• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

24 மனைவியின்...காதலன்!

Bindu sarah

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
65
14
8
Dharmapuri

24...காதலன்!

ஆளுக்கொரு பேக் பேக் தண்ணி மதிய உணவு ஸ்னேக்ஸ் என்று எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். வரப்போர ஆபத்து தெரியாமல், மூவரும் உற்ச்சாகமாக கிளம்பினார்கள்.

தாரகை நிறைய முறை போய் வந்ததால் நீங்களே போய்ட்டு வாங்க என்று சொல்லிவிட.

மூவரும் கிளம்பினார்கள்.

ராதா தனியாக நடந்து வர... அனு மாதவனிடம் கதை அளந்துகொண்டே வந்தாள்.

ராதா சுற்றி இருக்கும் பசுமை சூழலையும்... வித விதமான பறவைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தாள்.

'இன்னும் ஒரு நாள் தான் இருக்குமாதவன், அதுக்கு அப்புறம் நிம்மதியா மீண்டும் உன் வாழ்க்கையை வாழ போய்டலாம். இந்த அனு தொல்லை தான் தாங்க முடியலை, இதுல மேடம் கோச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க முடியலை இவங்க தொல்லை. கிருஷ்ணா ஐ மிஸ் யூ... சீக்கரம் வாடா' மனதில் நினைத்தவள்.. அந்த காட்டின் எல்லைக்கு போக... அங்கு ஒரு சிறு ஓடை ஓடிக்கொண்டு இருந்தது, ராதா தண்ணீயை பார்த்ததும்... இறங்கி ஆட்டம் போட.

அனுவும் மாதவனும் இன்னும் தங்களது பேச்சை முடிக்கவில்லை.

என்னதான் ராதா விளையாடிக் கொண்டு இருந்தாலும்... அவளது பார்வை முழுவதும் மாதவன்மீது தான் இருந்தது.

'கண்ணா... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண் எப்படி உனக்கு என்னை பிரிஞ்சி இருக்க முடியுது. உன்னை நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்காம விட மாட்டேன்டா'

அங்கிருந்து அனைவரும் கிளம்பி வரும் போது, வழக்கம் போல மாதவனும் அனுவும் பேசிக்கொண்டே முன் செல்ல, ராதா அங்கு இருக்கும் இயற்க்கை செல்வங்களை நிழல் படம் பிடித்துக்கொண்டு வந்தாள்.
முக்கால் வாசி தூரத்தை கடந்ததும்...

இரண்டு கருப்பு உருவம் ராதாவை கடத்திக் கொண்டு காட்டின் எல்லைக்கு போனது.

அனுவுடன் பேசிக் கொண்டு வந்தாலும் மாதவன் மனதில், 'ஏன் ராதா திரும்ப வந்து என் மனசில் ஆசை வளர்த்துவிட்டுட்ட, இன்னும் ஒரு நாள் தான் கண்ணா கஷ்டப்பட்டு அடக்கனும், தப்பித்தவறி கூட எதும் காட்டக் கூடாது' மனதை கஷ்டப்பட்டு அடக்கி வந்தான்.

மனதில் ஏதோ ஒரு நெருடல் மாதவனுக்கு, ராதாவை திரும்பி பார்க்க சொல்ல, ஆனால் மாதவன் தன் மனதை பெரும் பாடுபட்டு அடக்கினான் திரும்பி பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் அந்த இரண்டு உருவம் தூக்கிக் கொண்டு போனது ராதாவை.

"டேய் தடிமாடுகளா... எதுக்கு டா என்னை கடத்தி வச்சி இருக்கிங்க"

"உன்னை டார்சர் செய்ய தான்"

"என்னை எதுக்குடா டார்சர் செய்யனும்"

"இன்னுமா எங்களை யாருன்னு தெரியலை"

"டேய்... அந்த குரங்கு முக மூடியை எடுங்கடா, லூசு கடத்தல் காரங்களா"

இருவரும் திறந்து காட்ட,

"அடேய்... ஓனான் மூஞ்சி, நீ என்ன செய்யுற இங்கே, டேய் பாரின் மாப்பிள்ளை நீ இங்க என்ன செய்யுறிங்க"

"பார்த்தா தெரியலை ரிவெஞ் வாங்க கடத்தி இருக்கோம்"

"எதே ரிவெஞ்ஜா?"

"டேய் நான் என்ன டா செஞ்சேன்... ரிவேஜ் வாங்குற அளவுக்கு"

"உன்னால எங்க இரண்டு பேருக்கும் வேலை இல்லை அது தெரியுமா"

"வேலை இல்லையா?"

"ஆமா... அந்த வேலை மட்டுமில்லை, இனி எந்த வேலைக்கும் போக முடியாத அளவுக்கு பண்ணிட்டான்"

"டேய் அது சாதாரணமா கேட்டு இருந்தாவே நான் வழி செஞ்சி இருப்பேன், இந்த கிருஷ்ணாவை வச்சிட்டு என்ன செய்ய... இந்த காமெடி பீஸ்களை எல்லாம் வில்லன் ரேஞ்சிக்கு மாத்தி விட்டுட்டான்"

"நாங்க பட்ட அவமானம் என்ன தெரியுமா, பணம் இருக்க திமிரு இல்ல உங்களுக்கு, அதை எப்படி அடக்குறோம் பாரு"

"எது எங்களுக்கு பணத் திமிரா, நீங்க பேசியதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தா தெரியும்"

"நீ செய்யாதது ஒன்னும் நாங்கள் சொல்லலை, என்ன நீ என்ன உத்தமியா டி. ஒருத்தனை லவ் செஞ்சிட்டு இழிச்ச வாயனை தானே தேடிட்டு இருந்தீங்க இரண்டு பேரும்"

"ஓ... நல்லா இருக்கே, பசங்க லவ் செஞ்சிட்டு பிரேக் அப் அப்புறம் நீங்க பெண் பார்த்து கட்டிக்கலாம், நீங்க செஞ்சா அது பேரு மூவ் ஆன், அதே பெண் செய்தால் அதற்க்கு பெயர் ஒழுக்கம் இல்லாதவள், அடங்காதவள்... அதை எல்லாம் மீறி அசிங்கமா பெயர் வைப்பிங்க அப்படி தானே"

இருவரிடமும் அமைதி மட்டும் தான்.

இவர்கள் மட்டுமல்ல... விஞ்ஞானம் தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும் இந்த சமூகத்தில் இருப்பர்களின் கண்ணோட்டம் இதுதான்.

ஒரு ஆண்மகனுக்கு பிரேக் அப் நடந்தால்... அதை விட்டுட்டு அடுத்த பெண்ணையே வாழ்க்கை துணையாக தேடிட்டு போவது சரி.. அதை அந்த சமூகம் ஏற்க்கும்.

அதுவே அந்த இடத்தில் ஒரு பெண் இருந்தால்... அவளுக்கு எவ்வளவு இழிவான பெயர் சூட்டுகிறது இந்த சமுகம்.

ஏன் ஒரு காதல் அப்புறம் அவளுக்கு வாழ தகுதி இல்லையா? ஆண்களை ஏற்க்கும் இந்த சமூகம் பெண்களின் இந்த நிலையை ஏன் ஏற்க்க மறுக்கிறது.

மனம் எல்லோருக்கும் இருப்பது ஒன்று தானே.

எத்தனை பேர் சொன்னாலும், இந்த மனப்பான்மை மாறப்போவது இல்லை.

"என் கையை கழட்டி விடுங்க, நீங்க பேசியதுக்கு கிருஷ்ணா உயிரோடு விட்டதே பெருசு"

"என்ன டி ஓவரா பேசுற எனக்கு வேலை போனது கூட மன்னிச்சிடுவேன்... என் பல் இரண்டு போச்சி. எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா" ராதா முகத்தில் பலார் என்று பாரின் மாப்பிள்ளை அடிவிட.

ராதா உதடு கிளிந்து ரத்தம் வடிந்தது.

"டேய் உங்களுக்கு பட்டது பத்தலை, கிருஷ்ணா வாது இறக்க குணம் கொண்டவன், இப்போ வரப்போறவன்... எமன்டா"

"ஏன்டி ஓவரா போற" அந்த ஓனான் மாப்பிள்ளை அறைய... ராதா பாதி மயக்கத்துக்கு போய்ட்டா.

"டேய் நீங்க தப்பு பண்றிங்கடா"

"இல்லை சரியா தான் செய்யுறோம்... உன்னாலை நாங்க கொஞ்ச நஞ்சமா கஷ்டப்பட்டோம்" எவ்வளவு திமிரு இரண்டு பேரும் சேர்ந்து எங்க வாழ்ககையை கெடுத்துட்டிங்க. இப்போ அந்த கிருஷ்ணா வந்து எங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் அதுவரை விட மாட்டோம்"

இருவரும் ஒரு முடிவுவோடதான் வந்து இருந்தார்கள்.

எவ்வளவு மனதை கஷ்டப்பட்டு அடக்கினாலும், மாதவனால முடியாமல் திரும்பி பார்க்க... அங்கு ராதா காணோம்.

"அனு ராதாவை காணோம்"

"இவளை, எங்க போனா... கையில் கேமிரா இருந்தா போதும், எங்காவது திரிய வேண்டியது"

சிறிது தூரம் தேடியவர்களுக்கு ராதா கிடைப்பது போல தெரியவில்லை.

"அனு... கிருஷ்ணாக்கு போன் போடு வந்துட்டாரான்னு"

போனை போட்டு கேட்க...

"பாஸ் எங்க இருக்கிங்க"

"ஊரு பக்கம் வந்துட்டேன்" என்றான் கிருஷ்ணா.

அனு கையில் இருந்த போனை வாங்கி.

"கிருஷ்ணா பதட்டப் படாம நான் சொல்வது கேளுங்க"

"என்னாச்சி மாதவன்... விஷயத்தை சொல்லு ராதா கிட்ட போனை கொடு முதலில்"

"அவளை காணோம்... நாங்க தேடிட்டு இருக்கோம்"

"ச்சை... ஒழுங்கா பாத்துக்க கூட தெரியாதா, என்னை சொல்லனும் உன்னை நம்பி விட்டுட்டு போனேனே, என்னை சொல்லனும்"

கண்ணன் அமைதியாக இருக்கவும்.

"சரி மாதவன்... கொஞ்சம் நிதானமாக தேடு... எதாவது மரத்தை பார்த்துட்டு நின்னு இருப்பா"

"சரி... கிருஷ்ணா நீங்க வாங்க, அதுக்குள்ள ராதா என்கிட்ட இருப்பா"

போனை வச்சிட்டு, "அனு இந்த வழியில் போனா ஊரு வந்திடும், அதுக்கு அப்புறம் வழி கேட்டு போயிடு"

வந்த வழியில் மாதவன் ராதாவை தேடி போக.

அந்த இரு ராட்சச மிருகஙகள்... ராதாக்கு மயக்கம் தெளிய தெளிய... அவளை அடித்து அடித்து மயங்க வைத்துக் கண்டு இருதார்கள்.

'கண்ணா... கிருஷ்ணா சீக்கரம் வாங்க, கன்னம் வலிக்குது' மயக்கத்தில் ராதா பிதற்றினாள்.

'ராதா....ராதா" அந்த காடே அதிரும் படி கத்திக்கொண்டே போனான்.

"கடவுளே என் ராதையை என்டயே கொடுத்துடு, நான் சாகும் வரை அவளை கண்கலங்காம வச்சிக்கிறேன். இனி நான் விட மாட்டேன், இனி எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் அவ கூட தான் இருப்பேன்" முதல் முறையாக கண்களில் தண்ணீர் நிக்காமல் வந்து கொண்டு இருந்தது.

ராதா... ராதா... என் ராதை எங்க டி இருக்க... கிட்டத்தட்ட சிங்கம் போல கர்ஜித்து அநத காட்டில் வெறி பிடித்தவன் போல அழைந்து திரிந்து காட்டின் எல்லைக்கே வந்து சேர்ந்தான்.

ஓடையின் பக்கம் உடைந்து இருந்த அவளது கண்ணாடி வளையலும்... கையில் அவன் அணிவித்த பிரேஸ்லெட்டும் அனாதையாக இருந்தது.

கையில் எடுத்தவன், "ஐயோ ஆசை ஆசையா போட்ட கண்ணாடி வளையல் இப்படி சிதறி கிடக்கே, தங்கம் எங்க டி இருக்க இனி நான் உன்னை விட்டுட்டு போக மாட்டேன், வந்துடுடி"

கண்ணாவின் குரல் கேட்ட ராதை, "என் கண்ணா வந்துட்டான்டா, இனி உங்களை அடிச்சி துவைக்க போறான்" பாதி மயக்கத்திலும், மாதவனின் குரல் கண்டு சொல்ல.

வரும் மாதவக் கண்ணனின் உருவத்தை பார்த்து அதிர்ந்தது என்னவோ உண்மை தான்.

ஆனால் அவன் குரல் தூரம் கேட்கவும், இருவரும் ஊசாராகி ஒரு புதருக்கு இழுத்துச் சென்றார்கள்.

அவளை அங்கு கட்டிப் போட்டு விட்டு இருவரும் வந்தார்கள், மாதவன் இடம் நோக்கி இருவரும் நடந்து வர.

சுற்றி யாராவது வந்தாலும்... அவரிடம் கேட்கலாம், ஆனால் ஒருத்தரும் இல்லையே. நான் என்ன செய்வேன், ராதை, ராதை வந்துடுடி கோபத்துல எதும் செஞ்சிக்கிட்டையா... இனி உன்னை விட்டு போக மாட்டேன். கிருஷ்ணாகிட்ட பேசி... நானே உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறேன் ராதை ராதை...

இருவர் முன் வந்து நிர்க்கவும்... மாதவனுக்கு தெய்வமே முன் நிற்ப்பது போல இருந்தது.

"சார் இங்க பிங்க் டிரஸ் போட்ட பெண் பார்த்திங்களா? அவ பிளாக் பேக் வச்சி இருந்தா... கண்ணாடி போட்டு இருப்பா.. சாட் ஹேர், கொஞ்சம் நியாபகப் படுத்தி சொல்லுங்க சார்" கண்ணா இடைவிடாது கேள்வி மேல் கேள்வி கேட்க.

"நாங்க தான் கடத்தினோம்"

"என்னா?"

"டேய்... எங்கடா அவ" சுத்தி தேட.

"இந்த காடு முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டா"

"டேய் என் பொறுமையை சோதிக்காதிங்க, ஒழுங்கா எங்கன்னு சொல்லிடுங்க, முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க"

கிருஷ்ணாக்கு மெசேஜ் தட்டி விட்டு அடி வெழுக்கத் துவங்கினான் மாதவன்.

இருவரும் அடி வாங்கினாளும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.