• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

34. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
இன்பசுரபி பிளஸ்டூவில் அவள் எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்களுடன் தேர்வானாள்!அதன் அடிப்படையில் கோவையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தது! மகளை பிரிய வேண்டுமே என்று பெற்றவர்களுக்கு கொஞ்சம் கலக்கம் தான்!

அதை வெளிக்காட்டாமல், மகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்! தங்கள் வருத்தத்தை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு மகளை அழைத்துப் போய் கல்லூரியில் சேர்த்துவிட்டு, கல்லூரியில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்த தங்கும் விடுதியில், தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் திரும்பினர்!

இன்பாவுக்கும் பெற்றோரை பிரிந்து படிக்க வந்ததில் உள்ளூர கொஞ்சம் வருத்தம் தான்! ஆனால் அவளது கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சி அதை பின்னுக்கு தள்ளிவிட, புன்னகையுடன் விடை தந்தாள் !

சாருபாலாவுக்கும் மருமகள் மருத்துவம் படிக்கப் போவதில் மிகுந்த மகிழ்ச்சி தான்! நிறைய உதவிகரமான விஷயங்களை அவளுக்கு நேரம் கிடைத்த போது சொல்லித் தந்தார்!

நான்கு வருடங்கள் ஓடிவிட்டது! ஐந்தாம் ஆண்டில் காலெடுத்து வைத்திருந்தாள்,இன்பசுரபி ! இடைப்பட்ட நான்கு வருடங்களில் அவள் நன்றாக படிக்கும் மாணவியாக பரிச்சயம் ஆகியிருந்தாள்! அதில் குடும்பத்தினருக்கு ரொம்பவும் பெருமை தான்!

சாருபாலாவுக்கு தான் எங்கே தன்னைப் போல் அவள் காதல் என்ற மாயையில் சிக்கிக் கொள்வாளோ என்று உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது!

இன்பாவிடம் எச்சரிக்கலாம் என்று நினைத்தாலும் அதை அவரால் செய்ய முடியவில்லை! சும்மா இருக்கும் குளவிக்கூட்டில் கல்லை எரிந்தது போல, அவரே அந்த எண்ணத்தை அவளுக்குள் விதைத்தது போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தான் தயங்க வைத்தது! பொதுவாக இளைஞர்களிடம் ஒரு விஷயத்தை செய்யாதே என்றால் அதை செய்தால் என்ன என்ற எதிர்மறையான எண்ணங்கள் தான் தோன்றும்!

நான்கு வருடங்கள் எந்த பிரச்சினையும் இல்லாது கடந்து விட்டதில் அவருக்கு ஒரு நிம்மதி! இந்த ஐந்தாம் ஆண்டும் அதே போல கடந்து விட்டால் போதும் என்றிருந்தது! இதுபற்றி தம்பியிடம் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை!

இறைவன் விதித்ததை யாரால் மாற்ற இயலும் ?

கடைசி வருடம் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் அரசு மருத்துவமனையில்,மருத்துவர் பயிற்சி மேற்கொள்வார்கள்! இன்பாவும் அப்படித்தான் பயிற்சி பெற்று வந்தாள்!

பயிற்சி காலம் முடிய இன்னும் சில மாதங்கள் தான் இருந்தது! இன்பா உடன் பயிலும் மாணவிகளுடன், மால் ஒன்றிற்கு கிளம்பி வந்திருந்தாள்! அப்போது தான் அவள் அவனை சந்தித்தாள்!

🩷🩵🩷

கோவை

அன்றைக்கு விடுமுறை தினம் ரிஷி வழக்கம் போல காலை உணவை முடித்துவிட்டு, வெளியே கிளம்பினான்! வெயில் கொளுத்தியது! இந்த வெக்கையில் பேசாமல் அறையில் போய் ஏசியைப்போட்டு படுத்துக் கொள்ளலாம் தான்! ஆனால் நாள் முழுதுமாக ஓரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதில், இப்படி வெளியே சென்று நாலு இடங்களில் நடந்தால், உடற்பயிற்சி போலவும் ஆச்சு! வேடிக்கை பார்த்தது போலவும் ஆச்சு! என்று நினைத்துத்தான் கிளம்பிவிடுவான்!

ரிஷிக்கு சினிமா பார்ப்பதில் அவ்வளவாக நாட்டம் இல்லை! பொருட்காட்சி போன்ற இடங்களுக்கு போவான்! அல்லது இருக்கவே இருக்கிறது மால்கள்! எப்போதாவது நண்பர்கள் உடன் தீம் பார்க் பக்கம் போவான்!

பைக்கில் சென்று கொண்டிருந்தவன் கண்ணில் அவனது கனவுப் பாவை விழுந்தாள்! அழகான பெண்கள் நடுவே அவள் அதித அழகாக தெரிந்தாள்! இன்று அவள் சுடிதாரில் இருந்தாள்! அதையும் பாந்தமாக அணிந்திருந்தாள்!

அவர்கள் குழுவாக பத்து பேர்கள் எங்கோ செல்லவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்! ரிஷி அவர்களை கடந்து சென்று சற்று தூரத்தில் அவர்களை காணும் வகையில் நின்று கொண்டான்!

பேருந்து வர, எல்லோரும் ஏறிக் கொண்டனர்! அப்புறமென்ன ரிஷி பேருந்து பின்னால் ரோந்து போனான்! இந்த செய்கை அவனுக்கே சற்று வேடிக்கையாக இருந்தது!

கனவில் வந்தபோது, இதெல்லாம், பருவக் கோளாறு என்று புறம் தள்ளியதென்ன? இப்போது அவளை பார்த்ததும், சூரியனை கண்ட தாமரையை போல அவள் பின்னே செல்வதென்ன? இதற்கு பெயர் தான் என்ன என்று தனக்குள் கேட்டுக் கொள்ளவும் செய்தான்! ஏனெனில் இதை அவனால் காதல் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை! காதல் என்றால் அவன் கேள்விப்பட்ட வரை ஒரே சிந்தனையாக, சாப்பாடு தூக்கம் துறந்து திறந்து கொண்டே கனவு காணும் மாய லோகம் அத! அவனுக்கு அப்படியான எந்த உணர்வும் இல்லை! இது ஓர் ஈர்ப்பு என்று நினைத்துக் கொண்டான்!

இன்பா தோழிகளுடன் அந்த பெரிய மாலுக்குள் நுழைய, பின்னோடு ரிஷியும் நுழைந்தான்! அவன் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை விட்டுவிட்டு, டோக்கன் பெற்று உள்ளே வந்தபோது இன்பாவை காணவில்லை! நான்கு தளங்கள், பெண்களுக்கான உபகரணங்கள் விற்கும் கடைகள் எங்கு என்று தேடி, அங்கே வந்து சேர்ந்தபோது, இன்பா தனியாக சுற்றிப் பார்த்தபடி வருவதைப் பார்த்தான்! சட்டென்று அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைந்து கொண்டான்!

இன்பாவிற்கு மால்களில் பெரிதாக நாட்டம் கிடையாது! இது தான் கடைசி வருடம், இதற்கு பிறகு நாம் இப்படி சுற்ற முடியாது என்று சக மாணவிகளின் வற்புறுத்தல் காரணமாக வேறு வழியின்றி வந்திருந்தாள்! மற்றவர்கள் வாங்குவதற்காக கடைகளுக்குள் சென்று விட்டனர்! அவர்களுடன் போவதால் ஒரு பயனும் இல்லை!
பணம் அவளுக்கு பிரச்சினை இல்லை! அனாவசியமாக பார்ப்பதை வாங்கிக் குவிக்கும் ரகம் அவள் இல்லை! ஆனால் அழகான பொருட்களையும், ஆடைகளையும், ரசிப்பதற்கு தடை என்ன?

கடைகளில் விற்கும் உடைகளையும், பொருட்களையும் விளக்குகளால் செய்யப்பட்ட அலங்காரங்களையும், வேடிக்கை பார்த்தபடி நடந்தவள், எதிரே இருந்த கடையில் இருந்து, திடுமென வெளியே வந்துவிட்ட இளைஞனை கடைசி வினாடியில் கவனித்து, பின்னடைய முயன்றபோது, கால்கள் பின்னி தடுமாறி விழப்போனாள்!
அத்றகுள் அந்த இளைஞன் சட்டென்று முன்னேறி அவளை விழாது தாங்கிப் பிடித்தான்! விழப்போகிறோம் என்று எண்ணி கண்களை இறுக மூடியிருந்தவள், பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்து, மெல்ல கண்களை திறந்தாள்!

ஹப்பா.. எவ்வளவு உயரம்? அவளது தந்தை கூட உயரம் தான் என்றாலும் இவன் ஆண்களில் அதிக உயரம் தான்! அந்த உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டுடன், சிவந்த நிறமும் முகத்தில் பணக்கார களையும் சேர வெகு கவர்ச்சியாக தோன்றினான்! முதல் முறையாக ஒரு ஆணின் அருகாமை,அவனிடமிருந்து வந்த நறுமணம் எல்லாமும் இன்பாவை ஏதோ செய்ய, தன்னை மறந்த மோன நிலைக்கு சென்றவளை...
எங்கோ ஒரு குழந்தையின் வீறிடல், நிகழ்வுக்கு திருப்பியது! சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு,வேகமாக அவனிடம் இருந்து விலகினாள்!

"ஹே.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் மிஸ் இன்பா! " என்றவாறு இலகுவாக விலகி நின்றான்!

திகைப்புடன்,அவனை நிமிர்ந்து பார்த்தாள்! யார் இவன்? என் பெயர் எப்படி இவனுக்கு தெரியும்? கேள்விகள் வரியாக எழ,

அழகாக விரிந்த அந்த கண்களையே பார்த்தவாறு, அவளது மனதை படித்தவன் போல, "ஈஸி , ஈஸி எதுக்கு இவ்வுளவு ஷாக்? போன மாசம் நான் ஜி.ஹெச் வந்திருந்தபோது அங்கே உங்களை பார்த்தேன்! அப்போது தான் உங்க பெயரை தெரிந்து கொண்டேன்! என்றவன், என் பெயர் ரிஷிகேசவன், "ஆமா நீங்க தனியாகவா வந்தீங்க?" என்றான் பேச்சை வளர்க்கும் விதமாக!

"ஓ! ஓ ..ஓகே! இல்லை! என் பிரண்ட்ஸ் அங்கே இருக்காங்க, என்றவாறு நில்லாது ஓட்டமும் நடையுமாக சென்று விட்டாள்!

சிறு புன்னகையுடன் அவள் செல்வதையே பார்த்திருந்தான் ரிஷி!

இனி.. இருவரும் அடுத்து சந்திப்பார்களா? சாருபாலா பயந்தது போல் நிகழ்திடுமா?

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 11