23 காதலன்!
ச்சே எப்படி... இவனை சமாளிப்பது, வயிறு வேற கத்துது.
அந்த பிரியாணியையும் சிக்கனையும் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சாப்பாட்டை விட கிருஷ்ணாவை சமாதானப் படுத்துவதுதான் முக்கியம், என்று அமைதியாக பிரியாணியை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்.
கிருஷ்ணா... அருகில் வந்தவன்.
“சாப்பிடுறது என்றால் இப்பவே சாப்பிட்டுக்கோ”
“எனக்கு தேவையில்லை, உனக்கு வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ”
“சரி நாய்க்கு போட்டுடறேன்”
பிரியாணியையும் சிக்கனையும் எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் போனான்.
“பாவி பையன் எடுத்துட்டு போய்ட்டான், வடப் போச்சே, பசிக்குதே இப்போ என்ன செய்யலாம்” கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், “ராதா எந்திரி”
“எனக்கு பசி மயக்கம் எழ முடியலை” காலை ஆட்டிக்கொண்டே படுத்து இருந்தாள்.
“எழு டா” அவளை கைபிடித்து எழுப்பி விட்டவன் கையில் தட்டோடு தரிசனம் தந்தான், அதை பார்த்தவுடன் ராதாவின் கண்கள் மின்னியது.
“இந்தா சாப்பிடு”
‘ராதா உன் வீராப்பை விட்டுடாத, இவன் உன்னை எப்படி கடுப்பு கிளப்பினான், இவனை விடக்கூடாது’
“உனக்கு வேணுமா வேண்டாமா?”
“ஒன்னும் வேண்டாம்”
“சரி நான் சாப்பிட்டுக்கிறேன்” சூடு செய்து வந்து பிரியாணியையும் பெப்பர் சிக்கனையும் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
‘கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன், என் சிக்கன்... என் ஆட்டு பிரியாணி, அச்சோ போச்சே... போச்சே. காட்டுப் பன்னி போல சாப்பிட்டுட்டு இருக்கான். ஒரு பொட்டலம் காலி, அடுத்ததை பிரிக்கிறானே, என் பிஞ்சி மனசு வெடிச்சிடுச்சே’ வாயில் எச்சை ஊர அவனை பார்த்தாள்.
“வேணுமா”
வேணும் வேணா எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள் ராதா.
‘இங்க இவன் சாப்பிடுவதை பார்த்தால் இதையம் வெடிச்சிடும்’ ராதா எழுந்து போக பார்க்க.
கைபிடித்து தடுத்தவனை முறைத்து பார்த்தாள், “கையை விடு இப்போ என்ன வேணும் உனக்கு”
“சாப்பிட்டுட்டு போ”
‘ரோசம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா? சாப்பாடு தான்’ ஒரு முடிவுக்கு வந்தவள்.
அவன் அருகில் அமர்நத அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.
இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே, பேசாமல் இருந்தாலும், பாசமாக ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தான்.
தட்டு காலியாகும் வரை தொடர்ந்தது இவர்களின் அமைதி.
“போதுமா”
“இன்னும் வேணும்”
“வெளியே போலாமா சாப்பிட”
“சரி” என்று எழுந்தாள்.
“இப்படி இல்லை”
“வேற எப்படி சுடிதானே போட்டு இருக்கேன்”
“இனி இப்படி இல்லை, காலேஜ்க்கும்... ஊர் சுத்த போகும் போது எப்படி போவியோ அப்படி தான் வீட்டிலையும் இருக்கனும்”
“கடைக்கு போறதுக்கு எதுக்கு ரெடி ஆகனும் வா போலாம் உன்ட நிறைய பேசனும்”
“நீ ரெடி ஆகிட்டு வா”
“சரி” பாத்ருமிற்க்குள் நுழைந்தவள், மனம் முழுவதும் இருந்த பாரத்தை இறக்கி வைத்தாள்.
சுடு தண்ணீரில் குளித்தவள்... பழைய ரதியாக வெளியே வந்தாள்.
கண்ணா இல்லை என்றால் என்ன, அவன் வாங்கித்தந்த ஜீப்ரா டாப்சை போட்டவள்... கொண்டையிளிருந்த முடியை கழட்டி விட்டவள், கண்ணுக்கு மை பூசி லைட்டாக லிப்ஸ்டிக்.
அவள் முகத்தை பார்க்க அவளுக்கே ஒரு காண்பிடன்ட் வந்தது.
“இன்று எந்த பக்கி என்னை நல்லா இல்லைன்னு சொல்லும், அழகிடி ராதா நீ. அதும் கன்னத்தில் இருக்கும் மச்சம், ப்பா, ழகு அள்ளுது” தனக்குத்தானே உற்ச்சாகப் படுத்தியவள் கிருஷ்ணா கூட வெளியே வந்தாள்.
“கிருஷ்ணா எங்கே போறோம்?”
“அது சீக்கரேட்” ஹெல்மெட் ஒன்றை தூக்கி ராதா புறம் விச.
சரியாக கேட்ச் பிடித்தவள், “கிருஷ்ணா நம்ம லாங் ட்ரைவ் போகப்போறோம் சரியா”
“அதே தான் செல்லம், சீக்கரம் வா”
“டேய் ஸ்னேக்ஸ் எடுத்துக்கலையே”
“எடுத்தாச்சே” கிருஷ்ணா படியில் இருந்த பையை சுட்டிக்காட்டினான்.
“கிருஷ்ணா கிருஷ்ணா தான், லவ் யூ டா மாமா பையா”
“என்ன பேசிட்டே இருக்க போறியா இல்லை... வரதா ஐடியா இருக்கா”
“இதோ வந்துட்டேன்”
இருவரும் கூலர்ஸ் போட்டுக்கொண்டு ஊர் சுற்ற கிளம்ப.
அந்த நாள் ராதா அனைத்தும் மறந்து, இளகிய தனது மனதை பழையபடி இறுக்கமாக மாற்றியது.
‘ஒருத்தனுக்கு நம்மளை பிடிக்கலைனா என்ன, ஏன் ஆயிரம் பேருக்கு நம்மலை பிடிக்கலனா கூட பரவாயில்லை நம்மை பிடித்த இரண்டு பேர் கூடவா இருக்க மாட்டாங்க அவங்களுக்காக நம்ம சந்தோஷமா இருக்கனும், அவ்வளவு தான் வாழ்க்கை. அந்த இரண்டு பேர் சிரிப்பதற்க்காக... என்ன வேணும்னாலும் செய்யலாம். ராதா வாழ்க்கையில் இந்த இரண்டு பேர் ரகுவரனும் கிருஷ்ணாவும்தான்.
சின்ன டிரிப் முடித்ததும் வீட்டை நோக்கி இருவரும் வர.
இறங்கும் போது ராதா கிருஷ்ணாவிடம் திரும்பி நின்று மாமா... “கல்யாணம் செஞ்சிக்கலாம்” என்றவள் தன் அறைக்குள் நுழைந்து கொள்ள.
கிருஷ்ணா அடுத்த நாளே கல்யாணம் வைக்க முடிவு எடுத்தான், நாட்கள் கடத்தினாள் மனது மாறிட்டா அவளை
திரும்ப மாற வைப்பது ரொம்ப கஷ்டம்.
ரகுவரனுக்கு செய்தி அனுப்பிவிட்டு சிம்பிலாக கோவிலில் கல்யாணம் நடத்த இருவரும் கிளம்பினார்கள்.
“ராதா அழகா இருக்க”
“தேங்க் யூ கிருஷ்ணா” சிறிது நேர பயணத்துக்கு அப்புறம் கோவில் வந்தது.
இருவரும் ஜோடியாக நடந்து சென்றார்கள்.
மணமேடையில் உட்கார்ந்து புகை சூழ மந்திர முழக்கங்களோடு கிருஷ்ணா கையில் தாலி எடுத்து கொடுக்க... கிருஷ்ணா ராதா கழுத்தில் தாலி கட்ட நெருங்கும் போது.
“ராதா... ராதா”
யோசனையில் ராதா... தோட்டத்தில் இயற்க்கையை ரசித்துக்கொண்டு சுற்றித் திரிந்தவளை, உசுப்பியது ஒரு குரல்.
“இங்கே என்ன செய்யற ராதா” மாதவக் கண்ணன் கேட்க.
“மாடு பார்க்க வந்தேன், அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்”
“சரி வா வீட்டுக்கு போலாம், அம்மா உன்ட சரியாவே பேச முடியலைன்னு சொன்னாங்க”
“ஆன் வரேன்...”
“அம்மா உனக்கு பிடிச்ச தக்காளி சாதம் செய்து வச்சி இருக்காங்க”
“சரி...” ராதா சாதாரணமாக சொன்னாள்.
‘என்ன எக்சைட்மென்ட் ஆவன்னு பார்த்தா இப்படி சப்புன்னு பேசுறா. நிறைய மாறிட்டா... இல்லை என் வார்த்தைகளும் என் அமைதியும் உன்னை மாத்திடுச்சி. சாரி ராதை, இனியாவது நீ சந்தோஷமா இருக்கனும், கிருஷ்ணா கூட சந்தோஷமா வாழுவ. அதை ஏதோ ஒரு மூலையில் இருந்து நான் பார்த்துட்டு தான் இருப்பேன் ராதா. நான் உன்னை விட்டு எப்பவும் பிரிய மிட்டேன் டா. உன்னை அடிக்கடி பார்த்துட்டு, தூரம் இருந்தாலும், இந்த காத்துகிட்ட நான் கேட்டுட்டு இருப்பேன், நீ எப்படி இருக்கன்னு’
“ராதா வா மா... காலையில்தான் மாதவன் சொன்னான், உனக்கு தக்காளி சாதம் பிடிக்கும்’ன்னு, இப்போ போடட்டா சாப்பிடுறியா”
“சரி அத்த...” அத்தை என்று வாய் வரை வந்ததை மாற்றினாள்.
“சரி அம்மா”
உள்ளே போய் சாப்பாடு போட்டு வந்தவர்,
“சரியாவே பேச முடியலை மா உன்கிட்ட, எதும் தப்பா நினைச்சிக்காத”
“தப்பா நினைக்க என்ன இருக்கு மா நான் சாப்பிட்டுக்கிறேன், நீங்க உங்க வேலை பாருங்க”
ராதா சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, மாதவக் கண்ணன் அவளை பார்த்தவாறு உட்கார்ந்து இருந்தான்.
தாரகையும் அனுவும் ஓரமாக உட்கார்ந்து தாயம் விளையாடிட்டு இருந்தாங்க.
கண்களில் இருந்த கண்ணீர் வெளி வராமல் அடக்கிக்கொண்டு சாப்பிட்டாள் ராதா.
அவளது கண்ணீர் துடைக்க கை பரபரத்தாலும் அடக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
வேறு சிந்தனையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ராதாக்கு தலையில் ஏறிக்கொண்டது. இரும்பியவளின் தலையை தட்டி விட்டவன், தன் கையாலையே தண்ணீரை குடிக்க வைத்தான்.
அனு கோபமாக ராதாவை முறைக்க, தாராகை சோகமாக ராதாவை பார்த்தாள்.
“ஏன் அனு ராதாவை முறைச்சிட்டே சுத்துற”
“இப்போ எல்லாம் எனக்கு அவளை பிடிக்கறதே இல்லை” அனு சொல்ல.
“ஓ....” தாராகை அமைதியாக ஆகிவிட.
“தாரகை, உன்ட ஏன் அவள் பேசுவதில்லை?”
“அவளுக்கு தேவையான போது நான் எந்த ஹெல்ப்பும் செய்யலை” என்று நடந்ததை சொல்ல.
“ஓ... அவளுக்கு நடந்தது ஏத்துக்க முடியாத கஷ்டம் தான் ஆனா எனக்கு இது எல்லாம் எங்கே முடியப் போகுதோ என்று தான் பயமா இருக்கு, எங்க பாஸ் வாழ்க்கையை அந்தரத்தில் விட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு”
“அப்படி எதும் நடக்காது அனு, உனக்கு ஏன் பாஸ் மேலே அவ்வளவு அக்கறை அவரை பிடிக்குமா?”
“ம்ம்ம்...”
‘என்ன ஆளு ஆளுக்கு கிருஷ்ணா பாஸை பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டுட்டு இருக்காங்க’
நாளைக்கு காட்டுக்கு போரதாக முடிவு ஆனது, அனு பேசவே இல்லை.
அனு காத்திருந்தாள், இன்னும் இரண்டு நாள் எப்படிடா முடியும் என்று தவித்தாள்.
இரவு தூங்கும் முன் கிருஷ்ணாக்கு போன் போட்ட அனு, “சார் எப்போ வரிங்க?”
“என்ன அனு ராதா வச்சி செய்யுறாலா உன்னை”
“அது எல்லாம் ஒன்னும் இல்லை சார், நீங்க இல்லாம எனக்கு போர் அடிக்குது வாங்க”
“ஆல்மோஸ்ட் முடிந்தது, நாளைக்கு சாய்ந்திரம் வந்திடுவேன்... இன்னும் இரண்டு நாளில் எல்லாம் முடிஞ்சிடும்”
“நானும் அதுக்கு தான் காத்துட்டு இருக்கேன்”
“சரி பாஸ் சீக்கிரம் வாங்க”
போன் வைத்துவிட்டு தூங்க போய்ட்டாங்க.
ராதா வானத்தில் நட்சத்திரத்தை பார்த்துக் கொண்டே தூங்கிட்டா.
காட்டை சுற்றிப் பார்க்க நினைத்து கிளம்பும் நேரம் பார்த்து பக்கத்து வீட்டு பாட்டி வந்து.
“எங்க எல்லாம் கிளம்பிட்டிங்க” என்று கேட்டவாரு வாசல் படிக்கட்டில் உட்கார.
“காட்டு பக்கம் போய்ட்டு வரோம் அப்பத்தா” என்றான் மாதவன்.
“அம்மாவாசையும் அதுமாவா... நாளைக்கு போலாமில்ல”
“இல்ல அப்பத்தா, நாளைக்கு மறுநாள் ஊருக்கு போராங்க அதான்”
“காத்து கருப்பு ரொம்ப நடமாட்டம் இருக்குமே பார்த்து போங்க”
“சரி பாட்டி என்று ஆறு மணிக்கு இவர்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.