• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

36. ப்ரியபாரதீ - வளையாத நதிகள்

பிரியபாரதீ

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 28, 2022
23
17
3
Srilanka
அந்த முற்றத்தில் பூத்துக்குழுங்கிய செடிகளெல்லாம் கலையிழந்து கிடந்தன. அவள் குரல் கேட்டு கேட்டு வளர்ந்த செடிகளல்லவா? அவள் குரலொலிகளை தேடி தேடி ஏங்கியே வாடியிருக்கும். அவள் தொட்டு தடவி வளம் வரும் நேரமும் கடந்துவிட முற்றத்துச்செடிகளெல்லாம் அவளின் ஆத்மாவோடு பேச தொடங்கிவிட்டன.....

"கண்ணம்மா..... நீ எங்க போய்ட..."

"நா இங்கதான் இருக்கேன் தாவரச்செல்லங்களே...."

"அப்போ ஏன் எங்கள கொஞ்சி தடவ வரல்ல....?"


"பாரதீ இல்லம்" என எழுதப்பட்டிருந்த பெயர் பலகையைத் தாண்டி
அந்த முற்றத்தில் வந்து நின்ற வைத்தியசாலை வாகனத்திலிருந்து இறங்கியது ஒரு சவப்பெட்டி.

அக்கம்பக்கத்து ஆண்கள் சிலர் உள்ளே தூக்கிகொண்டு சென்று சாலையில் தெற்கு பார்த்து இறக்கி வைத்தார்கள்.

"அம்மா..." என அழுதாள் யுவதி யாழினி.

"கண்ணம்மா இங்க இருக்குற குழந்தைகளிலியே யாழினி பொண்ணதானே உனக்கு ரொம்ப பிடிக்கும்?" தாவரங்கள் பேச்சைத் தொடங்கின.

"ஆமா....அவள்தான் என் வாழ்க்கையின் மொத்த அர்த்தமும்"

"அப்படியா கண்ணம்மா? இந்த பாரதீ இல்லத்தின் முதல் குழந்தையே யாழிதானே?"

"....ம்...."

"அப்போ மற்ற குழந்தைகளெல்லாம்....?"

" என் வாழ்வின் அர்த்தத்தை பூரணபடுத்த எனக்கு கிடைத்த வரங்கள். யாழினி வேர் என்றால் மற்ற குழந்தைகள் அதில் மலர்ந்த மலர்கள்." மென்மையாய் சொன்னால் கண்ணம்மா.

" உண்மைதான்மா, நீங்க உருவாக்கின இந்த இல்லத்தில வளர்ந்த எல்லா குழந்தைகளுமே அன்பான மலர்கள்தான்."

சமூக நலன் விரும்பிகள், அவ்வப்போது பேச்சுக்கொடுக்கும் அக்கம் பக்கத்தினர் என ஒவ்வொரு வாகனமாக வாந்து போயின.

அந்தப் பெட்டி , சூழ இருந்த குழந்தை மலர்களோடு இன்னும் இயற்கை செயற்கை மலர்களால் அழகாகிகொண்டேப்போனது.

குடுகுடு கிழவனொருவன் பலநாள் பழக்கம் போல் உள்ளே நுழைந்தான்.

" கண்ணம்மா.... யார் இந்த கிழவன்? ஒரு நாள் கூட இந்த பக்கம் பார்த்ததே இல்லையே?"

பெட்டியின் கால்மாட்டில் போய் அமர்ந்துக்கொண்டான். இரு கால்களையும் இணைத்துப்பிடித்து கண்களில் ஒத்தியெடுத்தான். பின் மெது மெதுவாய் முகத்தை தேடி நகர்ந்தான்.

"கண்ணம்மா யாரம்மா இந்த கிழவன்? வினோதமா இருக்காரே?"

"இவர் ரிஷி."

"ஹோ.... தவ முனிவரா? "

"ஹா ஹா ஹா..." புன்னகைத்தாள் கண்ணம்மா.

"அந்த காலத்துல... இவர் எப்படி இருந்தாரு தெரியுமா? ராசா போல இருப்பார். பாவம்...." எதையோ சொல்ல வந்து முழு உணர்வையும் "பாவம் " என்ற சொல்லில் கொண்டுவந்து நிறுத்தினாள் கண்ணம்மா.


"ராசா போலவா? பார்க்க கருகிபோன தக்காளிச்செடி போல இருக்காரு?" நகைத்து சிரித்தன தாவரங்கள்.

ஜன்னல் வழியே அந்த கிழவனையே பார்த்துக்கொண்டிருந்தவள்
" ஹேய்.... அவர கேளி செய்ய வேணாம். என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் அவர பற்றி ?"


"அந்த கிழவன்.....ஒரு காலத்துல....."
கண்ணம்மா சொல்ல தொடங்கினாள்.....அந்த நாட்கள் மீண்டு வந்தன.



நீண்டு கிடந்த அந்த யாழ் நெடுஞ்சாலையில் வியர்வைத்துளிகள் சொட்டு சொட்டாய் விழுந்து சட்டையை கொஞ்சம் கொஞ்சமாக நனைக்க அந்த ஈருருளியை மிதித்து வந்தவன் ரொவேக்காவின் முன் வந்தே நிறுத்தினான்.


"ரொவே.... எழும்பு....வா வா.... சீக்கிரம்" அமர்ந்திருந்தவளை ஆரவாரபடுத்தினான் ரிஷி.

இதுதான் ரிஷி ரொவேக்காவுடன் நேரடியாக பேசும் முதல் முறை.

எப்போதும் முகம் பார்த்து பேசாதவன் திடீரென வந்து இவ்வளவு உரிமையாய் பேசுகிறான்.


எப்போதுமே ரிஷியும் ரொவேக்காவும் எதிரெதிரே சந்திக்கொண்டாலும் பேச்சுக்கொடுக்கமாட்டார்கள். ரிஷியின் முகம் பார்த்தாலே ரொவேக்கா ஏதோவோர் வெட்கத்தில் குழைந்து விடுவாள். அவனாலும் அவளுடன் பேச முடியாது. எந்தவித அன்போ, நட்போ, கோவமோ, வெறுப்போ அவர்களுக்கிடையில் இருக்கவில்லை. ஆனாலும் அவளால் ரிஷியின் முகம் பார்க்க முடியாது கண் கூசிப்போய் தலைக்குணிந்துக்கொள்வாள்.

அந்த பல்கலைக்கழகம் வந்த நாள் முதல் அவர்கள் இருவரும் அப்படித்தான். இது முன்ஜென்ம உறவின் தாக்கமோ தெரியவில்லை என்றுதான் நண்பர்கள் கேளி செய்வார்கள்.


ஏன் எதற்கு என புரியாமல் திகைத்தவள்,

"ரிஷி எங்க வர சொல்றிங்க? என்னைய தனியா விடுங்க பிளீஸ்" முதல் முறையாய் அவனுக்கு அவளே பதில் சொல்கிறாள்.

"ஏன்.... சைக்கிள்ள வர யோசிக்கிறியா? அம்மாடி என்கிட்ட பைக்லாம் இல்ல... ஏன் என்கூட சைக்கிள்ள வர மாட்டியா?"

பல நாள் பேச்சுப் பழக்கம் இருந்தது போலவே பேசினான். ரொவேக்காவிற்கு இது ஆச்சரியம்தான். அவனே வந்து அவள் முன் நின்று பேசும் போது பதில் பேசவேண்டிய கட்டாயத்தில் பேசினாள் ரோவேக்கா.

"அப்படிலாம் இல்ல ரிஷி.... வேணாம்னா விட்டுடுங்க பிளீஸ்...."

"ஹேய்.... என்ன நீ? ஓவரா பண்ற? இந்த கொஞ்ச நாளா நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கென். என்னமோ உலகமே இருண்டுபோன மாதிரி ஓவரா பந்தா பண்ணிக்கிட்டு இருக்க? என்றி ஊ பிரச்சன? உனக்கு அவன் மட்டும்தா இருக்கானா? ஏ நாங்களாம் ஊ கண்ணுக்கு தெரியல? ஏங்கடி இப்படி இருக்கிங்க? ஒருத்தன் நம்மள விட்டுபோய்டான்னால் " ஹேப்பி லைஃப்" னு விஷ் பண்ணிட்டு அதோட அவன மறந்து தொலச்சிட்டு நம்ம வாழ்க்கைய நாம வாழனும் டி..... இப்போ நீ என்னோட வர போறியா இல்லையா? "

ஒரு மிரட்டு மிரட்டி விட்டு தன் பார்வையை அவள் கண்களில் குவித்து அவளின் பதில் நடவடிக்கைக்காய் இடைவெளிவிட்டான்.

ரிஷி கூறியதில் உள்ள உண்மையை புரிந்துக்கொண்டாளோ இல்லையோ, அவன் இடிந்த இடியில் மின்னலாய்ச் சென்று சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

ஒரு அழகான சிரிப்புடன் சைக்கிளை எடுத்த ரிஷி வந்த வேகத்தையும் விட அதி வேகமாய் சக்கரங்களை உருட்டினான்.

சைக்கிளை பல்கலைக்கழக அரங்க வாசலில் நிறுத்திவிட்டு ரொவேக்காவின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறுவிறுவென படிகளேறி உள்ளே நுழைந்தான்.

"ரோவே....! வந்துடியா ? வா வா வந்து உட்காரு"

தோழிகள் அவளை பக்கத்தில் அமர்த்திக் கொள்ள , மறுபுற வரிசையில் ரிஷி அவன் தோழர்களோடு தோழனாக அமர்ந்துக்கொண்டான்.

தமிழ்நாட்டின் மிக பிரபல்யமான பேச்சாளர் சுகி சிவம் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
ரொவேக்காவிற்கு பிடித்தமான ஒரு பேச்சாளர்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதே ரொவேக்காவை தேடிய நண்பர்கள் அவள் அன்று பல்கலைக்கழகத்திற்கே வரவில்லை என்பதை தெரிந்துகொண்டார்கள்.

"அவளை அப்படியே விட கூடாதுடா மச்சான்" என கூறிவிட்டு சென்றவன் தான் ரொவேக்காவை கையோடு அழைத்தும் வந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளவும் செய்துவிட்டான்.

ரொவேக்கா பேச்சாளரின் பேச்சில் மூழ்கிப்போய் அவளை சீர்குழைத்த தேவையற்றதையெல்லாம் மறந்தாள்.


அன்றிலிருந்து ரிஷி ரொவேக்காவின் இதமான நண்பனானான். ரொவேக்காவை பழைய ரோவேக்காவாக பார்க்க ஆசைப்பட்டான். அவளின் நினைவுகளின் பழையதாகிப்போன கசக்கும் நாட்களை அழித்துவிட்டு புதிய அழகான நாட்களை சேமிக்க நினைத்தான்.


ரிஷியின் சுவாரஸ்யமான பயணங்களில் ரொவேக்காவையும் இணைத்துக்கொண்டான். அவளும் அந்த சைக்கிளின் பின் வாலாய் ஆனாள்.


ஓரிரு வாரங்கள் கழித்து ,

தொலைபேசியில் அழைத்து,

"ரொவே, உனக்கு கம்படபல்லான ட்ரெஸ் ஒன்ன எடுத்து போட்டுக்கோ. சந்தியில வந்து நின்னு வார பஸ்ல ஏறி சந்திக்கிற முதல் டவுனில இறங்கிடு. அங்க மூன்றாவதா ஒரு கேக் கடை இருக்கு. அங்க போய் ஒரு சொகலேட் கேக் வாங்கிக்கோ. அந்த கடைக்கு அடுத்து ஒரு குறுக்கு ரோட் போகும். அதுல நடந்து வந்தினா... பச்சை நிற கேட் போட்ட ஒரு வீடு இருக்கும். அந்த கேட்ட திறந்துகிட்டு உள்ள வா". என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இவளும் அவன் சொன்னதை படமாக மனதில் கீறிக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.

அந்த நுழைவாயில் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். பச்சை சூழல் அவளை குளிர வைத்தது. விரிந்து அகன்று ஒரு மாமரத்தின் கீழ் ரிஷி அமர்ந்திருந்தான்.

ரொவேக்கா அவனை நோக்கி நடந்தாள்.

அவள் அவனை நெருங்கிய போது,

"ஹெப்பி பேர்த்டே டூ யூ...ஹெப்பி பேர்த்டே டூ யூ.... ஹெப்பி பேர்த்டே ரொவே அக்கா..ஹெப்பி பேர்த்டே டூ யூ..." பன்னிரெண்டு சிறுவர்களின் குரல் மகிழ்ச்சி ஆரவாரத்தில் இசைந்தன.

" இன்று ரொவேக்காவின் பிறந்தநாளா?"

சந்தேகத்தோடு தொலையேசியில் திகதியை பார்த்தாள். உண்மையாய் இன்று ரொவேக்கா பிறந்த நாளே இல்லை. பின் ஏன் ரிஷி ...? இவன் என்ன செய்கிறான்? யார் இந்த பிள்ளைகளெல்லாம்?

குழப்பத்திலேயே சென்று இவளும் அந்த மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்தாள்.

" என்ன ரொவே ..... உன் கைல கேக் பொக்ஸ் கண்டதும் இங்க பிள்ளைகள் யார்டயும் பேர்த்டே நாளும் இல்லை இல்லையா? சோ.....உன் பேர்த்டேனு நினைச்சிடாங்க. ஹா ஹா ஹா...."

ஒய்யாரமாய் சிரித்தான். அவனின் சத்தமான அந்த சிரிப்பே இராஜ கம்பீரம் தான்.

" பின்ன ஏன் கேக்? "

"அதுவா.... ? இந்த உன் வருகைய செலிப்ரேட் பண்ணதான். "

"வா வா.... கேக் கட் பண்ணு...." ரொவேக்காவின் கையிலிருந்த பொதியை வாங்கி பெட்டியிலிருந்து கேக்கை எடுத்து மேசையில் வைத்து வெட்டச் சொன்னான்.

அவள் அங்கு இருந்த குழந்தைகளில் குட்டிக் குழந்தையை அவள் மடியில் அமர்த்தி கத்தியைக் கொடுத்து வெட்டச்செய்தாள்.
குழந்தைகள் துள்ளிக்குதித்து மகிழ்ந்தார்கள்.
ஆளுக்கு ஒவ்வொரு துண்டு பகிர்ந்து கொடுக்க கிரீமை வாய் கைகளிலிலெல்லாம் பூசிக்கொண்டு சாப்பிட்டு முடித்த குழந்தைகள் மல்லிப்பூ பாத்தியோடு ஒட்டியிருந்த நீர் குழாயில் கழுவிவிட்டு அந்த முற்றத்தில் அந்த மாமர நிழல் விழாத பகுதிக்கு இடம் மாறி விளையாடினார்கள்.

"ரிஷி.... " ரொவேக்கா அழைத்தாள். குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்த ரிஷி அவள் பக்கம் கவனத்தை திருப்பினான்.

"யார் இந்த குழந்தைகள்? இது யார் வீடு?"

"என்னோட வீடுதான். "

"இங்க எப்படி உங்களுக்கு வீடு?"

" "ஹா...ஹா.... "
மறுபடியும் அந்த ஒய்யார சிரிப்பு....
"இந்த வீட்லதான் தங்கியிருக்கன். யூனிவர்சிட்டி முடியும் வரை இங்கதான் இருப்பன். இது கொலேஜ் ப்ரபொசர் ரவி சேர் நிர்வகிக்கிற "ச்சைல்ட் ஹோம்" ஒரு எக்சிடன்ல ரவி சேர் பழக்கமானாரு. அந்த டைம் தங்குறதுக்கு இடமில்லாமல் தடுமாறிட்டுருக்கும்போது சேர் இங்க தங்க சொல்லிட்டாரு. எனக்கும் இந்த குழந்தைகளுக்கு டீச் பண்ணிக்கிட்டு குழந்தைகளோட குழந்தையா வாழ்றது பிடிச்சிருந்தது. நிரந்தரமா தங்கிட்டன்.

"எனக்கும் ஒரு டைம் தரமாட்டிங்களா?"

"எதுக்கு?"


"ஒரு வன் ஹவர் தாங்க.... நானும் ஒரு சப்ஜக்ட் எடுக்குறன்..."

"ம்..... தாராளமா....நா ரவி சேர்ட உன்ன பற்றி சொல்லிட்டேன். நீ எப்ப வேணும்னாலும் வரலாம். டீச் பண்ணலாம். விளையாடலாம்...ஜொலியா இருக்கலாம்."

"ம்...தேங்க்ஸ் ரிஷி"

"அம்மா தாயே இந்த தேங்ஸ்ஸ நீயே வச்சிக்க... இப்படியே தேங்ஸ் சோங்ஸ்னு சொல்லிட்டுருந்தினா... இங்க கூட்டிட்டுவர மாட்டேன் சரியா"

"சரி சரி இனி சொல்ல இல்லபா..."

",தேட்ஸ் குட் "

"இந்த பிள்ளைகளுக்காகத்தான் யூனிவர்சிடில காசு (,பௌன்ட்) சேர்ப்பிங்களா?"

"ம்....ம்..."

"ரொவே அக்கா வாங்களேன் விளையாடுவம்"

"குட்டிஸ்.... நாம பிறகு விளையாடுவம்... இப்ப இங்க வாங்களேன் கொஞ்சம் பேசுவம்....வாங்க வாங்க...." குழந்தை மொழியில் பேசி அழைக்க அவர்களும் ஓடோடி வந்து சூழ்ந்து கொண்டார்கள்.


" குட்டீஸ்.,.....நீங்களாம் வடிவான குழந்தைகளா இருக்கிங்க. எனக்கும் உங்கள்களோட இருக்க ஆசையா இருக்கு. "

"ஓ......நீங்களும் இங்கேயே இருக்கலாமே...." கோரஸாக பதிலளித்தார்கள்.

" நானும் இனி உங்களுக்கு டீச் பண்ண போறன். விருப்பமா?"

"வாவ்.... சூப்பர்....ரிஷி சேர்ட படிச்சி படிச்சே நாங்கள் தூங்கிடுவம்.... அப்படா....இப்பதான் எங்களுக்கு ரிலீப்..." கட கட என பேசி முடித்து ஓரபார்வையில் ரிஷியை பார்த்து சிரித்தாள் சங்கீதா.

"ஆமா நீங்களாம் படிச்சி என்ன செய்ய போறிங்களாம்?"

"நாங்களாம் மலையக பல்கலைக்கழக லச்சரஸ் ஆகப்போரம்." சத்தமாக கத்தி சொன்னார்கள் சிறுவர்கள்.

"குட்....பட்.... மலையகத்துல பல்கலைக்கழகமே இல்லையே...?"

"ஹா ஹா.... நாங்க படிச்சி டிக்றி எடுத்து எம்ஏ, எம்பில் லாம் செய்த பிறகு அங்க கட்டாயம் ஒரு யூனிவர்சிட்டி உருவாகியிருக்கும். அப்போ நாங்கதான் முதல் லட்சரஸ்ஸா போவம்"

" அம்மாடியோ......இது எவ்ளோ பெரிய கனவு? ஆமா... எப்படி எல்லாருக்கு ஒரே கனவா இருக்கு?"

"அதுவா....எங்க ரிஷி அண்ணா பாவம். அவர்ட ஊர்ல ஒரு யுனிவர்சிடி கூட இல்லையாம்." ஒருத்தி சொல்ல,

" அங்க இருக்குற மொத்த ஸ்கூல்ஸ்லருந்தும் கொஞ்சபேர்தான் யூனிவர்சிடி செலக்டா ஆகுராங்களாம். " என இன்னொருத்தி சொன்னாள்.

" ஏன் அக்கா அங்கேயே ஒரு யூனிவர்சிட்டி இருந்தால் நிறையபேர் மேற்படிபடிப்பு படிப்பாங்கதானே.....?" வெகுளியாய் கேட்டாள் இன்னொருத்தி.

" அங்க ஒரு யூனிவர்சிடி உருவாக்கினால் விரிவுரையாளர்களாக நாங்கதான் போவம். அதுக்காகத்தான் நாங்க படிக்கிறோம்......" எல்லோரும் கத்தினார்கள்.


" சரி சரி....எனக்கு நல்லா காது கேட்கும். மெதுவா பேசுங்க..." காதுகளை பொத்திக்கொண்டு சிறுமிகளோடு விளையாடினாள் ரொவேக்கா.

இரண்டு வருடத்தில் குழந்தைகள் மனதில் நன்றாகவே இடம்பிடித்து வைத்திருக்கிறான். என நினைத்தவள்.... " ரிஷி....இதெல்லாம் உன் வேலையா? " என்பதுபோல் ரிஷியை பார்க்க,

" அய்யோ.....அவங்களாகத்தான் பேசுறாங்க. இது என் ட்ரைனிங்க இல்லபா. நா என்னோட சமூகம் பற்றி இவங்களோட நிறைய பேசியிருக்கன். அதெல்லாம் கேட்டுட்டு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துருக்காங்க...எனக்கே இப்பதான்பா தெரியும்..."
என்னமோ. "நான் தவறு செய்யவில்லை " என அஞ்சி பேசும் குழந்தை போல அவன் சொல்ல அவள் வாய்திறந்தே சிரித்துவிட்டாள்.

இப்படியே ரிஷி ரொவேக்கா பன்னிரண்டு குழந்தைகள் மற்றும் ரவி சேர் எல்லோரும் ஒரு தளத்தில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

வார நாட்களில் பள்ளிகூடம், கெம்பஸ் படிப்பு என்றும் வெள்ளிக்கிழமை மாலை கோவில் செல்வது, சனிக்கிழமை ஹோம்மில் சமைத்து உண்ணுவது, ஞாயிறுற்க்கிழமைகளில் சினமா அல்லது வெளியில் சுற்றுவது என இவர்களின் வார அட்டவணை இருந்தது.
அநேகமான நேரங்களை அந்த இல்லத்திலேயே கழித்தாள் ரொவேக்கா.


இப்படியே கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் சலனமில்லா ஆற்றைப்போல் ஓடின முடிந்தன.


வழமைப்போல் சட்நாதர் கோவில் வெள்ளிக்கிழமை விஷேட பூஜைக்காக ரொவேக்கா குழந்தைகளோடு தயாராகிக்கொண்டிருந்தாள்.

"எப்பனாலும் இந்த குட்டி கடைசில தான் தடுமாறிகிட்டுருபாள். நான் அங்கிருந்து ரெடியாகி வந்தும் சேர்ந்துட்டன்.....இந்தம்மா இன்னும்..... அம்மாடி இப்படி வா, அக்கா உடுத்திவிட்றன்"

பல்லைக் கடித்துக்கொண்டு வந்த கோபத்தை குழந்தைக்காக மறைத்துவிட்டு அணைத்தப்படி "சங்கீதா குட்டி இங்க வாடியம்மா" என அவளை இழுத்து உடுப்பாட்டினாள்.

" ரொவே.....என்ட் குட்டீஸ்.....ரெடியா? வாங்க பார்ப்பம் எல்லாரும் வெளில"

"நாங்களாம் ரெடி.... இந்த சங்கீதா மட்டும் தான்..." மற்றக் குழந்தைகள் சங்கீதாவை காட்டிக்கொடுக்க,

" பொய்.... பொய்.... ரிஷி அண்ணா நானும் ரெடி....." கூச்சலோடு வந்து ரிஷியின் கரங்களில் தொங்கிக்கொண்டாள்.

குழந்தைகள் அவர்கள் தாளத்தில் முன் செல்ல ரிஷியின் கைபிடித்து நடந்த சங்கீதாவும் அவன் கையைவிட்டுவிட்டு தோழிகளோடு இணைந்துக்கொண்டாள்.

பொடிநடையில் வந்துக்கொண்டிருந்த ரொவேக்கா ஒருவாராக ரிஷியின் நடைகோட்டில் வந்து இணைந்துக்கொண்டாள்.

"ரொவே நீ முன்ன போல இல்ல, இப்போ ரொம்ப மாறிட்ட"

" யே ? யே ரிஷி அப்படி சொல்றிங்க?"

"இல்ல.... நீ இப்போ சந்தோஷமா இருக்க, லைப்ப புரிஞ்சி என்ஜோய் பண்ணி வாழ்ற. ம்...பிடிச்சிருக்கு.."

"ஹ....? கடைசியா என்ன சொன்னிங்க? "

" இல்லடி நீ இப்படி இருக்கது நல்லாருக்குனு சொன்னன்"

"உங்களாலதானே ரிஷி.... "

"எல்லாம் சரி.... இந்த வாங்க போங்கனு கதைக்கிறதுதான்.... இன்னும் மாறாமல் இருக்கு"

"......."

அவள் பக்கம் திரும்பி " ஏன்டி நமக்கு ஷேம் ஏஜ்தானே? வாடா போடானு அழகா உரிமையா கதைக்களாம்தானே? நீ என்னமோ சின்னபிள்ள மாதிரியும் நா என்னமோ வயசான கிழவன் மாதிரியும்ல எப்ப பாரு...."

"அப்படியாடா....இனி வாடாபோடான்னே கதைக்கிறன்டா... அப்றம் என்ன தப்பு சொல்ல கூடாது சொல்லிட்டன்...."

"ஹா ஹா ஹா....." அவனின் அந்த ஒய்யார சிரிப்பு அவள் உள்ளத்தில் ஒலித்து மறைந்தது.

"டேய்.... நீ.... ரொம்ப வித்தியாசமானவன்டா.... உன்ன ரொம்ப பிடிக்கும்டா..." முதல் சொன்னதை சத்தமாகவும் இரண்டாவது சொன்னதை காற்றோடு கலந்தவாறும் கூறியவள் மெதுவாய் அவனோடு இணைந்து நடக்க முற்பட்டாள்.

கைகள் இரண்டும் உரசிக்கொள்ள ஒன்றையொன்று ஈர்த்து இழுத்தப்போது ,

கோவிலடி வந்து சேர்ந்தன கால்கள். அங்கு ரவி சேரும் அவர்கள் குடும்பத்தோடு வந்திருப்பதைக் கண்ட ரிஷி அவர்களோடு இன்முகம்காட்டி பேச, ரொவேக்கா குழந்தைகளோடு இணைந்துக்கொண்டாள்.

பூஜை முடிந்து வெளியில் வர
" சேர் நீங்களும் இன்டைக்கு எங்களோட இருங்களேன்? அம்மா எங்களோட இருங்களேன் பிளீஸ்" பிள்ளைகள் ரவி சேரிடமும் அவர் மனைவி பிரபாளினியிடமும் வாலுகளாக தொற்றிக்கொண்டு கெஞ்ச " சரி " என முடிவுக்கு வந்து அன்னை இல்லத்தை நோக்கியே எல்லோரும் பயணமானார்கள்.

"அனைவரையும் இல்லத்தில் விட்டு விட்டு உள்ளே இருந்த தோற்பையை எடுத்துக்கொண்டு புறப்பட முற்பட்ட ரொவேக்காவையும் போகவிடாது தடுத்து நிறுத்த , ரவி சேரும் பிரபாலினியும்.....,

"ரொவே நீயும் நில்லேன். இண்டைக்கு நாங்களும் இங்க நிக்கிறம்ல.... " என சொல்ல இங்கு அன்றிரவு ரொவேக்காவும் அங்கேயே தங்கி விட்டாள்.

ரொவேக்காவும் பிரபாலினியும் இரவு சாப்பாட்டை தயார் செய்தார்கள். குழந்தைகள் ஆட்டமும் பாட்டமுமாக அன்றிரவை கழித்தார்கள். ரிஷியும் ரவி சேரும் "இலங்கை நாட்டின் வடமாகாண, மத்திய மாகாண தமிழர் கதைகளை அலசி ஆராய்ந்தார்கள்.

சமையலோடு சமையலாக " ரிஷி நல்ல பையன் என்ன?" என்றாள் பிரபாலினி.

"ஆமா அக்கா.... அவர் வித்தியாசமானவர்."

"........"

" உங்களுக்கு ரிஷி ரொம்ப நாளா தெரியுமா அக்கா?"

" ஓம்... அவன் யூனிவர்சிடி வந்த நாள்ளருந்து இங்க இவரோடதான் நிக்கிறனவன் . ஆள பார்க்கைல சாதாரணம்தான். ஆனா.... ஆம்பளைல் எப்படி வேண்டுமெண்டாலும் வாழலாம் எண்டு நினைக்கிற இந்த காலத்துல ரிஷி எண்டா ஒரு கொள்கைவாதி எண்டேச் சொல்லலாம். ஆனால்....மற்றவயல் சொன்ன கொள்கையெல்லாம் இவன் சட்டபண்ணமாட்டான். இவனுக்கு இவன் சொல்றதுதான் கொள்கை. இவனுக்கெண்டு இவன் வச்சியிருக்க கொள்கைல இவன் சரியா நிப்பான். இவரும் ரிஷியும் நிறைய முரண்பட்டுக்கொள்வினம். ஆனாலும் இவருக்கு ரிஷி எண்டா ஒரு பிரியம்தான். நல்ல நேர்மையான பையணல்லோ."

பிரபாளினி என்னவோ ரிஷிக்குதான் புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தாள். ஆனால் ரொவேக்கா ஏனோ அவளையே புகழ்வதாக பெருமிதத்தில் மிதந்துக்கொண்டிருந்தாள்.


"அக்கா சாப்பிடுவோமே? தூக்கம் வருது...." சங்கீதா தூக்க சிந்தனையோடு கண்களை கசக்கியபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

"சரிடா கண்ணுகுட்டி.... அக்கா சாப்படெடுத்து வைக்கிறேன்.... சங்கீதா குட்டி போய் எல்லாரையும் டைனிங் டேபலுக்கு கூட்டிட்டு வாறிவீங்களாம். "

"சரி ...." என்றபடி ஓடினாள் சிறுமி.


சின்ன சின்ன நகைச்சுவை கதைகளோடு இரவு சாப்பாடு வேளை இனிதே நிறைவானது.

சாப்பிட்டு முடித்த பிள்ளைகள் பல்துலக்கி விட்டு ஒவ்வொருவராக அவரவர் கட்டிலில் நித்திரையானார்கள்.

ரவி சேரும் பிரபாளினியும் ஒரு அறையில் படுத்துக்கொண்டார்கள். ரிஷி அவனறையில் சுருண்டான். ரொவேக்கா சாலையில் சங்கீதாவின் கட்டிலில் சுருண்டாள்.

இரவு பன்னிரண்டு மணி கடந்தது. ஒரு சத்தம். யாரோ அணத்தும் சத்தம். அது அணத்தும் சத்தமா? இல்லை இல்லை ஆவைசமாக ஏதோ வெறிபிடித்து பிதற்றுவது போல் ஒரு சத்தம்.... எங்கிருந்து வருகிறது?

சுற்று முற்றும் பார்த்தாள் ரொவேக்கா. வேறு எவரின் காதிகளிலும் கேட்கவில்லையா? இல்லையே....கேட்டால் இப்படி அமைதியாய் தூங்கிக்கொண்டிருப்பார்களா?

மெதுவாய் எழுத்து முன்னோக்கி நடந்தாள். சத்தம் ரிஷியின் அறைக்குள்ளிருந்தான் வந்தது. "ரிஷி....என்னடா செய்ற?" கதவைத் திறக்கலாமா? வேண்டாமா? தயக்கத்துடனேயே திறந்தவள் வியந்து போனாள்.

ரிஷி ஒரு கத்தியை கையில் வைத்துக்கொண்டு அவன் கழுத்தை அறுத்துக்கொள்வதற்காக தடுமாறிக் கொண்டிருந்தான்.

"என்ன கொடுமை கடவுளே இது?"

"ரிஷி... ரிஷி... ரிஷி......." அழைப்பது அவன் காதுகளில் விழவே இல்லை. அப்போதுதான் புரிந்துக்கொண்டாள் இவன் சுயநினைவிலேயே இல்லை என்பது.

புரிந்து என்ன பயன்? என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லையே. ஆக்ரோசமாய் பற்களை நர தர என் கடித்துக்கொண்டு ... அவன் படும்பாட்டை இவளால் பார்க்கமுடியாது தவித்தாள்.

ரவி சேரை எழுப்பி சொல்லலாம். ஆனால் இத்தனை ஆக்ரோசமானவனாக ரிஷியை கண்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ?
மெதுவாய் அவன் கைகளை பிடித்து கத்தியை அவள் கைக்கு எடுத்துகொண்டாள்.

ஆனாலும் அவனைக் கட்டுபடுத்த முடியவில்லை. தலையை பிய்த்துக்கொண்டும், தன் நெஞ்சில் தாறுமாறாக குத்திக்கொண்டும்..... அவனே அறியாமல் அவன் செய்கிறான். ஆனால் அதை பார்க்கும் சக்திதான் ரொவேக்காவிற்கு இருக்கவில்லை.

ரிஷியை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். அவன் அவள் பிடியிலிருந்து வெளிவர மள்ளுகட்டினான். அவன் கைகளை அவள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தாள். இழுத்து கட்டிலில் போட்டு... அவன் கைகளை இயங்கவிடாமல் இறுக்கி வைத்திருந்தாள். அணைத்தபடியே...


விடிந்ததும் அறியாமல் போராடியே தூங்கி எழும்பினான் ரிஷி. இரவு நடந்த எந்த சம்பவமும் அவன் நினைவுகளில் இல்லாதவன் போல் இயல்பாய் ரொவேக்கா கொடுத்த தேனீரையும் பருகினான்.

தேனீரின் கடைசித்துளியில் ஏதோ நினைவு வந்தவனாக,

"ரோவே... நீ நேத்து என் ரூமுக்கு வந்த இல்லையா? நா...நா...ஏதோ பண்ணினேன். ஐயோ சரியா நியாகத்துக்கு வருதில்லையே... என்ன ...என்ன நடந்துச்சி? எனக்கு உடம்பெல்லாம் டயர்ட்டா இருக்கு. நா நைட் நோர்மலா இருக்க இல்ல தானே? ஐயோ..." என தலையில் கைவைத்து குழப்பத்தில் மீண்டு. ஏதேதோ செய்ய முற்படுகையில்....

" ஐயோ ரிஷி...அப்படிலாம் பெருசா ஒன்னுமில்ல. தூக்கத்தில கனவு கண்டு புலம்பி தடுமாறிகிட்டுருந்திங்க. சத்தம் கேட்டு வந்தன். அப்றம் நோர்மலாகி தூங்கிடிங்க. சும்மா டென்சனாகிதிங்க. "

". அப்படியா? ம்....ஓகே...பட்...."

"என்ன பட்? கண்டதையும் யோசிக்காமல் திஸ் மந்த்தோட நம்ம யூனி லைப் முடியபோகுது. ஃபைனல் எக்ஸ்ம்....தெரியும்ல? இன்னைக்கு க்கு வடிவா படியும்" என அவள் சிரிக்க,

"என்னடி....நீயும் யாழ்பாண பேச்சு பழகிட்டபோல..." சிரித்தான்.

"அம்மாடியோ....சிரிச்சிடியா? குட்...இப்படி இருந்தால்தான் நீ அழகு..." என அவன் தலையை கோதி விட்டு, உள்ளோ சென்று தோள்பையை எடுத்துக்கொண்டு வந்து,

"அப்றம் ரிஷி...நா ரூம்க்கு போறேன். நானும் ஃபைனல் எக்ஸேம்க்கு படிக்கனும்ல? குட்டிஸீலாம் தூங்குறாங்க. நா போய்டனு சொல்லிரு ஓகே. ரவி சேர் பிரபாலினி அக்காடயும் சொல்லிடு" என திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டேச்சென்றாள்.


"இறுதி பரீட்சை முடிய, ஒரு விழாவோடு அனைவரும் அவரவர் ஊருக்கு விடைபெற்று சென்றார்கள். அன்று பார்த்த ரிஷியை இன்றுதான் பார்கிறேன். " என் கண்ணம்மா சொல்லி முடிக்கையில், யாழினி ஒரு டயரியோடு ரிஷியை நெருங்கினாள்.

"ஒரு படத்தைக் காட்டி இது நீங்கதானே?" என்றாள்.

அந்த பெரியவர் ஆம் என்பது போல் தலையாட்ட, "அப்பா....." என்றாள் யாழினி.

வியந்து போய் தலையை உயர்த்தி பார்த்தவர்
யாழினியின் முகத்தில் அவள் அம்மாவின் சாயலைப் பார்க்கிறான்.

"அப்பா.... இது கண்ணம்மாவோட டயரி. இந்த போடோவ காட்டி "இவர் தான் உன் அப்பா" னு கண்ணம்மா சொல்லிருக்காங்க. "

யாழினியை அருகில் அமரவைத்து வச்சகண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், " நீ உன் அம்மா மாதிரிமா" என்றான்.

"என் அம்மா யாருப்பா?"

கண்ணீர் வடிய.... " இதோ அசைவில்லாமல் படுத்துகிடக்கிறாளே... இவள்தான்மா உன் அம்மா." என்றான் தளர்ந்த குரலில்.

"அப்பா இவங்க கண்ணம்மா" என யாழினி சொல்ல,


யாழினி கொடுத்த அந்த டயரியை புரட்டி படித்துவிட்டு அந்த இரவு நாள் பற்றி எழுதியிருந்த பக்கத்தைப் பார்த்து கண்கள் மீண்டும் கலங்கின.
 

பிரியபாரதீ

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 28, 2022
23
17
3
Srilanka
"அன்றிரவு அவள் செய்த காரியத்தைச் செய்ய எந்த பெண்ணாவது துணிவாளா? என் உயிரை காக்க நினைத்தவள் அவள் பெண்மையையல்லவா மருந்தாக்கியிருக்கிறாள். இது தெரியாமல் நான் வேறு கல்யாணம் கட்டி....பாவியாகிட்டேனே.... தனியொருத்தியாய் இருந்து வாழ்ந்துக்காட்டிவிட்டாள் ஆழுத்தக்காரி. எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்திருப்பாள். இத்தனை வருடங்கள் என்னால் எத்தனை அவமானங்களைச் சகித்துகொண்டாயோ...? எனக்காக.....? எனக்காகவா இத்தனை வருடங்கள்?"
நொந்து வெந்தது அந்த கிழவனின் மனம்.


"ஆமாம் இங்கு இத்தன வருசமா கண்ணம்மாவா வாழ்ந்த இவதான் என் ரொவே, ரொவேக்கா. உன் அம்மா "
என பீறிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு ரொவேக்காவின் கரத்தை ரிஷியின் இரு கரங்களாலும் பொத்தி நெற்றியில் வைத்து ஒத்தியப்படி தலைச் சாய்ந்தவர் அந்த உடலுடனேயே இணைந்து இறுகிப்போனார்.


"கண்ணம்மா உன்னோட ரிஷி இப்ப உன்கூட" என சொல்லி தாவரங்கள் மகிந்தன.

"என்னால நீ உன் வாழ்க்கையையே இழந்துட்ட , என்ன மன்னிச்சிடு ரொவே"

"இல்லங்க. நம்ப கனவ நனவாக்கிருக்கன். அன்னை இல்லத்தின் நம் குழந்தைகள் உதவியால பாரதீ இல்லத்தின்ட யாழினியும் சேர்த்து பன்னிரெண்டு பிள்ளைகளும் இப்போ ஒவ்வொரு யூனிவர்சிடிலயும் டெம்ரரி லட்சரஸ்ஸா இருக்காங்க. மலையக பல்கலைக்கழகம் உருவாகினால் விரிவுரையாளர்கள் நம்ம குழந்தைகள்தான்"

இரு ஆத்மாக்களும் இணைந்து ஒரு ஆத்மாவாக பயணிக்கும் இனி....

.....முற்றும்.....
 
Last edited:
  • Love
Reactions: Vimala Ashokan