• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

25.நவிலனின் கோதையானவள்​




மீண்டும் மீண்டும் ராணி பேசியதை பேச விக்னேஷ் தான் மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்து இருந்தான். ம்மா அப்படி பனிக்கு நாளைக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் அது அவளோட பங்கு அதை கேட்கவோ இல்ல மாத்தி தரச் சொல்லவோ யாருக்கும் இங்க உரிமை இல்ல இந்த சொத்தில் உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவுக்கு மாமா கற்கும் இருக்கு அப்ப அவருடைய பங்கை அவர் அவரோட மனைவி பொண்ணுக்கு பிறகு என்ன பண்ணனும் ன்னு அவங்க முடிவு பண்ணுவாங்க இதைப்பற்றி இனி நீங்க பேசுவதா இருந்தா மாமா வீட்டுக்கு தயவு செய்து வராதீங்க..

டேய் என்ன வாய் அதிகமா பேசுது..


ப்ச் அப்பா இருக்க கொஞ்ச நஞ்ச நிம்மதியை அம்மா மொத்தமா முடிச்சிடு வாங்க போல என்ன பண்ணலாம் என்று சாம்பசிவத்தை பார்க்க..



ராணி கிளம்பு இந்த சொத்து சுகம் எல்லாம் உன் பையன் பார்த்துப்பான் நீ ஏன் அதை போட்டு மண்டையில் ஏத்திட்டு இருக்க?

ஏன் ஏத்தாம அவளுக்கு மறுபடி பழைய மாதிரி பைத்தியமா ஆக மாட்டான்னு என்ன நிச்சயம்?

அண்ணி அக்கா என்று அம்சா கார்த்திகேயன் சத்தமிட…

நிறுத்துங்க உண்மையை தானே சொல்லுறேன்..

அவளை சந்தோஷமா வச்சுக்கிட்டா நல்லா தான் இருக்கு போறா..

ஆமா ஆமா அவளை சந்தோஷமா வச்சுக்கலாம் ஆனா அவ எல்லாரையும் ப்ச் எல்லாரையும் விடு அவ புருஷனை சந்தோஷமா வச்சுக்க முடியுமா என்று ஊசியால் குத்துவது போல் கேட்க…

என்ன பேச்சு மா பேசுற என்று விக்னேஷ் பொங்கி விட…

டேய் எகிறாத இத்தனை வருஷமா அவ கல்யாணம் பண்ணாம இருந்தது அது தானே காரணம் இதோ கல்யாணம் ஆகி ஒரு மாசம் தாண்டி போச்சு இதுவரை அவ முகத்தில் கல்யாண கலை வந்து இருக்கா? இல்ல வரனும் ன்னு அவளுக்கு எண்ணம் தான் இருக்கா.?

அது அவளோட பிரச்சினை அதைவிட அது நவிலன் அண்ணாவோட பிரச்சினை உங்களுக்கு என்னம்மா அதுல என்று விக்னேஷ் எகிற…

எனக்கு ஒன்னு இல்ல தான் ஆனா அந்த பைத்தியத்துக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரீங்க மறுபடி அதே நிலைமைக்கு வரமாட்டான்னு என்ன நிச்சியம்..அப்படியே வராம இருந்தாலும் அவ மனநிலைக்கு நல்ல விதமா தான் பொறக்கும் ன்னு என்ன உத்திரவாதம் என்று நிறுத்தாமல் பேச


கார்த்திகேயன் அமைதியாக… மாமா நீங்க அழைச்சிட்டு போய்டுங்க இரண்டு நாள்ல என்ன பாகமோ அதை சரியாக பிரிச்சு எழுதிடலாம் என்ன ஏது ஆனாலும் அது என்னோட குடும்பத்தோட இருக்கட்டும் அப்புறம் அக்கா சொல்லுற மாதிரி ஒரு சூழல் வந்தா என் சொத்து முழுக்க ஆசிரமத்துக்கு எழுதி வச்சிடுறேன் போதுமா விளக்கம் என்று ராணியை பார்க்க..

ராணி, “ புசு புசுவென மூச்சை வெளியிட்டவர் இதுக்கு தான் இந்த மாதிரி போய்ட கூடாதுன்னு தான் ந் பயந்தேன் இவனுக்கு எவ்வளவு ஏத்தம் பார்த்தீங்களா நான் இருக்கேன் நம்ம பிள்ளைங்க இருக்காங்க இவனை நல்ல நிலையில் வச்சு இவனுக்கு கல்யாணம் காட்சி பார்த்தது எல்லாம் மறந்துட்டு ஆசிரமத்துக்கு எழுதுவானாம்.

சாம்பசிவம், “ சரி மாப்ள நீ சொல்ள மாதிரி பண்ணிடலாம் அப்படியே நவிலனை வரச் சொல்லு அவனுக்கும் தெரியும் இல்ல என்று அவர் ராணியை பொருட்டாக எண்ணாமல் பேச…

என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று ராணி எகிற…

இதோட நிறுத்திக்க என்று சாம்பசிவம் அறைந்ததில் சற்றே அதிர்ந்த ராணி கோவமாக பார்க்க உனக்கான என்ன பங்கோ அதை கார்த்தி தந்துடுவான் அதை பெருக்கறதும் இல்ல அழிக்கறதும் உன்னோட பொறுப்பு விக்னேஷ் அப்பா உனக்கு என்னால் என்ன தர முடியுமோ அதை தரேன் அதை வச்சு நீ வாழு வினி க்கு என் சக்தி க்கு என்ன முடியுமோ அதை செல்சு நல்லவிதமா வாழ்க்கை அமைச்சு தந்துடுறேன் அவ சொத்தை அவளே வச்சுட்டு அழகு பார்க்கட்டும் விடு என்றவர் விக்னேஷ் கிளம்பலாம் வா மாசம் மாசம் இது ஒரு விஷயமா தூக்கிட்டு இங்க வந்துடுறா என்றவர் இங்க பாரு ராணி என் பேச்சுக்கு மதிப்பு தரதா இருந்தா வீடு வா இல்லையா உன் சொத்துல இருக்க வீட்டுக்கு போய்ட்டே இரு என்றவர் கார்த்தி அம்சாவிடம் சொல்லிட்டு கிளம்ப …அதற்கு முன்பே வெளியேறி இருந்தார் ராணி…

அம்சா, “ அண்ணிக்கு சேரவேண்டியதை பிரிச்சுடுங்க இதுக்குமேல இதை வளர்க்க வேண்டாம்

கார்த்திகேயன், “ ஏற்கனவே எழுதினது தான் அம்சா இப்ப லீலா பண்ணிடலாம் என்றவர் அடுத்த அடுத்த நாட்களில் வேலையை முடிக்க..

இங்கே பள்ளியில் பிள்ளைகளுடன் போராடி கொண்டு இருந்தாள் கவி மற்ற எந்த விஷயத்திலும் அவளால் தலையிட முடியவில்லை இதுவே முழு நேரத்தையும் முழுங்கி விட வசந்த் தான் செயல்படுத்த நினைத்த அத்தனை வேலைகளையும் அந்த ஒரு மாதத்தில் முடித்து இருந்தார்.

நவின், “என்ன மாமா ஒரே சந்தோஷம் ?

பின்ன இல்லையா என் தங்கச்சி புத்திசாலி டா அதான் உனக்கு கிடைச்சு இருக்கா…

ஹான் அப்படியா..

பின்ன இல்லையா?

இப்ப எல்லாம் கவி ரொம்ப பிஸி அவளோட புக்கை எல்லாம் தூசு தட்டி எடுத்து அதோட தினமும் நியூஸ் ஜேனர்ல் ன்னு அவளோட தேடல்களே தனி தான் இத்தனை நாள் வீட்டுக்குள்ள அவளை வச்சு வேஸ்ட் பண்ணிட்டோம் இப்ப எப்படி தெரியுமா இருக்கா…

அட நீங்க வேற மாமா இத்தனை நாள் வீட்டில் இருக்கும் போதே நம்மளை குடையுவா இப்ப வெளி உலகத்திற்கு வந்துட்டா இல்ல இனி பாருங்க இரண்டு மடங்கு ஆகிடும் …

சரி தங்கச்சி எங்க இப்ப எப்படி இருக்கு…

ம்ம்ம இருக்கா மாமா கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது…

எல்லாருக்கும் சொலியூசன் சொல்லுற அவளுக்கு பார்க்க வேண்டாமா என்று வசந்த் கேட்க…

அவளை அதுல இருந்து வெளியே கொண்டு வரத் தான் இவ்வளவு செய்யுறேன் மாமா ஆனா அவ அங்கேயே ஸ்டக் ஆகி நிற்குறா நடந்த விஷயத்தை அவளோட மூளை மறக்க நினைக்கல அது சம்பந்தமா எது நடந்தாலும் அது அவளை தாக்குதுன்னு இப்ப தான் நானே அனலசைன் பண்ணி இருக்கேன் அவங்க யாரையும் இனி அவ பார்க்க கூடாதுன்னு முடிவு எடுக்க என்னால் முடியல மாமா எதுவா இருந்தாலும் அதை கடந்து அவ வரனும் அதுக்கு தான் நான் முயற்சி பண்ணுறேன் ஆனா முடியல இப்படி அவளை பார்க்க தான் இத்தனை வருஷம் காத்து இருந்தனான்னு இருக்கு…

வசந்த் , “ நவி…

முடியல மாமா அன்னைக்கு மலரும் நானும் இந்த முடிவை எடுக்காம இருந்து இருக்கலாமோன்னு இருக்கு…எந்தவிதத்திலும் அவளை நான் நெருங்க முடியல பார்த்தாலே அலறி கத்துறா இதோ இப்ப கூட தூங்கவும் தான் அவளோட உட்கார்ந்து இருந்தேன்.

உங்க மாமனார் வீட்டுல என்ன சொல்லுறாங்க?

மாமா எதுவும் சொல்லல உன்னோட பொறுப்பு நவிலா இப்ப இல்ல அப்ப இருந்தே நீ தான் அவளை பார்க்கிற அதனால் எனக்கு கவலை இல்ல அப்படின்னு முடிச்சிட்டாரு…அத்த தான் என் பொண்ணை கை விட்டுறாதீங்க ன்னு ரொம்ப உடைஞ்சுட்டாங்க ஏன்னா அக்கா மாதிரியே இவளோட அத்தையும் அவளை பேசி இருப்பாங்க போல…அதான் அத்தைக்கு பயம்…

அக்கா மாதிரி இல்ல நவிலா இரண்டு பேரும் மீட் பண்ணி இருக்காங்க..

மாமா …. என்ன சொல்லுறீங்க?

ஆமா இந்த சொத்து விஷயமா உங்க அக்கா அவங்களை பார்த்து பேசி இருக்கா..

ப்ச் என்ன மாமா இது…

ஒன்னும் பண்ண முடியாது அந்த விஷயம் கேள்விபட்டதில் இருந்து உங்க அக்கா உன் கல்யாணத்தில் இடைஞ்சல் தான். இதை இனியும் தொடராத நவிலா, இனி உனக்கான பாதையை சரியா அமைச்சுக்கோ அன்னைக்கு உன்னோட மாமனார் வந்து அவர் சொத்து விஷயத்தில் பேசின மாதிரி நீயும் உங்க விஷயத்தில் முடிவு எடுக்கனும்.

சரியா சொன்னீங்க மாப்ள அவளுக்கானதை ஏற்கனவே இது தான் முடிவு பண்ணி இருக்கு இனி இந்த ஷேர் ஹோல்டர் அப்படின்னு எல்லாம் எதுவும் வேணாம் அவனுக்கானது அவனுக்கு கவனிக்காது கவிக்குன்னு முடிவு பண்ணுங்க அப்ப தான் போக வர மட்டும் இருக்கும்.

வசந்த் நவிலனை பார்க்க..

என்ன மாமா

அத்த சொல்லுறது சரி தானே நிலா


அப்ப ஹாஸ்பிடல் ஷேர்…

அதை அவ பேர்க்கோ இல்ல மகன் போருக்கோ டெபாசிட் பண்ணிடு வேற எதுவும் வேணாம் என் கம்பெனி நல்ல நிலையில் தான் இருக்கு அதுல மஞ்சுக்கு 30% ஷேர் ன்னு முடிவு பண்ணி ப்ராபரா எழுதிட்டேன் அம்மாக்கு 10% ஷேர் மீதி எல்லாம் உன் அக்காவுக்கு தான்…

மாமா லீகலா அக்கா க்குன்னு முடிவு பண்ணிட்டீங்களா ஆமா எனக்கு பிறகு அவ பையனுக்கு தான்..

ஆனா மஞ்சு அவன் இரண்டு பேரும் தெளிவா இருக்காங்க நாங்க படிச்சு நாங்களே சம்பாதிச்சிக்கிறோம் ன்னு…

நல்ல முடிவு மாமா

நீ கூட நல்ல முடிவு எடுக்கனும் நவிலா இனி உன் வாழ்க்கையை பார்க்கனும் இனி உன் முழு கவனமும் பனி மேல் தான் இருக்கனும்.


ம்ம்ம்

எப்ப கிளம்புறீங்க கனடாக்கு…

ஒரு வாரத்தில் மாமா…

வேற எதுவும் சொன்னாங்களா இல்ல மாமா

சரி நான் கிளம்புறேன் என்று வசந்த் கிளம்பிவிட நவின் பனி இருந்த அறைக்குள் சென்று இருந்தான்.

நிசப்தமாக இருந்தது அறை எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக உறக்கத்தில் இருந்தாள். அவளை பார்த்தால் யாரும் சொல்லமாட்டார்கள் கத்தி ஆர்பாட்டம் செய்து கொண்டு இருக்கிறாள் இந்த ஒரு மாதமாக என்று அவ்வளவு தெளிவு மற்றவர்களை பார்க்க ஆண் என்ற வர்க்கம் கண்ணெதிரே வராத வரை… அதையும் இந்த ஒரு வாரத்தில் மௌனம் எனும் கேடயம் கொண்டு மாற்றி இருக்கிறாள்.

இரவு நெருங்கி விட்டது ஆனால் பனி முழிக்கும் நிலையில் இல்லை அப்படி ஒரு உறக்கம் நவின் பல யோசனையில் இருந்தான்.

மங்கை, ‘உங்க அக்கா போன் பண்ணா நவிலா”…

ம்ம்

அங்க உங்க மாமா கூட சண்டை போல.


ம்ம்

என்னாச்சு நவிலா…

ஒன்னு இல்லம்மா மாமா பார்த்துப்பார் விடுங்க என்றவன் தாய்க்காக உடனே மாமனுக்கு போன் போட…

பிரச்சினை எதுவும் இல்ல நவிலா…

என்னாச்சு மாமா…


வழக்கம் போல தான் என்ன விஷயம் எல்லாம் அவ காதுக்கு ரீச் ஆகிட்டு அதான் இன்னைக்கு பலமா என்று சிரிக்க..

நான் வரட்டா..

இல்லடா வேணாம் என்னைக்கா இருந்தாலும் தெரிய வேண்டியது தானே…

ஆமா தெரியும் அதெப்படி மொத்தமா ஒதுக்கலாம் என்று ஓங்கி ஒலித்து இருந்தது அந்த பக்கத்தில் கவிதாவின் குரல்..


தொடரும்

 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem
பிரச்னைலயே போகுது வாழ்க்கை 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
உண்மை தான் வாழ்க்கையில் இன்ப துன்பம் நிறைந்தது ன்னு சொல்லுவதை விட துன்பம் கொஞ்சம் தூக்கலா