தானே இந்த இருபது வருஷமும் தள்ளியே இருந்து அவரை காப்பாற்றி இருக்காங்க என்று ஆவேசமாக கேட்க..
ரவி ஆயாசமாக பார்த்தான்..இப்ப எதுக்கு இவ்வளவு கோவம் உனக்கு என்று ரவி கேட்க..
அப்ப நான் அனுபவிச்சது ப்ச் அதைவிட என் அம்மா அனுபவிச்ச கஷ்டம் அவங்க மனநிம்மதி இன்னும் இன்னும் இதெல்லாம் இல்லன்னு ஆகிடுமா?
இதுல அவரோட தப்பு என்ன இருக்கு அம்மு என்று ரவி கேட்க..
ஏன் இல்ல… ஒத்துவராத திருமணம் அதுவும் அவரோட நிச்சயத்தன்னைக்கு சம்பந்தமே இல்லாத எங்க அம்மாவை அத்தனை பேர் முன்னாடி அவளைத்தான் கட்டிப்பேன்னு சொன்னவரு அவங்களோட நல்லது கெட்டது அவங்களுக்கு எங்க பிரச்சினை வரும் ன்னு அத்தனையும் பார்க்கனும் இல்லையா…?
உங்க அம்மா சாதாரண ஆள் இல்ல கண்டிப்பா அவங்களை அவங்களால் நிலைபடுத்திக்க முடியும் ன்னு அவர்களுக்கே தெரியும் அப்ப அவர்களுக்குள்ள எதையும் டிஸ்கஸ் பண்ணாம இருந்து இருப்பாங்களா..?
எதுவாக இருந்தாலும் அவரோட மனைவி தானே அப்ப அவங்களை பாதுகாக்குறது அவரோட கடமை தானே…
உண்மை தான் இல்லன்னு சொல்லல ஆனா இதை அவங்க மூலமாவே தெரிஞ்சுக்க அம்மு இப்படி நீயே மனசை போட்டுகஷ்டப்படுத்திக்காத… அம்மாக்கு உனக்கு பிறகு தான் எல்லாம் அது உனக்கே தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ரிஷி வாகியை அழைத்து இருந்தார்..
ம்மா…
வாகி கொஞ்சம் ஹாஸ்பிடல் வா உன் உதவி தேவைப்படுது என்று சொல்ல..
என்ன விஷயம் ம்மா…
வா வாகி என்று சொல்ல கிளம்பிவிட்டாள் வாகி…
எந்த ஹாஸ்பிடல் என்று ரிஷியும் சொல்லவில்லை எங்கே வரவேண்டும் என்று வாகியும் கேட்கவில்லை இதுவே சொல்லியது அவர்களின் புரிதலை மற்ற மூவரும் வாகியை பார்த்து புன்னகைத்து விட்டு வண்டியை எடுக்க அடுத்த பத்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் உள்ளே நுழைய..
என்ன மா என்று வர்மனை முறைத்து கொண்டு கேட்க..
உன்னோட கடமையை நீ முடிச்சு தரனும் ன்னு நினைக்கிறேன் அவ்வளவு தான் வேற எதுவும் இல்ல..
ம்மா..
ஆமா வாகி நமக்கு ஒரு உதவியா இருந்தவங்க செஞ்ச அந்த செய்நன்றி மறக்க கூடாது இல்லையா?
கண்டிப்பா..
அப்ப உனக்கு உயிர் கொடுத்த அவருக்கு இப்ப ஆப்ரேஷன் பண்ணனும் ன்னு சொல்லுறாங்க அதுக்கு ரத்தம் தேவை அதான் உன்னையே அழைச்சேன் இப்ப நாம செய்நன்றி செய்யனும் முடிஞ்சதும் கிளம்பிடலாம் என்று சொல்ல.. அத்த என்று வர்மன் வர..
சொல்லு சாகித்யா…
என்ன பேச்சு அத்த இது…
உண்மையை தான் சொல்லுறேன் சாகித்யா எங்களுக்குள்ள இருக்க உறவு இது தானே என்று சொன்னதும் தாயை இறுக்கமாக அணைத்து கொண்டாள் வாகி…சாரி மா…
வாகி உன்னோட ஒவ்வொரு விஷயமும் அம்மாக்கு அத்துப்படி டா உன் எந்த முடிவுக்கும் அம்மா தடையாக இருக்க மாட்டேன் அதேநேரம் எந்த இடத்திலும் என் பொண்ணு தப்பான விஷயம் செய்ய மாட்டான்னு எனக்கு தெரியும்.
கண்டிப்பா அம்மா…
அப்ப இந்த முறை இந்த உதவியை செய்வ தானே..
நிச்சயமா என்றவள் பகலவனுக்கு தேவையான இரத்தத்தை தந்துவிட்டு வர பகலவன் குடும்பம் மொத்தமும் அங்கே நிற்க…
தாரா…நீங்க எல்லாம் இங்க என்ன பண்ணுறீங்க என்று ஆவேசமாக கேட்க…
இதென்ன உன் ஹாஸ்பிடலா என்று கேட்ட வாகி திரும்பி பார்க்க அவளின் கார்ட்ஸ் மற்றவர்களை தள்ளி நிறுத்த..
சற்று நேரத்தில் ராமைய்யா வந்து சேர்ந்தார்…வந்தவரின் கண்கள் மொத்தமும் ரிஷி மேல் இருக்க..ரிஷி வர்மனிடம் ஏதோ பேசியபடி இருந்தார்.
சாகி இதுக்கு மேல நான் இங்க இருக்க முடியாது நான் கிளம்புறேன் இனி உங்க குடும்பம் இருக்காங்க என்றவள்,வாகி போகலாம் என்றதும் அவளை சுற்றி ஆட்கள் பாதுகாப்பை அழைத்து கொண்டு செல்ல ரவி வர்மனை பார்த்து தலையசைத்து விட்டு நகர்ந்தான்.
வேந்தன், “என்னடா சொல்லுறான் என்று ரவியை கேட்க..
ஏன் உனக்கு குளுகுளுன்னு இருக்கா..
டேய் நான் எப்ப அப்படி சொன்னேன்.பின்ன அவனை வாரிடுறது உனக்கு தான் சந்தோஷமா ச்சே…
டேய் என்று வேந்தன் பல்லை கடிக்க.. போதும் டா அவன் வாகியை ரொம்ப விரும்புறான் எந்த சூழ்நிலையிலும் அவளை இழக்க தயாரா இல்ல ஆனா வாகி என்ன முடிவு பண்ண போறான்னு தெரியல…
அவளுக்கு அவன் வேண்டாம் ரவி அவ எதையும் மறக்கல …
ரவி, “அதே போல் அவனையும் அவ மறக்கல வேந்தா…அவ வேற யாரையும் நினைக்கவும் மாட்டா உனக்கு தெரியாதது இல்ல இரண்டு பேரும் நேரடியா காதலிக்கிறேன் ன்னு சொன்னது இல்ல ஆனா ஒருத்தரை ஒருத்தர் நல்ல புரிஞ்சு வச்சு இருக்காங்க..
ம்ம்ம் என்றான் வேந்தன்.
மதிய வேளை நெருங்கி இருக்க நேராக அபார்ட்மெண்ட் வந்துவிட..ரிஷி அப்போதே கிளம்புவதாக சொல்ல…
இல்லம்மா இங்க இருங்க இரண்டு நாளைக்கு அப்புறம் எல்லாரும் கிளம்பிடலாம் என்று வாகி சொல்லிவிட்டு அறைக்குள் சென்றவள் விதுரிஷியை அழைத்து வரச் சொல்லி இருந்தாள்..
சார் மேம் உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க என்று ஒரு பாதுகாவலர் சொல்ல..,நான் அக்கா கிட்ட நேசிக்கிறேன் என்றவன் வாகியை அழைக்க.. ஏன் டா கிளம்ப வேண்டியது தானே…
அக்கா அப்பாக்கு ஆப்ரேஷன் முடியவும் வரேனே…
விது….
ப்ளீஸ் க்கா..
சரி பத்திரம் அங்க இருக்க யாருக்கும் வரைமுறையே தெரியாது எதாவது பேசிட்டே இருப்பாங்க ..
சரிக்கா என்றவன் சிரிக்க..
சிரிக்காத டா அதுக்கும் கண் காதுன்னு பேசுவாங்க..நான் அத்தான் கூட தான் இருக்கேன். விது போதும் அப்படி கூப்பிடாத… போக்கா அவர் எனக்கு ஒரே ஒரு அத்தான் என்றவன் போனை கட் செய்ய வர்மன் தான் அவனை இமைக்க மறந்து பார்க்க..
என்ன அத்தான்…
இப்படி ஒருத்தன் இருக்கிறதே எனக்கு தெரியாது டா…
பரவாயில்ல அத்தான் எல்லாத்துக்கும் நேரம் வரனும் இல்ல
நல்லா பேசுறடா அத்த மாதிரி. நான் அத்தையே தான் அத்தான்.இருவரும் சிரித்து கொள்ள…
பகலவன் ஆப்ரேஷன் நல்லவிதமாக முடிந்து இருந்தது.ஒரு ஒன்வீக் இங்கேயே இருக்கட்டும் அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் என்று சொல்லவும் இருந்து பார்க்க யாரும் இல்லை மாலினி தாரா அனைவரும் கிளம்பிவிட..,மீண்டும் வாகி முன் நின்றான் விதுரிஷி.
என்னடா…
அக்கா அங்க அப்பா தனியா..
சரி..
அக்கா..
என்னடா என்றாள் சலிப்பாக அப்பாவ பார்த்துக்க…போதும் விது என்றவள் முறைக்க போ நான் அம்மாவை கேட்கிறேன் என்று செல்ல வேகமாக எழுந்து வந்த வாகி அறை வாசலிலேயே நின்று விட..விது ரிஷியிடம் பகலவனை பார்த்து கொள்ள யாரும் இல்லை என்று சொல்ல..
அவர் பொண்ணு தாராவை பார்க்க சொல்லு விது என்றாள் ரிஷி
அம்மா…
விது அம்மா முடிவுல மாற்றம் இல்ல என்றவர் வாகி என்று அழைக்க அம்மா என்று வந்து நின்றவளை பார்த்து நான் கிளம்பனும் ரெடி பண்ணு டா என்றதும் அடுத்த இரண்டு மணிநேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பி இருந்தாள் ரிஷி பாலாம்பிகை..
பகலவன் பத்து நாட்கள் நர்ஸ் உதவியுடன் தேறி வர..வர்மனோ ஸ்கூல் ஹாஸ்பிடல் என்று அலைந்து திரிந்து பிரச்சனைகளை எதிர் கொண்டு இருந்தான்.
தினமும் ஒரு பேப்பரில் ஒவ்வொரு செய்தி அதுவும் பள்ளி நிர்வாகத்தை தூள் தூளாக்கி கொண்டு இருந்தனர்.. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பூங்கொடியை புங்க கொடி என்று படிப்பதை வீடியோவாக பதிவிட்டு இப்படியான கல்வி தரம் எங்கே செல்லும் என்று தமிழ் ஆர்வலர்கள் கேட்க…
“காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே” என்ற பாடல் வரியை
“காலம் பறக்கும் முன் பறந்தது தமிழே” என்று எழுதி இருந்த பக்கத்தை மற்றொரு பெற்றோர் போட…தினமும் திண்டாட்டமாகத் தான் இருந்தது கல்வித்துறைக்கு..
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி என்று பாடி மகிழ்ந்த ஒவ்வொரு தருணமும் சிதிலமடைந்து போய் இருந்தது. இதெல்லாம் பார்த்து விட்டு அவரவர் தாய்மொழி பள்ளி கல்வியில் கட்டாயம் என்று அரசு ஆணை பிறப்பித்து இருந்தது .அதுவும் மத்தியில் ஆளும் கட்சியின் சிலபல விருப்பு வெறுப்பு அனைத்தையும் கடந்து வாகி ஆணை பிறப்பித்து இருந்தாள்.
அடுத்த கட்டமாக தனியார் பள்ளிகளில் அளவை நிர்ணயம் செய்தவள் தரமான பள்ளிக்கு மட்டுமே அடுத்த அடுத்த வருடங்களுக்கு அங்கிகாரம் என்றும் அதுவும் தன் நேரடி பார்வையில் ஒரு குழுவை அமைத்து செயல்படவைத்து இருந்தாள் நிமாவாகி…
தொடரும்