• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26 மனைவியின்...காதலன்@

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
26

மருத்து போட்டு விட்டதும், சிறிது நேரம் இருவரும் நடந்தார்கள், அருகில் இருக்கும் கிணரை பார்த்த கிருஷ்ணா.

“நிறைய ஆழமா”

“இல்லை கொஞ்சம் கம்மி தான்”

இருவரும் கொஞ்ச நேரம் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்க கிருஷ்ணாவின் கண்கள் அவனின் இதயத்தின் அருகில் இருந்த ராதை பெயரை கோபமாக பார்ப்பதை மறக்கவில்லை.

மாதவன் மனமோ... 'தப்பு செஞ்சிட்டேன், உணர்ச்சி வசப்பட்டு ராதாகிட்ட அப்படி பேசி இருக்க கூடாது, என்னை கீழ் தரமா நினைத்து இருப்பா' மனதால் மாதவன் வருந்தினான்.

சில மணி நேரம் கழித்து இருவரும் மேல் எழுந்து வர.

அனுவை ராதா ஒரு ஓரமாக உட்கார வைத்து சமாதானப் படுத்தத் துவங்கினாள்.

"வேணா ராதா… என் பக்கத்தில் வராத, உன்னை பார்த்தா பத்திக்கிட்டு வருது எனக்கு" அனு தலையை சிலுப்பிக்கொண்டு போக.

"எல்லாம் முடிஞ்சிடுச்சி, நாளைக்கு தான் முடிய போவுது ஆனா இன்னைக்கே இந்த ஆட்டத்தை முடிச்சி வச்சிக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிழம்ப போறோம், இப்போ ஓகே வா உனக்கு"

'பண்றது எல்லாம் செஞ்சிட்டு வந்துட்டா, கட்டி பிடிக்கறதுக்கு என்ன... செய்யாத சேட்டை இல்லை. பத்தாதுக்கு பாஸ் நல்லதுக்கு அவர் பக்கம் நின்னா, நான் லவ் செய்யறேன்னு வேற சென்ன இல்ல, இனி இவகிட்ட பேசவே கூடாது'

"புரியுது உன்னோட கோபம், நான் சில இடத்தில் கண்ணாவை பார்த்து ஸ்லிப் ஆனது உண்மை தான். நான் கிருஷ்ணாக்கு தூரோகம் செய்த கணக்கில் வராது. ஆனா நீ தான் என்னை காப்பாத்திட்டியே, இனி இது போல நடக்காது தங்கம் புரிஞ்சிக்கோ. இது எல்லாம் செஞ்சது எனக்காக இல்லை, எல்லாம் கண்ணாக்காக தான்..." ராதா தொடங்கி நடந்தது அனைத்தும் சொல்ல.

"என்னடி சொல்லுற! நான் கூட, உனக்காக தான் இது எல்லாம் செஞ்சிட்டு இருக்கன்னு நினைத்தேன், அவனுக்காகவா?"

"ஆமா... அவன் ஆசையா கேட்டது எதும் நான் ஒரு முறை கூட செய்யலை. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்ன்னு... என் காதலை கூட சொல்லலை. என்னால முடியவே இல்லை, அதனால்தான் அனு எனக்கும் ஒரு கில்ட்டா இருந்தது. அதுவும் இல்லாமல் அவனோடது எதும் என் கிட்ட இருக்க கூடாதுன்னு தான் இப்படி செஞ்சிட்டேன். சாதாரணமாவே நமக்கு ஒருத்தர் எதாவது செஞ்சா திரும்ப செய்யும் குணம் உடையவள் நான். அவன் என் உயிரா ஒரு காலத்தில் இருந்தவன் அதனால்தான் இத்தனையும்"

"சரி நீ சொல்லுவது அனைத்தும் நான் ஏற்றுக்கொள்ள தயார். ஆனா அதுக்காக பாஸையும் என்னையும் சேர்த்து பேசிய உன்னை நான் சாகும் வரை மன்னிக்க மிட்டேன். உன் புருஷனை எப்படி டி இப்படி பிரண்ட் கூட போய்... ச்சி"

"அது உண்மை தானேடி, நான் பொய் சொல்லலையே”

"நீ திருந்த மாட்டடி, இனி என் மூஞ்சிலையே முழிக்காத புரியுதா" அனு மிரட்டி போக.

'என்டையே நடிக்கறியா தங்கம்... இப்போ பாரு'

"ஐ... ஒரு வழியா கிருஷ்... மாமா சட்டை கிடச்சிடுச்சி" இரட்டை ஜடையில் யாருக்கும் தெரியாமல் கிருஷ்ணாவின் சட்டையை திருடிக் கொண்டு போகும் அனுவின் வீடியோ தெளிவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

அனு அதிர்ச்சியில் ராதாவை குற்ற உணர்ச்சியோடு பார்க்க.

"நான் உன் பிரண்ட் டி, உன்னை பத்தி எனக்கு தெரியாதா? நான் உன் பிரண்டா ஆகுறதுக்கு முன்னாடி இருந்து நீ கிருஷ்ணாவை லவ் செய்வது எனக்கு தெரியும்"

"அது ராதா... வந்து"

"பிரியா விடு... வா கிளம்பளாம் ஒன் சைட் லவ் எல்லாம் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்"

"அது அப்போ தான் ராதா இப்போ அவர் வெறும் பாஸ் மட்டும் தான்... எல்லாம் மறந்துட்டேன்" குரல் நடுங்கியது அனுவுக்கு.


"அவரோட சட்டை திங்க்ஸ் ஈல்லாம் எடுத்து வந்து உங்கிட்ட கொடுத்துடுறேன்"

"சரி வீட்டுக்கு போனதும் எடுத்து வந்து கொடுத்திடு" ராதா சாதாரணமாக சொல்லிவிட்டு லக்கேஜை எடுக்க வீட்டுக்குள் போனாள்.

அனுக்கு ஆதரவாக இருந்ததே, கிருஷ்ணாவின் பொருட்கள் தான், ஆனா அதுவும் இனி இல்லையா என்று அனு மனம் சுருங்கியது. அவளது லக்கேஜோடு வந்தவள், அமைதியை தன்னுடைமயாக தத்து எடுத்துக்கொண்டாள்.

தாராகையும் அனுவும் வழக்கம் போல பேசி கொண்டிருக்க, ராதா அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

'இவங்க இரண்டு பேரும் எங்க போய்ட்டாங்க... எப்போடா இங்கு இருந்து போவேம்'ன்னு இருக்கு' ராதா மனதில் தவித்துக் கொண்டு இருந்தாள்.

"கிருஷ்ணா... கொஞ்சம் பேசலாமா?"

"தாராளமா மாதவன்"

"வாங்க இப்படி உட்காரலாம்" இருவரும் ஒரு கல் பார்த்து உட்கார்ந்தார்கள்.

மாதவன் அமையாக இருக்கவும், "சொல்லுங்க கண்ணா என்ன விஷயம்."

இன்று அவன் ராதையை காணாமல் போனா போது தவித்ததையும், அதன் பிறகு கண்டு பிடித்தபிறகு, பார்த்ததும் அவளிடம் நடந்து கொண்டதை பகிர்ந்து கொண்டான், சொல்லி முடித்த மாதவனுக்கு சங்கடம்தான் மிஞ்சியது.

கிருஷ்ணா மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது, போகும் போது எதற்க்கு சண்டை என்று அமைதயாக இருந்தான் கிருஷ்ணா.

"இவ்வளவு பாசமும் ஆசையும் அவள் மேல் இருக்கும் போது... எதுக்கு உப்பு சப்பு இல்லாத காரணங்கள் சொல்லி அவளை விட்டுட்டு போனிங்க மாதவன்"

"அவ என் உயிர் இப்போ வரை... அவ என்னை விட்டுட்டு போக வேணும்னு தான் இப்படி செய்தேன்" கிருஷ்ணா புரியாமல் பார்க்க.

சில வருடங்களுக்கு முன் நடந்ததை சொல்ல துவங்கினான் மாதவ கண்ணன்.

"அவளை பார்த்த முதல் நொடியிலேயே, அவதான் என் வாழ்க்கை என்று முடிவு எடுத்துட்டேன்... காதல் சொல்லியும் அவள் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை, அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை காரணம், அவளின் கண்களில் பொங்கி வழியும் காதலை கண்டு கொண்டவன் நான், அவளாக சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்.

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உயிரா இருந்ததை விட பைத்தியமாக தான் இருந்தோம். வீடியோ காலிலேயே ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தோம். அவளை நினைத்துக்கொண்டு இருந்தால் போதும் எனக்கு, முதலில் இது எல்லாம் இளமையில் வரும் எண்ணம் என்று தான் நினைத்தேன். ஐந்து வருடம் முடிந்த போதும் எனக்கு அவள் மீது உள்ள காதல் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை.

ஒரு நாள் அவள் போன் போட்டும் எடுக்கலை, அவள் தனியா வேறு இருப்பது எனக்கு பயத்தை கிளப்ப. பிரண்டை அவளை பார்க்க அனுப்பிவிட்டு ரோட் கிராஸ் செய்யும் போது ஒரு சின்ன ஏக்சிடன்ட் ஆயிடுச்சி.

இடுப்பில் அடி பட்டது பெரிய அடி இல்லை என்பதால் ஹாஸ்பிட்டல் கூட போகலை. அப்போது மண்டையில் ஓடியது எல்லாம் அவளுக்கு என்னாச்சி என்று தான் ஓடியது.

அதன் பிறகு அந்த வலி கூட நான் மறந்துட்டேன், அந்த அடி சிறிது சிறிதாக பெரியதாக இரண்டு வருடம் கழித்து பூதாகரமாக வெளியே வந்தது.

வலி பொறுக்க முடியாமல் ஹாஸ்பிட்டலுக்கு போகும் போது நிறைய டெஸ்ட் எடுத்து பார்த்தாங்க, என்னால அவளுக்கு ஒரு குழந்தை கொடுக்க முடியாதுன்னு எப்போ தெரிந்ததோ மனதால் உடைஞ்சிட்டேன்.

என்னால் வெளியே சொல்லு ஆறுதலும் பட்டுக்க முடியலை, அழுகவும் முயலை.

முதலில் என்னை சமாதானப் படுத்த நினைத்த எனக்கு முடியலை, மனதாலும் உடலாலும் நான் உடைந்துட்டேன் கிருஷ்ணா.

இதை கியூர் செய்ய 90 பர்சன்ட் சரி செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

அந்த நேரத்தில் எனக்கு ஒரே வழிதான் இருந்தது ராதாவை என் வாழ்வில் இருந்து விளக்கி வைக்க அவளை அவாய்ட் செய்தேன். அதன் பிறகு நான் நினைத்ததை விட ராதா என் அமைதியால் பாதிப்பது தெரிந்தது.

என்னால் அந்த நிலையில் என்னை சமாதானப் படுத்துவதா, இல்லை அவளை சமாதானப் படுத்துவதா, இல்லை அவள் வாழ்க்கையில் இருந்து விலகுவதா இல்லை, உண்மையை சொல்லி அவளது அனுதாபம் பெறவும் எனக்கு விருப்பமில்லை, மொத்தத்தில் பைத்தியம் போல இருந்தேன்.

அவளது வாழ்க்கை எதற்கு என் கூட சேர்ந்து வீணாகனும் என்று விலக நினைத்தேன். ஆனா அது என்னால முடியலை அவளிடம் இயல்பாக பேசவும் முடியலை.

ஒரு பக்கம் உடல் நிலை என் கண்ட்ரோல்லையே இல்லை, வழியில் நண்பர்களின் குழந்தைகள் பார்க்கும் போது ஏக்கமா இருக்கும், என்னோட குழந்தை இந்த பூமிக்கு வரப்போவதில்லை என்று கலக்கம் ஒரு புறம்.

அப்படி தான் ஒரு நாள் ராதாவிடம் குழத்தையை பற்றி பேச்சி கொடுக்க, அவளிடம் வந்த பதிலை கேட்டு அதிர்ந்தேன் நான்.

"நான் தனியா இருக்கேனில்லை டசன் கணக்கில் குழந்தை வேணும், வீடு முழுவதும் குழந்தைகளா இருக்கனும்" என்று ஆரம்பித்து குழந்தையை எப்படி வளர்க்கனும் எப்படி டிரஸ் செய்யனும், ஆண் குழந்தைக்கு என்ன சொல்லிதந்து வளர்க்கனும் பெண் குழந்தையை எப்படி பார்த்துக்கனும் என்று பல மணி நேரம் பேசிக் கொண்டே போனாள்.

அன்று தான் முடிவு எடுத்தேன், அவளது ஆசையை குறைக்க நான் விரும்ப வில்லை, அதான் மனதை கல்லாக்கி என் தங்கத்தை நானே, என் வாயால சிஸ்டர் சொல்லி கட் செஞ்சிட்டேன். அவள் கதறியது நினைத்தால் இன்று கூட ஏன் உயிரோட இருக்கன்னு நினைக்க தோணுது.

ஆனா இந்த உயிர் அம்மா ஓடது அதனால நான் எடுக்க விரும்பவில்லை.

அனைத்து இடத்திலும் அவளுக்கு தடை போட்டுவிட்டேன். பாவம் அவள் எப்படி துடிச்சி இருப்பான்னு எனக்கு தெரியும் ஆனா அப்போ மனசு குழம்பி போச்சி.

நேரம் தான் எனக்கு மருந்து ஆனது, கொஞ்சம் கொஞ்சமா மனதை தேத்துவதற்க்குள், ஒன்றரை வருசம் ஆகிடுச்சி. அவளை வருத்தியது போதும்ன்னு ஒரு முடிவோடு, உங்க வீட்டுக்கு வரும் போது தான் தெரிந்தது, அன்று உனக்கும் ராதைக்கும் உங்களுக்கும் கல்யாணம் என்று.

பதறி அடித்து ஓடி வருவதற்க்குள் உங்க கல்யாணம் முடிச்சி கோவில் சுத்த போய்யிட்டிங்க.

இருவரையும் தூரம் இருந்து வாழ்த்திட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன். அப்புறம் பார்த்தா ஒரு வாரத்தில் நீங்க என்னை தேடி வந்துட்டிங்க. என்னால உங்க இரண்டு பேரையும் சேர்த்து பார்க்க முடியாமல் தான் ஓடி போனேன், ஆனா அவ என்னை கடத்தி தூக்கிட்டு வந்துட்டா.

அவள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நான் சாகும் வரை பதில் சொல்ல முடியாத நிலையில் அந்த கடவுள் என்னை தள்ளிவிட்டான்.

வலிக்குது கிருஷ்ணா… குழந்தை இல்லை என்றாலும் பரவாயில்லை அவளை பார்த்துட்டே வாழனும்னு நினைக்கும் போது அவள் இனி என்றைக்கும் எனக்கு சொந்தம் ஆகாதது போல ஆகிட்டா.

அவளை புழுவா துடிக்க வைத்ததுக்கு நான் செத்தால் கூட மன்னிப்பு கிடைக்காது. நான் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன், மாதவன் அழுகையை கண்ட்ரோல் செய்துகொண்டு இருக்க.

“அழுதுடுங்க மாதவன், இப்போவாது உங்க மனதின் பாரம் இறங்கட்டும். இந்த சமூகம் ஆண்களை அழுக கூடாதுன்னு சொல்லி மனதால் பைத்தியமா இப்படி தான் சிலறை திரியவிட்டு இருக்கு.

கிருஷ்ணாவை அணைத்துக்கொண்டு கண்ணன் கதறினான்.

அவனை ஆசுவாசம் படுத்திய கிருஷ்ணா… சில மணி துளிகள் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.


"ஏன் ஒரு வருடம் கழித்து எதுக்கு தேடி வரணும், போனவங்க போனதாவே இருந்து இருக்கலாமில்ல, இப்போ என்ன உடம்பு சரியில்லையா ஆகிடுச்சா?"

"இல்லை... இம்புருவ்மென்ட் இருக்கு 20% சான்ஸ் இருக்கு குழந்தை பிறக்க, மனது குழப்பம் நீங்கியது, அப்போ தான். எனக்கு குழந்தை வராதுன்னா என்ன எடுத்து வளர்க்க குழந்தைக்கா பஞ்சம் இந்த நாட்டில். அப்போ தான் புத்தி வந்தது என்ன செய்ய. பழையதை எல்லாம் நினைத்து என்ன ஆகப்போது, என் ராதையை... இல்லை உங்க மனைவியை நல்லா பாத்துக்கோங்க. அவ ஏஞ்சல், அவ இருக்க இடம் வெளிச்சமா தான் இருக்கும். தனிமையில் இருப்பவனை சகஜமா பழக வைத்தவளே அவள் தான் என் தேவதை அவள்"

"நீங்க சொல்வது சரி தான் அவ ஏஞ்சல்... எல்லோருக்கும் வெளிச்சம் கொடுத்து தனக்கு தனிமையில் போக்க பைத்தியம் போல திரிந்தவள் அவள்"

"புரியலையே கிருஷ்ணா"
 
Top