சென்னை
ரிஷி கல்லூரியில் படிக்கும் போது, அசோக்கின் அறிமுகம் கிடைத்தது! ஒரே பாடப்பிரிவு! சில காலம் பழகியபின் நண்பனார்கள்! அவனைத் தொடர்ந்து அவனது உயிர் நண்பன் தீபக் நண்பனான்!
அசோக், ரிஷியைப் போல செல்வந்தர் வீட்டுப் பையன் தான்! சொல்லப் போனால் இருவரது தந்தைகளும் தொழில் முறையில் போட்டியாளர்கள்! எப்போதும் ரிஷியின் தந்தைதான் முன்னணியில் இருப்பார்! அடுத்த இடத்தில் அசோக்கின் தந்தை தன்ராஜ் இருப்பார்! அவருக்கு உள்ளே எத்தனை பொறாமை இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் நட்பு பாராட்டுவார் !
ரிஷி, தான் பெரிய தொழிலதிபரின் மகன் என்று எப்போதும் கர்வம் கொண்டதில்லை! எல்லாரையும் சமமாக பாவிப்பான்! அசோக் அப்படி இல்லை! அவனுக்கு நிகரானவர்களிடம் தான் அவன் பழகுவான்!
ரிஷிக்கு பள்ளிக் காலம் முதல் வசந்தன் உயிர் நண்பன்! அவன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்! அப்பா வரதன் அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியர்! அம்மா பவானி வங்கியில் கிளார்க்! ஒரு தங்கை வித்யா! அவளும் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்! அவர்கள் குடும்பத்தில் ரிஷியையும் ஒருவனாக பாவிப்பார்கள்!
ரிஷிக்காக வசந்தனை அரைமனதாக, அசோக் ஏற்றுக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்!
ரிஷியும்,வசந்தனும் படிப்பில் முதல் இரண்டு இடத்தில் இருந்தார்கள்! அசோக் படிப்பில் சுமார் ரகம், பாஸாகிவிடுவான்! தீபக் இவர்களுக்கு மத்தியில் இருந்தான்! அவனும் பெரிய இடத்துப் பிள்ளைதான்! ஆனால் கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பம்! பணத்தின் அருமை தெரிந்தவன்! சற்று பெற்றப்பானவனும் கூட!
கல்லூரி படிப்பை முடித்தபின், இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் படிக்கச் சென்றான் ரிஷி! அசோக் தந்தையுடன் தொழிலை கவனிக்கச் சென்றான்! தீபக்கும் அப்படியே தந்தைக்கு துணையாக சென்று விட்டான்!
வசந்தனுக்கும் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்துவிட்டது! அதில் ரிஷிக்கு மிகுந்த மகிழ்ச்சி!
ரிஷி, மேற்படிப்பை முடித்து, இரண்டு ஆண்டுகள் கழித்து வந்தபோது, நண்பர்களை ஒரு முறை சந்தித்து, தனக்கு வேலை கிடைத்ததற்கு ட்ரீட் வைத்தான்! அப்போது வசந்தன் வெளிநாட்டில் இருந்தான்!
ஆனந்தன் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் இளவரசனாக மகன் வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மனக்கோட்டை கட்டி வைத்திருந்தார்! ஆனால் வெளிநாட்டில் படிப்பை முடித்து திரும்பிய கையோடு ரிஷிக்கு கோவையில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு வந்தது! அதை அவன் ஏற்றுக் கொண்ட போது..
"யாரிடமோ எதற்காக கைகட்டி சேவகம் செய்யணும் ரிஷி? நமக்கே நிறைய தொழில்கள் இருக்கு, அதை ஒற்றை ஆளாக இனி பார்த்துக்கொள்ள முடியாது! நீ துணை இருந்தால் இன்னும் நிறைய தூரம் நாம் தொழிலில் கொடிகட்டிப் பறக்கலாம்! இப்போதே நாம்தான் நம்பர் ஒன்னாக இருக்கிறோம்! நீயும் வந்து கைகோர்த்தால் ..ஆனந்தன் சொல்லிக் கொண்டே போக..
"நீங்கள் சொல்வது எனக்கு புரியுது அப்பா! ஆனால் வெளியில் வேலை செய்து பழகினால் தான், நம் தொழில்களில் அடி மட்டத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரிஞ்சுக்க முடியும்! சரியாக இரண்டு வருஷம் தான் அப்பா! அப்புறமாக நான் தனியாக தொழில் ஒன்றை தொடங்கிட்டு, உங்களுக்கும் உதவியாக இருப்பேன்!" என்று அந்த பேச்சை முடித்தான் ரிஷி!
ஆனந்தனுக்கு மகன் சொன்னதில் உடன்பாடு தான், என்றாலும் அவர்களுக்கு என்று இருக்கும் தொழிலகளை பார்க்கவே ஒற்றை ஆளாக திணறும்போது, கை கொடுக்க மகன் இருந்தால் அவர் சற்று ஆசுவாசமாக இருப்பார்! சின்ன மகனும் படித்துக் கொண்டிருந்தான்! அவன் முன்பாக பெரியவன் பாதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அவனிடம் மீதியை கொடுத்து விட்டு அவர் வழிகாட்டுதலாக இருந்து செயல் படுவார்! ஆனால் ரிஷிக்கு பிடிவாதம் அதிகம்! அவன் எடுத்த காரியத்தை முடிக்காமல் இருக்க மாட்டான்! ஆகவே மேற்கொண்டு தர்க்கம் செய்யாமல் மகனை அனுப்பிவிட்டார்!
அதன் பிறகு, ரிஷி கோவை வந்துவிட்டான்! தனியாக அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொண்டான்! அவனுக்கு பிடித்த வேலை என்பதால் உற்சாகமாக வேலை செய்தான்! தலைமையகத்தில் விரைவாகவே நல்ல பெயரை வாங்கிவிட்டான்!
பெற்றோரை காணச் சென்றாலும் அந்த இரண்டு நாட்களை ஓய்விலும், அம்மாவின் சாப்பாட்டிலும், தம்பியுடன் விளையாட்டிலும் தான் செலவழிப்பது! அதனால் நண்பர்களை அவன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை! அவர்களும் ஆளுக்கு ஒருவிதமாக பிஸியாக இருந்தனர்!
அப்படி வாய்ப்பு கிடைத்தபோது??
🩷🩷🩷
கோவை..!
ரிஷி, உடன் நிறைய அழகான பெண்கள் வேலை பார்க்கத்தான் செய்தார்கள்! ஆனால் அவனுக்கு யாரிடமும் காதல் உணர்வு எழவில்லை!
ஒரு முறை அவன் சாலையில் பயணிக்கும் போது, எதிர்த்திசையில், பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்தில் ஒரு அழகான இளம் பெண்ணை பார்த்தான்! அவள் இளம் ரோஜா நிறத்தில் பச்சை நிறக்கரை
வைத்த சில்காட்டன் புடவை அணிந்திருந்தாள்! எத்தனையோ பெண்களை புடவையில் பார்த்திருக்கிறான் தான்! ஆனால் அவள் சேலை கட்டியிருந்ததில் ஒருவித நேர்த்தியும் நளினமும் தெரிந்தது! போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்ததால் அவனால் முன்னேறி செல்ல முடியவில்லை ! அதுவும் வசதியாகிப்போக, அவளையே வைத்த கண் வாங்காமல் ரசனையுடன் பார்த்திருந்தான்! சட்டென்று தன் கைப்பேசியில் அவளை படம் பிடித்துக் கொண்டான்! யாருக்காகவோ அவள் பதற்றமாக காத்திருப்பது புரிந்தது!
காதலனாக இருக்குமோ? என்று எண்ணும்போதே மனம் கசந்தது! அப்படி எல்லாம் இருக்காது! என்று அவன் மனதை தேற்றிக் கொண்ட வேளையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் வந்து அவன் வயிற்றில் பாலை வார்த்தாள்! அந்தப் பெண்ணின் பின்புறம் ஏறிக் கொண்டு சென்றுவிட்டாள்! சட்டென்று திரும்பி அந்த வண்டியின் எண்ணை பார்க்க முயன்ற நேரம், போக்குவரத்து நகர ஆரம்பித்துவிட்டது!
ரிஷியும் சாலையில் கவனம் பதித்தான்! அவன் மனதில் அந்த பெண்ணின் முகம் அழுத்தமாக பதிந்து போயிற்று! அவள் யாரோ எவரோ? மறுபடியும் பார்க்க முடியுமோ என்னவோ தெரியாது! அவனுக்கு மனைவி என்று ஒருத்தி வந்தால் அது இவளைப் போல அமைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, உதட்டில் புன்னகை உதித்தது!
🩷🩷🩷
ரிஷி அதன் பிறகு, தான் உண்டு தன் வேலை உண்டு என்று மகிழ்ச்சியாகவே இருந்தான்! ஓரு சில சமயத்தில் மாலில், பூங்காவில் என்று அந்தப் பெண்ணை பார்க்கத்தான் செய்தான்! அவள் மருத்துவர் என்று ஒரு நாள், ரத்தம் தானம் செய்வதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு சென்றபோது,அவளை மருத்துவர் உடையில் பார்த்து தெரிந்து கொண்டான் !
அவளை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்றோ பேச வேண்டும் என்றோ அவனுக்கு தோன்றவில்லை! ஆனால் அவளைப் பார்த்தாலே ஒரு வித பரவசம்! ஒரு பூவை ரசிப்பது போல ரசிப்பான்! அவளது நடவடிக்கையே மிகவும் அமைதியான பெண் என்று பறைசாற்றியது!
வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது! இந்நிலையில் தான் அவன் அந்தப் பெண்ணை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது!
அவனுடன் பணிபுரியும் ஒருவருக்கு, விபத்து நேர்ந்து, அவரை மருத்தவமனையில் கொணர்ந்து சேர்க்கும் பொறுப்பை அவன் ஏற்க வேண்டியதாயிற்று!
அப்போதுதான் அவளது பெயரை அவன் தெரிந்து கொண்டான்! அதை உச்சரிக்கும் போதே உதடுகளும் மனமும் தித்தித்தது! அவனையும் அறியாமல் , அவனது மனது அவள் பின்னே சென்றது! அதை அவனால் என்ன முயன்றும் கட்டுப்படுத்த இயலவில்லை! !
இந்நிலையில் மெல்ல மெல்ல அவளது முகம் கனவிலும் தோன்ற ஆரம்பித்தது! அவன் தடுமாறிப் போனான்! ஏன் இப்படி? அவள் எந்த பகுதியில் இருக்கிறாள் என்றுகூட அவனுக்கு தெரியாது! இதெல்லாம் பருவக்கோளாறு! அவன் இங்கிருந்து சென்றுவிட்டால் அவளை மறந்துகூட போய்விடலாம்! ஆகவே இதற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது என்று நினைத்து அந்த நினைவை அகற்ற முயன்று தோற்றான்! அந்த தோல்வியும் அவனுக்கு இனித்தது! ஏன்?
ஆனால்... விதி வலியது!