• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

3. சுரேஷ் வீடு

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
“உனக்கு

முன் பின் தெரியாதவன்.

ஆனாலும் இனி

உன் வாழ்நாளின்

இறுதி மூச்சு வரை

உடனிருக்க போகிறவன்.

என்ற உரிமையில்

உன்னிடம் கடிந்து கொள்ள

முழு உரிமையும் பெற்றவனடி நான்...”


பாதி வழியில் காரை நல்ல ஹோட்டல் ஒன்றின்முன் சாப்பிட நிறுத்திய ஷக்தி,

"மஹா நீ என்ன சாப்பிடற?" என்று கேட்க.

"இல்ல! எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு தலைவலிக்கற மாதிரி இருக்கு" என்றாள் அவனை பார்க்காமல்.

"காலைலர்ந்து எதுவுமே சாப்பிடாம இருக்கறதுனால தான் தலைவலிக்குது. அதனால கொஞ்சமா ஏதாவது சாப்பிட்டுட்டு டேப்லெட் வேணா போட்டுக்க" என்றான் அக்கறையாய்.

"பிளிஸ்! எனக்கு எதுவும் வேண்டாம்” என மஹா திரும்பி கூறியதை காதில் வாங்காமல் அவளுக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கி வந்தான்.

"இப்ப நீ சாப்பிட்டா வீட்டுக்கு போலாம். இல்லனா மயக்கம் வந்து ஹாஸ்பிடல்க்கு தான் போகணும். பரவா இல்லையா?” என்றவுடன் எதுவும் சொல்லாமல் வாங்கி சாப்பிட்டாள்.

"தட்ஸ் குட்" என்று அவனும் சுரேஷும் சாப்பிட்டு முடித்தனர்.

"சரி ஷக்தி. எதுக்குடா இப்ப மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணனும்னு சொல்ற?" சுரேஷ்.

“ எங்க அப்பாவை பத்தி உனக்கு தான் நல்லா தெரியுமில்ல? எல்லாம் ஒரு சேப்டிக்கு தான்" என்றான் ஷக்தி.

மூவரும் மதிய உணவை முடித்து கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

வழிநெடுகிலும் ஷக்தியின் விழிகள் மஹாவை நோக்க, மறுபுறம் பல சிந்தனைகளில் வண்டியை ஒட்டி கொண்டிருந்தான்.

ஆனால் மஹாவோ? ஷக்தி தன்னை பார்ப்பதை உணர்ந்து அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் சிறிதுநேரம் வெளியே இருந்த இயற்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

பின் பயண களைப்பின் அசதியால் ஷக்தியின் மீதே சாய்ந்தே மீண்டும் உறங்கி போயிருந்தாள்.

பின்னால் உறங்கி கொண்டிருக்கும் சுரேஷை திரும்பி பார்த்து புலம்ப ஆரம்பித்தான். ‘இந்த எருமமாடு பாரு. நான் தொடர்ந்து வண்டி ஓட்டிட்டு வரேன், கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா பாரு? நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் ஓட்டுறேன்னு சொல்றானா பாரு? கும்பகர்ணன் மாதிரி நல்லா தூங்கிட்டு வருது’ என்று காலி தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் மேல் வீசினான்.

பாட்டில் மேலே விழுந்ததில் அலறி அடித்து எழுந்து பார்த்தவன் ஷக்தி சிரிப்பதை பார்த்து, ”ஏன்டா!... நீ தானா... ஏன் இப்படி நான் தூங்கறது பிடிக்கலன்னா இப்படி தான் பண்ணுவாங்களா?" என்றான் வடிவேல் கணக்காக.

மூன்று மணி நேர பயணத்திற்கு பின் இரவு ஏழுமணிக்கு சுரேஷின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சுரேஷின் அம்மா ரேகா அவர்களை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிச்சென்றார்.

“வாங்க அண்ணி” என்று சுபா உள்ளே அழைத்து சென்றாள்.

மஹா தங்குவதற்கென்று ஒரு ரூம் ஏற்பாடு செய்திருந்தார்கள். உள்ளே சென்ற மஹாவிற்கு உள்ளுக்குள்ளே ஒருவித படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.

யாரையுமே அறியாத புது இடம்... புது மனிதர்கள்... புது சூழல்... என்று எல்லாமே புதிதாக இருக்கவும், கட்டிய கணவனை பற்றியும் எதுவுமே தெரியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டமாக அங்கேயே அமர்ந்திருந்தாள்.

உள்ளே வேகமாக வந்த சுதா ”அண்ணி! உங்களை கூப்பிட்றாங்க! வெளிய போகலாம் வாங்க" என்று கூட்டி சென்றாள்.

அங்கே இவர்களின் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து வந்திருந்தார்கள். சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு பின் இருவரும் கையொப்பமிட இவர்களின் திருமணம் பதிவானது.

அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் ஷக்தீயை முறைத்தான்.

’ரொம்ப உஷாருடா நீ. இதுக்கு தான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரிஞ்ச ரெஜிஸ்டறார் நம்பர் இருந்தா சொல்லுனு கேட்டியா? கேடி பய. எவ்ளோ வேலை பார்த்துருக்கான் பாரு. நானும் கூடாதானேயா இருந்தேன். இதெல்லாம் எப்போ செய்துருப்பான்?’ என்று உள்ளுக்குள் பொறுமி கொண்டிருந்தான் சுரேஷ்.

பதட்டம் குறையாத நிலையில், மறுபடியும் மஹா தனக்கு கொடுக்கபட்ட ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

கையில் ஒரு புடவையுடன் வந்த சுபா, ”அண்ணி இதை கட்டிக்கோங்க. அண்ணன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு" என்று குறும்பாய் கண்ணடித்தாள்.

“ என்ன?” என்றாள் மஹா அதிர்ச்சியாய்.

“ என்ன என்ன? உங்க கணவர் உங்கள பார்க்க வருவார் அப்டினேன். சுக்கு எதுக்கு இவ்ளோ ஷாக். சீக்கிரம் ரெடி ஆகிடுங்க" என்று சிரித்துகொண்டு வெளியேறினாள்.

காலையில் இருந்து சுற்றி திரிந்ததால் அலுப்பாக இருந்தது. அதுமட்டும் அல்லாமல், தான் கட்டியிருந்த அடர்சிவப்பு நிற பட்டுப்புடவை நீண்ட நேர பயணத்தால், முழுவதும் கசங்கி போயிருக்க, தன் தலையும் கூந்தலில் இருந்த மலர்களும் வாடி, அலங்காரம் களைந்து கற்றை கற்றையாய் துண்டு முடிகள் அங்கும் இங்கும் காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தன. குளித்தால் கொஞ்சம் பதட்டம் குறைந்து புத்துணர்ச்சி பெறலாம் என்று குளித்து, சுபா தந்த புடவையை கட்டிக்கொண்டு தலைவாரி சிறிய ஒப்பனை மட்டும் செய்து அமர்ந்திருந்தாள்.

கதவு திறந்து மூடும் ஓசை கேட்கவே மஹாவின் இதயதுடிப்பு வானளவு உயர ஆரம்பித்தது.

பட்டென கட்டிலில் இருந்து இறங்கி திரும்பி நின்றாள் .

இனம்புரியாத ஓர் பயம் தன் வயிற்றுக்குள் படர, பட்டாம்பூச்சிகள் ரீங்காரமிட்டு சுற்றி பறப்பதை போல் உணர்ந்தாள்.

"சோ மிஸஸ்.ஷக்தி! நீ கடவுள் கிட்ட கேட்ட மாதிரியே உன்னை அவங்ககிட்டர்ந்து காப்பாத்திட்டாரு, உனக்கு ஹாப்பியா?” என்றான் ஷக்தி மெல்ல சிரித்து.

வார்தைகள் இதழிலிருந்து வெளிவர மறந்து உள்ளுக்குள் தந்தியடிக்க, ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

"இங்க பாரு கொஞ்ச நாளைக்கு நீ இங்கதான் இருக்க போற. நான் நமக்கு நடந்த கல்யாணத்தை பத்தி வீட்ல சொல்றவரைக்கும் கொஞ்சம் எனக்காக பொறுத்துக்கோ. இங்க இருக்க எல்லாருமே உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. நீ பயப்படாம இருக்கலாம். அவங்கள மீறி யாராலும் உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போகமுடியாது. அதுவுமில்லாம, இப்ப நீ என்னோட மனைவி. என்னை மீறி உன்னை யாரும் நெருங்கவும் முடியாது, இப்போதைக்கு இந்த வீடுதான் உனக்கு ரொம்ப பாதுகாப்பானது, புரியுதா?” என்றான் ஷக்தி கனிவான பார்வையுடன்.

‘சரி’ என்று தலையசைத்தாள் மஹா.

"நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன். நீ அந்த பக்கம் திரும்பி நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று ஷக்தி அதட்ட.

உடனே அவன்புறம் திரும்பியவள் அவனை காணமுடியாமல் வெட்கத்தால் தரையை பார்த்து கொண்டிருந்தாள்.

‘என்ன இவ? ஒன்னு திரும்பி நின்னுக்குறா இல்ல தரைய பார்க்கிறா? ஒருவேளை ஊர்ல வளர்ந்ததால் தான் இப்படி இருக்கா போல. பரவால்ல, இதுகூட நல்லா தான் இருக்கு. நம்ம வீட்டுக்கு போனப்புறம் கொஞ்ச கொஞ்சமா மாத்திக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டான் ஷக்தி.

மஹாவை ஷக்தி நெருங்க ஒருஅடி முன்னே எடுத்துவைக்க, அவள் உடல் பயத்தினால் நடுங்குவதை பார்த்து, அங்கேயே நின்று அவளை தலை முதல் கால் வரை மெதுவாக ரசித்தான்.

அவனின் விழிகள் தன்மீதே இருப்பதை உணர்ந்து ஒருவித பயத்துடன் உடலில் வியர்க்க துவங்கியதுடன் முதன்முறையாக ஒரு ஆடவனின் அருகாமையும் பார்வையும் தன் மேல் விழுவதை எண்ணி வெட்கத்தில் முகம் முழுவதும் தங்கத்தின் நிறத்தில் சிவந்து ஜொலிப்பதை உணர்ந்தாள்.

அவளின் வெட்கம் தன் அருகாமையினால் அவளுக்குள் ஏற்படும் ஒருவித படபடப்பு என எல்லாவற்றையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும் தனக்குள்ளும் அதே மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான் ஷக்தி.

மஹாவின் முகத்தில் தெரியும் ஒருவித பயம் வெட்கம் எல்லாம் அவளின் பால் தன்னை ஈர்ப்பதை உணர்ந்தான். இருந்தும் விடாமல்,

"அங்க தரைலயா என் முகம் இருக்கு? இங்க என் முகத்தை பாரு” என்றான் மேலும் கொஞ்சம் நெருங்கி.

‘முடியாது’ என்று அவள் தலையசைப்பதில் தன்னை காண வெட்கப்படுகிறாள் என்று புரிந்தாலும் அவன் விடுவதாய் இல்லை.

"இப்ப நீ என்ன பார்க்க போறியா இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே அவளிடம் ஒருஅடி முன்னேறினான்.

ஒருஅடி பின்னே எடுத்துவைத்தபடி அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் விழிகளில் மின்னிய ஒளி! வளர்பிறையின் முகஅழகு! என அவனை கண் கொட்டாமல் தன்னையும் மறந்து பார்த்து கொண்டே இருந்தாள் மஹா.

“ என்னை பாக்காம தரையையே பார்த்துட்டு இருந்த? இப்ப என்னடான்னா? என் முகத்தை பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கா?" என்று கண்ணடித்து கலகலவென சிரித்தான்.

அவனின் சீண்டலில் முகம் செந்தூரமாய் சிவந்தவள், திரும்பிநின்று முகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டாள்.

"ஓஹ்...ஓ...! ஆ...உ...ன்னா என் பொண்டாட்டிக்கு வெட்கம் அதிகமாகி அந்த பக்கம் திரும்பிக்கறதே வேலையா போச்சு" என்று சிரித்தான் ஷக்தி.

"சரி இங்க என்னை பாரு. முதல்ல நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிப்போம். எனிவே, எனக்கு உன்னை பத்தி ஓரளவு தெரியும். ஆனா, உனக்கு தான் என்னை பத்தி எதுவும் தெரியாது. தெரிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை" என்றான் ஷக்தி புதிராய்.

‘என்னது இவருக்கு என்னை பத்தி முன்னாடியே தெரியுமா? எப்படி?’ என்று குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தாள் மஹா.

மார்பிற்கு குறுக்கே தன் கரங்களை கட்டிக்கொண்டு அவளையே தலைசாய்த்து பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான் ஷக்தி.

“ என்ன எப்படின்னு தான இப்படி பார்க்குற?" என்று கண்ணடிதான்.

அவனின் செய்கையில் தன்னை மறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் கண்ணடிப்பதை பார்த்தவுடன் கீழே குனிந்து கொண்டாள்.

‘உனக்கே தெரியாமல், கடந்த ஒரு மாசமா உன்னை ரொம்ப பக்கத்துல இருந்து. ஆனா, நீ என்னை பார்க்காத தூரத்துல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்” என்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

மேலும் ”நம்மை காப்பாத்த தான் கல்யாணம் பண்ணியிருக்கார்னு நினைச்சனா? இந்த நிமிஷத்துலேர்ந்து அந்த எண்ணத்தை மாத்திக்க. உன்னை ரொம்ப பிடிச்சு போய், உன்னை மனதார விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்றான் நிறுத்தி நிதானமாய்.

அவன் பேசியதில் அதிர்ச்சியடைந்து சட்டென தலை உயர்த்தி அவன் விழிகளையே நோக்கி, “ என்ன?" என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யதோடு வாய் விட்டே கேட்டாள்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,105
679
113
Ariyalur
Screenshot_20220201-211202.jpg