• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
29

உள்ளே வந்ததும் ராதாக்கும் அனுவுக்கும் ரகுவரன் வாங்கி வைத்திருந்த புடவை நகைகளை கொடுக்க, இருவரும் ஒரே அறையில் புகுந்து கொண்டார்கள்.

அனு முகத்தில் இருந்த சோகத்தை பார்த்த ராதா.

‘இப்போவாது உண்மை சொல்லுறாளா பாரு கல் நெஞ்சக்காரி’

"சாரி அனு எனக்கு முன்னவே தெரிந்து இருந்தா கிருஷ்ணாவை கல்யாணமே செஞ்சி இருக்க மாட்டேன்"

"ஏய் விடு முடிஞ்சதை பத்தி பேசிட்டு, எல்லோரும் என்ன பிடிச்சவங்களையா கல்யாணம் செஞ்சிக்கிறாங்க சொல்லு, அதை விடு நான் உன்னை ரெடி செஞ்சி விடுறேன்"

அனு தன் கையாலேயே ராதாக்கு பார்த்து பார்த்து தயார் செய்தாள்.

திருமண அலங்காரத்தில் ராதா தேவதையாக ஜொலித்தாள்.

"கல்யாண பொண்ணு ரெடி" அனு தானும் தயாராக துவங்க.

"அனு ஒன்னு கேட்கட்டா?"

"என்ன மேடம் புதுசா பர்மிசன் எல்லாம் கேட்குறிங்க, கேளுடி கழுதை”

"அது வந்து எப்போ இருந்து அவரை லவ் செய்யுற"

"அது எதுக்கு தேவையில்லாத குப்பை, நீ போ மேடைக்கு நேரம் ஆகிடுச்சி"

"இல்லை நீ தயாராகும் வரை நானும் இருக்கேன், நீ சொல்லு"

"சொல்ல மாட்டேன்னு சொன்னா விடவா போற அது பப்பி லவ் டி, முதலில் பார்க்கும் போதே பிடிக்கும். அதான் அப்போ இருந்து அண்ணான்னு கூட சொல்லலை, உங்க இரண்டு பேரோட பாசத்தை பார்த்துதான் எனக்கு அவரை பிடிச்சிடுச்சி. சின்னதுல தெரியாது இது தான் லவ்ன்னு, வளரவளர அவரை பார்க்காம எனக்கு தூக்கமே வராது. அவர் காலேஜ் போகும் போது, என்னை அறியாம கண்ணீர் வந்தது. அப்போ தான் தெரிந்தது இது தான் லவ்ன்னு. அவர் விருப்பம் கேட்டுட்டு உன்கிட்ட சொல்லாம்ன்னு தான் உன்கிட்ட சொல்லலை. காலேஜ் போய் சொல்லலாம்ன்னு பார்த்தா‍ கிருஷ்ணா பாஸ் செய்த சதியால் ஆளுக்கு ஒரு மூலையில் போய் படிக்க ஆரம்பிச்சிட்டோம்"

"அதுக்கு அப்புறம் ஒன்னா தானே வேலை செஞ்சிங்க அப்போ ஒரு முறை கூட சொல்லலையா?"

"அப்பா கிருஷ்ணா ஆபிஸ்ல தான் சேர்த்து விடுவதாக சொன்னார், எப்படியாவது சொல்லிடலாம், அதுக்கு அப்புறம் வேலையே செய்ய கூடாதுன்னு முடிவோடு போய் பார்த்து பயந்துட்டேன்"

"எது பயந்துட்டியா?" ராதா ஆச்சரியமாக கேட்டாள்.

"ஆமா பயில்வான் போல இருந்தா நான் என்ன செய்யுறது சொல்லு, என பிளான் மொத்தமா சொதப்பிடுச்சி"

‘இன்னும் வராம என்ன செய்யுறா… கிருஷ்ணா தயாராகி ராதா அறைக்கு வர, அனு பேசியது முழுவதும் கேட்டுவிட்டுதான் மணமேடைக்கு போனான்’

"ஹா... ஹா அதும் சரி தான்" அனுவும் மனதில் கஷ்டத்தை சுமந்தாலும் சிரித்த முகமாக ராதாவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு போக.

கண்களில் கண்ணீர் எந்த நொடியும் கீழ் விழ தயாராக இருந்தது.

கெட்டிமேள சத்தம் கேட்டதும், ராதாவின் சிரித்த முகமாக கிருஷ்ணா தாலியை கட்ட நெருங்க, அனு கண்களை மூடி தன் கண்ணீருக்கு விடுதலை கொடுக்கும் போது, அவள் கழுத்தில் கனமான ஒரு கை விழுந்தது.

அனு லேசாக கண்களை திறந்து பார்க்க, கிருஷ்ணாவின் கையால் பொன் தாலியை அனு கழுத்தில் கட்டும் காட்சியை பார்த்து கண்களும் வாயும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

"ஏய் அனு லவ் யூ, நானும் சின்னதில் இருந்து லவ் செஞ்சேன் அதுக்குள்ள ஏதேதோ ஆகிடுச்சி, நீயும் என்னை லவ் செய்வன்னு இன்னைக்கு தான் தெரிந்தது"

"அதுக்கு இரண்டாம் தாரமா கல்யாணம் செய்விங்களா? எவ்வளவு திமிரு" அனு தோழிக்காக சங்கடப்பட்டு கிருஷ்ணா கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட.

அர்ச்சதை போட்டுக் கொண்டிருந்த கைகள் அனுவின் அறையும் சத்தத்தில் அந்தரத்தில் நிற்க.

"எங்களுக்கு கல்யாணம் ஆகலை"

"பொய் சொல்லாத தாலி எல்லாம் போட்டு இருக்க"

"ஐயோ இது வெறும் செயின் கண்ணாவை வச்சி செய்ய செஞ்சது"

"பொய் சொல்லுரிங்க, கல்யாணத்துக்கு ரெடி ஆகி கோவில் வரை போனிங்க நான் பார்த்தேன்"

"நீ தான் ஹாஸ்பிட்டலில் பிரண்ட் அப்பா சீரியஸ்ன்னு சொன்ன எப்போ பார்த்த"

"அது எல்லாம் எனக்கு தெரியும்" ராதா அவளை சங்கடப் படுத்தாமல்.

அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

கல்யாணம் செய்துகொள்ள காரில் போகும் போது.

"கிருஷ்ணா இந்த கல்யாணம் அவசியமா?"

"ஆமா... நீ கேட்ட, ஒரு வருடம் மேல ஆச்சி, உன்னை தேடி அந்த கண்ணன் எப்படியும் வந்துடுவான்னு சொல்லிட்டு இருந்த அவனை காணோம் பாரு. சோ நீ என்னை கல்யாணம் செய்துக்கதான் வேணும்"

'கண்ணா என் கண்ணிலாவது பட்டுடுடா... உன்னை தவிற வேறு யாரிடமும் என்னால இருக்க முடியாது கண்ணா வந்துடு' மனமுருகி மனதில் கண்ணாவை அழைத்துகொண்டு இருந்தாள்.

சோகமாக கோவில் படிக்கட்டில் ஏறி வர.

"கிருஷ்ணா அங்கே பாரு அவன் கண்ணன் தானே" உத்து பார்த்தவள், “அவனே தான்" என உற்ச்சாகமாக குதூகளித்தாள்.

"அவனை எனக்கு எப்படி தெரியும், அவன் வரட்டும் மூஞ்சி முகரையை பேத்து எடுக்கறேன். எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கத்தை விட்டு போய் இருப்பான்" கிருஷ்ணா அவனை அடிக்க போக.

"இவனுக்கு அடி எல்லா விட்டா பத்தாது, வேற செய்யனும்" என்று கிருஷ்ணா கழுத்தில் தனது அம்மாவின் தாலி செயினை சென்டிமென்டாக போட்டு இருப்பான். உடனே ஐடியா பண்ணியவள் அதனை கழற்றி தன் கழுத்தில் போட்டுக் கொண்டவள்.

“ராதா என்ன செய்யுற அந்த செயின் முதலில் கொடு”

“மாமா எனக்கு அவன் விட்டு போனதுக்கு உண்மையான காரணம் தெரியனும், அதுக்கு இந்த தாலி செயின் எனக்கு வேணும்”

‘எதோ பெருசா பிளான் போட்டுட்டா ராட்சசி, என்னை பெத்த தகப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்க’
ராதா கழுத்தில் இருந்து கிருஷ்ணா அந்த செயினை கழட்ட வருவது தூரத்தில் இருந்து பார்த்த கண்ணாவுக்கு… கிருஷ்ணா ராதை கழுத்தில் தாலி கட்டுவது போல தெரிந்தது.

கண்ணன் இருவரின் திருமண கோலத்தை பார்த்து கண்கலங்கி வெளியே சென்றதை பார்த்து.

"அவன் தான் இவனா, இருந்துட்டு போகட்டும் அவன் கடக்கறான் வா கல்யாணம் செஞ்சிக்கலாம்"

"இப்போ தானே கல்யாணம் ஆகிடுச்சி"

"ஏய் லூசா நீ... வா முதல்ல"

"மாமா நீ சொன்னதை மறந்துட்டியா?"

"நான் என்ன சொன்னேன்"

"அவன் என்னை பார்க்க வந்தா நீ சொல்லுறதை நான் கேட்க தேவையில்லை"

"இவளை வச்சிட்டு என்ன செய்யுறது?"

"இனி பிளான் என்னோடது" ஒருவாரம் அமைதயாக இருந்தவள், கண்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தி கொண்டாள்.

அனுவிடம் திருமணம் ஆகவில்லை என்று சொன்னால் இந்த டிராமாவில் குழப்பம் நடக்கும் என்று ராதாவுக்கு தெரியும் அதனால் அனுவிடம் இந்த விஷயத்தை மறைத்தாள் ராதா
என்று தொடங்கி இத்தனையும் செய்து முடித்திருந்தாள்.

அனுக்கு இப்போது தான் மூச்சே வந்தது, "அனு இப்போவாது மூனாவது முடிச்சி போடவா"அனுவின் சம்மதத்தை கேட்டான் கிருஷ்ணா.

"அடேய் பாஸ் இன்னும் கட்டலையா?" சிரிப்போடு அந்த திருமணத்தை இரு குடும்ப தலைமையில் சிறப்பாக முடிய.

கையோடு இருவரையும் தேன் நிலவுக்கு பேக் அப் செய்து விட்டார்கள் குடும்பத்தானர்.

காரில் போகும் போது கிருஷ்ணா தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டவள்.

“ஏன் என்கிட்ட முன்னவே சொல்லலை?”

“அது நீ சரியா நடிக்கமாட்ட அதுதான்” கிருஷ்ணா அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு சொல்ல.

“ராதாவை கல்யாணம் செய்ய தயாராக தானே இருந்திங்க, அப்புறம் எப்படி?”

நடந்ததை சொன்னான், அதான் மாதவனும் புரிஞ்சிகிட்டாங்க இல்லை. இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடலாமே.

“இரண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேண்டும், மாதவனுக்கும் சரி ராதாவின் வலிக்கும் சரி, நேரம் வரும்போது இருவரையும் சேர்த்துவச்சிடலாம்”

“நீங்க இரண்டு பேரும் ரொம்ப குளோஸ் இல்ல”

“ஆமா… பார்க்கறவங்க எல்லாம் நாங்க இரண்டு பேரும்தான் கல்யாணம் செஞ்சிப்போம்ன்னு சொல்லுவாங்க”

“அப்போ ஏன் அவளை விட்டுட்டு என்ன காதலிச்சிங்க”

“அவ எனக்கு அம்மா போல, இந்த வயசு மத்தவங்க கண்ணுக்கு தவறாதான் தெரியும் ஒரு ஒருத்தர்கிட்டையும் விளக்கமா கொடுக்க முடியும்”

“அப்போ எப்படி கல்யாணம் வரை போனிங்க”

“வேற ஆப்சனே இல்லை எனக்கு அப்போ அவள் வாழ்க்கையை சரி செய்ய என் காதலை மறச்சிட்டேன்”

“ம்ம்ம்…” அனு அதன் பிறகு அமைதியா ஆகிட்டா.

“என்னாச்சி என் மேல கோபமா?”

“இல்லை பெருமையா இருக்கு, உங்க மனசு ரொம்ப உயரம் அத்தை மகளுக்காக தன் காதலையே விட நினைத்த நீங்க, உங்க மனைவியை எப்படி பார்த்துப்பிங்க லவ் யூ. உங்க மேல இருக்க காதல் அதிகமாகிட்டே போகுது” இருவரும் பிளைட்டில் ஏறி அவர்களின் வாழ்க்கையை துவங்க செல்ல.

வீட்டில்…

"சரி நாங்களும் கிளம்பறோம், வீட்டை பூட்ட கூட இல்லை அப்படியே வந்துட்டோம்" என்று அனு பெற்றோர்கள் மன நிறைவோடு அடுத்த கோவில் ட்ரிப்புக்கு ரகுவரனுடன் பேசிவிட்டு போனார்கள்.

"இது எல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா? இப்போ தானே வீட்டுக்கு வந்திங்க அதுக்குள்ள என்ன ட்ரிப்" ராதா ரகுவரனை முறைக்க.

"வருசத்துக்கு ஒரு முறைதான் போவேன் சரியா"

"சரி... வாங்க உள்ள போலாம்"

ஒரு வழியா இந்த இரண்டு காதல் ஜாடியை சேர்த்து வச்சாச்சி, மனசு இப்போதான் லேசா இருக்கு.

நம்ம காதலால் சேராது போனாலும், பிறர் காதலை சேர்த்து வைப்பதில் எவ்வளவு ஒரு நிம்மதி இருக்கு.

சரியான லூசுங்க இரண்டும், அனு இன்னமும் பயந்தாங்கோலி தான் ஒரே ஆபிஸ்ல இருந்துட்டு ஒரு முறை கூட லவ் சொல்லலை. அந்த கிருஷ்ணா உருவம் அப்படி, ஆனா எப்படி அவனை லவ் பண்ணா. அடியே அசடு லவ் என்ன உருவத்தை பார்த்தா வருது அது எல்லாம் எத பார்த்து வருதுன்னே தெரியாது.

இருவரையும் ஹனி மூனுக்கு அனுப்பிவிட்டு ரகுவரனும் அருகில் வந்து உட்கார்ந்தாள் ராதா.

"மாமா... என்மேல கோபமா?"

"இல்லையே" வாய் இல்லை என்று சொன்னாலும் அவள் செய்து வைத்ததை கிருஷ்ணா அ முதல் ஃ வரை ஒன்று விடாமல் சொல்லிவிட்டு தான் சென்றான்.

"தெரியாம நான் செய்தது தப்புதான் எனக்கு தெரியும், ஆனா என்னால ஒருத்தனை நினைச்சிட்டு கிருஷ்ணாவை கல்யாணம் செய்துக்க முடியலை. கண்ணா கூட நான் காதலித்த நாட்களில் அவன்தான் என் கணவன்னு ஆழமாக பதிஞ்சிடுச்சி. அதுமட்டும் இல்லாமல், கிருஷ்ணா மனசிலும் அனு இருப்பது முன்னவே தெரியும். என்னால எப்படி மாமா ஒரு காதலை பிரிக்க முடியும், பிரிந்து நான் அனுபவிப்பது பத்தாதா. என் வாழ்க்கையை யோசித்த கிருஷ்ணா அவன் வாழ்க்கையை யோசிக்க மறத்துட்டான். அவன் மறந்தா என்ன அவன் வாழ்க்கையில் பிடித்ததை கொண்டு வருவது என் கடமை. அவங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர். சந்தோஷமா வாழுவாங்க மாமா" ரகுவரன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“உன்னை போல ஒரு பெண்ணை வளர்த்ததுக்கு பெருமைப்படுறோம் ராதா, நாங்க இரண்டு பேரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்”

“நீங்க இல்லை, நான் தான் ரொம்ப அதிர்ஷ்ட்டசாலி, இரண்டு பேரும் உங்க வாழ்க்கையை பத்தி நினைக்காம என்னை பத்தி யோசிச்சிட்டு இருக்கிங்களே… இப்போ சொல்லுங்க யாரு அதிர்ஷ்டசாலி”

“நம்ம எல்லோரும் அதிர்ஷ்டசாலி தான் சரியா”

“ம்ம்ம்… மாமா”

"மத்தவங்களை பற்றி நினைத்தது போதும், உன்னை பத்தியும் அடுத்து என்ன செய்யுறதா இருக்க"

"அதான் நம்ம பிஸ்னஸ் இருக்குல... அதை டெவலப் செய்ய போறேன்"

"அதை பத்தி நான் கேட்கலை, உன் கல்யாணத்தை பத்தி கேட்கிறேன்"

"எனக்கு பிடித்தவனை திரும்ப பார்க்கும் போது கையை பிடித்து இழுத்துவந்து சொல்லுறேன்... சரியா"

"நான் எதாவது மாப்பிள்ளை பார்க்கட்டா"

"கிருஷ்ணா சொன்னது மறந்துட்டிங்களா மாமா, இனி ஒருத்தன் வந்து என்னை எதும் சொல்லுவதை என்னால ஏத்துக்க முடியாது, எனக்கு நீங்க இருக்கிங்க அது போதும் பா"

அவளது பா... என்ற அழைப்பில் நெகிழ்ந்து ரகுவரன்.

"சரி, என் பொண்ணு சரியா தான் நினைப்பா, ஆனா சீக்கரமா நீ கல்யாணம் செஞ்சிக்கனும் அதான் என் ஆசை"

"எனக்கு பிடிந்தவனை பார்க்கும் போது அடுத்த நொடியே கல்யாணம் சரியா"

"சரி பிஸ்னசில் என்ன செய்ய போற?"

"லெதர் தானே எக்ஸபோர்ட் செய்யுறோம், அதுல திங்க்ஸ் பிரோடக்சன் செய்யலாம்ன்னு இருக்கேன். டிசைன் செய்யும் வேலை நான் பார்த்துக்கிறேன், பிரோடக்சன் நீங்க பாத்துக்கோங்க, மார்கட்டிங் கிருஷ்ணா பாத்துக்கட்டும் சரியா"

"சரிடா தங்கம் ரொம்ப வேலை பார்த்துட்ட, போய் டிரஸ் மாத்திட்டு தூங்கு"

"சரி மாமா" வழக்கமாக ரகுவரன் கன்னத்தில் எச்சை செய்து விட்டு போனாள் ராதா.

"ஐயோ எச்சை... இன்னும் மாறலை?"

"நான் எப்பவும் மாறமாட்டேன் மாமா" என்று அவளது அறையில் புகுந்து கொண்டாள்.

'சாதாரண விஷயத்தையே மாத்திக்க முடியாத நீ எப்படி வாழ்க்கையா நினைத்தவனை மறந்து வேற வாழ்க்கை அமைத்துப்ப. கடவுளே என் மருமகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுங்க' என ரகுவரனால் மனதால் வேண்ட மட்டும்தான் முடிந்தது.

கலைப்பு தீர குளித்தவள்‍ கண்ணா முதல் முதலாக வாங்கி கொடுத்த கருப்பு வெள்ளை டாப்சை அணிந்து, தன்னை கண்ணாடியில் பார்த்தவள்.

"இனி இது தான் எனக்கு துணை" என அவனை அணைப்பது போல அணைத்து கண்களை மூடினாள்.

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்ம
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா.. ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்


என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா...


அவனின் நினைவுகளோடு, பாட்டை கேட்டுக்கொண்டே தூங்கினாள்.

இனி இவளது வாழ்க்கை தனிமையில் அவளது காதல் நினைவுகளோடு...

இந்த ராதைக்கு ஏற்ற கண்ணன் யார்? மாதவனா இல்லே வேறு ஒருவனா? எங்கு இருக்கிறானோ?

விரைவில் வருவான்… “இவள் என் ராதை” என்று உரிமை கொண்டாட.

மீண்டும் சந்திப்போம் அடுத்த பாகத்தில்.
 
Top