• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22,23,24

Bindu sarah

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
65
14
8
Dharmapuri
அனைவரும் பழையதை நினைத்துக்கொண்டு, விடியக்காலையில் தூங்கத் தொடங்கினார்கள்.

ரித்திகா தூங்கி எழும்போது ஆதி கைவளைவில் நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தாள்.

"நம்ம எப்போ இங்க வந்தோம்?, தாரா எங்க? காலைல என்னதான் தேடுவா" என்று யோசனையோடு கண்களை சுழற்றி தேடினாள்... ஆதிக்கு பக்கத்தில், அவன் மீது ஒரு காலை தூக்கி போட்டுக்கொண்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தாள் தாரா.

அவனது கையை வேகமாக தள்ளிவிட்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு ஹால்ல போய் உட்கார்ந்தாள் ரித்திகா கோவமா.

அவள் கையை தட்டிவிட்ட வேகத்துக்கு ஆதி முழித்தான், அவள் செல்வதை பார்த்துவிட்டு "காலைலயே ஆரம்மிச்சிட்டாளா!!!" ரித்திகாவை தேடி போனான்.

"என்னாச்சி குண்டு" என்று தூக்க கலக்கத்தில், ரித்திகாவின் அருகில் நின்றான். சொல்லி முடிக்கும் முன்பு, அவளது உடலை ஒருமுறை நன்றாக பாரு என்று பார்வையால் ஆதியிடம் கூறினாள்.

ஆதிக்கு தெரியும் அவனது டெட்டிபியர் பார்பி ஆக மாறி, முழுசாக நிறைய வருடங்கள் ஆகின்றது என்று. குற்ற உணர்வில் சிரம் தாழ்த்தி தவித்தவாறு அமர்ந்திருந்தான். ஆதிக்கு என்ன செய்யனும்னு ஒன்னும் தெரில.

கோவத்தில் வந்த வார்த்தைதான் "குண்டா இருக்க உன்ன யாரும் கல்யாணம் செஞ்சிக்க மாட்டாங்கன்னு இப்படி செஞ்சயா" என்றுசொன்னதும்,மட்டும் இல்லாமல், செய்வது அனைத்தும் அவன் செய்துவிட்டு, மொத்த பழியும் அவள் மீது போட்டான் அன்று. அந்த வார்த்தை மின்னல் கீற்று போல் அடிக்கடி ரித்திகாவை வதைக்கத்தான் செய்தது.

அவன் பேசியதை மனதில் போட்டுக்கொண்டு, குழந்தையின் கன்னத்தில் விழும் குழியை வருடி கொண்டு இருந்தாள் ரித்திகா. அவளுக்கு அருகில் இருந்து பார்த்து கொண்டு நின்றிருந்தான் ஆதி.

ஆதி அவன் கன்னத்தை தொட்டு பார்த்துக்கொண்டன், அவனது மகள், அவனை உரித்து வைத்து பிறந்து இருந்தாள், அது அவளுக்கு பிடித்த ஆதி, முகம் சுழிக்கும்போது, சிரிக்கும்போது தாராளமாக குழிவிலும், ரித்திகாவுக்கு பிடித்த இடமே ஆதியின் கண்ணம்தான்.

குழந்தை எழுந்ததும் ரித்திகா நினைவு பெற்று, அவளை ரெடி செய்துவிட்டு சமைக்க தொடங்கினாள். ஆதிக்கு பிடிக்காத அனைத்தும் செய்து வைத்தாள். பாவற்காய், கோவக்காய், கசப்பு சுண்டைக்காய் என்று அனைத்தும் சரியாக வேக கூட வைக்கல. மொத்தமா எல்லாத்தையும் போட்டு சமைத்து அவனுக்கு தனியாக எடுத்து வைத்துவிட்டு.

இவர்களுக்கு டிபன் செய்து வைத்துவிட்டு. தயாராகி கிளம்பினாள், அத்தையிடம் சொல்லிவிட்டு.

கிளம்பும் சமயத்தில்.... "சாரி டெட்டி.." என்றாள் அத்தை.

"அத்தை, என்ன இது, தனியா இருக்கேன்னு வந்தது நான், அதுக்கு நீங்க என்ன செய்வீங்க. எது நடக்கணும்ன்னு இருக்கோ அது நடக்கும் விடுங்க, எல்லாம் சரியா போய்டும்," என்று அவர்களை சமாளித்து வெளியேவந்தாள்.

அத்தை சாப்பிடாமல் கிளம்பும் ரித்தியை தடுத்து, சாப்பிட கூட்டிவந்தார். ஆதியும் ரெடி ஆகி வந்தவன் சாப்பிட வந்தான்.

சாப்பிட அமர்ந்தார்கள் நால்வரும். சமையலை அவன் புறம் நகர்த்தி வைத்தாள் ரித்திகா. ' எவ்ளோ பாசம் ரித்திக்கு என்மேல ' என்று நினைத்தவனுக்கு தெரில, பெரிய அப்ப அந்த பாத்திரத்துல வச்சி இருக்கானு.

முதல்முதலில் மனைவி கையால, சாப்பிடும் ஆர்வத்தில் ஒரு ஒரு பத்திரத்தையும் தொறந்து பார்த்தான். எல்லாமே ஆதிக்கு பிடிக்காதது, பார்த்ததும் முகம் போன போக்கை பார்த்து ஆதியின் அம்மா மீராவுக்கு சிரிப்புதான் வந்தது. 'நல்லா அனுபவி மகனே' என்று மனதில் நினைத்துக்கொண்டு.

அவனுக்கு பிடித்த இட்லி தக்காளி சட்னி மூவரும் சாப்பிட்டார்கள், வாசம் இவனை இழுத்தது.

எனக்கு அதுதான் வேண்டும் என்றான். மூவருக்கும் சரியாக சமைத்து இருந்தாள். அனைவர் தட்டிலும் இட்லியை வைத்துக்கொண்டு, அந்த பாத்திரத்தை நகர்த்தினாள். ஆதி ஆசையாக பாத்திரத்தை எடுத்து பார்த்தான், ஆனால் அதில் எதாவது இருந்தால்தானே, உடனே முகம் சுருங்கிவிட்டது.

ரித்திகாவை ஆதி பார்க்க, அதுதான் உனக்கு பிடித்தால் சாப்பிடு, இல்ல கிளம்பு என்பது போலவே இருந்தது ரித்திகாவின் பார்வை.

சாதம் வைத்து அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் வைத்து சாப்பிட தொடங்கினான். வாயில வைக்கிறது போலவே ஒன்னுகூட இல்ல அங்க, ஒருவழியா சாப்பிட தொடங்கினான்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்தும் ஆதி இன்னும் சாப்பிட்டு முடிக்கல, பருக்கையை எண்ணி எண்ணி சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

ரித்திகாவிற்கு ஒரு திருப்தி, அவனை பழி வாங்கிவிட்டதை எண்ணி.

வழக்கமாக செய்யும் செயலை அம்மா செய்யவில்லை, என்று நினைவூட்டும் வகையில்... ரித்திகா கன்னத்தில் முத்தம் வைத்து அவளது அறையை நோக்கி கைகளை காண்பித்தாள் குட்டி.

ரித்திகா குளித்துவிட்டு "இன்னைக்கு நம்ம அஜு அப்பாவை பாககப்போலாம்" என்றதும், துள்ளலோடு சாக்லேட் இரண்டு எடுத்துக்கொண்டு வந்தாள்.

"இது யாருக்கு..." என்று கேட்டாள் ரித்திகா. "அஜுக்கு ஒன்னு பாப்பாக்கு ஒன்னு.." என்றாள் அழகாக தன்னை காமித்து.

"அஜு பேர் சொல்லி சொல்லி நீ நிறைய சாக்லேட் சாப்பிடுற, இப்போலாம்" என்று கோவமாக சொல்லி குட்டிக்கு வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டி தூக்கி சென்றாள், அலுவலகத்தை நோக்கி.

ஆதி நடந்ததை எல்லாம் மனதில் குறித்து வைத்துக்கொண்டு, அவனது அசிஸ்டன்ட்க்கு கால் செய்து இருக்க, அனைத்து ப்லேவர் சாக்லேட்டையும் ஆர்டர் செய்தான், இருவருக்கும் சேர்த்து.

ரித்திகா போலவே பொண்ணும் கண்டமேனிக்கு சாக்லேட் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

ஆதி பின்னாடி சுற்றிக்கொண்டு இருக்கும் குண்டு கண்களோடு, டெட்டி, ஆதி ஆதி என்று பின்னாடி சுற்றும் அந்த சிறு பெண்ணின் நினைவில் மூழ்கினான். அவனது பொக்கிஷமான வருடங்கள். ரித்திகா இல்லனா அவனது குழந்தை முதல் இளமை பருவம்வரை, மறைந்து போய் இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தவன். எப்போது இருவரும் திரும்பி வருவாங்கனு காத்து இருந்தான் ஆதி...

அன்னையிடம் பேச நெருங்க "அவ சரி ஆகட்டும் நான் பேசுறேன்" என்றார்.

ரித்தி இல்லாத சமயத்தில் மட்டும் பேசி கொள்வார்கள் இருவரும்.

23

தாமதமாக எந்திரித்த, அர்ஜுன் வேகமாக தயாராகி மதியம் வந்து சேர்ந்தான். சாரா எந்திரிக்கும் வேலையில் செல்வி கல்லூரிக்கு தயாராகி இருந்தாள்.

கார்டன் போய்ட்டு வரலாம் என்று கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி, ஆனந்தன், வாசலில் ஒரு ஓரம் பைகளோடு அமர்ந்து இருந்தான். 'இவன் இங்க என்ன பன்றான்' என்று யோசித்துக்கொண்டு, ஆனந்தன் அருகில் சென்று "இங்க என்ன டா பண்ற" என்றாள் சாரா.
"நீ இங்க என்ன பண்ற, கல்யாணம் ஆச்சில்ல அர்ஜுன் கூட" என்றான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டான்.
"அது பிரேக் அப் ஆயிடுச்சி" என்றாள் சாரா கூலா.
''நான் கேட்டதுக்கு பதில் சொல்லு'' என்றாள் சாரா.
"உன்ன பாக்கத்தான் வந்தேன்" என்றான்.
"எடு அந்த துடைப்பத்தை" என்றதும்.
"அடிச்சி வச்சிடாத தாயே, அதுவா ஊர்ல இருந்து இப்போதான் வந்தன், அதான் செல்வியை பாத்துட்டு போலாம்ன்னு வெயிட் பண்றேன்" என்றான் ஆனந்தன் தயங்கி கொண்டு.
"ஓ.... ரூட் இப்படி போதா.... எப்போ இருந்து" என்றாள் சாரா.
"பாத்த அப்போ இருந்து.." என்றான்..
"அடப்பாவி" என்றாள் வாய்ல கையை வைத்து.
"சரி அவளுக்கு தெரியுமா? "
"ம்ம் ஊருக்கு போகும்போது சொல்லிட்டு போனேன். நான் வந்ததும் பதில் சொல்லுன்னு சொன்னேன். அதான் இப்போ பதிலுக்கு வெயிட் செஞ்சிட்டு இருக்கேன்", என்று பெருமூச்சோடு சொல்லி முடித்தான்.
"இந்த நேரத்துக்கு அவளை பாத்துட்டு கிளம்பி இருக்கணுமே நீ" என்றாள் ஆராய்ச்சி பார்வையோடு.
ஆனந்தன் சலித்துக்கொண்டு, "நாலு மணிக்கு முன்னாடியே வந்துட்டேன், அவ வருவான்னு வெயிட் செஞ்சா, என்ன பாத்ததும் கதவை சாத்திட்டு போனவ இன்னும் வெளிய வரல..." என்றான் சோகமாக.
"டேய் எதுக்கு பயம்புடுத்துற அவளை" என்றாள் சாரா கிண்டலாக ஆனந்தனை பார்த்து.
"செல்வி இங்க வாயேன் உன்ற மாமா காத்துட்டு இருக்கிறார்" என்றதும், மெதுவாக செல்வி வந்து, சாராவை பார்த்து.
"அக்கா நான் காலேஜ்க்கு போறேன்" என்று வேகமாக எதிரில் இருந்தவனை திரும்பிக்கூட பார்க்காமல், விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்.
"என்னடா செஞ்ச இப்படி மூஞ்சியக்கூட பார்க்காம ஓடிட்டா" செல்வியின் செயலை ஆச்சரியமாக பார்த்துட்டு இருந்தாள் சாரா.
ஆனந்தன் ஆனந்தமாக அவன் செய்த செயலை, நினைத்துக்கொண்டு இருக்க, சாரா வெளியே கிளம்பினாள்.
ஆனந்தன் அவனது பையை வைத்துவிட்டு, சாராவை அழைத்துக்கொண்டு வேலைசெய்யும் இடத்தை நோக்கி சென்றான்.
அங்கு செல்வியோ படபடப்பாக கல்லூரிக்கு சென்றாள்.
இப்போது இறுதியாண்டு படிக்கிறாள், பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல், நேரத்தோடு வீடு வந்து சேர்ந்தாள்.
ஒருவாரம் முன்பு நடந்ததை அசைபோட்டாள் செல்வி. வழக்கமாக ஆனந்தன் சாராவின் வீட்டில்தான் நேரம் செலவிடுவான். ஒவ்வொரு ஒருநாளும் செல்வியை சீண்டிக்கொண்டு இருப்பதுதான் ஆனந்தனின் பொழுதுபோக்கு. சாராவை பாக்க வருவதை விட, செல்வியை சீண்டத்தான் பெரும்பாலும் வருவான். இப்படி ஆரம்பித்த ஆனந்தனின் எண்ணம், எப்போதும் செல்வியை தன்னுடனே வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது.
சாராவும் ஆனந்நதனும் எங்கோ வெளியே சென்று இப்போதுதான் உள்ளே வந்தார்கள். செல்வி மனதில் பட்டதை கேட்க, சரியாக இருந்தது... "என்ன, எப்போ பாரு இங்கயே சுத்திட்டு இருக்க, உங்க வீட்ல உன்னை தேடமாட்டாங்களா?" என்று எரிச்சலோடு கேட்டுவிட்டாள்.
ஆனந்தனின் முகம் மாறி விட்டது... "செல்வி..." என்று அவளை கோபமாக பார்த்து சாரா, "உனக்கு நான் இருப்பது போல, அவனுக்கும் நான் இருக்கேன்" என்றாள் செல்வியை பார்த்து.
செல்வி சோகத்தோடு ஆனந்தனை பார்த்தாள், ஆனந்தன் பேச்சை மாற்றி சாராவிடம் பேச தொடங்கினான்.
செல்விக்கு அப்போ இருந்து, அவனை மனசு கஷ்டப்படுத்திட்டோமே என்று விலகியே இருந்தாள். அவன் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு, அவளது அறையிலேயே இருந்துவிடுவாள்.
ஆனந்தன் அமைதியாக செல்வியை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். 'இவ போக்கே சரி இல்லையே' என்று, தக்க சமயத்தில் காதலை சொல்ல காத்துக்கொண்டு இருந்தான்.
சாரா அக்காவின் திருமணத்திற்கு செல்லும் சமயம் சரியாக இருக்கும் என்று யோசித்து... அவளை ரயிலில் ஏத்தி விட்டுவிட்டு செல்வியை பார்க்க வீட்டுக்கு வந்தான்.
செல்வி ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள். மெதுவாக அவ பக்கம் போய் அமைதியாக உட்காந்தான்.
"என்ன பண்ற செல்வி..." என்றான் மெதுவா.
கைகளில் இருக்கும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு, எழுந்து செல்ல இருந்த செல்வியை, இமைக்கும் நொடியில் ஆனந்தன் அவளை கைகளால் சிறை பிடித்தான்.
"என்ன பண்றிங்க விடுங்க" என்று கத்தி விட்டாள் சட்டென்று, ஆனந்தன் அவளது முகத்தை அவனை நோக்கி திருப்பினான்...." செல்வி என்ன கல்யாணம் செஞ்சிக்கிறாயா" என்றான்.
அதிர்ச்சியில் அவனை பார்த்தவள், கண்களில் அவ்வளவு ஆசை. மறு நொடி அவளது கண்கள் கருத்தது, ஆனந்தன் அவளது மாற்றத்தை மனதில் குறித்து கொண்டு, 'அவளுக்கு யோசிக்க டைம் கொடுக்கணும்' என்று ஆனந்தன் நினைத்தான்.
"நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். இங்கவே இருந்தா உனக்கு யோசிக்க கூட டைம் தாராம உன்ன தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன், ஒன் வீக் நல்லா யோசி, பிடிச்சா ஓகே இல்லனா உன்ன நினைச்சிட்டே வாழ்வேன்" என்று அழுத்தமாக சொன்னவன், சட்டென்று அவளது நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு கிளம்பினான். வாசலுக்கு சென்றவன், "ஒருவாரம் வைட்டிங் டார்லிங், உன்னோட பதிலுக்காக. பிடிச்சா பிடிக்குதுன்னு சொல்லு, பிடிக்கலானாலும் பிடிக்குதுன்னு சொல்லு, எல்லாம் பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிறாங்க போக போக பிடிச்சிடும்" என்று ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்து கிளம்பினான்.
செல்விக்கு பிடித்து இருந்தாலும், அவனது இடம் அவளுக்கு பழகிய கொஞ்ச நாட்களில் தெரிந்தது.... ஊரில் ஜமின் வாரிசு... வேலை செல்ல ஒரு அவசியமும் இல்லை அவனுக்கு, அங்கு இருக்க பிடிக்காமல், பிடித்த வேலையை மனத்திருப்திக்காக செய்பவன்.
அவனிடம் பயந்த விஷயம் ஒன்று, பணம். அவனுடன் ஒருமுறை ஷாப்பிங் போன அப்போ, இவளுக்கு அது இதுன்னு வாரி குவித்துவிட்டான். அவன் வாங்கித்தந்த பொருளை ஒன்று கூட இன்று வரை யூஸ் பண்ணல. பணத்துக்காக என் கூட பழகி கொண்டு இருக்கன்னு அவன் சொல்லிடா, ஆசை வளர்த்த மனது தாங்காது, என்று இன்னும் அவனை விட்டு விலகி இருந்தாள் செல்வி.
இவன் வேண்டாம் என்று, அவன் காதலை சொன்ன மறுநொடி முடிவு எடுத்துட்டா.

24

ஆனந்தனுடன் பேசிக்கொண்டு வரும் சாராவை பார்த்து அர்ஜுன் தன் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றான், சாரா அவனை கண்டும் காணாமல், அவளது இருக்கையில் சென்று அமர்ந்து, அவளது வேலையை ஆரம்பித்தாள்.

மாத கடைசி ஸ்டாப்க்கு சேலரி போடும் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள். அர்ஜுன் கடைசியாக வந்து சாராவை பார்த்து விட்டு, அவள் கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டான்.

சாராவுக்கு இவனின் நடவடிக்கை, சரியாக படவில்லை, அர்ஜுனை விசித்திரமா பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனும் கொஞ்ச நேரம் சாராவை, பார்த்துக்கொண்டு இருந்தவன், ஒரு கவரோடு சாரா பக்கம் வந்து நின்றான், என்ன என்பதுபோல சாரா பார்க்க,

"இத ரித்திகா கிட்ட கொடுத்துடு" என்று சொல்லி அந்த கவரை கொடுத்துட்டு போனான், அதுக்கு அப்புறம் ஆளே காணோம்.

ரித்திகா 'காலைல இருந்து அர்ஜுன பாக்கலையே' என்று நினைத்து கொண்டே அர்ஜுனை தேடி வர, ''சாரா உன் புருஷன பாத்தியா?" என்று கேட்க, 'புருஷனா!! அது ஒன்னுதான் குறை', "தெரியாது, இத உங்கிட்ட கொடுக்க சொன்னான்" அவன் கொடுத்த கவரை நீட்டினாள்.

அதை சந்தேகமாக வாங்கி படிக்கத் தொடங்கினாள், ரித்தி பிரிச்சி பாத்துட்டு, "எங்க அவன், எப்போ போனான்னு" ரித்து பதறிட்டு கேட்க.

"மதியம் கொடுத்தான் என்னாச்சு?" என்று ரித்திகாவின் முகத்தில் இருந்த பதற்றம் சாராவை தொற்றிக்கொண்டது.

அந்த கடிதத்தில் "நான் இந்த லைப்க்கும், உங்களுக்கும் பிட் இல்ல, சாராவை பாத்துக்கோங்கன்னு" எழுதி இருக்கு, ரித்திகா ஆதிக்கு கால் செய்ய.

ரித்திகா சொன்னதை கேட்ட ஆதி, பதறிட்டான். 'ஐயோ, சாயந்தரம் பேசி சரி செய்லாம்ன்னு பாத்தா இப்படி செஞ்சிட்டானே' பதறிட்டு டான்ஸ் ஸ்கூல்க்கு போறான் ஆதி.

ரித்துக்கு ஒன்னும் புரியல, என்ன செய்றதுன்னு தெரியல, அழுக அரமிச்சிட்டா. ஆதி வரதை பாத்து, "ஐயோ நான் பக்கத்துல இருந்தே, அர்ஜுனை விட்டுட்டனே, எங்க போனான்னு தெரில ஆதி" அவ அழுக.

இனி மறச்சி எந்த பிரயோஜனமும் இல்லை. "ரித்தி எல்லாத்துக்கும் நான் தான் காரணம்" என்று ஆதி நடந்ததை சொல்ல, ரித்தி அடி பின்னிட்டா. "நீ ஏன்டா வந்த, போடா உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ செஞ்சிட்ட. இப்போ எதுக்கு வந்த, அர்ஜுன் மட்டும் கிடைக்கல உன்ன டிவோர்ஸ் செஞ்சிடுவேன்டா, இல்ல இல்ல, கொலபண்ணிடுவன்டான்னு" ரித்தி அழுக.

ஆதிக்கு சங்கடமா போயிடுச்சி, முடிஞ்ச அளவுக்கு தேடிட்டு விடிய காலையில வந்தான். சாரா எதுமே பேசல, அமைதியா வீட்டுக்கு போய்ட்டா. ரித்தி, மீரா அர்ஜுன தேடி போன ஆதியை எதிர்பாத்துட்டு வாசல்லையே உட்காந்து இருக்காங்க. ஆதி வந்து அர்ஜுன் கிடைக்கலன்னு சொல்லவும், மீரா ஒருபக்கம் அழுக, ரித்தி அவள் கை வலிக்கும் வரை ஆதிய அடிச்சிட்டு இருந்தா.

"பிரண்ட் பிரண்ட்ன்னு சொல்லி என்னையும் அர்ஜுனையும் நம்பாம, அவமான படுத்துன இல்ல, பாரு உன்னோட பிரண்ட் ஓட லட்சணத்த" என்று அவனுக்கு ஒரு வீடியோ அனுப்பிவிட்டாள்.

அதை பார்த்த ஆதி, 'இவனுங்கள போய் நம்பி குடும்பத்தை வீட்டுட்டோமேன்னு ஆதிக்கு ரொம்ப கில்ட்டி ஆயிடுது. அன்று இருந்து ஆதி அர்ஜுன தேடி சுத்திட்டு இருக்கான், ஒரு மாசம் இப்படியே போது, எந்த தகவலும் கிடைக்கல, ரித்தியும் சாராவும் வேலைக்கு கூட போறதில்ல, எல்லாம் ஆனந்தன் கிட்ட ஒப்படைச்சிட்டாங்க.

சாராவை பார்க்க ஆனந்தன் ஒருநாள் வந்தான், செல்வி அவன் கண்ணில் கூட படமாட்டாள், ஆனந்தனும் இந்த பிரச்சனைக்கு நடுல ஒரு நாள் செல்வியை காலேஜ்க்கு பாக்க போய் 'ரெண்டுல ஒன்னு இன்னைக்கு கேட்டுடணும்ன்னு அவளுக்காக வெயிட் செஞ்சிட்டு இருந்தான்.

ஆனந்தனை பார்த்த செல்வி நேரா வந்து அவன் முன்னாடி கைகட்டி நின்றாள் "சென்ஸ் இல்லையா உங்களுக்கு, அதான் பிடிக்கலன்னு ஒதுங்கி போறேன்ல, பிடிக்கலனா விட வேண்டியது தான" என்று செல்வி ஆனந்தனை கண்டபடி திட்டிவிட்டு சென்றாள்.

காதல்ன்னா ரெண்டு பேருக்கும் பிடிக்கணும், அவளுக்கு எப்போ பிடிக்கலன்னு சொன்னாலோ, அதுக்கு அப்புறம் எதுமே செல்விட்ட கேக்கல. ஆனந்தன் ஒருபக்கம் தேடிட்டு இருந்தான் அர்ஜுனை.

ஒரு மாசம் கழிச்சி சாராவும், ரித்திகாவும் வேலைக்கு வர ஆரம்பிச்சாங்க. எல்லோருக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது.

ரித்திகா எப்போ எப்போல்லாம் முடியுமோ அப்போல்லாம் ஆதிய அடிப்பா, சாப்பாடு போடமாட்டா, அவ வளக்கும் நாய்க்கு பிரஷ் செஞ்சி விட வைப்பா, ரெண்டு நாளைக்கு ஒரு முறை குளிக்க வைக்க சொல்லுவா, அதுல்லாம் பாத்ததுன்னு, ரித்தி கூட சேந்து தாராவும் ஆதியை ஒருவழி பண்ணிடுவா .

எப்பவும் சாப்பாடு சிந்தாம சாப்பிடுவா. இப்போலாம் அப்படி இல்ல, ஒரு வேல சாப்பாடு சாப்பிடறதுக்கு நாலு இடத்துல உட்காந்து சாப்பிடுவா, வேணும்ன்னே தண்ணீர் கொற்றது. கூட்டிட்டு போய் "டேய்ய் இடியட் கிளீன் செய்" என்று சொல்லுவாள், எல்லாம் ரித்தி அண்ட் மீரா ஓட ட்ரைனிங்.

இதுலாம் பாத்ததுன்னு அவன் அர்ஜுனையும் தேடனும், டெய்லி வீடு தொடைக்கணும், கோலம் கூட போடணுமாம், அதுவும் அஞ்சி மணிக்கு.

அது பத்தாதுன்னு மூணு பேரும் எவ்ளோ டிரஸ் போட்டு, அழுக்கு செய்யமுடியுமோ அவ்ளோ அழுக்கு செஞ்சி, ஒரு நாளைக்கு நாலு டிரஸ் கூட மாத்துவாங்க. அவன துவைக்க வச்சி பழிவாங்கிட்டு இருக்காங்க.

டெய்லி மூணு பேருக்கும் இதான் வேல, டிசைன் டிசைனா பிளான் போடுவாங்க பாருங்க.

ஆதிக்கு இதுலாம் பெருசா தெரில, அர்ஜுன முதல்ல கண்டு பிடிக்கணும்ன்னு ஒரு படையவே இறக்கி இருந்தான் தேட.

அவன் சம்பாதிச்ச அனைத்தையும் கறைத்து கொண்டு இருந்தான், ஒரு பக்கம்.

செல்விக்கு எல்லாம் தெரியும் ஆனா வீட்டில் இன்னும் சொல்லலை, சொன்னா அர்ஜுன் பேமிலிக்கும், சாரா பேமிலிக்கும், சண்டை வந்து இன்னும் பெரிய பிரச்சனை ஆகும்ன்னு செல்விக்கு தெரியும், அதனால எதுமே சொல்லல.

சாரா சோகமாவும் இல்ல சந்தோசமாவும் இல்ல, இப்படியே அவ வாழ்க்கை போது.

ஒருநாள் எந்திரிக்கும் போது முடில, சாப்பிட்டு கொஞ்சம் பரவால்லன்னு கிளம்பிட்டா.

சாரா இப்போ தனியா போறதில்ல எங்கும், டிரைவர் கூடத்தான் போறா, ரோடுல போக மனநிலை சரியா இருக்கனும்ல. அத தெரிஞ்சிகிட்ட செல்வி, கட்டாய படுத்தி அவங்க ஊருல இருந்து ஒரு டிரைவர வரவைச்சா..

ஆதி வாழ்க்கை, மூணு பேருக்கு சேவை செஞ்சிட்டு, முழு வேலைக்காரனாவே மாறிட்டான் ஆதி.

தாராவ ரெடி செய்றது தவிர எல்லா வேலையும் வேண்டா வெறுப்பாவே செஞ்சிட்டு இருந்தான் நம்ம ஆதி.

மூணு பேருக்கு எப்போ எப்போ கோபம் வருதோ, நினைச்ச நேரத்துல வந்து மோத்திட்டு போவாங்க. ஆதியும் அப்பாவி மூஞ்ச வச்சிட்டு அடிவாங்குவான். சம்பளம் வாங்காத அடிமையாக மாறிவிட்டான் ஆதி.

அன்று அப்படித்தான், உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான், தாரா என்ன நினைத்தாளோ தெரில, வாயில வச்சி இருந்த பீடிங் பாட்டில்ல இருந்த அணைத்து பாலையும் ஆதி மூஞ்சில அடித்து விளையாடி கொண்டு இருந்தாள்.

ஒன்னும் செய்றதுக்கு இல்ல, மூஞ்சில இருக்கும் பால தொடச்சிட்டு, சாப்பிடத் தொடங்கினான் ஆதி,

என்ன புலி பதுங்குதுனு பாக்கறீங்களா... இன்னைக்கு சண்டேல்ல ஆதிக்கு செம விருந்து, அப்படியே அவன் பிளாட்க்கு ஜூம் போனா.... "பருப்பு சாதம், சண்டே மட்டும் நம்ம ஆதிக்கு ஸ்பெஷல்.

மத்த நாளுல்லாம் டெய்லி கசப்பு, வெந்தும் வேகாம, சாப்பிடணும், பாவக்காய், கோவக்காய், காட்டு சுண்டை காய்." இதுகூட பரவாலங்க நெட்ல ரித்திகா சர்ச் செஞ்சி, வெளிநாட்டுல இருக்க கசப்பானது எல்லாம் ஆர்டர் செஞ்சி, சமைச்சி தருவா பாருங்க அவளோட காதலுக்கு எல்லையே இல்லங்க.

ஆதி வாரம் புல்லா வாழுறதே அந்த சண்டே பருப்பு சாதத்துக்காகத்தான்.

இப்போ தாரா மூஞ்சில அடிச்சதுக்கு, வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்ததுன்னு வைங்க, அடுத்த நிமிஷம் சோறு என் கைல இருக்காது. அதுதான் ஆதியின் இந்த மாற்றதுக்கு காரணம். இப்போகூட இவங்க ரெண்டு நாள் போட்டு அழுக்கு ஆகாத, துணியைத்தான் இப்ப கூட ஊரவச்சிட்டு இருக்கேன், என் நிலைமையை பாத்தீங்களா".

"என்ன அங்க சத்தம்" இது மீரா.

"இன்னும் அழுக்கு துணி வேணுமா?" இது ரித்திகா. இவங்கல விட பெரிய அறிவாளி நான் பெத்த தங்கம்தான்.... நேர வந்த வந்து போட்டு இருந்தா டிரஸ் கழட்டி தூக்கி போட்டுட்டு, ஓடிட்டா...

"அப்பாடா ஓடிட்டா", ' என்னா திரும்ப வரா '.

போட்டு இருந்த ஜட்டிய கழட்டி மூஞ்சில போட்டுட்டு போறாங்க, என் நிலைமையை பாத்திங்களா".

கஷ்டப்பட்டு துவைச்சு முடிச்சி காயவச்சிட்டு திரும்பி பாத்தா இன்னும் கப்போர்ட்ல இருக்க எல்லா டிரஸ்சையும் தூக்கிட்டுவந்து மாமியாலும் மருமகளும் போட்டுட்டு போறாங்க.

தலைல கைய வச்சிட்டு உட்காந்துட்டான், கொஞ்ச நேரம் கழிச்சி' ஆதி களத்துல இறங்குற டைம் ஆச்சின்னு வேலைல இறங்கிட்டான் ஆதி.

எங்க இன்னொரு ஆளக்காணோம், யோசிக்கும் போது நான் பெத்தது ஓடி வந்துது, தூக்க முடியாத ஒரு பொம்மையா தூக்கிட்டு வந்து, துவைச்சு குடுனு சொல்லுது... எப்படி என்னால அதை துவைக்க முடியும்... துவைக்கறது பெருசு இல்ல, அது ஏன் இன்னும் காயலன்னு நைட் அடிப்பாளே. ஒருவழியா செகண்ட் ரவுண்டு தொவச்சிட்டு வீட்டுக்குள்ள போனா!! நான் நினைச்சது தான் நடந்தது.... அந்த குட்டி "வண்டு, பொம்மை வேணும்ன்னு" கத்திட்டு இருந்தா, என்னன்னு யோசிச்சிட்டு பக்கம் போனா...

பொம்மையக்காட்டி "இத அந்த இடியட் வேணும்னே தண்ணி ஊத்திடுச்சின்னு" ஆக்சன் ஓட கையை ஆட்டி சொன்னதை பாத்து, நான், என் ஆசை மகளை ரசிச்சிட்டு இருந்தா, என்ன நல்லா போட்டு கொடுத்துட்டா.

நடக்கட்டும்னு நான் தரைல உட்காந்துட்டேன்,

முதல எப்பவும் போல என்ன பெத்தது, வந்து மொத்திட்டு ரிலாக்ஸ் ஆ போய் உட்காந்தாச்சு.

நெஸ்ட் நான் கட்டிக்கிட்டது.... இன்னைக்கு என்ன சாப்பாடுன்னு தெரில, புல் எனர்ஜி. எனக்கு அம்மாவையும் ரித்துவையும் ரொம்ப பிடிக்கும், எங்க வேணும்னா அடிப்பாங்க மூஞ்சில மட்டும் கையே வைக்கமாட்டாங்க.

ஏன்னு கேளுங்க, ஒரு டைம் வேலைக்காரங்க என்மேல பரிதாபப் பட்டுட்டாங்க, அதனால.

ரெண்டு பேரோட ரவுண்டு ஓவர், இப்போ ரவுண்டு த்ரீ, இந்த இளவரசி வேற எங்கும் கை வைக்கமாட்டா, என்ன அழகான மூஞ்சில ஒரு கடி, ஒரு கிள்ளுன்னு, மாத்தி மாத்தி கையும் வாயும் வலிக்கற வரை செஞ்சிட்டு, மூணு பேரும் சோர்ந்துட்டாங்க.

இப்போ இந்த அடிவாங்கன பச்ச ஒடம்போட போய் ஜூஸ் போடணும்ன்னு எந்திரிச்சி போனா.

ஒன்னு ஆரஞ்சு ஒன்னு வாட்டர்மெலோன், இன்னோனு கேக்குங்க பாரு... அவ்வ்வ்... எனக்கு மயக்கமே வந்துடும். உலகத்துலயே இல்லாத ஒரு பேர சொல்லும், ரெண்டு வயசுல இதுக்கு இவ்ளோ அறிவான்னு நான் மயங்காத நாளே இல்ல. அவங்களுக்கு போட்ட ஜூஸ பால்ல மிக்ஸ் செஞ்சி கொடுத்துடுவேன். நல்லா இருந்தா அவ குடிப்பா, நல்லா இல்லனா நான் குடிக்கணும்.

நாளைக்கு ஆபீஸ் போய்டுவாங்க, நிம்மதின்னு படுத்தா.

எப்பவும் போல தாரா நடுல, அந்தபக்கம் ரித்தி, இந்த பக்கம் நான். ஆனா ஒன்னு, எந்திரிக்கும் போது நான் நினச்சா மாதிரிதான் படுத்து இருப்போம். அதுக்கும் காலைலயே ரெண்டு கொட்டு கொட்டுவா, இப்போலாம் அவ கொட்டுனா வலிக்குரதே இல்ல, பழகிடுச்சி.

தாராக்கு தூக்கம் வர வரை நான் தூங்கக்கூடாது, இதுதான் ரூல்ஸ்.

அதை மீறி தூங்குனா.... தாரா என்னோட மீசைல இருக்க ஒரு ஒரு முடியையும் பிச்சி போட ஆரமிச்சிடுவா.

இன்னைக்கு ஓவர் வேல செஞ்சனால லைட்டா கண்ணை மூட. மீசை இன்னைக்கு எஸ்கேப் ஆயிடுச்சி, ஆனா கண்ணு இமையில் ஒரு மூடித்தான் பிச்சா தாரா, நைட் புல்லா நான் தூங்கலையே. இப்படித்தாங்க என் வாழ்க்கை போது.

அடுத்த நாள் எல்லோரும் ரெடி ஆகி ஆபீஸ் போனாங்க.. திடீர்னு ஒரு கால் சாரா மயக்கம் போட்டுட்டான்னு. ஆதி பதறி அடிச்சிட்டு ஹாஸ்ப்பிட்டல் போனா, அங்க அடிச்சாங்க பாருங்க குடும்பமே ஒரு ஆப்பை....