• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

25.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



என்ன நினைச்சுட்டு இருக்கா அத்த உங்க பொண்ணு நானும் தப்பு நம்ம மேல அதை சரி பண்ணனும் ன்னு தான் பொறுமையா இருக்கேன். அவங்க பண்ணதுக்கும் இவ பண்ணதுக்கும் என்ன அத்த வித்தியாசம் ரவுடி மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்கா என்று வர்மன் கத்த..

சாகி…

அத்த என்று மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசியவனை எதுவும் கேட்க முடியாமல் தயங்கியவர் என்னாச்சு எதுக்கு இவ்வளவு கோபம் வாகி என்ன பண்ணா என்று கேட்க..

அப்ப உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுறீங்க என்று வர்மன் நக்கலாக கேட்க..

என்ன சாகி இப்படி பேசுற எனக்கு எதுவும் தெரியாதே டா…


ஓஓஓ அப்படியா அப்ப நான் பார்த்துக்கிறேன் என்றவன் அடுத்த ஃப்ளைட் பிடித்து டெல்லி சென்று இருந்தான். வாகி டெல்லி சென்று ஒருநாள் ஆகி இருந்தது. நேராக அவள் தங்கும் மாளிகை சென்றவன் ரவியை பார்க்க..

மச்சான் அவளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லடா என்று சொல்ல..

அப்படியா ஆரம்பிச்சது அவ தானே தப்பு பண்ணாங்க தான் இல்லன்னு சொல்லல ஆனா அவங்களுக்கு தண்டனை தர இவ யாரு?

வர்மா…

விடுடா எங்க அவ உள்ள இருக்காளா?

இருந்தா என்ன பண்ணிடுவ வர்மா என்று வேந்தன் வர..

டேய் ஒழுங்கா போய்டுங்க உங்ககிட்ட பேசி என்னைய கொலைகாரன் ஆக்காதீங்க…

நாங்க உன்னையே கொலைகாரன் ஆக்குவோம் நல்ல கதைடா அவளை நீ தான் இப்ப கொலைகாரி ஆக்கிட்டு இருக்க..

டேய்..

பின்ன என்னடா சத்தமே இல்லாம உன்னோட ஸ்கூல் குளோஸ் ஆனதுக்கு இவளுக்கு இருபது வருஷத்துக்கு முன்னாடி அடிப்பட்டது ல இருந்து அவளோட மனநிலை சரியில்ல அவங்க நிறைய கற்பனை திறனோட செயல்படுறாங்க அப்படி இப்படி ஒரு லெட்டர் அதுவும் சைக்காலஜி கிட்ட எப்படி டா உன்னால இப்படி பண்ண முடியது இன்னைக்கு கூட அவ டெல்லி வந்தது இது விஷயமா தான் ன்னு உனக்கு தெரியும் தானே என்று வேந்தன் கேட்க…

டேய் அது வேற விஷயம் என்று வர்மன் சொல்ல சட்டையை பிடித்து விட்டான் ரவி..என்ன பண்ண வர்மா அப்ப நீயே அவளை பைத்தியம் ன்னு எப்படி டா எப்படி உன்னால ச்சே உன்னையே நம்புனேன் பாரு என்னைய சொல்லனும் என்றவன், நீ பிசினஸ் மேன் ன்னு தெரியும் ஆனா உனக்கானவளையே நீயே இவ்வளவு தரம் தாழ்த்துவன்னு நான் நினைக்கல அப்ப உன் கிட்ட உண்மையே இல்லையா? வர்மா அவ மேல நீ வச்ச காதல் உண்மை இல்லையா எல்லாமே கணக்கு போட்டு தான் செஞ்சியா என்று ஒவ்வொரு வார்த்தையாக ரவி கேட்க கேட்க உள்ளுக்குள் உடைந்தாலும் எல்லா பக்கமும் சரி பண்ண வேண்டிய சூழலில் சின்னதாய் அவள் மருத்தவ அறிக்கையை வெளியே விட்டு இருந்தான். இதோ இப்போது அது வெடித்து கொண்டு இருக்கிறது.


ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ன்னு சொல்லுற மாதிரி இதோ இரு மலைகள் மோத இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களை கீழ் தள்ள நினைக்கும் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்.எப்போது இடம் கிடைக்கும் நுழையலாம் என்று. இதோ அரசியலில் அவளை வீழ்த்த ஒரு கூட்டமும் ராமைய்யா சாம்ராஜ்யத்தை தகர்க்க ஒரு கூட்டமும் தயாராக இருந்தது. இந்த மெயில் வந்ததும் இவளை அழைத்து விட்டனர் டெல்லிக்கு..வந்தவளை மாற்றி மாற்றி என்கொய்ரி வைக்க பதில் சொல்லி முடித்தவள் அவள் பதவியை ராஜினாமா செய்வதாக லால் இடம் சொல்ல..

அப்படி எல்லாம் முடிவு பண்ணாத நிமா நான் இருக்கேன் இல்ல பார்த்துக்கலாம் நீ இப்ப கிளம்பு அந்த வர்மா வை என்ன ஏதுன்னு நான் பார்த்துக்கிறேன். வேணாம் அங்கிள் அவருக்கு அதுல எந்த லாபமும் இல்ல கொஞ்சம் தள்ளி போடத்தான் முடியும் விடுங்க என்றவள் அவள் இடத்திற்கு வந்தவள் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று ஒரு மணிநேரம் கூட தாண்டவில்லை வந்து சத்தம் போட்டு கொண்டு இருந்தான் வர்மன். அவன் குரல் கேட்க கேட்க வெறி வந்ததோ இல்லையோ ஆரம்பத்தில் அவனை புரியாமல் சொன்ன ப்ளே பாய் என்ற வார்த்தை இப்போது அவன் விளையாடி பார்த்து இருக்கும் விஷயத்தில் புரிந்து போனது அவன் அவனுக்கானதை அடைய எந்த காரியத்தையும் செய்வான் என்று… ஆனால் அவள் உணர மறுத்தது இதுவரை அவன் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை என்பதை தான்.

டேய் நகருங்க நான் அவளை பார்த்தே ஆகனும் என்று கத்த..வேந்தனோ அவனை அனுமதிக்கவில்லை.ரவி அசையாமல் நின்று விட்டான்.

உள்ள விடு வேந்தா என்ன பேசனுமோ இன்னைக்கு பேசி முடிவுக்கு வரட்டும் இரண்டுபேரும் என்று உள்ளே வந்தான் பரத்.

போதும் டா இதுவரை அவ அனுபவிச்சது.அவளுக்கு இவன் வாங்கி கொடுத்த பேர் எல்லாம் பயங்கரமா இருந்தது. இன்னும் என்ன பேசி அவளை உருக்குலைய வைக்க பார்க்கிறான் ன்னு தான் தெரியல எனக்கு என்று வேந்தன் சொல்ல..

எந்த விஷயத்தையும் தாங்கு வாடா அவ எல்லாத்தையும் கடந்துட்டா இது கடக்க மாட்டாளா விடு அவனை என்று பரத் மீண்டும் சொல்ல..

வர்மன் வேந்தனை தள்ளிவிட்டு அறையை தள்ள அறையோ தன்னால் திறந்து கொண்டது அது தான் அவள் அறை என்று நினைத்து உள்ளே செல்ல அதுவோ வரவேற்பறை போல இருந்தது. சுற்றி பார்க்க மேலும் உள்ளே செல்ல வழி இருக்க முன்னோக்கி செல்ல உள்ளே ஒரு கதவு இருக்க… வாகி என்று தான் அழைத்தான் அவளுக்கு தெரியாதா யாருடைய குரல் என்று கதவு திறக்கப்படாமல் இருக்க,அம்மு நான் தான்டி வெளியே வாவேன்.ப்ளீஸ் டி உன்னையே நெருங்க எனக்கு வேற வழி தெரியல ஆனா இப்படி பார்க்க வருவேன் ன்னு நினைக்கல டி ..ப்ளீஸ் அம்மு யாருக்கு புரியுமோ இல்லையோ உனக்கு என்னைய புரியும் ன்னு தெரியும் டி வெளியே வா பேசனும் என்று சொல்ல சொல்ல உள்ளிருந்தவளுக்கோ மொத்தமாக தோற்ற எண்ணம். என்ன தெரியும் என்ன புரிஞ்சவச்சேன் எந்த விதத்தில் என் வாழ்க்கையை அவரோட ன்னு நினைக்க வச்சது மொத்தமாய் ஒரு சுயநலமான ஆளைத் தானே நேசித்து இருக்கிறேன் என்று நினைத்து நினைத்து இருந்தவளுக்கு தலையிடிப்பு தான் இரட்டிப்பு ஆனது. அந்த இடிப்போட இதோ கதவும் இடிபட பட்டென திறந்து இருந்தாள் கதவை.

அம்மு என்று அவள் அருகில் வர..

போதும் மிஸ்டர் வர்மன் உங்ககிட்ட பேச என்ன இருக்குன்னு இங்க வந்தீங்க நீ? நான் பாஸ் பண்ண ஆர்டரை எதிர்த்து கேஸ் ஃபைல் பண்ணி இருக்கீங்க எதுவா இருந்தாலும் அங்க பார்த்துக்கலாம் இப்ப நீங்க இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்ல…

அம்மு அது வந்து..

கால் மீ நிமாவாகினி..

அடியேய் நான் இப்படித்தான் கூப்பிடுவேன்.

நீங்க யாரு என்னைய அப்படி கூப்பிட..

ப்ச் உன் வருங்காலம் டி…

வாட்…

உன் வருங்காலம் என்று மறுபடி சொல்ல..

ச்சே என்ன மனுஷன் நீங்க எல்லாம், எங்கிருந்து இப்படி கிளம்பி வரீங்க கெட் அவுட் என்று கத்த..

ப்ச் அம்மு நாம இதை பத்தி அப்புறம் பேசலாம் என்றவனை ஏற இறங்க பார்த்தவள் என்ன விஷயமா இங்க வரை வரனும் மிஸ்டர் என்றதும் தான் எதற்கு வந்தோம் என்ற நினைவே வர…தன் தலையை உலுக்கி கொண்டவன் என்ன நினைச்சு டி நீ அம்மாவை இப்படி பண்ண என்று உறும..

ஓஓஓ அதானே சோழியன் குடுமி சும்மா ஆடாதே… வேலையா தான் வந்து இருக்கீங்க …உங்க அம்மாக்கு என்ன இப்ப அங்க சொகுசா இருக்காங்களே என்று நக்கலாக கேட்க.

ஒன்னும் தெரியாத மாதிரி பேசாதடி அவங்க பண்ணது தப்பு தான் அதுக்கு இப்படி பண்ணுவியா அவங்க வயசானவங்க டி இனி எப்படி அவங்களை அவங்க என்று திணற..

என்ன மிஸ்டர் தாய்ப்பாசம் என்று சிரிக்க..

ஏய் …

இந்த மிரட்டல் எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க மிஸ்டர் வர்மன் அதுக்கான இடமும் ஆளும் நான் இல்ல…

என்ன இல்ல பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு ..

உங்க அம்மா பண்ணதை விடவா என்றவள் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர கடுப்பாகி இருந்தான் வர்மன் உலகத்திற்கு எப்படியோ தனக்கு நல்ல தாய் தகப்பனை விவரம் அறிந்து அறியாதவன் அவனை எந்த இடத்திலும் கலங்க விடாதவள் பல்லவி.இதோ தன் கண் முன்னே இடுப்பிற்கு கீழ் எந்த உணர்வும் இல்லாமல் மருத்துவமனையில் இருப்பவரை பார்த்து கலங்கித்தான் போய் இருந்தான். அந்த கோவத்தை காட்டத்தான் வந்தான் ஆனால் வந்த இடத்தில் அவன் ஏற்படுத்திய விஷயம் உடனே வெளி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவள் கட்சி ஆட்களே அவளை குடைந்து எடுப்பார்கள் என்று நினைக்கவில்லை இதை மிகவும் ரகசியமாகவே நகர்த்தி இருந்தான்.ஆனால் நடந்தது என்னவென்று இன்னும் முழுமையாக வர்மனுக்கு தெரியவில்லை. விஷயம் முன்னரே வெளியே வந்து இருந்தாலும் அவனுக்கு அதைப்பற்றி அறிய விடமால் செய்தது ராமைய்யாவாச்சே சிறு தகவலும் சென்று அடைய விடாமல் அவனை நகர்த்தி வந்தவர் வாகியின் மொத்த விஷயமும் வெளிக்கொண்டு வந்து அதில் அவளை உடைக்கவும் செய்து இருந்தார். வர்மன் அதைபற்றி எதையும் கேட்காமல் அவன் தாய்க்கானதை பிரதானமாக பேச பேச ,வரே வா நீங்க பண்ணது எல்லாம் என்ன ஏதுன்னு நினைக்க தோணல ஆனா பல பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்ச அவங்களுக்கு கொடி பிடிக்க வந்து இருக்கீங்க சரிதான் அம்மாவா ச்சே பிடிக்கலன்னா எப்படி என்றவள் நான் பைத்தியம் என்கிட்டே என்ன எதிர்பார்த்து வந்தீங்க வர்மன்.நான் பைத்தியம் அதுவும் இப்ப பழி வாங்க நினைக்கிற ஒரு மனநோயாளி என்னோட எந்த கையெழுத்தும் செல்லுபடி ஆகாதுன்னு உத்தரவு வாங்கிட்டீங்க அதைவிட பிரமாதம் என் மனநிலை பாதிப்பால் என் உடல் நலனிலும் நிறைய தவறுகள் இருக்கு ஒரு மனநோயாளியா நான் எல்லா தவறும் செய்ய முடியும் ன்னு பேசுற அளவுக்கு கொண்டு வந்துட்டீங்க வேற என்ன தேவை இருக்கு ன்னு வந்தீங்க வர்மன் என்னைய அங்க கேட்ட கேள்வி இங்க நேரடியா செயல்படுத்தி பார்க்க மிஸ்டர்.ராமைய்யா அனுப்பினாரா என்று அங்கிருந்த பேப்பரை தூக்கி வீச…

என்ன பேசுற அம்மு..

என்ன பேசனும் என்ன எதிர்பார்ப்பு சொல்லுங்க மனநிலை சரியில்லாத அவளை முழுசா எதுவேணும்…ன்னா…என்று முடிக்காமல் விட, அதிர்ந்து தளர்ந்து அம்மு என்று
நெருங்க கேட்ட கேள்வியை முடிக்க முடியாமல் கதறி இருந்தாள் நிமாவாகினி…



தொடரும்
 
  • Angry
Reactions: shasri