சில மாதங்களுக்குப் பிறகு..
சாருபாலாவின் வாழ்க்கை, அமைதியாக சென்றது! திலகமும் கருணாகரனும், அவளை மகளைப் போல பாவித்தார்கள்! இடையில் அவள் தம்பியைப் போய் பார்த்து வந்தாள்! அப்போது தன் வாழ்க்கை பற்றிய விஷயத்தை தெரிவித்தாள்!
சாந்திதான் அதைக் கேட்டு மிகவும் அழுதாள்! சுரேந்திரனுக்கும் வருத்தம்தான்! பிள்ளையை மீட்டுக் கொண்டு நாம் சேர்ந்து வாழலாம் என்று யோசனையும் சொன்னான்!
ஆனால் சாருபாலா, வேறு சொன்னாள்!
"அவன் தந்தையுடன் வளர்வது தான் சரி! நான் வளர்ந்த சூழல்,காரணமாக அவனை சரியாக வளர்க்க தவறிவிட்டால் அவனது எதிர்காலமே பாழாகிப் போகும்!" என்று முடித்து விட்டாள்! இத்தனைக்கும் நடுவில் இருவரையும் சென்னைக்கு வரவழைத்து, மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள செய்தாள்! மருத்துவர் மிகுந்த நம்பிக்கை அளித்து, ஆலோசனனகளை சொல்லி அனுப்பி வைத்தார்!
🩵🩷🩵
சாருவுக்கு மகனுடைய நினைவு அடிக்கடி வந்தது! அதன் விளைவாக எங்கே தன்னை மீறி ஆனந்தன் வீட்டிற்கு சென்று விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது! இப்படியே இருந்தால் நிச்சயமாக மனநலம் பாதிக்கப்படுவது உறுதி என்று தோன்ற, அதில் இருந்து மீள்வதற்காக,மேற்படிப்பு படிக்கலாம் என்று முடிவு செய்தாள்! கூடவே இப்போது அவளிடம் போதிய பணம் இருப்பதால், தனது படிப்பை வெளிநாட்டில் தொடர்ந்தால், இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தாள்! அப்படி வெளிநாட்டிற்கு போவதானால், நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்! தேர்வுகளுக்கு படிக்க என்று புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்தாள்! அத்தோடு பாஸ்போர்ட் விசாவுக்கும் ஏற்பாடு செய்வதில் மும்முரமானாள்!
இன்னும் சில மாதங்கள் கழிந்தது!
இந்நிலையில் தான், சுரேந்திரன், போன் செய்து, சாந்தி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தான்! சாருவுக்கு அளவில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று! திலகத்திடம் சொல்லிவிட்டு, மதுரைக்கு பயணமானாள் சாருபாலா!
சாந்தியை பரிசோதித்த பிறகு, அவள் மிகவும் பலவீனமாக இருப்பதால், அத்தியாவசிய, தேவைகளுக்கு தவிர ஏனைய நேரம் படுக்கையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கண்டித்து சொல்லிவிட்டார்!
ஆகவே அவளை பார்த்துக்கொள்ள ஒருவர் கூடவே இருக்க வேண்டும்!
வேலைக்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்யலாம் தான்! ஆனால் அவள் வேலையை தான் செய்வாள், சாந்தியை அக்கறையாய் கவனித்துக் கொள்ள மாட்டாளே! ஆகவே சாருபாலா,தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மதுரைக்கு கிளம்பிவிட்டாள்!
கருணாகரன் தம்பதிக்கு அவளை பிரியவே மனமில்லை! ஆனால் அவள் ஒரு நல்ல விஷயத்திற்காக போகிறாள் என்று மனதை தேற்றிக் கொண்டு அனுப்பி வைத்தார்கள்!
சாந்திக்கு நாத்தனார் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியே! அதைவிட அவள் தனக்காக வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள்,என்ற செய்தியில் அதிர்ந்து போனாள்! மனம் நெகிழ கண்கள் கலங்க,"எனக்காக, உங்களுக்கு பிடிச்ச வேலையை விட்டு விட்டீங்களே அண்ணி! என்று அவ்வப்போது புலம்பினாள்!
அதை காணச் சகியாமல், "ஏற்கனவே நான் வேலையை விடுவதாக முடிவு செய்திருந்தேன் சாந்தி! என்ன இன்னும் இரண்டு மூனு மாசம் கழிச்சு செய்ய வேண்டியதை கொஞ்சம் முன்னாடி செய்திருக்கிறேன் அவ்வளவுதான்!" என்றாள் சாருபாலா!
"அப்படியா ? ஏன் அண்ணி? எதுக்காக அப்படி ஒரு முடிவு? "
"நான் மேல படிக்கிறதுக்காக வெளிநாடு போறதா முடிவு எடுத்தாச்சு! அங்கே வேலை செய்துக்கிட்டே படிப்பையும் தொடரலாம்னு நினைச்சேன் சாந்தி! அதுக்குள்ள நீ இப்படி ஒரு சந்தோஷமான செய்தி சொல்லிட்டே! படிப்பு எப்ப வேணாலும் படிக்கலாம்! இப்ப உன்கூட இருந்து பார்த்துக்கிறது தான் எனக்கு முக்கியம்! எனக்கும் ஒரு மாறுதல்! என்ற சாருபாலா கடைசி வாக்கியத்தை மனதோடு சொல்லிக் கொண்டாள்!
🩷🩵🩷
அனிதாவுக்கு கணவனின் பாராமுகம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதும், இது அவள் விரும்பிய வாழ்க்கை! இதை போகப்போக எப்படியும் சரி செய்தே ஆக வேண்டும்! எத்தனை காலத்திற்கு அவனால் அப்படி இருந்துவிட முடியும்? என்று பொறுமை காத்தாள்!
ரிஷியை பள்ளியில் சேர்த்து விட்டான் ஆனந்தன்! இரண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து, ஆனந்தன் தன்னை குடியில் இருந்து மெல்ல மெல்ல மீட்டுக் கொண்டான்! வேலையில் தீவிரமாக இறங்கினான்! எப்போதும் வேலை, வேலை என்று அதிலேயே முனைப்போடு இருந்தான்! கட்டுமானத் தொழில் மட்டுமின்றி வெவ்வேறான தொழில்களிலும் கால் பதிக்க திட்டமிட்டான்!
அடுத்து வந்த மாதங்களில் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாது சென்றது! திடுமென ஒரு நாள் இரவு அனிதாவிற்கு வலி எடுத்தது! அன்றைய தினம் இரவில் அவளது மகன் ஜனித்தான்! பிரசவம் முடிந்து, வீடு வந்தபின், உதவிக்கு நர்ஸை ஏற்பாடு செய்து கொண்டாள்! விசாலம் மருமகளின், ஒதுக்கத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தார்!
அனிதா உடல் தேறிய பின், இரு குழந்தைகளையும் பாரபட்சமின்றி கவனித்துக் கொண்டாள்! ஒரு நல்ல குடும்பத் தலைவியாக அந்த வீட்டை நிர்வகித்தாள்!
இந்நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது! அன்று, மதியம் அனிதா கைப்பிள்ளையான ரகுவை, வேலைக்காரியிடம் விட்டுவிட்டு, ரிஷியை அழைத்துவர பள்ளிக்கு சென்றிருந்தாள்!
அப்போது தான் தரையை துடைத்துவிட்டு பணியாள் அகன்றிருந்தான்! விசாலாட்சி, அறையை விட்டு வெளியே வந்தார்! சலவைக்கல் தரையில், ஈரம் போகாத நிலையில், அவர் இயல்பாக எடுத்து வைத்த அடுத்த அடியில், அப்படியே சறுக்கி விட்டது! பிடிமானத்திற்கு என்று ஒன்றும் இல்லாத நிலையில், காலை ஊன்ற முயன்று முடியாமல் தரையில் விழுந்தார்! என்னதான், ஆரோக்கியமான தேகம் என்றாலும், வயதான காரணத்தால்,பலம் இழந்த உறுப்புகள் என்பதால் அடி பலமாக பட்டது!
அதிர்ச்சியில் அவர் போட்ட சத்தத்தில் பணியாட்கள் ஓடி வந்தனர்! அம்மாளை தூக்க முயன்றால், அவர் வலியில் மேலும் அலறினார்! ஆம், காலிலும் கையிலும் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தது! ஒரு பணியாள் ஆனந்தனுக்கு அழைத்து விவரம் சொன்னான்! அவன் ஆம்புலன்ஸிற்கு சொல்லிவிட்டு, வீட்டிற்கு விரைந்து வந்தான்! அனிதாவும் அப்போது தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்!
"என்ன அத்தான் இந்த நேரத்தில்?" என்றாள் !
அவன் விஷயத்தை சொல்லும் போதே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது! அந்த ஊழியர்கள் அம்மாளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைய அவர்களுடன் ஆனந்தன் மட்டும் சென்றான்!
ஒரு முறை மட்டும் மாமியாரை எட்டிப் பார்த்துவிட்டு,வந்துவிட்டாள் அனிதா! இரண்டு தினங்களில் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர் சொன்னார்! ஆனந்தன் விஷயத்தை மனைவிக்கு சொல்ல,
அத்தான்! நான் குழந்தைகளை பார்ப்பேனா? அவங்களை பார்ப்பேனா? தப்பா நினைக்காதீங்க அத்தான்!
என்னால முடியாது! அதனால கட்டுப் பிரிக்கிறவரை அவங்க அங்கேயே இருக்கட்டும்! வீட்டுக்கு வந்தப்புறமா, நான் தானே பார்த்தாகணும்
! இப்போதைக்கு ஒரு அட்டென்டரை போட்டு பார்க்க சொல்லுங்க! இடையில் முடியறப்போ நான் போய் பார்த்துட்டு வர்றேன்!" என்று சொல்லிவிட்டாள்!
ஆனந்தனின் மனக்கண்ணில் முன்பொரு சமயத்தில் அக்கறையாக பார்த்துக்கொண்ட சாருபாலாவின் நினைவு தானாக வந்துபோயிற்று! ஒரு பெருமூச்சுடன் கைப்பேசியை அனைத்து விட்டு மருத்துவரிடம் சென்றான்!
🩵🩷🩵
வீடு வந்த பிறகும் விசாலத்திடம் அனிதா, முகம் கொடுத்து பேசுவதில்லை! பேரன்களை பார்க்க வேண்டும் என்றால், பிள்ளைகளை அழைத்து சென்று உடன் சற்று நேரம் இருந்துவிட்டு, வருவாள்! எந்த பணிவிடையும் செய்வதில்லை! எல்லாமும் வேலைக்காரர்களை கொண்டே செய்தாள்!
விசாலாட்சிக்கு சாருபாலாவின் நினைவு இப்போதெல்லாம் அடிக்கடி வந்து போயிற்று! அவள் ஒரு மருத்துவர்! அப்படி இருந்தும் ஒருநாளும் திமிராக நடந்து கொண்டாளில்லை! சாதாரண பெண்ணாகத் தான் வீட்டில் இருப்பாள்! சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் வேலைக்கு செல்லுமுன்பாக சமைத்து வைத்துவிட்டுத்தான் செல்வாள்! கொஞ்சமே கொஞ்சம் அன்பு காட்டியிருந்தால்.. அவள் என் காலடியில் கிடந்திருப்பாள்! என்னை தாயாய் தாங்கியிருப்பாள்! என் ஆசை கண்ணை மறைத்து, முளையை மழுங்கடித்துவிட்டது! இப்போது தானே அவளது குணம் புரிகிறது! எப்பேர்ப்பட்ட வைரத்தை நானே என் செய்கையால் தொலைத்துவிட்டேன்! அதற்கான தண்டனையை தான் இப்போது அனுபவிக்கிறேன்! இப்போது வீட்டில் ஒரு மூலையில் கிடக்கிறேன்! எனக்கு இது தேவைதான்!"
காலம் பாடம் கற்றுத் தரும்போது தான் சில மனிதர்களுக்கு உரைக்கும்!