26.நவிலனின் கோதையானவள்
உறங்காமல் அவளைத்தான் பார்த்துகொண்டு இருந்தான் நவிலன். கவிதா அந்தபக்கம் கத்தும் அணைத்து விட்டான் வசந்த்.
மங்கை, “என்னாச்சு நவிலா ?
அக்கா ….
அவளை விடு உன் வாழ்க்கையை பாரு எப்படியும் காலைல வரும் பூகம்பம் அப்ப அதை யோசிக்கலாம். கிளம்பிடுறேன் ம்மா ப்ராப்ர்டி எல்லாம் உங்க பேர்ல தானே இருக்கு நீங்க அவளுக்கு மாத்தி குடுத்துடுங்க…
டேய் புரியாம பேசாத அவளுக்கு எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கிளம்பு நான் லாயர் கிட்ட சொல்லிட்டேன் நாளைக்கு காலைல வருவார்.
ம்ம்ம்
சரி பனியை பாரு …
என்ன செய்யன்னு தெரியல மா மறுபடி பழைய இடத்தில் நிற்குறா …
சரி சரி அதையே யோசிக்காத அதுல இருந்து அவ வெளியே வரனும் அதை மட்டும் யோசி…
ம்ம்ம…
சரி நான் படுக்குறேன் நீ சாப்பிட வாடா..
இல்லம்மா அவ எட்டும் அவளுக்கு குடுத்துட்டு நான் சாப்பிடுறேன் நீங்க படுங்க என்றவன் சாய்ந்து அமர்ந்து விட மங்கை அறைக்கு சென்று இருந்தார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் பனி முழிக்க…அம்மு…
ம்ம்ம
சாப்பிடலாம் டா…
…….
உன்ன தான் அம்மு…
…….
நான் இன்னும் சாப்பிடல உனக்காக வெயிட்டிங்…
இந்த ஒரு மாத்தத்தில் இந்த இரண்டு நிமிட பேச்சு தான் அதிகம் எப்படி இப்படி உட்கார்ந்து இருக்கிறாள் என்று அவனுக்கே ஆச்சரியம் தான்.அம்மு என்று மெதுவாக அழைக்க..
முகம் கழுவிட்டு வரேன்ங்க என்றவள் மெல்ல எழ நவிலன் அவள் கை பற்ற.. சட்டென அவனை பார்த்தவள் சற்றே கை நடுங்க..
ரிலாக்ஸ் அம்மு நான் தான் வேற யாரு எதுக்கு இந்த பயம் நாம் பொது இடத்திலோ இல்ல வேற எங்கேயோ இல்ல நம்ம வீட்டில் தானே இருக்கோம்.
ப்ச்…
எல்லா இடமும் பாதுகாப்புன்னு தோணனும் நவி
அம்மு..
முகம் அலம்பிட்டு வரேன் என்றவள் எழுந்து விட..அதென்ன டி அலம்பிட்டு…
அது பழகிட்டு அங்க ஹோம் ல இருந்தப்ப என்று நவிலனை பார்க்க ,கண்சிமிட்டியவன் காமாட்சி பாட்டியா…
ஆமா என்றவள் முகம் கழுவி வர..இருவரும் அமைதியாக உண்ண ஆரம்பித்து இருந்தனர்.
கனடா கிளம்பலாம் அம்மு இன்னும் நாலு நாள்ல…
போகனுமா?
கண்டிப்பா
இங்க அத்த அங்க எங்க அம்மா அப்பா எல்லாம் தனியா இருப்பாங்களே…
கொஞ்ச நாள் தான் வந்துடலாம் என்று சொல்ல…
ம்ம் என்றவள் மறுத்து எதுவும் பேசவில்லை…திருமணம் ஆகி நான்கு மாதங்களை நெருங்கி இருக்க பேச்சும் அணைப்பும் மட்டுமே இருக்க அவளை அடுத்த அடுத்த இடத்திற்கு இழுக்கத்தான் மலரும் இவனும் முயற்சி செய்தது ஆனால் நடந்ததோ வேறு…
அன்று…
என்ன சீனியர் ஐஞ்சு கூட ஆகல சீக்கிரம் பேக் பண்ணிட்ட அவரு வராரு பனி…
வாவ் என்ன இப்படி ஒரு பிளஷ் நான் எதிர்பார்க்கவே இல்ல எப்படி சீனியர் அவ்வளவு லவ் ஆ…
கண்டிப்பா பனி என்னைய அப்படியே பார்த்தவர் அது மட்டும் இல்ல எல்லா விஷயத்திலும் அவர் என்னைய தாங்கிடுவார் அது சோம்பேறிதனத்தை தரல இன்னும் மேல் போகனும் ன்னு ஒரு உந்துதல் தான் தந்தது ரொம்ப கேரிங் தப்பு அவர் மேலன்னா தயங்காம மன்னிப்பு கேட்டுடுவார் ஒரு முறை செஞ்ச தப்பை மறுபடி செய்யாத மனுஷன் …
என்ன சீனியர் அடுக்கிட்டே போறீங்க…
ம்ம்ம் வாழ்க்கை எனக்கு தந்த பொக்கிஷம் பனி அப்ப அடுக்கத்தானே செய்வேன்..
அதுசரி இருங்க நானும் வரேன் …
வா வா என்றவள் போன் ஒலிக்க நீ வா பனி நான் முன்னாடி போறேன்..
ஓஓஓ போங்க போங்க லவ் பேர்ட்ஸ் நான் பின்னாடி வரேன்..
ம்ம்ம் என்றவள் வெளியே வர நவிலனுடன் பேசிக் கொண்டு இருந்தவனை பார்த்து சிரிக்க..,என்ன மலர் பனி நார்மல் தானே…
அதெல்லாம் நார்மலா தான் இருக்கா நீங்க ஓவரா எக்ஸ்பிரஸ் பண்ணாம இருந்தா சரி என்றவளை நவிலன் பார்த்து அதெல்லாம் என் நண்பன் சரியா செய்வான்..
என்னது யார் சரியா செய்வா என்று பனி வர ஒரு பக்கமாய் நின்று இருந்தவன் ஹாய் பூ ஹவ் ஆர் யூ என்று சொன்ன நொடி படபடத்தவள் நவிலனின் கையை பிடிக்க ,மெதுவாக திரும்பி அவன் முகத்தை காட்ட மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடப்புடன் கை கால் வெட்ட கீழே சரிந்தாள் பூம் பனி…
பனி பனி என்று அவளை கவனிக்க அருகில் இருந்த மலரின் கணவன் ராஜேஷ் க்கு தான் சங்கடமாக இருந்தது. எல்லாம் என்னால் தான் என்றவன் அவசரமாக காரை திறந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அதீத மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது தெரிந்து அவளுக்கான சிகிச்சை ஆரம்பித்து இருந்தனர்.இரண்டு நாட்கள் ஆகி இருந்தது அவள் கண் விழிக்க…விழித்தவள் நவிலனை கூட அருகில் விடவில்லை தன் தாயை இறுக்கமாக பிடித்து கொண்டவள், அம்மா அம்மா அவனை எப்படி அவன் அங்க எப்படி அதுவும் சீனியை அவன் அவன் என்றவள் அரட்டியதில் மீண்டும் மயங்கி இருந்தாள் பனி…
யாரை பார்த்தா மாப்ள எதுக்கு இவ்வளவு அரட்டுறா என்று அம்சா கேட்க…
ராஜேஷ் முன் வந்து நின்று இருந்தான். என்னால தான் அம்மா பூ இவ்வளவு டென்ஷன் நான் நான் என்று அவன் தடுமாற… விடுங்க தம்பி நீங்க ஏன் அதையெல்லாம் நினைச்சுட்டு அம்மாடி மலர் அழைச்சுட்டு போ அவரை ஒன்னு இல்ல பார்த்துக்கலாம் என்று கார்த்திகேயன் இருவரையும் அனுப்பி விடுவதில் குறியாக இருக்க..
யார் இதுங்க என்ன விஷயம் என்று அம்சா கத்த…
ஒன்னு இல்லம்மா உள்ள போய் அவளோட இரு என்று உள்ளே அனுப்பி விட்டவர் அம்சாக்கு எதுவும் தெரியாது மலர் அவரை அழைச்சுட்டு போ இல்லன்னா அவ ஒருவழி பண்ணிடுவா என்று எச்சரிக்க பட்டென காலில் விழுந்து விட்டான் ராஜேஷ் என்னைய மன்னிச்சுடுங்க என்னால் தான் அன்னைக்கு நான் அப்படி பண்ணி இருக்க கூடாது ஆனா என்னோட சகவாசம் சரியில்ல அப்ப இருந்த வயசு தப்பு பண்ணிட்டேன் என்று அழ..
விடுப்பா முடிஞ்சதை பேசி என்ன பண்ண போறோம் விடுங்க நீங்க கிளம்புங்க எல்லார் நல்லதுக்கும் தான் தப்பா எதுவும் இல்ல என்று அனுப்பி விடச் சொல்லி நவிலனை பார்க்க…
சாரி மாமா நான் தான்…
புரியுது மாப்ள புரியாம இல்ல எல்லாத்துக்கும் நாம் தயாராக தானே இருந்தோம் எனக்கு புரியாம இல்ல ஆனா கொஞ்சம் பயமா இருக்கு அவ்வளவு தான் என்ன இதுல உங்க வாழ்க்கையும் சேர்த்து பாழாகிட்டோம் என்று கார்த்திகேயன் வருத்தப்பட..,அது இப்ப தான் உங்களுக்கு புரியுதா என்று வந்தாள் கவிதா..
அக்கா பேசாம போய்டு எதாவது பேசி என்னைய கடுப்பு கிளப்பாத என்றவன் மாமா நான் அவ வேற வேற இல்ல இது தான் கடைசி இப்படி பேசாதீங்க என்றவன் மலர் ராஜேஷ் இருவரையும் அனுப்பி விட்டு அறைக்குள் வர, மங்கை அம்சா இருவரை தாண்டி யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்று கத்த… கவிதா அனைவரையும் நக்கலாக பார்த்தாள்.
நவிலனை பார்த்து அலறியவள் வெளியே போ நீ தானே அவனை கூட்டிட்டு வந்த போ நீ வெளியே என்று சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல சட்டென வெளியேறி இருந்தான் நவிலன்.
இதுக்கு தான் இந்த கல்யாணமா ம்மா என்று கவிதா ஆரம்பிக்க அப்போது உள்ளே நுழைந்த ராணி… அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நான் சொன்னது நடந்ததா என்று அம்சாவை பார்க்க.. கார்த்திகேயன் வாக்கா என்றார் ..
ம்ம்ம…
இதுக்கு தான் அவசரமா பத்திரம் பண்ணி தந்தியா..
அக்கா…ஆமாடா அக்கா தான் நான் சொன்னா தைய தக்கன்னு குதிப்ப இப்ப ஊர்ல எல்லாம் தானே பார்க்க போறாங்க என்றவள் என்னவோ பண்ணுங்க எப்படி மறுபடி உன்னோட வச்சுக்க போறியா என்று கேட்க..
என் பொண்டாட்டி எதுக்கு அங்க வருவா அவளுக்கு வீடு வாசல் இல்ல என்ற நவிலனை பார்த்தவர் சரிதான் பார்த்துக்க கார்த்தி என்று கிளம்பிவிட்டார்.
பத்து நாட்களுக்கு மேல் மருத்துவமனை வாசம் முடிந்து வந்தவள் ஒரு வார காலம் நவிலனை அனுமதிக்கவே இல்லை ஏற்கனவே பனி பார்த்த நவிலனின் தோழி தான் மறுபடி வந்து அவளுக்கு வீட்டில் பார்த்து பேசி பேசி ஒரு வழியாக நிதானம் அடைந்து இருந்தாள்.இதோ இப்போது அவனோட அமர்ந்து உணவை எடுத்து கொண்டு இருந்தவள்…
ஒன்னு கேட்கனும் ..
சொல்லு அம்மு…
உங்க பிரண்ட் ன்னு அவரை சீனியர்க்கு பேசினீங்களா…
இல்ல என்று நவின் தலையசைத்து பனியை பார்க்க..
எப்படி உங்களால் அவங்களை என்று நிறுத்த..
மாற்றம் ஒன்னு தான் நிலையானது அம்மு தப்பு செய்யாத மனுஷன் இல்ல அதௌ உணர்ந்து அதை சரி செய்ய முயற்சி செய்யுறவங்களுக்கு உதவனும் அவங்களை குத்திட்டே இருந்தா அது நல்லதா என்றவனை நிமிர்ந்து பார்க்க..
சொல்லு அம்மு…
இல்ல தான்
அப்ப உன் சீனியர் செஞ்சது சரி தானே… அந்த தப்புக்கு உடந்தையாக இருந்துட்டான் அதை அவன் உணர்ந்து அவளை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழனும் ன்னு முடிவு பண்ணி நாலு வருஷம் காத்து கெஞ்சி கொஞ்சி அவளை சம்மதிக்க வச்சு வாழ்ந்துட்டு இருக்கான் .அவன் செஞ்சது தப்பு தான் இல்லன்னு சொல்லல ஆனா அதை மாத்த முடியாது.
………
என்ன பதிலே இல்ல…
ஒன்னு இல்லங்க..
நடந்துடுச்சு இனி என்ன பண்ணலாம் அதையே பிடிச்சிட்டு இருக்க முடியுமா நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு…
அப்ப அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கலாம் நான் பட்ட மன உளைச்சல் என்னோட காயம் என்னோட தவிப்பு பயம்…
பழி வாங்கனுமா அம்மு…
இல்ல தண்டனை தர வேண்டாமா…
ஓஓஓ என்றவன்…
இங்க வா என்று அவளை அறைக்கு அழைத்து சென்றவரை யோசனையோடு தொடர…
இரு வரேன் என்று அமர்த்தி விட்டு சிலவற்றை எடுத்து வந்து அவள் முன் வைக்க விழி விரிய நவிலனை பார்த்தாள் பூம் பனி….
தொடரும்