கிருஷ்ணா இரண்டு பெண்களையும் வீட்டிற்கு கிளம்பச் சொல்லவும் சத்யபாரதி மறுத்தாள்.
"ஏன் பாரதி? எதுக்கு இப்படி பயப்படுறே? என்று வினவ,
"தெரிந்து கொண்டே கேட்டால் என்னவென்று சொல்ல கண்ணன் ?
"அத்தை தானே பாரதி? தைரியமாக கிளம்பு. ரூபாவும் கூடவே இருப்பாள். இப்போது முக்கியமாக அங்கே போகச் சொல்வதற்கு காரணம் வேறு. அதிகபட்சமாக இரண்டு நாட்கள் தான் பாரதி. மாமா இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தாக வேண்டும் என்பதால் அத்தையை நகரவிடாமல் பார்த்து கொள்வது எளிது. போதுமா?
அரை மனதோடு சத்யபாரதி கிளம்ப ஆயத்தமானாள். அத்தை பயம் இருந்தாலும் உள்ளபடியே இப்போது கண்ணனை பிரிய கொஞ்சமும் விருப்பமில்லை. அதை சொல்ல முடியவில்லை. ஆனால் தகுந்தபடி உரிமையுடன் அவன் வீட்டில் இருப்பதுதான் மரியாதை என்றும் உணர்ந்து இருந்ததால் மேற்கொண்டு அவளால் விவாதம் செய்ய முடியவில்லை.
இருவரையும் அவர்கள் இருப்பிடத்தில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு சென்ற கிருஷ்ணா, மாமாவை சென்று பார்த்தான். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மாமாவின் அறை முன்பாக யாரையும் காணவில்லை. அனிஷா தான் உடன் இருந்தாள். அவளை வீட்டிற்கு அனுப்பச் சொல்லி ஏற்கெனவே ரவியை அனுப்பியிருந்தான். கீழே வந்து வரவேற்பறையில் பார்த்தால் கனகவல்லியிடம் மாட்டி ரவி முழித்துக் கொண்டு நிற்பதை பார்த்தான்.
தர்மலிங்கத்தை இரண்டு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று மருத்துவர் சொன்னதால் மாலையில் கனகவல்லி மருத்துவமனைக்கு சென்றாள். அங்கே வரவேற்பறையில் ஓர் ஓரமாக காபி அருந்தியபடி ரவியும் அனிஷாவும் சிரித்தபடி நின்ற காட்சியில் ஒருகணம் அதிர்ந்து போய் கத்த நினைத்தவள், சுற்றுப்புறம் கருத்தில் பட பல்லை கடித்து தன்னை அடக்கிக் கொண்டு, மகளை தனியே விளித்து பொரிய தொடங்கினாள். "ஏன்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?? கட்டிக்கப் போற உன் அத்தான் கண்டவனோட நீ இளிச்சுட்டு நிற்கிறதைப் பார்த்தால் என்ன நினைப்பான்?? எத்தனை தரம் சொல்றது உனக்கு? அவன் கூட இன்னொரு வாட்டி பேசறதை பார்த்தேன்னா அவ்வளவு தான், நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்". என்ற தாயை மிரட்சியுடன் பார்த்துவிட்டு, தலையசைத்த அனிஷாவின் மனதில், "இப்போ மட்டும் மனுஷியா இருக்கிறதா நினைப்பாக்கும்? இதற்கே இவ்வளவு கோபப்படுகிறாளே இந்த அம்மா. அத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறதில்லைனு தெரிஞ்சா என்ன செய்வாளோ? பேசாமல் ஹாஸ்டலுக்கே திரும்பி போனால்தான் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் இந்த அம்மா எப்போ என்ன செய்வாள் என்று நிச்சயமில்லை" என்று எண்ணிக்கொள்ள. .
ரவியை கண்ட கனகவல்லிக்கு அவனை சும்மா விட்டுவிட மனமற்று, பேச்சு கொடுத்தாள். "ஆமா நீ எங்கே வந்தே தம்பி? நீ இன்னிக்கு ஆபீஸ் போகலையா?? என்று ரவியிடம் விசாரணையில் இறங்கினாள்
"நான் ஆபீசில் இருந்து கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன் ஆன்ட்டி. அனிஷா காலையில் இருந்து இங்கே இருக்கிறதாகவும் அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு என்னை இங்கே பார்த்துக்கொள்ளும்படி சார்தான் அனுப்பினார்."
"அப்படியா ? என்றவள், " ஆமா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா தம்பி?"
"இல்லை ஆன்ட்டி, வீட்டில் பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க"
"ஓஹோ, நல்ல விஷயம். வீட்டில் யாரெல்லாம் இருக்கிறாங்க?"
"அம்மாவும் நானும் தான் ஆன்ட்டி." என்ற ரவி கிளம்ப ஆயத்தமாகும் விதமாக அவனது அலுவலக பையை எடுத்து தோளில் மாட்டவும்,
"அட இரு தம்பி. என்ன அவசரம்? என்றவள், தொடர்ந்து "ஆமா தம்பி, அந்த சத்யா பொண்ணை உனக்கு தெரியுமா?"
"ஓ! என்று ஏதேட்சையாக திரும்பாயவனின் விழிகள் அனிஷாவின் சைகையை சரியான நேரத்தில் கவனித்து, பேச்சை நிறுத்திவிட்டான் ரவி.
"எப்படி தம்பி? அவளை பார்த்து பேசியிருக்கியா?? உங்க ஆபீஸ் பக்கம் வருவாளா? என்று பரபரக்கவும் ,
அதற்குள்ளாக சுதாரித்துவிட்ட ரவி, "அது மகாபலிபுரம் போயிருந்தப்போ சார் அவங்களை காப்பாற்றினாரே அப்பத்தான் தெரியும். ஏன் ஆன்ட்டி ? ?"
கனகவல்லிக்கு சற்று ஏமாற்றம் அளித்த போதும், "அதுவா தம்பி, உன்னை பார்த்தாக்க நல்ல புள்ளையா தெரியறே, அவளுக்கு வரன் பார்த்துட்டு இருக்கிறதாக கேள்விப்பட்டேன். உனக்கும் வீட்டில் பொண்ணு பார்க்கிறதா சொன்னியே, அதான், பொண்ணு பார்க்க எப்படி இருக்கிறாள்? உனக்கு அவளை பிடித்து இருந்தால் கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம்னு தோனுச்சு." என்று கனகவல்லி சொல்லவும் ரவி சற்று திணறிவிட்டான்.
அவனது மௌனத்தை சாதகமாக எடுத்துவிடக் கூடாதே என்று எண்ணியவன், அவசரமாக அவன் பதிலை தேடுகையில்,
" அத்தை ரவிக்கிட்டே என்ன கேட்டீங்க? இப்படி திரு திருனு முழிக்கிறானே? " என்றவாறு அங்கே ஆபத்தாந்தவனாக கிருஷ்ணா வந்து நின்றான். அவன் குரல் கேட்டதும் கனகவல்லி அதிர்ந்து வாயடைத்து நிற்க, ரவி ஆசுவாசாமாக...
"அது...ஒன்னுமில்லை அத்தான். ரவிக்கு சீக்கிரமே பொண்ணு பார்க்கட்டுமானு அம்மா கேட்டுட்டு இருந்தாங்க"என்று நமட்டு சிரிப்புடன் அனிஷா நிலமையை சமாளித்தாள்.
"அட அதுக்காகவா இப்படி ? என்று சிரித்தவன், "சரி, சரி, ரவி நீ கிளம்பு, நான் இங்கே பார்த்துக் கொள்கிறேன். அப்படியே அத்தையையும் அனிஷாவை வீட்டில் விட்டுவிடுகிறாயா?"
"ஷ்யூர் சார்".
"ஐயோ கண்ணா, நான் இன்னும் மாமாவை பார்க்ககூட இல்லை. நாங்கள் அப்புறமாக போய்க்கொள்கிறோம்." என்று கனகவல்லி சொல்லவும்,
"மாமாவை நான் பார்த்துவிட்டு தான் வந்தேன் அத்தை. நல்லா தூங்குகிறார். நீங்கள் இப்போ கிளம்பி போயிட்டு காலையில் வாங்க. அப்புறம் ஒரு விஷயம் நாளைக்கு என்கூட அனிஷாவை அனுப்ப முடியுமா?
வாயெல்லாம் பல்லாக, "தாராளமா கூட்டிட்டு போ கண்ணா. இதை கேட்கணுமா என்ன?" என்றாள் கனகவல்லி.
"அதுக்கில்லை அத்தை. அவள் என்கூட வந்து விட்டால் மாமாகூட நீங்க தான் இருக்கணும். அது உங்களால் முடியுமா?. ஏன்னா மருந்து ஊசி என்று நர்ஸ் தேடுறப்போ யாராவது இருக்கணும் ... என்று இழுக்க. ..
"அதெல்லாம் நான் அங்க இங்க நகராம இருந்து பார்த்துக்கிறேன், நீ கூட்டிட்டு போ"என்றுவிட்டு ரவியுடன் மகளை அழைத்து கொண்டு கிளம்பிச் சென்றவளை யோசனையுடன் பார்த்து நின்றான் கிருஷ்ணா.
●●●
பெங்களூர்
காலை நேரம்..
சித்தார்த் வீடு வந்தபோது மகனுக்கு பாடத்தை பற்றி சொல்லி கொண்டிருந்த வசந்தி, "வந்துட்டிங்களா அத்தான்? உங்களுக்காகத் தான் காத்திருந்தேன்." என்று அவனது பெட்டியை கொண்டு உள்ளே வைத்தாள்.
"இரண்டு நாளுக்குள் என்னை காணாமல் தவிச்சுட்டியா வசு?" என்று கேலியில் இறங்க,
"ஐயே அசடு வழியுது. நான் உடனே சென்னை கிளம்பணும் அத்தான். மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று அத்தை போன் பண்ணினாங்க. நீங்க வந்ததும் இவனை உங்ககிட்ட விட்டுவிட்டு கிளம்பலாம் என்று நினைச்சேன்.
"ம்ம்.. கண்ணன்கூட சொன்னான். இப்ப பயப்படும்படியா இல்லையாம். நானும் தான் அவரை பார்க்கணும் அப்படியே சத்யாவையும் பார்த்துவிட்டு நாலு நாள் லீவு போட்டுவிட்டு கூட்டிட்டு வரலாம்னு நினைக்கிறேன். அதனால சாயந்திரம் மூன்று பேரும் கிளம்பலாம் வசு. டிக்கெட் கூட போட்டுவிட்டேன்" என்று சொல்லியவாறு குளியல் அறைக்குள் நுழைய, வசந்தி தம்பி அவளை விலக்கி வைத்திருப்பதை எண்ணி வருந்தியபடி சமையல் அறைக்கு சென்றாள்.
●●●
கண்ணன் கொடுத்த உத்ரவாதத்தால் சத்யாவும் ரூபாவும், தங்களது வீட்டிற்கு வந்து விட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை காலையில்..
அழைப்பு மணி ஒலிக்க, கனகவல்லி தான் வந்து விட்டாள் என்று சத்யா வெகுவாக பதறிப் போனாள் ..