32.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
ரிஷி தான் இமைக்காமல் விதுரிஷியை பார்க்க.. எனக்கு முன்னவே தெரியும் ம்மா என்று அவன் மெதுவாக சொல்லிவிட வாய்விட்டு அழுது இருந்தார் ரிஷி பாலாம்பிகை. அழ ஆரம்பித்து தலையில் அடித்துகொண்டவர் என் பிள்ளையை நானே ஆசிரமத்தில் வச்சு வளர்த்திட்டேனே இந்த பாவத்தை எங்க போய் கழிப்பேன் என்று அழ…
வாகி, “ உனக்கு எப்ப டா தெரியும் ?
நான் பத்தாவது படிக்கும் போது என்று சொல்ல. ஏன் இத்தனை நாளா சொல்லல?
நான் என்ன வேற யார்கிட்டயோவா இருந்தேன் என் அம்மா அக்கா கூட தானே அப்புறம் எதுக்கு அதை சொல்லிட்டு என்று சொல்ல..
எப்படி டா இதை நீ மறைக்கலாம் என்று அவன் சட்டையை பிடிக்க வர்மன் பேச்சற்று நின்று இருந்தான். அப்ப நாம எல்லா சுயநல பிசாசுங்க கிட்ட தான் வளர்ந்து இருக்கோம் போல, நாளைக்கு நம்ம வாழ்க்கையும் இப்படி தான் இருந்து இருக்கும் போல? என்று நினைக்க நினைக்க மனமும் உடலும் தள்ளாட பொத்தென கீழே விழுந்து இருந்தான். சாகி என்று செல்வம் சத்தம் தர…
அத்தான் என்று ஓடி வந்து அவனை தூக்கினான் விதுரிஷி
என்னாச்சு சாகி எழுந்திரி என்று அவனை கை தாங்கலாக தூக்கி அமர வைக்க… சற்றே நிதானம் அடைந்தவன் படக்கென எழுந்து வீட்டை தாண்டி வெளியே வர வாகி நடப்பதை அமைதியாக பார்த்து நின்றாள்.
ஆதி, “ இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் ஆகாது வாகி என்று சிரிக்க..
உலகமே சிரிக்கிற அளவுக்கு வாழ்ந்துட்டேன் அண்ணா, எவ்வளவு அவமானம் தெரியுமா? நான் ஒரு பைத்தியம் ன்னு முத்திரை குத்தின உலகம் … அப்பன் பேர் தெரியாதவன்னு சொன்னவங்க மத்தியில் வாழ்ந்தவ,உங்க அம்மா ஒழுக்கங்கெட்டவ ன்னு பேசின மனுசங்களோட கடந்து வந்தவ… என்னோட பாதை வெறும் முள்ளு தான். எங்கேயும் இளைப்பாற முடியல அதுல நடந்து நடந்து காப்பு காச்சினது தான் மிச்சம் . அதனால் அழுத்தமும் அதிகமாகிட்டு.
வாகி….
ப்ச் விடுங்க அண்ணா… வலி வேதனை அவமானம் இதெல்லாம் இவங்களுக்கு தெரிய வேணாம். இப்ப போறாரே ஆவேசமா என்ன முடிவு பண்ணுவாருன்னு நினைக்குறீங்க…
……..
எந்த முடிவும் எடுக்க முடியாது ,முடியும் ன்னு அவர் செஞ்சா என்ன தெரியுமா ஒதுங்கி வெளியே வரது…
வாகி
அவ்வளவு தான் அவங்க செய்ய முடியும் அண்ணா… அது அவங்க குடும்பம், அப்ப எப்படி விட்டு தர முடியும் என்று சொன்னவள் செல்வம் அறையிலிருந்து வெளியேற…
விடு ஆதி அவ தனியா எல்லாத்தையும் அனுபவிச்சுட்டா அதான் இப்படி இருக்கா… அவளுக்கு எப்ப அந்த அழுத்தம் ஆறுதலா மாறுதோ அப்ப அவளே அரவணைப்பா என்று செல்வம் சொல்ல..
ஆதி, "என்னால முடியல மாமா இவ்வளவு பேர் இருந்தும் அவளை விட்டுட்டோமே"…
வேந்தனும் பரத்தும் அமைதியாக பார்த்து கொண்டு இருக்க… டேய் இதெல்லாம் என்கிட்ட சொல்ல மாட்டீங்களா என்று ஆதி கத்த…
என்ன சொல்லனும் என்று கேட்டவர்களை பார்த்தவன் கொலைவெறி ஆக…டேய் என்று பல்லை கடிக்க…
விடுண்ணா அவளே அவளை சரி பண்ணி ப்பா நாங்களே ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் கண்டுபிடிச்சோம் .அதனால் தான் அவ எத செய்ய நினைச்சாலும் நாங்க துணை நிற்கிறது என்றவர்கள் சரி சரி நாளைக்கு நடக்கப்போவது என்னனு தெரியல ரெடி ஆகுங்க நைட் பிளைட் ஏறினா ரெஸ்ட் எடுத்துட்டு காலைல கோர்ட் போகலாம் என்றவர்கள் கலைந்து விட
ரிஷி அருகில் வந்தான் விதுரிஷி…
ம்மா…
விது என்று கண்கலங்க..
விடுங்க அம்மா அப்பா ஏதோ ஒரு விஷயத்துக்கு காக தான் இப்படி பண்ணி இருப்பார்…
இருக்கட்டுமே ஆனா இது தப்பு இல்லையா விது… என்னோட மகன் நீ அதை தெரிஞ்சுக்க கூட எனக்கு உரிமை இல்லையா…
சரி விடுங்க அம்மா…
எப்படி டா இப்படி சொல்லுற…
அப்பா என்னைய சுமக்க ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி இருந்தாங்க இல்ல அந்த அம்மாவை கொன்னுட்டாங்க அதுவும் நீ தான் இந்த ஏற்பாடு பண்ணி இருக்கன்னு நினைச்சு…
என்ன சொல்லுற..
ஆமா ம்மா உனக்கு இன்னொரு குழந்தை வாய்ப்பு இல்லன்னு தெரிஞ்சதும் சரி வாகி அக்கா போதும் ன்னு தான் இருந்தார். ஆனா ஒரு பையன் வேணும் ன்னு அவருக்கு ஆசை அதுக்கு தான் வாடகை தாய் மெதட் உனக்கு தெரியாம கேட்க போனார். கேட்டுட்டு வந்து உன்கிட்டே சொல்லனும் தான் வந்தார். ஆனா வீட்டில் உனக்கு எதிராக எல்லாம் பேசவும் உனக்கு தெரியாம ஒரு வாரிசை உருவாக்க முடிவு பண்ணிட்டாரு . அது படி உருவாக்கவும் செஞ்சார் . அந்த அம்மாக்கு உன் மூலமாக தான் பணமும் அனுப்பினார். ஆதரவு இல்லாத பொண்ணு மாசமா இருக்குன்னு நீ பணம் அனுப்பினியே நியாபகம் இருக்கா என்று கேட்க யோசித்தார் ரிஷி.. விது ரிஷி ஒவ்வொரு விஷயமாக சொல்ல அதை கேட்டவள் விது அது நீ தானா நான் உன்னையே ஃபீல் பண்ணி இருக்கேன் டா…
தெரியும் எல்லாமே அந்த அம்மா ஒரு டைரில எழுதி அதை பத்திரபடுத்தி இருக்காங்க அதை அப்பா ஆசிரமத்தில் வந்து எனக்கே தெரியாம என் பதினைஞ்சு வயசுக்கு பிறகு தரச் சொல்லி சொல்லிட்டு போய்டாரு அதுல இருந்தது என்றவன் … விடுங்க அம்மா அவர் சொல்லாத இந்த விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லி வருத்தப்படாத வைக்க கூடாதுன்னு தான் சொல்லல என்றதும் அவனை அணைத்து கொண்டவள் தேம்பி அழ..
அம்மா …
சொல்லு விது… நீ இனி என்னோடையே இரு மா என்று ஏக்கமாக கேட்க…
எங்கேயும் போகல டா வேலையை விட்டுட்டு வரேன் என்றவள் எழுந்து அண்ணா நான் வேலையை வேணாம் ன்னு எழுதி மெயில் அனுப்பிடுறேன் என்று செல்வத்திடமும் சொல்ல …
அதை முதல்ல செய் இனி நாம நிம்மதியா காலத்தை கழிக்கனும் என்று சொல்லி சிரிக்க…
ம்ம்ம் அதுக்கு தான் இவ்வளவு பெரிய வீடு இருக்கே அப்புறம் என்ன?
வாகியை கூட இந்த பதவி எல்லாம் வேணாம் ன்னு சொல்லனும் அண்ணா…
அது முடியாது அம்மா…
என்னடா சொல்லுற என்று ரிஷி கேட்க…
ஏன் மா புரியாம பேசுற அதுவும் நீயா இப்படி பேசுறது அவ பெரிய பெரிய ஆளுங்களோட ஆடிட்டிங் பார்க்கிறவ அவளை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டாங்க உனக்கு தெரியாததா…
இருந்தாலும் விது…
அது அக்கா பார்த்துப்பா அதைவிட அத்தான் முடிவு பண்ணிப் பாரு நீ ஏன் கவலைப்படுற..
என் கவலையே அது தானே நிம்மதி இல்லாத வாழ்க்கை டா…
என்னம்மா நீ இப்ப அக்கா பண்ணிட்டு இருக்கிற வேலை எத்தனை பேருக்கு புது வாழ்க்கையை ஏற்படுத்தி இருக்கு தெரியுமா? அதோட அவ தான் அவங்களோட வழிகாட்டி எல்லாருமே தனக்கு தன்னுடையன்னு ஒதுங்கிட்டா எப்படி மா என்று விதுரிஷி சிரிக்க…
என்னம்மோ போ என்றவள் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட…
விதுரிஷி, “ மாமா உங்களுக்கு அக்கா எடுக்கிற முடிவுல எந்த வருத்தமும் இல்லையே…
கண்டிப்பா இல்ல என்ன பண்ணாலும் என்னோட வாழ்க்கை எப்பவோ முடிஞ்சது டா இனி வாழறது உங்களுக்குக்காக தான் என்றவரை அணைத்து கொண்டவன் சாரி மாமா ..
நீ எதுக்கு டா சாரி கேட்குற..
எல்லாம் என்னைய பெத்தவரும் அவர் அண்ணனும் இப்படி இருக்க போய் தானே யாருக்கும் நிம்மதி இல்ல என்று சொல்ல…
அதுக்கு நீ என்ன பண்ணுவ…சரி அதை விடு வாகி என்ன முடிவு பண்ணி இருக்கா…
முடிச்சு விட ஆள் ரெடி..
முடியட்டும் விடு எத்தனை பிள்ளைங்க வாழ்க்கை வாழ வழி இல்லாம செத்ததுங்க வாழ்க்கை திசைமாறி எங்கெல்லாம் தவிக்கிதோ அந்த பாவத்தை எல்லாம் நாம எப்படி தொலைக்க போறோம் ன்னு தினம் தவிக்கிறேன் என்றவர் கண் மூடி படுத்து விட…அடுத்த இரண்டு மணிநேரத்தில் சென்னை கிளம்பினர் ரிஷி வாகி விது வேந்தன் நால்வரும் பரத்தும் ரவியும் செல்வத்துடன் இருந்து கொள்ள…இவர்கள் இரவு பனிரெண்டு மணி அளவில் சென்னை வந்து சேர்ந்து இருந்தனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அகத்தியனோ மாலினியிடம் பேசி இருந்தார். அங்க எந்த சொத்தும் வேணாம் மாலினி நாளைக்கு எந்த பிரச்சனையும் நமக்கு வரக் கூடாது என்று எச்சரிக்க.. மாலினி எந்த பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை.தாரா நடப்பதை அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள். பகலவன் தந்து சென்றதில், தான் அவருக்கு பிறந்து பிள்ளை இல்லை என்பதை பார்த்து பெரிதாய் அதிர்வெல்லாம் இல்லை. ஏற்கனவே வாக்குவாதத்தில் பேசியது தானே என்ன இப்போது அது பேப்பரில் உறுதியாகி இருக்கிறது.
நாளை மாலினி என்ன கேட்க போகிறார் என்று தான் அனைவருக்கும் கேள்வி…
யாருக்கும் காத்திராமல் அழகாய் விடிந்தது ஞாயிறு மட்டுமல்ல இனி வரும் காலம் அழகாய் மாறத்தான் போகிறது .இதோ வாகி தயாராக அனைவரும் கோர்ட் வாசலுக்கு வந்து விட மாலினியும் வந்து இருந்தாள்.
வாதமும் தொடங்கி இருந்தது.மாலினி வைத்த கோரிக்கையை எதிர்த்து கேஸ் போட்டு இருக்கவும் ஏன் எதற்கு என்று கேள்விகளை ரிஷியை நோக்கி வைக்க..
நான் என்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கின இடம் சார் அதற்கான டாக்குமெண்ட் என்று அனைத்தையும் வைக்க…
ரிஷி எதிர்பார்த்த கேள்வி வந்து நின்றது . நீங்க இறந்துட்டதா உங்களோட செட்டில்மென்ட் டில் இது செட்டில் ஆகி இதை முழுசா பகலவன் உரிமையாக்கப்பட்டு உள்ளதே என்று வக்கீல் சொல்ல…
ஆமா ஆனா நான் உயிரோடு தானே இருக்கேன். ஒரு கலெக்டரா இருந்த உங்களுக்கு இது தெரியாத மேம் ஏழு வருஷம் ஒருவர் எந்த தொடர்பும் கடித போக்குவரத்தும் இல்லாம இருந்தா அந்த நபர் இறந்துவிட்டதாக கருதப்படும் ன்னு…
ஆமா நான் இல்லன்னு சொல்லல என்னுடைய மரணம் இயற்கை இல்லையே ..
என்ன சொல்லுறீங்க என்று சொல்லவும் ஏற்கனவே ஜெயிலில் இருக்கும் பல்லவியும் இதோ பகலவனின் இரண்டாவது மனைவியாக உள்ள மாலினியும் மிஸ்டர். ராமைய்யா மூவரும் சேர்ந்து என்னை கொலை செய்ய திட்டமிட்டு அதை செயல்படுத்தி இருந்தார்கள் அதற்கான ஆடியோ மற்றும் சின்ன வீடியோ கிளிப் என்று ரிஷாபாலாம்பிகை தர…மாலினி அதிர்ந்து இல்ல நான் எதுவும் பண்ணவே இல்லையே என்று அங்கே கத்திவிட…
உங்ககிட்ட கேட்கும் போது பதில் சொல்லுங்க மாலினி என்று ஜட்ஜ் சொல்ல..வாயை மூடி கொண்டவள் தனது வக்கீலை பார்க்க அவரோ தனக்கு கொடுத்த பேப்பரை தான் பார்த்து கொண்டு இருந்தார். ஊடகங்களோ தங்களுக்கு கிடைத்த செய்தியை ஃபிளாஷ் நியூஸில் போட்டு டிஆர்பியை ஏற்றி கொண்டு இருந்தனர்.இந்த வழக்கு சிவில் வழக்கில் இருந்து குற்றவியல் வழக்கிற்கு மாற்றம் செய்யலாம் என்று சொல்ல அடுத்த அடுத்த பரப்பான விஷயமா மாறி இருந்தது முதல் குற்றவாளி என்று பல்லவியை சேர்த்து இருந்தனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு இருந்தது . அத்தனையும் வாகியின் வேலையாக இருக்க… நான்கு மணிநேரம் தொடர்ந்து நடந்த வழக்கில் இறுதி தீர்ப்பாக அன்றே தீர்ப்பு வாசிக்கப்பட்டு இருந்தது. மொத்த சொத்தும் முடக்கி இருந்தனர். அதில் சிலது மட்டும் பூர்வீகமாக இருக்க பல்லவி பொறுப்பேற்று அதன் மூலம் வந்த அசையும் அசையா சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு இருக்க… ஆடித்தான் போய் இருந்தனர் அகத்தியன் குடும்பத்தினர். ராமைய்யா வந்த செய்தியில் தாள மாட்டாமல் நெஞ்சை பிடித்து கொண்டு சரிய அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து இருந்தனர்.
மொத்தத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி போல் ஆகி இருந்தது ராமைய்யா வின் சாம்ராஜ்யம். பகலவனுக்கு தகவல் வர அவர் அங்கிருந்து செல்ல முடியாமல் கோர்ட்டில் இருக்க வீட்டின் மூத்த பிள்ளை தான் ராமைய்யா வை ஹாஸ்பிடலில் பார்த்து கொண்டார்.
இங்கே ஜெயிலில் உயிரற்றவராய் ஆங்காங்கே இரத்த திட்டுக்களுடன் இறந்து இருந்தார் பல்லவி.
கோர்ட்டிற்கு தகவல் தந்து இருந்தனர் ஹாஸ்பிடலில் இருந்து..
சார் இந்த கேஸ்ஸோட குற்றவாளி ஜெயில் ல இறந்துட்டாங்க.
வாட்..
ஏற்கனவே உடம்பு சரியில்லாம தான் சார் இருந்தாங்க என்று ஃபைலை நீட்ட அவரின் உடல் செயலிழந்து இருப்பதாக தகவல் இருக்க இப்போது அதிகப்படியான பிபி ஏறி இரத்தக் கொதிப்பில் சடன் ஷாக் என்று முடித்து விட்டனர்.
குற்றமும் குற்றவாளிகளும் நிருபிக்க பட்ட நிலையில் குற்றவாளி இறந்ததால் இதற்கு உடந்தையாக இருந்த மாலினிக்கு இந்த குற்றத்திற்காக மூன்று ஆண்டு தண்டனை கொடுத்து தீர்ப்பை முடித்து இருந்தார். ராமைய்யாவும் இதற்கு உடந்தையாக இருந்ததால் அவருக்கும் மூன்று ஆண்டுகள் தண்டனை உறுதி ஆனது.
தண்டனை சிறிய அளவிலேயே இருந்தது. நடந்து முடிந்த இந்த தவறுகள் திருத்தப்பட முடியாதவையாக இருந்தாலும் இவர்களுக்கு கடுமையான தண்டனை தந்து எந்தவிதத்திலும் தவறை சரி செய்ய முடியாததால் மொத்தமாக மற்ற தொழிலில் இருந்து சொத்துகளில் இருந்து முடக்கப்பட்டு இருந்தனர். மாலினி ராமைய்யா இருவரும் முதியோர் மற்றும் மனநல காப்பகத்தில் பணிபுரியவும் அவர்கள் தண்டனை காலத்தை அதில் கழிக்கவும் உத்தரவிட்டனர்.
ரிஷிபாலாம்பிகை என்று ஜட்ஜ் அழைக்க எஸ் சார் என்று அவள் சொல்ல நீங்க செஞ்சது சரி தான் ஆனா அதுக்கான கால அவகாசத்தை சரியான முறையில் அரசுக்கு தெரிவிச்சு இருக்கனும் . ஒரு மனுசன் உயிரோட இருக்கிறதை மறைச்சு இத்தனை காலம் வாழ்ந்து இப்போ இது போல் வந்து நிற்கிறது சட்டத்தை பொறுத்தவரை தவறு தானே…
சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் சில நேரத்தில் தளர்த்தலை தருவது போல இதுவரையும் சிறப்பு சலுகை கேட்டு தான் செய்தேன் சார் என்று சொல்லியதை மெச்சுதலாக பார்த்தவர் சரி இனி கவனம் என்று கண்டிப்புடன் சொல்ல, சரி என்று ஏற்று கொண்டார் ரிஷிபாலாம்பிகை.
அனைத்தையும் முடித்து கொண்டு வெளியே வர நேரம் மாலை ஆறு மணியை தாண்டி இருந்தது.
இவ்வளவு நேரம் ஆகிடுச்சு… சரி சரி முதல்ல நாம காபி டீ அப்புறம் டின்னர் அப்புறம் ரெஸ்ட் இன் பிளைட் என்று சொல்லி வேந்தன் சிரிக்க..
ரிஷி அமைதியாக இருக்க..
என்ன ம்மா என்றான் விது …
பல்லவியை என்ன பண்ண வாகி….
தந்ததை திருப்பி தந்தேன் ம்மா அவ்வளவு தான். ஆனா, நான் சரியா செஞ்சுட்டேன். அப்ப நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் வாகி என்று ரிஷி அதட்ட…
அம்மா என்றவள் நான் யாரையும் கார்னர் பண்ணல இவங்க ஏற்கனவே வளர்த்தி வச்சு இருந்த நல்லது அவர்களுக்கே திரும்ப கிடைச்சு இருக்கு அவ்வளவு தான் என்றவள் நடக்க எதிரில் வர்மன் நின்று இருந்தான்.
சாகி என்று கண்கலங்க சாரி டா நான் நான் அம்மாவை.. என்று திணறியவர் சற்றே நிறுத்தி இங்க என்ன பண்ணுற பல்லவியை….
அவங்க பையன் வாங்கிட்டு போய்ட்டான் அத்த அவ்வளவு தான் என்றவன் சரி வாங்க முதல்ல பிரஷ் ஆகி எதாவது குடிக்கலாம் என்று சொல்ல அந்த உணர்ச்சி துடைத்த முகத்தில் எந்த வித எண்ணமும் தென்படவில்லை . வாகி தான் வேந்தனை பார்க்க… கண்மூடி திறந்தவன் ,வர்மா அம்மாவை எங்க அடக்கம் பண்ணனும் ன்னு எதாவது என்று தயங்கி கேட்க…
அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க டா நான் எதுக்கு அவன் அப்படியே அவங்க தான் நேரா வந்து நிற்கிறான் நீ சொத்தை ஆள தான் பிறந்த அதுக்கு தான் உன் பிறப்பு நான் அவங்க அன்புக்கு பிறந்தவன் அதனால எனக்கு தான் எல்லா உரிமையும் ன்னு சொன்னான் . நான் எதுவும் சொல்லல கையெழுத்து போட்டு வாங்கி குடுத்துட்டு வந்துட்டேன் என்றவன் விறுவிறுவென நடக்க அவனை அணைத்து கொண்டான் விதுரிஷி, அத்தான்….
அப்பா கிட்ட போகலாம் டா…
போகலாம் அத்தான்..
வாகி எதுவும் சொல்லாமல் நடக்க… பகலவன் வெளியே கார் அருகில் நின்று இருந்தார்.
மாமா என்று வர்மன் சட்டென அவரின் அருகில் செல்ல… நான் கிளம்புறேன் டா உன்னையே பார்த்து சொல்ல தான் வெயிட் பண்ணேன் அப்பாவை ஹாஸ்பிடல் ல இருந்து பார்த்ததுட்டு இருக்கான் உன் பெரிய மாமா அவன் கிளம்பனும் இல்ல.
அங்க வீட்டுக்கு போக முடியாதே மாமா…
ஆமா நான் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன் வர்மா…
மாமா ஹெஸ்ட் ஹவுஸ் போய்டுங்க அங்க தான் தாத்தாக்கு நிம்மதி…அது அவர் பழகின வீடு மத்தது எல்லாம் வருத்தம் தான் தரும்.
புரியுது ஆனா அவருக்கு அங்க பார்க்க கொள்ள … எல்லாத்துக்கும் ஆள் ரெடி பண்ணிட்டேன் மாமா நீங்க கவலை பட வேண்டாம் நான் அப்பாவை பார்க்கனும்.
என்ன செல்வத்தையா…
ஆமா மாமா…
செல்வம் எங்க இருக்காரு…என்ற கேள்விக்கு படபடவென வர்மன் சொல்லி முடிக்க…
அழைச்சிட்டு வரியா வர்மா…
அத்தையை நீங்க அழைச்சிட்டு வந்தா நான் அப்பாவை அழைச்சிட்டு வரேன் மாமா…
அதுவரை ஓரமாக நின்று இருந்த ரிஷி நகர பார்க்க..
அம்பிகை என்றார் பகலவன்.என்னைய மன்னிச்சிடு அம்பிகை நான் தேடி வந்தேன் தான் ஆனா என்னைய தொடர்ந்து அப்பாவோட ஆட்கள் வந்தாங்க அதான் நீ உயிரோடயாச்சும் வேணும் ன்னு வந்துட்டேன் ஆனா அதுக்கு அப்புறம் உன்னையே அங்க பார்க்க முடியல நானும் தேடினேன் ஆனா கண்டுபிடிக்க முடியல என்று நிறுத்த…தெரிஞ்சே தான் மாலினியை கட்டிக்கிட்டேன் அம்பிகை தப்பு தான். என் கையாலாகாத தனம் என் குணத்தை மாத்த முடியல இப்பவும் உன்னையே அழைக்க நினைக்கல தப்பு செஞ்ச எனக்கு எதாவது தண்டனை வேணும் இல்ல அதுக்கு நான் யாரும் இல்லாத அநாதையாக இருந்துட்டு போறேன் என்றவர் வாகி அருகில் வந்து அவள் கை பிடிக்க துடித்து தான் போனாள் வாகி…கை சில்லிட உடல் விறைக்க நின்றவளை அப்பாவை மன்னிச்சிடு டா… மன்னிக்க கூட வேண்டாம் மறந்துடு அப்ப தான் உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். உனக்காகவே இருக்கான் வர்மன் அவன் எந்த தப்பும் பண்ணல,அவனுக்கு எதுவும் தெரியாது அதான் கொஞ்சம் வார்த்தைகளை விட்டு இருப்பான்.அவனை சுத்தி இருந்த உலகம் இல்லன்னு சொல்லாத இடம், அதேநேரம் இது தப்பு ன்னு சொல்லி குடுத்து வளர்க்க வேண்டிய இடத்தில் இல்ல அதான் . இப்ப அவனுக்கு எல்லாம் புரியும் ஏற்கனவே புரிதல் இருக்க பையன் தான் அதனால் புரிஞ்சுப்பான். இது எதுக்கு சொல்லுறேன்னு உனக்கு புரியும் டா அம்மு அப்பா மாதிரி அவன் சுயநலவாதி இல்ல சூழ்நிலைவாதி.இனியும் உன் கோவத்தை அவன் கிட்ட கொண்டு போக வேண்டாம் டா என்று சொல்ல சொல்ல.. அவரை இகழ்ச்சியாக பார்த்தவள் முடிச்சிட்டிங்களா?
அம்மு…
உங்களுக்கும் எனக்குமான உறவு எதுவும் இல்ல அதனால் எதை பத்தியும் எனக்கு சொல்லி தர இடத்தில் நீங்க இல்ல என்றவள் அவர் கையை விடுவித்து விட்டு நகர்ந்து இருந்தாள்.
நாட்கள் கடந்து இருந்தது . வர்மன் செல்வத்தை தன்னோடு வரச் சொல்ல மறுத்து விட்டார் செல்வம் உன் கடமை நிறைய இருக்கு முடிச்சிட்டு சொல்லு அதுக்குள்ள அப்பா கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சுடுவேன் நாம அப்ப சேர்ந்து இருக்கலாம் என்று சொல்லிவிட கிளம்பிவிட்டான் வர்மன்.தாரா அகத்தியனிடம் தன்னுடைய நிலைப்பாட்டை சொல்லி விட்டு தனியே தங்கி கொண்டாள். ராமைய்யா மெல்ல மெல்ல தன் உடலை தேற்றி கொண்டு மொத்தமாய் முடங்கி இருந்தார்.
ஜாய், “ டாட்…
சொல்லு ஜாய்…
அந்த பொண்ணை என்ன பண்ணலாம்…
ஜாய் உனக்கு தேவையில்லாதது நாங்க இந்த தொழில் தெரியாம உள்ள வந்துட்டோம். ஆனா நீ இதுல வேண்டாம் உனக்கு தான் நான் வேற ரெடி பண்ணிட்டேன் இல்ல அப்புறம் என்ன என்று கேட்க..
அதுக்காக அம்மாவை…
ஜாய்…
உங்க அம்மா எதையும் அவளுடைய விருப்பத்துக்கு நிறைய விஷயங்களை செஞ்சா அதனால் வந்தது தான் இது இதுல யாரையும் நீ பழி வாங்க போறேன் ன்னு போக வேண்டாம் இதுல எனக்கு விருப்பம் இல்ல பார்த்த இல்ல இப்ப உங்க அம்மா சொத்து ஒன்னு கூட இல்ல நமக்கு இருக்க சொத்தை வச்சு நாம மூவ் பண்ண பார்க்கலாம் அது தான் புத்திசாலி தனம் புரியுதா ?
ம்ம்ம்..
ஜாய்… சந்தோஷமா வாழனும் என்னைய பார் யாரு கண்ணுக்கும் தெரியாத வாழ்க்கை இது தேவையா நீ அப்படி இருக்க கூடாதுன்னு தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். நாம மூவ் பண்ணிடலாம் உங்க அம்மாக்கு பிடிச்ச நாட்டுக்கு போய்டலாம். எங்க டாடி..
ஆஸ்திரேலியா…
ஓகே டன்…
அவர்கள் கிளம்பும் முன் ஜாய் வர்மனுக்கு அழைத்து பேச…
உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இனி பேச வேண்டாம் என்று வர்மன் சொல்ல…
டேய் …உனக்கு அப்படியே அம்மா குணம் டா அதான் உன் வாய்ஸ் கேட்க போன் பண்ணேன்.. எனி வே தேங்க்ஸ் அம்மாவை என்கிட்ட தந்ததுக்கு அண்ட் குட்பாய் என்றவன் போனை அணைத்து இருந்தான்.
அறையில் கண்மூடி அமர்ந்து இருந்தாள் வாகி…
என்ன யோசனை என்று பரத் வர..
எதுலையோ இருந்து விடுதலை அடைஞ்ச நிம்மதி பரத்…
நிஜமா..
ஆமா என்று புன்னகையுடன் சொல்ல...
இந்த கேஸ் ல குளோஸ் பண்ண இடமெல்லாம் ?...
அதெல்லாம் நல்லவங்க கைக்கு அனுப்பிடலாம் அதை ரன் பண்ண நல்ல நல்ல ஆட்களை போடச் சொல்லிட்டேன் என்று ஒரு பேப்பரை பரத்திடம் தர அவளின் ராஜினாமா கடிதம்.
ஹேய்… அப்ப இன்னைல இருந்து விடுதலையா எல்லாருக்கும் என்று பரத் கூச்சலிட…வேந்தன் ரவி உள்ளே வந்தனர்.
என்னடா சத்தம்…
இந்த டியூட்டி ல இருந்து விடுதலை வாகி ரிசைன் பண்ணுறா…
அப்ப சோத்துக்கு…
நம்ம பிசினஸை ஓபன் பண்ணலாம் ரவி அண்ணா…
ஓகே டன் என்று சிரிக்க… நால்வரும் அவர்களின் வேலை ஆரம்பிக்க கிளம்பிவிட்டனர்.
நாட்கள் கரைந்து மாதங்களாகி இருந்தது. கம்பெனி மொத்தமாக மூடப்படாமல் நிறைய கிளைகள் முடக்கப்பட்டு விட்டதால் நிறைய இழப்புகள் வர்மன் மொத்தமாக ஒதுங்க முடியாமல் இடத்தை லீசுக்கு எடுத்து நடத்தி கொண்டு இருந்தான். இந்த இடமும் ஆரம்பமும் வீட்டில் உள்ளவர்கள் என்றாலும் இதன் மொத்த உழைப்பும் முன்னேற்றமும் வர்மனின் செயல் அவனுடைய பங்குகள் மட்டுமே இருபத்தி ஐந்து சதவீதம் போட்டு உள்ளே வந்தவன் அதை எல்லாம் காட்டி தான் இந்த கம்பெனியை தக்கவைத்து கொண்டான். இதோ அதோ என்று இதை இப்போது நான்கு மாதங்களாக புதியதாய் ஆரம்பித்த கம்பெனி போன்று நடத்தவும் வேலை இழுத்து கொண்டு இருந்தது . தன் மனதில் நெருக்கமாய் இருந்தவளை இதோ மீண்டும் புதிய வாழ்வை தொடங்க ஆரம்ப புள்ளியாய் இருந்தவளை காணத்தான் முடியவில்லை.
காலம் காத்து இருக்க சொல்லி இருக்கிறதோ!?
அவள் வருகையின் போது
தூய்மையானவனாய் இருக்க…
ஆரம்ப நாட்களின் தவறுகளை
மாற்றி கொள்ள இந்த தனிமையும்
வெறுமையும் தேவையோ
இப்படியே நாட்கள் நகர…
செல்வம் மகனுக்கு துணையாய்
நிற்க…
ரிஷி விதுரிஷியை விட்டு அகலாமல் வலம்வர வாழ்க்கை புதிதாய் இன்பமாய் அழகாய் நகர்ந்தது வாகிக்கு…
யார் என்ன சொல்லியும் வர்மனை நினைக்கவில்லை அவள் வேற வரன் தேடவும் விடவில்லை வாகி…
ஆதி அனைவரையும் அடுத்த வேலையை பாருங்க காலம் வரனும், அவளும் அவனை தவிர நினைக்க போறதில்ல அவனும் இவளை விடப் போறது இல்ல நீங்க ஏன் கவலைப்படனும் என்று அதட்டி விட…
காலங்கள் நகர்ந்து கொண்டே இருந்தது.
அவனின் நிழல் இவள்…
அவளுள் அவனை கரையவைப்பவளும் இவளே…
நிழலும் உறவும் அவனை தொடர
கரைப்பவள்
தன்னால் கரைந்து கொண்டதை
உணர்வாள் இல்லை…
உணரும் நேரமும் நெருங்கவில்லை..
உணர்த்தவேண்டியவனும்
நெருங்கிட முடிவில்லை..
நிழலாய் கரைபவள் நிழலுக்குள் மறைய…
காலங்கள் காத்து இருந்தது…
தன்னை நிலைப்படுத்த…
தன்னை அழகானதாய்,
உணர்வானதாய்,
உயிரானதாய் மாற்ற…
மொத்த வன்மமும் வெறுப்பும் ஆதங்கமும் அவமானங்களும் அந்த இரவின் நிழலில் கரைந்து கொண்டே இருக்கிறது….
கரைந்து முடிந்த நிலை வரும் வரை வர்மனும் வாகிக்காக காத்து இருப்பான்…
எத்தனையோ சொத்து சுகங்கள்
இருந்தாலும்
அதிகாரங்கள் தன்வசம் இருந்தாலும்
அதை சுற்றி இருப்பது என்னவோ பயத்துடனான மனிதர்கள் மட்டுமே..
என்றுமே உண்மையான உறவுகள் இருக்க போவது இல்லை.இதோ அதிகாரம் இருந்தும் ராமைய்யா நிலை?
பர்வேஷ் விரும்பி வாழ்ந்தாலும் அவனுக்கு பல்லவி?
பகலவன் தன்னை தாக்காத வரை வாழ்வு சிறப்பு என்று நினைத்தவனின் வாழ்வு?
இப்படி எல்லா வாழ்விற்கு பின்னும் ஒரு கேள்வி குறி இருந்து கொண்டு தானே இருக்கிறது. யாருக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை காலம்.
அழகான ஆடம்பரமான தொடக்கம்
முடிவு அப்படியேவா இருக்கிறது..
தொடக்கம் மேடு பள்ளம் தான்
தோல்வி ஏமாற்றம் தான்
ஆனால் இதோ முடிவு அழகான பாதை அமைத்து கொடுத்து விட்டதே..
இது தானே வாழ்வு ..சரியாய் இருந்தாலும் அனைத்தையும் கடந்து வந்து தானே ஆகனும் அப்படியான வாழ்வு தான் ரிஷி பாலாம்பிகை
வாழ்வு…இதோ இப்போது நிம்மதியாய் அதேநேரம் சில நேரத்தில் சில இடத்தில் சற்றே ஓரமாய் ஒரு சிறு வலி அதுவும் தானே வாழ்வின் அங்கம்…
ஏமாற்ற பட்டோம் என்பதை விட ஏமாறிவிட்டோம் என்று உணர்ந்து அதை கடந்து விட்ட ரிஷி வாழ்வு இனிமையாய் மாறி இருந்தது மகள் மகனுடன்.
இனியும் இனிமையாய் வாழ விடைபெறுவோம்….
நன்றி…