வந்த வேலைய விட்டுட்டு இவனை பத்தி யோசிச்சிட்டு இருக்கேன், என்று நினைத்தப்படி தன் அத்தையை தேடி நடக்கலானாள்.
'இதைப் பற்றி அத்தையிடம் எடுத்துக்கூறி வேலைக்கு போய்டணும் " என்று முடிவுக்கு வந்தவள், தோட்டத்தில் இருக்கும் அத்தை நோக்கி அடியெடுத்து வைத்தவள்.. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு...
'சொல்லிவிடலாம்', என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டப்படி.
" அத்தை உங்களிடம் கொஞ்சம் பேசனும் ." என்று அவள் ஆரம்பிக்கும் போது அவளின் அத்தை, அவளை மேலும் பேசவிடாமல், அவர் பேச்சை ஆரம்பித்து விட்டார்.
"வா மா... நானே வரலாம் என்று நினைத்தேன் உன்னைப் பார்க்க..."
"என்ன அத்த? இவ்ளோ ஹாப்பியா இருக்கீங்க?" என்று அவள் அத்தையின் ஆர்வமான முகத்தை பார்த்து கேட்கவும்..
"பொழுது சாய்ந்த பின் நீங்க ரெண்டு பேரும் கோவில் போயிட்டு வாங்க..." என்ற தன் அத்தையின் வார்த்தையில்,
'திடீரென்று இது எதற்கு?' என்று தோன்றியது அவளுக்கு. அவள் முகத்தில் கேள்வியின் ரேகைகளைக் கண்ட அர்ஜுனின் அம்மா மீரா, மெல்லிய புன்னகையோடு..
"சாந்தி முகூர்த்தம் மா.... அவனை உன்னிடம் சொல்ல சொன்னேனே?! அவன் சொல்லலையா?" என்று தன் அத்தையின் கூறவும் தான் அவளுக்கு விளங்கியது.
'அதுக்கு தான் எருமை ரெடி ஆக சொன்னானா? இது என்ன புது கதை? அவன்கூடலாம் என்னால் வாழவே முடியாது . பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒரு வார்த்தைக்கூட அதை எடுத்து சொல்லாமல் அது பாட்டுக்கு சுத்திட்டு இருக்கான். லவ் பண்ண போது விட்டுட்டு போனவன்... கல்யாணத்துக்கப்புறம் விட்டுட்டுப் போகமாட்டான்னு என்ன நிச்சயம்?' என்று நினைத்தவளின் முகம் வாடிப்போயிருந்தது..
'அதுபோல திரும்ப ஏதாவது நடந்தா என்னால முடியாது. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.' என்று நினைத்தவள் வேகமாக அர்ஜுன் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
'ஆனா இன்னைக்கு சம்பவம் இருக்கு அவன்கிட்ட கேட்கிற கேள்வியில அவன் ஓடனும்..' என்று மனதில் கங்கனம் கட்டிக்கொண்டு அர்ஜுனிடம் பேசப் போனாள். அதே நேரத்தில் அவன் ஏதோ பேச வர...
"கொஞ்சம் நிறுத்துரீங்களா? தேவையில்லாததை பேச வேண்டாம். வேற ஒரு பொண்ணுக்கூட உங்க கல்யாணம் நடக்கிறதா இருந்தது. அந்த எதுனாலையோ கல்யாணம் நின்றது. அந்த சமயத்துல நீங்க என்னைய கல்யாணம் பண்ணிட்டீங்க. நம்ம உறவ இதோட நிறுத்திக்கலாம்.
உங்களப்பத்தி தெரிய வேண்டியது தெரிந்துவிட்டது. அதுவரை போதும். நான் எதுவும் கேட்கலை. என்னோட பாஸ்ட்-அ நீங்க கேட்காதீங்க. இந்த கணவன் மனைவி உறவைத் தவிர வேற எதுவும் நமக்குள்ள இல்ல. தேவையில்லாதை பேசி வேண்டாம்." என்று பட்டாசாகப் வெடித்து தள்ளியவளை ஒரு நிமிடம் அச்சரியமாக பார்த்தான். பின்,
"ஹேய்! என்ன நடந்ததுனு புரியாம பேசாத. நான் சொல்றதை கேளு. அங்க என்ன நடந்ததுன்னு எதுவுமே தெரியாமல் இப்படி கோபப்படுவது தவறு." என்றான் அர்ஜுன் பொறுமையாக.
"நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணும்னு இல்ல. அங்க என்ன நடந்தது என்று எனக்கு நன்றாகவே தெரியும். என் மனசுல ஆசைய வளர்த்துட்டு கடைசியா நல்ல வசதியான ஒரு பொண்ணு உங்களுக்கு வீட்ல பார்த்தவுடனே கல்யாணம் கட்டிக்க ரெடியாயிட்டீங்கல? என் நினைவு உங்களுக்கு கொஞ்சம் கூட வரவில்லையா...?" என்று கூறியவளின் குரல் நடுங்கியது. கண்கள் கலங்க அவனை அவள் பார்க்கவும் அர்ஜுனுக்கு பதறியது.
"அப்படி எல்லாம் இல்ல மா...." என்று கூறியபடி ஆறுதலாக அவள் கையை பிடிக்க வர, அவளோ லாவகமாக அவனிடமிருந்து விலகினாள்.
"என்னைய பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல நீங்க..... அங்க போன கடைசி நிமிடம் வரைக்கும் நான் உங்களுக்கு மட்டும் தான்னு நினைச்சுட்டு இருந்தேன்.
அதற்கான தண்டனைத் தான் எனக்கு இப்போ கிடைச்சிருக்கு. வாழ்க்கை முழுக்க இதை நினைத்து நினைத்து நான் வருந்தணும்னு தான் கடவுள் உங்களுக்கும் எனக்கும் முடிச்சி போட்டுவிட்டார். அவளையும் கட்டிக்கிட்டு, அதைப்பத்தி என்னிடம் மறச்சு என்னையும் கட்டிகிடலாம்னு தான பிளான் போட்டு இருந்த....?" என்று கலங்கிய கண்களோடு ஆத்திரத்தில் பொறிந்தாள் அவள்.
இதைக் கேட்டதும் அர்ஜுனின் இதயத்தில் கத்தி எடுத்து குத்தியது போல இருந்தது.
"இதுக்காகத்தான் அன்னைக்கு, 'ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் அதுவும் யாருக்கும் தெரியாமல்' என்று நீ என்னை முளைச்சலவை செய்தாயா?" என்று அவள் மேலும் அவனை நோகடிக்கும் வார்த்தைகளைக் கூறினாள்.
"நான் அன்னைக்கு உன்னோட பிரச்சினைக்கு சொல்யூஷன் சொன்னேன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பொறுமையா இரு பேசிக்கலாம்." என்று அவளை சமாதனப்படுத்த முயற்சி செய்தான்.
"மோசம் பண்ணிட்டு எப்படி உன்னால பேச முடியுது? இதுல நான் பொறுமையா வேற இருக்கணுமா? துரோகி... போ." என்று ஆத்திரத்தில் அவள் கத்தவும்,
"நான் துரோகியா டி?" என்று மனவலி தாங்காமல் அர்ஜுன் கேட்க..
"ஆமா........." என்று அவள் அக்ரோசமாக கத்தினாள்.
"எனக்கு அப்போ என்ன செய்யுறதுனு புரியலை. என்ன சொன்னா நான் உன்னைய கல்யாணம் பண்ணிடக்கலாம்னு முயற்சி செய்தேன்... ஏதாவது சொல்லிவிட்டால் தப்பாக போயிடுமோனு பயந்தேன்." என்று சோர்வில் தன் தலையில் கைவைத்தப்படி அர்ஜுன் கூற..
"என்னை நீ புரிந்தது அவ்வளவே..." என்றவளின் குரலில் சலிப்பு தெரிந்தது.
"இதுக்கு ஒரு நாள் இல்ல.. தினம் தினம் என்னிடம் அனுபவிப்ப நீ ..." என்று அவள் கூற..
"மூஞ்சியும் ஆளும் பாரு... சரிதான் போடி..." என்று அவன் கூறவும், அவ்விடத்தை விட்டு அவள் நகர்ந்தாள்.
அவள் வருவதற்குள் கோவில் போக தயாராகி வந்தான் அர்ஜுன்.
அணைத்து கோபத்தையும் அர்ஜுன் அவன் அன்னை புறம் திருப்பினான்..
"ம்மா... அவள எனக்கு பிடிக்கலை. உன் சொல் கேட்டு நடந்ததற்கு எனக்கு தண்டனையா.... ? கொஞ்சம் அனுசரணையா நடந்துக்க சொல்லும்மா அவளை.." என்று கோபத்தில் அவன் புருவம் சுருங்கவதைப் பார்த்த அவன் அம்மா.
"ஹேய்! நீ எதுவும் வஞ்சிடாத அவளை. சொன்ன புரியும் அவளுக்கு." என்று அவர் பதட்டத்துடன் கூறினார். தன் தாயின் பதட்டத்தைக்ஸகண்டு சற்று மனம் இளகிய அர்ஜுன்
"சரி ம்மா." என்று அமைதியாக கூறியப்படி அவன் சாப்பிடுவதற்கு நாற்காலியில் அமர... இதை எல்லாம் கேட்டுட்டு அவன் அருகில் வந்து சாப்பிட நாற்காலியை அவள் இழுக்க... 'கீச்!' என்று சத்தம் வந்தது. அந்த சத்தத்தில் கண்களை சுருக்கிய அர்ஜுன்,
"மேனர்ஸ்...!!! " என்று சொல்லிவிட்டு சாப்பிடுவதில் கவனத்தை திருப்பினான்.
இதைக்கேட்ட அவளுக்கு மூக்கு மேல் கோபம் வர, "இடியட்" என்று அவன் காதுபடவே கூறினாள்.
அதை அவன் கண்டு கொண்டது போல தெரியவில்லை. திரும்ப ஒரு முறை சத்தமாக "இடியட்......!!!!" என்று கத்தினாள்.
அவள் கத்திய சத்தம் அர்ஜுனின் அம்மா காதில் விழ, "யாரமா அந்த இடியட்.....?" என்று அவர் அமைதியாக கேட்டார்.
'அச்சச்சோ...மாட்டிகிட்டோமே...!' என்று மனதிற்குள் நினைத்தவள்,
"அது... வந்து... அத்தை......." என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழிப்பதைப் பார்த்த அர்ஜுனுக்கு லேசாக சிரிப்பு வந்தது.
"நல்லா வாங்கு என் அம்மாவிடம்...." என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அர்ஜுன் அவளிடன் கலாய்க்க.. அவனிடம் எதுவும் கூறாமல் அத்தையிடம் என்ன காரணம் கூறலாம் என்று யோசித்தவளாய்,
"அத்தை.. அது வந்து மாமாவ செல்லமாக அழைத்தேன்..." என்றவள் ஈஈஈஈ என்று பற்களை காட்டி சிரித்தவளை பார்த்தவன்,
"பேசுவது எல்லாம் பேசிவிட்டு மாமாவா....? நல்லா இருக்கு இந்த கதை...." என்று மீண்டும் அவள் காதில் மட்டும் கேட்கும்படி அர்ஜுன் பேசி நமட்டு சிரிப்பு சிரித்தான்.
"இப்படிலாமா கொஞ்சிபீங்க இந்த காலத்து பசங்க?!" என்று சிரித்தப்படி கூறியவர் அவர்களுக்கு தனிமை வழங்கும் நோக்கத்தோடு, அவ்விடத்தைவிட்டு சென்றார். அவர் சென்றதும் அர்ஜுன், தன் மனைவி சாராவிடம்,
"இது பழைய பெயர்... புதுசா வைடி என் சரோ....." என்று நக்கலாக அவன் பேசி முடிக்கும் முன்...
"இப்படி பேசுனீங்கனா, நான் பேசமாட்டேன்...." எல்லாவற்றையும் மறந்து அவனிடம் பேரம் பேசினாள். அதனை கவனித்தவன் சிரிக்க..அவன் சிரிப்பில் மெய்மறந்தவள்,
" பேபி! ஐ வாண்ட் டூ கிஸ் யு." என்று தன்னை மறந்து சாரா கூற..
"ஓகே..ஆனா நம்ம ஃபைட் இன்னும் முடியல." என்று அர்ஜுன் அவளுக்கு நினைவுப்படுத்த...
'எப்படி இதை மறந்து...... அவன்கிட்ட போய் இப்படி கேட்டு வச்சிருக்கேன்? நான் சரியான பைத்தியம்.. அதான் இப்படி என்னைய இம்சை செய்கிறது இந்த இடியட் ...' என்று மனதிற்குள் அவனை அர்ச்சனை செய்துகொண்டே உணவு உண்டு முடிக்கவும் கோவில் கிளம்ப தயாரானார்கள்.
மங்களகரமாக தயாராகி வந்தார்கள் புதுமண தம்பதியர்கள். சாரா, மஞ்சள் நிறத்திலும் ... அர்ஜுன், பட்டு வேட்டி சட்டையிலும் வந்தனர்.
"மஞ்சக்காட்டு மைனா... என்ன கொஞ்சி கொஞ்சி....." என்று அர்ஜுன், சாராவைப் பார்த்து பாட...அதைக்கேட்டு அவள் அர்ஜுனை முறைத்தாள்..
"வரி மாறிவிட்டது...... 'மஞ்சைக் காட்டு மைனா... என்ன முறைத்து முறைத்து போனா.......' " என்று அவன் பாடி முடிப்பதற்குள் சாரா அவனை அனல்கக்கும் பார்வை பார்த்தாள்.
"சரிதான் போடி போடி.... ஏதோ நல்லா இருக்கா என்று பாடினால் ஓவரா தான் பண்ணுற...." என்றவன் கார் எடுக்க போனான்.....
"திமிர பாரு..... இடியட்" என்று அர்ஜுனை முறைத்தபடி பற்களுகுள் வார்த்தைகளை மென்று துப்பினாள் அவனின் மனைவியான சாரா....
❤